திருமந்திரத்தில் குருவே சிவனென கூறினான் என் நந்தி என ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலை காணும் போது குரு எங்ஙனம் சிவனாவார் என கேட்கத் தோன்றும்.ஏனெனில் குருவை பணியாதார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என்பார்கள். குருவை பணிதலே அருளை பெற்றுக் கொள்ளும் உபாயமாம்.அந்த சிவ அருளானது குருவின் இருதய கமலத்திலே ஒளிந்துள்ளதாம். அவ்வருள் வெளிப்பட வேண்டுமெனில் பணிவு என்பதே திறவு கோலாம். பணிவின்றி நிற்கும் சீடனுக்கு குருவருள் என்பது கானல் நீரே தாம்.எத்தனை காலம் பயிற்சி செயினும் முன்னேற்றம் என்பது அடைய முடியாது போம்.அவனின் பணிவின்மையே அவனுக்கு தடையாக அமைந்து விடும்.ஆகையில் குருவருளே சிவம். பணிவற்ற எவனும் குருவை புரிந்து கொள்ளுவதில்லை.பணிவு வெளிப்படத் தான் எவனும் குருவை அறிகின்றான்.அவனுக்கு குருவின் சுயம் வெளிப்பட்டு தோன்றுகின்றதாம்.
Tuesday, October 3, 2023
Friday, September 22, 2023
நினைவெதுவோ அதுதானே சீவனாகும்
அத்வைத வேதாந்த சாத்திரங்களான
கைவல்ய நவநீதம், ஞான வாசிட்டம் போன்று மெய்ஞ்ஞான தேட்டத்தில் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் ரிபு கீதையாகும்.
நான்கு வேதங்களின் ( உபநிடதங்கள்) சாரமான நான்கு மகா வாக்கியங்களின் விளக்கமே ரிபு கீதையாகும்.
இதிலிருந்து இரண்டு பாடல்கள் :
" நினைவெதுவோ அதுதானே சீவனாகும்
நினைவெதுவே அதுதானே ஈசனாகும்
நினைவெதுவோ அதுதானே சகமுமாகும்
நினைவெதுவோ அதுதானே மனமுமாகும்
நினைவெதுவோ அதுதானே காமமாகும்
நினைவெதுவோ அதுதானே கருமமாகும்
நினைவெதுவோ அதுதானே துக்கமாகும்
நினைவெதுவோ அதுதானே அனைத்துமாமே."
ஃ
நினைவின்றி நிற்பதுவே அகண்ட மாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்
நினைவணுவு மில்லையெலாம்பிரமந் தானே!"
நம் நினைவுதான் சீவனாகும் .
நினைவற்ற பரிசுத்த நிலைதான் சிவமாகும் .
அருமையான உபதேச மொழி.
Tuesday, August 29, 2023
பாபாஜியின் குரல்
அந்த பிரம்மாண்டமான மௌனத்தில் ‘நானும்’ நீயும் இல்லை, அவனும் இல்லை.
அந்த விளக்குகளின் ஒளியில் கிழக்கோ, மேற்கோ, பகல், இரவு என்று எதுவுமில்லை.
பிரம்மன் கால் இல்லாமல் நடக்கிறான், காது இல்லாமல் கேட்கிறான், நாக்கில்லாமல் பாடுகிறான், வாய் இல்லாமல் சுவைக்கிறான், கைகள் இல்லாமல் பிடிப்பவன்.
காற்றோ, நெருப்போ, பூமியோ, வானமோ, சூரியனோ, சந்திரனோ இல்லை.
எதிர் ஜோடிகள் அங்கு இல்லை.
தேவனுடைய ராஜ்யத்தில் இன்பமோ துன்பமோ இல்லை, அன்போ வெறுப்போ இல்லை, சந்தேகமோ மாயையோ இல்லை.
அங்கே மரங்கள் அழியாப் பழங்களைத் தருகின்றன.
அங்கு ஆறுகள் ஆனந்த அமுதத்துடன் பாய்கின்றன.
தெய்வீக அன்பின் மலர்கள் நித்தியமாக மலர்கின்றன.
தெய்வீக கருணையின் வற்றாத நீரோடை பாய்கிறது.
இந்த உயர்ந்த சுயத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குள் உள்ளது.
உங்கள் இதயத்தின் ஆழத்தில் உள் குரல் கேட்கும் இடத்தில் அவரைத் தேடுங்கள்.
அங்கே தெய்வீக பிரகாசம் பிரகாசிக்கிறது.
இந்த மிக இனிமையான, தெய்வீக சாரத்தை குடித்து அழியாதவராக ஆகுங்கள்.
