Wednesday, December 7, 2022
ஓ ஓ என்னுயிரே
ஓ..ஓ..என்னுயிரினும் மேலான இன்னுயிரே..என் காதலனே..நீ ஒருவனேயன்றோ நான்?...
ஓ என் ஆதியாம் உடலமே... என் உடன் பிறப்பே..என்னுடன் கருவோடு அமர்ந்து வளர்ந்தவனே..ஓ..ஓ..உன்னையே நான் மறந்தேனல்லவா??..மன்னித்துவிடு ..என்னருமை உடலமே..!!!
ஓ..ஓ..சிற்றணு வடிவேவென என் அன்னை கற்பமதில் உருவோடுருவாய் அருவேயருவாய் உருவருவாய் உயிராய் உயிர்காதாரமாகினவனே உனை எந்தோ மறந்தேன் ..மன்னித்தருள்வாய் என் ஆருயிர்க்காதாரமாகினவனே..எந்தாயும் தந்தையே...!!
அகமென்றார் அலைந்தலைந்தேன் புறமென்று நீயிருக்க புகின்றறியேன்...எத்தன்மையென பகிர்ந்தறியேன்...பித்தனாய் திரிந்தேன் உன்னுள் நானே..உன்னையறியாமலே....எந்தையே தாயே..என்னுயிர் காவலனே..உயிர் காக்கும் உடலமே...!!
அகமென்று நானிருக்க புறமென்று நீயிருந்தாய் எஞ்ஞான்றும் காவலாய் கருத்தாய்...கண்ணிருந்தும் காணறியேன் உன்னை கருவாயோடுருவாய் காத்து நின்றோனே...உன்னுள் என் உயிரிருந்தும் உணர்ந்தறியேன் உயிரின் உயிராமென் உடலமே...நீயன்றி என்னுயிரெங்கே..கண்டறியாது கலங்கி நின்றேனே கருணை புரிவாய் கருத்தோனே...!!!!
உயிரென்றார் உணர்வறியார்...உணர்விற்க்கு ஆதாரமாம் உடலறியார்..அழியார் எனினும் புகுந்தறியார் ..உயிரோடு புகுந்தோமென்பார்..உடலமே நீயன்றி உயிர் கொண்டதெப்போதென பகிர்ந்தறியா குற்றமே எனவறியா புலம்புகின்றனரே..பொறுத்தருள்வாய் எந்தையே தாயே....!!!
ஒத்ததாகி உனர்வாகி உயிராகி இத்திசை கொண்டெழும் வேந்தே எத்திசை நோக்கினும் உன் உடலமே உன் உருவேயன்றி மாற்ரொன்றுமிலையே கருணையே கடலாய் பூவாய் பல்லுயிராய் பலதாய் பலப்பலதாய் பல்லுயிராய் படைப்பிற்காதாராமகி பலகோடி அண்டமெல்லம் தானாய் நிறைந்து தானலதாய் விலங்கும் தம்பிரானே உனை மறந்த குற்றம் நினையாது என்னுடன் மேவி எஞ்ஞான்றும் இருந்தருள்வாயே....!!!
நீயிருக்க என்னுடன் உயிராய் உன் நிறை அகலுமென பாரானபாரெலாம் நான் பறந்து திரியாமல் என்னுடன் நீயும் உன்னுடன் நானும் பலவல்லாமல் பதிந்திருப்போமாக...பரமனாம் பதியே பதமருள்வாயே பதறாமல்..என்ந்தையே தாயே உயிர் காவலாம் தனித்துணையே...!!!
அண்டபகிரண்டமெலாம் நீயே இறைவாய் அந்த பகிரண்டத்தினுள் வந்து பிறந்தேன்..நீயே எனை வளர்த்தாய் உன்னுயிரை தந்தே..உன்னுயிரை அறியா பேதை என்னுயிரென்றேன் பொறுத்தருள்வாய் புண்ணியனே என்னுடலமே எந்தாயே தந்தையே...!!!
