Thursday, November 24, 2022

உயிரினங்கள் தோற்றம்:               நால்வகை யோனி            எழுவகைத் தோற்றம்

உயிரினங்கள் தோற்றம்:               நால்வகை யோனி            எழுவகைத் தோற்றம் -------------------------------------------------------- பிரபஞ்ச சிருஷ்டி என்பது நம் அறிவுக்கெட்டாத , எப்போதும் வியப்பூட்டும் மாபெரும் புதிராகவே இருக்கிறது. கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல்லாயிரக்கணக்கான தீப்பொறிகள் சிதறி வெளிப்படுவதைப் போல, எல்லையற்ற அழிவற்ற பிரம்மத்திலிருந்து இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சமும், இதில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களும் தோன்றின. இப்பூவுலகில் புல் பூண்டு முதலான தருக்கினத்தைப் படைக்கத் தொடங்கி,யானை முதல் எறும்பு கடை வரையிலான எண்பத்து நான்கு நூறாயிரம் ( 84 இலட்சம்) உயிர்க் கோடிகளைப் பரம்பொருள் படைத்தது. இங்கு 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகை மாத்திரமே( Variety)அன்றி மொத்த கணக்கு இல்லை. மீன் என்ற ஜீவராசியை எடுத்துக் கொண்டால் மீன்களில் எத்தனை வகை இருக்கிறது.ஆக 84 இலட்சம் ஜீவ ராசிகள் என்றது வகைப்பாடு மட்டுமே.                நால்வகை யோனி               -------------------------------------- இம்மண்ணுலகில் தோற்றமாயிருக்கும் ஜீவ ராசிகள் அனைத்துமே புழுக்கம், வித்து, அண்டம் ( முட்டை), சினை( கருப்பை) எனும் நால்வகை யோனி ( பிறப்பிடம்) வழியாக உண்டாகியிருக்கின்றன.  1.புழுக்கத்தில் ஈரும், பேனும், புழுக்களும் உண்டாயின. 2.வித்திலிருந்து புல் பூண்டு முதல் செடி கொடிகள்,பெரிய ஆலமரம் வகையிலான தாவர இனங்கள் தோன்றின. 3.முட்டை(அண்டம்)யிலிருந்து எறும்பு, பல்லி, பாம்பு, பறவைகள், மீன், தவளை,ஆமை, முதலை முதலானவை பிறக்கின்றன. 4.சினையென்னும் கருப்பையில் இருந்து எலி,பூனை தொடங்கி ஆடு,மாடு,புலி, சிங்கம், மிகப் பெரிய யானை வரையிலான மிருகங்களும், மிகவும் உயரிய படைப்பான மனிதனும் பிறக்கின்றான்.           எழுவகைத் தோற்றம்         ----------------------------------------------- இந்த நால்வகை யோனியிலிருந்து உண்டாகின்ற ஜீவ ராசிகளின் தோற்றங்கள் ஏழு வகைப்படும். பிறப்பிடம் ( யோனி) வைத்து ஜீவ ராசிகளை நான்காகப் பிரித்த நம் முன்னோர் அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர். 