Wednesday, December 7, 2022

ஜீவன்

ஜீவன் அண்டத்தின் இருண்ட  கலப்புகள் கூட்டத்தின் துகள்கள் ஒன்று கூடும் பொழுது அங்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அதன் மூலம் ஒரு விசை ஏற்பட்டு அங்கு ஒரு சக்தி பிறக்கின்றது அந்த சக்தியின் இரண்டு தொடர்புகள் ஏற்படுகின்றது ஒளி தொடர்பு ஏற்படுகின்றது அந்த இரண்டு தொடர்புகளால்  கலப்பினால் ஏற்பட்டு இதில்  பிரபஞ்ச பெரிய ஒளியாக அருட்பெரும்ஜோதி ஒளியாக மாறி மலர்ந்து விரிந்து அது சுத்த ஒளியாக பிரபஞ்சத்தின் வழியாக நிகழ்கின்றது அந்த  இருண்ட பிரபஞ்ச பெரிய ஆழ் கடல் ஒளி  அதில் ஒரு பிரதிபலிப்பு ஏற்படுகின்றது முதல் முயற்சி தன்மை ஏற்படுகின்றது அதுவே முதல் சுழற்சியின் வித்தாக ஜீவனாக இந்த பூவுலகிற்க்கு வருகின்றது அங்கிருந்து அதிலிருந்து இருந்த ஜீவன் இந்த ஏகத்துவ மான இறைவன் அந்த ஜீவனின் சொரூபம் இந்த ஜீவன் தொடர்புதான் வழிவழியாக  நமக்கு வந்து கொண்டிருக்கின்றது சிவமாக இருக்கின்றது எக்கோடிகாலத்திற்கும் இருக்கக் கூடியதாக உள்ளது இந்த இறைவனின் தொடர்பு என்றென்றும் வழி வழியாகவும் வம்சா வழியாகவும் நமக்குள் தொடர்ந்து மலர்ச்சி நடந்து  கொண்டே இருக்கின்றது இதை அறிந்து போற்றி தொழுது வாழ்வோமாக அறிவு அண்ட கோடி பிரகாசம் தோற்ற பிரபஞ்சத்தில் இந்த மகா பெரிய விரிவேஉருவாகவும் அறிவாகவும் அரு உருவாகும் இருக்கக்கூடிய ஊடகங்களாக உள்ளது  இதனுள்ளே ஏழு வானங்களும் மற்றொரு கோணத்தில் இருண்ட தன்மையாகவும் ஒளி தன்மையாகும் தோற்றத்திற்கு வந்தது பேரண்டம் இதில் உள்ளது ஏழு வானங்களும் ஏழு உலகங்களும் அனைத்தும் நிறைந்துள்ளன இந்த மகா சாகரத்தின் ஜீவ ஜாலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன இதில் அனைத்தும் அடங்கும் இதில் இருந்து வந்த ஒரு அணுசிதறல் தான் நாம் இப்பொழுது இருக்கும் ஜீவனும் ஜீவ உடலும் இதில் இருக்கக்கூடிய வேகமாக இருக்கக்கூடிய ஏகமான ஏகத்துவமாக அந்த இருண்ட துகளும் ஊடாக இருந்துகொண்டே இயங்கிக் கொண்டே இருக்கின்றன

