Tuesday, December 6, 2022

உங்கள் ஜீவன்

உங்கள் ஜீவன் தேடுகின்ற பொருளை உங்களால் கொடுக்க முடியவில்லைஇதனால்  உங்கள்  ஜீவன்  திருப்தியடையவில்லை ஆனால் நாம் உடல்.வாய்,,கண், மூக்கு,செவி,இவைகளுக்கு தேவையானதை கொடுத்து திருப்தி அடையும் செய்கின்றோம் இவைகளில் திருப்தி  அடையாத ஜீவன் பரமாத்மாவை தேடுகின்றது. இதை தரிசனம் செய்யவே இவன் பிறந்தான்,ஆனால் இவன் ஜீவன் வெளியே ஓடிக்கொண்டு இருக்கிறது

அஹ நாதம்

அஹ நாதம் -------------------- அஹநாதமென்பது நமது அகத்தில் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியாகும்! இந்த நாதத்தை யாரும் இலகுவாக தெரிந்திருப்பதில்லை. நமக்குள் வீற்றிருக்கும் ஆன்மாவின் தெய்வீக நாதமாகிய அஹநாதத்தை உணர்ந்து அதில் லயித்து நம் கர்ம வினைகளை அறுத்து அதன்மூலம் இறப்பிறப்பற்ற பெருநிலையை பெற வைப்பதே அஹநாத யோகமாகும்! நாதம் எனப்படுகின்ற சப்தமாகிய ஒலியானது இந்த பிரபஞ்சத்தில் முதல்முதலாக தோன்றியதாகும். இந்த தெய்வீக சப்தத்தினால் தான் அண்டசராசரங்களும் அனைத்துப் படைப்புகளும் உருவானது. பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலமும் முதலுமாக இந்த நாதமே விளங்கிற்று. சகலவற்றின் ஆதார சக்தியும் அதுவேயாகும். இதனால்தான் புனித பைபிளில்:- "தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது, வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்,அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. " (யோவாள் : 1 -  1,2,3.) அதாவது, ஆதியில் சப்தம் ஒன்றே வியாபித்திருந்தது. இந்த சப்தம் இறைவனுக்குள் ஐக்கியமாகி இருந்தது. இந்த சப்தமும் இறைவனும் ஒன்றே எனக் கூறலாம். இந்த சப்தத்தின் ரூபமாகிய இறைவன் எல்லாவற்றையும் தோற்றுவித்தான். இதுவே புனித திருக்குரானிலும் ஆண்டவர் கல்மா அல்லது குன் என்று சொல்லப்படும் சப்தத்தினாலே இந்த உலகத்தைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. இதைனையே குருநானக் சப்தம் அல்லது தூர் - கீ - பானி (மூலநாதம்) ஸீல்தான் - உல் - அஜ்கர் (ஜெபங்களின் சக்கரவர்த்தி) என குறிப்பிடுகிறார். ரிக வேதத்தில் "யாவத் பிரம்ம சிரேஸ்பம் தாவதீ வாக" அதாவது பிரம்மம் எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு' வாக்கு 'உயர்ந்தது. வாக்கு என்பது சப்தம். வேதங்கள் யாவிலும் இறைவன் ஆகாச வாணியின் (ஓங்காரம்) மூலமாக சகலத்தையும் படைத்தார் என்று கூறுகிறது. இதையே மகான்கள் எல்லோரும் சப்தம், நாதம், வாக்கு, வாணி என்று கூறுகிறார்கள். இதனை