Tuesday, November 29, 2022
குண்டலினீய தவம்
குண்டலினீய தவம்
‘கூறாத மந்திரத்தின் குறிப்பறிவித்து....
ஏறாநிலையெனை ஏற்றுவித்து....’
என ஆங்காங்கு குரு பரம்பரையினில் மட்டும் ஒதுங்கி எக்காலத்தும் தலையை வெளிக்காட்டாது, தலை ஏது வால் ஏது என புரிதலுக்கு இடம் கொடாது மறைந்து மூலகுகைக்குள் அடங்கி ஒடுங்கி தன்னிலை அற்று தனிமையே குணமாக முக்குணத்துக்கும் ஆதாரமாக எத்தேவருக்கும் தாயாக ஈனா மலடியாம் பெருஞ்சூலி திரிபுரை சின்னபெண் சித்து விளையாட காத்திருக்கின்றாள்,
அவள் தன்னையே பகுத்து சரிபாதி அந்த ஈசனுக்கும் கொடுத்தவள் ஆம் தயாவல்லி.அவள் சொரூபத்தை சித்தர்கள் ஞானிகள் என அறிந்தவர் யெவரும் சொல்ல கூச்சபட்டனர்,அவ்வண்ணமான சொரூபம்.அதான் அவள் மறைவாகவே உலாவுகிறாள் பெருங்கள்ளி.
அவளுக்கு என மட்டும் அவள் அறிவின்றி யெவரும் அறிந்திரா மந்திரம் தான் மூல மந்திரம், எழுகோடி மந்திரங்களுக்கும் தாயான மந்திரம்.அதை சித்தர்கள் வாய் விட்டு சொல்லாமல் மறை பரிபாஷையாகவே சொல்லி சென்றிருக்கின்றனர்.மூலாக்கினி எனவும் குண்டலினீ எனவும் வாலை எனவும் சூலி எனவும் வல்லபை எனவும் வாக்மயி எனவும் தேவி எனவும் பல ரூப பல பேத பல நாமம் அனேகம் விதம்.ஆயினும் அந்த ஓரெழுத்து தான் என்னவோ அவள் ரகசிய குறி????
’ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே’.=திருமூலர்
Mathi இடம் வலம் சாதித்தால் மத்தியார் னத்திலே வாத்தியம் கேட்கலாம் னு திருமூலர் சொல்றாரு.
அதான் இங்க லெப்ட் ரைட்னு மிலிட்டரி பரேடு நடக்குது. :) கொஞ்ச நேரத்துல வானத்தை நோக்கி டுமீல் னு ஒரு சத்தம் வரும். வெயிட் பண்ணி பாருங்க . சிவன் கூத்து வெளிப்படலாம்
Mathi தொடர்ச்சி ---
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்
நடு நாடியும் நடு மூக்கும்
நடு நாடியும் நடு மூக்கும்
‘நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’
‘நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர் வெழா வாயுவை உள்ளே அடக்கி துயரற நாடியே தூங்க வல்லார்க்கு பயனிது காயம் பயமில்லை தானே’..
இவ்வாறாக திருமந்திரமும் ..
“விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
26:
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
27:
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;”
இவ்வாறாக புசுண்டர் பிரானும் ....
சொல்லும் நுண்ணிய நுணுக்கம் என்பது தான் நடுமூக்கும் நடு நாடியும் அல்லவா?
இரண்டு கண்களும் மூக்கும் சரியாக செங்குத்து கோணத்தில் சந்திக்கும் இடமே சுழுமுனை எனும் ‘பாலம்’.இந்த பாலத்தினுள் தான் ‘க’ எனும் பரமான்மா உறைவிடம்.அதனால் இது கபாலம் என்றாயிற்று.’முச்சந்தி’ என்பதும் இவ்விடம் தான்.
மனமானது இவ்விடத்தில் நிலை கொள்ள அச்சணமே வலது இடது நாசிகளின் ஊடான இயக்கம் மேல்முகப்படும் என்பது அனுபவ உண்மை..
