Friday, November 4, 2022

ஆத்மா

 ======= ஆத்மா =======


இந்த உலகத்துலே எங்காச்சும் ஏதாச்சும் பொருட்கள் செயலற்று இருக்குதோ!? இல்லையே!!

அணுத்துகள்கள் கூட தத்தம் செயலில் சதா மும்முரமா இருந்துட்டுதானே இருக்குதுங்க, ஏன் அங்க கர்மம் கர்த்தா இல்லாம நடக்கறது கண்கூடா பாக்றோம்லியா?!

நாம கூட சதா நாசியால சுவாசம் பண்ணிண்ட்டுருக்குகோம்லியா,?!  அதை கர்த்தா என ஒருவர் இருந்துகிட்டா சுவாசத்தை பண்ணிண்டிருக்கார்? இல்லையே! அல்லவா?.

ஜாக்ரதத்தில் இருக்கறச்சேயும் சுவாசம் நடக்கறது, தூங்கறப்பவும் அது பாட்டுக்கு நடக்கிறது. கர்த்தா என அங்க உன்னிப்பா செயலாற்ற யார் இருக்காவளாம்,???  யாருமில்லையே அல்லவா?.

அப்ப கர்மாங்கிறது கர்த்தா இல்லாமலும் நடக்கும்ங்கிறது புரியுதுலியா,!  அப்போ எங்குமே மவுனம் என்பது அசாத்தியம்ங்கிறது தெளிவாகிறதுல்லியா?.

இப்படியான செயல்களில் எங்குமே ஆத்மத்தின் தேவையில்லைங்கிறது புரியறதில்லியா?.

அப்போ ஆத்ம அமைதிங்கிறதுக்கு தேவைங்கிறது இல்லைண்ணு தெளிவாகிறதில்லையா. ஏன்னா, ஆத்மம் அமைதியின்றி இருக்கிறதுங்கிறது என ஒரு சங்கதி இருந்தாத்தானே அதை அமைதி படுத்துறதுக்குண்ணு ஏதாச்சும் கர்மம் செயலாற்ற வேண்டியிருக்கும்.

ஆனால் ஆத்மாங்கிறது எக்கூட்டத்தும் கலப்பில்லாமல் இருக்குறதுங்கிறவங்களே எதுக்கு அதை அமைதி படுத்திக்கணும்ண்ணு அலையுறாங்களாம்?

சரி, ஆத்மா தான் இதையெல்லாம் பத்தி கவலைபடலைண்ணு வெச்சுக்குவோம், இருந்தாலும் எது எதை தான் சமாதானபடுத்தணுமாம்,?!  அப்ப சொல்றீங்க "நீங்க" தான் ஆத்மாவை உணரணும்ண்ணு. அப்ப இந்த "நீங்க" எங்கிறது? எது-ஆத்மா எங்கிறது எதுங்கிற கேள்வி உசுப்புமே? அப்ப "நான்" யாரு-ஆத்மா யாரு? சாந்தமில்லாம இருக்குற "நான்" வேற-சதா சாந்தமா இருக்குங்கிற நெனப்புல வெச்சுண்டிருக்குற ஆத்மா வேறுண்ணு தோணுதில்லையா? இதுல பாத்தீங்கண்ணா இன்னும் "நான்"ங்கிறது உண்மையா இல்லை "ஆத்மா"ங்கிறது உண்மையாண்ணு கொஞ்சம் ரமணரை கேட்டு சொல்லுங்கோண்ணேன்.
===================================
ஆத்மா அமைதியின்றி இருந்தாலல்லவோ அமைதியை நாடணும். 2) யார் இந்த கேள்வியை கேக்கறது, ஆத்மாவா வேறயா?.ஆத்மா கேக்கிறதா இல்லையாண்ணு தெரிஞ்சுக்கிறது எப்படியாம்?.எதைத்தான் ஆத்மா என நிரூபனை பண்ணி இந்த கேள்வி எழறது?. 3) இல்ல ஆத்மா கேக்கல வேற ஒண்ணு தான் கேக்கறதுண்ணு எப்படி நிரூபணை பண்ணி தெளியறது?. 4).ஞானி கேள்வி கேக்கலைண்ணா பதில் சொல்ற ஞானி யாராம்?.5) நீங்கதான் ஆத்மாவை உணரணும்ண்ணு சொல்றேளே, இந்த ‘நீங்க’ என்பது எதுவாம்?.6).ஞானம் என்பது ஆத்மாவுக்கா “நீங்க/நாங்க” என சொல்லப்படுவதற்க்கா?. 7).”நீங்க/நாங்க” என சொல்லப்படுவது மனமா ஆத்மாவா?

