Sunday, December 4, 2022

அ .... ஆ.... னா

அ .... ஆ.... னா ”ஆண்”தவர்களே..... விளக்கம் தாருங்கள் இந்த சிற்றறிவோனுக்கு... அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு Hseija Ed Rian ஏகமெனும் ஓரெழுத்தின் பயனையாய்ந்து எடுத்தியம்ப இவ்வுலகில் எவருமில்லை....(சித்தர் பாடல் Hseija Ed Rian உண்ணும்போது உயிரெழுத்தை ‘உயரே’ வாங்கு..உறங்கும்போதும் அதுவேயாகும்(அகத்தியர் உயர்ஞானம்)

கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்

கற்ப விருட்சமும் காகபுசுண்டரும் மஹாபிரளயம் ஆகும்போது அனைத்தும் அழிந்துவிட மும்மூர்திகள் மிஞ்சுவார்களாம், பிரளயம் மேலும் வலுக்கும் போது அவர்களும் அழிந்துவிடவே மஹாபிரளயம் மீண்டும் மேலும் வலுப்படுமாம், அப்போது மாமஹரிஷி மார்கண்டர் மட்டும் ஜலப்பிரளயத்தில் நீந்தி கொண்டிருப்பாராம் அப்போது ஒரு மாமரக்கிளை மிதந்து வருமாம்,மார்கண்டர் அந்த மாமரக்கிளை பிடித்து ஏறவே அந்த மாமரம் வளர்ந்து மேலே சென்றுகொண்டிருக்குமாம், அதன்மேலே ஏறிபோன மார்கண்டர் அங்கே கண்டது விசித்திரமாய் ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானவரும், அனந்தங்கோடி பிரளயங்களுக்கு சாட்சியானவரும் மகரமெனும் மவுனவித்தைக்கு ஆசானானவருமான பிரம்மரிஷி காகபுசுண்டர் அவர்கள் மாமர லிங்கத்தை பிடித்துகொண்டு “மகர தவம்” செய்து கொண்டிருந்தாராம்,. நாலுவேதங்களும் பூமியில் இறங்கிவந்து தோத்திரம் செய்த மாமரமானது காஞ்சியில் காமாட்சிஅன்னையின் தலவிருட்சமாய் கற்பாந்தகாலமாய் நிலைகொண்டுள்ளது. அப்படிப்பட்ட கற்ப விருட்சத்தை அறிந்து “மகர தவம்” செய்ய அன்புடன் அழைக்கின்றேன் அறிந்தே..

மங்கல குலவை- மஹா குண்டலினீ

மங்கல குலவை- மஹா குண்டலினீ குலவு குண்டலத்தில் அறிதுயிலாள் அரவு வாலை பொன்கொடியாளை வணங்குமுன் மங்கல குலவையினால் எழுமுறை மொழிய மாசீற்றமுடன் துயிலுணர்வாள் அவளை மங்கல குலவை மெம்மேல் மூட்டிடில் ஆதாரம் அனைத்தும் மங்கலமாய் நோக்கி வாலை சோதி பரிபோரணமாய் துலங்கி மேவு சதாசிவம் அணையும் பதிந்தே. -ஆதலில் குலவை மொழிவீர் களித்தே

மந்திர வாசம்

மந்திர வாசம் மந்திரம் மனதை மயக்குமா சொப்பனசுந்தரியே...!!! சுவாசம் என்றால் சு+வாசம்;சு-மந்திரம் வாசம்-மணம்;ஆக சுவாசம் என்றால் மந்திர மணம். இங்க இருக்கிறவங்களுக்கும் அங்க இருக்கிறவங்களுக்கும் சுவாசமும் இல்ல மூச்சும் இல்லை.இவனுக்கு ரெண்டும் தெரியாது.                                     ~சாலை ஆண் குரு