கொஞ்சம் பக்கத்துல வாசி வாசிக்க வந்திருக்கோம்ண்ணு தோணுது...அப்புறம் பார்ப்போம் வாசிக்கறது எப்படீண்ணு
தன்னை அறியும் தலமேது?
தன்னை அறியும் தலமேது?
“'தன்னை அறியுங் தலமேது சொல்லடி சிங்கி!-அது கணணிடை யான நடுநிலை யலவோ சிங்கா!”-பீரு முஹ்aமது ஒலியுல்லாஹ் அப்பா.
”கண்ணிடையான நடுநிலை” என்பதை சற்று ஆராய்ந்தால் உடனடியாக அறிவுக்கு வருவது ஒரு சாரர் கூறுவது போன்ற திருவடி தவம் எனும் கண்மணி தவம்.இதை தான் அம்மக்கள் அறிதியிட்டு கூறுவார்கள்.இங்கே ’கண்ணிடை’ என்பதோ ‘நடுநிலை’ என்பதோ கண்மணியை தான் குறிக்கிறது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடுத்து சொல்லபடும் விளக்கமானது புருவமத்தி தான் ‘கண்ணிடையான நடுநிலை” என்பர் பலர்.’புருவமத்தையை’ ஏன் ‘கண்ணிடை” என சொல்லவேண்டும் என கேட்டால் விளக்கமான புரிதல் இல்லை. புருவமத்தியை வேணுமென்றால் ‘நடுநிலை” என குறிப்பிட்டு இருந்தால் ஒப்புகொள்ளலாம். ஏனெனில் புருவ மத்தியும் நடுநிலைகளில் ஒன்று தான்.
இப்படி கொஞ்சம் நடுநிலைகளை தான் நாம் ஆதாரங்கள் என சொல்கிறோம். அப்போது ‘கண்ணிடையான நடுநிலை” என்றால் ”கண்ணிடையான ஆதாரம்” என கொள்ளல் வேண்டும். அது எதற்க்கு ஆதாரம் என்றால் ‘தன்னை அறியும் தவத்துக்கு ஆதாரம்”.
உங்கள் கண்கள் மேலும் பார்க்க வேண்டாம், கீழும் பார்க்க வேண்டாம், இடதும் பார்க்க வேண்டாம் ,வலதும் பார்க்க வேண்டாம், உள்ளும் பார்க்க வேண்டாம் ,வெளியும் பார்க்க வேண்டாம். கண்கள் திறந்தே இருக்கட்டும்.. ."கண்ணிடயான நடுநிலையில்” மனம் இருக்கட்டும்..சற்று ஆழ்ந்து இளைப்பாறுங்கள்...தூக்கம் போல..ஆனால் தூக்கம் அல்ல..நீங்கள் ஜாக்கிரதையாக தூங்காமல் தான் இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ளுவீர்கள்...மறுபடியும் . "அந்த தூக்கம் போல” வரும்..கண்களில் இருள் சூழும்..தூக்கம் போல வரும்...ஆனால் தூங்காமல் தான் இருக்கின்றீர்கள்...அப்படி தூங்காமல் தூங்கி வர சுகம் தான் ..சுகம்
வாசி வசிவா என்றால் வாசி வருமா?
வாசி வசிவா என்றால் வாசி வருமா?
ஆயிரம் தடவை யோசிச்சிருப்பேன்...சொல்லிடவாண்ணு..ஆனா உண்மை என்னமோ சொல்ல முடியுதில்லை.
பல வலைதளங்கள், பல யூடியூப் வீடியோக்கள் எல்லாம் பலவிதமாக வாசி யோகம் சொல்லி தருகின்றனர்.ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கட்டணம் போட்டு ஆறுமாத காலம், மூணு மாத காலம் ,கிராஷ் கோர்ஸ் என வாசி யோக வகுப்புகள்.விளக்கை கண்ட விட்டில் பூச்சிகள் பொல பறந்து சென்று செத்து மடியும் கூட்டங்கள் கும்பலாக கூடி வீணான சத்தம் உண்டாக்க கண்கிறோம்.