இருதயத்தின் வலி

 இருதயத்தின் வலி

துக்கம் தொண்டையை கவ்வியது என சொல்ல கேட்டிருக்கிறோம்,இருதயம் நொறுங்கும் வலி அனுபவிக்கிறேன் என சொல்லகேட்கின்றோம்.இவை எதை குறிக்கின்றது என யாராவது எண்ணி பார்த்ததுண்டா?.

ரெம்ப ஆழமான நேசம் பிரிவை அனுபவிக்கும் போது அதன் தாக்கம் வார்த்தைக்கு அதீதமாக அனுபவத்தில் இருக்கும்.ஆழமான காதல் பிரிவை சந்திக்கும் போதும் இவ்வண்ணம் நிகழும்.நம்பிக்கையானவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போதும் தாங்கமுடியாத குமுறல் அனுபம் தான்.இது போன்று நிஜமான வாழ்வை கொண்டவர்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் தவிர்க்கமுடியாதவை. நிஜமற்ற வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட சாத்தியமே இல்லை என்பதும் நிதர்சனம்.

கேள்வி என்னவென்றால்,இவை அனைத்தையும் அனுபவிப்பது மனம், துக்கப்படுவது ,வலியை அனுபவிப்பது எல்லாம் மனமே தான்.ஆனால் தொண்டை அடைப்பது ஏன்?,தொண்டை கவ்வுவது ஏன்?.இருதயம் கனப்பது ஏன்?.இருதயத்தில் சதா சொல்லமுடியாத துக்க அனுபவம் ஏன்?.ஏன் இருதயம் விம்முகின்றது?.மனம் மூளையில் இருக்கின்றதென்றால் நெஞ்சு ஏன் விம்முகின்றது?.ஏன் பிராணன் நெடுமூச்சாக வெளிவருகின்றது?.

கரு மையம்

 ஃப்ரூ” என்பது வடமொழி மூலம், அதன் விரிவு “ஃப்ரூ மத்யம்”.... ”ஃப்ரூண” என்றால் கருப்பையில் தங்கிய கரு...அப்போது, ‘ஃப்ரூ மத்யம் என்றால் “கரு மையம்” என பொருள்.  “புருவம்” என்பது வடசொல் தமிழாக்கம், திரிபு பொருளாக்கம்.எந்த கருமையமோ..ஆண்டவா...??


“சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரி அரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமாம்=சிவவாக்கிய சித்தன் பரமேஷ்ட்டி”

Thursday, November 3, 2022

அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??

 ========அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??======


திருமந்திர மூன்றாம் தந்திரம் அமுரி தாரணை என வைக்கபட்டுள்ளது. சித்த மருத்துவர்களிடத்திலும் ஆன்மீக அன்பர்களிடத்தும் இதை குறித்து ஏராளமான வாதபிரதிவாதங்களும் ,கொள்கை வேறுபாடுகளும் நிலவுகின்றன. சித்த கற்பநூல்களில் சொல்லபட்டிருக்கும் காயகற்ப பயிற்சியே அமுரியை விளக்குகின்றது. அகர உகர மகர வகர சிகர கற்பங்களை கூறுகின்றன.ஆனால் அமுரி எங்குமே பிடிபடாமல் நிற்கிறது, மூத்திரத்தை குடிப்பவர்கள் முதல் வெடியுப்பும் பொட்டிலுப்பும் சேர்த்து வாலை ரசம் வடிப்பவர்களும், இளம் வாழைகன்றின் கிழங்கு சாறுவரை அமுரி என வகைபடுத்தி கொள்கின்றனர்.ஆனால்......

