Thursday, November 24, 2022
குரு பூர்ணிமா
======குரு பூர்ணிம=====
பூர்ணிம என்பது பூரணத்துவம் ஆனது என பொருள். இங்கே குரு என்பவரின் விளக்கம் கூட தவறாக விளங்கி வருகிறது.எது பூரணமானது?, பிரம்மம் பூரணமாக விளங்கி கொண்டிருக்கிறது.அப்போது எது குருவாக மலர்ந்துள்ளது?,பிரம்மமே.ஆகையால் தான் குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்று சொன்னார்கள்.
இங்கே ஞானியர்கள் நிகண்டு 'குரு' என்பதுக்கு என்ன பொருள் தரும்?, ' கு ' என்றால் அஞ்ஞானம் ' ரு ' என்றால் பிரகாசம். அப்போது அஞ்ஞான பிரகாசம் என கொள்ளலாமா? பிரகாசம் பின்னால் நிற்க அஞ்ஞானம் அதற்கு முன்னால் நிற்பது எவ்விதம்? ஒரு வேளை சீடனுக்கு பொருள் சொல்கிறோம் என்றால் ஒத்துக் கொள்கிறேன்,ஆனால் குருவுக்கு அஞ்ஞானம் முன்னால் வருவது எப்படி?
தமிழ் கடவுள் முருகன்,அவரது மற்றொரு பெயர் ' குஹ ', ' கு ' என்றால் அஞ்ஞானம் என கொள்ளலாமா? குஹன் என்றால் அஞ்ஞான சொரூபன் என்றா பொருள்?,தவறாக புரிந்து கொண்டு உள்ளதாக தெரிகிறது அல்லவா?" தவறாக தான் குருவுக்கு பொருள் கொண்டுள்ளோம்.
குஹ என்றால் பிரம்ம சொரூபன் என பொருள், குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள்.' கு ' என்றால் குஹ்யம் என பொருள்,அதாவது விளக்க அரியது என பொருள். அதாவது மறை பொருள் ஆனது, அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டது என பொருள். குரு ஆனவர் அந்த பிரம்ம சொரூபத்தை பிரகாசிக்க செய்கின்றவர் என பொருள். அதாவது குரு என்றால் பிரம்ம பிரகாசம் என பொருள் விளக்கம்.
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்
===== குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் =====
“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~ இயேசு கிறிஸ்து”
"பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்"..
-- இயேசு கிறிஸ்து
இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர். நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதற்கே குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள்.
குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன.
உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை. சித்தர்கலை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம்.
நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது.
அதனாலேயே பக்குவ நிலை பேதம் குணபேதம் சுபாவ பேதம் கருத்து பேதம் கொட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது.
ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது,ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்ரத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர்.
இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன். அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை.குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை.
இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர்.
குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிராஞ்சீவிதத்துவம் அது.குரு வாழ்க, நற்றாள் துணை.
”சத்யம்-தர்மம்-ப்ரக்ஞானம்” அதாவது ‘வாய்மை-அறம்-அறிவுணர்வு’ என மூன்று. இவையே பாதுகை. ஆன்மீக பயணத்தின் போது சீடனை ரட்சிப்பட்து இதுவே. இதுவே அனாதி காலம் முதல் குரு வழி குரு வழி என சீடர்களுக்கு வந்து கொண்டிருக்கும் மகத்தான பரம்பரை. இவையே குரு சொரூபம் என அறியவும். குருவை ஆன்மீக உச்சாணிக்கு ஏற்றியதும் சீடனை வழி நடத்துவதும் இதுவே.