வாசிண்ணா அது மூச்சு பயிற்சிண்ணு மக்கள் நினைக்கிறதை என்று விட்டுவிட்டு ,வாசி என்றால் மூச்சுக்கு அப்பால் உள்ள நிஜம் என்பதை அறிந்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும்.வலது நாசி இடது நாசிண்ணு சொல்லி மக்களை மாடு மூச்சு வாங்குறதை போல போட்டு மாரடிச்சு வீணாக பொழுது போக்கி என்ன ஆக பொவுதுண்ணு உணராமலேயே இருக்கிறோம்.
பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.
இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்..உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.
உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் ,அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர்.
...தொடரும்
தலை வாசி ஏது -கால் வாசி ஏது-குண்டலி தான் இங்கேது?
தலை வாசி ஏது -கால் வாசி ஏது-குண்டலி தான் இங்கேது?
ஆகார முதலிலே பாம்ப தாக
ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. (பாம்பாட்டி சித்தர்
மோ + க்ஷம்==
======மோ + க்ஷம்=====
எது வம்சம், குலம், கோத்ரம் மற்றும் பாரம்பர்யங்களைக் கடந்ததோ, எது நாம ரூபங்கள் அற்றதோ, எது ஏற்றத்தாழ்வுகளைக் கடந்ததோ, எது கால தேச ஜட உணர்ச்சிகளைக் கடந்ததோ அந்தப் பரம்பொருளாக நீயே இருக்கிறாய். இதையே உனக்குள் தியானித்துக் கொண்டிரு
ஓம் னம
====ஓம் னம=====
நன்றி கூறுதல் ......எனை வளர்த்த....அனைத்து குருமார்க்களுக்கும்...உயிரார்ந்த...வணக்கங்கள் உரித்தாகுக..ஓம் தத் ஸ்த்
சத்தித்திரு வித்தைத்திரு
சத்தித்திரு வித்தைத்திரு
சத்தித்திரு வித்தைத்திரு வினைமுத்திகுருவாயோய்-பத்திக்கிரு கைகூப்பி இச்சித்திருவதைபணிந்தால்-முக அத்தித்திரு வழகாய் மனமுச்சித்திருகொலுவாய் தினமொத்ததிருவென அறிவாய் கண்ணாயே
Hseija Ed Rian THATS WHY VALLALAR EXPLAINED WITH US ... நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. WITH THIS HE OPENED THAT LOCK AND HE GAVE THIS KEY TO US TO OPEN THE HOLY GRACE GATE AND TO SEE THE ARUTPERUM JOTHI AANDAVAR
Hseija Ed Rian இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், this sentence having great mystery,....this teach us this universe is nothing but the formation of the arutperum jothi aandavar...He Him self manifested as this nature...so it should be deemed as this is the great arutperum jothi
ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே
ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்
குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி
அறிந்தவர்கள் இருக்கிறார்கள்...இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை...கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்
சுவாச கலை
சுவாச கலை
Hseija Ed Rian: நாசிக்கு வெளியே மூச்சு ஓடாதவர்?
x
Hseija Ed Rian: நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத ஒருவரையாவது உங்க கண்ணால பாத்திருக்கீங்களா ஐயா?
Hseija Ed Rian: மூச்சு ஆடாம அவர் என்கிட்ட பேசணும்...அதுக்கு தான்
Hseija Ed Rian: அதுக்காக அடக்கமாகி சமாதியிலே போயி மூச்சு அடங்கினவரை காட்டி இவருக்கு மூச்சு ஆடலைணு சொல்லகூடாது
Hseija Ed Rian: பைபிளிலே இருக்கிறது என்னண்ணா, நாசியில் முச்சு உள்ளவனை நம்பாதேண்ணு தான்....அப்படீண்ணா அவன் பேசறதை நம்பாதேண்ணு அர்த்தம்...அதுக்காக தான் மூச்சு ஆடாதவன் சொல்றத நம்பலாம் என்கிறேன்...மூச்சு ஆடாதவர் என்கிட்ட பேசணும் என்கிறேன்....தப்பா எடுத்துக்கவேணாம்
Hseija Ed Rian: ஆதிமெய் உதய பூரணத்தில் அப்படி எதாவது சொல்லபட்டிருக்கா ஐயா?...மூச்சு துண்டாடபடுவது நிக்குணு சொல்லி இருக்கு அப்படித்தானே..அப்ப எப்படி பேச்சு வரும் ஐயா?... பேச்சும் மூச்சும் சேர்ந்தல்லவா இருக்கு?
