Thursday, November 24, 2022

பர அறிவு

==========பர அறிவு======= நீ எங்கிருந்து வந்தாய் மகனே...எங்கே செல்கிறாய்.... நில்....கவனி....நிச்சயம் அதை நீ உணர்வாய்....அறியப்படவேண்டியது உன்னுள் இருந்தால் அது உன்னுள் ஏன் மறைந்து இருக்கவேண்டும்?...இருளான ஆன்மாவுக்குள் ஒளியான இறைவன் ஒளிந்திருப்பது எங்ஙனம்?...அதனால் சிந்திப்பாயாக...இறைவன் ஆன்மாவுக்குள் மறைந்து இருக்கமுடியாது......(1) அவனுக்குள் நீ இருக்கிறாயா அல்லது உன்னுக்குள் அவன் இருக்கிறானா?....மகனே நீ கவனி.....அவன் என்று சொல்வதற்க்கு இங்கு எவரும் இல்லை என கண்டாய்.....ஆனால் நீ இருக்கிறாய்.....ஆனால் உன்னையே நீ உருவாக்கி கொள்ளவில்லையே?....அப்படியெனில் நீ எங்கிருந்து வந்தாய் மகனே ...எங்கே போகிறாய்?.... எதற்க்கு வந்தாய் என அறிந்தால் நீ யார் என அறிவாய்....(2) தனியாக நீ வரவில்லை என காண்பாய்....எனில் தனிமை எப்படி உனக்கு உறுதுணையாகும்....தனிமையே உன் உயிர்ப்பு எனில் இயற்கையில் ஒன்றி ஏன் நீ பிறந்தாய்?...நில் கவனி...மகனே உன்னை நீ அறிவாய்...உன்னை நீ இழக்கும் போதே உன்னை நீ அறிகிறாய்......நீ இருக்கும் போது உன்னை நீ அறிவதில்லை....உன் தனிமையே நீ என உணர்வாய்..அதனால் உன் தனிமையை கொன்றுவிடு.....(3) உன் தனிமையில் நீ உன்னுக்குள் செல்கிறாய்... இருளுக்குள் உனக்கு என்ன இருக்கிறது தேடுவதற்க்கு?...இருளுக்குள் தேடுபவன் இறைவனை அடைவதில்லை கண்டாய்....ஒளிக்குள் தேடுபவனே இறைவனை காண்பான்... ஏனெனில் அவர் ஒளியினில் வசிப்பவர்....அவர் வசிக்கும் இடத்தினிலன்றோஅவரை காணமுடியும்?.அவரை அவர் இடத்தினில் தேடுவாயாக மகனே...(4) உன்னை சுற்றி கவனி...நீ எங்கிருக்கிறாய் என காண்பாய்...நீ ஒளியிலே இருக்கிறாய் ஆனால் அதை அறியாமல் கழிக்கிறாய்...உன் இருளே உன்னை அறியவொட்டாமல் செய்கிறது....ஆதலால் இருளான ஆன்மாவை விட்டுவிடு...ஒளியான இறையை கண்டடை...நில் மகனே கவனி....உயிரற்ற ஆன்மா உனக்கெதற்க்கு? ..உயிருள்ள ஒளியினையே அறிவாய் கண்டாய்....(5) உயிர்ப்புடன் இருப்பதற்க்கு உயிர்ப்பையே அணைவாய்...உன்னிலில்லா உயிர்ப்பை உன்னைச்சுற்றி காண்பாய்...நில் மகனே கவனி...நீ தனிமையில் இருக்கவில்லை...ஒளியிலே இருக்கிறாய்....உன் ஆன்மாவை விட்டுவிடு ஒளியினை காண்பாய்...உன்னை சூழ்ந்த உயிராதியை காண்பாய்...ஆன்மாவல்லாத உயிரொளியை காண்பாய்...ஆன்மா இல்லா உயிரது காண்..(6) உயிரான உயிரதுதான் ஓசையாகும்...உணர்வான நாதமுதம் அதுவேயாகும்...துறையான மரத்தினுக்கோர் ஏணியாகும்...சொல்லரிய சூட்சமது பரத்திலாடும்...பயிரான பயிர்வகைகள் பரத்திலாகும்...பரமென்றால் அம்பரமும் அப்பாலாகும்...அப்பரத்தின் படித்துறையை படித்துறையே...உறையாத மனமதுக்கு உரையதாக... உயிரான ஒருமொழியே ஓமதாமே...(7) நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

