Saturday, November 5, 2022

அட்சர குரு

அட்சர குரு

தூக்குங் காபுஹே துடரு மேயுமைன்
சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே
பார்க்கு மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப்
பழக்க மலிபுலாமீ மாகுமே
காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு
மெழுத்தைக்காணு முனக்குள்ளே
ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே
யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார்.

===பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்

உணவுத்தேவரும்- பசிக்காலனும்

 உணவுத்தேவரும்- பசிக்காலனும்


வள்ளலார் சீவகாருண்ய விளக்கத்தில் சொல்வதை பாருங்கள்---;சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.


அப்படியெனில் இங்கு சற்று சத் விசாரம் பண்ணுவோம்== உணவை அளிக்கும் ஒருவரை தெய்வத்துக்கு ஒப்பாய் வள்லலார் கூறுகிறார் எனில், உயிரை ரெட்சிக்கும் உணவு எனும் அமிர்தத்தை எந்த தேவனுக்கு ஒப்பிடலாம்?, காலனை ஓட்டும் உணவு என்பதை என்னவென்று சொல்லவேண்டும்?, ஒரு பிடி உணவை கையில் எடுக்கும் போதே ,அல்லது உணவை காணும் போதே,உணவின் மணம் நுகரும்போதே அது கடவுள் அம்சம் என நினைக்க வேண்டாமா? உண்பதும் நுகர்வதும் கடவுள் அம்சத்தயே என நினைய வேண்டாமா? உணவை உண்ணும்போது அது கடவுளேதான் என நினைந்து வணங்கவேண்டாமா? அந்த உணவை உண்ணும்போது கிடைக்கும் திருப்தியின்பம் கடவுள் இன்பமென கருதவேண்டாமா? அந்த உணவை மெல்லும்போது உண்டாகும் ஆனந்தம் கடவுள் ஆனந்தம் என கொள்ளவேண்டாமா? அந்த கடவுள் அருள் நிறைந்த உணவே செரித்து சுத்த உஷ்ணமாகி கடவுள் அருளை வெளிப்படுத்துகின்றது என குதூகலிக்கவேண்டாமா? கடவுள் அருளாய் இந்த உலகத்தில் நிறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை அவன் அருள் என அறிந்து வணக்குவோமாக, அவன் உயிர் என பாவிப்போமாக...அருளானது நம்மில் மென்மேலும் உணவாய் உட்செல்லட்டும், அந்தபடியே இவ்வுலகிலிள்ள ஏனைய உயிரினங்களையும் கடவுள் அருள் விளக்கமாகிய உணவை ஊட்டுவித்து சுத்த உஷ்ணத்தை அவர்களும் பெற்று கொள்ள செய்வோம், ஊண்பசியும் உயிர்பசியும் அகன்று ஆன்ம விளக்கம் மென்மேலும் உண்டாக உணவளிப்பீர்களாக விரைந்தே

லாமலிஃப்

 லாமலிஃப்



அந்த நாளையில் அஹ்மதை துதிக்குமுன் இறையோன் விந்தையாகிய லாமலிபு ஆனதை விரும்பி சிந்தையுற்றெழு மஹ்மூதை படைத்தனன் செல்வம் வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்.


கூசிய வாயு தன்னை குழி நூற்றம்பத்தஞ்சும் பேசிடும் ஞானம் கல்வி பிரித்திடும் வேத சாத்திரம் நேசியாம் நன்னூல் சின்னூல் நிகண்டு அகராதிஞானம் வாசி மேலுறைந்து வாங்கும் இறை அறிவு தானே.


மூலமாங் குழியில் நின்ற முனைசுழி அறிய வேண்டி சாலமாம் யோகம் ஞானம் சார்கலைக் கியானம் பாரில் ஏலவே அலிபில் நின்றும் எழுந்திடும் லாமை நோக்கி ஆலமே படைத்த துய்யோன் அரும்பொருள் எனக்கீந்தானே.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானப்பூட்டு

பிராணன் என்பது என்ன?

 பிராணன் என்பது என்ன?



மண்ணாகி மரமாகி பல்லுயிர் அரக்கராய் தேவராகி என பிறவிகள் பல பலவாக ஆன்மா புகுந்து மனிதனாக பிறக்கின்றான் என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.ஒவ்வொரு பிறவியிலும் பிறந்து இளைத்து கர்ம பலன்களின் தொகுப்பால் மனித தூலம் கிடைக்கபெறுகின்றது என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.


