Wednesday, December 7, 2022
இயற்கை உண்மை கடவுள்
===== இயற்கை உண்மை கடவுள் =====
இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை... வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க நிலை...
விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்
அப்படிப்பட்ட ஒன்றை ஒரு சின்ன உருவத்துள் அடக்கி சொரூபமாக்குவது என்பது அவர் விளக்கநிலையை அவமத்திப்பது போன்றாம்.
ஆன்மாக்கள் தோறும் அவருடைய ஏகதேச விளக்க நிலையே விளங்குகிறது... அவருடைய இருப்பு நிலை அன்று... அவருடைய இருப்பு நிலை என்பது அவருக்கே உரித்தானது... பகிர்ந்தளிக்க முடியாத வண்னம் பெருவெளி சொரூபம்.... விளக்க நிலையே பற்பலவற்றாலும் பற்பலவிதமாக விளங்குகிறது... இதுவெல்லாம் கூட அவருடைய ஏகதேசத்தில் ஒரு அணுப்பொடி ஏகதேசமே...... விளங்கிகொள்ளவும்.... அதன் அளப்பு என்னவென்று.... சும்மா புருவமத்தி... புருவமத்தி என கூக்கிரலிடுவது அல்ல......
அப்படி எல்லையற்ற ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம்
அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”....
அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்... அது கடவுளின் விளக்கம்...... ஏகதேசம் ஆனாலும்....
இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....
இப்படி அறிபவன் புருவமத்தியை விட்டு விடுவான்... அவன் அறிவு விரிய தொடங்கும்.... அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே ஒரு கோணத்தில் பார்க்க தொடங்குவான்.... அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என பார்ப்பது இப்படியே....
“இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்.....
அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... ஆனால் புருவமத்தி தான் எல்லாம் என்பதும் இருக்காது
அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது....
அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு”.... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு...
அது அறிவு இல்லாததனாலேயே.... பற்றுதல்...வேண்டாம் என தோன்றுகிறது.... உண்மை என்னவென அறியும் போது இவை இருக்காது... உண்மை மட்டும் இருக்கும்... அது அறிவு வரும் வரை இப்படியே தான் இருக்கும்...
இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது..
கேள்வி: காண்பவை அனைத்தும் அவன் விளக்கமாக இருக்க அவனின் இருப்பை மறைக்கும் மறைப்பு எது?
உண்மை தான், அவன் இருப்பை மறைப்பு என்பது அணுகமுடியாது... ஆனால் மறைப்பு என நாம் தான் சொல்கிறோமேயொழிய அவன் சொல்லவில்லை என்பதை கவனிக்க, அதாவது மறைப்பு என்பது நமக்கு தான்.... அது நம்மாலே, நம்மிலே தான் நிறையாக இருக்கிறது.... அதுவே ஆணவம் எனும் பெருமறைப்பு. அது எந்த விதத்தாலும் அகலாது இறை அருளால் தான் அகலும்... ஆனால் அதன் தாக்கத்தை குறைத்து பக்குவப்படுத்த அறிவெனிம் வித்தியா தத்துவத்தால் முடியும்... அப்படி நன்முயற்சியில் இருப்போமாகில் கிடைக்கவேண்டியது கிடைக்கும் எனவல்லவா பெருமானார் சொல்லுகிறார்?... மட்டுமல்ல இரண்டு படாத பூரனம் என்பது அவன் விளக்கத்தையும் உள்ளடக்கியதே, அவன் இயல்பை நாம் அறிந்து கொள்ளாத படியினால் நமக்கு இரண்டு பட்டதாக தோன்றுகிறது என்பது உண்மை என கொள்ளலாம்.இது நமது சிற்றறிவின் அனுமானமே... பூரண அறிவு தோன்றும் போது மேலும் வெளியாகும் என இறைவன் கருணையினால் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.
கேள்வி: அன்புக்கு அன்னை தெரேசா என்று தானே கூறுகிறோம் அவங்க செய்யாத ஜீவகாருண்யத்தையா நாம் செய்றோம்?
