Tuesday, December 6, 2022

இருப்பை இருப்பின்

இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து இயற்கையின் இயல்பாய் இசையும் இயல்பை இசைக்க இன்பம் இயற்றி இயந்தனான் இணை. இருக்கிறது அதன் இருப்பால் இருக்கிறது. அந்த இருப்பு அதன் தன்மையாய் மறைந்தே இருக்கிறது. அந்த இருப்பே அதன் ரஹசியம். அந்த இருப்பை அதன் புரிதலை ஊட்டி விளக்குபவரே சர்குரு. அதை விழலாய் வீணக்காமல் காத்தலே பணிவு. ரியான்

அட்சரங்கள் அறுபத்துநாலு (இயற்கை உண்மை ஒலி அமைப்பு அட்சரங்கள்)

அட்சரங்கள் அறுபத்துநாலு (இயற்கை உண்மை ஒலி அமைப்பு அட்சரங்கள்) அண்ட எழுத்துக்கள் (12) அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள கண்ட எழுத்துக்கள் (28) க்க(ka) - க்க(ga) - ங்ங(nga ) - ச்ச(cha) - ஜ்ஜ(ja) - ஞ்ஞ(nja) - ட்ட(da) - ட்ட(ta) - ண்ண(NNa) - த்த(tha) - த்த(dha) - ந்ந(nna) - ப்ப(pa) -ப்ப(bha) - ப்ப(fa) - ய்ய(ya) - ர்ர(ra) - ல்ல(la) - வ்வ(va) - ஸ்ச(ssa) - ஷ்ஷ(sha) - ஸ்ஸ(SSa) - ஹ்ஹ(ha) - ள்ள(LLa) - ழ்ழ(zha) - ற்ற(RRa) - ன்ன(na) - ம்ம(ma) (28) பிண்ட எழுதுக்கள் (24) அம் -ஆம் - இம் - ஈம் - உம் - ஊம் - எம் - ஏம் - ஐம் - ஒம் - ஓம் - ஒளம் அஃ - ஆஃ - இஃ -ஈஃ - உஃ - ஊஃ - எஃ - ஏஃ - ஐஃ - ஒஃ ஓஃ - ஒளஃ Hseija Ed Rian ஆதியே துண திருச்சி மாவட்ட பெரம்பலூர் உயர் னிலைப்பள்ளியிலிருந்நு ஆசிரியர்கள் வந்நிருந்ந போது திரவாய்மலந்நருளிய ஆண்டவர்கள் வாக்கியம்: தமிழிலே எறக்குறைய முப்பத்து மூன்று எழுத்துக்கள் விட்டுப் போயிருக்கின்றன - அவை தமிழ் எழுத்து வரிசைகளிலிருந்நும், உபயோகத்தில்லாமலிருக்கின்றன - தொடக்கத்தில் எழுத்து சொல்லித் தரும் போது அவை சொல்லித் தரப்படுகின்றன - ஆனால் னாம் எழுதுவது எதிலும் அவை உபயோகப்படுத்தப் பெறுவதில்லை. அப்படியுள்ள எழுத்துக்கள்: "க" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ங" வின் வரிசை, "ச" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ஞ" வின் வரிசை, "த" வுக்கு அடுத்த எழுத்தாகிய "ந" வின் வரிசையும் ஆகும். திண்ணைப் பள்ளிக்கூடங்ஙளில் "ங" வரிசையைச் சொல்லித் தரும் போது அவ்வரிசையில் கடைசி எழுத்தை "ங்" (ING) என்றும், "ஞ" வரிசையைச் சொல்லித் தரும் போது அதில் கடைசி எழுத்தை "ஞ்" (INJ) என்றும், "ந" வரிசையில் கடைசி எழுத்தை "ந்" (INDH) என்றும் சொல்லித் தருவது வழக்கம் - இதை னன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது -  "ங" வரிசையின் கடைசி எழுத்து "ங்" (ING) என்றால், முதலெழுத்து "ங" (NGA) என்றுதானே உச்சிக்கப் பெற வேண்டும்? அவ்வரிசையில் மற்ற எழுத்தக்களும் இந்ந ஒலியை ஒட்டித்தானே வர வேண்டும்? அப்படியில்லாமல் "ங" முதல் "ஙௌ" வரை ஒருவித மூக்கு ஒலிகளாகவே உச்சரிக்கப்படுகின்றன - இதே போலத்தான் "ஞ" வரிசையும் தவறாக உச்சரிக்கப்படுகின்றது - இப்படியுள்ளதால் ங, ஙா, ஙி. ஙீ முதலிய மூக்கொலிகளுக்குப் பதிலாக, ங (INGA), ஙா (INGAA), ஙி (INGI), ஙீ (INGEE) என்ற தொண்டை யொலிகளையும் பயன்படுத்துவதுதான் முறையென்று தெரிகிறது - திண்ணைப் பள்ளிக்கூடங்ஙளில் சொல்லித்தரும் முறையில் அந்நக் கடைசி இரண்டு எழுத்துக்களில், அதாவது "ங்", "ஞ்" , என்ற