Monday, November 28, 2022

ஜீவான்மாவானது

ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது , தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்”, எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”. - திரு. ரியான் ஐயா அவர்கள்

வாசியும் - ஊர்த்துவ கதியும் ஒரு விசாரம் 

=== வாசியும் - ஊர்த்துவ கதியும் ஒரு விசாரம்  === வாசி:- ====== நாம ஏராளம் யுக்திகள் வித்தைகள் யோகங்கள் என விசித்திரமான தந்திரங்கள் பலபேதங்கள் காண்கிறோம். சைவ யோகங்கள் வைணவ யோகங்கள் தந்திர யோகங்கள் சாக்தேய யோகங்கள் பவுத்த யோகங்கள் பல இன்னும் பல என விரிகின்றன.இவற்றில் சற்று ஆழ்ந்து ஆராயுங்கால் நாம் காணும் இவை அனைத்தும் ஒரு லட்சியத்தை கொண்டு இயங்குகின்ற சம்பிரதாயங்கள் என காண்கிறோம் அல்லவா, எனில் சொல்லபடும் வாசி யோகத்தின் லட்சியம் தான் என்ன என காண்போமா?       பிராணாயாமம் தான் வாசி யோகம் எனும் கூற்று மக்களின் அறியாமையால் சற்று அதிகமாகவே ஆன்மீக மக்களால் நம்பபட்டு அனுசரிக்கபடுகின்றது. ஆனால் "பிராணாயாமம் வேறு, வாசி வேறு" என்பதை அறிந்தவர் மட்டும் அறிவர்.      பிராணாயாமம் என்பது சுவாசத்தின் எண்ணிக்கையை நாட்கணக்கு அடிப்படையில் குறைத்து உள் அடங்க செய்தல் ஆகும் என்பது அனைவரும் அறிவர். இதனால் நாளொன்றுக்கு விரயமாகும் சுவாசம் சேமிக்கப்பட்டு ஆயுள் அதிகரிக்கபடுகின்றது. அதிகமான் ஆயுள் தீர்க்கமாக கிடைப்பதினால் ஆன்மீக சாதனைகள் நீண்ட காலம் செய்ய அவகாசம் கிடைக்கின்றது. இது ஒரு புறம் இருக்க, வாசி யோகம் என்பது மற்றொரு புறம் இருக்கின்றது.      யோகத்துக்கு ஆதாரமாக கொள்ளபடுபவை சூரிய சந்திர அக்கினி கலைகள் இயங்கும் நாடிகள், இவற்றை கொண்டு பூரகம் ரேசகம் கும்பகம் எனவும், கும்பக பேதமாக அகம் எனவும் புறம் எனவும், மத்தியம கும்பகம் எனவும் விரிவு.      இதில் சக்கரங்கள் ஆதாரங்கள் தேவதைகள் என பிரிவு. அங்க பேத திரிபு என பல விதம். ஆனால் வாசி என்பதில் இதில் இருந்து மாற்றாக இருக்கிறது. எப்படி என காண்போம்.      யோகத்துக்கு ஆதாரமான நாடிகள் இடது வலது என இரு நாசிகள் வழி இயக்கமாக கொள்ளபடுகின்றது. சிவசக்தியாக பாவிக்கபடுகின்றது. இடது வலது என ஒரு சுற்று வட்ட பாதையை கொண்டது யோகங்கள், இதை ஆதாரமாகவே குண்டலிணி எனும் ஆதார சக்தி. ஆனால் வாசி இதில் இருந்து வேறு படுகின்றது, எப்படி என காண்போம். இடது கலை தெற்கு எனவும் வாம மார்க்கம் எனவும், வலது கலை வடக்கு எனவும் உத்தர மார்க்கம் எனவும் சொல்லபடுகின்ரன. இந்த நாடிகள்  உடம்பின் இரு