சட்டைமுனி என்ற சித்தர் அழகாக கூறுகிறார். "நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மௌனத்தில் ஐந்து நாதம் வேதமப்பா கடந்திடந்தே சுத்த நாதம் வெட்ட வெளிக்குள்ளே யொருநாதமுண்டு பாதமப்பா கடந்திடந்தேயந்த நாதம் புகழாகச் சேவித்து நிற்குமென்றும் காதமப்பா தூரமில்லை அந்தோ அந்தோ கண்ணுக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே " இதனை திருமூலரும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். " ஓங்காரமே உலகேழும் படைப்பதும் ஓங்காரமே உலகேழும் துடைப்பதும் ஓங்காரமே உலகோடுயிர்தானே ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் பறக்கப் பரிந்துயிராய் நிற்கும் ஓசையதன் முணம்போல விடுவதோர்  ஓசையாம் ஈசனை உணர வல்லவர்க்கே மணிகடல் யானை வார்குழல் மேகம் அணி, வண்டு, தம்பி வளை பேரிவையாம் தணிந்தெளு நாதம் தாமிவை பத்தும் பணிந்த வர்க்கல்லாது பார்க்க வொண்ணாதே " என்று நாதமே எல்லா தோற்றத்திற்கும் காரணம் என்றும், இறைவனே நாதவடிவானவன் என்றும் குறிப்பிடுகின்றார். இது" துனாத் மகா நாதம் " என அழைக்கப் படும். ஏனெனில் இது வாயினால் கூறாமல் ஆத்மாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் புனித சப்தம்! யோக சந்தியா என்னும் நூலில் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. சாந்மதக்கிய உபநிஷத்திலும் மூன்றாவது அத்தியாயத்தில் சூரியனிலிருந்து இந்த நாதம் தோன்றியதாக கூறப்படுகிறது. வாகம் பரணி என்று ரிக் வேதத்திலும் அதர்வண வேதம் 30 வது சுலோகத்திலும் நாதத்தின் மகிமை கூறப்படுகிறது. அஹடயோக பிரதீபிகாவிலும் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் சமணர்களின் புனித நூலில் இதனை திவ்யத்வனி (அண்டங்களின் ஓசை) என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்கர்கள்" லோகஸ்" என்றும், சீனர்களின் புனித நூலில் "தாவோ" என்றும், சௌராஷ்டிரர்கள் "சரோஸ்" என்றும் அகநாதத்தை விவரிக்கிறார்கள்! ஆன்ம நாதமாகிய இந்த அஹ நாதத்தினுடன் ஆன்மா தொடர்பு கொள்ளும் போது தான் அது கர்மத்திலிருந்து விடுதலை அடைய முடியும்! ஆகவே எங்கும் நிறைந்த எல்லாவற்றுக்கும் மூலமான சப்தத்தை தன் ஆன்மாவின் உள்ளே அறிந்து அதில் லயித்து உணர்ந்து ஆனந்திப்பதனால் நம் பூர்வ ஜென்ம கர்மாக்கள் அழிக்கப்பட்டு ஆன்மாவானது புனிதமடைந்து மீண்டும் சத்கர்மங்களை செய்து (புனித செயல்களை) மேல்நிலை அடைகிறது! அதுமட்டுமல்லாமல் தான் விரும்புகின்ற இகபர சுகங்களையும் பெற்று ஆனந்தம் பெறுகின்றது! அஹநாதமானது