ஒவ்வொரு பிறவிகளும் பிறக்கும்போதும் அப்பிறவிகளிலெல்லாம் பிராணன் நசித்து மாயயாகி செத்து போகின்றனவா?.ஒவ்வொரு பிறவிகளிலும் பிராணன் நசித்துத்தான் ஜீவசாலங்கள் எல்லாம் நசித்து போகின்ரன எனில் அடுத்த பிறவியில் அதே ஆன்மாவுக்கு பிராணன் எங்கிருந்து கிடைக்கின்றது?.


தன்னிலிருந்து பிராணன் நசித்து அதோகதியாக போகமல் இருக்கவே சித்தவித்தை எனில் தானான ஆன்மா எதற்க்கு மாயை ஆக நசிக்க துவங்கியது?. அல்லது தானான ஆன்மா தன்னிலே இருந்து சதா நசிக்கும் தன்மை கொண்டது எனில் அப்புறம் தன்னிலே நசிக்காமல் ஊர்த்வகதியாக்கி கொண்ட பின் என்ன பலன்?..அந்த பிரானன் மீண்டும் முன்னம் இருந்தபடி நசித்து அதோகதியாக சலனமுறாது என்பதற்க்கு என்ன விளக்கம்?.


பல பல பிறவிகளை சித்தவேதம் ஒப்பு கொள்கின்றது எனில், முன்னம் பல கோடி சென்மங்களில் செய்த பாவ புண்ணிய சஞ்சித பிரார்த்வ ஆகமிக கர்மங்களின் தொகுப்பு ஜீவசமாதி ஆனவனுக்கு உள்ளிருக்குமா அல்லது அவையும் அற்றுவிடுமா?.


ஜீவசமாதி ஆனவனின் கதி என்ன?.அவனுக்கு மேல் பிறப்பு எதுவும் இல்லையா?அல்லது முன் பிறப்புகள் எல்லாம் இருந்ததில்லையா/..ஜீவசமாதி ஆனவர்களை எழுப்ப யாரோ வருவார்கள் என நம்பபடுகின்றதே, அதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?. அப்படி ஜீவசமாதி ஆனவர்களை எதற்க்கு எழுப்பவேண்டும்?.எழுப்பினவர்களின் கதி தான் என்ன?..ஜீவசமாதி தான் மோட்ச சூத்திரம் சொல்லும் மோட்சமா?


சற்று யாராவது விளக்கினால் நல்லது..புரிதல் அதிகமாகி ஆனந்தம் உண்டாக பிரயோஜனமாக இருக்கும்

ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு

 ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.


ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது “ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.

நம என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு. எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல நமவுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த நமவில் ஒடுக்கம் 

ஓம் என்பது ஆன்மீகம் எனில் நம என்பது பவுதீகம்.பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார்.புரிந்துகொள்ளமுடியாதது மாயை.விசித்திரமானது, எல்லையில்லாதது.பிரணவத்தை போல

ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது..சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி,சர்வ குருத்வாஹர்ஷிணி,சர்வ விக்‌ஷேபிணி என பலமுகம் 

நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை.மாயா பந்திதமாகவே இருப்போம்

சிறு குழந்தைகல் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான் இறைவனும் மண்ணும் நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம்.சிருஷ்ட்டி சம்ஹாரம் போல 

ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால் நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்

உயிர் அனுபவம்

 உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... "ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....


எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..

நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....

❣️ நன்றி: ரியான் அய்யா ❣️

மாறுநிலை

மாறுநிலை


ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை “த்ரஷ்ஹோல்ட்”,அதன் தமிழாக்கம் தான் மாறுநிலை என்பது.அதாவது ஒரு பொருள் அதன் தன்நிலையில் இருந்து மற்றோர் நிலைக்கு உருமாற்றம் பெற வேண்டும் எனில்; அதன் இருப்பின் பிணைப்பு அறுந்து போக வேண்டும் எனில்;அதன் ஆற்றல் தன்நிலை ஆற்றலில் இருந்து அதிகரித்து உச்சநிலை ஆற்றலை கடந்து போக வேண்டும்.ஆப்படி உச்சநிலை ஆற்றலை கடந்து போகும் எல்லைக்குத்தான் மாறுநிலை ஆற்றல் என பெயர்.