பக்கங்களாக இருந்து சுழுமுனையை ஊடுருவி செல்கின்றன என சொல்லபடுகின்றன. ஆனால் வாசி வித்யாசமானது என காண்போமா?. வாசி என்பது “வ-சி”.... வ- என்பது வஜ்ஜ்ர எனும் சூட்சும நாடி... சி- என்பது சித்த்ர எனும் சூட்சும நாடியாகும். இவ்வண்ணம் சூட்சும நாடியினை கொண்டு செய்யபடுகின்றது. இடை-பிங்கலை நாடிகள் ”வலம் -இடம்” எனில் வஜ்ஜ்ர-சித்த்ர நாடிகள் ”முன் -பின்” எனும் சக்கர சுழற்சியினை கொண்டது. இடை பிங்களைகள் சுழுமுனைக்கு வெளியானவை எனின் வஜ்ஜ்ர சித்த்ர நாடிகள் சுழுமுனைக்கு உள் இயங்குபவை. கிழக்கு-மேற்கானது என கொள்க. வஜ்ஜ்ர-சித்த்ர நாடிகள் சக்கர தன்மை கொண்டது, அதாவது முன்னும் பின்னும் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுழற்சி முன்னோக்கி சுழலுமாயின் சாதகன் தன் பிறவி கர்ம சக்கரத்தின் சுழற்சியில் ஒரு படி முன்னேறுகிறான். இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வேளையிலே தான் அவன் மற்றொரு பிறவி கர்ம வினை பயனை கடந்து முன் செல்கிறான். அதாவது “தாவி” செல்லுதல். யோகம் வாழ்நாளை அதிகரிப்பித்து அதிகம் சாதனை செய்ய வழிவகுக்கும் எனில், வாசி ஒரு சென்மத்தை தாண்டி குதிக்க செய்யும். அவ்வண்ணம் அவன் தான் அடைய வேண்டிய இடத்தை சீக்கிரத்தில் அடைகின்றான். ஊர்த்துவ கதி:- ============== இன்னைக்கு ஒரு வீடியோ பார்த்தேன். தமிழ்நாட்டுக்கு பிரபலமாக தெரிஞ்ச ஒரு சித்த வித்யார்த்தி பேசிகிட்டு இருந்தார். ஊர்த்வகதி என்றால் அது பிரமோஷன் கிடைக்கிற மாதிரியில்ல... எப்ப கிடைக்கும்ண்ணு யாராலும் சொல்லமுடியாதுண்ணு சொல்லிகிட்டு இருக்கார். பிரம்மரந்திரத்தை தட்டி உரசிகிட்டு உள்ளுக்குள்ளேயே சுவாசம் பண்றது தான் ஊர்த்வகதி. அப்படி மூக்கையும் வாயையும் அடைச்சு புடிச்சா கூட சுவாசம் உள்ளுக்குள்ள மேலும் கீழும் நடக்கிறது தான் ஊர்த்வகதிண்ணு சொல்லிகிட்டு இருந்தார்.. ரொம்ப வருத்தமாக இருந்துச்சு அவர் பேச்சை கேட்க்க. முன்னாடி வேறொரு சித்தவித்யார்த்தியும் இது மாதிரி தான் சுவாசகதி பண்ணணும், மூக்கு அடைச்சாலும் உடலில் இருக்கிற மயிர்கால் தோறும் சின்ன துளைகள் இருக்கு, அது வழியா பிராணம் உள்ள வரும்ண்ணு சொன்னதை நினைச்சு பார்த்தேன். இப்படி அனேகம் கற்பனைகள். ஏன்னா  ஊர்த்வகதியை அனுபவிச்சு பார்க்காத குறை தான் காரணம். பிரம்மரந்திரம்ண்ணா ஏதோ தலமண்டைக்குள்ள இருக்கிற ஒரு தூல உறுப்பு தான்ண்ணு நெனச்சுகிட்டு இருக்காங்க. ஏதோ புருவமத்திக்கு மேல நாலு அங்குலத்துல சின்ன ஒரு இடம், அதுல ஒரு ஓட்டை இருக்கு, அந்த ஓட்டை அடைஞ்சிருக்கு கபத்தால என நினைச்சுகிட்டு இருக்காங்க. நாம உடுத்து விடுற சுவாசம் அந்த துளையை போயி தட்டி திறக்கும்ண்ணு கனா காண்கிறாங்க சித்தவித்யார்த்திகள்.  