Wednesday, November 9, 2022

யோவான்

 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.


அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;
உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது."

         ----யோவான் 1:1-4

மெய்ப்பொருள்

 ======= மெய்ப்பொருள் ====== 


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராஜபதியே......! வள்ளலாரின் இந்த பாடலின் மறைபொருளும், சாலை ஆண்டவரின் மெய்மணஞானத்தில் பாடல் கீழேயே பதிவிட்டிருப்பதும் ஒருபொருளே தாம்.

              ---  வள்ளலார்

அறுக்குமட்டு மாய்கைதனை அறுத்துவிட்டு அருமறையின் நெறிவழியே ஆசான்பின்னே உருக்கமுடன் ஊசிமுனைவாசல் பாய்ந்து ஓமுடிந்த பட்டணத்தூடுருவி சென்று வெறுக்காமல் மனம் வெறுத்து நின்றாயானால் வேதந்த திசைநாத வெளியுந்தோணும் விருப்பமுடன் மனமூணி யுறைந்தாயாகில் வெல்லாமற் போவதிலை மெஞ்ஞானத்தை= இவ்விரண்டு பாடல்களும் சொல்லுவது நாதாந்த வரை கடந்த அந்த மெய்பொருள் ககன தகர நடராஜ பதியின் ஓங்கு திருவடியே தான்.

           ---- சாலை ஆண்டவர்கள்

எது ஒன்று நம் கூடவே அனாதியாக இருக்கிறதோ... எது ஒன்று ஜீவனை விட்டு கணநேரம் கூட விலகாமல் இருக்கிறதோ எது ஒன்றை ஜீவன் தன்னோடு இருந்தும் அறியாமல் இருக்கிறதோ அதுவே தான் மெய்பொருள்... அதை அழிக்கவோ சாவோ தீண்டாது

எது ஒன்று அகம் புறம் என ஊடுருவி எங்கும் தானே தானாக விளங்குகிறதோ, எது ஒன்று தனக்கு ஆதாரமாக ஒன்றையும் பற்றாதிருக்கிறதோ அதுவே மெய்பொருள்

அறிந்தவர் ஒருவர் தொட்டுக்காட்ட அது ஜீவ அறிவுக்கு வரும்... அதுவரை எத்தகைய பிரயாசையினாலும் ஜீவ அறிவிற்க்கு வராது.... ஆனால் நம் கூடவே தான் சதா இருக்கும்


எதை அறிய எலாம் அறிய வகையாகிறதோ அது மெய்பொருள்... எதில் அனைத்தும் அடங்குகிறதோ அது மெய்பொருள்.. எது அனித்துக்கும் ஆதாரமாய் அனைத்தையும் ஊடுரிவி நிற்க்கிறதோ அது மெய்பொருள்... இதை அறிந்தவர்க்கால்லாது மற்றொருவர் இதை சுட்டிகாட்ட இயலா

----❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

நிஷ்டை

 நிஷ்டை

-----------
"இந்த அநித்திய வீட்டைவிட்டு அந்தப் பிரணவ வீட்டிற்குள் பாய்ந்து நிற்கும் போது அதற்கு அடையாளமாக மூச்சு இருப்பதில்லை .இதுவே நிஷ்டை .
ஒரு பிரம்ம நிஷ்டரிடத்தில் பழகுபவர்களுக்கு இப்பிரம்மச் செயல் நிஜமாகவே கைவரவு ஆகி விடுகிறது."
--மெய்வழி ஆண்டவர்கள்
---------------------
இந்த அநித்திய வீடு என்றது நம்முடைய தேகம் .
பிரணவ வீடு என்றது சோதி என்ற சுழிமுனை யாகும் .

ஆதமும் நாதமும்

 ===ஆதமும் நாதமும்====


”நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவில்நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே”-திருமூலர்

”ஆ-தம்” என்பது என்ன ”னா-தம்” என்பது என்ன?

”ஆ-தம்” என்பது என்ன ”னா-தம்” என்பது என்ன?

முந்தின ஆதம் மண்ணானவன்,பிந்தின ஆதம் வானத்தில் இருந்து வந்தவன்=யேசு கிறிஸ்த்து.

பரம ரகசியம்

 ====== பரம ரகசியம் ======


இப்போது உங்களுக்கு ஒரு பரம ரகசியம் வெளியாக்கப் போகிறோம். கவனமாய்க் கேட்கிறீர்களா?

