Friday, November 4, 2022

சூட்சமம்

 பிராணன் பிறக்கிறதுக்கு முன்னே சத்தம் பிறக்கும் அமைப்பு கொண்டவன் மனிதன்...அது சூட்சுமம்...


தூலத்திலோ பிராணன் வந்த பின்னே தான் சத்தம் வரும்.

மத்யம்

 தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை.  இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் , அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது. இரு முனையும் அற்றது.. இரண்டற்றது.


ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது... உறைவது.. இதையே ஹ்ருதயம் என்பர். ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான்.

   குரு விசுவாசம்=குரு துரோகம்             

 குரு விசுவாசம் - குரு துரோகம்.

=============================

குரு காட்டிய வழியில் சரியாக நடந்து அவர் அடைந்த வெற்றிகளைத் தானும் அடைவது குருவிசுவாசம்.

குரு காட்டிய வழியில் ஒழுங்காய் நடக்காமல் குரு அடைந்த வெற்றிகளைத் தான் அடையாமல் போவதே குரு துரோகம்.

ஆனால் மக்கள் இந்த வார்த்தைகளுக்கு வைத்திருக்கும் அர்த்தம் இவை அல்ல. குருவின் மீது அன்போடும் பக்தியோடும் இருந்தால் குருவிசுவாசம். அத்தகைய பக்தியும் பணிவும் இல்லாவிட்டால் குரு துரோகம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

உண்மையான குரு சீடன் தான் காட்டிய வழியில் நடக்கிறானா என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார். போலி குருமார்கள் தான் சீடனின் வணக்கத்தையும் பாத பூஜையையும் இதர கோமாளித்தனமான சடங்குகளையும் விரும்புவார்கள் 

                    