“இந்த பாதுகையை பயணத்தில் அணி்ந்திரா குருவும், அந்த காலணியை போற்றாத சீடனும் பொய்”
=========🌺👣🌺========
குருவிற்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்
=========🌺👣🌺========
-- நன்றி. 🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺
ஆண்டவர் மறந்த "அர்" - "இற்" - "இர்"* ==
====== *ஆண்டவர் மறந்த "அர்" - "இற்" - "இர்"* =====
'ஓர்' என்பதில் வரக்கூடிய 'ர்' ஓசையும், 'ஒரு' என்பதில் வரக்கூடிய 'ர்' ஓசையும் வேறு வேறு.ராமனுக்கு வரக்கூடிய "ர்" (IRU) உச்சரிப்பும், கா"ற்"று-க்கு வரக்கூடிய "ற்" (ITRU) உச்சரிப்பும் வேறுவேறு. அதேபோல "ற்" கூட ஒரு அகரம் புணரும் போது அது உயிர்மெய் ஆகுது, அப்படி வரும்போது "TRRA " என்று உச்சரிக்கணும். உயிர்மெய் எழுத்தாக வரும்போது tra, traa, tre, tree உச்சரிப்புக்கு பதிலாக, நாம் rra, rraa, rri, rrirri னு உச்சரித்து கொண்டு இருக்கிறோம்.
TATA Motors-ஐ தமிழில் எழுதும் போது "டாடா" (daa daa) என்று எழுதுவோம். இப்படி தமிழ் எழுத்து உச்சரிப்பில் சில குளறுபடி இருக்கிறது, "அர்" -- "இற்" -- "இர்" -- இதனை ஒரே மாதிரியாகத்தான் நாம் உச்சரித்து கொண்டு இருக்கிறோம்.
காற்று-ன்னு சொல்லும்போது அதில் வரக்கூடிய "ற்" Itru னு சொல்றோம், அதற்கு அடுத்த எழுத்தாகிய "று" வை Tru என்று சொல்லுறோம். முதல் எழுத்தில் வரும்போது அதை "RU" என்றும், நடுவில் அல்லது கடைசியில் வரும்போது "ITRU" என்று சொல்றோம். இதற்கு எந்தவித சுத்த இலக்கணம் வழங்கப்படவில்லை. ஆனால் "அர்" "இற்" "இர்" க்கு இந்த குழப்பம் இன்னும் இருக்கு.
தமிழில் எழுத்தாக ஒரு நடைமுறையிலும், உச்சரிக்கும் போது வேறாகவும் உள்ளது. காலப்போக்கில் அது மறந்துவிட்டது. காற்று என்பதனை KaaTru என்று சொல்றோம், KAARRU-னு சொல்வதில்லை.
இதேபோன்று ந-ம-சி-வா-ய என்று எழுதி இருப்பாங்க, உச்சரிக்கும்போது "சி" (CHI) யை "SI" என்று உச்சரிப்பார்கள். சி-வா-ய-ந-ம என்று "சி" முதலில் வரும்போது "SI" (SIVAYANAMA) என்று சொல்வார்கள் "CHIVAYANAMA" னு சொல்ல மாட்டாங்க.
சாலை ஆண்டவர் (ங) Nga, (ஞ) Jaa, (ந) Ndha இந்த மூன்று எழுத்திற்கு மட்டும் விளக்கம் கொடுத்திருக்கிறார், ஆனால் "அர்" - "இற்" - "இர்" இந்த மூன்று எழுத்திற்கும் விளக்கம் கொடுக்கவில்லை.
இந்த எழுத்துதான் "அர்" - "இற்" - "இர்" எழுத்தக்களின் மூலம் அதாவது இந்த படத்தில் இருக்கிறபடி "அர்" (RRA) இதுல வலது பக்கம் ஒரு துணைக்கால் போட்டா "இர்" (RA) ன்னும் , இதுல கால் போடாம ஒத்த கொம்பு மாதிரி போடும்போது அதை "இற்" (TA) என்று சொல்லுறோம். இதிலேயே புள்ளி வச்சா "ற்". மூன்றுக்கும் இப்படி வித்தியாசம் இருக்கு ஆனால் சாலையில் இப்படி இல்லை.
மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற இடம்
மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற இடம்
சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலம் இடம் சத்தி சிவமுமாக வுடையது மருட்டேகம். வலம் சந்திரனாகிய சத்தியாயும் இடம் சூரியனாகிய சிவமாயு மிருப்பது அனுபவம். திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும் வலம் இடமாகவும் அனுபவந் தோன்றும்.(வள்ளலார்).