ஓம் நமஹா பாபாஜி குந்தர காந்தா அப்பாதி (ஒளிரும் ஒளியைக் கொடுப்பவர்/கொடுப்பவர், பாபாஜிக்கு நான் தலைவணங்குகிறேன்)
- ‘பாபாஜியின் குரல்’ என்பதிலிருந்து ஒரு பகுதி
புலால் மறுத்தான்*
. ●
*புலால் மறுத்தான்*
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்'' என்ற திருக் கொரலை னீங்ஙள் படித்துக் கேட்டிருப்பீர்கள். அதில் சொல்லப் பெற்றுள்ள "புலால் மறுத்தானை" என்பதற்குப் படித்தவர்கள் யாவரும். 'புலால் உண்ணாமல் வாழ்கிறவனை' என்று அர்த்தம் பண்ணுகிறார்களே, அது சரியா என்று பார்ப்போம். ஒரு மிருகத்தின் மாமிசத்தை உண்ணுவதாலா இந்ந மனிதனுடைய உடம்பிலுள்ள புலால் கெட்டுப் போகும்? பாவம் உண்டாகிவிடும். மிருகத்தின் மாமிசமாகிய புலாலைத் தின்பதால் பாவம் வரும் என்றால், இவன் தேகத்திலுள்ள புலால் இரும்பா, தங்ஙமா? வாசனை மிகுந்ந பொருளா? இல்லையே.
மரங்ஙளைப் பார். அவை அறுசுவையுள்ள ஆகாரத்தை உண்ணுவதில்லை. ஆகவே அவற்றின் உடல், னாற்றமற்றதாயிருக்கிறது. மனித தேகம் அப்படியானதா? அறுசுவை உணவு உண்டு ஜீவிக்கிற படுனாற்ற முடைய தூலமாச்சே? அப்படியிருக்கப் பிற மிருகாதிகளின் புலாலை உண்பதால் மனிதனுக்கு எப்படிப் பாவம் வந்நு விடும்?
"புலால் மறுத்தானை" என்று தெய்வ குபேர அருட்செல்வர் குறித்துள்ளதற்கு னிஜ அர்த்தம் எந்ந ஆகம சாஸ்திரப் பண்டிதர்களுக்கும் தெரிய வராது. புலால் மறுத்த அப்பாதையில் னடந்ந ஞானச் செம்மல்களுக்குத்தான் அதன் மெய் அர்த்தம் தெரியும்.
இவன் புலாலைச் சாப்பிட்டால் என்ன? அதை விட்டுக் காய்கறிகளையே சாப்பிட்டால் என்ன? உன் எண்ணத்திற்கு அசூசியாய் இருந்நால் தள்ளி விடு. வயிற்றுக்குத் தின்ன எதுவும் இல்லை என்றால் கிடைக்கிறதைத் தின்னு! புலாலை ஒதுக்கி விட்டுச் சாப்பிட்டால் தெய்வப் பதவி கிட்டும் என்று பொய் வேடதாரிகள் சாம்பிராணி தூபம் போட்டு மதிப்பைத் தேடுகிறார்கள், "புலால் மறுத்தான்" என்பதன் உண்மை அர்த்தம், மறுபிறப்பு என்ற பரிசுத்தப் பிறப்பு எடுக்கும் போதுதான் ஒருவருக்குத் தெரியவரும். ஒரு ஜீவ பண்டிதரின் திருமணிச்சூலில் ஜீவப் பிறப்பாகிய ஜோதிப் பிறப்பு எடுக்கும் போதுதான், அதன் மெய்ப்பொருள் விடியும்.
ஒரு கல்லாகிய னகலை வைத்துத் தெய்வம் என்று மந்நிரம் ஜெபித்து பூவைப்போடுகிறோம். கடையில் வாங்ஙின பூணூலை அணிந்நு கொள்கிறோம். கடையில் வாங்ஙின பூணூலா னமக்கு முத்தி தரும் ? இப்படி ஆகம சாஸ்திரங்ஙளில் சொல்லப்பட வில்லையே. அப்படியிருக்க, ஏன் இந்ந னகலாகிய பழக்கத்தை எடுத்து வைத்தார்கள்? அப்படி எடுத்து வைக்கவில்லை என்றால், தெய்வம் என்ற எண்ணமே இல்லாமல்போய், சிருஷ்டியில் வைத்து அடியோடு கீழே மகாமட்டமான னிலைக்கு மனிதகுலம் போய்விடும். அசல் பூணூலுக்கு உள்ள கண்ணியமும் வேதத்தில் சொல்லப் பெற்ற லட்சணங்ஙளும் மறைந்நு போய் விடும். கடையில் வாங்ஙி அணியும் னகல் பூணூலை அடிக்கடி மாற்ற வேண்டிய னிலையில் அழுக்குப்படிந்நு விடுமே!