எழுத்துக்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஓசையிலிருந்நுதான் விட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுப்பிடிக்க முடிகிறது! தின்னைப் பள்ளிகூடத்து னடைமுறை ஒருபுறமிருக்கட்டும் - தற்போதுள்ள னடைமுறையையே னம் அறிவைக் கொண்டு னாம் சிந்நித்துப் பார்த்தாலும் இது னமக்கு வளங்ஙும் - தற்போதுள்ள னடைமுறை என்னவென்றால், அங்ஙு (ANGU) என்று வாயில் சொல்கிறோம் ஆனால் எழுதும் போது அங்கு (ANKU) என்றே எழுதுகிறோம் - அதனால் தான் வெளினாட்டார் னம் தமிழை எவ்வளவு படித்தாலும், அவர்களுக்குச் சரியாக உச்சரிக்க வருவதில்லை - அங்கு (ANKU) என்று உள்ளபடியே எதார்த்தமாக உச்சரிக்கின்றார்கள் - இது னாம் எழுதுவதில் உள்ள குறையேயன்றி வேறொன்றுமல்ல - இப்படி வாய்க்கும் கைக்கம் முரணாக இருக்கிறது - இதே போலத்தான் அஞ்ஞு என்று பிழையில்லாமல் சொல்லுகிறோம், ஆனால் அஞ்சு (ANCHU) என்று பிழையாக எழுதுதிறோம் - இதனால் ங், ஞ் தவிர அவை வரும் வரிசைகளிலுள்ள மற்ற எழுத்துக்கள், ஏறத்தாழ எல்லாமே வழக்காறற்றுப் போய்விட்டன Hseija Ed Rian இங்ஙனம் என்ற சொல்லில் மட்டும் தான் "ங" (NGA) சரியாக வழங்ஙப்படுகிறது - மற்றபடி னம் செந்நமிழ் மொழியிலுள்ள எந்ந னூலைப் பார்த்தாலும், இந்ந எழுத்துக்கள் காணப்படவில்லை - இவை எப்போது விட்டுப்போயின என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை - னம் வீட்டில் உயிர்ப்புக்குரிய பொருள் ஒன்று அனுபவிக்க முடியாதபடி கண்ணாடி அலமாரியிலே காட்சிப்பொருளாக இருப்பதால் பயன் என்ன? னம் தமிழ் மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்துக் குடும்பத்துக்கும் னம் வாயில் ஒவ்வொரு வீடு உள்ளது. ஒரு எழுத்து குடியுள்ள இடத்தில் இன்னொரு எழுத்து குடியிருக்காது - ஒரு குடும்பத்திற்கள் இன்னொரு குடும்பத்து ஆடவன், "னான்தான் இதற்கத் தலைவன்" என்று குடியேறிக் கொள்வது எவ்வளவு தவறானது. இப்படியிருக்க, "ற"வை அடுத்து வரும் "ன" வின் வீட்டிலேயே "த"வை யடுத்து வரும் "ந"வையும் அதன் வரிசையையும் கொண்டு போய் குடியேற்றுவது எவ்வளவு பெரிய தவறாகும்! ஒரே வீட்டிலே இரு "ன" (ந)க்களா இருக்கும்? ஒரே ஒலிக்கு இரண்டு எழுத்துக்கள் இருக்க வேண்டியது இல்லை - ஆகவே இதில் தவறு னேர்ந்நுவிட்டது என்பது மிகவும் திட்டவட்டமாகத் தெரிகிறது - "த"வை அடுத்து வரும் "ந" வின் உண்மையான ஒலி அறியப்படாமையால் - " மொழிக்கு ஒன்று முன்னே வரும், மற்றொன்று பின்னே வரும் " என்று சப்பைக்கட்டு கட்டி எழுத னேர்ந்நுவிட்டது னாளடைவில் அதுவே மிகவும் ஆழமாக வேரூன்றிப் படர்ந்நுவிட்டது - ஆனால் எவ்வளவுதான் வேரூன்றிவிட்டாலும் தவறு என்று கண்டுபிடிக்கப் பெற்றதும் அத் தவறை வெட்டியெறிந்நால்தான் மொழியை னன் முறையில் வளர்க்க உதவும் -  "ந" வரிசையில் கடைசி எழுத்து மட்டும் "ந்" (INDH) என்று உச்சரிக்கப் பெறுகிறது என மேலே சொன்னோம் - அதை வைத்துப் பார்த்தால், "த" வை அடுத்து வரும் "ந"வின் சரியான ஒலியும் அவ்வரிசையிலுள்ள மற்ற எழத்துக்களின் சரியான ஒலிகளும் என்னவென்று தெரியும் - ந (INDHA), நா (INDHAA) என்று உச்சரிப்பதுதான் பொருத்தமானதும் பயனுள்ளதும், வாய்க்கும் கைக்கும் முரணில்லாததுமாகும் - எப்படியென்றால், "அந்ந" (ANDH) என்று வாயில் சொல்லுகிறோம் ஆனால் "அந்த" (ANTHA) என்று எழுதுகிறோம்; இது முரணில்லாமல் வேறென்ன? இவ்வாறு