ஈராறு பெண்கலை எண்ணிரண்டாண் கலை பேராமற்புக்கு பிடித்து கொடு வந்து நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தமாமே (திருமூலன்)
இடை நாடி என்பது சுஷும்னாவுக்கு இடமாக துவங்கி வலது நாசி வழியாக இயக்கமுறுவது(ஹேரண்ட சம்ஹிதை)
அப்படீண்ணா வலது நாசியில போறது சந்திரன்,இடது நாசி வழியா போறது சூரியன்.அது மட்டுமல்ல, துவங்குறது வலது இடது விதைகளில் இருந்து. அது தான் திருமூலர் சொல்ர “மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற” இடம்.பெண்களுக்கு “பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற” இடம்.குதம் அல்ல.விதை அறு பட்டவனுக்கும் சூல் அற்ற பெண்களுக்கும் குண்டலினீ ஆகாது.(ரியான்)
சிந்திக்க
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்
பஞ்சாட்சரம்
பஞ்சாட்சரத்தை தின்பது எப்படியெனில் விளக்கம் மூலரே தருகிறார். "நமவெனும் நாமத்தை நாவினில் ஒடுக்கி சிவவெனும் நாமத்தை சிந்தையுள் ஏற்றி....” இப்படி ஒரு மந்திரம் வரும்... இதைத்தான் மென்று தின்னுதல் என்பார்கள்... அஞ்செழுத்துக்களை மூன்றெழுத்தாக்கி , மூன்றை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்றாக்கி ஒடுக்குவது....
பஞ்சாட்சர நாவினில் சொல்லாமல் சொல்லிகொண்டிருப்பதையே மெல்லுதல் என்கிறார், நாவிம் வாயும் அசைந்துகொண்டிருக்கும்... இப்படி மென்று மென்று நம என்பது முதலில் ஒடுங்கும்.... ஒடுங்கும் என்றால் நாவினில் இருந்து விட்டு போகும்... சிவய மட்டும் சிந்தையுள் இருக்கும்.... இப்படி ஜெபம் தொடர தொடர சிவய என்பது சொல்லி சொல்லி சிவ சிவ என ஒடுங்கும்.... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக “மென்று திங்கலாம்”...
--- திரு. ரியான் ஐயா அவர்கள்.
உயிரினங்கள் தோற்றம்: நால்வகை யோனி எழுவகைத் தோற்றம்
உயிரினங்கள் தோற்றம்:
நால்வகை யோனி
எழுவகைத் தோற்றம்
--------------------------------------------------------
பிரபஞ்ச சிருஷ்டி என்பது நம் அறிவுக்கெட்டாத , எப்போதும் வியப்பூட்டும் மாபெரும் புதிராகவே இருக்கிறது.
கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல்லாயிரக்கணக்கான தீப்பொறிகள் சிதறி வெளிப்படுவதைப் போல, எல்லையற்ற அழிவற்ற பிரம்மத்திலிருந்து இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சமும், இதில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களும் தோன்றின.
இப்பூவுலகில் புல் பூண்டு முதலான தருக்கினத்தைப் படைக்கத் தொடங்கி,யானை முதல் எறும்பு கடை வரையிலான எண்பத்து நான்கு நூறாயிரம் ( 84 இலட்சம்) உயிர்க் கோடிகளைப் பரம்பொருள் படைத்தது.
இங்கு 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகை மாத்திரமே( Variety)அன்றி மொத்த கணக்கு இல்லை.
மீன் என்ற ஜீவராசியை எடுத்துக் கொண்டால் மீன்களில் எத்தனை வகை இருக்கிறது.ஆக 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகைப்பாடு மட்டுமே.
நால்வகை யோனி
--------------------------------------
இம்மண்ணுலகில் தோற்றமாயிருக்கும் ஜீவ ராசிகள் அனைத்துமே புழுக்கம், வித்து, அண்டம் ( முட்டை), சினை( கருப்பை) எனும் நால்வகை யோனி ( பிறப்பிடம்) வழியாக உண்டாகியிருக்கின்றன.
1.புழுக்கத்தில் ஈரும், பேனும், புழுக்களும் உண்டாயின.