ஆன்மாவும் கர்மாவும்

ஆன்மாவும் கர்மாவும் பூலோக பிரபஞ்சத்தில் பிரபஞ்சத்திலும் ஜீவ துகள்கலும் இருண்ட துகள்களும் இந்த பிரபஞ்சத்தில் அது தன்னுடைய வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றன அதனுடைய வேலைகள் சரிவர செய்து கொண்டிருப்பதால் எங்கிருந்தோ ஒரு சிறிய ஒரு இரண்டு செல்கள் அணுக்கள் ஒன்று கூடி இந்த  கோடி இந்த பிரபஞ்சத்தில் சிறு புல் வகைகள் மரங்களின் பலவிதமான மலர் வகைகள் தரக்கூடியதுமான மரவகைகள் தரக்கூடிய பூத்துக்குலுங்க கூடியவைகளாகவும் இந்த மனித உடலுக்கு மருத்துவ குணத்தை தரக்கூடிய பலவிதமான செடி கொடிகள் இவை அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் மனிதன் ருசிப்பதற்கும் அவனுடைய ஆரோக்கியத்திற்காகவும் இந்த கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது,  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தில் நாம் இன்று காணக்  கூடிய செயல்கள் அனைத்தும் நாம் அனுபவிக்க கூடியது, அது போல் இந்த ஸ்தூல பிரபஞ்சத்தில் பலவிதமான பறவைகள் மிருகங்கள் பூச்சிகள் அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் அதனதன் கடமையையும் அதன் வாழ்வியலுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து கொண்டும் தன்னுடைய இனப்பெருக்கத்தை செய்து கொண்டும் அதன்தன் கர்மங்களை செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இது ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள விலங்குகள் அனைத்தும் அடங்கி உள்ளன இது போல் இந்த மனிதனுக்கு ஆறாவது அறிவு என்று ஒரு படிப்பறிவும் அவனுக்கு மனம் என்றும் அது அவனுக்குள் வியாபித்து உள்ளது  இந்த பிரபஞ்சத்தில் ஆறறிவு படைத்த அவனுக்கு மனம் அறிவு கை கால் கண்  என்று இந்த உலகத்தைப் பார்த்து மகிழக்கூடிய ஒரு ஆனந்தமும் சந்தோஷமும் கொடுத்து இந்த பிரபஞ்சத்தில் அவன் சுகமும் துக்கமும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதில் இந்த மனிதன் பிரபஞ்சத்தில் அவன் செய்வது அனைத்தும் நல்வினை தீவினை யாக இருக்கின்றது ஒரு நல்வினை செய்யும் பொழுது அது அவனுக்கு நன்மையாக படுகின்றது அந்த நல்வினை செய்யும் பொழுதும் யாரோ ஒருவருக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் தான் அது அவன் மனதுக்கு வலியாக செயல்படுகின்றது அதேபோல் ஒருவனுக்கு தெரிந்தே அவன் தீவினை செய்கின்றான் அதனால் அவனுக்கும் இது அவனுக்கு எதிராக இருக்க கூடிய நபர் பல துன்பங்களை அனுபவிக்கின்றார் அவன் வாய் வழியாக அவனை திட்டுகின்றான் கோபத்தில் கொலை செய்கின்றான் பலவிதமான சூழ்நிலைகள் அவனுக்கு உண்டாகின்றது அதனால் இந்தப் பூவுலகில் அவன் மனிதனாலும் காயப்படுத்தபட்டு காயப்படுத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இது அனைத்தும் அவருடைய பிறவி கர்ம வினைகளா என்று பார்க்கும் பொழுது அவருடைய காரண காரணிகளான கர்ம வினைகள் அவனை தொடர்ந்து வருகின்றது என்று பலராலும் கூறப்படுகின்றது இது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிவதற்கு நம்மிடம் போதிய அறிவு இல்லை இது இதிகாசங்களிலும் ஞான விஷயங்களிலும் இதைப்பற்றி சரியாகவும் குறிப்பிடவில்லை இந்த ஜீவன் இருக்கின்றது இந்த ஜீவன் ஆன்மாவாக இருக்கின்றதா இந்த ஒரு மனிதனுக்கு உடல் பிரிந்து விட்டால் அவன் இந்த உலகத்தை விட்டு அவருடைய உடலை விட்டு ஆன்மா பிரிந்தது என்று எல்லோரும் கூறுகின்றார்கள் அந்த ஆன்மா பிரிந்து விட்டால் அது போய் தங்கக் கூடிய இடம் ஒரு இடமாக இருக்க வேண்டும் அல்லவா ஆன்மா எங்கு செல்லும் என்றும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு ஆச்சரியமான தகவலாகவே உள்ளது இந்த ஆன்மாவை மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து வருகின்றது என்றும் நம்பிக்கையில் பலவிதமான கோணங்களிலும் இருக்கின்றனர் இது ஒரு பக்கம் இருக்க அவரவர் செய்த கர்ம வினைகள் அவரை சாரும் அவர் குடும்பத்தை சாரும் என்றும் நம்மிடம் வழக்கம் உள்ளது இதையும் நாம் இந்த உலகத்தில் நம்பிக் கொண்டு இருக்கின்றோம் இதில் நான் என்பது அனைவரும் அறியக்கூடியது அந்த நான் இதுவரை எங்கிருந்தது அது நமக்குள் எப்படி மலர்ந்தது  இதில் அறிவும்  என்ற சுவை உள்ளது அந்த அறிவு வெளிப்படாமல் இருக்கின்றது , மனம் மனதை கடந்த உள் வெளியில் விரிந்து பரவி முழுவதுமாக மலந்த அறிவு உணர்வாக பரிணமிக்கின்றது உலக அனுபவத்தில் அடிப்படையாக இருக்கக் கூடியதாக உள்ளது  ஒரு குழந்தை பிறந்தவுடன் இறக்கின்றது அதே குழந்தை பிறந்தவுடன் அதற்கு கை கால்கள் பிரச்சினை இருக்கின்றது காது கேட்பதில்லை கண்கள் தெரிவதில்லை இன்னும் இந்த மாதிரியான குறைபாடுகளும் உள்ளது இருந்தாலும்  இந்த மனித சமுதாயத்தில்   எந்த வயது இருந்தாலும் ஒரு க்ஷண நேரத்தில் மனிதனின் மரணம்  ஏற்படுகின்றது நோய்வாய் ஏற்படுகின்றது பலவிதமான கோர விபத்துகள் நடக்கின்றன இந்த பிரபஞ்சத்தினால் இயற்கையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களினால் இந்த மனிதன் மரணித்து விடுகின்றான் இவையெல்லாம் எப்படி ஏற்படுகின்றது என்பது ஒரு கேள்விக்குறியாகவே இந்த கர்மாவின் தொகுப்பாக இருக்கின்றது இதில்  அண்டத்தில் இருண்ட பொருளின் ரகசியம் இருக்கின்றதா என்றும் இந்த அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருப்பு  உள்ளது போல் ஒரு காரணம் காரியமாக இருக்கின்றது கர்மவினை சூழ்ச்சி எல்லா இடங்களிலும் தன் வேலையை செய்து கொண்டும் இருக்கின்றது இது புரிந்தால் அந்த இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பையும் நாம் அறிந்து தெரிந்து கொள்ளலாம் ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு புரிதல்களும் இருக்கின்றன இதில் பார்ப்போமானால் இந்த உலகத்தில் சமயங்கள் உள்ளது எனில் சுயம் என்பது ஒன்று இருக்கின்றது அது அறிவு உணர்வு, அகம் பிரம்மாஸ்மி நான் உள்ளதாக இருக்கின்றேன், அயம் ஆத்மா பிரம்மா, என்னுடைய நான் உணர்வாகவே பிரம்மமாக இருக்கிறது, தத்வமசி, நீ தான் அது, என்றும் சொல்கின்றன இந்த வேதத்தின் நான்கு மகாவாக்கியங்கள், நான் அந்த நான்தான், என்கிறது பைபிளில் பழைய ஏற்பாடு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்கிறது புதிய ஏற்பாடு, கடவுள் மட்டுமே இருக்கிறது கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை, குரான்.