1. தருக்கினம் -புல் பூண்டு,செடி கொடிகள், மரங்கள் முதலானவை. 2. நீர் வாழ் இனம்- மீன், தவளை,முதலை,திமிங்கிலம்முதலானவை. 3.ஊர்வன-எறும்பு, அட்டை, பாம்பு,பல்லி முதலானவை. 4. பறவையினம்- ஈ,கொசு, புறா ,பருந்து,கழுகு முதலானவை. 5. விலங்கினம்: எலி ,பூனை, நாய், ஆடு ,மாடு,புலி, கரடி புலி ,சிங்கம் ,யானை முதலானவை . இவற்றோடு 6. மனிதர் -7. தேவரென உயிரினங்களின் தோற்றத்தை எழுவகைத் தோற்றம் என்றனர். மனிதப் படைப்பின் உன்னதத்தை உணர்த்தவே நால்வகை யோனி,எழுவகைத் தோற்றம் எடுத்து வைக்கப் பெற்றது. உயிரினங்களின் தோற்றத்தைக் கூர்ந்து கவனித்தால், இறைவன் ஜீவ ராசிகளைப் படிப்படியாக படைத்த பின்னரே,  மனிதனை மட்டுமே மகா உன்னதத்தில் வைத்து படைத்துள்ளான் என்பதும், ஏனைய ஜீவ ராசிகள் அனைத்தும் மனிதனுக்கு ஊழியம் செய்வதற்காகவே படைக்கப் பெற்றுள்ளன என்பதும் தெரிய வரும். நால்வகை யோனி எழுவகைத் தோற்றத்தில் வைத்துப் படைக்கப் பெற்ற உயிரினங்கள் அதனதன் உடல் வளர்க்கும் அளவிற்கு உணவு தேட, ஜீவிக்க, இனவிருத்தி செய்ய ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அறிவுத் தோற்றத்தையும் அதற்குள்ளே வைத்து இறைவன் படைத்துள்ளான். உற்றறிவு ( ஸ்பரிசம்), சுவைத்தல் ( ரசம்), நுகருதல்(கந்தம்), பார்த்தல் (ரூபம்), கேட்டல் ( சப்தம்) எனும் ஐந்தறிவோடு பகுத்தறிவெனும் ஆறாவது அறிவோடு- ஆறறிவு பொதிந்து வைத்து, மகா உன்னதத்தில் வைத்து மனிதனை இறைவன் படைத்தான். அதனால் தான் சிவானந்த போதம் என்னும் சாத்திரம், "நாலு வகை யோனியிலும் எழுவகைத் தோற்றத்தும் நளினமாக மேலுகந்த மானிடந் தான் எடுப்பதுவே அருமை"...  யெனக் கூறுகிறது. எழுவகைத் தோற்றத்தில் முடிபாகக் குறிப்பிடப் பெறும் அமரர் என்பவர் யார்? புழுக்கள் தொடங்கி மனிதர்கள் வரை பிறப்பிடம் (யோனி) குறித்தவர்கள்- அமரர் (தேவர்) பிறப்பதற்கான யோனி எதுவெனக் குறித்தனர்? அவர்கள் மண்ணுலகில் வாழ்பவர்களா? அல்லது விண்ணுலகில் உள்ளவர்களா? புராணக் கதைகளின் புனைந்துரையா? என்பதெல்லாம் மானுடம் அறியாத பிரம்ம ரகசியமாகவே இருக்கிறது. அந்த பிரம்ம ரகசியம் என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போமே!