பீரு முஹம்மது அப்பா

 தானாகி யன்னர் உருவாய்-திசை

ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித்
தானொளி தான்கண்டு கூவ- இறை
தானவ னாசையால் நோக்கியே பார்க்க
ஆன புகழிறை யாசை-அந்த
அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க
தானே சுடராய் வழிந்து-கடற்
தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே
தன்னாசையால் வந்த நாதம்-அவன்
றானே கடலுயி ரோதிய வேதம்
அன்னத்தெவையும் படைத்து-வகை
யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப்
பின்னா லேவந்து பிறக்கப்-பல
கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து
மின்னிய மங்குல முன்ன-இந்த
மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே
வானத்தின் மேகம் பொழிய-இந்த
வையகத் தானிய மெங்கும் நெளிய
ஊனினான் மாதா பிதாவும்-அவன்
உதிரமே நாதமாய் ஓசை முழங்கி
ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த
ஆசையின் அவனொளி வாசந் துலங்கித்
தானத்தில் வந்து அளித்தே-உருத்
தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே
அந்த கருவிந்து நாதம்-அதில்
அன்னை யுதிரமுங் கூடின சூதம்
அந்த கருவைந்து பூதம்-அது
ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம்
விந்துக்குள்ளே தழல் நீதம்-அது
வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம்
அந்த குதிரைமேலேறும்-நந்தம்
ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........

~~~ பீரு முஹம்மது அப்பா

==================================


”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே

 == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

====================================

ஆத்மா

 ======= ஆத்மா =======


இந்த உலகத்துலே எங்காச்சும் ஏதாச்சும் பொருட்கள் செயலற்று இருக்குதோ!? இல்லையே!!

அணுத்துகள்கள் கூட தத்தம் செயலில் சதா மும்முரமா இருந்துட்டுதானே இருக்குதுங்க, ஏன் அங்க கர்மம் கர்த்தா இல்லாம நடக்கறது கண்கூடா பாக்றோம்லியா?!

நாம கூட சதா நாசியால சுவாசம் பண்ணிண்ட்டுருக்குகோம்லியா,?!  அதை கர்த்தா என ஒருவர் இருந்துகிட்டா சுவாசத்தை பண்ணிண்டிருக்கார்? இல்லையே! அல்லவா?.

ஜாக்ரதத்தில் இருக்கறச்சேயும் சுவாசம் நடக்கறது, தூங்கறப்பவும் அது பாட்டுக்கு நடக்கிறது. கர்த்தா என அங்க உன்னிப்பா செயலாற்ற யார் இருக்காவளாம்,???  யாருமில்லையே அல்லவா?.

அப்ப கர்மாங்கிறது கர்த்தா இல்லாமலும் நடக்கும்ங்கிறது புரியுதுலியா,!  அப்போ எங்குமே மவுனம் என்பது அசாத்தியம்ங்கிறது தெளிவாகிறதுல்லியா?.

இப்படியான செயல்களில் எங்குமே ஆத்மத்தின் தேவையில்லைங்கிறது புரியறதில்லியா?.

அப்போ ஆத்ம அமைதிங்கிறதுக்கு தேவைங்கிறது இல்லைண்ணு தெளிவாகிறதில்லையா. ஏன்னா, ஆத்மம் அமைதியின்றி இருக்கிறதுங்கிறது என ஒரு சங்கதி இருந்தாத்தானே அதை அமைதி படுத்துறதுக்குண்ணு ஏதாச்சும் கர்மம் செயலாற்ற வேண்டியிருக்கும்.

ஆனால் ஆத்மாங்கிறது எக்கூட்டத்தும் கலப்பில்லாமல் இருக்குறதுங்கிறவங்களே எதுக்கு அதை அமைதி படுத்திக்கணும்ண்ணு அலையுறாங்களாம்?

சரி, ஆத்மா தான் இதையெல்லாம் பத்தி கவலைபடலைண்ணு வெச்சுக்குவோம், இருந்தாலும் எது எதை தான் சமாதானபடுத்தணுமாம்,?!  அப்ப சொல்றீங்க "நீங்க" தான் ஆத்மாவை உணரணும்ண்ணு. அப்ப இந்த "நீங்க" எங்கிறது? எது-ஆத்மா எங்கிறது எதுங்கிற கேள்வி உசுப்புமே? அப்ப "நான்" யாரு-ஆத்மா யாரு? சாந்தமில்லாம இருக்குற "நான்" வேற-சதா சாந்தமா இருக்குங்கிற நெனப்புல வெச்சுண்டிருக்குற ஆத்மா வேறுண்ணு தோணுதில்லையா? இதுல பாத்தீங்கண்ணா இன்னும் "நான்"ங்கிறது உண்மையா இல்லை "ஆத்மா"ங்கிறது உண்மையாண்ணு கொஞ்சம் ரமணரை கேட்டு சொல்லுங்கோண்ணேன்.
===================================