புரியாது.. புரியாது ... அது அப்படித்தான்.... தயவை புரியாதவரை புரியவே புரியாது....... ஆன்ம லாபம் அடையவேண்டும் எனும் லட்சியத்தோடு அல்ல தயவு வெளிப்படுவது..... செய்யும் தவம் எல்லாம் உலகில் உள்ள அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபத்தை பெற்றுகொள்ளவேண்டும் என லட்சியம், இது தான் தயவு...... உலகில்பிறந்து செத்துபோன அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபம் பெறவேண்டும் எனும் லட்சியம்தான் தயவு.... உலகில் பிறக்க இருக்கும் அனைத்து ஜீவஜாலங்களும் கூட ஆன்ம லாபத்தை பெற்று கொள்ளவேண்டும் எனும் பேரவா தான் தயவு..... அன்னை தெரசா இதற்க்கு கால் தூசு வராது....
இப்படியான தயா எண்னம் கொண்டவன் எப்படி இருப்பான் என நினைத்து பார்த்ததுண்டாகில் புரியும், அவன் உள்ளத்தயவின் ஆழம்...... பெருங்கடலை விட ஆழமாக அவன் தயவு இருக்கும்.... அவன் எண்ணங்களும் வெளிபாடுகளும் அவ்வண்னம் விளங்கி நிற்க்கும்....
Muthu Kumar: ஐயா, சத்தியமான உண்மை. யாரொருவர் உலகின் சகல ஜீவன்களும் முக்தியடைய பிரயாசிக்கின்றாறோ அவர்தான் சற்குரு அதுதான் குரு லட்ச்சணம்.
"இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்."
❣️நன்றி: திரு. ரியான் ஐயா அவர்கள்.❣️
அறிவியல் ஆன்மீக தேடல்
==== அறிவியல் ஆன்மீக தேடல் ===
முதல்ல ஒரு காந்தத்துக்கு காந்த வலயத்துக்கு உணர்ச்சி கொடுத்து காமியுங்க ஐயா
காந்தம் மனமாகி ருசியாகி புலனாகி என சொல்லிகிட்டு இருக்காம... ஒரு பீஸ் காந்தத்தை தருகிறேன் ...அதற்க்கு மனம் உருவாக்கி காமியுங்கள்.. அதற்க்கு ருசி உணரும் தன்மை உருவாக்கி காமியுங்கள்... அதை ரிசெர்ச்ச் பண்ணுவோம்...வாருங்கள்
மாடல் என்பது இப்படித்தான் இருக்கும்... உயிர் வராது... உணர்வு வராது புலன் வராது.. இச்சை வராது..அறிவு வராது...மரனம் கூட வராது....காந்தம் காந்தமாகவே இருக்கும்
அருள் வெளிக்குள்ளே நிறை துகள்கள் வந்தது எங்ஙனம்?...இதைத்தான் CERN லே லார் ஹேட்ரான் கொலைடர் மூலமா பாத்துகிட்டு இருக்காங்க...அவங்களும் இதுவரை கண்ட பாடில்லை
கோடானுகோடி வருடங்களாக ஆனாலும் ஒளியானது சடப்பொருளாக விரியாது உருவாகாது...ஒலியானதும் சடப்பொருளாக உருவாகாது...அப்போது இந்த சடப்பொருள்கள் எப்படி வந்தன..இது உலக விஷயம்
அதெல்லாம் தியரி தான் சார்...வாஸ்த்தவம் இல்லை...தேடி தெடி போயி ஒண்ணும் புடிகிடைக்காம அலைஞ்சுகிட்டு இருக்காங்க...தியரி எல்லாம் பாத்தா சரியானதாக தோன்றும்...வாஸ்த்தவத்தில் உதைக்கும்
இதையே கண்டு பிடிக்கமுடியலை...பின்ன எங்க ஆன்மாவையும் உயிரையும் கண்டுபிடிக்க போறாங்க? சும்மா ஒரு தியரி தான் ஜீவகாந்தம் என்பது... மொதலில் இந்த ஜீவகாந்தம் எங்கிருந்து எப்படி உருவானது என கேட்டால் பதில் இல்லை....அண்ண்டண்டங்களுக்கு அப்பால் இருக்கிறதா சொல்லப்படும் ஏதோ ஒண்ணை காமிச்சு மீண்டும் கதை ஓடும்..அதிலேர்ந்து உருவாச்சுண்ணு...பாவம் தெரியாத புள்ளைங்க நம்பிகிட்டு திரியும்
அறிவியல் துணைக்கொண்டு ஆன்மாவை எக்காலத்துலயும் உணர முடியாது. சைன்ஸ்ஸால எல்லாத்தையைம் எப்போதும் விளக்க முடியாது, எதை விளக்கப்புகுந்தாலும் மிச்சம் ஒன்னு இருக்கும் அதை அதனால் நெருங்கக்கூட முடியாது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்னா இணைச்சு பிழைப்பை வேணா ஓட்டலாம் எக்காலத்திலயும் உண்மையை உணர முடியாது.
--- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️
இது ஐந்நும் என் பொருள்
”””” இது ஐந்நும் என் பொருள் ””””
சாலை ஆண்குரு திருப்பாதம் னமஸ்கரித்து அட்சரனிலை ஆரம்பம்..கிருபை சொரிவாராக...ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
’அகரம்-அவ்வு-ஏகம்’
இ-ஈ-னா--
து-ஊ-னா--
ஐ-என் -னா--
இந்-நன் -னா--
நு-ஊ-னா--
இம்-மன் -னா--
எ-ஏ-னா--
இன் -னன் -னா--
பொ-ஓ-னா--
ரு-ஊ-னா--
உள்-ளன் -னா--
இது ஆண்டவர் மணலில் எழுதி காண்பித்து கற்பித்தது.சாகா கல்வியாம் தமிழ்.
ஒரு எழுத்து உண்டாவதற்கு முன் முதலில் பொருள் வேண்டும், இரண்டாவது ஒலி, மூன்றாவது வரிவடிவம். ’அ’ இதன் உச்சரிப்பு: அ-ஆ-னா.இதில் மூன்று ஒடுக்கம் இருக்கிறது. அது குறிக்கும் விஸ்தரிப்பை கடல் என்று சொல்லலாம் என்றால், கடலின் கரையை காணலாமே. ஆனால் ஒலியின் கரையை காணமுடியாது. ’அ’ என்று குறுக்கி உச்சரிப்பதானது,மூன்று கால் உரியில் இரண்டு அறுந்து போனது போல்.
அ-ஆ-னா என்று சொல்ல வேண்டுவதை அனேக காலமாக சொல்லாது,’அ’ என்று சொல்லி வந்துவிட்டதால்,அந்ந அக்ஷரத்தின் பிரயோஜனம் இவனுக்கு இல்லாமல் போய்விட்டது.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் உள்ளது.
இதில் மூன்று இலக்குகள் இருக்கின்றன.அம்மூன்றும் என்னென்னெவென்று இந்ந உலகம் முழுவதும் சேர்ந்நு சொல்லட்டும் பார்ப்போம்.
=== மகாமகத்வம் பொருந்நிய ஆண்டவர் திருவாக்கியம். ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
❤️ இறைரகசியத்தை விளக்கி அருளியது
- திரு. ரியான் ஐயா அவர்கள்.❤️
வாக்கியம்
வார்த்தையளவில் னிற்பது தூலதேகம். னினைவு என்னப்பெற்றது ஜீவதேகம். ஆத்மா எண்ணப்பெற்றது காரண தேகம். தூலதேகத்திலே சதா குடியிருந்நு கொண்டு அதன் உட்பொருள்களே தெரியாதிருக்கிற வர்களுக்கு ஜீவ தேகத்திற்கு அப்பாலிருக்கிற பிரதானமான காரண தேக வல்லபக்கருவியை எப்படி அறிவிப்பது?
ஆண்டவர்கள் திரு வாக்கியம்👳
நமச்சிவாய
பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள்
உபதேச மொழி :
----------------------------------------------------------------
நமச்சிவாய
----------------------------------------------------------------
பஞ்சாட்சரம் மூல மந்திரம் ஆச்சுதே .
நமச்சிவாய -சிவாயநம -அது இந்த எழுத்தா?
ஆதிமூலம் ஆகிய அந்தப் பஞ்சாட்சர முதல் எங்கே ?அது மனுமுளை தோன்றிய காலத்திலிருந்து உள்ளது ஆச்சே !
தமிழ் எழுத்து எப்போது உண்டாச்சு ?
அதற்குப் பின் உண்டானதா நமச்சிவாய ?
பொருத்தமாக இருக்குதா பார் ?
நிஜமான பஞ்சாட்சரம் எது ?எங்கே ?
நமச்சிவாய எனும் ஐந்தெழுத்தை -பஞ்சாட்சரத்தைத் தியானம் செய்தால் அந்த எழுத்தின் வடிவம் தானே நினைவுக்கு வரும் .எழுதிய எழுத்து அழிந்து விடுவதாச்சே ?இந்த எழுத்து நமச்சிவாய -தமிழ் பாஷை உண்டான பின் வந்தது தானே!