Dark Mater

இந்த அனாதியான இருண்ட பொருள் என்பது இந்த பிரபஞ்சத்தில் துளி அளவும் கலக்கவில்லை, ஆனால் எங்கும் நிறைந்துள்ளது புராணங்கள் இதிகாசங்கள்  இதை முன்னும் பின்னுமாக கருத்துக்களை கூறுகின்றது, இந்த இருண்ட பொருளை ஒரு மைக்ராஸ்கோப் மூலமாகவும் எதைவைத்து அளவுகோலாகும் அளக்கமுடியாதது, பார்க்கவும் முடியாது, இதற்கு முன் பின்னும் நமக்கு தெரியாது, உள்ளும் வெளியும் அற்ற இடத்தில் உள்ளது, என்றும் கூறியுள்ளார்கள் ,அதாவது இந்தப் பொருள் என்பது இந்தக் கோணத்தில் இருக்கும் இல்லை என்று கூறமுடியாது, இந்தத் தன்மை வேறு ஒரு கோணத்தில் உள்ளது, என்றும் சொல்லவும் தெரியவில்லை, இருண்ட பொருள் என்ற இறைத்தன்மை என்பதும் வேறு ஒரு கோணத்தில் இருக்கக்கூடியது, இந்த  நிறைய துகள்கள்  நிறைந்த அவஸ்தையுடன் சர்வ வியாபியாக அதுவும் இந்தப் பொருள்களாக துகள்களாக நிரம்பியுள்ளது, இந்த துகள்களுக்கு நீண்ட  காலமாக இருந்துவரும்பொழுது ஒரு கலெக்டிவ் தன்மை உண்டாகின்றது,இதனால் அங்கு  ஒரு சக்தி உண்டாகின்றது, எந்த ஒரு இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்கள் கூடும் பொழுது அதற்கு சக்தி உண்டாகின்றது, அப்படி ஒரு சக்தி உண்டாவதால் தனித்தனி வஸ்த்துக்களாக பயணிக்கும்போது இரண்டு அல்லது மூன்று நான்காக ஒன்று சேரும் பொழுது இப்படி ஒரு ஸ்திறமாக சேர்ந்தாலும் இந்த இருண்ட தொகுப்பால்  வேறு ஒன்றும் செய்யவும் முடியாது, தனித்தன்மையாக இருந்து கொண்டே இருக்கும், வேறு எங்கும் செல்லவும் முடியாது, இந்தத் துகள்கள் மட்டும் தான் இருக்கும் இது எல்லாரும் சேர்ந்து ஒரு சக்தியாக சேர்ந்திருக்கும், பிரபஞ்ச ஒளி இது வேறு பட்டகோணத்தில் பிரபஞ்ச சூட்சமமான இந்த அதி ஒளியான பார்ட்டிகள் சுத்த ஒளி, என்பது இது தான் இது வேறு எந்த ஒளித் தன்மையையும் விவரிக்க முடியாதது, ஒளி என்ற ஒன்று மட்டும்தான் தெரியும், அதை அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது, கண்களால் காணப்படுமே தவிர பிரபஞ்சத்தில் பார்க்கக்கூடிய ஒளியாக இல்லை, இது லைட் ஆக இருக்கலாம் அறிவுக்கு உருவமாக இருக்கலாம் இந்த பிரபஞ்சத்தை தன்மை டார்க் மேட்டர் தன்மை இதற்கு கிடையாது இது ஒரு அனுமானம், தான் இப்படி இரண்டு விதமான ஆதியில் இருந்தது இரண்டும் வேறு விதமான கோலங்கள் டார்க் மேட்டர் என்பது தனிப்படைகள் இந்த ஒளி என்பது எங்கும் ஏகமாக இருக்கக்கூடியது இதற்கு   ஏகத் தன்மை என்ற பெயர் உண்டு, இதுவே அதித்யம்இரண்டற்றது சர்வ வியிர்த்தியாகவும் சர்வ சின்மயமாகவும் கடவுள் தன்மை வாய்ந்தது, என்றும் சொல்லலாம், இந்த இரண்டும் இரண்டு கோணங்கள் இதில் இந்த சேர்ப்பினால் இதற்கும் ஒரு சக்தி உந்துதல் செய்துகொண்டு நடந்து கொண்டே இருக்கும் எப்பொழுதும் இரண்டு துகள்கள் காலகிரமத்தினால் பல ஆண்டுகள் கலந்து கொண்டு உள்ளது   ஆனால் பல கோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து இனணயும் பொழுது ஒரு விசை சக்தி உண்டாகின்றது ஒன்றோடொன்று இணைவதற்கு  உருவாகும் தன்மைக்கு உசும்புதல் என்று பெயர், ஒரு அணுவிற்கு உசும்புதல் உண்டாவதால் ஒளி அலை உண்டாகி இழுக்கப்படுவதால் அதற்கு உசும்பதல் என்று அறியலாம் இதுதான் முதல் கர்ம சுழற்சி, இதுதான் முதல் வித்து ,இதுதான் முதல் முதலில் ஏற்படும் ஒரு விசைக்கு தான் பிரபஞ்சம் என்று பெயர், இருண்ட பொருள் ஒளியான தன்மையில் இரண்டுக்கும் இடையில் நடக்கும் அதீதமான சக்தி உண்டாகின்றது இதுவே சிருஷ்டியின் ஆரம்பம் ஒளிப் பொருள் இருண்ட பொருள் பிரபஞ்சத்தில் அடங்கக்கூடியது இல்லை இந்த இரண்டிற்கும் ஒரு நேர் எதிர் சக்திகள் இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த சிருஷ்டி இரண்டும் இந்த சிருஷ்டியில் இரண்டும் கலந்து இருக்கும் இதுதான் பிரபஞ்சமாக பரிணமிக்கும் இந்த இரண்டுக்கும் இடையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தினால் உம்புதல் முதல் கர்மா என்றும் இந்த விசையின் மூலம்  பலபல கோணங்களாக பிரபஞ்சமாக பரந்து விரிகின்றது சர்வ பிரபஞ்சமாக உள்ளது இந்த ஒளியின் தன்மையால் தான் இரண்டும் ஒன்று சேர்கின்றது ஒன்றாக கலக்கின்றது இந்த ஒளியால் ஜீவர்களும் இந்த பிரபஞ்சமும் வளரக்கூடிய தன்மையாக உள்ளது ,சர்வ பிரபஞ்சம் பௌதிகப் பொருள்கள் அனைத்தும் ஜீவனை உற்பத்தி பண்ண கூடிய தன்மையைப் பெற்றுள்ளது ,இந்த ஒளித்தன்மையை பெற்றதனால் தான் இந்த உணர்வினால் தான் இந்த ஜீவன் கர்மாவுவுடன் சேர்ந்து பயணிக்கின்றது முன்னோர்கள் இதை தான்  நரகம், சொர்க்கம், பூலோகம் ,என்றும் வைத்துள்ளார்கள் ஒளியை நோக்கிய பயணமாக இருப்பதால் அதற்கு தேவர்கள் என்றும், இருளை நோக்கி பயணிப்பதால் அசுரர்கள் என்றும் கூறியுள்ளார்கள், இந்த இருண்ட பொருள் உடன் உசும்புதல் உண்டாகின்றது இதனுடன் ஒளியும் கலக்கும் போது தான் பிரபஞ்சமாக வளர்கின்றது இந்த ஜடமாக உள்ள இருள் தொகுப்பு என்பது இதனால், ஒரு சக்தி உண்டாகி நேர் எதிர் சக்திகள் இயற்கையாக அப்பொழுது உண்டாகின்றது இது பௌதிகமான தொகுப்புகளும் பிரகாச தன்மையுடையதாக அருட்பெருஞ்ஜோதி ஆகவும் உள்ளது, இதனுடன் இருக்கும் பொழுது அந்த  அருள் தன்மையும் வெளிப்படுகின்றது, இந்த ஜீவ தொகுப்பு பஞ்சபூதத் தொகுப்பு இது என்றும் அனாதி இந்த அனாதியாக இந்த இருண்ட பொருள் என்ன என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த  ஒளியினால் அருள் வெளிப்படும் தன்மையாக இருக்கின்றது, இதுவே இயற்கை உண்மை கடவுளாகவும் இயற்கையாக  ஏகதேசமாகவும் எங்கும் உள்ளது இதுவே தயவாகவும் மலர்ந்திருக்கிறது  இயற்கை உண்மை கடவுளின் பெரும் தயவாகவும், இந்த தயவு மலர மலர அருள் மலர்ந்து அறிவு மலராக உள்ளது, இதையே சூஃபிகள் ஆன்ம மர்ம ஜலக் கடல் என்று புகழ்ந்துள்ளனர்,