சிருஷ்டி உருவாகும் முன் ஒரே இருட்கொளம்தான் இருந்நது. அதில் லேசான ஒரு அசைவு, உசும்புதல் ஏற்பட்டு - அந்ந னெருக்குதலின் புழுக்கத்தால் ஜலம் உண்டாயிற்று. அதனுள் ஜலம் எப்படி தங்ஙியிருந்நது? வைக்க ஒரு பாத்திரம் வேண்டுமே. அது இல்லாமல் இருக்க முடியாதே. னீ ஒரு கையளவு ஜலம் எடுத்து உயிர்ப்பிடியாக விரல்களை அழுத்திக் கொண்டாலும், அது கசிந்நு வெளியில் வழியப்பார்கிறது அல்லவா? அப்படியெனில் அவ்வளவு பிரம்மாண்டமான பாரதூரமான ஜலம், எந்ந அளவு பாத்திரத்தில் அடங்ஙியிருக்கும்? அந்ந மகா கனம் கொண்டது ஒரு சிறிதும் கசியாமல், சிந்நாமல் எப்படி இருந்நிருக்க முடியும்?
புழுக்கமயமாகிய அக்கினி, ஏகமயமாக, பரப்பாக, பெருக்கமாக, அனுஅனுவாகத் தொடர்ந்நு அதனுள் ஜலத்தை அடக்கியிருந்நதால் அதன் சுயரூபமான தோற்றத்தில் இல்லாதிருந்நது.
ஒரு ஊதுவத்தியையோ, அல்லது விளக்கையோ ஏற்றினால் அதன் ஜூவாலை நம் கண்ணுக்கு புலப்படுகிறது. அதையே தூரமாக வைத்து பார்த்தால், ஓரளவு தூரத்தில் மறைந்நுவிடுகிறது.
அக்கினியின் ஜூவாலை மேலேயே தூக்கிக் கொண்டிருக்கும் சுபாவமுடையது அல்லவா? இந்ந குணத்தினால் தான் பிரம்மாண்டமான ஜலத்தின் கனத்தை, பளுவைக் கீழேவிடாமல் தூக்கிச் சுமந்நுகொண்டிருந்நது.

இவ்வளவு விசாலமான அக்கினியையும், அது உள்ளடக்கி வைத்திருந்ந ஜலமண்டலத்தையும் அவைகளின் வர்ணமே தெரியாமல் பாரதூர விஸ்தரிப்பில் கோர்த்து மறைத்து அடக்கி வைத்திருந்நது இருட்கோளமே.

           ----❣️ சாலை ஆண்டவர்கள் திருவாக்கியம் ❣️

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் அதாமே

                       --- திருமந்திரம்

அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வரும் முப்பதத்தில்

சிகாரம் சிவமாய் வகாரம் பரமாய் யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.

                              --- திருமந்திரம்

அடியாகி

 அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி


அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி

முடியாகி நடுவாகி மூலந் தன்னில்

முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்

படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்

படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி

அடியாகு மூலமதே அகார மாகி

அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே.


விளக்கவுரை :


2. அதுவாகி அவனளாய் எல்லா மாகி

அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்

பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்

புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி

மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி

மலராகி மணமாகி மதிக்க வொண்ணா

அதுவாரும் அகாரமதே மூலமாகி

அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே.


விளக்கவுரை :


3. மூலமெனு மாதார வட்டந் தானே

முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்

சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்

திருவடியுந் திருமேனி நடமுமாகும்

கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு

கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி

ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற

அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே.


விளக்கவுரை :


4. அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்

அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்

பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்

பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்

அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை

அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே.


விளக்கவுரை :


5. நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை

நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு

தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்

திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்

போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்

புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்

ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே

அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே.


விளக்கவுரை :

திருமூல நாயனார் ஞானம் 6 - 9 of 9 பாடல்கள்


6. ஆசானு மீசானு மொன்றே யாகும்

அவனவளு மொன்றாகும் அது தானாகும்

பேசாத மந்திரமு மிதுவே யாகும்

பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்

நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்

நிலையான ஓங்கார பூட மாகும்

ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்

கின்பமுடன் கயிலாச மெய்த லாமே.