ஆத்மா அமைதியின்றி இருந்தாலல்லவோ அமைதியை நாடணும். 2) யார் இந்த கேள்வியை கேக்கறது, ஆத்மாவா வேறயா?.ஆத்மா கேக்கிறதா இல்லையாண்ணு தெரிஞ்சுக்கிறது எப்படியாம்?.எதைத்தான் ஆத்மா என நிரூபனை பண்ணி இந்த கேள்வி எழறது?. 3) இல்ல ஆத்மா கேக்கல வேற ஒண்ணு தான் கேக்கறதுண்ணு எப்படி நிரூபணை பண்ணி தெளியறது?. 4).ஞானி கேள்வி கேக்கலைண்ணா பதில் சொல்ற ஞானி யாராம்?.5) நீங்கதான் ஆத்மாவை உணரணும்ண்ணு சொல்றேளே, இந்த ‘நீங்க’ என்பது எதுவாம்?.6).ஞானம் என்பது ஆத்மாவுக்கா “நீங்க/நாங்க” என சொல்லப்படுவதற்க்கா?. 7).”நீங்க/நாங்க” என சொல்லப்படுவது மனமா ஆத்மாவா?

இருதயத்தின் வலி

 இருதயத்தின் வலி

துக்கம் தொண்டையை கவ்வியது என சொல்ல கேட்டிருக்கிறோம்,இருதயம் நொறுங்கும் வலி அனுபவிக்கிறேன் என சொல்லகேட்கின்றோம்.இவை எதை குறிக்கின்றது என யாராவது எண்ணி பார்த்ததுண்டா?.

ரெம்ப ஆழமான நேசம் பிரிவை அனுபவிக்கும் போது அதன் தாக்கம் வார்த்தைக்கு அதீதமாக அனுபவத்தில் இருக்கும்.ஆழமான காதல் பிரிவை சந்திக்கும் போதும் இவ்வண்ணம் நிகழும்.நம்பிக்கையானவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போதும் தாங்கமுடியாத குமுறல் அனுபம் தான்.இது போன்று நிஜமான வாழ்வை கொண்டவர்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் தவிர்க்கமுடியாதவை. நிஜமற்ற வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட சாத்தியமே இல்லை என்பதும் நிதர்சனம்.

கேள்வி என்னவென்றால்,இவை அனைத்தையும் அனுபவிப்பது மனம், துக்கப்படுவது ,வலியை அனுபவிப்பது எல்லாம் மனமே தான்.ஆனால் தொண்டை அடைப்பது ஏன்?,தொண்டை கவ்வுவது ஏன்?.இருதயம் கனப்பது ஏன்?.இருதயத்தில் சதா சொல்லமுடியாத துக்க அனுபவம் ஏன்?.ஏன் இருதயம் விம்முகின்றது?.மனம் மூளையில் இருக்கின்றதென்றால் நெஞ்சு ஏன் விம்முகின்றது?.ஏன் பிராணன் நெடுமூச்சாக வெளிவருகின்றது?.

கரு மையம்

 ஃப்ரூ” என்பது வடமொழி மூலம், அதன் விரிவு “ஃப்ரூ மத்யம்”.... ”ஃப்ரூண” என்றால் கருப்பையில் தங்கிய கரு...அப்போது, ‘ஃப்ரூ மத்யம் என்றால் “கரு மையம்” என பொருள்.  “புருவம்” என்பது வடசொல் தமிழாக்கம், திரிபு பொருளாக்கம்.எந்த கருமையமோ..ஆண்டவா...??


“சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரி அரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமாம்=சிவவாக்கிய சித்தன் பரமேஷ்ட்டி”

Thursday, November 3, 2022

அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??

 ========அமுரி என்பது என்ன??அமுரிதாரணை எது??======


திருமந்திர மூன்றாம் தந்திரம் அமுரி தாரணை என வைக்கபட்டுள்ளது. சித்த மருத்துவர்களிடத்திலும் ஆன்மீக அன்பர்களிடத்தும் இதை குறித்து ஏராளமான வாதபிரதிவாதங்களும் ,கொள்கை வேறுபாடுகளும் நிலவுகின்றன. சித்த கற்பநூல்களில் சொல்லபட்டிருக்கும் காயகற்ப பயிற்சியே அமுரியை விளக்குகின்றது. அகர உகர மகர வகர சிகர கற்பங்களை கூறுகின்றன.ஆனால் அமுரி எங்குமே பிடிபடாமல் நிற்கிறது, மூத்திரத்தை குடிப்பவர்கள் முதல் வெடியுப்பும் பொட்டிலுப்பும் சேர்த்து வாலை ரசம் வடிப்பவர்களும், இளம் வாழைகன்றின் கிழங்கு சாறுவரை அமுரி என வகைபடுத்தி கொள்கின்றனர்.ஆனால்......

திருமந்திரத்தில் அமுரிதாரணை என சொல்லப்படும் பகுதியில் சொல்லபட்டிருப்பது அமுரி அல்ல. யாரோ திருமந்திர பாடல்களை பகுதி பகுதி என பதிப்பித்து வகை படுத்தியவர்கள் இந்த பாடல்களை அமுரி தாரணை என தலைப்பிட்டு விட்டனர். ஆனால் இந்த பகுதியில் வரும் பாடல்கள் அமுரியை குறித்து சொல்லபடுபவை கிடையாது..கீழே கொடுக்கபட்டிருக்கும் திருமந்திர பாடல்கலை சற்று கூர்ந்து பாருங்கள் ,இது விளங்கும்.

இந்த பாடல்களில் எங்குமே அமுரி என ஒரு வார்த்தை கிடையாது, ஆனால் யாரோ தலைப்பை மட்டும் அமுரிதாரணை என தவறுதலாக வைத்துவிட்டனர். மக்களும் இதை படித்து விட்டு ஏராளமாக குழம்பி கிடக்கிறார்கள்.சித்தர் பாடல்களில் வரும் கற்ப சாதனைகளில் அமுரி என்பது முதல் பத்து மாதங்கள் கொள்ளப்படவேண்டியது...அதன் பிறகு காலை அமுரி மாலை புளி என ஒரு வருடம்...இப்படியாக சாதனைகள் சொல்லபட்டிருக்கும்.