Tuesday, December 6, 2022

இந்த பிரபஞ்சமும் ஜீவன்களும்

இந்த பிரபஞ்சமும் ஜீவன்களும் இந்த பிரபஞ்சத்தில் அனாதி கோடி காலமாக எங்கெங்கும் அங்கிங்கெனாதபடி இருந்து கொண்டிருக்கும் இந்த உயிர்ப்பு தன்மையானது பலவகையாக பிரிந்து இருக்கின்றது இந்த பிரபஞ்சமும் இந்த காற்றும் அதிலுள்ள துகள்களும் இங்கு இருக்கும் கரும் பொருளும் அதில் உள்ள ஊடாக இருக்கும் ஒளியும், இந்த கருப்பொருள் கண்களுக்கு அகப்படாத அறிவுக்கு எட்டாத அறிவுக்கு எட்டாத எட்டாத நிலையில் உள்ளது இந்த கரும்பொருள் இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது இந்த சிறு புல் முதல் செடி கொடி பறவைகள் விலங்குகள் மனிதன் வரை அனைத்துக்கும் உருவாகக்கூடிய நான் என்பதை இயக்கக்கூடிய வஸ்து ஆகவும் இருக்கிறது இந்த உயிர்ப்புத் தன்மை கடவுளால் படைக்கப்பட்டு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து தனி தனி தன்மையாக இருந்து கொண்டும் அதன் உருவத்தையும் தனி உருவத்தையும் உருவங்களையும் தனித் தனியாக அமைத்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில் சந்திரன் முதல் சூரியன் வரை இருக்கக்கூடிய அனைத்தும் ஒளிவிர்ட்டுக் கொண்டிருக்கின்றன இந்த பிரபஞ்சமும் இயங்குவதற்கு செரிப்பதற்கு நலமாக இருப்பதற்கும் உறுதுணையாக இருக்கின்றன இந்த ஜீவனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது எக்கோடி காலத்துக்கும் இந்த பிரபஞ்சத்தில் உயிர் பிள்ளையாக இருக்கக்கூடிய ஒரு சில உயிர் துகள்களே அணுத்துகள்களே வாழ்வாதாரத்திற்கும் இந்த கடவுள் தன்மைமையும் ஆகி கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன நாம் இந்த ஜீவனுக்கு அறிவுபூர்வமாக இருக்கக் கூடிய மண் மணம் வளர்வதற்கும் உண்மையாகவும் இருக்கிறது இதில் ஜீவன்கள் பல பல பிரிவுகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நான் என்றபோதம் கொண்டு  அறிவியல் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த அறிவே அழியாத இந்த கடவுள் தன்மையை எக்கொடி காலத்துக்கும் அறியாதவர்கள் இதில் கடவுள் தன்மையையும் இறைத் தன்மையையும் அறியாமலேயே மாண்டு போகின்றார்கள் ஒவ்வொரு மரமும் பல விதமான மலர்களையும் பழங்களையும் தந்து கொண்டு இருக்கின்றன அவை நமக்காக படைக்கப்பட்டுள்ளன இந்த ஜீவன் ருசிப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளது மனிதனுக்கு தண்ணீரும் காற்றும் படைக்கப்பட்டுள்ளன இவ்வளவு அதிசயம் நிறைந்த இந்த பூவுலகில் மனிதன் ஜீவனை அறியாமல் போகின்றான் உன் ஜீவனுக்கு உயிர்ப்பு எப்படி வந்தது என்று அறியாமல் தத்தளிக்கின்றான் நீ உன் ஜீவனை அறிந்தால் நீ இந்த பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பாய் உனக்கு அறிவு பூர்வமாக நீயே இருப்பாய்  உன் ஜீவன் உன்னை  எட்டி பிடித்துவிட்டால் எக்காலத்துக்கும் நீ இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்ததாக ஒரு சரித்திரம் உண்டாகட்டும் =============அகழி==============

