Sunday, December 4, 2022
மூர்த்தி தீர்த்தம் தலம்
மூர்த்தி தீர்த்தம் தலம்
கோடானுகோடி கற்ப காலங்கள் தவம் செய்யினும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கோ மும்மூர்த்திகளுக்கோ கிடைக்காத ஒரு அரும் பொக்கிஷம் ஒன்று உன்னிடம் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறாய். அது உன் உயிர் என நினையாதே, உயிரினும் மேலானது. ஏன் உன் உயிரினுக்கும் ஆதாரமானது கூட,; ஆயினும் அதை நீ மதியாதிருக்கிறாய். அதை நீ கவனியாதிருக்கிறாய்.சலனமறிருந்தும் சலியாமல் அசைவற்ற சிவம். அதுவே மெய் என்றறிவாயாக. அதை பெற்றிருக்கும் நீ நிச்சயம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மும்மூர்ர்த்திகளுக்கும் மேலானவனே ஆம் என்பது நிச்சயமான நிச்சயம். இதுவே மெய்.உடலுக்கே மெய் என பெயர். பொய்யானது எனில் இதை மெய் என்பானோ? மெய்யே தான் மெய்.
_______________________
Navaneethakrishnan Kuppusamy பின்வரும் கருத்துக்கள் கர்மவினைகளின் பலாபலன்களின் தொகுப்பே இவ்வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. 'நல்லாற்றுப் படூஉம் புனை போல் ஆருயிர்', ' அதிகமாம் புண்ணியர்க் கிந்த யோகம்', 'ஜென்மாந்த்ர க்ருதம் பாபம் வ்யாதி ரூபேணாம்' என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க கர்மாக்கள் (பாவ புண்ணியக் கூறுகள்) உண்டென்றும் அவையே நமது அன்றாட வாழ்வின் போக்கினை மேன்மையை நிர்ணயிக்கின்றது என்பது எம் நம்பிக்கை. வரும் வினைகளின் பலன்களை, இன்பமோ துன்பமோ அதை துய்ப்பது இந்த உடலாகிய மனம், மனம் மட்டுமே. இன்னும் இந்த சங்கிலித் தொடரினின்று விடுபட்டு உய்வதற்கும் ஆகிய புண்ணியமும் இவ்வுடலாகிய மனம் இன்றி அசாத்தியமே. ஏதோ ஒரு புள்ளியில் இக்கணக்கு நேர் செய்யப் பட்டு சுதந்திரம் வயப் படுகிறது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.
- குருவின் துணையுடன்
Hseija Ed Rian நாம் சாதாரணமாக வழக்கில் “அவனுக்கு அளந்த அரிசி முடிந்துவிட்டது” என சொல்லகாண்கிறோம்.கர்மவினைத்தொகுப்பு அதன் பகுப்பு அதன் நிர்ணய வினைபோக அனுபோக பயன் நிலை யாது யாது எனவும் அதன் தொடர்பு உண்ணும் அரிசியும் எவ்வாறு தொடர்பு நிலை கருத்துள்ளோர் இயம்ப கேட்க்க ஆவல்
மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே?
மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே?
மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே?
புத்தனுக்கு ஞானம் எங்கே?
Hseija Ed Rian மூக்குமுனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு அறிவழிந்தேன் பூரணமே
Hseija Ed Rian மூக்கில் இருக்கிற வளைவு இல்லையென்றால் உனக்கு ஞானம் இல்லை என்பது உனக்கு தெரியுமா என்றால் தெரியாது.(சாலை ஆண்டவர்
சொப்பனத்தில் வந்தகுரு சொப்பனத்தில் வந்தகுரு சொன்ன உபதேசம் சேவலில்லா பெட்டை முட்டையிட்டதொக்கும் ~(பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்)
சொப்பனத்தில் வந்தகுரு
சொப்பனத்தில் வந்தகுரு சொன்ன உபதேசம் சேவலில்லா பெட்டை முட்டையிட்டதொக்கும்
~(பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்)
குரு சாட்சத் பரபிரம்மம்
குரு சாட்சத் பரபிரம்மம்
There shall nothing remains unless the eternal syllable "GURU" , which alone has its own radiance of wisdom. If you dont know Guru, then you dont know brahmam..or brahma vidya.