விளக்கவுரை :


7. எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்

இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று

மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி

மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்

இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை

இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே.


விளக்கவுரை :


8. காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்

காணரிய பொருளாகுங் காட்டும் போதே

ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி

அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி

வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா

வெறும்பாழ தாகியே மேவி நின்றார்

சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்

தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே.


விளக்கவுரை :


9. தெளிவரிய பாதமது கார மாகிச்

சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி

அழிவரிய சோதியது தானே யாகி

அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று

மொழிவரிய முதலாகி மூலமாகி

முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி

சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்

சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர்

ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும்

 ===  "ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும் :

அதல்லாத் தொழுகையது ஆற்றில் கரைத்தபுளி" ===

ஊமை எழுத்தே உயிராச்சு ஓமென்ரெழுத்தே உடலாச்சு நாமிந்தெழுத்தை அறிந்துகொண்டோமென நாடி கும்மி அடியுங்கடீ...

அண்டசராசரங்கள் அனித்திற்க்கும் அனித்து மதங்களுக்கும் அவை எவையும் உண்டாவதற்க்கும் முன்னே அனாதிஅனந்தங்கோடி கற்பாந்தங்களுக்குமுன்னே எக்காலகோடிகளுக்கும் கோடாலங்கிருதங்களுக்கும் முன்னே இருக்கும் எழுத்தறிவு அது இலங்கும் தலமிது...அதுவே கமலக்கண்....

எல்லா பாஷைகளுக்கும் ஒரு மொழியாய் அடங்கி எல்லா தொனிகளும் ஒரு தொனியாய் முழங்கி அங்கிங்கெனாதபடி அகம்புறமாய் விளங்கும் “மெய்பொருள்”

அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்...அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை.இப்படி “இவ்விடுதலையே “ வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....

அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே..

மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர தியான சம்பிரதாயங்கள்...

பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...

முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...




பாதையும் பரிசும்

 பாதையும் பரிசும்

(பகுதி-49)
20.03.14,
"இன்னும் கொஞ்ச னாளாவது என்னுடன் இருங்கள்" என தெய்வமவர்கள் பாட்டையரிடம் மன்றாடும் உருக்கமான வரிகள் பற்றி,

"இந்த பெரிய பூமிப்பரப்பிலே மனிதக் கிருமிக் கோடிகளுள் ஒன்றாக உழன்று திரிந்து கொண்டிருந்த என்னை வைத்து பிரளய இறுதித் தீர்ப்பு னடத்துவதற்காக,
பலகாலங்களாக இரவு பகலென்று பாராமல் உலகம் முழுதும் என்னைத் தேடி அலைந்து அலுப்பாய் அலுத்து, உங்களின் சிரசிலே இருக்கும் மதிப்பளுவை மாற்றுவதற்காக என்னைக் கண்டுபிடித்தீர்களே என் அத்தா,

தூல வாழ்க்கையே னிஜ வாழ்க்கை என புகுந்து கொண்டிருந்த எனக்கு ஜீவ வாழ்க்கையைக் காட்டி என்னை மாற்றிய துளப உளவரே,

கொங்கு தேசத்தின் குடிபதி ஒருவனாய் மெய்யைப் பற்றி எதுவுமே தெரியாமல் வசித்து வந்து கொண்டிருந்தேனே, வியாபாரம் செய்து பொருள் சம்பாதிப்பதே மனித ஜென்மத்தின் னோக்கம் என னினைத்து இருள் வழியே போய்க் கொண்டிருந்தேனே என் அம்மா,

ஒருனாள் ஒரு பொழுது இளஞ்சூரிய ஒளி விரிக்கும் காலை னேரத்திலே திங்களுரில் னான் உங்களைக் கண்டேன்-னீங்கள் என்னைப் பார்க்காமல் சென்று கொண்டிருந்த அன்னேரம்- உங்களிடம் னான் சேர னீங்கள் என்ன செய்தீர்கள் என இன்னும் னான் அறியேனே இறைவா,

அந்த சாலை வழியிலே சாடையாய் னீங்கள் சைக்கிணை செய்வது போல எனக்குத் தோண ஓடி னான் வந்து உங்கள் கரம் பிடித்தேனே பரந்தாமா,