சுத்த சலணம் இல்லாத சைதன்யம்

மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத சுத்த சத்தியமான இருப்புநிலை எவற்றாலும் அறிய முடியாதது தீயினாலும் தண்ணீராலும் அளழிக்கப்படாது எங்கும் கண்களுக்கு ஏட்டப்படாதது இருந்தாலும் ஒரு இருள் இருந்தால் அங்கு ஒளியும் பிரவேசித்து கொண்டுதான் இருக்க வேண்டும் எங்குமா ஊடுருவி அருள் வடிவமாக ஒளி பிரகாசமாக எல்லா இடமும் வியாபித்து இருக்கின்றது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கக்கூடிய அங்கு எங்கும் இல்லாத படியாக அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கின்றது நாம் இருக்கக்கூடிய நிலையில் ஆனால் வேறு வித கோணத்தில் அனைத்து இடங்களிலும் இந்த கரும் பொருளாக நிறைந்திருக்கின்றது கரும்பொருள் இருண்ட  பொருள் என்றும் பல விஞ்ஞானிகளாலும் பேராசிரியர்களா லும் சித்தர்களும் ஞானிகளும் கண்டுபிடிக்கப்பட முடியாத எந்த ஒரு கருவிகளாலும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வஸ்து விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது ஆனால் இதை உருவமாகவும் நிறமாகவோ காணும் பொருளாக இல்லை இன்றும் அவர்களுக்கு அறிவுக்கும் எட்டப்படாத ஒரு விஷயமாக இருக்கின்றது  இந்த  பரிணாம வளர்ச்சி எப்படி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் ஒரு பொருள் இருக்கின்றது அது துகள்களாக இருக்கின்றது நாம் அறிவு பூர்வமாக அறிந்து கொள்ள முடியுமே தவிர வேறு எந்த கோணங்களிலும் அதை விளக்கிக் கூற முடியாத நிலையில் உள்ளதுஇதற்கு உயிர்ப்பு நிலையும் ஏற்படுகின்றது இந்த பௌதிக உலகில் பஞ்சபூதங்களுக்கு அப்பாற்பட்டு அப்பாற்பட்டதாக இருக்கின்றது இந்த பிரபஞ்சத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத ஒரே நிலையில்  களங்கமற்ற நிலையிலும் சுத்த வெளியிலும் இருக்கின்றது இதையே ஆண்மாக்களின் துகள்கள்  என்றும் ஆன்மா என்றும் பிரபஞ்ச அண்டவெளியில் அனாதையாக இருக்கின்றது என்றும், கரும்பொருள் என்றும் ஞானிகள் கூறுகின்றனர் இந்த கரும்பொருள் இந்த பிரபஞ்சத்துடன் ஒரு இழப்பு ஏற்பட்டு அதனுடைய பரிணாம வளர்ச்சியில்  இந்த பஞ்ச பூதங்களில் இருக்கக்கூடிய உயரிய நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இருந்து மாற்றம் அடைந்து புழு பூச்சிகள் மரம் செடிகள்  மனிதர்களாகவும் இருந்து அது வளர்ந்து இந்த அறிவுசொரூபமாக இருந்தும் இந்த நான் மட்டுமே இருக்கின்றது தன்னையறியாமலே இருக்கின்றது இந்த அறிவால் நாம் அந்த கரும் பொருளை பார்க்க முடியாத ஒரு பொருளாகவும் இருக்கிறது அன்றும் இன்றும் அழியாத பொருளாகின்றது இதையே ஞானியர்கள் இந்த மண்ணுலகில் இருந்து விண்ணுலகத்தில் சென்று அடைய வேண்டும் என்று கூறுகின்றார்கள் இந்த இயற்கையோடு சேர்ந்த இந்த கரும்பொருள் இது அப்பாற்பட்ட இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியை அடையக் கூடியதே ஞானிகளின் நோக்கமாக இருந்தது இதையே வள்ளல் பெருமான் அருள் ஒளி  என்றும்   குறிப்பிடுகின்றார் இந்த ஒளி வேகத்தின் மூலம் அந்த ஒளியிலேயே பிரவேசிக்க வேண்டும் அந்த ஒளியிலேயே கலந்து கொள்ள வேண்டும் என்றும் இருக்கின்றார்கள் இந்தப்  பிரபஞ்சத்தில் கலந்துகொள்வதற்கு வரலாறும் முயற்சி செய்து கொண்டிருந்தது அந்த மூன்றாவது நான்காவது கோணத்தில் இருக்கக்கூடிய அந்த பிரபஞ்ச ஒலியும்  மற்றும்  இருண்ட பொருள் இருக்கின்றது இந்த இருண்ட பொருளும் இந்த பிரபஞ்சமும் இந்த ஒளியும் நம் அறிவு என்ற அந்த ஒளி பாதையில் பயணிப்பதற்கு நாம் முயற்சி செய்வோமாக