உன்னுளே இயங்குகின்றேன் அந்நாள் தொடூ நாம் ஒத்திசைந்த தருணமாம் காலத்தே இத்திசை யனைத்தும் நிறை கொண்டெழும் பேராற்றல் விளக்கே..அருமையே ஒருமையின் நாயகனே உள்ளுணர்வே உணர்வாய் உடலமாய் மறைந்திருக்கு மறை பொருளே...மறைக்குமெட்டாத மணிவிளக்கே..மணிமன்றில் ஆடும் வேந்தே...!!!
அகமென்று அலைந்தன ரொருகோடி அகத்தின் அகமென திரிந்தனரொரு கோடி உயிரென மலைத்தனரொரு கோடி உயிரினுயிரென திகைத்தன ரொரு கோடி அந்தோ இழந்தனரொரு கோடி எந்தாய் நீயோ அவர் எவராலும் பகுத்தறியா வண்ணம் பரத்தில் பரமாய் பகுத்தறியா விதமாய் இகத்திலோர் உயிர் கொண்ட உடலமாய் தரித்திருக்க கண்டறியா பேதைகள்..அந்தோ எஞ்ஞான்று சொல்வேன் உன் திருத்திற மதனை எங்ஙனம் புற்றுதல் எளிதோ எந்தாயே தந்தையே..தனிப்பெரும் தலைவனே....!!
தத்துவ குப்பைகள் தனித்தனி கடத்தியெனை தத்துவாதீத உறுபொருளை காண்பித்தாய்...இத்தல மொக்கும் பரந்திருக்கு பரமனே பராபர பரதலமே..எத்திசை தேடினும் காணா திருப்பொருளே...என்னுடல் நாயகனே உயிர்காவலனே உணர்வாய் வீற்றிருப்போனே..நீயே எனையாட்கொண்டாய்..நீயே திருவீற்றிருக்கின்றாய்...நானே சிற்றடியேன் உந்திருமார்பில் உன்கருணை திருதிறத்தால் வாழ்ந்திருக்கின்றேன் உன்னுடன் இசைந்தே...எந்தையே தாயே தயாபரனே....!!!!
மந்திரங்கள் பலகோடி நூறாயிரம் படைத்து நீயே உன்னாவில் பகிர்ந்திருக்கின்றாய்..நீயே அதை உச்சரிக்கவும் செய்கின்றாய்..ஆனால் நானோ நானே உச்சரிக்கின்ரேன் என மதிமறந்தேன்..செயெலெலாம் நீயே செய்கின்றாய் எந்தையே எனினும் நானோ நானே செய்கின்றேன் என மதித்திருந்தேன்...மனமே உடலென வெறுத்திருந்தேன் மனமறியாமல் நீயே மனதுக்கும் மறலியாய் கொண்டிருப்பதை இருப்பறியேன்... மறந்தருள்வாய் மறலி தீண்டா உருவோனே..மாகாகாலனே..!!!
உன்னை மறந்தோர் பலகோடி கொண்டழிந்தார் பலகோடி ஜென்மங்கள் நிறைபொழுதும்..இசைந்தங்கிருந்தார் ஒருபேர் சொல் பேரறியா பரமேஸ்வரர்கள்... ஈசனென சொல்வார் ஈசன் வடிவறியார், வடிவே வாழ்வாக வந்திங்கமர்ந்திருக்கும் திருவடிவே இங்கு உன் வடிவே அன்றி எவ்வடிவில் உயிர் தங்கும் இறையே...புறத்தார் புகன்றாலும் புகுமாறில்லையே பரமே குருவே பராமகமே....!!!
Z
சொல் பிறந்த இடமெங்கே
=== சொல் பிறந்த இடமெங்கே ===
இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது.. ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது... ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல... அது இறை படைப்பு... அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை... எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா
இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா
மனிதன் நாவு பேசுகிறது.. மிருகங்கள் பேசமுடிவதில்லை... அது மனிதனின் முதிர்வு.. அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்.. அவன் அறிவின் வெளித்தோற்றம்... அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது... அது இருக்ககூடியது , செயற்கை அல்ல.. .அப்படியானது இயற்கை உண்மை... பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்.. ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை.
தமிழ் எனும் சொல்லுக்கிட்ட உரையில் வள்ளல்பெருமான் அட்சரங்களில் “அறிவுகலைகள்” செயல்கொண்டிருக்கிறது என சாட்சியபடுத்துகிறார், சற்று பார்க்கபுலப்படும் ஐயா.
அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும், குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உயிர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்... அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை.. அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான். அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று...
மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்.
இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள்...
==❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
மூக்கு நுனி
மூக்கில் இருக்கிற வளைவு இல்லையென்றால் உனக்கு ஞானம் இல்லை என்பது உனக்கு தெரியுமா என்றால் தெரியாது. -- சாலை ஆண்டவர் அவர்கள்
மூக்குமுனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு அறிவழிந்தேன் பூரணமே...
"நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே".
பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது
மூக்கு நுனி என்று அறியாரே
மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே?
புத்தனுக்கு ஞானம் எங்கே?
இயற்கை உண்மை கடவுள்
===== இயற்கை உண்மை கடவுள் =====
இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை... வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க நிலை...
விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்
அப்படிப்பட்ட ஒன்றை ஒரு சின்ன உருவத்துள் அடக்கி சொரூபமாக்குவது என்பது அவர் விளக்கநிலையை அவமத்திப்பது போன்றாம்.
ஆன்மாக்கள் தோறும் அவருடைய ஏகதேச விளக்க நிலையே விளங்குகிறது... அவருடைய இருப்பு நிலை அன்று... அவருடைய இருப்பு நிலை என்பது அவருக்கே உரித்தானது... பகிர்ந்தளிக்க முடியாத வண்னம் பெருவெளி சொரூபம்.... விளக்க நிலையே பற்பலவற்றாலும் பற்பலவிதமாக விளங்குகிறது... இதுவெல்லாம் கூட அவருடைய ஏகதேசத்தில் ஒரு அணுப்பொடி ஏகதேசமே...... விளங்கிகொள்ளவும்.... அதன் அளப்பு என்னவென்று.... சும்மா புருவமத்தி... புருவமத்தி என கூக்கிரலிடுவது அல்ல......
அப்படி எல்லையற்ற ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம்
அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”....
அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்... அது கடவுளின் விளக்கம்...... ஏகதேசம் ஆனாலும்....
இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....
இப்படி அறிபவன் புருவமத்தியை விட்டு விடுவான்... அவன் அறிவு விரிய தொடங்கும்.... அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே ஒரு கோணத்தில் பார்க்க தொடங்குவான்.... அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என பார்ப்பது இப்படியே....
“இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்.....
அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... ஆனால் புருவமத்தி தான் எல்லாம் என்பதும் இருக்காது
அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது....
அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு”.... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு...
அது அறிவு இல்லாததனாலேயே.... பற்றுதல்...வேண்டாம் என தோன்றுகிறது.... உண்மை என்னவென அறியும் போது இவை இருக்காது... உண்மை மட்டும் இருக்கும்... அது அறிவு வரும் வரை இப்படியே தான் இருக்கும்...
இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது..
கேள்வி: காண்பவை அனைத்தும் அவன் விளக்கமாக இருக்க அவனின் இருப்பை மறைக்கும் மறைப்பு எது?
உண்மை தான், அவன் இருப்பை மறைப்பு என்பது அணுகமுடியாது... ஆனால் மறைப்பு என நாம் தான் சொல்கிறோமேயொழிய அவன் சொல்லவில்லை என்பதை கவனிக்க, அதாவது மறைப்பு என்பது நமக்கு தான்.... அது நம்மாலே, நம்மிலே தான் நிறையாக இருக்கிறது.... அதுவே ஆணவம் எனும் பெருமறைப்பு. அது எந்த விதத்தாலும் அகலாது இறை அருளால் தான் அகலும்... ஆனால் அதன் தாக்கத்தை குறைத்து பக்குவப்படுத்த அறிவெனிம் வித்தியா தத்துவத்தால் முடியும்... அப்படி நன்முயற்சியில் இருப்போமாகில் கிடைக்கவேண்டியது கிடைக்கும் எனவல்லவா பெருமானார் சொல்லுகிறார்?... மட்டுமல்ல இரண்டு படாத பூரனம் என்பது அவன் விளக்கத்தையும் உள்ளடக்கியதே, அவன் இயல்பை நாம் அறிந்து கொள்ளாத படியினால் நமக்கு இரண்டு பட்டதாக தோன்றுகிறது என்பது உண்மை என கொள்ளலாம்.இது நமது சிற்றறிவின் அனுமானமே... பூரண அறிவு தோன்றும் போது மேலும் வெளியாகும் என இறைவன் கருணையினால் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.
