Tuesday, December 6, 2022

ஜீவவார்த்தை

பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து. மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்.  அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை

எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்

🖐🖐எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்🖐🖐 🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷                            🔹🔹🔹 ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம் --- பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை" குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும். வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல ஒரு முனையில் “நான்” என இருக்கும்.. மறு முனையில் மனம் என இருக்கும்.. இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர். அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே --- திருமூலர். மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும் ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா? இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும் உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்..... தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என. உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம் )                            🔹🔹🔹 🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷 ➡️ riansathvicharam blogspot com 🙏

உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று

உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று என்னல்லாமோ செஞ்சு பாக்குறோம்..ஏதெல்லாமோ படிச்சு பாக்குறோம்..என்ன படிச்சாலும் சந்தேகம்ங்கிறது தீர்ந்தபாடில்லை. நாம இருக்குற நிலமை என்ன...எப்பை மாட்டிகிட்டு தவிக்கிறோம்...எங்க மாட்டிகிட்டு திணறுகிறொம்ம்..இப்படி அல்லோலபட்டு வாழ்க்கை பாழாக போறதுக்கு என்ன பாவம் செஞ்சோம்ங்கிறது எத்தனை காலம் யோசிச்சாலும் புத்திக்கு வராது, தீர தீர கேள்விகள் பல பதிலில்லாமல் பெருகிகிட்டே தா வரும். புத்தர் மாதிரி எங்காச்சும் போயிருந்து துக்கத்துக்கு காரணம் என்னாண்ணு ஆலோசனை பண்ணாலும் பதில் வராது.எண்ணா நாம மாட்டி கெடக்கிற விதம் அப்படி. ஒரு குண்டாக்கு நூல் கட்டை ஒழுங்கில்லாமல் சின்னி சிதறி அலங்கோலமாக்கி ஒரு குழந்தைகிட்ட குடுத்து அதை அவுத்து சீராக சுற்றி வைக்க சொன்னா நடக்கிற காரியமா என்ன ..அது போலத்தான் வாழ்க்கையும்...எந்த ஒழுங்கும் இல்லாம ஆயிரம் கோடி காலத்து கர்மங்கள் வினை தொகுப்புகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக கோடி முறை குதர்க்கமா குழப்படியா ஒண்ணுக்கு உள்ள ஒண்ணாக, அது மற்றொண்ணுக்கு உள்ளாக , அது எல்லாம் ஆயிர கோடி முறை கண்ணிகளால் இறுக்கபட்டு கண்ணிகள் இறுகுமே தவிர இளகாமல் அமைந்த த்ன்மையால் கடைசியில் சாவு தான் நிச்சயம்ண்ணு வந்து வாய பொளந்து கிட்டு நிக்குது. அகத்தியர் சொல்ற மாதிரி,அருமையான புரிதல் வந்தா புரியும், ”உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று, உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறென்பர்” என்கிறார். உடல் எங்கிருந்து ஆரம்பம்ண்ணு கேட்டா பதில் இல்ல, உயிரின் ஆரம்பம் கேட்டாலும் பதில் இல்ல, அப்ப பூரணம் என்பது பூரணமாக கைவிட்டு போச்சு. மனிதன் பூரணமாகவே இருக்கிறான்,பூரணமே அவன் இயற்கை. இதை தான் வேத வசனமும் ‘பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணம் உதச்சதே” என சொல்லுது. அகத்தியரின் வசனத்தின் உயர்ஞானம் இதுவே. உடல் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல. உயிர் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல, அது போல பரிபூர்ணம் உடலுக்கும் உயிருக்கும் வேறல்ல, இவை மூன்றும் ஒன்று தான்.இவை வெவ்வேறு எனுமிடத்தில் மனம் குழப்பம் மிகுந்து புரிதல் இன்றி அலை போல திணறுகிறது. அன்பே சிவம்

