Thursday, November 24, 2022
குண்டலினீயின் ரகசியம்
குண்டலினீயின் ரகசியம்
குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.
ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.
ஞானமணிமாலை
”ஹக்காம்நபி தம்மோடு இறை கல்பான பல்லுடலில்
செக்கானது போல் அஞ்சு திருக்காய் எழும் மூச்சில்
நாக்காத அலிபு ஒன்று உண்டு அதில் நடு ரெண்டுள லாமும்
சிக்காமல் எடுத்து ஓதிடும் என்றே உரை செய்தான்”
~பீரப்பா ஞானமணிமாலை
ஆச்சரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்த அலிபு மூச்சுமல்ல ஆதத்துட பாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்கு சுஜூதிட்டால் அதிக தவம் ஆதத்துட பாதமது நிஜமாம்- அந்த அலிபு நிலையறிந்து அதிக தவம் செய்ய அதிகமுள்ள பெரியோரை அடிபணிந்தால் சொல்வார்
பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் முரீது*
*பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் முரீது*
அந்தெழுத்தையின்னதென்று அதினுடையவளமும்
ஆருஞ்சொல்லார் சொன்னாலும் ஆருமறியாரே
அந்தெழுத்து மூன்றிலொன்று அதுதானே தாத்து
அஹதயத்துமதுதானே யதிலுமதைப்போலே
வந்தது தான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து
வதிலுமதைப்போலமைந்த வாஹி தியத்தாமே
வாஹி தியாவானதென்ன வனைத்து முடிந்ததுவாம்
வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர்மணியாம்
இந்தவகைய றியார்கள் முந்தவகையறியார்
அந்தவகையறியார்க ளந்தரத்திலாவார்
இந்தவகையறிந்தவர்க ளெந்தனக்குங் குருவாம்
இவையறிந்தபேர்களெல்லாம் யாவுமறிந்தவராம்
யாவுமறிந்தவர்களென்று இருதயத் திற்சிறந்து
இவையறியவேண்டுமென்று எவருமடி தொழுதால்
அந்தவகை யறிந்தவரை யடிபணிந்து தொழுதால்
அவர்மனதிலிரக்கம் வந்தால ணுப்போலேவுரைப்பா
எந்தமட்டோ இறையருள்தா னெடுக்கமட்டும்போதும்
இதற்கதிகமானத்தவ மில்லையில்லை
வந்தவரேமனமறிந்து வருடமொன்று தெரிந்து
வளமுளபேராயிருந்தால் வரிசைவளமிருத்தி
வளமாக அறுநான்கு பிரிவுசொல்லித்திருத்தி
வரைந்தெழுத்து மூன்றுஞ்சொல்லி வகைபிரித்து
அந்தமூன்றில் கடையெழுத்தை யாதாமாக்கி
அதற்குமுதலதற்கடியு மதற்கடியும துவாம்
இதமாகரண்டுமது ஒன்றானபொருளை
இதற்கடியிதமாக இருதயத்தைமாற்றி
முந்தற்சொன்ன எட்டெழுத்தில் முடிவெழுத்தென்றியம்பி
முன்னேசொன்ன முடிவெழுத்தை கடையெழுத்தாற் தொழுது
வந்தமுதல்வகையெழுத்தை வடிவான எழுத்தாய்
வருமூன்றெழுத்தின்வள மொன்பதையுமறிந்து
முந்தமுந்தமுதலான முதலெழுத்தையுன்னி
மூன்றெழுத்தும்பிசகாமல் முடிந்துபின்னியுன்னி
அந்தரத்தில் மந்திரத்தை யுருபடுத்தும் விதத்தை
அடிபணிந்தார்க்கீந்தவித மருள்வோனே ஆசான்
இந்தவகையறியாத குருமாருக்குபிராம்
சீமாட்டி வித்தை
===== சீமாட்டி வித்தை =====
காலாலே கனல் ஏற்றுங்கடி – சழி
மேலே கொண்டு அமுது ஊட்டுங்கடி
மூலாதாரத்து அலங்கேசரம் – என்று
முழங்கிக் கும்மி அடியுங்கடி
சார்ந்து கொள்ளடி கேசரத்தை – முதல்
அன்னை அறியலாம் தானாகக்
கூர்ந்து மூலக் கணபதி – பாதத்தை
கும்பிட்டுக் கொள்ளடி ஞானப் பெண்ணே
நவ்வெழுத்தே பிரமனார் ஆகும் – அதில்
நாரணன் மவ்வெழுத்து ஆனானே
சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் – இன்னும்
செப்புவன் கேளடி ஞானப் பெண்ணே
செப்பவே வவ்வு மகேசுரனாம் – வட்டஞ்
சேர்ந்துப சாரம் சதாசிவனாம்
தம்பிலா ஐந்து எழுத்தாலே – சராசரத்
தங்கி இருந்தது ஞானப் பெண்ணே
வாலையின் அட்சரம் மூன்றாகும் – அதை
வாய் கொண்டு சொல்பவரார் காணும்
மேலொன்றும் கீலொன்றும் மத்திமமும் – கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே..