உங்கள் விழிகளிலே வழிந்த காமத்தால், பழிகாரி என்று உங்களை உலக மக்கள் கூறினாலும் அதை பொருட் படுத்தாமல் உங்கள் பின்னே தொடரந்தேனே தேவா,

இனி உங்களுடன் வாழும் வாழ்வே னிலையானது னிரந்தரமானது என னினைத்து, என் குடும்பம் சுற்றம் மேலும் என் இளமை சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து மறந்து உங்கள் பின்னே தொடர்ந்து வந்தேனே என் அத்தா,

இன்று எனது பழைய உருவத்தையும் பெயரையும் மாற்றி, புதிம மெய் உருவமும் புதிய னாமமும் சூட்டியுள்ள என் உத்தம சுத்த உறுதி னாயகமே,

னீங்கள் என்னை மாற்றியதானது எதைப் போல என்றால், ஒரு னீண்ட வயதை உடைய குளவியானது அற்ப வயதை உடைய புழுவை எடுத்து வந்து கூட்டிலடைத்து தன் கொடுக்கால் இடைவிடாமல் கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றி தன் கூட்டிலிருந்து பிரித்து விடுவதைப் போல, அன்று குடும்பம் என்னும் காமலி தேக கூட்டத்துக்குள் புகுந்து கொண்டிருந்த என்னை பிரித்தெடுத்து மாற்றியுள்ளீர்கள், ஆனால் இன்று குளவி தன் கூட்டைவிட்டு குளவியாக மாறியுள்ள புழுவை பிரித்து விடுவதைப்போல,
உங்களைத் தவிர தூலத் துணை ஒருவருமே இல்லாத என்னை தன்னந்தனியே பிரித்து விடத் துணிந்து விட்டீர்களே என் தந்தையே,
இன்னும் கொஞ்ச காலம் என் கூடவே இருந்து விட்டு அதன் பிறகு என்னை விட்டுப் பிரிந்து செல்லுங்களேன் என் அப்பா" என தெய்வமவர்கள் பலவாறாக கண்ணீருடன் மன்றாடி பாட்டையரைப் பிரார்த்தித்து னின்றார்கள்.

பாட்டையரின் பதில்
(தொடரும்)

சாலை ஆண்டவர்கள்

 நித்திய தேகத்தின் பிரணவ வித்து இன்னதென்று உனக்கு அறிவித்திருக்கிறோமல்லவா? அதிலே தான் சர்வ உலகங்களும்,சர்வ படைப்புகளும்,அவற்றின் சர்வ ஆட்சிகளும் அடக்கம்.அப்படியெனில் அந்த தேகத்தில் ஆண் எங்கே பெண் எங்கே?. சபையோர்:”அது ஆணுமில்லை பெண்ணுமில்லை!!” என்று சொல்ல -ஆண்டவர்கள்-;இல்லை என்று எப்படி சொல்லமுடியும்?.பின் ஆண், பெண் என்ற வார்த்தைகல் இருப்பதால் நிச்சயமாக அவற்றிற்க்கு பொருள் வேணுமே, காட்டு,பார்க்கலாம்.


இந்த கேள்வியே உன் நினைவுக்கு வராது.

=சாலை ஆண்டவர்கள்

===================================

தன் சிந்நையைத் தெய்வீக சம்பந்நத்தில் னிறுத்தி உரையாடினாலோ, பாடினாலோ மூச்சு வேகமாக வெளியேறாது. குரு சன்னிதியில் இருக்கும் போது, அவர்களின் அருளமுதம் வாசகங்ஙளைக் கேட்கும்போதும், கேட்டு மறுமுறை சிந்நிக்கும் போதும் சுவாசம் லாபத்தில் மாறி ஓடும் - அதாவது உள் வாங்ஙுவது அதிகமாகவும் வெளியேறுவது குறைவாகவும் இருக்கும். இவ்வாறு சுவாசம் லாப முகத்தில் இயங்ஙும். இது தான் பிராணாயாமத்தின் ரகசியம். இதை விட்டு அருமையான சொத்தாகிய தன் மூச்சை வீண்பாட்டில் செலவு செய்து, அழிந்நு போகும் மனிதன், என்ன மதியற்றவன் என்று பார்

. ஆண்டவர்கள் திரு வாக்கியம் திரு மெய்ஞான அருளமுதம்

பிராணன் அபானன்

 மறுபதிப்பு:


பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.
இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்..உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.

உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் ,அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர்.

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.