குண்டலினீய தவம்

குண்டலினீய தவம் ‘கூறாத மந்திரத்தின் குறிப்பறிவித்து.... ஏறாநிலையெனை ஏற்றுவித்து....’ என ஆங்காங்கு குரு பரம்பரையினில் மட்டும் ஒதுங்கி எக்காலத்தும் தலையை வெளிக்காட்டாது, தலை ஏது வால் ஏது என புரிதலுக்கு இடம் கொடாது மறைந்து மூலகுகைக்குள் அடங்கி ஒடுங்கி தன்னிலை அற்று தனிமையே குணமாக முக்குணத்துக்கும் ஆதாரமாக எத்தேவருக்கும் தாயாக ஈனா மலடியாம் பெருஞ்சூலி திரிபுரை சின்னபெண் சித்து விளையாட காத்திருக்கின்றாள், அவள் தன்னையே பகுத்து சரிபாதி அந்த ஈசனுக்கும் கொடுத்தவள் ஆம் தயாவல்லி.அவள் சொரூபத்தை சித்தர்கள் ஞானிகள் என அறிந்தவர் யெவரும் சொல்ல கூச்சபட்டனர்,அவ்வண்ணமான சொரூபம்.அதான் அவள் மறைவாகவே உலாவுகிறாள் பெருங்கள்ளி. அவளுக்கு என மட்டும் அவள் அறிவின்றி யெவரும் அறிந்திரா மந்திரம் தான் மூல மந்திரம், எழுகோடி மந்திரங்களுக்கும் தாயான மந்திரம்.அதை சித்தர்கள் வாய் விட்டு சொல்லாமல் மறை பரிபாஷையாகவே சொல்லி சென்றிருக்கின்றனர்.மூலாக்கினி எனவும் குண்டலினீ எனவும் வாலை எனவும் சூலி எனவும் வல்லபை எனவும் வாக்மயி எனவும் தேவி எனவும் பல ரூப பல பேத பல நாமம் அனேகம் விதம்.ஆயினும் அந்த ஓரெழுத்து தான் என்னவோ அவள் ரகசிய குறி???? ’ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே’.=திருமூலர் சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்குண்டலினீயின் ரகசியம் - Hseija Ed Rian ========================== குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும். ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.