2.வித்திலிருந்து புல் பூண்டு முதல் செடி கொடிகள்,பெரிய ஆலமரம் வகையிலான தாவர இனங்கள் தோன்றின.
3.முட்டை(அண்டம்)யிலிருந்து எறும்பு, பல்லி, பாம்பு, பறவைகள், மீன், தவளை,ஆமை, முதலை முதலானவை பிறக்கின்றன.
4.சினையென்னும் கருப்பையில் இருந்து எலி,பூனை தொடங்கி ஆடு,மாடு,புலி, சிங்கம், மிகப் பெரிய யானை வரையிலான மிருகங்களும், மிகவும் உயரிய படைப்பான மனிதனும் பிறக்கின்றான்.
எழுவகைத் தோற்றம்
-----------------------------------------------
இந்த நால்வகை யோனியிலிருந்து உண்டாகின்ற ஜீவ ராசிகளின் தோற்றங்கள் ஏழு வகைப்படும்.
பிறப்பிடம் ( யோனி) வைத்து ஜீவ ராசிகளை நான்காகப் பிரித்த நம் முன்னோர் அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர்.
1. தருக்கினம் -புல் பூண்டு,செடி கொடிகள், மரங்கள் முதலானவை.
2. நீர் வாழ் இனம்- மீன், தவளை,முதலை,திமிங்கிலம்முதலானவை.
3.ஊர்வன-எறும்பு, அட்டை, பாம்பு,பல்லி முதலானவை.
4. பறவையினம்- ஈ,கொசு, புறா ,பருந்து,கழுகு முதலானவை.
5. விலங்கினம்: எலி ,பூனை, நாய், ஆடு ,மாடு,புலி, கரடி புலி ,சிங்கம் ,யானை முதலானவை
.
இவற்றோடு 6. மனிதர் -7. தேவரென உயிரினங்களின் தோற்றத்தை எழுவகைத் தோற்றம் என்றனர்.
மனிதப் படைப்பின் உன்னதத்தை உணர்த்தவே நால்வகை யோனி,எழுவகைத் தோற்றம் எடுத்து வைக்கப் பெற்றது.
உயிரினங்களின் தோற்றத்தைக் கூர்ந்து கவனித்தால், இறைவன் ஜீவ ராசிகளைப் படிப்படியாக படைத்த பின்னரே, மனிதனை மட்டுமே மகா உன்னதத்தில் வைத்து படைத்துள்ளான் என்பதும், ஏனைய ஜீவ ராசிகள் அனைத்தும் மனிதனுக்கு ஊழியம் செய்வதற்காகவே படைக்கப் பெற்றுள்ளன என்பதும் தெரிய வரும்.
நால்வகை யோனி எழுவகைத் தோற்றத்தில் வைத்துப் படைக்கப் பெற்ற உயிரினங்கள் அதனதன் உடல் வளர்க்கும் அளவிற்கு உணவு தேட, ஜீவிக்க, இனவிருத்தி செய்ய ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அறிவுத் தோற்றத்தையும் அதற்குள்ளே வைத்து இறைவன் படைத்துள்ளான்.
உற்றறிவு ( ஸ்பரிசம்), சுவைத்தல் ( ரசம்), நுகருதல்(கந்தம்), பார்த்தல் (ரூபம்), கேட்டல் ( சப்தம்) எனும் ஐந்தறிவோடு பகுத்தறிவெனும் ஆறாவது அறிவோடு- ஆறறிவு பொதிந்து வைத்து, மகா உன்னதத்தில் வைத்து மனிதனை இறைவன் படைத்தான்.
அதனால் தான் சிவானந்த போதம் என்னும் சாத்திரம்,
"நாலு வகை யோனியிலும்
எழுவகைத் தோற்றத்தும்
நளினமாக
மேலுகந்த மானிடந் தான்
எடுப்பதுவே அருமை"... யெனக் கூறுகிறது.
எழுவகைத் தோற்றத்தில் முடிபாகக் குறிப்பிடப் பெறும்
அமரர் என்பவர் யார்?