இருக்கும் இடத்தை விட்டு

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றீர்.......... கடவுள் = கட + உள் இந்த மானிட தேகத்தின் உள்ளேயே இறைவனின் வாசஸ்தலம் என்று எல்லா வேதங்களும் குறிப்பிடுகின்றன. aa அய்யா வழி:wwaaaa உன்னோடு எந்நாளும் உயிருக்குயிராய் இருப்பேனப்பா ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான் உயிருக்குயிராய் இருக்கிறேன் - அய்யா சீசருக்கு சொன்ன சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய்மகனே கண்ணாலே மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான் என்னை அறிந்தவருக்கு ஈசன் வழி சொல்லுகிறேன் - அருள் நூல் ஒளவையார்: உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனை காண். சிவவாக்கியர்: என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருXந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லாரோ என்னிலே இருந்துஇருந்து யான்உணர்ந்து கொண்டேனே திருமூலர்: உள்ளத் தொருவனை உள்உறு சோதியை உள்ளம்விட் டோர்அடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருஅறி யாதே. உள்ளத்து ளேதான் சுரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலர்உரை மாதவன் பொள்ளக் குரம்பைப் புகுந்து புறப்படும் கள்ளத் தலைவன் கருத்துஅறி யார்களே. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்: நம் சரீரங்கலெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும். ஈசுவரன் வெளியிலும் வெகு தூரத்துக்கு அப்பாலுமே இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும்;ஆனால் உள்ளே ஈசுவரனிருப்பதாக உணர்ந்து கொண்டதும் உண்மையான ஞானம் உண்டாகிறது. உள்ளே (இருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறத்திலும் அவனைக் காண்பான்.தனக்குள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். மனிதன் அடைய விரும்பும் பொருள் அவனுக்குள்ளேயே இருக்கிறது;ஆயினும் அதைக் தேடிக்கொண்டு அவன் அங்குமிங்கும் அலைகிறான். உம்மிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீர் மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும். பைபிள் வேதம்: உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். (செப்பானியா-3:17) இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்கள் அறியீர்களா? (கொரிந்தியர் நிருபம் 2-13:5) இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் (லூக்கா-17:21) இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் (யோவான்-14:9) உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது;அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்,நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான்-14:17) நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருகிறீர்களா? (கொரிந்தியர் 1-நிருபம்-3:16) வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படு கிறவர்கள் உண்டு (கொரிந்தியர் 1-நிருபம்-8:5) அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தை குறித்து பேசினார் (யோவான்-2:21) திருக்குரான்: மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்;அவன் மணம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கிறோம்.(50:16) நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்-அன்றியும் அல்லா நீங்கள் செய்வதை உற்று நோக்கியவராக இருக்கிறார்.(57:4) மரண தருவாயில் ஒருவனின் தொண்டைக் குழியை அடையும் போது அந்நேரம் நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் ஆயினும் நாமோ அவனுக்கு உங்களைவிட சமீபமாக இருக்கிறோம்.(57:83-85) ........நிச்சயமாக நான் உங்களுடனே இருக்கிறேன்.(5:12) இப்படி சர்வ வேதங்களும் ஞானிகளும் இறைவனை உள்ளே இந்த உடம்பு என்னும் ஆலயத்தின் உள்ளே காண சொல்லியிருக்க ஈஸ்வரா அல்லா பரம லோகத்து பிதாவே என்று வானத்தை நோக்கி வணங்குவதும்,கல்லால் ஆன ஆலயத்தையும் சிலையையும் வணங்குவதும் என்ன பலன் அளிக்கும்? இறைவன் இந்த உடலின் உள்ளே வாசம் செய்திருக்க,நாம் இறுதியில் அவருடைய திருவடியை சென்றடைய வேண்டும் எனின் இந்த உடலை விட்டு வெளியே உயிர் போக வேண்டுமா?அல்லது உயிர் உள்ளேயே சென்று அடங்க வேண்டுமா? நாம் செய்யும் வணக்கங்கள் இறுதியில் இந்த உடலின் உள்ளே உள்ள இறைவனிடம் இந்த உயிரை கொண்டு சேர்க்கின்றதா? அப்போ நாம் மட்டும் அதை கடைப்பிடித்து மோட்சம் அடைவோமா? யோசியுங்கள் இறைவனை உள்ளே தேடி அவரை அடையும் வழியினை கண்டு கொள்ளுங்கள்.அப்படி நம்மை உள்ளே சென்று குடியேறினால் அதற்கு பெயர் பூரணம்.அதனை அடையா விட்டால் அவனே தவறி விட்டான் அவனே மாரணத்தில் சிக்கியவன்.என்றும் மாறாத ரணத்தில் சிக்கியவன். எனவே மரணத்தை வெல்ல இறைவனை உள்ளே தேடுங்கள். அப்படி உள்ளே உறைகின்ற உயிராகிய இறைவனை அறிய நம்மால் முடியுமா என்றால்,அது இயலாது. குரு தொட்டு காண்பிக்காத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது. நமது உயிரை நமக்கு அறிய வைக்கின்ற மெய் குருபிரான்,அதாவது இறைவன் இங்கே காலாகாலம் அவதாரம் பூண்டு வருகின்றார்கள்,ஒரு மானிடப் பிறப்பு எய்தி,மானிடராய் வளர்ந்து,அறிவுப் பருவம் வந்தவுடன் ஒரு குருவால் ஆட்கொள்ளப் பட்டு,பின்னர் தவத்தில் ஏறி தெய்வ நிலையை எட்டுகின்றார்கள். அப்பேற்பட்ட இறை அவதாரம் பூமிக்கு ஒருவர்தான் இருப்பார்கள்,அவர்கள் கையிலேதான் சாகாவரம் இருக்கும்,இன்று அந்தப் பெருமான் எங்கே அவதரித்துள்ளார்கள் என்று தேடி அங்கே சென்று கூடிக் கொண்டால் நாமும் மரணத்தை வெல்லலாம்,குருவின் கருணையினால். குரு வாழ்க குருவே துணை குருவே சத்தியம்.