கட்டும் அவிழ்ப்பும்

கட்டும் அவிழ்ப்பும்   தன்னை அறிதல் முதற்கடமை, தன்னிலை உணர்தல் முதல் படி.வாழ்வின் ஆதாரம் வாழ்வின் கட்டு, வாழ்வின் சுழற்சி எது எப்படி எவ்விதம் என ஆழமாக புரியாமல் போவதினாலேயே கற்பனையாக கோட்பாடுகள் உருவாக்கபடுகின்றன. இருப்பதை இருப்பின் உள்ளமைப்பின் படி அறிதலே தன்னிலை உணர்தல். நீ இரண்டு வஸ்துக்களில் பிறந்தவன் என அறிந்திருக்கிறாய்.அந்த இரண்டு வஸ்துக்களும் இணையும் முன்பு நீ அந்த இரண்டு வஸ்துக்களில் எதனூடு வசித்து வந்தாய் என அறிதலே மெய்திறம்.உன் உடலை பார், ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் உன் உடல் யாருடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறது என காண்பாய். தாயே உன் உடலுக்கு நேரடி தொடர்பு அல்லவா, உன் நாபி அவளிடமே நேரடி தொடர்பு அல்லவா?. உன் தந்தையிடம் உனக்கு தொடர்பு இருந்திருக்கிறது என எந்த ஒரு அடையாளத்தையும் உன்னால் காட்டமுடியுமா என்ன?, முடியாதே, ஏனெனில் நீ தந்தையிடம் நேரடி தொடர்பு அற்றவன். தாயே தந்தைக்கு வழிகாட்டி. சற்று உற்றுப்பாராய், “நான்..நான்” என சதா கொண்டு திரியும் வஸ்து ஒன்று, “நான்..நான்” என சொல்லாமலேயே சதா உயிர்ப்பாய் இயக்கமுறும் வஸ்து மற்றொன்று. இவற்றை ஆழமாக பகுத்து ஆராய்வாக மனமே.இந்த உடலை கட்டமைத்தது சொல்லப்பெறும் “நான்” எனும் வஸ்துவா, அல்லது உயிர்ப்பான வஸ்துவா? என கேட்டுப்பாரேன் மனமே.அனைத்து நிகழ்வுக்கும் மத்தியில் “நான்” எனும் வஸ்துவே முன்னிட்டு நிற்கின்றது. நான் என்றும் என்னுடைய என்றும் இந்த வஸ்து எல்லா விஷயங்களுக்கும் உரிமை கொண்டாடுகின்றது, உடலுக்கு உரிமை வேண்டுகின்றது, மனதுக்கு உரிமை வேண்டுகின்றது, அனைத்து நிகழ்வுகளுக்கும்,அனைத்து செயல்களுக்கும் உரிமை வேண்டுகின்றது.ஆனால் இந்த “நான்” எனும் வஸ்து உண்மையில் எதனூடும் எந்த ஒரு தொடர்பும் ஒருபோதும் கொண்டதில்லை, அது என்ன அதன் தரம் என்ன, அதன் ரூப குணம் என்ன என ஆராய முற்பட்டால் அது தன்னை மறைத்து இருள் ரூபமாகவே அறிவுக்கு புலப்படாமல் நிற்கின்றது. அடுத்து நிற்கும் வஸ்து உயிர்ப்பானது, கரு உற்பத்தி முதல் உன் ஊடாக ஊடுருவி நிற்கும் அரும்பொருள், அது எப்போதும் தன்னை தானே அடையாலப்படுத்தி கொள்வதில்லை. அது பாட்டுக்கு அதன் செயலை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டமைக்கின்றது, ஒவ்வொரு துளி ரெத்தத்தையும் ஊடுருவி நின்று உருவாக்குகின்றது, தசைகள் தமனிகள், நிறம் வண்ணம் குணம் என அனைத்தையும் உருவாக்கி அரூபமாக விளங்கி நிற்கின்றது, அது யாரிடமும் யோசனை கேட்ப்பதில்லை, உடலின் அளவு எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என அது எவரிடமும் யோசனை கேட்பதில்லை, ரெத்தத்தை எப்படி உருவாக்க வேண்டும் என தயங்கி நிற்பதில்லை, கால்கை மூட்டிகளில் எந்த விதமான பொருட்களை எந்த விகிதத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என அது எவரிடமும் யோசனைக்கு நிற்பதில்லை, எல்லாவித உள்ளுறுப்புகலையும் எப்படி படைப்பது, எப்படி சீரமைப்பது எப்படி நடைமுறைபடுத்துவது என அனைத்தும் அதற்கு தெரியும். ஆனால் எப்போதுமே “நான்” இதை செய்கின்றேன், நான் தான் இதற்கு அதிகாரி, நானே இந்த உடலுக்கும் இதன் உள்ளுறை செயல் செயல்பாடுகளுக்கும் பூரண அச்சுக்கோர்வை என அது சொல்லி திரிவதில்லை, நினைப்பது கூட இல்லை. ஏனெனில் அதற்கு மனம் இல்லை. இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மனமோ, இவை அனைத்தையும் நானே நடத்துகிறேன், நானே இங்கு அதிகாரி ,நானே இந்த மனுத்தூலத்தின் மையப்புள்ளி என அபிமானித்து செயல்களில் மூழ்கி, செயல் பயன்களையும் துய்க்கின்றது.இவ்வண்ணம் இந்த வாழ்நாள் முழுதும் “நான்” முன்னிட்டே வாழ்வு அமைகின்றது, நான் செயல் புரிகிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் விளைவுகளை சுமக்கிறேன் என வாழ்வு நீண்டு போகின்றது.இவ்வண்ணம் “நான்” எனும் ஆன்மா உள்ளுறையும் “ஜீவன்” எனும் உயிர்ப்பை அறியாமல் மாண்டுபோகின்றது.மூடமாகிய ஆன்மா ஜீவன் எனும் வஸ்து தன்னிலிருந்தே பிறந்து தன்னிலே நிலை நிற்கின்றது எனும் கற்பனை அபிப்பிராயத்தால் தன்னை இழக்கின்றது.ஜீவஆன்மா தன்னிலை விளக்கம் அறிய அறிய தன்முனைப்பு கெடும்