துன்பமே அடையாத நாக்கு

துன்பமே அடையாத நாக்கு எல்லாம் வல்ல அருட்சக்தி யான இறைவன் நமக்கு நாவை கொடுத்திருக்கின்றான் இறைவனின் படைப்பில் மகத்தான சிறியதொரு சதை துண்டு தான், இதனால் விளையும் விபரீதங்கள் பல உண்டு, அந்த சக்தி வாய்ந்த இந்தப் பொருள் உள்ளத்தின் கருத்துக்களை அதுவாகவே படம்பிடித்து காட்டுகிறது, நல் வழியை பின்பற்றி நடக்கிறேன் என்று சொல்வதும்  ஒதுக்கித் தள்ளுங்கள் என்று சொல்வதும் அது தான் உங்களுக்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப் படுத்திக் காட்டுவதும் ,இந்த ஒரு சிறிய சதை துண்டு தான், இந்த சிறிய சதை துண்டு தானே இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் விளக்குகின்றது, கற்பனையில் உள்ளதையும் உண்மையில் கண்டதையும் அது கண்ணாடியில் தோன்றுவதைப் போல தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது, தான் அறிந்த  அனைத்தையும் இந்த நாவின் உதவியால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் செய்கிறது, சில வேளைகளில் இந்த அண்டத்தின் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் அளந்து பார்க்கின்றது, சூரியன் முதல் சந்திரன் வரையும் எடை போட்டுக் கொண்டு இருக்கின்றது, இறைவனையும் அவர் படைத்த  உயிரினங்களையும் வம்புக்கு இழுக்கிறது, இந்த சிறிய சதை துண்டுக்கு உள்ள ஆற்றல் மனிதனின் அவயங்களில் வேறு எதற்கும் கிடையாது,   இறைவனே இறைவனே என்று துதிக்கும் மறு சமயம் அந்த இறைவனையே வசை பாடுகின்றது நாவை கட்டுப்படுத்தாமல்  பெரும்பாலோர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்,  உங்கள் நாவின் இயக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை,   சமாதானத்திற்கும் வழிவகுக்கும் இந்த நாக்குதான் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதிலும் இந்த நாக்கு தான் செயல்படுகிறது, ஒரு சில அறிவாளிகள் கூட தட்டுத்தடுமாறி இந்த நாக்கால் அவர்கள் துன்பம் அடைகின்றார்கள், ஒரு சில நல்ல காரியத்திலும் நாக்கு உரிமை காட்டினாலும் கெட்ட காரியத்துக்கு அது என்றைக்கும் தயங்கியதில்லை மற்றவர்களின் மர்மங்களை எல்லாம் சந்திக்கு இழுக்கும், நாம் இதில் தான்  எத்தனை இன்பம் அடைகின்றோம், பொய்  பேசுவதிலும் இது அதிகமான உச்சமான இன்பத்தை அடைகின்றது , எதையேனும் பேசிக்கொண்டிருப்பதை விட மௌனம் சாதிப்பது மிகச்சிறந்தது.தங்கள் மனம் போன போக்கில் எதுவும் பேசாதீர்கள் நமக்கு  பயன் படாத எதையும் பேசாமல் இருப்பது நல்லது.

இருண்ட அழியாத கோளங்கள்

இருண்ட அழியாத கோளங்கள் அன்றும் மின்றுமழி யாப்பொரு ளென்னடி சிங்கி?- அது கண்ணையு மூட விருள்ளழி யாப்பொருள் சிங்கா! பீர்முகம்மது அப்பா அன்றும் இன்றும் அழியா பொருளாகவும் நம் கண்களுக்கு தெரியாத இருண்ட பொருளாகவும் இருக்கக் கூடியதாக உள்ளது அந்த ஞான பொருள்  அன்றும் இன்றும் அழியாப் பொருள் கண்ணை மூடினால் ஒரு இருள் எப்படி தெரிகின்றதோ நம் புலன்களுக்கு எட்டப்படாத வகையிலும் அருள் வடிவமாகவும் இருக்கக் கூடியதாக அருள்சக்தி வடிவமாய் இருக்கக்கூடிய  ஒன்று அணுவாகவும் இருக்கின்றது வள்ளலாரும் ஆகாயம் அனாதி அதுபோல் அதற்குக் காரணமாகிய உருவாக்கிய கடவுள் அனாதி அனாதியான ஆகாச வெளியில் காற்றும் அனாதி காற்று எப்படி அனாதியோ அதுபோல் கடவுள் எனும் அருட்பெரும் ஜோதி அருட்சத்தி வடிவமும் அனாதியாக உள்ளது ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது ஆன்மாக்கள் முழுமையாக  நிறைந்து உள்ளதால் இந்த இடத்துக்கு ஆன்ம ஆகாயம் என்றும் அங்கு அணுக்கள் சந்தான மாயமாய் நிரம்பியிருக்கின்றன அங்குதான் இந்த அணுக்களுக்கு ஆன்மா என்ற ஒரு பெயர் உண்டு இந்த அணுக்கள் இப்பூவுலகில் நாம் என்றும் நான் என்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் தங்கும் சொந்த இடமாக இருக்கின்றது இப் பூவலகில்