வாயுணவு

"வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்." "மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான். வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்." "மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது." ---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம்

ஆன்மிகம்

ஆன்மிகம் என்பது ஆன்மாவை புடம் போட்டு எடுக்கிறது... அல்லாம ஏதோ ஒரு சாதனை சொல்லகேட்டு பண்ணிகிட்டு இருப்பதல்ல.... தன்னுக்குள்ள இருக்கிற ஒவ்வொரு விஷயங்களையும் வெளிகொணர்ந்து பார்த்து அதை புடம் போட தெரியணும்... அப்படித்தான் ஆன்ம இயல்பு உண்டாகும்..... இல்லாம இருந்தா சமூகத்தின் நிழல் தான் ஆன்மாவாக இருக்கும். "தனித்துவம் வரவேண்டுமெனில் பல விஷயங்களை இழக்க துணிவு வேண்டும்.... தன்னை இழக்கும் போதே தன்னை அறியமுடியும்." ====== திரு. ரியான் அய்யா அவர்கள்

உள் என்பதேது ? வெளி என்பதேது ?

=== உள் என்பதேது ? வெளி என்பதேது ? === சமீபத்தில் ஒரு நண்பர் முகநூல் விவாதத்தினிடைடே “கடவுள் உள்ளே இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா?” என கேள்விமேல் கேள்வியாக கேட்டுகொண்டே இருந்தார்.  அவருக்கு நேரடியாக அதன் பதிலை சொன்னால் புரிந்து கொள்ளமாட்டார் என்பதினால் பதிலேதும் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். சொல்ல சொல்ல குழப்பம் தான் அதிகரிக்குமே ஒழிய புரிதல் என்பது வராது, ஏனெனில் உள்ளும் புறமும் அற்ற ஒன்றை உள் என சுட்டிகாட்டவா அல்லது வெளி என சுட்டிகாட்டவா?. மற்றொருமுறை இதே கேள்வியை ஒருவர் முன்னம் எழுப்பினார், அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன், “ஐயா நீங்கள் கடவுளுக்கு உள்ளாக இருக்கிறீர்களா, இல்லை கடவுளுக்கு புறம்பாக இருக்கிறீர்களா?” என. அவர் சற்று ஆலோசித்து விட்டு பதில் சொன்னார், "நாம் எல்லோரும் கடவுளுக்கு உள்ளாகத்தான் இருக்கிறோம்" என.அருமையான பதில் அவருடையது. அதற்க்கு மறுபடியும் சின்ன கேள்விகணை பாய்ந்தது, "அப்படியெனில் கடவுள் உங்களுக்கு வெளி அல்லவா?” .. அவர் பதில் சொல்லமுடியாமல் விழித்தார்.  கடவுளுக்கு உள்ளாக நாம் இருக்கிறோம் எனில், நமக்கு வெளியாகத்தானே கடவுள் இருக்கமுடியும், அல்லவா என்றேன். அவருக்கு நான் சொல்வதும் புரியவில்லை, அவர் சொன்னதும் புரியவில்லை. புரிந்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் என நம்புகிறேன். நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

சிந்திக்க

எத்தனை காலம் கிடந்தும் நின்றும் இருந்தும் விசாரித்தாலும் விசாரத்தின் வலையத்துள் வராத ஒன்று இங்கு இப்போதும் எப்போதும் உண்டு.அதுவே கோடி சூரிய பிரகாச வஜ்ர மாணிக்க முத்து, அது இருப்பவரின் கை சொத்து, கொடுக்கபட்டால் ஒழிய பெற்றுக் கொள்ளத் தகாததாய் இருக்கின்றது.