அகர எழுத்து

எழுத்துக்களில் நான் அகரமாக இருக்கின்றேன்   'பகவத் கீதை' ஆரும் அறியார் அகாரம் அவனென்று 'திருமந்திரம்' எழுதாத புத்தகத்தின் எழுத்து 'திருமந்திரம்' எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் ' எழுத்ததிகாரம்' "உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் உறுப்புற்றமைய  நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல திறப்பட தெரியும் காட்சியான" 'பிறப்பியல்' "எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்போடு விடு வழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில் தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே" "அஃது இவண் நுவலாது எழுந்து புறத்தி சைக்கும் மெய்தெறி வளியிசை அளபு நுவன்றி சினே" 'பிறப்பியல்' "எழுத்தெனப் படுவது அகர முதல் னகரம் வரை முப்பதுவகைப்படும்" உந்தியில் தோன்றி வரும் காற்று, தலை, தொண்டை ,நெஞ்சு, ஆகிய இடங்களில் நிலைபெற்று பல் ,உதடு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உட்பட எட்டு இடங்களில் ஒரு உறுப்போடு மற்ற உறுப்பு பொருந்தி அமைதிபெற பிறப்பின் ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்கப்பெறும் என்ற கூறுபாடு உள்ளது. உள்நின்று எழும் காற்றாலாகிய இசையைப் பிணக்கமற ஆராய்ந்து  வரையறை கொள்ளுதல் அகத்தனின்று எழுந்து புறத்து இசைக்கும் பொருண்மை தெரிகின்ற காற்றின் இசை, உள்நின்று எழுந்து வெளியில் வந்து அளவு முறையோடு இசைக்கும் காற்று உள்நின்று எழுந்து உள்ளேயே அளவு முறையோடு இசைக்கும் காற்று அந்தணர் மறைக்குட்பட்ட எழுத்து  என்பது ஞானிகள் மட்டுமே அறிந்த எழுத்து அதுவே எழுதாத புத்தகத்தின் எழுத்து அந்த எழுத்துக்களில் அகரமாக இறைவன் இருக்கின்றான்