ஐயா

ஐயா என்ற ஒரு வார்த்தை நாம் சிறுவயதில் இருந்தே நமக்கு நம் பெற்றோர்கள் கற்று கொடுத்துஇருக்கின்றார்கள்,அதுபோல் பள்ளிக்கூடத்தில் நாம் ஐயா என்று தமிழ் வாத்தியாரை அழைப்போம், அதுபோல் வீட்டில் நம்முடைய தந்தையையும் ஐயா என்று அழைப்போம்,, தந்தைக்கு தந்தையும் ஐயா என்று அழைப்போம், இது ஒரு பாரம்பரிய மிக்க  வழக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு வார்த்தை, இந்த வார்த்தை அக்காலத்தில் மிகவும் நுண்ணியமாக நுணுக்கமாகவும் நமக்கு பெரியோர்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஞானியர்கள் இந்த ஐயா என்ற ஒரு வார்த்தையை இன்றும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்த வார்த்தையை வடிவமைத்து கொடுத்திருக்கின்றார்கள், இந்த ஐயா என்ற வார்த்தை மிகவும் தமிழில் அழகாகவும் இருக்கின்றது இந்த வார்த்தையை கூப்பிடும் பொழுதும் திரும்பிப் பார்க்காதவர்கள் யாராவது இருப்பார்களா, நம்முடைய தமிழருக்கு சொந்தமான தமிழுக்கே சொந்தமான இந்த ஐயா என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்துவது நாம் ஜீவனுக்கு உரிய விஷயம் அல்லவா, இந்த வார்த்தை மிகப்பெரிய அளவிலான ஆச்சரியமான விஷயத்தை நம் ஞானியர்கள் பழக்கபடுத்தி வைத்துள்ளார்கள், ஆமாம் அய்யா என்கிற ஒரு வார்த்தையில் மிகப் பெரிய ஞான ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது ஜுவ சிம்மாசனம் ஆன ஞானப் பொக்கிஷம் இந்த வார்த்தைக்குள் மறைந்துள்ளது, என்று எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள், சென்ற நூற்றாண்டிலே அவதரித்த மகா உன்னதமான ஞானியர் ஐயா வைகுண்டர்   அவர்கள் எடுத்து வைத்த அய்யாவழி என்கிற ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளார்கள் இதனுடைய மிகப்பெரிய ஞான மந்திரமாக இருப்பதும் ஐயா உண்டு, ஐயா உண்டு, ஐயா உண்டு, இந்த மந்திரம் என்ன என்பதை உங்களுடைய ஞான சத்குருவிடம் அணுகிதெரிந்து கொள்ளவும் அய்யாவழி  வந்த   இந்த மகா ஞான ரகசியம் அனைவருக்கும்  தெளிவு பெற தெளிந்திட ஐயா அருள் புரியட்டும்.

நந்தி

நந்தி "நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே" திருமந்திரம் ஆதியில் குரு பெருமான் அருள் பெற்று நந்தி யானவர்கள் எட்டு பேர் என்று திருமூலர் நமக்கு தெரிவிக்கின்றார்கள் நந்திகள் நால்வர்= சனகர் ,சனந்திரர், சனாதனர், சனத்குமாரர். இவர்களோடு சிவயோக மாமுனி, பதஞ்சலியார், வியாக்கிர பாதர், நந்தி,நந்திகள் என்பர். இவர்கள் எல்லாம் குரு பெருமானுக்கு உடல் பொருள் ஆவி தத்தம் செய்து குருகுலவாசம் செய்து குரு சொன்ன உபாயபடி தவம் செய்து குருவானவர்கள், நந்தியாகிய குருபெருமான் ஒரு மெய்ஞ்ஞான ஜோதி அவர் பெருமையை அளக்க முடியாது அவரை நினைத்து நடந்தால் கயிலை நம் கைவசம் ஆகும்.

ரியான் குண விளக்கு

ரியான் குண விளக்கு உண்ணு மட்டும் உண்டு விட்டு உணர்வு கெட்டு பேண்டு விட்டாள் மண்ணில் இந்த சீடனுக்கு மறுபிறவி தான் வாய்க்குமோ! குன்றிலிட்ட விளக்கினால் குணங்கள் உண்டு  கேண்மிரோ ! பண்டுதொட்டு பணங்கிழங்கு காகம் தின்பது இல்லையே.