ஆன்ம தரிசனம்

==== ஆன்ம தரிசனம் ==== மனித குலத்தில் மூன்று வகையான பிறப்புகள் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது.  அதாவது 1. புண்ணிய பிறவி 2. பாவப்பிறவி 3.ஞானியர் பிறவி - அவரவர் இயல்பில் அவரவர் வாழ்கிறார்கள். ஒரு பாவி பாவம் செய்வதன் மூலம் நல்வாழ்வும், புண்ணியவான் புண்ணியம் செய்வதன் மூலம் நல்வாழ்வும் வாழ்கிறான்.      இதில் செயலின் விளைவு என்று பார்க்கும்போது பாவப் பிறவியாளர்கள் செய்கிற பாவத்தால் இப்பிறவியில் நலம் கிடைத்தாலும் மறுபிறவியில் உழைப்பவர்களாகவும் ஆன்மஅறிவு, பொதுஅறிவு இல்லாத அல்லது அறிவார்ந்த செயலை ஏற்று அங்கீகரிக்க முடியாத ஏழ்மைப் பிறப்பாக பிறந்து எந்த விடய ஞானமும் இல்லாமல் சேவகம் செய்து வயிறு வளர்த்தே சாவார்கள்.  சிலர் அங்கக் குறைபாட்டோடு பிச்சை எடுத்துச் சாவார்கள்.  இப்படி எந்த மகிழ்வும் இல்லாமல் பிறந்து சாகிற அனைவரும் சென்ற பிறவியில் பாவத்தால் சுகித்து வாழ்ந்தவர்கள்.    புண்ணியவான் பிறப்பு மரணத்திற்குப் பிறகு ஞானப்பிறவியாக அமையும்.      எனவே, ஒரு பாவப்பிறவி என்றால் அவன் செய்கிற பாவத்தின் விளைவைப் பெரும்பாலும் மறுபிறவியில்தான் அனுபவிப்பான்.  புண்ணியவான் செய்கிற பாவத்தின் விளைவை இப்பிறவியிலேயே அனுபவிப்பான்.  அதுபோல பாவப்பிறவியாளன் செய்த தர்மம் அடுத்த பிறவிக்கே வந்து உதவும். புண்ணியவான் செய்த தர்மம் இப்பிறவியிலேயே உதவும்.      இதையும் புராண வாயிலாக அறியலாம்.  பாண்டவர்கள் செய்த பாவமான சூதாட்டத்தின் விளைவை அந்தப்பிறவியிலேயே அனுபவித்துத் தீர்த்தார்கள்.  சகுனி செய்த பாவத்தை அடுத்த பிறவியில்தான் தீர்த்தான்.  துரியோதனன் செய்த தவம் பாவம் அவன் உயிரோடு உள்ளவரை பாதிக்கவில்லை.  மறுபிறவிக்குச் சென்றது அவன் செய்த புண்ணியமும் மறுபிறவிக்கே பயன்பட்டது.      நற்பிறவியாளர்கள் செய்கிற தர்மம் தன் தலையைக் காக்கும்.  தீவினையாளர் செய்கிற தர்மம் மறுபிறவியில்தான் உதவும்.  அதாவது நல்லவர்கள் செய்கிற நற்செயலின் விளைவு, தீயசெயலின் விளைவு உடனே அமுலுக்கு வரும். இதை திருக்குறளில் விரிவாகக் காணலாம்.  ஆனால், தீயபிறப்பு உள்ளவர்கள் செய்யும் பாவமும் புண்ணியமும் மறுபிறப்புக்கே பயன்படும். அடுத்து, பாவப் பிறப்பாளர்களுக்கு நற்போதனை செய்யவும் தர்மம் செய்யத் தூண்டவும் ஒரு பாவ வினை குருவால் மட்டுமே முடியும்.  புண்ணியவானின் போதனை பாவிகளுக்குக் கசப்பாகவே இருக்கும்.  அதேபோல புண்ணிய பிறவியாளர்களின் குருவும் போதனைகளும் ஒரு புண்ணியவானுக்கே பொருந்தும்.  அதேபோல ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்து போதிப்பார்.      குருவே சிவமென கூறினன் நந்தி என்பார் திருமூலர்.