திருமந்திரத்தில் அமுரிதாரணை என சொல்லப்படும் பகுதியில் சொல்லபட்டிருப்பது அமுரி அல்ல. யாரோ திருமந்திர பாடல்களை பகுதி பகுதி என பதிப்பித்து வகை படுத்தியவர்கள் இந்த பாடல்களை அமுரி தாரணை என தலைப்பிட்டு விட்டனர். ஆனால் இந்த பகுதியில் வரும் பாடல்கள் அமுரியை குறித்து சொல்லபடுபவை கிடையாது..கீழே கொடுக்கபட்டிருக்கும் திருமந்திர பாடல்கலை சற்று கூர்ந்து பாருங்கள் ,இது விளங்கும்.

இந்த பாடல்களில் எங்குமே அமுரி என ஒரு வார்த்தை கிடையாது, ஆனால் யாரோ தலைப்பை மட்டும் அமுரிதாரணை என தவறுதலாக வைத்துவிட்டனர். மக்களும் இதை படித்து விட்டு ஏராளமாக குழம்பி கிடக்கிறார்கள்.சித்தர் பாடல்களில் வரும் கற்ப சாதனைகளில் அமுரி என்பது முதல் பத்து மாதங்கள் கொள்ளப்படவேண்டியது...அதன் பிறகு காலை அமுரி மாலை புளி என ஒரு வருடம்...இப்படியாக சாதனைகள் சொல்லபட்டிருக்கும்.

ஆனால் திருமந்திர பாடல்களில் சொல்லபட்டிருக்கும் “வீரமருந்து” என்பது அமுரியல்ல, இது அமுரி என திருமூலரும் எங்குமே சொல்லவில்லை. மட்டுமல்ல இந்த வீரமருந்தானது எட்டு வருடங்கள் கொள்ளவேண்டியது. சித்தர் கற்பசாதனையில் சொல்லும் அமுரிக்கு மிளகும் நெல்லியும் மஞ்சளும் வேம்பு கூட சேர்க்கவேண்டியதில்லை.அந்த கற்பத்துக்கு இப்படியான சேர்க்கைகள் கிடையாது. இது வேறு மருந்து அது வேறு . அமுரியை திருமந்திரத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்த மகான் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்த மட்டுமே முடிகிறது.

பாடல் எண் : 1

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.

பாடல் எண் : 2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

பாடல் எண் : 3

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.

பாடல் எண் : 4

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

பாடல் எண் : 5

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே

ரியான் அனத்வைத பாடம்

 எதுவொன்று தூல உடலமாக மலர்ந்துள்ளதோ அதுவே சிவரூபம் என அறிவாயாக, அத்தூலத்துடன் அத்வீதமாக இயங்கியிருப்பதுவோ அதன் சக்தி சீவரூபமென அறிவாயாக, இவை இரண்டினும் "நான்" என மதித்திருக்கும் நீயோ மூடனே என அறிவாயாக.


+++ரியான் அனத்வைத பாடம்++++
===================================
நாட்டிய நாதம் நல்வழி செலுத்தியே
நீட்டிடக் குறுக்கிட நினைத்தவாறு செய்திட
அட்சரத் தாலே அளந்திடும் உபாயம்
காட்டியே நாதம் லயித்த பதவி
தந்தோம் என்றாடித் தாளம் உரைத்தானே.

===================================

பட்டமென்று மூச்சிலே பறந்தாடும் வீச்சிலே
விட்டமென்று விட்டிருந்தால் விதிவசத்தாகுமோ
கட்டமென்று பாராது கட்டி நாலு முடிச்சிடில்
கிட்ட வந்து அண்டாமல் காலன் தூர போவனே

===================================

காலமெங்கும் ஆடியோடி வாடிப்போன வாசியே வாய்திறக்க வளியிழுத்தால் வாசியும் வசத்தாகுமோ கூடியாடி குரவையிட்டு கதியிழுத்த கூட்டமே  கோடிகோடிகுருடரெல்லாம்குழிவிழுந்தபாவமே.
=ரியான் பதினெண்கதி கணக்கு

===================================

முட்டைக்கறிவிருக்கோ முடவாட்டுக்காலிருக்கோ கொட்டைகரந்தை கிருகாலும் தானிருக்கோ-சட்டைனாதருக்கோ வெண்சட்டை தானிருக்க கூமுட்டைனாதருக்கு கருவங்கம் பிளப்பதெப்போ.