Hseija Ed Rian ”குரு சாட்சாத் பரபிரம்மம் தஸ்மை ஸ்ரீகுரவே நம:” என்பதும் சாலை ஆண்டவர் மறையாக எடுத்துகூறும் வாக்கியமான “மகாமகா மகோன்னத அகக்குடி அருந்தலமான அங்கே சிதரத்துல் முந்தகா எனும் இதையாசன உணர்வு லோகத்திலே சமமெனும் தலமாகிய ஏக கிரணோதய பரப்பினிடத்தே வந்து பரனாக துலங்கி விட்டபடியினாலே குருவே தான் பரன் என்னும் நாமம் இணைந்து பதிய பெற்றிராநின்ற உண்மையானது முழுதும் அன்று தெரியபெற்றவர்களாகினார்கள்.அன்றியும் குருதேவ-குருமஹபூபு-குரு மஹேஸ்பர-குருமஹம்மதே-குரு சாட்சாத்-குரு மகசூக்கென்னும்.........”என விளக்கியிருப்பதுவும்
Hseija Ed Rian வந்து துலங்குவது எதுவெனில் ‘ஏககோடி கிரணோதயம்” தான்....இந்த சொல்ல்லானது சூட்சும மறை பொருள் ஆக வைக்கபட்டிருக்கிறது.சிலர் இதை ‘கோடி சூரிய பிரகாசம்’ என்பர்
Hseija Ed Rian ஏன் லட்சம் சூரிய பிரகாசம் என்றோ, பது லட்சம் சூரிய பிரகாசம் என்றோ சொல்லாமல் கோடி சூரியபிரகாசம் என்கின்றனர் என்பது நுணுக்கம்
Hseija Ed Rian சாலை ஆண்டவர் இதையே சற்று விசித்திரமாக ‘ஏககோடி கிரணோதயம்’ என்கின்றார்
Hseija Ed Rian அட்சரநிலை தொகுப்பினில் ...அகரம்-அவ்வு-ஏகம் என விளக்குவார் ஆண்டவர் பெருந்தகையவர்கள்
Hseija Ed Rian பிரம்மம் என்பது குரு தான்....பிரம்மத்தை ஒருவன் தரிசிப்பது குருவின் ஊடாக தான்..ஏனெனில் பிரம்ம சொரூபியாக மலர்ந்திருப்பது குருவே. ஆகையினால் தான் என்னை கண்டவன் என் பிதைவையும் கண்டிருக்கிறான் நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்
கிறிஸ்த்து சொல்கிறார்
அ .... ஆ.... னா
அ .... ஆ.... னா
”ஆண்”தவர்களே..... விளக்கம் தாருங்கள் இந்த சிற்றறிவோனுக்கு... அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
Hseija Ed Rian ஏகமெனும் ஓரெழுத்தின் பயனையாய்ந்து எடுத்தியம்ப இவ்வுலகில் எவருமில்லை....(சித்தர் பாடல்
Hseija Ed Rian உண்ணும்போது உயிரெழுத்தை ‘உயரே’ வாங்கு..உறங்கும்போதும் அதுவேயாகும்(அகத்தியர் உயர்ஞானம்)
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
மஹாபிரளயம் ஆகும்போது அனைத்தும் அழிந்துவிட மும்மூர்திகள் மிஞ்சுவார்களாம், பிரளயம் மேலும் வலுக்கும் போது அவர்களும் அழிந்துவிடவே மஹாபிரளயம் மீண்டும் மேலும் வலுப்படுமாம், அப்போது மாமஹரிஷி மார்கண்டர் மட்டும் ஜலப்பிரளயத்தில் நீந்தி கொண்டிருப்பாராம் அப்போது ஒரு மாமரக்கிளை மிதந்து வருமாம்,மார்கண்டர் அந்த மாமரக்கிளை பிடித்து ஏறவே அந்த மாமரம் வளர்ந்து மேலே சென்றுகொண்டிருக்குமாம், அதன்மேலே ஏறிபோன மார்கண்டர் அங்கே கண்டது விசித்திரமாய் ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானவரும், அனந்தங்கோடி பிரளயங்களுக்கு சாட்சியானவரும் மகரமெனும் மவுனவித்தைக்கு ஆசானானவருமான பிரம்மரிஷி காகபுசுண்டர் அவர்கள் மாமர லிங்கத்தை பிடித்துகொண்டு “மகர தவம்” செய்து கொண்டிருந்தாராம்,. நாலுவேதங்களும் பூமியில் இறங்கிவந்து தோத்திரம் செய்த மாமரமானது காஞ்சியில் காமாட்சிஅன்னையின் தலவிருட்சமாய் கற்பாந்தகாலமாய் நிலைகொண்டுள்ளது. அப்படிப்பட்ட கற்ப விருட்சத்தை அறிந்து “மகர தவம்” செய்ய அன்புடன் அழைக்கின்றேன் அறிந்தே..