Hseija Ed Rian: மூச்சு “துண்டாடபடுவது”நிற்க்கும் என சொல்லப்பட்டிருப்பதை ...இப்போதைய ஞானிகள் மூச்சு “ஆடாத’என மாற்றிவிட்டனர்..... என்ன பாவம் இது?..அனியாயம் தான்
விஜயகுமார் சு: பிரணாயாமத்தில் எட்டுபங்கு காற்றுமட்டுமே நின்று நான்கு பங்கு துண்டாடப்படுகிறது என்று படித்திருக்கிறேன்
விஜயகுமார் சு: இந்த நாலு கலை பாழ் போகாமல் உள்ளடக்குவதே வித்தை என்றும் படித்திருக்கிறேன்
Hseija Ed Rian: விஜயகுமார்...சொல்வது உண்மை தான்...அது காற்று வித்தை...பிராண வித்தை கலை வித்தை ...இப்படி வித்தைகள் எண்ணற்ரு கிடக்கிரதே...அதுல இது எது ஐயா?
Hseija Ed Rian: ஒரு ராஜ நாகத்தை சடாரென மிக அருகில் பார்த்த உடனேயே....அக்கணத்தில் மூச்சானது படாரென வெடித்து கிளம்பும்...தாறுமாறாக ஓடும்...வியர்வை கொட்டி வடியும்...கண்,கால் மெய் தெரியாது ..காது பஞ்சடைந்து போகும்...இது எதனால்
நடக்கிறது?...நாகத்தைற்க்கும் மூச்சுக்கும் தொடர்பே இல்லை அல்லவா?...பின் எப்படி மூச்சு வெடிக்கிறது?..ஐயா?
விஜயகுமார் சு: அதீத பயம்
Hseija Ed Rian: மூச்சுக்கா அதீத பயம்?
விஜயகுமார் சு: மனம் பயத்திற்கு ஆட்படுகிறது.அதன் விழைவே
Hseija Ed Rian: மனம் பயத்திற்க்கு ஆட்படும் போது வெடிக்கும் எனில்....மனம் கோவத்திற்க்கு ஆட்படும் போது துடிக்கும் எனில் ...மனம் அருளுக்கு ஆட்படும் போது மட்டும் ஏன் அடங்காது?...அதுக்கு பிராணாயாமம் தான் வேணுமா என்ன?
Hseija Ed Rian: பிரானாயாமத்தைவிட மூச்சு துண்டாடபடுவதை தவிற்க்க அற்புதமான மாத்திரை சன்மார்க்கத்தில் இருக்கிறதல்லவா/
விஜயகுமார் சு: இந்த நான்கு விரட்கடை விரையமாக மாறுவது என்னவாகும்?
Hseija Ed Rian: நான்கு விரற்கடை என்பது எது?
விஜயகுமார் சு: தோத்திரம் செய்யும் போது சுவாசம் நடக்காதா ஐயா?
Hseija Ed Rian: உள்மூச்சா ...வெளி மூச்சா விரயமாகிறது என்பதை கவனிக்கவும்...
விஜயகுமார் சு: வெளிமூச்சு அல்லவா விரையமாகும்
Hseija Ed Rian: இந்த நான்கு விரற்கடை எதுவென்பதை அறிந்து ..அதை விசாரம் செய்தால் தான் விஷயம் புரியும்
Hseija Ed Rian: ஆமா...வெளிமூச்சு தான் விரயமாகும்...அது எங்கிருந்து விரயமாகும்? எந்த பகுதியிலிருந்து?