சிவம் எப்போது உண்டானது ?
அது எல்லாவற்றையும் உண்டு பண்ணிய அறிவான தெய்வமல்லவா ?அது ஆதி அந்தம் இல்லாதது .என்றும் உள்ளது .
எங்கும் நிறைந்தது .எல்லாம் வல்லது .எல்லாம் உடையது .
அந்த சிவ முதலாகிய பஞ்சாட்சரம் எது ?
புராதன பஞ்சாட்சரம் எப்படியிருந்தது ?
அந்த நிஜமான பஞ்சாட்சரம் நமக்கு வேண்டும் அல்லவா ?அது எது ?
அந்த புராதன பஞ்சாட்சரம் -அது பரம்பரை யாக வருது .நம் யூகத்திலே எல்லாம் அது தட்டுப்படாது .
இந்த எழுத்துக்கும் கட்டுப்படாது .இந்த அர்த்தத்துக்கும் கட்டுப்படாது .
ஆதியில் உண்டானது இது ஒன்று தான் .
இதை உங்களுக்கு இதுவரை யாராவது சொன்னதுண்டா ?
அந்த அசலான பஞ்சாட்சரம் எது ?
ஜீவனும் கர்மபலனும்
ஜீவனும் கர்மபலனும்
ஜீவன் இறந்து போகும் போது அங்கு இருந்த முந்தைதைய பதிவுகள்(memery) ஆன்மதுகள்களுக்கு செல்லும், ஆனால் ஜீவன் ஒரு பிறவி எடுத்து மறுபிறவிக்கு போகும் பொழுது அதற்கு முந்தைய பதிவுகள் (memery)இருக்காது இந்த ஜென்மத்தில் அனுபவித்த சுக துக்கங்கள் எல்லாம் அதற்கு தெரியாது ஆனால் கர்மபலன் தொகுப்பு கூட்டமைப்பு அதற்கு இருக்கும் அதனுடைய எனர்ஜி சக்தி(force) அதிகமாக இருக்கும் நல்லது கெட்டது அனைத்தும் ஒரு முழு வடிவத்துக்கு வரும் இதைத்தான் ஜீவனும் கர்மாவும் ஒரே விஷயம் தான் என்றும் கூறுவர் கர்மம் உள்ளவரை ஜீவன் இருக்கும் ஜீவன் உள்ளவரை கர்மம் இருக்கும் இதை விட்டு விட்டு வெளியே (escape)ஆகும் பொழுது பதிவுகள்( memery) ஆன்மதுகள்களுக்கு சென்று விடும் அதற்கு ஜீவன் இருக்காது ஜீவன் வேறு ஒரு இடம் போகும்பொழுது முந்தைய பதிவுகள் (memery)இருக்காது இந்த கர்மபலன் தொகுப்பு மட்டுமே இருக்கும்
டிராபிக்கும் நாயும்
டிராபிக்கும் நாயும்
இந்தத் தலைப்பே ஒரு வித்தியாசமானதுதான் ஏனென்றால் இந்த ஆன்மிகத்தில் என்னுடைய பயணம் என்பது சிக்னலில் டிராபிக்ல ஒரு நாய் வந்து மாட்டிக்கினா அப்ப என்ன நடக்கும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதுபோல் ஆன்மீகத்தில் பல குருமார்களும் சித்தர்கள் வழிபாட்டு வழிமுறையை தேடி அலைந்து கொண்டே இருந்தோம் இதில் யோகமோ ஞானமோ என்றும் பல சித்தர் புத்தகங்களைப் படித்து அதில் சில பாடல்களைத் வைத்துக்கொண்டு அந்த அறிவு நிலைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதும் அதன் மூலம் நம்முடைய மனம் ஒரு பேரின்பத்தை அடைந்தும் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு ஆணவமும் உண்டாகும் இரண்டாவதாக பல குருமார்களை சந்தித்து ஒவ்வொருவரிடம் இருக்கக்கூடிய சில சில சம்பிரதாய முறைகளையும் தெரிந்துகொண்டு எனக்கு எல்லாம் தெறிந்தது தெளிந்தது தெளிவானது போல் ஒரு ஆணவத்தில் ஒரு ஆட்டம் போட்டு அதில் இருக்கக்கூடிய பாவத்தையும் அவனே சம்பாதித்துக் கொள்கின்றான், தன்னை நாடி வருபவர்களுக்கு ஒரு சில சம்பிரதாய முறைகளை கொடுத்து அவனையும் முட்டாளாக்கி தானும் முட்டாளாகி அதில் ஒரு இன்பத்தை அடைகின்றான், தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அதில் வழிப்போக்கர்கள் நான்கு பேர் வருவதும் நான்கு