எல்லா பொருட்களும் தத்தமது பிணைப்பின் தன்மைக்கு தகுந்தபடி; பிணைப்பின் ஆற்றலுக்கு தகுந்தபடி; பிணைப்பின் வலிமைக்கு தகுந்தபடி; பிணைப்பின் கோணத்துக்கு தகுந்தபடி;பிணைப்பின் இயல்புக்கு தகுந்தபடி ஒவ்வோர் மாறுநிலை எல்லையை கொண்டிருக்கின்றன என புரியலாம்.மட்டுமல்ல, ஒவ்வோர் பொருளுக்கும் ஒவ்வோர் ஆற்றல் கொளும் தனித்திறமையும் இருக்கின்றன, சில பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் கொளும், சில பொருட்கள் மிகவும் தாமதமாக ஆற்றல் கொளும், சில பொருட்கள் ஆற்றல் கொளும் அதே விகிதத்தில் ஆற்றலை இழக்கும் தன்மையையும் கொண்டிருக்கும்.இவை இரண்டின் தன்மையை பொறுத்து மாறுநிலை ஆற்றல்அமையும்.


அது போல எந்த பொருளுக்கு ஆற்றல் ஊட்டும் விதங்களும் விதவிதமாக அமையும், பலவித யுக்திகளால் பலவிதமாக ஆற்றல் ஊட்டமுடியும்,அது பொருளின் தன்மைக்கும் அதன் பிணைப்புக்கும் தக்கபடி அறிந்து செறிவூட்டப்படுகின்றது. மாசற்ற பொருட்கள் அதிசீக்கிரம் ஆற்றல் செறிவூட்டம் பெற தகுதியானவைகளாகவும், மாசு கலப்புள்ள பொருட்கள் அத்தன்மை குறைவு பட்டுள்ளனவாகவும் இருக்கும் என்பது இயற்கையே.


ஆகையினால் ஒரே யுக்தியினால் எல்லா பொருட்களும் ஆற்றல் ஊட்டம் பெற வாய்ப்பில்லை,ஒரு வேளை சில சமயங்களில் யதேச்சையாக அமையவும் வாய்ப்புண்டுதான்.ஒரே இனத்தை சார்ந்த இருவேறு பொருட்கள் கூட ஒரே வித ஆற்றல் ஊட்டம் பெற்றுக்கொள்ள சிலபோது வாய்ப்பு இருக்காது,எத்தனை ஆற்றல் செலுத்தினாலும் ஒன்று ஆற்றல் கொள்ளும் ஆனால் அதே இனத்தை சார்ந்த மற்றொன்று பெற்ற ஆற்றலை உடனடியாக இழந்து கொண்டும் இருக்கும்.


மனதின் ஆற்றல் ஊட்டமும் இவ்வண்னமே தான்,அதனாலே தான் ஒரே குருவின் கீழ் வித்தை கற்றவர்கல் அனைவரும் ஒரே போல ஆற்றல் பெறுவதில்லை,யதேச்சையாக சிலபேர் கொள்வதுமுண்டு. அதுபோல ஒரே வித யுக்தியை சிறந்த குருமார்கள் அனைவருக்கும் ஒருபோல பயில வழங்குவதுமில்லை.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தந்த்தன்மையினை கொண்டவர்கள், தந்த்தன்மை கொண்ட மனநிலை ஆற்ரல் நிலை, கொள்நிலை,பிணைப்பிநிலை, இழப்புநிலை கொண்டவர்கல்.பிரபஞ்சத்தில் ஒன்ரை போல மற்றொன்று ஒரே விதமாக இருப்பதில்லை.ஒருபுளியமர இலையில் இருக்கும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு தன்மை அமைப்பு கொண்டவை.இயற்கையின் படைப்பில் அதிசயம் என்பது ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை.மணம் குனம் தன்மை வண்ணம் தோற்றம் அளவு என அனைத்தும் மாறுபாடு கொண்டவைகள் என்பது நுண்புல அறிவால் காணலாம்.ஆனால் மனம் இவற்றில் பிரமிப்புண்டு நிற்கின்ரது என்பதே உண்மை.


மனதை கடக்க வேண்டும் எனில், மனதில் பிணைப்பை அறுந்து போக செய்ய வேண்டுமெனில், அந்த மாறுநிலை ஆற்றல் எல்லைக்கு மனம் செல்ல வேண்டும். எப்போது மாறுநிலை எல்லையை மனம் கடக்கிரதோ அப்போது உருமாற்றம் சாத்தியமாகின்ரது.அது இன்றும் ஆகலாம்,நாளையும் ஆகலாம், எண்ணற்ற கோடி கற்பாந்தங்களும் ஆகலாம், ஒரு நொடி பொழுதிலும் ஆகலாம்,....கடந்து போங்கள்

ஸ்ரீலஸ்ரீ

 ஸ்ரீலஸ்ரீ

ஸ்ரீலஸ்ரீ - śrīlaśrī - ശ്രീലശ്രീ - శ్రీలశ్రీ - ಶ್ರೀಲಶ್ರೀ - श्रीलश्री - zrIlazrI”