விஜயகுமார் சு: இந்த நான்கு என்பது சந்திர கலையாக குறிக்கப்படும்.பதியின் கலை நாலாகும் பனிரென்டை பற்றிகொண்டு ரவியும்மதியும் ஒன்றாகி சுழி அகரமாய் தோணும்
Hseija Ed Rian: மொத்தம் 12 அங்குலம் உண்டு தானே?..அது எங்கிருந்து அளக்கப்படுகிறது?
விஜயகுமார் சு: அது எரிக்கப்பெற்று சக்தியாக வெளியேறும்
Hseija Ed Rian: பதியின் கலை தான் நான்கு..சரி தான்...பதியென்பது யாது?..
விஜயகுமார் சு: நாசியிலிருந்து
Hseija Ed Rian: இல்லை
விஜயகுமார் சு: பதி என்பது பெண்ணாக உருவகப்படுத்தப்படும் சந்திரன்
விஜயகுமார் சு: இல்லை......பின் எங்கிருந்து ஐயா?
Hseija Ed Rian: பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு
Hseija Ed Rian: புருவமத்திக்கும் அண்ணக்கிற்க்கும் நான்கு விரற்கடை அளவு....இது மேலேறாது இங்கிருந்து வெளிப்படும், புருவமத்தியில் இருந்து கீழ் நோக்கி சலிக்கும் வாயுவுக்கு சந்திரன் எனவும் அபானன் எனவும் பெயர். இது 12 அங்குலம் இருக்கும்...அதாவது உள் மூச்சு. அது போல வெளிப்படும் மூச்சு பிரானன் எனும் சூரியன்...12 கலையில் நாலு கலை வெளியேறும்.
Hseija Ed Rian: கீழ்முகமானது சந்திரன்,மேல் முகமானது சூரியன். .இத மேல்முகமான சூரியனில் கலை நாலை சோர்ந்து போகாது மதிமண்டலத்தில் செலுத்த அமிர்தமாகும்.
Hseija Ed Rian: அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே
விஜயகுமார் சு: செலுத்தும் முறை ஐயா?
Hseija Ed Rian: செலுத்தும் முறை உண்டு...அதை வாத கற்ப்பம் என்பர்
விஜயகுமார் சு: ஆம் அந்த இடம்தான் வேண்டும்.அதை செலுத்தும் முறையே என் தேடல்
Hseija Ed Rian: பிறந்த குழந்தைக்கு இந்த வித்தை தெரியும்....அது இயற்கையாக உள்ல வித்தையே....நாம் அதை மறந்து விட்டோம்...இப்போது அலைகின்றோம்...
Hseija Ed Rian: ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்
விஜயகுமார் சு: இதற்கு விளக்கம் வேண்டும் ஐயா
Hseija Ed Rian: குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி
விஜயகுமார் சு: இதற்கு இடம்பொருள்ஏவல. உண்டா ஐயா?
Hseija Ed Rian: சதா இருப்பதே சகஜம் என பெயர். இது சகஜ வித்தை ...எப்போதும் செய்யலாம்...
Hseija Ed Rian: எல்லா மதத்திலும் இது உண்டு...மெய்வழியிலும் இது உண்டு
Hseija Ed Rian: ரூஹூவென இஸ்லாமில் இருக்கிறது. ஐந்து விதமான ரூஹூக்கல் உண்டு. அதன் யாது நிலைகல் உண்டு.
Hseija Ed Rian: அறிந்தவர்கள் இருக்கிறார்கள்...இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை...கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்
விஜயகுமார் சு: நன்றி ஐயா கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
Muthu Kumar: ஐயா தங்கள் ஞானத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Hseija Ed Rian: மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
Hseija Ed Rian: இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.
Hseija Ed Rian: அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்....இதுவும் பெருமானார் சொன்னதே...
நன்றி
ரியான்
Subscribe to:
Posts (Atom)