கேள்வி: அன்புக்கு அன்னை தெரேசா என்று தானே கூறுகிறோம் அவங்க செய்யாத ஜீவகாருண்யத்தையா நாம் செய்றோம்?
புரியாது.. புரியாது ... அது அப்படித்தான்.... தயவை புரியாதவரை புரியவே புரியாது....... ஆன்ம லாபம் அடையவேண்டும் எனும் லட்சியத்தோடு அல்ல தயவு வெளிப்படுவது..... செய்யும் தவம் எல்லாம் உலகில் உள்ள அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபத்தை பெற்றுகொள்ளவேண்டும் என லட்சியம், இது தான் தயவு...... உலகில்பிறந்து செத்துபோன அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபம் பெறவேண்டும் எனும் லட்சியம்தான் தயவு.... உலகில் பிறக்க இருக்கும் அனைத்து ஜீவஜாலங்களும் கூட ஆன்ம லாபத்தை பெற்று கொள்ளவேண்டும் எனும் பேரவா தான் தயவு..... அன்னை தெரசா இதற்க்கு கால் தூசு வராது....
இப்படியான தயா எண்னம் கொண்டவன் எப்படி இருப்பான் என நினைத்து பார்த்ததுண்டாகில் புரியும், அவன் உள்ளத்தயவின் ஆழம்...... பெருங்கடலை விட ஆழமாக அவன் தயவு இருக்கும்.... அவன் எண்ணங்களும் வெளிபாடுகளும் அவ்வண்னம் விளங்கி நிற்க்கும்....
Muthu Kumar: ஐயா, சத்தியமான உண்மை. யாரொருவர் உலகின் சகல ஜீவன்களும் முக்தியடைய பிரயாசிக்கின்றாறோ அவர்தான் சற்குரு அதுதான் குரு லட்ச்சணம்.
"இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்."
❣️நன்றி: திரு. ரியான் ஐயா அவர்கள்.❣️
அறிவியல் ஆன்மீக தேடல்
==== அறிவியல் ஆன்மீக தேடல் ===
முதல்ல ஒரு காந்தத்துக்கு காந்த வலயத்துக்கு உணர்ச்சி கொடுத்து காமியுங்க ஐயா
காந்தம் மனமாகி ருசியாகி புலனாகி என சொல்லிகிட்டு இருக்காம... ஒரு பீஸ் காந்தத்தை தருகிறேன் ...அதற்க்கு மனம் உருவாக்கி காமியுங்கள்.. அதற்க்கு ருசி உணரும் தன்மை உருவாக்கி காமியுங்கள்... அதை ரிசெர்ச்ச் பண்ணுவோம்...வாருங்கள்
மாடல் என்பது இப்படித்தான் இருக்கும்... உயிர் வராது... உணர்வு வராது புலன் வராது.. இச்சை வராது..அறிவு வராது...மரனம் கூட வராது....காந்தம் காந்தமாகவே இருக்கும்
அருள் வெளிக்குள்ளே நிறை துகள்கள் வந்தது எங்ஙனம்?...இதைத்தான் CERN லே லார் ஹேட்ரான் கொலைடர் மூலமா பாத்துகிட்டு இருக்காங்க...அவங்களும் இதுவரை கண்ட பாடில்லை
கோடானுகோடி வருடங்களாக ஆனாலும் ஒளியானது சடப்பொருளாக விரியாது உருவாகாது...ஒலியானதும் சடப்பொருளாக உருவாகாது...அப்போது இந்த சடப்பொருள்கள் எப்படி வந்தன..இது உலக விஷயம்
அதெல்லாம் தியரி தான் சார்...வாஸ்த்தவம் இல்லை...தேடி தெடி போயி ஒண்ணும் புடிகிடைக்காம அலைஞ்சுகிட்டு இருக்காங்க...தியரி எல்லாம் பாத்தா சரியானதாக தோன்றும்...வாஸ்த்தவத்தில் உதைக்கும்