விட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுபிடித்ததுதான் தமிழுக்குப் பெரிய வரவாகும் - இதனால் பேச்சுக்கும் எழுத்துக்கம் உள்ள முரண் தீரும் - னம் தமிழில் "ங" (NGA) ஓசை "ஞ" (NJA) ஓசை, "ந" (NDHA) ஓசையில்லாததால் மற்ற மொழிக்காரர்கள் னம் மொழியை "ஓசையில்லாப் பாஷை" என்று குறை கூறிக் கொண்டிருக்கிறார்களே, அந்நக் குறையும் னீங்ஙும் - னம் தமிழைக் கற்கும் வேற்று மொழிக்காரர்களும் னம் தமிழில் எழுதியிருப்பதைப் பிழையின்றி உச்சரிக்கவும் உதவும் - ஏதோ படித்தவர்கள் வந்நிருக்கிறீர்களே என்று இதனை உங்ஙளிடம் சொல்லுகிறோம் - இதனை வேறொருவர் எடுத்துத் தம் பெயரால் பரப்பினாலும் எமக்கு ஆட்சேபணையில்லை என்றும் தெரிவித்துள்ளோம் - ஆனால் யாரும் முன் வராமற் போகவே "ஆதி மெய் உதய பூரண வேதாந்நம்" என்ற முதல் னூலம், இன்னும் பல மெய்மை னூல்களும் விட்டுப் போன மேற்சொன்ன எழுத்துக்களை அறிந்ந பின்னரே எங்ஙள் கிரந்நங்ஙளை எடுத்தோதும்படியாகச் சொல்லியுள்ளோம். என்று ஊன் உறக்கமற்ற எங்ஙள் குலத் தெய்வம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்நு அருளினார்கள். Hseija Ed Rian இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள் Hseija Ed Rian அடியேன் ஆண்டவர் கூறியதற்க்கும் /வள்ளலார் கூறியதற்க்கும்/ தமிழுக்கும் உள்ள தொடர்பினை இங்கு கூறவில்லை. இயற்கை உண்மையான மனித நாவின் ஓசை அமைப்புகலை சொல்லி இருக்கின்றேன். இவை மூல ஓசைகள்..இவை பல பெருக்கங்களாக இணையும் தன்மையுடன் பல மொழிகள் பேசப்படுகின்றன. மனிதனை படைத்த இறைவன் மனிதனின் நாவில் அமைத்திருக்கும் சொல்லோவியம் இவை Hseija Ed Rian Muthu Kumar இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது..ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது...ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல...அது இறை படைப்பு...அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை...எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா Hseija Ed Rian இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா Hseija Ed Rian மனிதன் நாவு பேசுகிறது..மிருகங்கள் பேசமுடிவதில்லை...அது மனிதனின் முதிர்வு..அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்..அவன் அறிவின் வெளித்தோற்றம்...அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது...அது இருக்ககூடியது , செயற்கை அல்ல...அப்படியானது இயற்கை உண்மை...பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்..ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை Hseija Ed Rian அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும் குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உஇர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்...அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை..அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான்.அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை Hseija Ed Rian ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று Hseija Ed Rian ஏனெனில் மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்