புழுக்கள் தொடங்கி மனிதர்கள் வரை பிறப்பிடம் (யோனி) குறித்தவர்கள்- அமரர் (தேவர்) பிறப்பதற்கான யோனி எதுவெனக் குறித்தனர்?
அவர்கள் மண்ணுலகில் வாழ்பவர்களா? அல்லது விண்ணுலகில் உள்ளவர்களா?
புராணக் கதைகளின் புனைந்துரையா? என்பதெல்லாம் மானுடம் அறியாத பிரம்ம ரகசியமாகவே இருக்கிறது.
அந்த பிரம்ம ரகசியம் என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போமே!
இருக்கும் இடத்தை விட்டு
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றீர்..........
கடவுள் = கட + உள்
இந்த மானிட தேகத்தின் உள்ளேயே இறைவனின் வாசஸ்தலம் என்று எல்லா வேதங்களும் குறிப்பிடுகின்றன.
aa
அய்யா வழி:wwaaaa
உன்னோடு எந்நாளும் உயிருக்குயிராய் இருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான் உயிருக்குயிராய் இருக்கிறேன்
- அய்யா சீசருக்கு சொன்ன சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய்மகனே
கண்ணாலே மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை அறிந்தவருக்கு ஈசன் வழி சொல்லுகிறேன்
- அருள் நூல்
ஒளவையார்:
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனை காண்.
சிவவாக்கியர்:
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருXந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லாரோ
என்னிலே இருந்துஇருந்து யான்உணர்ந்து கொண்டேனே
திருமூலர்:
உள்ளத் தொருவனை உள்உறு சோதியை
உள்ளம்விட் டோர்அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருஅறி யாதே.
உள்ளத்து ளேதான் சுரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர்உரை மாதவன்
பொள்ளக் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்துஅறி யார்களே.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்:
நம் சரீரங்கலெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.
ஈசுவரன் வெளியிலும் வெகு தூரத்துக்கு அப்பாலுமே இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும்;ஆனால் உள்ளே ஈசுவரனிருப்பதாக உணர்ந்து கொண்டதும் உண்மையான ஞானம் உண்டாகிறது.
உள்ளே (இருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறத்திலும் அவனைக் காண்பான்.தனக்குள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான்.
மனிதன் அடைய விரும்பும் பொருள் அவனுக்குள்ளேயே இருக்கிறது;ஆயினும் அதைக் தேடிக்கொண்டு அவன் அங்குமிங்கும் அலைகிறான்.
உம்மிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீர் மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
பைபிள் வேதம்:
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்.
(செப்பானியா-3:17)
இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்கள் அறியீர்களா?
(கொரிந்தியர் நிருபம் 2-13:5)
இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்
(லூக்கா-17:21)
இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்
(யோவான்-14:9)
உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது;அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்,நீங்கள் அவரை அறிவீர்கள்
(யோவான்-14:17)
நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருகிறீர்களா?
(கொரிந்தியர் 1-நிருபம்-3:16)
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படு கிறவர்கள் உண்டு
(கொரிந்தியர் 1-நிருபம்-8:5)
அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தை குறித்து பேசினார்
(யோவான்-2:21)
திருக்குரான்:
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்;அவன் மணம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கிறோம்.(50:16)
நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்-அன்றியும் அல்லா நீங்கள் செய்வதை உற்று நோக்கியவராக இருக்கிறார்.(57:4)
மரண தருவாயில் ஒருவனின் தொண்டைக் குழியை அடையும் போது
அந்நேரம் நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்
ஆயினும் நாமோ அவனுக்கு உங்களைவிட சமீபமாக இருக்கிறோம்.(57:83-85)
........நிச்சயமாக நான் உங்களுடனே இருக்கிறேன்.(5:12)
இப்படி சர்வ வேதங்களும்
ஞானிகளும் இறைவனை உள்ளே இந்த உடம்பு என்னும் ஆலயத்தின் உள்ளே காண சொல்லியிருக்க ஈஸ்வரா அல்லா பரம லோகத்து பிதாவே என்று வானத்தை நோக்கி வணங்குவதும்,கல்லால் ஆன ஆலயத்தையும் சிலையையும் வணங்குவதும் என்ன பலன் அளிக்கும்?