இதையே கண்டு பிடிக்கமுடியலை...பின்ன எங்க ஆன்மாவையும் உயிரையும் கண்டுபிடிக்க போறாங்க? சும்மா ஒரு தியரி தான் ஜீவகாந்தம் என்பது... மொதலில் இந்த ஜீவகாந்தம் எங்கிருந்து எப்படி உருவானது என கேட்டால் பதில் இல்லை....அண்ண்டண்டங்களுக்கு அப்பால் இருக்கிறதா சொல்லப்படும் ஏதோ ஒண்ணை காமிச்சு மீண்டும் கதை ஓடும்..அதிலேர்ந்து உருவாச்சுண்ணு...பாவம் தெரியாத புள்ளைங்க நம்பிகிட்டு திரியும்
அறிவியல் துணைக்கொண்டு ஆன்மாவை எக்காலத்துலயும் உணர முடியாது. சைன்ஸ்ஸால எல்லாத்தையைம் எப்போதும் விளக்க முடியாது, எதை விளக்கப்புகுந்தாலும் மிச்சம் ஒன்னு இருக்கும் அதை அதனால் நெருங்கக்கூட முடியாது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்னா இணைச்சு பிழைப்பை வேணா ஓட்டலாம் எக்காலத்திலயும் உண்மையை உணர முடியாது.
--- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️
இது ஐந்நும் என் பொருள்
”””” இது ஐந்நும் என் பொருள் ””””
சாலை ஆண்குரு திருப்பாதம் னமஸ்கரித்து அட்சரனிலை ஆரம்பம்..கிருபை சொரிவாராக...ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
’அகரம்-அவ்வு-ஏகம்’
இ-ஈ-னா--
து-ஊ-னா--
ஐ-என் -னா--
இந்-நன் -னா--
நு-ஊ-னா--
இம்-மன் -னா--
எ-ஏ-னா--
இன் -னன் -னா--
பொ-ஓ-னா--
ரு-ஊ-னா--
உள்-ளன் -னா--
இது ஆண்டவர் மணலில் எழுதி காண்பித்து கற்பித்தது.சாகா கல்வியாம் தமிழ்.
ஒரு எழுத்து உண்டாவதற்கு முன் முதலில் பொருள் வேண்டும், இரண்டாவது ஒலி, மூன்றாவது வரிவடிவம். ’அ’ இதன் உச்சரிப்பு: அ-ஆ-னா.இதில் மூன்று ஒடுக்கம் இருக்கிறது. அது குறிக்கும் விஸ்தரிப்பை கடல் என்று சொல்லலாம் என்றால், கடலின் கரையை காணலாமே. ஆனால் ஒலியின் கரையை காணமுடியாது. ’அ’ என்று குறுக்கி உச்சரிப்பதானது,மூன்று கால் உரியில் இரண்டு அறுந்து போனது போல்.
அ-ஆ-னா என்று சொல்ல வேண்டுவதை அனேக காலமாக சொல்லாது,’அ’ என்று சொல்லி வந்துவிட்டதால்,அந்ந அக்ஷரத்தின் பிரயோஜனம் இவனுக்கு இல்லாமல் போய்விட்டது.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் உள்ளது.
இதில் மூன்று இலக்குகள் இருக்கின்றன.அம்மூன்றும் என்னென்னெவென்று இந்ந உலகம் முழுவதும் சேர்ந்நு சொல்லட்டும் பார்ப்போம்.
=== மகாமகத்வம் பொருந்நிய ஆண்டவர் திருவாக்கியம். ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
❤️ இறைரகசியத்தை விளக்கி அருளியது
- திரு. ரியான் ஐயா அவர்கள்.❤️
வாக்கியம்
வார்த்தையளவில் னிற்பது தூலதேகம். னினைவு என்னப்பெற்றது ஜீவதேகம். ஆத்மா எண்ணப்பெற்றது காரண தேகம். தூலதேகத்திலே சதா குடியிருந்நு கொண்டு அதன் உட்பொருள்களே தெரியாதிருக்கிற வர்களுக்கு ஜீவ தேகத்திற்கு அப்பாலிருக்கிற பிரதானமான காரண தேக வல்லபக்கருவியை எப்படி அறிவிப்பது?