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! என்பார் அருணகிரியார்.  நமது தகுதி உயர்ந்து ஞானப்பிறவியாக நாம் இருக்கும்போது இறைவனே குருவாக வந்து போதிப்பார்.  அதுவே ஆன்ம தரிசனம் ஆகும்.  இந்த ஆன்ம வித்தையை இறைவன் உணர்த்திய பிறகு நமது வாழ்வு மாற்றத்திற்கு உள்ளாகிறது.  அதாவது சாதாரண மனிதன் மனதிற்காக மனமார்ந்த வாழ்க்கை நடத்துகிறான்.  ஆனால், ஆத்மவித்தை கைகூடியதும் ஆத்மார்த்த வாழ்க்கை வாழ யோகிகள் தயாராகின்றார்கள்.  இதுவே தலையாய நெறியாகும்.      உலகில் அனைத்து நெறிகளும் மனதிற்காக வாழ்வதையே பெரிதாகப் போற்றுகிறது.  ஆனால், இந்தியாவில் மட்டுமே ஆத்மார்த்த வாழ்வை அறிமுகப்படுத்தினார்கள்.  இதையும் புராண வாயிலாக அறியலாம்.  புராணம் உண்மையா?  பொய்யா?  என்கிற ஆராய்ச்சி தேவையற்றது.  அது ஒரு சிறந்த வாழ்க்கை நெறியைப் போதிப்பதால் உதாரணம் காட்டுகிறேன்.      ராமனைப் போல வாழ வேண்டும் என்றும் கண்ணன் காட்டிய நெறிப்படி வாழ வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்வதைக் கேட்டதுண்டு.  காரணம் கண்ணனின் வாழ்க்கை முறையில் முரண்பாடாகக் கண்டதே காரணம்.  அது தவறு.  கண்ணனின் வஞ்சகம், பொய், கோபியர் உறவு, இப்படி உலகில் பாவப்பிறவியர்கள் செய்கிற குற்றத்தைக் கண்ணன் செய்ததால் கண்ணனைப் போல வாழக் கூடாது என வாதிடுகிறார்கள்.  அதற்குச் சமாதனம் கூற கண்ணன் ஒரு கடவுள், அவர் எப்படியும் வாழலாம், அது நமக்குத் தகாது என்கிறார்கள்.  அதுவும் தவறு, கண்ணனைப் பெரிய யோகியாகப் பார்க்கிறோம். கண்ணன் வாழ்ந்த வாழ்க்கை முறையும் வரவேற்க்கப்படுவதே. அவர் ஆத்ம வித்தையைப் புகட்ட ஆத்மார்த்த வாழ்வு வாழ்ந்தார்.  கண்ணனைப் போல வாழப்பழகுவதே மரணமில்லா பெருவாழ்வு ரகசியம் ஆகும்.    தனிமனிதன் தனது மனதின் விருப்பத்திற்காக ஒரு கொலை செய்தால் அது பாவம்.  அதே சமயம் சட்டம் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனைக்கொலை செய்தால் அது பாவம் இல்லை.  அதுபோல மனவாழ்வு நடத்தும் வரை தனக்குள் நிகழும் தீவினை காரியப்படும்.  ஆனால், ஆன்ம வித்தை கைகூடிய பின் தனது தீவினை பொசுக்கப் பட்டு விடும்.  எதிரே இருப்பவர் தீவினை காரியப்படும்.  ஒரு காவல் துறை அதிகாரி சட்டத்தைக் காப்பாற்ற ஒருவனைச் சுட்டுக் கொலை செய்தால் அது அந்த அதிகாரியின் தீவினை அல்ல. கொலையானவன் தீவினைப்படி அந்த அதிகாரி கையால் சாகடிக்கபடுகிறான்.  அதேபோல ஆத்மவித்தை பயின்றுவிட்டாலும் பாவங்கள் நடக்கும் ஆனால், அதற்கு அவன் பொறுப்பாளி ஆக மாட்டார்கள்.      இந்த ஆத்ம வித்தையை இந்தியாவில் காலம் காலமாக வாழ்ந்து காட்டினார்கள்.  அதற்கு உதாரணம் கண்ணனின் வாழ்வாகும்.  