தலைக்கு உள்ள இருக்கிறது தூல மாமிசம், அழுகி போற சட நிலை உறுப்பு. அதுலயா அழியாத பிரம்மரந்திரம் இருக்குங்கிறத நெனைச்சு பார்க்காம இருக்காங்க. பிரம்மரந்திரம் என்பது சிறு துளை என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதன் புரிதல் சற்று வித்யாசமானது. நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது.அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி.இதை தான் ‘சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே’ என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம். உன் உடல் குளிர்ந்து போகும். ---- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா பூர்ணிம என்பது பூரணத்துவம் ஆனது என பொருள். இங்கே குரு என்பவரின் விளக்கம் கூட தவறாக விளங்கி வருகிறது.எது பூரணமானது?, பிரம்மம் பூரணமாக விளங்கி கொண்டிருக்கிறது.அப்போது எது குருவாக மலர்ந்துள்ளது?,பிரம்மமே.ஆகையால் தான் குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்று சொன்னார்கள். இங்கே ஞானியர்கள் நிகண்டு 'குரு' என்பதுக்கு என்ன பொருள் தரும்?, ' கு ' என்றால் அஞ்ஞானம் ' ரு ' என்றால் பிரகாசம். அப்போது அஞ்ஞான பிரகாசம் என கொள்ளலாமா? பிரகாசம் பின்னால் நிற்க அஞ்ஞானம் அதற்கு முன்னால் நிற்பது எவ்விதம்? ஒரு வேளை சீடனுக்கு பொருள் சொல்கிறோம் என்றால் ஒத்துக் கொள்கிறேன்,ஆனால் குருவுக்கு அஞ்ஞானம் முன்னால் வருவது எப்படி? தமிழ் கடவுள் முருகன்,அவரது மற்றொரு பெயர் ' குஹ ', ' கு ' என்றால் அஞ்ஞானம் என கொள்ளலாமா? குஹன் என்றால் அஞ்ஞான சொரூபன் என்றா பொருள்?,தவறாக புரிந்து கொண்டு உள்ளதாக தெரிகிறது அல்லவா?" தவறாக தான் குருவுக்கு பொருள் கொண்டுள்ளோம். குஹ என்றால் பிரம்ம சொரூபன் என பொருள், குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள்.' கு ' என்றால் குஹ்யம் என பொருள்,அதாவது விளக்க அரியது என பொருள். அதாவது மறை பொருள் ஆனது, அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டது என பொருள். குரு ஆனவர் அந்த பிரம்ம சொரூபத்தை பிரகாசிக்க செய்கின்றவர் என பொருள். அதாவது குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள் விளக்கம்.ஒரு மங்களகரமான நிகழ்வுகளை தலை வாசலில் அமங்களகரமான தோரணம் போட்டு அலங்காரம் பண்ணுவாங்களா என்ன? யோசித்துப் பாருங்கள்