பேர் செல்வதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள் இதுமட்டுமல்லாமல் இந்தக் கூட்டத்தில் இருந்து வந்த அவரும் இவரும் ஒரு குருவாக தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்டு தனக்கு ஒரு நான்கு சீடர்களை வைத்துக்கொண்டு இப்படி வழி வழிவழிமுறையாக ஒரு தெளிவு இல்லாமல் பலரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு இந்த ஆன்மீகம் புரிதலுக்கு வராமல் ஒரு சிலர் வேறு வழிமுறைகளையும் தெரியாமல் புரிந்து கொள்ளாமல் ஒரு நாய் டிராபிக்கில் மாட்டிக்கொண்டால் டிராபிக் கை விட்டு வெளியே வர கஷ்டப்படும் துன்பப்படும் இந்தப் பக்கம் போவதா அந்தப்பக்கம் போவதா என்று ஒரு தெளிவான ஒரு மனநிலையும் அறிவு சார்ந்த நிலையும் அதற்கு இல்லை அது உண்மையாக வெளிப்படுத்தக் கூடியது அதன் உணர்ச்சிகளால் ஏற்படக்கூடிய கோவம் அந்த கோபத்தினால் குறைத்துக் கொண்டே இருக்கும் ஓடிக்கொண்டே இருக்கும் இதனால் அங்கு டிராபிக்கில் இருக்கக்கூடிய மனிதர்களை ஒருசிலரை கடித்து கடித்து விட்டு ஓடிவிடும் கடைசியில் அடிபட்டு உதைபட்டு ஏதோ ஒரு வாகனத்தில் சிக்குண்டு அந்த நாய் தன்னை மாய்த்துக் கொள்கிறது அதுபோல தன்னை குருவாக பாவித்து கொள்கின்ற மனம் கொண்டவர்களும் மாண்டு போய் அவரை நாடி வந்தவர்களும் மாண்டு போய் இந்த மண்ணுக்கு இறை ஆகின்றனர் அவருடைய ஆன்மீகம் ஒரு தேடலாகவே மீண்டும் இந்த வாழ்க்கை தேடலாகவோ அவர்கள் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது.
அஜபா காயத்திரி=
===அஜபா காயத்திரி====
வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.
ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.
இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .
“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”
‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==
(காகபுசுண்டர் உபநிடதம்
அன்பே சிவம்
அன்பே சிவம்
சிவலிங்கத்தின் தன்மை ஆண் தன்மையும் பெண் தன்மையும் குறிக்கின்றது இந்த இரண்டிற்கும் ஆதாரமாக மூலமாக இனைப்பது அன்பு இதனால் அன்பே வடிவானவன் சிவன் என்றும் அன்பே சிவம் என்றும் குறிப்பிடுகின்றார்கள் இதில்தான் ஆண்-பெண் தத்துவம் உள்ளது இதில் இந்த இரண்டு விதமான அணுக்கள் ஒன்று சேர்வது ஆண் பெண் தன்மை இதன் மூலமாக உருவாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் சிவலிங்க ரூபமாகவும் ஜீவ தன்மையை ஆணாகவும் பெண்ணாகவும் குறிக்கின்றது இந்த ஆணுவிற்கு இது ஆணா பெண்ணா என்று இந்த அளவிற்கு தெரியவே தெரியாது இது ஜீவ பரிமாணத்திற்கு வந்த பிறகுதான் ஐக்கியம் ஏற்பட்ட பிறகுதான் அது ஆணாகவும் பெண்ணாகவும் மலர்கின்றது தற்பொழுது இந்த உலகில் குரோமோசோம் டிஎன்ஏ மாற்றம் செய்யப்பட்டு மிருகங்கள் பறவைகள் முதல் காய்கறிகள் வரைக்கும் இந்த பரிமாணம் இந்த உலகில் நடந்து கொண்டிருக்கின்றது இந்த அணுவிற்கு ஜீவத்தன்மை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனால் அது எக்கோடி காலத்துக்கும் இந்த அன்பான வாய்ப்பு இல்லாமல் போகிறது வாய்ப்பு