மரணமும் மரணமில்லா பெருவாழ்வும்

மரணமும் மரணமில்லா பெருவாழ்வும் வள்ளலார் மரணத்தை கூறுமிடத்து , மரணம் என்பது ஆதி செயற்கை என்கிறார், அதாவது மரணம் என்பது அனாதி இயற்கை அல்லவென்பதே வள்ளலார் கொள்கை, சன்மார்க்க மரபு. அப்படியெனில் நாம் மரணமில்லாபெருவாழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள முதலில் நாம் சத் விசாரணை செய்யவேண்டியது மரணம் என்பது எப்படி ஆதி செயற்கையானது என்பதையே.  வள்ளுவர் கூற்றின் படி“நோய்நாடி நோய்முதல் நாடி அதுநாடி வாய்ப்பசெயல்”, அதாவது மரணம் உண்டாக காரணம் என்னஎன்பதை விசாரணை செய்தல், அதன் பலனே மரணமில்லாபெருவாழ்வின் நிலை குறித்து புரிதல் உண்டாம். சீவர்கள் அனாதியாக மரணித்தல் எனும் விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை என்பது வள்ளலார் மொழிமூலம் புரிகிறது. அப்படியெனில் மரணமானது சீவர்களுக்கு ஆதி செயற்கையாக அமைந்தது எங்ஙனம்? சற்று விசாரணை செய்வது அவசியமாகின்றது அல்லவா? சிந்திப்போம், சத் விசாரணை செய்வோம்

அமரகேஸரி யோகம்

அமரகேஸரி யோகம் - 1 "அமரகேஸரி யோகம்" "நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே". நடுமூக்கு எங்கேண்ணு தான் தெரியல. Hseija Ed Rian நுரையீரல்ல காற்றும் சுவாசம்வும் வேலை செய்யுது...ஆனா கண்டத்துக்கு கீழ ரெண்டு ஓட்டை போட்டிருந்தாலும் நுரையீரல் வேலை செய்யும்...அதை இழுத்து மூக்கு வரை கடவுள் செஞ்சு வெச்சிருக்கார்ண்ணா எதாவது இல்லாமலா இருக்கும் Hseija Ed Rian கடவுள் இருக்குமிடம் கட்டைவிரல் அங்குலத்தே என்பது அகத்தியர் பாடல்ண்ணு தோணுது.மூக்கு தான் கட்டை விரல் அளவு கொண்டது Hseija Ed Rian Mathi பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது  மூக்கு நுனி என்று அறியாரே  மார்க்கம் அறிந்து பெரியோரைக் கண்டு வாழ்த்திக் கும்மியடியுங்கடி - வள்ளலார்this