இறைவன் இந்த உடலின் உள்ளே வாசம் செய்திருக்க,நாம் இறுதியில் அவருடைய திருவடியை சென்றடைய வேண்டும் எனின் இந்த உடலை விட்டு வெளியே உயிர் போக வேண்டுமா?அல்லது உயிர் உள்ளேயே சென்று அடங்க வேண்டுமா?
நாம் செய்யும் வணக்கங்கள் இறுதியில் இந்த உடலின் உள்ளே உள்ள இறைவனிடம் இந்த உயிரை கொண்டு சேர்க்கின்றதா?
அப்போ நாம் மட்டும் அதை கடைப்பிடித்து மோட்சம் அடைவோமா?
யோசியுங்கள்
இறைவனை உள்ளே தேடி அவரை அடையும் வழியினை கண்டு கொள்ளுங்கள்.அப்படி நம்மை உள்ளே சென்று குடியேறினால் அதற்கு பெயர் பூரணம்.அதனை அடையா விட்டால் அவனே தவறி விட்டான் அவனே மாரணத்தில் சிக்கியவன்.என்றும் மாறாத ரணத்தில் சிக்கியவன்.
எனவே மரணத்தை வெல்ல இறைவனை உள்ளே தேடுங்கள்.
அப்படி உள்ளே உறைகின்ற உயிராகிய இறைவனை அறிய நம்மால் முடியுமா என்றால்,அது இயலாது.
குரு தொட்டு காண்பிக்காத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
நமது உயிரை நமக்கு அறிய வைக்கின்ற மெய் குருபிரான்,அதாவது இறைவன் இங்கே காலாகாலம் அவதாரம் பூண்டு வருகின்றார்கள்,ஒரு மானிடப் பிறப்பு எய்தி,மானிடராய் வளர்ந்து,அறிவுப் பருவம் வந்தவுடன் ஒரு குருவால் ஆட்கொள்ளப் பட்டு,பின்னர் தவத்தில் ஏறி தெய்வ நிலையை எட்டுகின்றார்கள்.
அப்பேற்பட்ட இறை அவதாரம் பூமிக்கு ஒருவர்தான் இருப்பார்கள்,அவர்கள் கையிலேதான் சாகாவரம் இருக்கும்,இன்று அந்தப் பெருமான் எங்கே அவதரித்துள்ளார்கள் என்று தேடி அங்கே சென்று கூடிக் கொண்டால் நாமும் மரணத்தை வெல்லலாம்,குருவின் கருணையினால்.
குரு வாழ்க
குருவே துணை
குருவே சத்தியம்.
குங்கும யோகம்
======குங்கும யோகம்======
பதி விரதம் காக்கும் சுமங்கலிகளுக்கு என தந்திர ஆகம விதிப்படி ஆன யோக வழிமுறைகள் உள்ளடக்கிய சாதனை முறை இது.தாம்பத்ய உறவின் புனிதம் காக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட இந்த யோகம் இல்லறத்தில் ஏற்படும் அனைத்து பிரிவுகளும் பிரச்சனைகளையும் தீர்த்து கணவருக்கு இல்லற பலத்தை வாரி வழங்கும் தன்மையுடன் தீர்க்க சுமங்கலி ஆக்குவதாக புண்ய பலனாக சொல்லப்படும்.
பல வித்தைகள்
பலவிதமான வித்தைகள் உன்னிடம் வந்து செல்லும், அதை நீ செய்யத்தான் வேண்டும், செய்து செய்து ஒரு கனத்தில் உனக்குள் ஒரு புரிதல் சட்டென மலரும், இப்படியல்ல இந்த வித்தையை பண்ணுவது என.
அப்பொழுது நீ உருமாற்றம் பெற்றுவிட்டாய். உன்னுடைய குரு நீ எந்த இலக்கினை அடையவேண்டும் என நிர்னயித்து ஒரு வித்தையினை பயன்பாட்டில் வைத்தாரோ அந்த பயன்பாட்டின் எல்லையினை நீ புரிந்து கொள்வாய்.
-- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
Subscribe to:
Posts (Atom)