குங்கும யோகம்

======குங்கும யோகம்====== பதி விரதம் காக்கும் சுமங்கலிகளுக்கு என தந்திர ஆகம விதிப்படி ஆன யோக வழிமுறைகள் உள்ளடக்கிய சாதனை முறை இது.தாம்பத்ய உறவின் புனிதம் காக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட இந்த யோகம் இல்லறத்தில் ஏற்படும் அனைத்து பிரிவுகளும் பிரச்சனைகளையும் தீர்த்து கணவருக்கு இல்லற பலத்தை வாரி வழங்கும் தன்மையுடன் தீர்க்க சுமங்கலி ஆக்குவதாக புண்ய பலனாக சொல்லப்படும்.

பல வித்தைகள்

பலவிதமான வித்தைகள் உன்னிடம் வந்து செல்லும், அதை நீ செய்யத்தான் வேண்டும், செய்து செய்து ஒரு கனத்தில் உனக்குள் ஒரு புரிதல் சட்டென மலரும், இப்படியல்ல இந்த வித்தையை பண்ணுவது என. அப்பொழுது நீ உருமாற்றம் பெற்றுவிட்டாய். உன்னுடைய குரு நீ எந்த இலக்கினை அடையவேண்டும் என நிர்னயித்து ஒரு வித்தையினை பயன்பாட்டில் வைத்தாரோ அந்த பயன்பாட்டின் எல்லையினை நீ புரிந்து கொள்வாய். -- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

இறைவா உன்னை தேடினேனே

இறைவா உன்னை தேடினேனே சுற்றி திரிந்த மலைகளும் தேடி பார்த்த ஆன்மீக வாதிகளும்  வாழ்க்கை கற்று கொடுத்த  நியதியும் ஒன்றுமில்லை  ஒன்றுமில்லை அனுபவம் மிஞ்சும் என்பார் அதை கண்டவர்க்கு ஏது ஞானம் ஞானமே யாது அறிவீர் அறிந்தவனுக்கு இவ்வுலகில் பைத்தியம் என்ற பெயர் இயற்கையிலே வரும் அன்பு எல்லா உயிர்களிடத்திலும் உண்டு அதை தேடி ரசித்தவனுக்கே உரியது அந்த அனுபவம் உயிரும் உடலும் சேர்ந்த பயணம் மண்ணுக்கே சென்று முடியும் உன் சூட்சூம சக்தியின் பயணம் உன்னை யார் என்று அறிவாய் பல யோகங்கள் செய்வாய் தன்னை அறிய தவம் செய்வாய் வீன் வெட்டி வாய் ஜாலம் பழகுவாய் கேட்டதும் படித்ததும் பிதற்றி திரிவாய் தன்னை யார் என்று சுட்டி காட்ட தெய்வம் வருமா தன்னில் இருப்பவனை தொட்டு காட்ட குரு வருவாரே உன் பல கோடான கோடி கர்மம் வழி விடுமா தர்மத்தின் வழியால் நிலை நிருத்த குரு அருள் ஒன்றே போதுமே குரு வாழ்க குரு பரபிரம்மம்

நற்றாள் யார்?

==== நற்றாள் யார்? ==== வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்… னம்மிலுள்ள தெய்வீகமலையை, ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன். னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை "பிரம்மமுடி" என்றும் சொல்வதுண்டு. முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற "அ"  "ஆ" முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்," அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை, ஹரினமோந்துசிந்தம்" என்று சொல்லி கொடுப்பதினாலேயே "னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம், அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்" என்று தெரிகிறது.    ------- மெய்வழி சாலை ஆண்டவர்கள் அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்... அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை. இப்படி “இவ்விடுதலையே “வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு.... கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் -- நன்றி. ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️ அறியோம் நற்றாள்கள் ஆதியே துணை ஆதியை அறிய குருவே துணை

குண்டலினீயின் ரகசியம்

குண்டலினீயின் ரகசியம் குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும். ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள். சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.