ஸ்மரணை (ஜபம்) செய்யும் ஒவ்வொருவரது வாழ்விலும் அவரவர் விருப்பத்தை நிறைவேற்றும் கல்ப விருட்சமாக அமைந்து விடுகின்றது. சாதகனின் அறிவை நுண்மைப்படுத்தி அவனது தீய கர்மங்களை அழித்து நல்ல கர்மாக்களை புரியவைக்கிறது. அவனது தேவைகளை இயற்கையின் இணக்கத்தோடு பெறுவதற்கு வழிவகுக்கிறது. சாதகனின் சராசரி வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலும் அறிவு மயமாகவே இருந்து வழிகாட்டி வாழ்வில் எல்லா செல்வங்களும் தங்குதடையின்றி கிடைக்கவும், ஆனந்தமும் அமைதியும் ஏற்பட வழிகாட்டுகிறது! எல்லையற்ற நித்தியானந்தமாகிய அஹநாதத்தை குருமூலம் கிடைக்கும் பீஜாட்சர மந்திர தீட்சை மூலமாக பெறும்போது சத்குரு பெற்றிருக்கும் புனித ஆற்றலை சிஷ்யனுக்கும் தரும் ஒரு இணைப்பாக இது அமைகின்றது! அதாவது பிரபஞ்ச சக்தியிலிருந்து சத்குருவும் அவரிடமிருந்து சிஷ்யனும் நாதத்தின் மஹா சக்தியினால் இணைக்கப்படுகின்றனர்! புனிதமான அஹநாதத்தை ஸ்மரணை (ஜெபித்தல்) செய்யும் போது சூட்சும உடலில் உள்ள ஆறுஆதாரசக்கரங்களும் புனிதம் பெற்று இயங்கத் தொடங்குகின்றன! அஹநாத ஒலியானது தன் ஆற்றல்மிகு அபூர்வ அதிர்வலைகளால் சகஸ்ராரத்தினையும் கடந்து பிரபஞ்ச பேரியக்க சக்தியோடு இணைப்பு பெறுகிறது! இதனால் ஒரு சாதகன் எல்லையற்ற பரம்பொருளுடன் இணைப்பு பெறுவதால் அப்பிரம்மத்தை தன்னில் உணர்கிறான்! பரப்பிரம்மாவாகிய ஆதிநிலைக்கு தன்னை சமமாக்கிக் கொள்ளும் சமாதி நிலைக்கு இறுதியில் கைவல்யம் பெறுகிறான்! அஹநாதத்தை ஸ்மரணை செய்யும் சாதகன் எல்லாவற்றுக்கும் மேலான தெய்வீக நிலையை இறுதியில் அடைகிறான்!! இந்த மேலான அஹநாதத்திலே தான் நம் சித்தர்கள், யோகிகள், மஹரிஷிகள் யாவரும் லயித்திருந்தனர்! அவர்களால் அறிந்து உணர்ந்த புனித வழியே இதுவாகும்! நம் முன்னோர்களான சித்தர்களும், யோகிகளும் மெய்ஞானக்கடலுள் ஆழ்ந்தெடுத்த ஆணிப்பொன் முத்தான இந்த அஹநாத யோகமானது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்! தன்னை தன்னுள்ளே அறிந்து அங்கு எல்லையற்று ஒலித்துக் கொண்டிருக்கும் அஹநாதத்திலே மூழ்கி பேராற்றலும் பேரானந்தமும் பெற்ற யோகிகள் சித்தர்கள் எல்லோரும் அவர்கள் நினைத்ததை செயல்படுத்தினர்! இந்த உலகிற்கும் இங்கு வாழ்கின்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் அளப்பரிய சேவை செய்தனர். இந்த மெய்ஞானக் கடலில் நீங்களும் சங்கமித்து எல்லா செல்வங்களும் பெற்று பிறப்பிறப்பற்ற பரிபூரண பரப்பிரம்மசாவதத்தில் இரண்டறக் கலந்து இறைநிலை அடைவீர்களாக!