பிராணன் எது அபானன் எது

பிராணன் எது அபானன் எது பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல. இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்.. உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது. உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் , அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர் Thavayagi Gnana Deva Bhrathi இதுவும் முழுமைபெறாத பிராண அபாண அபாண்ட செய்தி!பிராணன்,அபாணன் என்பதை கருத்துவடிவில் கொடுக்கமுடியாது!இது முற்றிலும் நாடிகள் சம்மந்தப்பட்டவை!பிராணனையும், அபாணனையும் இணைக்கவேண்டும்!பிராணன் ஆக்சிசன் என்றால் அதை எரித்து சக்தியாக பதியவைப்பதும், கழிவுகளை வெளித்தள்ளுவதும் அபாணன். இதுமட்டுமல்ல செல்களில் பிராணன் தங்க துணைசெய்வது அபாணன்!இதற்குமேல் விரிவாக உணர்த்தமுடியாமல் சித்தர்கள் பரிபாடையாக ஆரியன் நல்லன் குதிரை இரண்டு உள்ளன!வீசி பிடிக்கும் விரகரிவாளர் இல்லை!கூரியநாதன் குருவின் அருள் பெற்றால், வாரிபிடிக்க வசப்படும் தானே!என்கிறது திருமந்திரம்! தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வது தர்மம்!ஒரு தவறை சுட்டிகாட்டி தனது மேதாவிதனத்தையும் குழப்பமாகவே பதிவிடுவது, எந்த மாற்றத்தையும் தராது!பிராண,அபாண விவகாரம் வார்த்தையால் விவரிக்க முடியாது என்பது அனைத்து சித்தர்களின் முடிவு!யாமும் ஒரு வாசியோகி தான்!36வருடமாக கடும் பிரயத்தனம் செய்கிறோம்!அவ்வாறு அறிந்ததை!எவ்வாறு ஒருவருக்கு இசைவிப்பது ?என்ற குழப்பம் உள்ளத Panja Bootha Seenivasan "உறையான கருப்பையில் சுக்கில மாய்ப்பாய, உத்தமனே சுரோணிதந்தானுறைந்து கொள்ளும், கறையாப் பாய்தவழி தமருபோல,, "முனையறுகு னுனிபனிபோல் சுரோணிதத்தில் சேர்ந்து, தாக்கவே சுரோணிதந்திரண்டு தன்ரூபமாகித்" தமா்வாசல் தனைமூடும் வாயுதானும்". என்பதீனால் சுக்கில சுரோணிதம் திரணகடு,தன் ரூபமாகி அங்கு உண்டான தமர் வாசல் வாயுவால் மூடப்படும் என அறிகிறோம். வேர்கவே வேலிபோல் வளைந்து காக்கும்",என்பதீனாலும், விளங்குகின்ற அபானவாயு வெளியில் நிற்கும்,விந்துவுடன் பிராணவாயு பினங்களாகும், கலங்குகான்ற ஊதானனது கருவளர்க்கும் கருவதற்குள்வினை மூன்றும் கலக்கும் பாரு" என்பதீனாலும் மேலே கூறிய வீவரங்கள் தெளிவாகும் Hseija Ed Rian ஐயா...ஒருதடவை சொல்லுவது என்ன என்பது சற்று ஆழமாக உற்று கவனியுங்கல். ”முதல் உட்செல்வது பிராணன் எனவும் வெளிச் செல்வதை அபாணன் எனவும் கொண்டு” என சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?. இந்த கூற்று தான் தவறு என்கிறேன். பிரானன் முதலிலும் உட்புகாது கடைசியிலும் உட்புகாது. ஒரு குழந்தை பிறந்த உடன் முதலில் உட்புகும் சுவாசத்துக்கு அபானன் என பெயர்.குக்ஷந்தை முதன்முதலில் வெளிவிடும் சுவாசம் பிரானன்.பிராணன் எப்போதும் வெளியே தான் போய் கொண்டிருக்கும் Hseija Ed Rian Kumar Venkitasamy பிராணன் வேறு உயிர் வேறு ஜீ.கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கும் ஆனால் பிரானன் இருக்காது Hseija Ed Rian பிறந்த பின் உருவாகும் நேர் - எதிர் அசைவுகளுக்கு பிராண அபான என பெயர்.வெளி போகும் சுவாசம் பிரானன், உட்புகும் சுவாசம் அபானன் Hseija Ed Rian தன்னில் தானாகி விளங்கும் உயிரை அறியாவிடில் பிராணன் அபானன் என பிரபஞ்ச காற்றை மூக்கு வழி இழுத்துகிட்டு கடைசியில் சாவு தான் வரும்.மூன்றாம் நாள் உடல் நாறும்,அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் ஜீ Hseija Ed Rian ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது ஜீ.அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது.ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.   Hseija Ed Rian ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம் Hseija Ed Rian பஞ்ச இந்திரியங்கள் வழி கடந்தால் நீங்கள் பயணிக்கும் பாதை இந்திரிய பாதை என உணருங்கள். முதலில் குரு அறிவிக்கும் பாதை என்பது ஜீவ பாதை Hseija Ed Rian ஆனால் ஜீவன் எது,எங்கே என்பதில் தான் கானாதவருக்கு சந்தேகம். பிரானன் அபானன் ஜீவன் என பிதற்றல் இருக்கும்.தெரிந்தவருக்கு குழப்பமே இருக்காது Hseija Ed Rian ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது.எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி Hseija Ed Rian பிரானாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு.சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே.இவை கறிக்கு ஆகாது. Hseija Ed Rian இல்லை ஐயா..