ஆண்டவர்கள் திரு வாக்கியம்👳
நமச்சிவாய
பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள்
உபதேச மொழி :
----------------------------------------------------------------
நமச்சிவாய
----------------------------------------------------------------
பஞ்சாட்சரம் மூல மந்திரம் ஆச்சுதே .
நமச்சிவாய -சிவாயநம -அது இந்த எழுத்தா?
ஆதிமூலம் ஆகிய அந்தப் பஞ்சாட்சர முதல் எங்கே ?அது மனுமுளை தோன்றிய காலத்திலிருந்து உள்ளது ஆச்சே !
தமிழ் எழுத்து எப்போது உண்டாச்சு ?
அதற்குப் பின் உண்டானதா நமச்சிவாய ?
பொருத்தமாக இருக்குதா பார் ?
நிஜமான பஞ்சாட்சரம் எது ?எங்கே ?
நமச்சிவாய எனும் ஐந்தெழுத்தை -பஞ்சாட்சரத்தைத் தியானம் செய்தால் அந்த எழுத்தின் வடிவம் தானே நினைவுக்கு வரும் .எழுதிய எழுத்து அழிந்து விடுவதாச்சே ?இந்த எழுத்து நமச்சிவாய -தமிழ் பாஷை உண்டான பின் வந்தது தானே!
சிவம் எப்போது உண்டானது ?
அது எல்லாவற்றையும் உண்டு பண்ணிய அறிவான தெய்வமல்லவா ?அது ஆதி அந்தம் இல்லாதது .என்றும் உள்ளது .
எங்கும் நிறைந்தது .எல்லாம் வல்லது .எல்லாம் உடையது .
அந்த சிவ முதலாகிய பஞ்சாட்சரம் எது ?
புராதன பஞ்சாட்சரம் எப்படியிருந்தது ?
அந்த நிஜமான பஞ்சாட்சரம் நமக்கு வேண்டும் அல்லவா ?அது எது ?
அந்த புராதன பஞ்சாட்சரம் -அது பரம்பரை யாக வருது .நம் யூகத்திலே எல்லாம் அது தட்டுப்படாது .
இந்த எழுத்துக்கும் கட்டுப்படாது .இந்த அர்த்தத்துக்கும் கட்டுப்படாது .
ஆதியில் உண்டானது இது ஒன்று தான் .
இதை உங்களுக்கு இதுவரை யாராவது சொன்னதுண்டா ?
அந்த அசலான பஞ்சாட்சரம் எது ?
ஜீவனும் கர்மபலனும்
ஜீவனும் கர்மபலனும்
ஜீவன் இறந்து போகும் போது அங்கு இருந்த முந்தைதைய பதிவுகள்(memery) ஆன்மதுகள்களுக்கு செல்லும், ஆனால் ஜீவன் ஒரு பிறவி எடுத்து மறுபிறவிக்கு போகும் பொழுது அதற்கு முந்தைய பதிவுகள் (memery)இருக்காது இந்த ஜென்மத்தில் அனுபவித்த சுக துக்கங்கள் எல்லாம் அதற்கு தெரியாது ஆனால் கர்மபலன் தொகுப்பு கூட்டமைப்பு அதற்கு இருக்கும் அதனுடைய எனர்ஜி சக்தி(force) அதிகமாக இருக்கும் நல்லது கெட்டது அனைத்தும் ஒரு முழு வடிவத்துக்கு வரும் இதைத்தான் ஜீவனும் கர்மாவும் ஒரே விஷயம் தான் என்றும் கூறுவர் கர்மம் உள்ளவரை ஜீவன் இருக்கும் ஜீவன் உள்ளவரை கர்மம் இருக்கும் இதை விட்டு விட்டு வெளியே (escape)ஆகும் பொழுது பதிவுகள்( memery) ஆன்மதுகள்களுக்கு சென்று விடும் அதற்கு ஜீவன் இருக்காது ஜீவன் வேறு ஒரு இடம் போகும்பொழுது முந்தைய பதிவுகள் (memery)இருக்காது இந்த கர்மபலன் தொகுப்பு மட்டுமே இருக்கும்
டிராபிக்கும் நாயும்
டிராபிக்கும் நாயும்