முமூட்சு

முமூட்சு "இன்னமொன்று சொல்லுகிறேன் முமூட்சுவாக பின்னமென்று வைத்திருக்க கருத்திலாகா கன்னமென்று கருத்தில் வைத்து கருவாய் கேளு கலந்துவிடும் சீவனது சிவத்துடனே................................ ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................தீர்க்கமுள்ள திடதீர்க்க சீடனே நீதான் திடசித்தனென்று பேர் கொள்ளத்தக்காய் ஆர்க்குமிது கிட்டாது உனக்குமட்டும் தினந்தோறும் மனம் வைத்து காத்து கொண்டாய் பார்க்கையிலும் பார்வையுடன் பதித்துகொண்டாய் பரதேசி கருணையுடன் பறைந்துவிட்டேன் Hseija Ed Rian யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே.22

புள்ளி

புள்ளி  எத்தனைக்கும்பெரியதவம் இறைனாமம் பிஸ்மில்- இதற்குள்ளே அடங்கும் பொருள் எடுத்துரைப்பதரிதே- அந்த பிஸ்மில் முதலான விதமேதால்- அணுப்போல கொண்டபுள்ளி அலிபாக நீண்டே- அந்த புள்ளி அலிபு மறைந்ததொரு பேயாம் - அந்தரத்திலானதினால் அதுநினைவு சிர்றாம்- இந்த சிர்றே மீமாம் இது நாலும் இஸ்மாம்- இது நாலும் அவனாம் இதுவிதம் வேறில்லை -அந்தரத்திலான சிர்றால் அமைந்த மீமுக்குள்ளே -அமைந்தவெளி நூறான பேருமஹ்மூதாம்- இந்த பிஸ்மிலுக்குள் உயிரெழுத்து மூன்று- எல்லா மறைகளுக்கும் மெத்த முள்ளதாமே -அந்தெழுத்தை இன்னதென்று அதனுடைய வளமும் -ஆரும் சொல்லார் சொன்னாலும் ஆரும் அறியாரே -அந்தெழுத்து மூன்றிலொன்று அது தானே தாத்து -அஹதயத்தும் அதுதானே அதிலுமதைபோல -வந்ததுதான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து -அதிலுமதைப்போல அமைந்தது வாஹிதியத்தாமே- வாஹிதியாவதென்ன அனைத்தும் முடிந்ததுவாம்- வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர் மணியாம்- இந்தவகை அறியார்கள் முந்தவகையறியார் -அந்தவகையறியார்கள் அந்தரத்திலாவார் -இந்தவகை அறிந்தவர்கள் எந்தனுக்கும் குருவாம் -இவையறிந்த பேர்களெல்லாம் யாவும் அறிந்தவராம்=(பிஸுமில் குறம்

வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

🌺🌺 வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி... 🌺🌺 இறந்தவர் உடல் மண்ணிற்கு தானே செல்கிறது. ஆனால் இறந்தவர் சொர்க்கத்திற்கு போனார் என ஆகாயத்தை காட்டுகிறோமே... 🤔🤔 அப்போ உடல் மண்ணிற்கு போகிறது என்றால் எது விண்ணிற்கு போகிறது..??? மண்ணோடு மண்ணாக போவது ஒன்றும், விண்ணோடு விண்ணாக போவது ஒன்றும் இருக்கனும் தானே.. "நீங்கள் மண்ணில் இருந்து பிறந்தவர்கள். என்னை பிதா அனுப்பியிருக்கிறார். நான் விண்ணில் இருந்து வந்தேன்" என பைபிளில் சொல்லப் பட்டிருப்பதை காணலாம். ஆக, விண்ணில் இருந்து வந்தது ஒன்றும், மண்ணில் இருந்து வந்தது ஒன்றும் இருக்கு என தெளிவாகிறது. ஒன்று பெண் தன்மையாகவும், மற்றொன்று ஆண் தன்மையாகவும் இருக்கிறது. எல்லா ஜீவன்களுக்கும் பூமி தான் தாயாக விளங்குகிறது. தாயின் மடியிலே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, மடிந்தும் போகிறோம். அப்போ ஆண் தன்மையாக விளங்குவது விண்ணில் இருந்து தானே வந்திருக்க வேண்டும். "நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னை அறிந்தவன் என் பிதாவையும் அறிவான்" என பைபிள் சொல்கிறது. விண்ணில் இருந்து பூமிக்கு வருவது ஒரு சுழற்சியும், பூமியில் இருந்து விண்ணிற்கு போவதும் ஒரு சுழற்சியும் இருக்கிறது. இரு தன்மைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தாவோயியம் யின் - யாங் கோட்பாடும் இதுவே. இந்த தூல உடலான மண்ணை பிடித்துக் கொண்டு இருந்தால் மண்ணாக தான் போவோம். விண்ணிற்கு போக வேண்டும் எனில் தாயின் மடியில் தவழ்வதை விடுத்து, தந்தையை அறிந்து அதன் வழி பற்ற வேண்டும். தாய் நமக்கு தந்தையை காட்டித் தருவாளா??  நன்றி ஜனனி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உயிர்

உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும் உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும் அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயிர் நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரனத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது

சிவலிங்கம்

சிவலிங்கம் ----------------------------------------- மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று. குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில் கப்பியுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, அவன் உள்ளத்தில் அறிவெனும் சோதியை ஏற்றி வைக்கிறார். சிவானந்த போதம் என்னும் இந்நூல், வினா விடை வடிவில் இடையிடையே உரையாடல் உரைநடையில்- வசனத்தில் இருந்தாலும் இந்த நூலில் 83 பாடல்கள் உள்ளன. எளிமையான முறையில் தான் பாடல்கள் உள்ளன. இந்நூலில் இருந்து ஒரு பாடல். "அன்புடனே உடல் பொருள் ஆவி மூன்றும் அறுதியாய் அளித்து விட்டு நீதானையா தென்புடனே அடிமையெனச் சத்தியஞ்செய் சிதறாமல் நில்லப்பா தீக்ஷை வைப்போம் பின்புந்தன் செவிதானே யோனியாகப் பேசுமென்ற நாவுதான் லிங்கமாச்சு இன்பமுடன் அனுபோகத்திருக்க வென்றே இருசெவியில் உபதேசம் ஏற்றுவோமே." சிவானந்த போதத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான ரத்தினங்கள். குருவானவர் சீடனுக்கு தீட்சை அளிக்கும் முன்பு, குருதட்சிணையாக சீடன் சமர்ப்பணம் செய்ய வேண்டிய காணிக்கை எதுவென குறிக்கிறது. உடல் பொருள் ஆவி மூன்றையும் சற்குருபிரான் அவர்களுக்கு தத்தம் செய்து கொடுத்து அன்புடனே அடிமைபோல் காத்திருக்க வேண்டும். அதன்பின்னரே ஆசான் உளம் கனிந்து தீட்சை அளிப்பார்கள். அதற்கடுத்து மெய்ஞானத்தில் பரிபாஷை சொல்லாக இருக்கும் " சிவலிங்கம்" குறித்து விளக்கம் தரப்பெறுகிறது. சிவலிங்கம் குறித்து தத்துவ அறிஞர்கள் ஆண் பெண் இவர்களின் குறி - யோனி என விளக்கம் தந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர். ஆனால் சிவானந்த போதம் நூலில், சிவலிங்கம் என்பது, மெய்ஞானத்தை அருளுகின்ற ஆசானின் நாவு தான் லிங்கம். அந்த அருளமுதத்தை துய்க்கும்- இன்பத் தேன் வந்து பாயும் சீடனின் காதே- செவியே யோனியாகும் என மெய்ப்பொருள் விளக்கம் தருகிறது. இது குறித்து மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழியில் " மாணவனின் ஆவிடை யோனியில் ஆசானின் நாத ரூப லிங்கம் போகிக்க போகிக்க ரிஷி பிண்டம் உருவாகிறது. இப்பிண்டம் இரவு தங்காது. உடனே பிறந்து விடும். இதைத்தான் ரிஷிபிண்டம் ராத்தங்காது என்பர். குருதேவரின் புணர்ச்சியினால் சமாதி நிலை எய்தினவனது மூச்சு வெளியே ஓடாது." இந்த போகம் சிவபோகம். இந்த அனுபவம் சிவானுபவம். இந்த இன்பம் சிவானந்தம். இது குறித்து விவரித்து கொண்டே போகலாம். இந்த மெய்விளக்கம் உறுதிபட, மேலும் இன்னொரு சித்தர் பாடல்வழி கண்டு தெளியலாம். சுப்பிரமணியர் ஞான சைதன்யம்-108 எனும் நூலின் பாடல் எண் 74. "நின்றதோர் குருவப்பா நன்றாய்க் கேளு நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக அன்றதோர் குருவினது நாவே லிங்கம் அதிகமுள்ள சீஷனது காதே யோனி சென்றதோர் குருவினது உபதேசம் விந்து சிறப்புடனே கேட்கிறதோர் சிஷ்யன் நாதம் என்றதோர் அறிவுமனம் அறிந்தால் இன்பம் ஏகமெல்லாம் ஞான கெற்பம் பிறந்த வாறே." இப்படி சிவானந்த போதம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான முத்துக்கள். எம்பெருமானார் ஞான சூரியன் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் ஆண்டகை அவர்கள், தங்கள் மெய்ஞான சபையில் சிவானந்த போத பாடல்களுக்கெல்லாம் விளக்கம் தந்து அருளிய தைக் கேட்டதெல்லாம் வாழ்வின் வசந்த காலம் தான்.