ஞானமணிமாலை

”ஹக்காம்நபி தம்மோடு இறை கல்பான பல்லுடலில் செக்கானது போல் அஞ்சு திருக்காய் எழும் மூச்சில் நாக்காத அலிபு ஒன்று உண்டு அதில் நடு ரெண்டுள லாமும் சிக்காமல் எடுத்து ஓதிடும் என்றே உரை செய்தான்”                 ~பீரப்பா ஞானமணிமாலை ஆச்சரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்த அலிபு மூச்சுமல்ல ஆதத்துட பாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்கு சுஜூதிட்டால் அதிக தவம் ஆதத்துட பாதமது நிஜமாம்- அந்த அலிபு நிலையறிந்து அதிக தவம் செய்ய அதிகமுள்ள பெரியோரை அடிபணிந்தால் சொல்வார்

பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்  முரீது*

*பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்  முரீது* அந்தெழுத்தையின்னதென்று அதினுடையவளமும் ஆருஞ்சொல்லார் சொன்னாலும் ஆருமறியாரே அந்தெழுத்து மூன்றிலொன்று அதுதானே தாத்து அஹதயத்துமதுதானே யதிலுமதைப்போலே வந்தது தான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து வதிலுமதைப்போலமைந்த வாஹி தியத்தாமே வாஹி தியாவானதென்ன வனைத்து முடிந்ததுவாம் வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர்மணியாம் இந்தவகைய றியார்கள் முந்தவகையறியார் அந்தவகையறியார்க ளந்தரத்திலாவார் இந்தவகையறிந்தவர்க ளெந்தனக்குங் குருவாம் இவையறிந்தபேர்களெல்லாம் யாவுமறிந்தவராம் யாவுமறிந்தவர்களென்று இருதயத் திற்சிறந்து இவையறியவேண்டுமென்று எவருமடி தொழுதால் அந்தவகை யறிந்தவரை யடிபணிந்து தொழுதால் அவர்மனதிலிரக்கம் வந்தால ணுப்போலேவுரைப்பா எந்தமட்டோ இறையருள்தா னெடுக்கமட்டும்போதும் இதற்கதிகமானத்தவ மில்லையில்லை வந்தவரேமனமறிந்து வருடமொன்று தெரிந்து வளமுளபேராயிருந்தால் வரிசைவளமிருத்தி வளமாக அறுநான்கு பிரிவுசொல்லித்திருத்தி வரைந்தெழுத்து மூன்றுஞ்சொல்லி வகைபிரித்து அந்தமூன்றில் கடையெழுத்தை யாதாமாக்கி அதற்குமுதலதற்கடியு மதற்கடியும துவாம் இதமாகரண்டுமது ஒன்றானபொருளை இதற்கடியிதமாக இருதயத்தைமாற்றி முந்தற்சொன்ன எட்டெழுத்தில் முடிவெழுத்தென்றியம்பி முன்னேசொன்ன முடிவெழுத்தை கடையெழுத்தாற் தொழுது வந்தமுதல்வகையெழுத்தை வடிவான எழுத்தாய் வருமூன்றெழுத்தின்வள மொன்பதையுமறிந்து முந்தமுந்தமுதலான முதலெழுத்தையுன்னி மூன்றெழுத்தும்பிசகாமல் முடிந்துபின்னியுன்னி அந்தரத்தில் மந்திரத்தை யுருபடுத்தும் விதத்தை அடிபணிந்தார்க்கீந்தவித மருள்வோனே ஆசான் இந்தவகையறியாத குருமாருக்குபிராம்

சீமாட்டி வித்தை

===== சீமாட்டி வித்தை ===== காலாலே கனல் ஏற்றுங்கடி – சழி மேலே கொண்டு அமுது ஊட்டுங்கடி மூலாதாரத்து அலங்கேசரம் – என்று முழங்கிக் கும்மி அடியுங்கடி சார்ந்து கொள்ளடி கேசரத்தை – முதல் அன்னை அறியலாம் தானாகக் கூர்ந்து மூலக் கணபதி – பாதத்தை கும்பிட்டுக் கொள்ளடி ஞானப் பெண்ணே நவ்வெழுத்தே பிரமனார் ஆகும் – அதில் நாரணன் மவ்வெழுத்து ஆனானே சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் – இன்னும் செப்புவன் கேளடி ஞானப் பெண்ணே செப்பவே வவ்வு மகேசுரனாம் – வட்டஞ் சேர்ந்துப சாரம் சதாசிவனாம் தம்பிலா ஐந்து எழுத்தாலே – சராசரத் தங்கி இருந்தது ஞானப் பெண்ணே வாலையின் அட்சரம் மூன்றாகும் – அதை வாய் கொண்டு சொல்பவரார் காணும் மேலொன்றும் கீலொன்றும் மத்திமமும் – கூட்டி விரைந்து பாரடி ஞானப் பெண்ணே..   ----------- வாலைகும்மி நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!" -- நன்றி: ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️