சிலர் சொல்லுவார்கள், வெளி உலகத்தில் உள்ள கோயில் குளங்ஙளை எல்லாம் இடித்துத் தள்ளினால் தான் மக்கள் அசலுக்குத் திரும்புவார்கள் என்று. அந்ந அயோக்கிய உருவங்ஙள் அசலைக் கண்டவர்களா? இந்ந னகல் கோயில் குளங்ஙள் இல்லை என்றால், உங்ஙளிடம் அசலைப் பற்றிப் பேச யோக்கிதை வருமா? ஞான வார்த்தைகளைக் கேட்பதற்கான காது எங்ஙாவது இருக்குமா? இருக்காது. ஆலயங்ஙளை னிரம்பக் கட்டிவைத்து, அதில் உள்ள சிலையை மக்கள் தெய்வமென்று எல்லோரும் வழிபடுகிறாகள் என்பதை வைத்துத்தான், எமக்கு மக்கள் முகம் பார்த்துப் பேச ஆசை வருகிறது. ஆகவே னகல் ஏற்பாடு என்ன சிறிய காரியமா? ஆலயங்ஙள் கூடாது என்கிறவன், மக்கள் எல்லோரும் அவன்களைப் போல் னாஸ்தீகர்களாகப் போவதற்கே அவர்கள் பேச்சு உதவும்.
னாம் குழந்நைப் பிராயத்தில் இருக்கும்போது தெய்வ எண்ணத்தை னம் உள்ளத்தில் ஊட்டுவதற்கு கோயில் குளங்ஙள் அவசியம் தேவை. குழந்நையின் அறிவு வளர்ச்சிக்குப் பொறுப்புடையவர்கள், அந்ந இள உள்ளங்ஙளில் இந்ந னகலை வைத்துத்தான் தெய்வ சிந்நனையை வளர்க்க முடியும்.
Wednesday, August 16, 2023
இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து
இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து இயற்கையின் இயல்பாய் இசையும் இயல்பை இசைக்க இன்பம் இயற்றி இயந்தனான் இணை.
இருக்கிறது அதன் இருப்பால் இருக்கிறது. அந்த இருப்பு அதன் தன்மையாய் மறைந்தே இருக்கிறது. அந்த இருப்பே அதன் ரஹசியம். அந்த இருப்பை அதன் புரிதலை ஊட்டி விளக்குபவரே சர்குரு. அதை விழலாய் வீணக்காமல் காத்தலே பணிவு.
ரியான்
குருபிரானது திருநாவில்
ஒருவன் எதனை காக்க தவறினாலும் , குருபிரானது திருநாவில் உதித்த திருவமுத வாக்குகளையேகாத்து,பலனோங்க ஒழுகவேண்டும்.அவையே கனி!. பிற வாக்குகள் , "காய் வாக்குகள்". அந்த "காவாக்கால்" சொல்குற்றமே வரும்.!. அவர்கள் திருநாவினில் நம்மை அடக்கி வாழ்வதுவே , நாவடக்கம்!
🌷நண்பரின் பதிவு நன்றி 🌷
ஞான மணிமாலை)
கோன்கண்ட ஞானக் குருவருளாம் மப்பொருளை நான் கொண்டே னென்டு நவிலாதே-ஏனென்றால் வெண்கலத்தின் ஓசை வெகுவாக முழங்கும்பைம் பொன் கலத்தின் ஓசை பொருள்.
(ஞான மணிமாலை)
அடக்கம் அமரருள் உய்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று சொல்றத கேட்டு இங்கிருக்கிறவன், ஜீவ சமாதி வைக்கிற அடக்கத்தை பொருள் கொண்டிருவான்.அடக்கம் என்று எதை குறிக்கிறது எனறு சொல்லி கொடுக்க ஆளில்லை.
உலகில் பொக்கிஷம் என இருப்பது குரு வாய்மொழி. அந்த ஞானம் தான் உன்னை அமரனாக்க வல்லது. அந்த வாய் மொழி வரத்தை வீணாக்காது பாதுகாத்தல் தான் அடக்கம் .