இந்தத் தலைப்பே ஒரு வித்தியாசமானதுதான் ஏனென்றால் இந்த ஆன்மிகத்தில் என்னுடைய பயணம் என்பது சிக்னலில் டிராபிக்ல ஒரு நாய் வந்து மாட்டிக்கினா அப்ப என்ன நடக்கும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதுபோல் ஆன்மீகத்தில் பல குருமார்களும் சித்தர்கள் வழிபாட்டு வழிமுறையை தேடி அலைந்து கொண்டே இருந்தோம் இதில் யோகமோ ஞானமோ என்றும் பல சித்தர் புத்தகங்களைப் படித்து அதில் சில பாடல்களைத் வைத்துக்கொண்டு அந்த அறிவு நிலைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதும் அதன் மூலம் நம்முடைய மனம் ஒரு பேரின்பத்தை அடைந்தும் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு ஆணவமும் உண்டாகும் இரண்டாவதாக பல குருமார்களை சந்தித்து ஒவ்வொருவரிடம் இருக்கக்கூடிய சில சில சம்பிரதாய முறைகளையும் தெரிந்துகொண்டு எனக்கு எல்லாம் தெறிந்தது தெளிந்தது தெளிவானது போல் ஒரு ஆணவத்தில் ஒரு ஆட்டம் போட்டு அதில் இருக்கக்கூடிய பாவத்தையும் அவனே சம்பாதித்துக் கொள்கின்றான், தன்னை நாடி வருபவர்களுக்கு ஒரு சில சம்பிரதாய முறைகளை கொடுத்து அவனையும் முட்டாளாக்கி தானும் முட்டாளாகி அதில் ஒரு இன்பத்தை அடைகின்றான், தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அதில் வழிப்போக்கர்கள் நான்கு பேர் வருவதும் நான்கு பேர் செல்வதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள் இதுமட்டுமல்லாமல் இந்தக் கூட்டத்தில் இருந்து வந்த அவரும் இவரும் ஒரு குருவாக தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்டு தனக்கு ஒரு நான்கு சீடர்களை வைத்துக்கொண்டு இப்படி வழி வழிவழிமுறையாக ஒரு தெளிவு இல்லாமல் பலரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு இந்த ஆன்மீகம் புரிதலுக்கு வராமல் ஒரு சிலர் வேறு வழிமுறைகளையும் தெரியாமல் புரிந்து கொள்ளாமல் ஒரு நாய் டிராபிக்கில் மாட்டிக்கொண்டால் டிராபிக் கை விட்டு வெளியே வர கஷ்டப்படும் துன்பப்படும் இந்தப் பக்கம் போவதா அந்தப்பக்கம் போவதா என்று ஒரு தெளிவான ஒரு மனநிலையும் அறிவு சார்ந்த நிலையும் அதற்கு இல்லை அது உண்மையாக வெளிப்படுத்தக் கூடியது அதன் உணர்ச்சிகளால் ஏற்படக்கூடிய கோவம் அந்த கோபத்தினால் குறைத்துக் கொண்டே இருக்கும் ஓடிக்கொண்டே இருக்கும் இதனால் அங்கு டிராபிக்கில் இருக்கக்கூடிய மனிதர்களை ஒருசிலரை கடித்து கடித்து விட்டு ஓடிவிடும் கடைசியில் அடிபட்டு உதைபட்டு ஏதோ ஒரு வாகனத்தில் சிக்குண்டு அந்த நாய் தன்னை மாய்த்துக் கொள்கிறது அதுபோல தன்னை குருவாக பாவித்து கொள்கின்ற மனம் கொண்டவர்களும் மாண்டு போய் அவரை நாடி வந்தவர்களும் மாண்டு போய் இந்த மண்ணுக்கு இறை ஆகின்றனர் அவருடைய ஆன்மீகம் ஒரு தேடலாகவே மீண்டும் இந்த வாழ்க்கை தேடலாகவோ அவர்கள் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது.
Subscribe to:
Posts (Atom)