எனது பதிவு உறுதி படுத்தி எனக்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நீங்கள் சம்மதிப்பதினால் எனக்கு ஒன்று அதிகம் கிடைக்க போவதில்லை, நீங்கள் மறுத்துவிடாலும் எனக்கு ஒன்று ஆகபோவதுமில்லை. எனது கருத்தை இங்கே பதிகிரேன் என்றால் அது அன்பினாலே தான். இல்லையெனில் இவ்வலவும் இங்கு பதியவே மாட்டேன். எனக்கு என் பாடு போதும். நீங்கள் பலகாலம் ஆன்மீக வாழ்க்கையில் உள்ளீர்கள் என அறிந்திருக்கின்றேன், ஆனால் உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உனர்ந்தீர்கலானால் அடுத்த வாசல் திறக்கும்.சாலை ஆண்டவர் சொல்லுவது பொன்ற ‘அகர வாசல்’’. இல்லையெனில் பிரானாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம். சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிரானன் என்பனவற்றிலேயே முடிந்து விடும். ஜீவனை எட்டாது.ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் பரசியமாக கிடையாது.ஆனால் நிலவி வருகின்றது என்பது நிச்சயம் உண்மை Hseija Ed Rian இந்திரியங்கள் வழி பிரயானம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிரான அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கல்..ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது.ஜீவனுக்கு போகும் வாசல் ரெம்ப ரெம்ப சின்னது ஜீ.அதாவது சின்னது என்றால் பொருள் ரெம்ப நுணுக்கமானது என்பதாகும்.அறிவுக்கு வருவது ரெம்ப அரிது.குருவே சரனம் Hseija Ed Rian என்னத்த சொல்ல ஜீ. சொல்லி சொல்லி முடியாது தான் சொல்லாமலே பல காலம் இருந்து விட்டேன். புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம் ஜீ. அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது.லட்சியத்தை காணாது பிரயானம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமுக்கு உணர்த்த வேண்டும்.இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயானம் ஆரம்பமாகும். உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள்.இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலி ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள்.அது தான் இலக்கு.அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள்.அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள்.அதை பிரயானம் செய்து அடைவது சீடனின் கடமை Hseija Ed Rian நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க...”குளத்தோடு முகம் திருப்புவன் குண்டி தான் நாறும்”ண்ணு. ஏகம் அனேகம் அத்வைதம் சித்தாந்தம் என கதை எல்லாம் காலன் வந்தால் பதபதைத்து வெளியே சாடும், ஒண்ணும் ரெண்டும் வளியுடன் வெளியேறும், கண்ணை சுருட்டி காது அனல் கொண்டு தகிக்கும். மூச்சு திக்குமுக்காடி விம்மும். பொருமி அபானன் மேல் வாங்கும்.பிரானன் தகிக்கும். அப்போது ஏகம் கூகம்ண்ணு கத்துதற்க்கு நா கூட எழும்பாது. தொண்டை சுருக்கிட்டு அலறும், ஆனால் அலறல் வெளி கேக்காது. உனர்ந்த உருவிட்ட மந்திர தந்திர சாத்திர குப்பைகள் எல்லாம் நினைவுக்கே வராது.ஜாக்கிரதை.ஒரு தலைமுறை கூடவே இருக்கும் தன்னினைவை தானறிந்து தன்னிலே தானாகிய உயிரை பழகி உயிரடக்கம் ஆகுதல் நலம்.ஜீவ தண்ணீரை விட்டு விலகி செல்பவ்னுக்கு நாற்றம் தவிர்க்க முடியாததாகி விடும் என்பது நிச்சயம் Hseija Ed Rian ஏராலம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உனர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள்.கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள்.அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்..யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர் Hseija Ed Rian நான் என்பதும் இல்லை இறை என்பதும் இல்லை, இரண்டும் கானல் நீரே. நானும் அவனும் அற்றதே வெட்டவெளியாம் இரண்டற்ற மெய்மை. Hseija Ed Rian வெங்காயம் தானுரிக்க வந்திருந்த கதை போல் வந்தாயிங்குனுது இறையென்று கண்டாயோ-கண்டார் கண்ணிருந்தும் காணா கனவினுக்கோர் கண்ணுண்டே வம்பாய் வந்திருப்பார் கண் Hseija Ed Rian தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே த்ன்மயமே தான்.மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம். Hseija Ed Rian ’நான்’ .’நான்’ என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை. Hseija Ed Rian இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்ரது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான். Hseija Ed Rian வெட்டவெளி ‘ஒன்றுமல்லாதது’ என்பது மனதின் கற்பனை.ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை Hseija Ed Rian அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய் Hseija Ed Rian விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்