ஆனால், இந்திய மக்கள் பலரும் இதைத் தவறாகப் புரிந்து கொண்டதாலோ, அல்லது ஆன்ம அறிவுக் குறைந்தாலோ, இந்த வித்தை இந்தியாவிலேயே புதையுண்டு கிடக்கிறது.  இதுதான் சரியான நெறி, இதைக் கடைப்பிடித்தால் மட்டுமே கடவுளறிவு பெற முடியும்.  ஆன்ம வித்தை வந்துவிட்டால் உலக இன்பம் கெட்டு விடும்; அதனால் வாழ்வே சூனியமாகி விடும் என மிரண்டு பயப்படுவர் பலரைப் பார்க்கலாம்.  இதுவே மாபெரும் முட்டாள்தனம்.      மனிதன் மனதின் மூலம் எப்படி இன்பங்களைச் சுவைக்க முடியுமோ அதுபோல ஆத்மவித்தை தெரிந்த பிறகும் உலக இன்பத்தைச் சுவைக்க முடியும்.  ஆனால், ஒரே ஒரு வேறுபாடு மட்டும் இருக்கும்.  மனவாழ்வில் தனக்குள் வாழும் தீவினையே இன்பமாக தோன்றும். உதாரணமாக ஒரு மாம்பழம் சாப்பிட ஒரு மனவேந்தன் ஆசைப்படுகின்றான்.  தன்னிடம் மாம்பழம் இல்லை.  அடுத்தவர் தோட்டத்தில் திருடி மாம்பழம் சாப்பிட்டான்.  இவனது ஆசைதீர்ந்தது, இன்பம் வந்தது.      ஆனால், திருடிய பாவம் உள்ளே இருப்பில் பதிவாகும் அதுபோல ஆத்மார்த்த வாழ்வு வாழுபவரும் மாம்பழம் சாப்பிட விரும்புகிறார்.  அவர் திருடமாட்டார்.  அதேசமயம் தமது புண்ணியத்தால் தனது தேவைக்கு மேல் மாம்பழம் வைத்திருப்பவர் தானே முன்வந்து தேடி மாம்பழம் கொடுப்பார். இவர் ஆசையும் தீர்ந்தது.  ஆனால், உழைக்காமல் வந்தது என்ற பாவம் ஆத்ம யோகியைப் பாதிக்காது.      பாரதப் போரில் கண்ணன் பாவமான காரியத்தில் ஈடுபடுகிறான்.  காரணம் அவரவர் தீவினைகள் கண்ணன் முன் நிற்கும் போது காரியப்படுகின்றது.   துரியோதனன் செய்த தீவினைகள் காரணமாக கண்ணன் தனது படைபலத்தைக் கொடுத்து அவனிடமும் உறவாடி அன்பு செலுத்தி அவன் மரணத்திற்குக் காரணமாக இருந்தார்.     அதுபோல கர்ணன் செய்த தீவினையால் அவன் மரணப்படுக்கையில் உள்ளபோது, தர்மதேவதை அவனைக் காத்துக் கொண்டிருந்தது. கண்ணன் மாறுவேடத்தில் போய் சூதாக அவனிடம் பொய் சொல்லி செய்த புண்ணியத்தைக் கவர்ந்து வந்தான்.      அதுபோல குந்திதேவி செய்த பாவத்திற்குக் குந்தியை வைத்துத் தனது பிள்ளையின் மரணம் தனது வரத்தால் ஆகும் படி பெற்ற தாயே மகனை கொல்வது போல கர்ணன் சாவுக்கு குந்திதேவியைக் காரியப்படுத்தினான் கண்ணன்.      அதேசமயம் பாஞ்சாலி செய்த நல்வினைக்குத் துகில் உரியப்படும் போது  உதவி செய்து காரியப்படுத்தினான் கண்ணன்.     அர்ஜுனனுக்குச் சாரதியாக வந்து உதவினான்.  இப்படி அவரவர் இயல்புக்குப் பலன்கள் கொடுப்பது ஆத்மார்த்த வாழ்வின் அடிப்படை ரகசியமாகும்.      மனிதனின் வாழும் தீவினைகள் அம்மனிதனைத் தன் ஆத்மாவை அறியவிடாமல் தடுக்கிறது.  இதனால்தான் ஆத்மானுபவம் பெற்ற ஞானிகள் தொடர்பை அதிகமாக வைத்திருந்தால் அது பாவப்பிறவியாக இருந்தாலும் சரி புண்ணியப் பிறவியாக இருந்தாலும் சரி ஆத்மதரிசனம் உண்டாகும்.     