தயவும் தவமும்

தயவும் தவமும் இந்த சென்மத்துலே மோட்ச வீட்டில் புகுந்து கொள்ள வேண்டாமா, அப்போ எவ்வளவு சமயம் நாம் ஒவ்வொருவரும் சீவகாருண்ய வசத்தராயிருக்க வேண்டும்? கணக்கிட்டு பாத்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும் ,ஒவ்வொருவரும் எத்தனை நேரம் சீவகாருண்ய முனைப்பாய் இருக்கிறீர்கள் என்பது, அப்படித்தானே?. ஒரு நாளில் எத்தனை நிமிடம் என்று சொல்லுங்கள், உள்ளம் தயவுடன் இருக்கிறது?. பசிப்போருக்கு உணவளிக்க வேண்டும், அது தலையாய கடமை,அதுவே சீவ காருண்யம் என கொண்டு உணவளிக்கலாம். ஆனால் பாருங்கள் நூறு பேரிடம் பணம் வாங்கி ஒரு கும்பலாய் கூடி, சாப்பாட்டை ஏந்திகொண்டு பசி இல்லாதவர்களுக்கு பரிமாறி கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரே அமர்களம், கேட்டால் சீவகாருண்யமாம். பசித்து இளைத்து, கண்கள் பஞ்சாகி உள்ளே சென்று பெரிய மனுஷங்கள் கிட்டே உக்காந்து சாப்பிட்டா திட்டுவாங்களோண்ணு பயந்து வெளியிலே ஒரு மூலைலே ஒதுங்கி நிக்கும் ஒரு கூட்டம்,எங்கே போகுது சீவகாருண்யம்? இதுவா சீவகாருண்யம்? இதுவா தயவு? பசித்து துக்கித்து நிற்பவனை கண்டால் உடம்பில் ஒருவித நடுக்கம் தென்பட ஆரம்பிக்கும்,அது பசியால் வாடினவன் உணவு கொண்டபின் அவன் கண்களில் ஏற்படும் பூரிப்பை கண்டபின்பே தணியும்,இதுவே தயவு. அப்படி நாள் முழுக்க தயவுடன் இருப்பதே தவம். இது வராமல் மோட்சவீடு என்று சொல்லிகொண்டு திரிவது வெறும் பகட்டுக்கு வார்த்தை ஜாலம் மட்டுமே,செத்து பிணம் நாறுமே ஒழிய மொட்சமில்லை. _________________________________ Kirubanandan Palaniveluchamy ஜீவ காருண்யம் மோட்ச வீட்டின் திறவுகோல் என்றுதான் வள்ளலார் சொன்னார் அது ஒரு கதவு மட்டுமே அதில் பிரவேசித்து உள்ளே ரெம்ப தூரம் செல்லவேண்டும் ஜீவ காருண்யம் மட்டுமே மோட்ச வீடு என்பதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது Hseija Ed Rian கதவு என்று சொன்னால்...? அப்போ திறவு கோல் என்று சொன்னால்...?எது எது?...கொஞ்சம் விளக்கம் தேவை Kirubanandan Palaniveluchamy  

சீவகாருண்யம் - ஒரு பார்வை

சீவகாருண்யம் - ஒரு பார்வை எப்படி சீவகாருண்யத்தால் மூவகை சரீரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்?, சுத்த தேகம்,. பிரணவ தேகம், ஞான தேகம் இவை மூன்றும் சீவ காருண்யம் ஒன்று கொண்டு மட்டும் கைவரப்பெறுமா?, வேறொரு முறைகளும் தேவை இல்லாமல் எப்படி இத்தேகங்களை பெறுவது? ,யோகம் செய்வது வேண்டுவதில்லை எனக்கூறும் வள்ளலார் ஏன் விளக்கை கொளுத்திவைத்து “பாவனை”செய்துவரவேண்டும் என கூறுகிறார்? பாவனை என்பது யோக முறை இல்லை எனக்கூற முடியுமா? சீவகாருண்யம் மட்டும் போதும் என்றிருந்தால் ஏன் முற்பாடு வர்தமான மகாதேவர், கவுதம புத்தர் ,நாகார்ஜுனர் முதலிய சீவகாருண்யமே தவநெறியாக கொண்டிருந்தவர்கள் சுத்த தேகத்தையும் பிரணவதேகத்தையும் ஞான தேகத்தையும் பெறக்கூடாமல் போயிற்று?,அவர்களும் மிகபலமான சீவகாருண்ய ஒழுக்கத்தையும் கொல்லாமை எனும் விரதத்தையும் கொண்டிருந்தார்களே?, ஏன் அவர்களால் பெற்று கூடாமை நம்மால் எப்படி ஆகும் என கொள்ளவேண்டும்???, அறிவிற் சிறந்தோர் இதன் கூடாகூடுவை குறித்து புகலவும்.