உண்டானால் தனக்கென்று ஒரு சமூகம் உற்பத்தியாகின்றது இந்த சமூகத்தில் ஆதியில் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இருந்து கொண்டு ஒரு உருவம் நடைபெற்று பல்வேறு விதமான இனப்பெருக்கங்களை செய்துகொண்டு பிறந்து கொண்டே இருக்கின்றது பலவித கோடியான அணுக்கள் ஒன்று சேர முடியாமல் இந்த இருட் கோளத்தில் இருந்து கொண்டும் இருக்கின்றன ஒருசில அண்ட வெளியில் குளிர் பிரதேசமான இடங்களில் இந்த அணுக்களுக்கு உயிர்த்தன்மை கிடைக்காமலேயே போகிறது அதற்கு பொருத்தக் கூடிய வாய்ப்புள்ள அணுக்கள் கிடைக்காமல் அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அந்த இயக்கத்திலேயே இருக்க வேண்டிய சூழல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது பலவித அணுக்கள் இந்த பூமியில் வளர ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உற்பத்தியை தொடங்குகின்றது நாம் நினைப்பது போல் இந்த கடவுள் இந்த பூமியை பிரபஞ்சத்தை ஜெபம் செய்து சிவன் பார்வதி என்று ஒரு ஆணையும் பெண்ணையும் ஒன்றுசேர்த்து இந்த பிரபஞ்சம் உருவாக வில்லை இது இந்த கோடான கோடி அணுக்கள் மூலமாகவும் அதில் அன்பாகவும் வார்த்தையாக இருக்க கூடியது ஆனால் அதில் சக்தி உள்ளது பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு இந்த பிரபஞ்சம் தோற்றத்தில் உற்பத்தியை செய்து கொண்டே இருக்கின்றது, இந்த ஜீவன் தான் சிவலிங்கம் இந்த ஆண் தன்மையே பெண் தன்மையே ஜீவனாக இருக்கின்றது இந்த ஜீவன் உலகத்தில் இருப்பது அனைத்தையும் அறிந்து கொள்கின்றது புரிந்து கொள்கின்றது அண்டஅண்டாங்கள் கடந்து அறிவால் பார்க்க கூடிய தன்மை இந்த ஜீவனுக்கு பிரகாசமாக உள்ளது
ஓசை கொண்ட திருநடனம்
ஓசை கொண்ட திருநடனம்
" ஆசின் மாமறை ஆதிபுராதன
மாசிலாத் தனிகையர் மனுமகன்
ஓசை கொண்ட நடனத்தாலே மனு
ஈசனாகும் இயல்பெடுத்து ஓதுவாம்."
"கூசாமல் ஏறிடும் வாசிமுனையின் மேல்
குருபரன் தன்னிடமே அந்தா
தேசிகர் ஆடும் திருநடனம் கண்டால் தித்திக்கும் உன்னுயிரே."
- பிரம்ம பிரகாச
மெய்வழி ஆண்டவர்கள்
மெய்ஞானிகளின் சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாடவும்-
தங்கள் பாதமெனும் வாசக் கமலத்தால்
தம்மைச் சரணடைந்த சீடர்களை வலிந்து ஆட்கொண்டு
ஜ
தங்கள் ஓசை கொண்ட நடனத்தாலே மனுவை
ஈசனாக்கி விடுகிறார்கள்.
"ஆடிய காலும் அதிற்சிலம்பு
ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலங் குருபரன் கொண்டாடத்
தேடி உளே கௌஜஜௌண்டு தீர்ந்தற்றவாறே."
-திருமந்திரம்2760
திருநடனம் புரியும் திருவடி யும், அத்திருவடியிலிருந்து ஒலிக்கும் மறைச்சிலம்பொலியும், அச்சிலம்பொலியிலிருந்து இசைக்கும் பாசுரங்களும் வழங்குவதற்கு வேண்டியே திருக்கோலம் கொண்டெழுந்து வந்தவன் குருபரன். அவன் திருவருளால் அடியேன் என் உள்ளத்தினுள்ளே அவனைத் தேடிக் கண்டு கொண்டேன்.
என்னை ஆட்கொள்ள வேண்டியே அவன் ஆட நின்றான்.
அந்த மாமணி ஈசனாகிய குருபரன் மலரடித் தாள் நடனமாட, அது நாதப் பிரம்ம சிவநடனம் ஆமே.
குரு பிரானின் ஓசை கொண்ட திருநடனமே நம்மை சிவமாக்கும் .
Subscribe to:
Posts (Atom)