நாம் ஒரு பாவப்பிறவி; நமக்கு ஆத்மீகமே ஒத்து வராது என யாருமே சலிப்படையத் தேவையில்லை.  அனைவருக்கும் அந்த வாய்ப்பு உள்ளது. அதுபோல அனுபோக இன்பம் எதுவும் குறைந்து போகாது; இதைவிட அதிகமாகவே இன்பத்தை ஆத்மார்தர்கள் அனுபவிக்க முடியும். இதையும் வரலாற்றின் மூலமாக நன்கு அறியலாம்.     மனித மனம் உடல்மூலம் எப்படி இன்பத்தை அறியத் துடிக்கிறதோ அதேபோல நமது ஆன்மாவும் இந்த உடல் மூலம் இன்பம் காண முயற்சி செய்கிறது.  இந்த மனம் இந்த உடலில் நீண்ட ஆண்டுகள் உயிர்வாழ விரும்புகிறது.  அதுபோலவே நமது ஆன்மாவும் இந்த உடலில் பல நூறு ஆண்டுகள் வாழ விரும்புகின்றது.  மரணத்தின் போது இந்த உடலை விட்டு மனம் வெளியேற மறுத்துத் துடிக்கிறது.  அதேபோல் ஆன்மாவும் வெளியேற மறுத்துத் துடிக்கிறது.  ஒரே வேறுபாடு மனதிற்குக் கடவுளைப் பிடிக்காது;  ஆன்மா கடவுளை நேசிக்கிறது.  மற்றபடி வாழ்வு முறையில் மாற்றமே இல்லை.      எமக்கு ஆன்மரகசியம் புலப்படாமல் இறைவனை கண்டதும் சில கேள்விகளை ஆதங்கத்தோடு கேட்டோம். "தந்தையே! பணத்தையே கையால் தொடாமல் வாழ்ந்த நாம் வலுக்கட்டாயமாகத் தொட வைக்கைப்பட நெருக்கடி ஏன் வந்தது? நீண்ட மௌனம் இருந்த நாம் மௌனம் களையும் சூழ்நிலை ஏன் வந்தது? பொய் பேச விரும்பாத எம்மைப் பொய் பேசத் திணித்தது எது? ஏன் இந்த கொடுமைகள்? இவற்றை எமது வாழ்வில் திணித்தது எது? ஏன் இந்த கொடுமைகள் எமது வாழ்வில் குறிக்கிட்டன?" - என கேட்டோம்.  அதற்கு சத்தியமாக உரைத்த வாசகம் இதுதான்: "அவரவர் கர்மவினைகள் உனக்கு முன்னே நிறுத்தப்படும்போது புண்ணியசீலர்கள் பணத்தைக் கொடுத்தார்கள்.  பாவிகள் உன் பணத்தை பிடுங்கிப் போனார்கள்.  கொடுத்து வாழ ஆசைப்பட்டவர்கள் கொடுத்துப் போனார்கள்.  விலக விரும்பியவர்கள் வெறுத்துப் போனார்கள்.  இது அவரவர் கர்மவினை. இதில் உனக்கு எந்தப் பாவமோ புண்ணியமோ இல்லை. இது உனக்கு அருவருப்பாகத் தோன்றினால், வெளி இடங்களுக்குப் போவதை நிறுத்திவிட்டு தேடி வருபவர்களைக் குறைத்து தனித்து வாழ்வும்" என்றார்.  எமது சந்தேகம் தீர்ந்தது.      எனவே, குருசேத்திரக் கண்ணன் கோபியர்களோடு லீலை செய்தது, தந்தை கம்சனை கொன்றது, துரியோதனாதிகளைக் கொல்ல காரணமானது அனைத்தும் அவரவர் கர்ம வினைகளோடு விளையாடியதே தவிர கண்ணனுக்கு எந்தப் பாவமும் சேரவில்லை.  அதேபோலக் கணணன் வாழ்ந்து காட்டியதுபோல வாழ்ந்தால் என்றும் அமரத்துவம் அடைய முடியும்.      மகாபாரதக் கண்ணனைப் போன்று பலரும் இன்று வாழ்கிறார்கள்.  அவர்கள் பாவப்பிறவியா? புண்ணியப் பிறவியா?  ஞானியர் பிறவியா? என யாராலும் முடிவு செய்ய முடியவில்லை.  உதாரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்வில் நான்கில் ஒரு பங்கு வாழ்வைத் தியாகம் செய்தார். தனது நிலங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார். ஆனால், சில சமயங்களில் சாதாரண மனிதனைப் போல கோபப்பட்டு உள்ளார்.  அவரது கோபத்தால் ஒரு கொலையே நடந்தது.  ஆனாலும் அவர் ஆத்மார்த்த வாழ்வு வாழ்ந்ததால் அவர் மறைவிடத்தில் பல லட்சம் பேர் இன்று அன்னதானம் சாப்பிடுகிறார்கள்.  சிலரது வாழ்வில் குலதெய்வமாகப் போற்றப்படுகிறார்.  அதுபோல சந்தனக்கட்டை வீரப்பன் வாழ்விலும் நிறைய வீரமும், அதற்குத் தக்கபடி ஈரமும் மனதில் இருந்து உள்ளது.  வீரப்பன் தேர்வு செய்த வாழ்வு முறை தவறாக இருந்தாலும் அவனின் வாழவி ஆத்மார்த்தப் பயண வாழ்வாக எண்ண வாய்ப்பு இருக்கிறது.  இன்றும் நூறு வருடத்தில் தமிழகத்தின் பெரிய காவல் தெய்வமாக வீரப்பன் விளங்குவார் என்பதை சூழ்நிலையை வைத்து கணிக்க முடிகிறது.      ஒன்று மட்டும் நிச்சயமாக புரிகிறது.  தனது மறைவிற்குப் பிறகு பல லட்சம் மக்கள் தெய்வமாக போற்றப்பட்டால் அந்த ஆன்மா மிக உயர்வான புனிதமான ஆன்மாவாகும்.  அந்த ஆன்மசக்தி இருந்தால் தான் மறைவிற்குப் பிறகும் பல கோடி மக்களை ஈர்த்து ஆட்கொள்ள முடியும்.      மனிதனின் தீவினைகள் அழியாதவரை மனிதனுக்குள் ஆன்ம அறிவு உதயம் ஆகாது.  ஆன்ம அறிவு வராதவரை கடவுள் தரிசனம் கிடைக்காது. எனவே,  தீவினைகளை அழிக்க ஆன்மவித்தை பயிலவும். ஆன்ம வித்தையை ஆத்மார்த்த வாழ்வு வாழ்பவரே வழிகாட்ட முடியும்.  எனவே, எப்பேர்ப்பட்ட தீவினையாளரும் பயப்படப் தேவையில்லை. விடுதலையை நோக்கி எந்நேரமும் சிந்தித்துத் தெளிந்தால் இறலயம் உண்டாகும்.  இறைலயம் தொடர்ந்தால் ஆன்மவித்தையை இறைவன் போதிப்பான்.      சிவத்தை பேணில் தவத்திற்கு அழகு என்பார் மூதாட்டி ஔவை.  அதுபோல பாவப்பிறவியானாலும் சிவலயம் பெற முயல்க.  இது நல்ல தருணம். இடையறாது எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தை பட்டாலும் முக்தர் இருப்பது மோனத்தே என்பார் பட்டினத்தார்.   பிணத்தடத்தே இருப்பினும் பிறப்பு அறுத்து இருப்பவரே என்பார்.  அதாவது தகாத செயலைச் செய்யும்போதும் சிவலயத்தில் வாழ வேண்டும் என்பதே சாகக்கல்வியின் ரகசியமாகும்.      ஒவ்வொரு மனிதனும் சாகாக்கால் அறிந்து, வேகாத்தலை அறிந்து, போகாப்புனல் அறிந்து மரணத்தை விரட்ட வேண்டும்.  சாவே போ என்று கட்டளை இட்டால் கூற்றம் குதித்தலும் கைகூடும் என்ற வள்ளுவரின் வாக்கு பொய்யா மொழியாகும்.  சாவே போய்விடு எனக் கட்டளையிடும் தகுதி எமக்கு உள்ளது.  உங்களுக்கும் தைரியம் உண்டாக, நீங்களும் எமனை எட்டி உதைக்க விருப்பமா?  இன்றே சிவலயத்தில் இணைந்து இன்பம் காணுங்கள்.  மரணத்திற்கு மரணம் கொடுப்போம்.   வாருங்கள்; வெற்றி நிச்சயம். Courtesy:  "சாவே போ" புத்தகம்.