குண்டலினீயின் ரகசியம்

குண்டலினீயின் ரகசியம் - Ajiesh குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும். ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள். சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்

வள்ளலார்

வள்ளலர் பிரான் தாம் விளம்பியிருக்கின்ற திரு அருட்பா உரைநடை மூலமாக எண்ணிறந்த ஞான ரகசியங்களை விட்டு சென்றிருக்கிறார். அதின்கண் பார்க்கையில் சன்மார்க்க கொடியின் ரகசியமே மேலோங்கி நிற்கின்றது. அதை விளக்குமிடத்து "நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது, அந்த நாடியின் மேற்புறம் புருவமத்திக்கு உட்புறம் ஒரு சவ்வு தொங்குகின்றது. அதில் ஏறவும் இறங்கவும் செய்ய நாடிகள் இருக்கிறது" என்கிறார். இவையெல்லாம் சுட்டிகாட்டுவது அந்த பராசக்தி நிலையமகின்ற பர நிலை குறிப்பே ஆம் அல்லவா?. உடலுக்கு என கீழ் மூலம், உயிருக்கு என நடு மூலம், பூரணத்துக்கு என மேல் மூலம். இம்மூன்றையும் அறிண்ட்நிருக்கின்ற யோகியவனே மும்மூ்ல யோகி. “அடியாகி முடியாகி மூலந்தன்னில் முப்பொருளும் தானாகி நடுவுமாகி அடியாகும் மூலமதே அகாரமாகி அவனவளாய் நின்ற நிலை அணுவதாமே”                                 ~திருமூலர் ஞானம்.

Monday, December 5, 2022

பிரசாதம்

 கோயில்களில போனா கும்பிட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் பிரசாதம்ணு சொல்லி எதாச்சும் குடுப்பாங்கள்ல அது எதுக்கு? 

இந்த கேள்விய ஆண்டவர் கிட்ட கேட்டிருந்த அவரு உடனே சொல்லப்போறார் , எப்படீண்ணா,பிர+சாதம்ணு ஒரு ப்ளஸ் போட்டு விளக்கம் சொல்ல ஆரம்பிப்பார்.பிரசவம் என்பதுக்கும் இப்படி பிர+சவம் எனப்போட்டு விளக்கம் சொல்லியிருப்பார்,அதாவது பிறக்கும் போதே சவம் என.அது போல பிரசாதத்துக்கு பிறக்கும் போதே சாதம் ஆனவன்ணு விளக்கம் சொல்லுவார்.

உண்மையில் பிரஸவ் என்பது ஒரு வடமொழி வார்த்தை , பிரஸாத் என்ற வார்த்தை போல.பிரஸவ் என்றல் வெளிப்படுதல் எனப்பொருள்.அதுபோல பிரஸாத் என்றால் உள்ளத்திருப்தியின் வெளிப்பாடு என பொருள்.

கோயிலில் உறையும் இறைவன் நம்முடைய பிரார்தனைகளையும் வேண்டுதல்களையும் ஏற்றுக்கொண்டு  மகிழ்சி கொண்டுள்ளான் என வெளிப்படுத்துதல். பிரசாதம் வழங்காமல் பெறாமல் ஆலய தரிசனம் நிறைவு பெறாது.

இது போன்ற ஒன்று தான் குருப்பிரஸாதம் என்பதுவும்.இறை பிரஸாதத்தினால் குரு கிடைப்பார், குருப்பிரஸாதத்தினால் இறைவனும் கிடைக்கப்பெறுகின்றனர்.