=ரியான் நற்கருவங்க சூத்திரம்

===================================

நடையை கட்டி விடு கடையை பூட்டிவிடு நாட்டினிலே நமக்கினி என்ன வேலை...

உடையை கழற்றிவிடு உடமையை உதறி விடு உண்மை தானே உனக்கு உடை என்றுமே.....

தளர்வாய் இருந்து விடு தனிமையாய் நின்று விடு
தனிமையே இருப்பாய் மலர்ந்து விடுவாயே.....

கவலையை விட்டுவிடு  கருத்தினில் இருத்தி விடு
காண்பதுவோ கண்ணிமைக்க மறைந்துவிடுமே...

உலகினில் அமர்ந்துவிடு உற்றாரை அகல விடு
உண்மையாய் வெளிச்சமிதுவே....

பழியினை அகற்றிவிடு பாவத்தை தொலயவிடு
பரந்தோடி திரியாதிரு என்றுமே...

வந்தவன் வந்தாலென்ன போனவன் போனாலென்ன
போனவன் போனவழி போகட்டுமே....

நின்றவன் நின்றாலென்ன போனவன் வந்தாலென்ன
போக்கு வரத்தில்லா இடம் புண்ணியமே....

மொழியின் பொருளென் பொருளின் மொழியென் புல்லருக்கு போதமதென் போதமே...

அல்லலை விட்டுவிட்டு அருங்கோயில் தனடைந்தால் தொல்லையினியில்லை யென்று காணே.....

=ரியான் பாத்திரப்பற்று

===================================

கவனக்குளிகை

கவன மெய்ஞானம் கவலையகற்றுமே
கருத்தி லிருத்திட கவனம் உள் பாயுமே
மவுனமணி கண்டத்தி லணிந்திட்டே
மவுனம் ம்ம்மென புவனம் பந்தாடுமே..

அவனி நிறைந்திடு கவனகுளிகை தான்
கவனமாக மெய் அடக்கி விழுங்கிடே
ரமணமாக உன் நினைவில் இருத்திட்டே
மவுனம் கவனமாக வந்தெய்துமே..


~ரியான குளிகை நிகண்டு

===================================

காரணங்கள் இரண்டு காரியம் ஒன்று

 காரணங்கள் ரெண்டு காரியம் ஒன்று\\\


தூல உடலுக்கு காரணங்கள் ரெண்டு ,அதனால் மலர்ந்தது தூலம் ஒன்று.சூட்சும உடலுக்கு காரணங்கள் ரெண்டு மலர்ந்தது சூட்சும உடலம் ஒன்று, காரண உடலுக்கு காரணங்கள் ரெண்டு,மலர்ந்த காரண உடலம் ஒன்று.இவை சேர்ந்த காயத்துக்கு காரணம் ரெண்டு காரியம் ஒன்று.

சிவாலய ஓட்டம்

 எங்க ஊரிலே ஒரு பழக்கம் உண்டு...சிவாலய ஓட்டம் என்பார்கள்...எல்லா சிவராத்திரிக்கும் சிவனடியார்கள் 120 கிமீ தூரம் உள்ள 12 சிவ ஆலங்களை ஓடி வலம் வருவார்கள்..இந்த நடைமுறை அனாதிகாலம் முதல் நிலுவையில் உள்ளது...அந்று குமரிமாவட்டத்திற்க்கு லோக்கல் விடுமுறை...ஏனெனில் அந்த அளவிற்க்கு சிவனடியார்கள் நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பார்கல், கூடவே ஒரு தோத்திரமும் உண்டு....”கோபாலா..கோவிந்தா...சிவனே வல்லபோ....” என்பதாஅகும்....24 மணி நேரம் ஓடி 12வது ஆலயத்தில் சரணடைவர்....இப்படி நீண்ட தூரம் ஓடினாலும் தோத்திரம் நடந்துகொண்டே இருக்கும்....அப்படி ஓடி எங்களுக்கு சஹஜம்...