----------- வாலைகும்மி
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"
-- நன்றி: ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;
அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே
ஓரெழுத்து உலகெலாம் உதித்த
அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;
அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! 20
கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா?
==== கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ====
”ஐந்துகரத்தனை யானை முகத்தனை
இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை
நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொளுதல் நலம் அல்லவா?. உங்கள் அருமையான விடைகளுக்கு காத்திருக்கிறேன்....
நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு?
திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?.. எதாவது வித்யாசம் உள்ளதா என்ன?..
யோகசரியை படி எல்லா ஆதாரங்களிலும் ஒவ்வொரு ஆதாரமூர்த்திகள் தத்தம் துணைவியருடன் இருப்பதாக சொல்லபடுகின்றது, ஆனால் மூலாதாரத்தில் பராசக்தியும் கணபதியும் சொல்லபடுகின்றது... ஏன் சிவனார் எங்க போனார்?
திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெலாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?
பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர். அப்போது சிவன் கணபதிக்கு பிள்ளையா?.. மூலாதார பராசக்தி அந்த பிரணவ நாதரின் துணைவியரா என சந்தேகம் எழும் அல்லவா?
மூலாதாரத்தில் ஆதார வழக்கப்படி பராசக்திக்கு கணவர் தானே இருந்திருக்கவேண்டும்... குண்டலினிதாய்+பிரணவநாதர்.
மட்டுமல்ல மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள்.
கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ங்னம் தகும்?
பிரணவம் தானே ஆதிமூல பரம்பொருள்.. அது கணபதி தானே? அப்போது சிவன் கணபதிக்கு மகன் என சொல்லகூடாதோ என்ன?
எல்லா கணங்களுக்கும் அதிபதியானவர் கணபதி... அவர் பிரணவ சொரூபர்... வேதமூர்த்தி... அவர் இருப்பிடம் மூலாதாரம் .. அவர் துணைவியாக இருப்பது வல்லபை எனும் பராசக்தி... இப்படி யிருக்க சிவனாருக்கு மகன் என கணபதியை ஏன் சொல்லுகின்றனர்... கணபதியல்லவா இவர்களுக்கு முன்னே இருக்கின்றவர்?
சிவனார் அல்லவா கணபதிக்கு மகன் என சொல்லபட வேண்டும்?..சைவர்கள் குழப்பிவிட்டனரோ...?
தந்தைக்கு முன்னே மகன் உதித்தானே எனும் திருமந்திர பாடலும் இதற்க்கு வலு சேர்க்கிறது அல்லவா?
அப்ப சிவனுக்கும் முன்னரே இருக்கிறவர் கணபதி என்பது திருமந்திர கருத்து என புரிகிறதல்லவா?
ஆனா பாருங்க...சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்....வேறு யாருக்கும் இது கிடையாது..பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது
என்னிடம் ஒரு பழைய ஏடு இருக்கிறது... அதின் பிரகாரம் யானைமுகத்துடன் இருக்கும் தலைவருக்கு சிவன் என பெயர்.
கங்கைசூடி பிறை அணிந்து நீறுபூசி எலும்பும் கபாலமுமாக இருப்பவருக்கு மகேஸ்வரன் என பெயர். சிவன் என்பது கணபதியை குறிக்கும்....அதனால் தான் பராசக்தி மனைவியாக உள்ளாள்....இந்த கனபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... இவர் பராசக்தியுடன் போகித்து மும்மூர்த்திகலை ஈன்றாராம்.
ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்...இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்..அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.
ஓம் என்பது இவரின் பெண்பாகம், ஆண் பாகம் மற்றொரு மந்திரம்..
இவரின் லிங்கம்”முப்பத்து மூணு மாறு” நீளமாம்...இதை தான் லிங்கபுராணமும் “பெரிய சைஸ் லிங்கமாக” சொல்கின்றது.. இந்த லிங்கத்தைத்தான் சிவனார் சதா தியானம் செய்கிறாராம்...அல்லாது சிவனார் தானே தன்னுடைய லிங்கத்தை அல்ல, என்பது சாரம்...மும்மூர்த்திகலையும் சிருஷ்ட்டித்துவிட்டு கணபத்சிவமான இவர் எல்லா தந்திரங்கலையும் மந்திரங்கலையும் உபதேசித்துவிட்டு தன்னுடைய உடம்பை அவிழ்த்தாராம்....மீதமானது நீறு...அதை சிவனார் என நாம் சொல்லும் மகேஸ்வரனார் உடம்பெலாம் பூசிகிட்டாராம்...
சாதாரனமாக நாம் சொல்வது போன்று சிவன் தான் எல்லோருக்கும் முதல் பிறந்தவன் என கொண்டால், சிவனாருக்கு பூச நீறு எங்கிருந்து கிடைத்தது என ஒரு கேள்வி வரும்...ஏண்ணா சிவனார் பூசியிருப்பது சுடுகாட்டு சாம்பல்... அப்ப சிவனாருக்கு முன்ன சுடுகாட்டுல போன ஒருவர் இருந்திருக்கவேண்டும் எனும் பொருள் நாம் எல்லோரும் மறந்து போனோம்!!
சிவன் தானே கங்காலன் என நாம் சொல்லிகிடுரோம்..வேறு யாராவது இருக்காங்கலா என்ன?
அது சுடு காட்டில் இருந்து கிடைக்கும் நீறு...”திரு” நீறு... திரு என்பது கணபதி தான்....அதுக்கு ”ஸ்ரீ” என்ற பெயரும் உண்டு.
யாருடைய மண்டை ஓடு?..சிவனாருக்கு அவருக்கு முன்னால மண்டை ஓடு எங்கிருந்து கெடைச்சுது?
--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
பாருங்க
பாருங்க..
நாம் மாதாவின் கருவில் நெல்லிக்கனியளவு என இருக்கையிலே நம்முள் ஒரு அமைப்பு உண்டு...அதுவே கருவுக்கு எல்லா உறுப்புகளையும் அங்ககுலங்களையும் விரித்து உடலாக மலர செய்கிறது..தோன்றா நிலையில் இருக்கும் அது தூலத்துக்கு உரு கொடுக்கிறது...அல்லவா..அது எது
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலேஅச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே
உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா
உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்து நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குருத்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடுங் குருக்களே
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலேஅச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே
உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு மாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும்உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
உயிர் ஏற்றம் பெறுவோம்
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலைஇடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
(திருமந்திரம் 793)
சரம் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளிலும் மாறி மாறி ஏறும்; இறங்கும். இவற்றில் ஏறி இறங்கும் இடைவெளியில் சரம் இரண்டுக்கும் பொதுவாக நடுநாடியான சுழிமுனையிலும் இயங்கும். சரம் சுழிமுனையில் இயங்கும் நேரமே உயிர் ஊற்றம் பெறும் நேரம். அதை அறிந்து தேர்க.
(உயிர் ஊற்றம் பெறுவோம்
நாத_விந்து_கலாதீ_நமோ_நம
#நாத_விந்து_கலாதீ_நமோ_நம
நாதம், பிந்து, கலை என்று மூன்று பெரிய தத்வங்கள், “நாத விந்து கலாதீ நமோ நம” என்று திருப்புகழ் இருக்கு. இதிலே #நாதம் என்பது #சிவ_ஸ்வரூபம், #விந்து என்பது #சக்தி_ஸ்வரூபமாகும்.
சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் விந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் விந்து. முடிவில் ரூபங்களும் சப்தங்களிலிருந்து உண்டாகிறவைதான்.
நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வித்யாசம் உண்டு. சப்தம் என்பது வெளியிலே வருகிற ஒலிகள் அவற்றிலே பல உண்டு. நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது அதுவே சப்தம் ஒடுங்கிறபோதும் சேர்கிற ஸ்தானம்.
சிந்திக்க
இண்ணைக்கு ஒரு பதிவு பார்த்தேன் அதன் கருத்தும் என் கமெண்டும்.புரிந்தவர்கள் கமெண்டலாம்.
ஆதியே🌑துணை
பல பிள்ளைகளை பெற்ற ஒரு பெண்மணியை பார்த்து ஒருவர் கேட்டாராம் தாங்ஙள் பொம்பளை தானா என்று அதற்கு அந்நப் பெண்மணி கூறினார்கள் னான் பெண்மணி என்று அதற்கு அவர் னான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றாராம் அதற்கு அந்நப் பெண்மணி எம் பிள்ளைகளிடம் கேளுங்ஙள் உனக்கு தாய் யாரென்று என்றார்களாம் அதற்கு அவர் னான் உன் பிள்ளைகளிடம் கேட்க மாட்டேன் என்றாராம் அந்நப் பெண்மணி தான் ஒரு பெண்மணி தான் என்று னிரூபிக்க அம்மணமாக இருந்நா காட்ட முடியும் அல்லது அந்ந
சந்நேக பிராணியிடம் புனர்ந்நா னிரூபிக்க முடியும் இப்படித்தான் இருக்கின்றார்கள் பல பல பேர் னம் னாட்டில் மனிதன் என்ற போர்வையில் தானொரு அறிவு ஜீவி என்று னினைத்துக் கொண்டு தான் ஒரு
மனப் பிணியாளி என்பதனை மறந்நு
===============================================
Hseija Ed Rian குருனாதரின் கேல்வி பதில் பகுதி ஒண்ணு இருக்கு, அதுல ஒரு கேல்வி, ஆந்தூலம் வருவதெப்படி, பெந்தூலம் வருவதெப்படிண்ணு இருக்கும்.ஆனால் அங்க அதுக்கு மட்டும் குருனாதர் பதில் சொல்லி இருக்கமாட்டார், ஏண்ணா அதுக்கான பதில் தக்க குருனாதர் ஒருவரிடம் இருந்து தான் பெற்றுகொள்ளவேண்டும். அது ஞானவிஷயம்.உங்களுக்கு இந்த விஷயம் தெரியாத காரனத்தால் தால் இப்படி ஒரு பதிவு வந்தது. தான் ஒரு பெண் என நிரூபிக்க இந்த பெண்மணிக்கு தெரியவில்லை, ஆனால் அவள் மாறாக தாய் என நிரூபிக்க எத்தனிக்கிறாள்.கேட்ட கேல்வி என்பது நீ தாய் தான் என நிரூபிக்க அல்ல, பெண் என நிரூபிக்கவே. இந்த சின்ன வித்யாசம் கூட தெரியாம கதை சொல்கிறீர்.கூடவே கேள்வி கேட்டவனை கூமுட்டை என பரிகாசம் வேறு.நிச்சயம் அந்த கேல்வியை அந்த பெண்மணியிடம் கேட்டவர் ஞானவிஷயம் தெரிந்தவர் என அனுமானிக்கலாம்.உண்மையில் கூமுட்டை யாரெனில் தான் ஆண் என்றோ பெண் என்றோ அம்மணமாக காட்டாமல் விளக்கத்தெரியாதவர் தான் என்பதுகூட உமக்கு புரியவில்லை.சந்தேகம் இருந்தால் குருனாதரின் கேல்வி பதில் போயி பாரும்.அது தெரிந்தவர்கள் தான் “ஆண்குரு” என அடையாலப்படுத்திகொள்ளுபவர்கள்.குருனாதரை அம்மனமாக பார்த்துகிட்டா ஆண்குருண்ணு சொல்லிகிட்டு திரியிறீங்க?புரியுதா என்ன?.புரிஞ்சா உங்களுக்கு நல்லது.புரியாமல் போனாலும் எனக்கு எந்த சேதாரமும் இல்லை.
Subscribe to:
Posts (Atom)