இதன் பொருள் என்னவாம்

எப்போதும் ஸ்ரீ என்பது ஹ்ரீம் கடந்து விளங்கும் தன்மையது, கீழ்நிலை சக்கரங்களில் இருக்க வாய்ப்பில்லையல்லவா, ஹ்ரீம் கூட பரசிவாந்த நிலைக்கு வியாப்தி கொண்டது என பாஸ்கராச்சார்யாள் விளக்குகின்றார்.அப்போது நிச்சயமாக ஸ்ரீஇ அது கடந்து விளங்குவதாகத்தான் தோன்றுகின்றதல்லவா

சுவாதிஷ்ட்டானம் எல்லாம் மூலகூடம் எனும் எல்லையில் ஐம் எனும் பீஜத்தின் வியாப்தியில் வருகின்ரது.திரிகூடத்தின் முதல் நிலை

ஐங்கார ஹ்ரீங்கார ரஹஸ்ய யுக்த ஸ்ரீங்கார கூடார்த்த மஹா விபூத்ய ஓங்கார மர்ம ப்ரதீபாதினியாம் மம குரவே தட்ஷணாமூர்த்தயே நமோ நம: என ஒரு குரு ஸ்லோகம் கூட உண்டு.இதன் விளக்கத்துக்கு மெருகூட்ட.

நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

 நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டு

உயரெழா வாயுவை உள்ளேஅடக்கி

துயரற நாடியே தூங்க வல்லார்க்கு

பயனிது காயம் பயமில்லை தானே

கோணா மனதை குறிகொண்டு கீழ்கட்டி வீணாதண்டோட வெளியுர தானோக்கி காணாக்கண் கேளாசெவியென்றிருப்போர்க்கு வாழ்நாள் அடைக்கும் வழியிதுவாமே

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’

தன் முனைப்பு விடைபெற வேண்டும்

 தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


விரலை பிடித்துகொண்டே அடம்பிடிக்கும் குழந்தையிடம் இருந்து விடுவித்து கொள்ளாமல் இயைந்து இருப்பதுபோல இவ்வுலகில் இருந்து தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


அடுத்து பிறக்க மாட்டேன், இதோடு என் சோலி முடிஞ்சுது என நினைப்பவன் மரணத்தை பயப்படுகிறான்... வாழ்வு முடிவதில்லை, கர்மம் தொடரும் என உணர்ந்தவன் சத் கர்மங்களில் ஊறி நனைகிறான்,,, மரணத்தை வாழ்வின் ஒரு அங்கம் என கண்டு மனநிறைவோடு சந்தோஷமாக இறை சரணாகதியுடன் ஆனந்தமாக மரணத்தை கைகூப்பி வணங்குகின்றான், ஆம் மரணம் அவனுக்கு தேவை... அதற்க்கும் நன்றி செலுத்துகின்றான், அவன் பரிணாம மேம்படுதல் மரணத்துக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது என அவன் அறிந்திருக்கிறான். அவன் பிரணவத்தை மனதில் நிறுத்தி அக்கரைக்கு பிரயாணப்படுகிறான், அடுத்த கர்ம பூமிக்கு..அவனை வளப்படுத்திக்கொள்ள

 அவர்களுக்கு அவர்கள் முறை, நமுக்கு நமது முறை...முக்திக்கு பொருள் பல சம்பிரதாயங்களில் பலதாக சொல்லப்படுகிரது.முக்தி என்றால் என்ன என்பதையும் அதன் வகைவேறுபாடுகளையும் தரம் திரித்து ஞானகோவையில் விளக்கப்பட்டுள்ளது காணலாம்

ஓளி காண்பது தான் முக்தி என்பார் சிலர் உளர்,காயம் கனகமாவது தான் முக்தி என்பார் சிலர், இந்திரிய அடக்கம் முக்தி என்பார் சிலர், மனோலயம் முக்தி என்பார் சிலர்,பிரான அடக்கம் தான் முக்தி என்பார் சிலர், அட்டமா சித்தி கொளல் முக்தி என்பார் சிலர், பரதேவதை தரிசனம் முக்தி என்பார் சிலர், மரணமில்லாதிருத்தல் முக்தி என்பார் சிலர், தானம் முக்தி என்பார் சிலர், கர்மம் முடிவு முக்தி என்பார் சிலர்...இப்படி அனேகம் கலைஞானங்கள் அடைதல் முக்தி என்பாருமுளர். எது முக்தி என திரிதறிதல் விஞ்ஞானகலர் இயல்பு

இல்லாத ஆன்மாவுக்கு ஊட்டுகிற எண்ணமே பொய்..அடிக்கிற காற்றுக்கு ஆடுர தூசிக்கு யார் ஊட்டணும்