உயிர்

உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும் உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும் அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரனத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது

மன்மனம்

*மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே* ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்... நன்றி ரியான் ஐயா

ஞானக்கொடியும் வள்ளலாரும்

ஞானக்கொடியும் வள்ளலாரும் வெளிமுகமாக கொடி கட்டிக்கொண்டமையால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள் என வள்ளல் பிரான் அருளிசெய்து வடலூரில் கொடிகட்டிகொண்டார்கள். 140 வருடங்கள் ஆகின்றன அவர் கொடி கட்டி பறக்கவிட்டு, என்னதான் வெளிமுகமாக கட்டியும் நம்மவர்களுக்கு புரியவா போகிறது, நாம தான் வடிகட்டின முட்டள்களாச்சே,அப்படி கட்டினா ஒண்ணும் நமக்கு எங்க விளங்கபோகுது? நம்முடைய நாபி முதல் புருவமத்தியீறாக ஒரு நாடி இருக்குதாம், அதில் புருவத்தின் உள்ளாக ஒரு வபை உள்ளதாம்,அதில் வெள்ளயும் பொன்வண்ணமாயும் நிறங்களுண்டாம்,அது ஏறவும் இறங்கவும் செய்யுமாம்.ஏறினா என்ன செய்யும் இறங்கினா என்ன செய்யும்,யார் இருக்கா சொல்லித்தர? சொன்னாத்தானே புரியும் அது என்ன என்று? இல்லேண்ணா ஏதோ மகான் சொல்லி இருக்கார் என்று சொல்லி நான் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் நின்று வார்த்தை ஜாலப்போர் தான் நடக்கும், எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது கேக்கிறவனுக்கு வெளங்கவும் செய்யாது பாக்கிறவன் தலைலே அடிச்சுக்கிட்டு போவான்.அப்படித்தானே? நாபி முதல் இருக்கிற நாடி ஏன் கொஞ்சம் கீழால இறங்கி மூலாதாரத்திலே இருந்து தொடங்கவில்லை? சித்தர்கள் எல்லாம் நாடிகள் எல்லாம் மூலத்தில் இருந்து தொடங்குவதாக தானே சொல்கிறார்கள்? பிறகு ஏன் வள்ளலார் மட்டும் நாபி முதல் புருவமத்தி ஈறாக என்று சொல்கிறார்? ஏன் சித்தர்கள் எல்லாம் இந்த நாடியே பாக்கவில்லையா என்ன? இந்த உலகத்துல வந்தவர் ஒருவரும் நாபியில்லாமல் பொறக்கமாட்டார்கள், மட்டுமல்ல ஒரு்வருக்கும் தந்தையிடம் நேரடி தொடர்பும் இருக்காது,தாயிடமே இருக்கும். வள்ளலார் கட்டியகொடி என்பதை சொல் வழக்கில் நாபிக்கொடி எனலாம்,ஏனெனில் அதற்க்கு நாபியே ஆதாரம்,அவருடைய மார்க்கவும் அதுவே.அதனாலேயே வடலூரில் எல்லோரும் காணும்படிக்கு கட்டி வைத்தார்.அண்ணைக்கு கட்டினது கட்டின மாதிரி தான் இண்ணளவும் இருக்கு. அப்படி இருக்கிற நாபிக்கு தந்தையிடம் தொடர்பு இருக்கிறது,அது தூலத்தில் விட்டு் சூட்சுமத்தில் இருக்கிறதல்லவா?அப்படி எந்த ஒரு மனிதருக்கும் நாபி என்பது தாய் தந்தை என்பவர்களின் சங்கம வெளிபாடேயாம்.அவ்விடத்திலிருந்து மேலெழும்புவது அவர்கள் சங்கமத்தினால் வெளிப்படும் ஆன்மாவேயாகும். அது மேலெழும்பும் நாடியே வள்ளலார் கூறும் நாடி,அந்நாடி புருவத்திடை முற்றுப்பெற்று ஆன்மா அங்கு நிலை பெறுகிறது,தந்தையின் அணுவோடும் தாயின் கருவோடும், அதுவே ரெண்டு வண்ணங்கள். அது கீழ்முகமாயிறங்குவது என்பது அதோகதி எனப்படும்,அப்படி விடாது அந்த ஆன்ம நிலை தனை கடவுள் நிலையுடன் அருள் எனும் நூலை கொண்டு சேர்க்கவேண்டும்,இதுவே சன்மார்க்க கொடி.அதாவது சாகாதவனே சன்மார்க்கி.கொடிகட்டி கொள்வீர் விரைந்தே.