மங்கல குலவை- மஹா குண்டலினீ
மங்கல குலவை- மஹா குண்டலினீ
குலவு குண்டலத்தில் அறிதுயிலாள் அரவு வாலை பொன்கொடியாளை வணங்குமுன் மங்கல குலவையினால் எழுமுறை மொழிய மாசீற்றமுடன் துயிலுணர்வாள் அவளை மங்கல குலவை மெம்மேல் மூட்டிடில் ஆதாரம் அனைத்தும் மங்கலமாய் நோக்கி வாலை சோதி பரிபோரணமாய் துலங்கி மேவு சதாசிவம் அணையும் பதிந்தே.
-ஆதலில் குலவை மொழிவீர் களித்தே
மந்திர வாசம்
மந்திர வாசம்
மந்திரம் மனதை மயக்குமா சொப்பனசுந்தரியே...!!!
சுவாசம் என்றால் சு+வாசம்;சு-மந்திரம் வாசம்-மணம்;ஆக சுவாசம் என்றால் மந்திர மணம்.
இங்க இருக்கிறவங்களுக்கும் அங்க இருக்கிறவங்களுக்கும் சுவாசமும் இல்ல மூச்சும் இல்லை.இவனுக்கு ரெண்டும் தெரியாது.
~சாலை ஆண் குரு
மரணமும் மரணமில்லா பெருவாழ்வும்
மரணமும் மரணமில்லா பெருவாழ்வும்
வள்ளலார் மரணத்தை கூறுமிடத்து , மரணம் என்பது ஆதி செயற்கை
என்கிறார், அதாவது மரணம் என்பது அனாதி இயற்கை அல்லவென்பதே
வள்ளலார் கொள்கை, சன்மார்க்க மரபு. அப்படியெனில் நாம்
மரணமில்லாபெருவாழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள,
புரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள முதலில் நாம் சத் விசாரணை
செய்யவேண்டியது மரணம் என்பது எப்படி ஆதி செயற்கையானது
என்பதையே.
வள்ளுவர் கூற்றின் படி“நோய்நாடி நோய்முதல் நாடி அதுநாடி வாய்ப்பசெயல்”, அதாவது மரணம் உண்டாக காரணம் என்னஎன்பதை விசாரணை செய்தல், அதன் பலனே மரணமில்லாபெருவாழ்வின் நிலை குறித்து புரிதல் உண்டாம். சீவர்கள் அனாதியாக மரணித்தல் எனும் விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை
என்பது வள்ளலார் மொழிமூலம் புரிகிறது. அப்படியெனில் மரணமானது சீவர்களுக்கு ஆதி செயற்கையாக அமைந்தது எங்ஙனம்? சற்று விசாரணை செய்வது அவசியமாகின்றது அல்லவா? சிந்திப்போம், சத் விசாரணை செய்வோம்
அமரகேஸரி யோகம்
அமரகேஸரி யோகம் - 1
"அமரகேஸரி யோகம்"
"நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே".
நடுமூக்கு எங்கேண்ணு தான் தெரியல.
Hseija Ed Rian நுரையீரல்ல காற்றும் சுவாசம்வும் வேலை செய்யுது...ஆனா கண்டத்துக்கு கீழ ரெண்டு ஓட்டை போட்டிருந்தாலும் நுரையீரல் வேலை செய்யும்...அதை இழுத்து மூக்கு வரை கடவுள் செஞ்சு வெச்சிருக்கார்ண்ணா எதாவது இல்லாமலா இருக்கும்
Hseija Ed Rian கடவுள் இருக்குமிடம் கட்டைவிரல் அங்குலத்தே என்பது அகத்தியர் பாடல்ண்ணு தோணுது.மூக்கு தான் கட்டை விரல் அளவு கொண்டது
Hseija Ed Rian Mathi பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது
மூக்கு நுனி என்று அறியாரே
மார்க்கம் அறிந்து பெரியோரைக் கண்டு
வாழ்த்திக் கும்மியடியுங்கடி - வள்ளலார்this
Subscribe to:
Posts (Atom)