பீர்முஹம்மது ஞானமணிமாலை

ஈயில்லாத் தேனை யுண்டே யிரவினிற் றுயிலு மாந்தர் காயில்லா கனிகள் கண்டே னென்றுரை கழற வேண்டாம் பாயில்லாக் கப்ப லோடிப் பறக்குமுன் கலிமா தன்னில் லாயிலா ஹாவை நீக்கி நாலிலொன் றறிந்து கொள்ளே (பீர்முஹம்மது ஞானமணிமாலை

அரபு எழுத்தும் உடலும்

மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் சுட்டப்படுகின்றன.இதை இல்முல் ஹர்ப் அதாவது அட்சரங்களின் ஞானம் என்பார்கள்.சூபி ஞாநிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள்.செய்குல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு முதல் தக்கலை பீர்முஹமது ஒலியுல்லாஹ் வரை இக்கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவர்களே.இன்சானை குறிக்கும் இந்த ஹர்பில் முதலாம் எழுத்து அலிப் என்பது புருவமத்தியாகும்.பே எனும் இரண்டாம் எழுத்து வலப்புருவமாகும்.தே எனும் மூன்றாம் எழுத்து இடப்புருவமாகும்.ஸே எனும் எழுத்து நெற்றியாகும்.ஜீம் எனும் ஐந்தாம் எழுத்து தலையாகும்.ஹா எனும் ஆறாம் எழுத்து வலத்தோளாகும்.ஹாஆ எனும் ஏழாம் எழுத்து கண்ணாகும்.தால் எனும் எட்டாவது எழுத்து வலது முழங்காலாகும்.த்தால் எனும் ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்.றா எனும் பத்தாவது எழுத்து வலது விலாவாகும்.ஷ எனும் பதினொராம் எழுத்து இடது விலாவாகும்.ஸீன் எனும் பன்னிரெண்டாவது எழுத்து வலது மார்பாகும்.ஷீன் எனும் பதிமூன்றாவது எழுத்து இடது மார்பாகும்.ஸாத் எனும் பதினாந்காவது எழுத்து வலது செவியாகும்.ழாத் எனும் பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்.தொ எனும் பதினாறாவது எழுத்து வலது கரண்டையாகும்.ளொ எனும் பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்.ஐன் எனும் பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்.கைன் எனும் பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்.பா எனும் இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்.காப் எனும் இருபத்தொன்றாவது எழுத்து இடது புறங்கையாகும்.ஹாப் எனும் இருபத்திரெண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்.லாம் எனும் இருபத்து மூன்றாம் எழுத்து தொடைப்பொருத்தாகும்.மீம் எனும் இருபத்துநாந்காம் எழுத்து நெஞ்சு முதல் மூளை வரை ஆகும்.நூன் எனும் இருபத்தைந்தாம் எழுத்து உயிரின் நிலையாகும்.வாவ் எனும் இருப்பத்தாறாம் எழுத்து தொப்புளாகும்.ஹ எனும் இருப்பத்தேழாம் எழுத்து இருதயமாகும்.லாமலிப் எனும் இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்.அம்ஸ் எனும் இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்.அரபு எழுத்துக்கள் மொத்தம் இருபதொன்பது.யா எனும் முப்பதாவது எழுத்து .இதை சூக்கும எழுத்து என்பார்கள்.இந்த முப்பது எழுத்தின் இருப்பிடம் தாந் சிர்ருல் இன்சாந் ஆகும். அங்கம் எங்கும் அரபெழுத்து அமைந்திருக்குது  ! ஆதி ரப்பின் அற்புதங்கள் மறைந்திருக்குது  ! நுக்கதது தலையாச்சி ! நீண்ட அலிபு உடலாச்சி ! ஐந்து பூதங்களின் சங்கமத்தின் மேனியாச்சி ! மறைந்திருக்கிறான் மன்னன் மறைந்திருக்கிறான்! மண்ணு விண்ணு மாளிகையில் ஒளிந்திருக்கிறான்!

இல்

உச்சி தனிலிருந்து உருவாகி உச்சி தனிலிருந்து உருவாகி அலிபாகியே நடுவே பச்சி தனில் தரித்து பலமாகவே இல் என்றிருந்துகொண்டு வெச்சிதனை கடந்து இல்லல்லாஹூ என எழும்பி நின்று அச்சரமானதுவை அருளாக தரும் திருக்கையிதுவே             ~(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானக்குறம்

அட்சர குரு

#அட்சர குரு தூக்குங் காபுஹே துடரு மேயுமைன் சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே பார்க்கு #மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப் பழக்க #மலிபுலாமீ மாகுமே காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு மெழுத்தைக்காணு முனக்குள்ளே ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார். ===#பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்