கொழுமுனையாம் கதிர்முனை
கொழுமுனையாம் கதிர்முனை
கொழுமுனையாம் கதிர்முனையில் ஆடும் பாதம்... கோடானு கோடி மறைபுகழும் பாதம்...தளிர் இலை பூ காய் பழமாய் சொரிந்த பாதம்... சகல உயிர் ஜீவனிலும் ஆடும் பாதம்... அது பக்தர் உள்ளக் கோயில் உளம்பூத்த பாதம்... உலகில் ஓடியாடி அத்தனையும் அனுபவிக்க ஒன்றான பாதமாக இருக்கிறது... அந்த பாதங்களை னமஸ்கரிக்கின்றேன் அந்தப் தாமரை மலர்களை வணங்குகின்றேன் பொன்னார் திருவடிக்கு னமஸ்காரம் என்றெல்லாம் அந்தப் பாதத்தைதான் எல்லா கலைக் ஞானங்களும் எல்லா வேதங்களும் எல்லா அருட்பாக்களும் அதையே புகழ்கின்றன.. னம்மையும் ஆட்டுவிக்கின்ற பொருளாக இயக்குகின்றது... அதுதானே இறைவனாகவும் இருந்து ஜீவனாக இருந்து ஆக்குகின்றது... அப்படி என்றால் அதை னாமும் னமஸ்கரிக்க வேண்டும்... இந்த பாதத்தில் கதிர் இலை காய் பூ எப்படி பொருத்துவது... அது அசைவு என்றால் னாம் அசைகின்றோம் ...ஒரு விருட்சத்தில் ஐந்து விதமான பொருள் விளைகின்றன... பழுதனுகா ஆலயத்துள் அது இருக்கின்றது... அது இறைவனே கட்டிய ஆலயம் அது ஓரளவு தான் சொல்ல முடியும் தொடர்ந்து வந்தோர்க்கு தொடரும்... அது திக்குமனு குலத்தவர்கண் காணா பாதம்... அருள் வளரும் அம்பலத்தம் பரத்தின் பாதம்... ஆருத்ரா தரிசனையில் னடராஜர் னடனமாடுகிறார்... அவர் ஆட அனைவரும் ஆடுகின்றார்கள்... பெற்றவர்கள் குடி தலைக்க தன் பெரு வாழ்வே...
உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு
உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு
நாம் ஒரு நேரம் ஒன்றை மட்டும் சிந்திக்கும் திறமுடையோம். ஒன்றை பாக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதை மட்டும் நாம் அறிகிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் போது சிந்திக்கும் விசயம் மட்டும் உள்ளது. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இருப்பதில்லை. சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தால் சிந்தனை செய்யும் விஷயம் போய் விடும். என்ன சிந்தித்தோம் என்று சிந்தனை செய்தால் சிந்தனை நின்று போய் சிந்தித்த விசயத்தை நினைவு படுத்திக் கொள்ள முயல்கிறோம். சிந்தனை நின்று போகிறது. சிந்தனை செய்கிறோம் என்ற உணர்வும் இருப்பதில்லை. மூளை முழுக்க விசயங்கள் இருக்கிறதே! என்று என்னுகின்றது பார்க்கவும் கேட்கவும் சுற்றிலும் பல விசயங்கள் உள்ளதே! என்றும் ஒரு விநாடியில் எத்தனை விசயங்களை சிந்திக்கிறோம், அறிகிறோம் ஒரு விநாடியில் ஒரு விசயத்தை மட்டுமே அறிவோம் சிந்திப்போம். அதை விட்டு விட்டே வேறொன்றைப் பற்றுவோம். இது உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு எனலாம்.
பிரியமான சூஃபி
அவர் சிரிக்கின்றார்
"அவர் சிரிக்கின்றார் "
உபணிஷதங்களின் சாரம் என்பது மரணத்தில் இருந்து மரணமில்லா பெரு வாழ்வுக்கு அழைத்து செல்வாயாக எனும் வேண்டுதலே. இந்த வேண்டுதல் குருவிடம் சமர்ப்பணம் பண்ணப்படுகிறது.
ஆனால் நீயோ பாழாகிய இருளில் நரகலையே நினைத்து உன்னை பொண்டாவரய் குருவை நினைத்து அவர் அன்பை துவம்சம் பண்ணி அன்பெனும் பிடியில் இருந்து நழுவி நரகத்தின் வாயிலில் நிற்கிண்டாய்.
அந்தோ
... அவமரியாதை எனும் அஸ்திரத்தால் அன்பை மறந்தாய். ஆணவ பேயினால் ஆடிகொண்டாய். உன் ஆட்டமேளம் அடங்கி போகும்.
ஏ மூடனே பொய் பேசி நிஜத்தை மறைத்து உன் அழிவை நீயே தேடி கொள்கிறாய்.
வாரி பூசி கொண்ட சாயம் வெளுக்க கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவர் அறிவு ஒருபோதும் அழிந்து போகாது என்பதை மறந்து போனாய்.
ஒரு கனவு கண்டவுடன் விடிந்தது என நினைத்து ஏமாந்து போனாய். பெருமலையில் ஒரு துரும்பை எடுத்து கொண்டவுடன் மலையை பெற்ற தப்பு கணக்கு உன் அறியாமை. துரும்பான இரும்புஊசி கிடைத்ததும் வைர மாணிக்கத்தை நழுவ விட்ட மடக்கூமாளி. குருவை அளக்க பென்சில் போதாது. பணிவே துணை.