ஒருவனை பற்றி ஓரகத்திரு

ஒருவனை பற்றி ஓரகத்திரு ஒருவனை பற்றி ஓரகத்திரு என்ற திருவாக்கு என்ன உன்னத வாக்கு என இப்ப எண்ணிப்பார். நாசிக்கு வெளியே மூச்சு ஓடாது நின்றதும் உன் ஜீவன் துவாதசாந்த பெருவெளி கடந்து வெளிச்சக்காலில் போய் மாட்டிகொள்கிறது.அந்த நிலை கைவரவான பின் சுவாசம் வெளியே ஓடும்படி அதை வலுக்கட்டாயம் செய்து இழுத்து முயற்சித்தாலும் அது வெளியே ஓடுவதில்லை. நாசிக்கு வெளியே எமது மூச்சு ஓடாதபடி,மூக்கின் ஓரக்கங்கு வரை வந்து அது திரும்பி உள்ளே போகிறது என்பது எமக்கு இப்ப திட்டமாக தெரிகிறது.                            ~சாலை ஆண்டவர்கள் ____________________________________ Vellingiri Vellingiri குருவே வணக்கம்  சற்று தெளிவாக கூறவும் இதில் சரியான வாசகங்கள் இல்லாதது போல் தெரிகிறது 3   Hide or report this விஜயகுமார் சு காணுமூச் சடக்கி விழியதை உருட்டிக் கபாலமுந் திறந்தனர் கோடி கனத்த வாயுவதனால் குன்ம நோய் அனுகி கலங்கினோர் ரொரு கோடி தோணு மெய் மறந்து சுழன்று அனல் எழுப்பிச் சொக்கி னோர் ரொரு கோடி சூலைவாயு அனுகி சுவாலையும் எழுப்பி சுரமதனால் இறந்தவர் ரொரு கோடி ஊண உண்ணாக்கை உள் தூக்கி உள்ளடங்கி னோர் ரொரு கோடி உயர சாணீளம் முழமது எழுப்பி உறங்கி ஒடுங்கினோர் ரொரு கோடி பேனாதி சாரப் பேதி வந்தனுகி பிறவியா இறந்தவர் ரொரு கோடி இனமறியாமல் இருத்தியே வாய்வை இறந்தனர் ரொரு கோடி இனிய தம்பனஞ் செய்து எழுப்பி கும்பித் தேங்கியே இறந்தனர் ரொரு கோடி கனமறி காற்றை நாசியால் விட்டு கருதியே இறந்தனர் ரொரு கோடி கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே Hseija Ed Rian "கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே"".....ithu enna porul aiyaa? விஜயகுமார் சு ஐயா சித்தர் வழி வந்த புலத்தியர் அவர்களின் பாடலே மேற்கண்டது.....இந்த வாசியோகம் என்பது இந்த உடலில் செய்வது அல்ல என்றும்.,மெய்ப்பொருள் என்ற ஒன்றில் நிகழ்த்துகிற நிகழ்வாக சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்....இந்த மெய்பொருளை கிரமப்படி யார் ஒருவர் 12 வருடங்களில் உட்கொள்கிறாரோ அவருக்கு இந்த வாசி என்ற மூச்சு ஆனாது தானாகவே லயமாகி நாசிக்கு வெளியே ஓடாத நிலையை அடைவாராம் ஐயா