இப்படி வாய் வழியாக மூச்சு 24 மணி நேரெம் நடந்து கொண்டிருக்கும்....இதுவே ” தோத்திரத்தின் ரகசியம்...இது வாசி கிடையாது....இதன் நுணுக்கமெ “பாகவத பாராயணம்” மற்ரும் “ராமாயண பாராயணத்திலும் உ்ண்டு.

திருமூலர் சொல்வார் “வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல் “ என்று...இதையே கண்ணபிரான் யசோதாதேவியாருக்கு வாயை திறந்து காட்ட 14 உலகங்களும் தெரிந்த கதை..

தமிழ்

 தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
===================================
தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அப்படி உயிரை தூய்மை செய்வது “தமிழ்” எனும் சொல்லில் இருக்கும் அறிவுகலை என்பது அறியவேண்டிய முக்கிய அறிவாக இருக்கின்றது.
====================================
தமிழ் தான் பழமையானது...அது தான் கடவுள் மனிதனுக்கு உருவாக்கிய மொழிண்ணு சாலை நூலில் படிச்ச உடனேயே கெளம்பிரவேண்டியது, தமிழ் தமிழ்ண்ணு சொல்லிகிட்டு. உண்மையை ஆராயாமல் நிதானமில்லாமல் இருப்பதினால் தான் இப்படி நேரிடுகிறது.ஆதி மனிதன் தமிழ் தான் பேசினானா என கொஞ்ச நின்று ஆலோசிக்க தோன்றுவதில்லை. மொழியை கடவுளா உண்டு பண்ணி மனிதனுக்கு கற்று கொடுத்தார் என நினைக்க தோன்றுவதில்லை. ஆதி மொழி தமிழ் தான், அது தான் பழமையானது எனில் ஆதம் நபி கூட தமிழ் மொழியைத்தானே பேசியிருக்கவேண்டும்?..ஏவாள் கூட தமிழைத்தனே பேசி இருக்கவேண்டும்?..அல்லவா?...எப்படி உங்கள் கருத்து? விலக்கமாக சொல்லுங்களேன் பார்க்கலாம்.ஆதம் பாதம் ஆதம் பாதம்ணு சொல்லிகிட்டு திரியறீங்களே..அந்த ஆதம் பேசின மொழி ஏது? ஏவாள் பேசின மொழி ஏது?.

தமிழ்

 தமிழ் = தம் + இழ்

தம் எனும் ஜீவ சக்தியாகிய வாயுவை தன்னுள்ளேயே மேலும் கீழும் நடத்தி பிரம்மரந்தில் சென்று ஐக்கியமடைவதே தமிழின் உண்மை பலன் என சிவானந்த பரமஹம்சர் சொன்னதை எங்கோ படித்த ஞாபகம்.

ஓசை அமுதம்

 இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்... இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு... இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே... இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன். அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு.. அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள்...


இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது... எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல... மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது.. ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது... ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல... அது இறை படைப்பு... அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை... எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா

இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்... அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்... ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே... அல்லவா

மனிதன் நாவு பேசுகிறது..மிருகங்கள் பேசமுடிவதில்லை...அது மனிதனின் முதிர்வு.. அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்..அவன் அறிவின் வெளித்தோற்றம்...அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது...அது இருக்ககூடியது , செயற்கை அல்ல...அப்படியானது இயற்கை உண்மை...பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்.. ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை

அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும் குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உயிர் பிறப்புகளாக இயற்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்...

அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை.. அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன... அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்... அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான். அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன.. ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின.... மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி "இயற்கைஉண்மை" ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று...

மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ... அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்.