மாமிச போஜனமும் இரத்த பானமும்

மாமிச போஜனமும் இரத்த பானமும் நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து.  மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும் அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை

மனமே

மனமே ஒன்று இருக்கின்றது என்று உணர்ந்தால்பிறவி மனித பிறவியாஇல்லைவேறு ஏதாவதாதாமனித பிறவிஇவை அனைத்தும் மனம் ஒன்று இருக்கின்றது ஆன்மா ஒன்று இருக்கின்றதுஇவை ஸ்தூலத்திலோ சூட்சுமத்திலோ என்ற நம்பிக்கை இருக்கும் வரைஇவை அனைத்தும் இல்லை என்ற நம்பிக்கை வரும் பொழுதுஎந்த பிறவியும் இல்லை என்ற எண்ணங்கள் உருவாகும்இந்த பிறவியில் எதெல்லாம் உண்மை ஏன்று நம்புகின்றோமோ அவை அனைத்தும் இல்லாமல் போகும்உண்மை இல்லை என்று எதெல்லாம் தெறிகின்றதோ அதெல்லாம் நடக்கும்இது உணர்தலா புரிதலா ஆண்மாவா மனமா எண்ணங்களின் தொகுப்பா ஊழ்வினையா கர்மவினையா புண்ணியமா பாவசெயலா கடவுள் இருந்து நம்மை நடத்துகின்றாரா கடவுள் இல்லாமல் நடக்கின்றதா இதையெல்லாம் அவர் அவர்கள் அனுபவிக்கும் நன்றி ரியான்  ஐயா அவர்கள்

The Spiritual Seed

The Spiritual Seed மண்ணை கிளற கிளற அது அருமையான வளம் பெறும், விதை விதைப்பவன் மண்னை நன்றாக அறிந்திருப்பான்... மண்ணில் இருக்கும் சின்ன சின்ன கூழாங்கற்களை பொறுக்கி மாற்றுவதும் அவன் கடமையே அல்லவா? மண் பக்குவமாகும் போது விதை தானே விழும். பக்குவம் ஆகாத மண்ணில் விதை விழுந்து என்ன பயன்..விதை முளைக்குமா? சில பேருக்கு ஆசை இருக்கும்... ஆவல் இருக்கும்... ஆன்மீக தாகம் இருக்கும் என்பதும் சரி.. ஆனால் விதை முளைக்க அதுமட்டும் போதாது... அருமையாக விதையை கவ்வி மூடிகொள்ளுகிற பசையான மண் வேண்டும்.. நீர் நயப்பு இருக்கவேண்டும்.... அதிக ஆழமாகவும் விதை செல்ல கூடாது.. வெகு மேலாகவும் விதை இருக்ககூடாது... காகம் கிளி முதலியவை கொண்டு சென்றுவிடும். இதை தான் மனம் என்கிறோம்... மனமும் மண்ணும் ஒன்றே தான். இதனாலத்தான் மண்டையில களிமண்ணா இருக்கு என நையாண்டித்தனமாக பேசுவர் ஞானிகள். கொஞ்சம் விதை இருக்கிறது...பார்க்கும் இடமெல்லாம் நிலமும் இருக்கிறது.... விதை விதைப்பவன் கண்டமேனிக்கு விதையை அள்ளி வீசிகிட்டு போவானா...? அது மாதிரித்தான்...மனம் என்பது விளைநிலம்...அதை பண் படுத்தி நீர் ஓட வாய்க்கால் போட்டு அதை கிளறி..எரு விட்டு அப்புறம் சீஸண் பார்த்து தானே விதையை போடுவான் விவசாயி....ஒரு விவசாயியே இப்படி என்றால் ஆன்மீக விதை விதைக்கிறவன் என்னவெலாம் பார்க்க வேண்டும் கொஞ்சம் விதைகள் விதைத்து இருக்கிறேன்..அந்த விதைகள் அனேகம் விதைகளை தூவ வேண்டும்...பல விருட்சங்கல் முளைக்கவேண்டும்...இங்கு நான் என ஆக ஒன்றும் இல்லை..எல்லாம் இறை சித்தமே.

உணர்ந்த

இங்க “உணர்ந்த” என குறிப்பிடுவது “எதை கொண்டு” உணரவேண்டும் என விளக்கினால் அருமையாக இருக்கும்.மனம் இல்லாதது என எதை கொண்டு உணரவேண்டும்?ஆன்மா நிரந்தரமாக் இருக்ககூடியது என எதைகொண்டு உணரவேண்டும்? நான் மனம் இல்லை என எதைகொண்டு உணரவேண்டும்? நான் ஆன்மா என எதைகொண்டு உணரவேண்டும்