THE ART OF PARIMUKHA

THE ART OF PARIMUKHA THE ART OF PARIMUKHA When Buddha was a child, there was an annual celebration called the Plowing Festival. One year he was very bored with it all, and so went and sat under a tree. There he spontaneously entered into profound meditation through observing his breath. At the end of the festival his parents discovered him beneath the tree, roused him from his inner absorption, and took him home. He never repeated what he had done that day beneath the tree, but he never forgot it. Later, after years of practicing incredible austerities and many yogas, he found himself without authentic realization. Sitting beneath a tree, he vowed to remain there until he attained enlightenment. But how would he do that? What should be his practice, since everything he had learned in so many years had proven useless? Then he recalled his childhood meditation at the Plowing Festival. “Might that be the way to enlightenment?” he wondered. It seemed unthinkable that the simple, spontaneous practice of his long-ago childhood could be the key to Nirvana. But something from deep within him spoke, saying: “That is the only way to enlightenment.” He tried it; and continued it; and it worked. Consequently, he recommended it to others.In the Dhatuvibhanga Sutra (M 140:4), Buddha’s entry into meditation is described in this way: “The Blessed One sat down, folding his legs crosswise, setting his body erect, and establishing mindfulness in front of him–that is, establishing his awareness parimukha–in front of his face at the tip of his nose.” So focussing attention on the tip of the nose is a requisite for meditation in general. This is further borne out by Buddha’s description of meditation practice in the Maha-Assapura Sutra (M 39:13): “He sits down, folding his legs crosswise, setting his body erect and establishing mindfulness in front of him [parimukha].” பரிமுகாவின் கலை  பரிமுகாவின் கலை புத்தர் குழந்தையாக இருந்தபோது, ​​உழவு விழா என்று ஒரு ஆண்டு கொண்டாட்டம் இருந்தது. ஒரு வருடம் அவர் அதையெல்லாம் மிகவும் சலித்துக்கொண்டார், எனவே சென்று ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அங்கு அவர் தன்னிச்சையாக தனது சுவாசத்தைக் கவனிப்பதன் மூலம் ஆழ்ந்த தியானத்தில் நுழைந்தார். திருவிழாவின் முடிவில், அவரது பெற்றோர் அவரை மரத்தின் அடியில் கண்டுபிடித்து, அவரது உள் உறிஞ்சுதலில் இருந்து எழுப்பி, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மரத்தின் அடியில் அவர் செய்ததை அவர் ஒருபோதும் திரும்பத் திரும்பச் சொல்லவில்லை, ஆனால் அவர் அதை ஒருபோதும் மறக்கவில்லை. பின்னர், நம்பமுடியாத சிக்கன நடவடிக்கைகளையும் பல யோகங்களையும் கடைப்பிடித்த பல வருடங்களுக்குப் பிறகு, அவர் உண்மையான உணர்தல் இல்லாமல் தன்னைக் கண்டார். ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து, அவர் ஞானம் பெறும் வரை அங்கேயே இருப்பேன் என்று சபதம் செய்தார். ஆனால் அவர் அதை எப்படி செய்வார்? இத்தனை ஆண்டுகளில் அவர் கற்றுக்கொண்ட அனைத்தும் பயனற்றவை என நிரூபிக்கப்பட்டதால், அவருடைய நடைமுறை என்னவாக இருக்க வேண்டும்? உழவு விழாவில் தனது குழந்தை பருவ தியானத்தை நினைவு கூர்ந்தார். "அறிவொளியின் வழி அதுதானா?" அவர் ஆச்சரியப்பட்டார். அவரது நீண்ட கால குழந்தை பருவத்தின் எளிமையான, தன்னிச்சையான நடைமுறையானது நிர்வாணத்திற்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவருக்குள் இருந்து ஏதோ பேசினார்: "அறிவொளிக்கு ஒரே வழி இதுதான்." அவர் அதை முயற்சித்தார்; அதைத் தொடர்ந்தார்; அது வேலை செய்தது. இதன் விளைவாக, அவர் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தார். தத்துவவிங்க சூத்திரத்தில் (எம் 140: 4), புத்தரின் தியானத்தில் நுழைந்தது இந்த வழியில் விவரிக்கப்பட்டுள்ளது: “ஆசீர்வதிக்கப்பட்டவர் உட்கார்ந்து, கால்களை குறுக்காக மடித்து, உடலை நிமிர்ந்து, மனதில் நிலைநிறுத்தினார் அவருக்கு முன்னால் - அதாவது, அவரது விழிப்புணர்வு பரிமுகாவை - அவரது முகத்தின் முன் அவரது மூக்கின் நுனியில் நிறுவுதல். ” எனவே மூக்கின் நுனியில் கவனம் செலுத்துவது பொதுவாக தியானத்திற்கு அவசியமாகும். மகா-அசாபுரா சூத்திரத்தில் (எம் 39:13) புத்தர் தியான பயிற்சி பற்றிய விளக்கத்தால் இது மேலும் வெளிப்படுகிறது: "அவர் உட்கார்ந்து, கால்களை குறுக்காக மடித்து, உடலை நிமிர்ந்து, அவருக்கு முன்னால் [பரிமுகா] மனதில் நிலைநிறுத்துகிறார்."