ஆனால் திருமந்திர பாடல்களில் சொல்லபட்டிருக்கும் “வீரமருந்து” என்பது அமுரியல்ல, இது அமுரி என திருமூலரும் எங்குமே சொல்லவில்லை. மட்டுமல்ல இந்த வீரமருந்தானது எட்டு வருடங்கள் கொள்ளவேண்டியது. சித்தர் கற்பசாதனையில் சொல்லும் அமுரிக்கு மிளகும் நெல்லியும் மஞ்சளும் வேம்பு கூட சேர்க்கவேண்டியதில்லை.அந்த கற்பத்துக்கு இப்படியான சேர்க்கைகள் கிடையாது. இது வேறு மருந்து அது வேறு . அமுரியை திருமந்திரத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்த மகான் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்த மட்டுமே முடிகிறது.

பாடல் எண் : 1

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.

பாடல் எண் : 2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

பாடல் எண் : 3

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.

பாடல் எண் : 4

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

பாடல் எண் : 5

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே

ரியான் அனத்வைத பாடம்

 எதுவொன்று தூல உடலமாக மலர்ந்துள்ளதோ அதுவே சிவரூபம் என அறிவாயாக, அத்தூலத்துடன் அத்வீதமாக இயங்கியிருப்பதுவோ அதன் சக்தி சீவரூபமென அறிவாயாக, இவை இரண்டினும் "நான்" என மதித்திருக்கும் நீயோ மூடனே என அறிவாயாக.


+++ரியான் அனத்வைத பாடம்++++
===================================
நாட்டிய நாதம் நல்வழி செலுத்தியே
நீட்டிடக் குறுக்கிட நினைத்தவாறு செய்திட
அட்சரத் தாலே அளந்திடும் உபாயம்
காட்டியே நாதம் லயித்த பதவி
தந்தோம் என்றாடித் தாளம் உரைத்தானே.

===================================

பட்டமென்று மூச்சிலே பறந்தாடும் வீச்சிலே
விட்டமென்று விட்டிருந்தால் விதிவசத்தாகுமோ
கட்டமென்று பாராது கட்டி நாலு முடிச்சிடில்
கிட்ட வந்து அண்டாமல் காலன் தூர போவனே

===================================

காலமெங்கும் ஆடியோடி வாடிப்போன வாசியே வாய்திறக்க வளியிழுத்தால் வாசியும் வசத்தாகுமோ கூடியாடி குரவையிட்டு கதியிழுத்த கூட்டமே  கோடிகோடிகுருடரெல்லாம்குழிவிழுந்தபாவமே.
=ரியான் பதினெண்கதி கணக்கு

===================================

முட்டைக்கறிவிருக்கோ முடவாட்டுக்காலிருக்கோ கொட்டைகரந்தை கிருகாலும் தானிருக்கோ-சட்டைனாதருக்கோ வெண்சட்டை தானிருக்க கூமுட்டைனாதருக்கு கருவங்கம் பிளப்பதெப்போ.

=ரியான் நற்கருவங்க சூத்திரம்

===================================

நடையை கட்டி விடு கடையை பூட்டிவிடு நாட்டினிலே நமக்கினி என்ன வேலை...

உடையை கழற்றிவிடு உடமையை உதறி விடு உண்மை தானே உனக்கு உடை என்றுமே.....

தளர்வாய் இருந்து விடு தனிமையாய் நின்று விடு
தனிமையே இருப்பாய் மலர்ந்து விடுவாயே.....

கவலையை விட்டுவிடு  கருத்தினில் இருத்தி விடு
காண்பதுவோ கண்ணிமைக்க மறைந்துவிடுமே...

உலகினில் அமர்ந்துவிடு உற்றாரை அகல விடு
உண்மையாய் வெளிச்சமிதுவே....

பழியினை அகற்றிவிடு பாவத்தை தொலயவிடு
பரந்தோடி திரியாதிரு என்றுமே...

வந்தவன் வந்தாலென்ன போனவன் போனாலென்ன
போனவன் போனவழி போகட்டுமே....

நின்றவன் நின்றாலென்ன போனவன் வந்தாலென்ன
போக்கு வரத்தில்லா இடம் புண்ணியமே....

மொழியின் பொருளென் பொருளின் மொழியென் புல்லருக்கு போதமதென் போதமே...

அல்லலை விட்டுவிட்டு அருங்கோயில் தனடைந்தால் தொல்லையினியில்லை யென்று காணே.....

=ரியான் பாத்திரப்பற்று

===================================

கவனக்குளிகை

கவன மெய்ஞானம் கவலையகற்றுமே
கருத்தி லிருத்திட கவனம் உள் பாயுமே
மவுனமணி கண்டத்தி லணிந்திட்டே
மவுனம் ம்ம்மென புவனம் பந்தாடுமே..

அவனி நிறைந்திடு கவனகுளிகை தான்
கவனமாக மெய் அடக்கி விழுங்கிடே
ரமணமாக உன் நினைவில் இருத்திட்டே
மவுனம் கவனமாக வந்தெய்துமே..


~ரியான குளிகை நிகண்டு

===================================

காரணங்கள் இரண்டு காரியம் ஒன்று

 காரணங்கள் ரெண்டு காரியம் ஒன்று\\\


தூல உடலுக்கு காரணங்கள் ரெண்டு ,அதனால் மலர்ந்தது தூலம் ஒன்று.சூட்சும உடலுக்கு காரணங்கள் ரெண்டு மலர்ந்தது சூட்சும உடலம் ஒன்று, காரண உடலுக்கு காரணங்கள் ரெண்டு,மலர்ந்த காரண உடலம் ஒன்று.இவை சேர்ந்த காயத்துக்கு காரணம் ரெண்டு காரியம் ஒன்று.