நான்

"நான் பிறக்கும் பொழுது தனியாகப் பிறந்தேன் நான் மரணிக்கும் பொழுதும் தனியாகவே மரணிப்பேன், எனது மண்ணறையிலும் நான் தனியாகவே வைக்கப்படுவேன், இறைவனின் முன்னிலையில் எனது கணக்கு கேட்கப்படும் போதும் நான் தனியாகவே இருப்பேன் (யாரும் எனக்காக பதிலளிக்கப் போவதில்லை), பிறகு நான் நரகில் நுழைந்தாலும் தனியாக நுழைவேன் அல்லது சொர்க்கம் சென்றாலும் தனியாகவே செல்வேன் (எனது செயல்களுக்காகவே தீர்ப்பளிக்கப்படும்) அப்படியிருக்க மக்களுடன் எனக்கென்ன அலுவல் இருக்கிறது..? (அவர்கள் சொல்வதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்..?)

ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை

==ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை - ரியான்== ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும்,நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும்,நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும்,எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு,அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார்,உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று,ஆனால் உலகமோ அவரை அறியவில்லை. எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள். ----பைபிள் இந்த எக்ஸ்னா "X" என்னவாம்?

உயிர்=ஆன்மா

Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் காலங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்றி்ர்க்கு உணவாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?.. Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்òகு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?. Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது.... இது பரம ரகசியHseija Ed Rian சூக்குமத்தின் விரிவே தூலம்.. தூலம் உடலெனின் சூக்குமம் உயிராம்... இவை இரண்டினும் உள்ளுறை ஆன்மா என பரபடுவது மனமே தான்.. .காரணம் என்படுவது அது சூக்குமத்திற்க்கும் தூலத்துக்கும் காரணம் என கொள்ளதகாது, எனில் இவை மலர காரணி மனமே ஆம் எனவே.மான ஒரு விஷயம்

விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே

"ஊனான உடலுக்குள் முகவட்டத்துக்குள் ஒளிபோல நிற்குதப்பா , அகாரபீடம், தேனான மணிபூரகத் துக்குள்ளே செய்தான் பீடமெனச் சிறந்தவாரே" -போகம் ஞானம்- "அறைகுவேன் அகரமது சிவமதாச்சு  ஆச்சரியம் உகரமது  சத்தியாச்சு" -சுந்தரானந்தர் சிவயோக ஞானம்- "அகாரம் நயமாச்சு உகாரம் உச்சி சிரசாச்சே--இதை உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே" -கொங்கண சித்தர் - "குண்டலி வாசி அகாரமடி ;பிடர்க் பிடர்க்கண்டமதிலே உகாரமடி " -ஞானக்கும்மி - "இருள்வெளியாய்  நின்ற சிவ பாதம்  போற்றி எழுத்ததனின் விவரத்தை  விரித்துச்சொல்வேன்; அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்; ஆதியந்தம்  அண்ட பிண்டம் அதுவேயாகும் . திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம் ; சிவ சக்தி திருமாலின் ரூபாமாகும்; வருமுருவே சிவசக்தி வடிவமாகும்; வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே. -வான்மீகர் ஞானம் - "உண்ணும் போது உயிரெழுத்தை உயரவாங்கு உறங்குகின்ற போதெல்லாம் அதுவேயாகும்; தின்னும் காய் இலை மருந்தும் அதுவேயாகும்; தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் மண்ணூழி கால மட்டும் வாழ்வார் பாரு; மறலிகையில்  அகப்படவு மாட்டார் தாமே! -அகத்தியர் ஞானம் - "எட்டும் இரண்டும் அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் -ஏகாமல் நிற்கும் கதி எய்துங் குயிலே " -இடைக்காட்டுச் சித்தர் - "எட்டும் இரண்டும் இனிதறி  கின்றிலர்  எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்; எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்கப் பாதமே" -திருமந்திரம் - "எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கம தாமே" -திருமந்திரம் - "கணக்கறிந் தார்க்கன்றிக் காண வொண்ணாது; கணக்கறிந்தார்க்கன்றி கைகூட காட்சி; கணக்கறிந்து உண்மையைக் கண்டண்ட நிற்கும் கணக்கறிந்தோர் கல்வி கற்றறிந் தாரே; --திருமந்திரம்--- எண்ணனாய்  எழுத்தனாய்! எழுத்தினுக்கோர் இயல்பனாய்! -அப்பர் தேவாரம் - 'கடிகைக்கு கடிகை நூறு நூறு தடவைகள் குருவை  நினைத்து நினைந்து  அழுகிறேன் , கொஞ்சம் கூட நேரம் தாழ்த்தாமல் மனிதனிலிருந்து என்னை தேவனாக்கினாரே' -கபீர்தாசர் ஓரெழுத்தில்  ஐந்து உண்டென்பார்  வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே -திருவருட்பா - அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30 ஓமென்ற பிரணவமே ஆதி வஸ்து   உலக மெல்லாந் தானிறைந்த யோமசத்தி   தாமென்ற சத்தியடா எவரும் தானாய்ச்   சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று   ஆமென்று ஆடினதும் ஓங்காரம் தான்   அடி முடியாய் நின்றதும் ஓங்காரம் தான்   நாமென்ற ஓங்காரம் தன்னிலே தான்   நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே பாதம் கொழுமுனையாம் கதிர்முனையி லாடும் பாதம் கோடான கோடி மறைபுகழும் பாதம் தளிரிலை பூங்காய் பழமாய்ச் சொரிந்த பாதம் சகல உயிர் ஜீவனிலு மாடும் பாதம் -சாலை ஆண்டவர்கள் - 'தோணுமிகு பாதத்தொன்று தூக்கிமறு பாதம் தேவ னடனம் தெரியும் தேசி பஞ்சாட்சரமே' -மெய்வழி சாலை ஆண்டவர்கள் - ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் "நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலு நெய் கலந்தவாறு பாவிகாளறி கிலீர்  ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலனென்று சொல்லுவீர் கனவிலும் மதி ல்லையே" -சிவவாக்கியர்-- "போட்டது ஒரு விந்து வட்டக் கோட்டைக்குள்ளே பூரண ஏகாட்ஷரத்தைப் பார்க்கும்போது நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன் நன்மையுள்ள எட்டும் இரண்டும் அங்கே கண்டேன் ஆட்டமென்ற முக்கோண மேறு கண்டேன் அதில் நிறைந்த சிதம்பரச் சக்கரமுங் கண்டேன் தோட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன் சேர்ந்து மிக வொன்றான செயல் கண்டேனே" "சண்முகம் ஆறு சடாட்சரம் போடு உண்மையாய் அதனுள் உமை திரிகோணம் நன்மையாய் அதினுல் நாட்டிடு விந்து கண்மைய்யம் அதினுள் கணபதி சுழியே" -திருமூலர்- உ சிவமயம் திருச்சிற்றம்பலம் குருபாதம் "அறியோம் நற்றாள்கள் குரு வாழ்க குருவே துணை" வாலறிவன் நற்றாளாக  விளங்குகின்ற அதை அறிவிக்கின்ற குரு வாழ்க, குருவே துணை. ந ம சி வ ய நவ்வெழுத்தே  பிரமனாராகும்- அதில் நாரணன் மவ்வெழுத்தானானே சிவ்வெழுத்தே தெய்வருத்திரனாம்- இன்னும் செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே! செப்பவே வவ்வு மகேசுவரனாம்- வட்டம் சேர்ந்து யகாரம் சதாசிவனாம் தப்பில்லா ஐந்தெழுத்தாலே சராசரம் தங்கியிருந்தது, ஞானப்பெண்ணே! -ஞானக்கும்மி- ந-      பிரமன்-             படைத்தல் ம-      திருமால்-          காத்தல் சி-      உருத்திரன்-      அழித்தல் வ-      மகேஸ்வரன்-     மறைத்தல் ய-      சதாசிவம்-           அருளல் "வாசியென்றால் மூச்சதுவென்று- தாறுமாறாய் மோசமது போகாதேமுக் காலூமே சொன்னேன் பேசரிய பாதமதுகாண்- ஊசிமுனை வாசிவச மாகுமது தேசு நிறமே" -சாலை ஆண்டவர்கள் - வள்ளல் அறியாத மெய்ப்பொருளாகிய செல்வத்துக் கெல்லாம் தலைச் செல்வமாகிய செவிச் செல்வத்தை வழங்குபவர்கள் யாராக இருப்பார்கள், அவர்களே நிஜமான வள்ளல், அறியாமை இருளை அகற்றி மெய்ஞான ஒளியை உள்ளத்தில் பாய்ச்சும் பெருமானாரே வள்ளல். பாரடா வாணியுந்தா னிருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்; ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே அண்டத்தைப் பற்றியடா விழுது போலே நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி தன்னில் வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே

வாய் உணவு - செவி உணவு

வாய் உணவு - செவி உணவு "வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்." "மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான். வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்." "மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது." ---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

யார் இந்த நந்தி??

===== யார் இந்த நந்தி?? ==== 1) பேசும் எழுத்தொடு பேசா எழுத்துறில் ஆசான் பரா நந்தியாம்.. 2) எட்டிரண்டு ஒன்றுவது வாலையென்பார் இதுதானே பரிதிமதிசுழுனையென்பார்... 3) அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப்பதத்துள் எனும் திருமந்திர பாடல்... 4) நந்திகொலு கண்டவனே ஞானியாவான் நடுவணையை கண்டவனே கற்பதேகி 5) விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி இருந்தான் கொலுவாகி சிந்தை தெளிந்து மகாரம் வைத்தால் அந்த சீமானை காணலாம் ஞானபெண்ணே... 6) எட்டொடே ரெண்டையும் சேர்த்து எண்ணவும் அறியேன் எனும் வள்ளல் பாடல். இவற்றை காண இவை அனைத்தும் ஒரு பொரு்ளை தான் குறிக்கின்றன என தெரிகிறது. நந்திகண்டால் வாதம் காணும் எனும் மற்றோர் பாடலும் நமக்கு நந்தியை தான் முதலில் அறியவேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றன. யார் இந்த நந்தி??

நாக்கு =மூக்கு =சுவாசம்

Hseija Ed Rian நாம் பிறக்கும் போது பேச்சும் மூச்சும் உடனே வருவதில்லை..நமது நாக்கானது உள்மடிந்து அண்ணாக்கினுள் இருக்கும்...அதை வெலியே இழுத்துவிட்டபின் தான் மூச்சு பின் பேச்சு வரும்...அது ஒரு ரகசியம்...அரிந்தவர் ஒருசிலரே...நாபியில் இருந்துகோண்டு சுவாசித்த நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் கலையை பெற்றோம்...ஆக நம் எண்ணங்கள் எப்போதும் மனதில் பேச்சுவடிவில் அலையாடி நாவில் எப்போதும் சலித்துகொண்டிருக்கும்...மவுனமாக இருந்தாலும் நாவில் பலவித பேச்சுக்கள் சலித்துகொண்டிருக்கும்...எப்போது நாவு சலனத்தை நிறுத்துகிறதோ அது மவுனம்...எண்ணத்தில் கூட அதிர்வு இருக்காது...அப்போது மூச்சும் அடங்கும்...எல்லாம் நாக்கின் கைவண்ணம்...நாக்கை பாதுகாக்கிறவன் தன் ஆன்மாவை பாதுகாக்கிறான்...அசைந்தாடி கொண்டிருக்கும் எதுவோ அதை இருதயம் என அரிவோமாக.....கடவுள் அருள் விளங்கட்டும்