கருவில் கலந்த உயிரே

கருவில் கலந்த உயிரே   ====கருவில் கலந்த உயிரே==== (முன்பதிவு தொடர்சி) உங்களுக்குத்தான் தெரியும்,தாயின் கருவறையில் தான் நாம் பிறப்பதற்கு முன்னம் இருந்தோம் என.ஆனால் அதற்கு முன் எங்கிருந்தோம் என்றால் தந்தையின் உயிர்துளியில் இருந்தோம் என சில மக்குமங்குனிகள் எழுதி வெச்சிருக்கிறதையும் பார்த்திருக்கிறோம் அல்லவா?.உண்மையில் தாயின் கருவாக நாம் மலரும் முன் தந்தையின் உயிர்துளியாக இருந்திருக்கமுடியுமா என்றால் முடியவே முடியாத விஷயம் அது. தந்தையின் உயிர்துளியானது தாயின் கருமுட்டைக்கு உயிர்தான் கொடுக்கிறது,அது கருவை கொடுப்பதில்லை. தாயின் கருமுட்டையில் கருவாக இருந்தவன் யார் என்றால் “நான்..நான்” எனும் போதத்துடன் இப்போது உயிரோடு இயங்கும் “நீ” தான்.ஒருவேளை உனக்கு கருமுட்டையில் தந்தையின் உயிர்துளி ஊட்டபெறாமல் போயிருந்தால் என்னாகும்?, 27 நாட்களில் உன் “நான்” எனும் வாழ்வு முடிந்து போயிருக்கும்.தாயின் உதிரப்போக்கில் மடிந்து போயிருப்பாய். அந்த கருணை அருளே தந்தையின் உயிர்துளியின் வல்லபம்,அல்லவா?. “நான் நான்” என இருக்கும் போதத்தன்மை ஒருபோதும் இரு பொருட்களில் இருந்து பிறந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும், உன்னில் ஞானம் துளிர்விட ஆரம்பிக்கும்.உண்மையில் “நீ” தாயின் அங்கம், அவளுடன் ஒட்டிப்பிறந்தவன், கருவோடு உருவானவன், அந்த கருவுருவுக்கு தந்தையே உயிர் தாதா, உயிர் வழங்கியவன். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பயன்பாடு தன்மை வெளிப்பாடு நிகழ்கின்றது, அதன்படி செயல்புரிகின்றனர், காமம் ஒரு கண்ணாடி,அவ்வளவுதான். சிருஷ்டியின் பங்கு வேலை ஆரம்பிக்கின்றது.செவ்வனே ஒழுங்குற சிறக்கின்றது. மண்ணிலிருந்து மண்ணோடு மண்ணாகவே தொடர்பில் இருந்த உன் வாழ்வுக்கு ஒரு உயிரேற்றம் நிகழ்கின்றது,மண்ணோடு மண்ணாக வாழ்ந்துகொண்டிருந்த உனக்கு கருவறையில் உயிரேற்றம் என்பது ஒரு வரபிரசாதம்,இதைத்தான் இறைகருணை என்கிறோம்.மண்ணறையின் காரிருட்கூட்டதுட் அறிபுலம் செறிவற்று அந்தகாரத்துட் அல்லோலப்பட்டு மக்கித்திரிந்த உனக்கு ஒரு வாய்ப்பு அமையபெறுகின்றது, அந்த வாய்ப்பினை தந்தையின் சுக்கிலகூட்டத்துட் செலுத்தி வைத்தான் ஆதியிறை அருட்கோலம்.உன் பிறப்பே இறையின் இருப்பு, இறை தோற்ற செறிவு.அதற்க்கு பெயர்கள் எப்போதும் புனை பெயராகவே அமைந்துவிடும்.அதன் இருப்புநிலை அத்தகையது, அத்தன்மையது.அதன் வெளிப்பாடும் அத்தகையது, எங்கெங்கு தேடினும் அகப்படா அணுவுக்குள் அணுவாக அகண்டமாக நிற்கும் நுட்பத்திறம் கொண்டு சதா தனக்கு நிகரில்லா தனியனாக நிற்கின்றது. அந்த உயிர்துளியே உனக்கு தலைவாசலாக, உன் முக்திக்கு வித்தாக திகழ்கின்றது, அதனூடு பிரயாணிப்பாய். ஆதிஉதல் அமையப்பெற்றது தான் அது எனினும் அதனை நீ அறிந்திரா தன்மையினால் அதை விடுத்து பொய்யான மாயமயக்கத்தால் எதையெதையோ போய் கடவுள் என்கின்றாய். உன்னை ஜீவசிருஷ்டியாக சிருஷ்டித்த தன்மையே கடவுள், அதை அடைவதே உன் கடமை.உன்னில் குடியிருக்கும் அந்த இறைதுளியில் கலப்பாய்,நித்தியத்தை அடைவாய்.வேண்டாம் மண்ணோடு மண்ணான இந்த அனித்திய வாழ்வு.மண்ணிலிருந்து விண்ணுக்கு உன் பிரயாணம் அமையட்டும்

சிவலிங்கம்  - சிவராத்திரி

சிவலிங்கம்  - சிவராத்திரி =========    ========= பூவினில் இருந்து மொட்டு மலர்ந்த ரகசியந்தனை கண்டவர் எவரோ அவர் எனக்கும் குருவே. "சிவராத்திரியின் ரகசியம் மெய்பொருள் என அறிவாயாக." சத்தத்தின் உள்ளே சதாசிவத்தை காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கத்தை காட்டி காட்டி தந்தவரை குருவென்று பணியலாம். இது மெய்பொருள் ரகசியம், உலக பொது ரகசியம். எல்லோரிடமும் அமைந்திருக்கும் மெய்பொருள் விஞ்ஞானம். ----riansathvicharam blogspot com

நானே நானில்லையே

💢💢 நானே நானில்லையே 💢💢 என்றோ அழிய போகும் உடலையே நான் நான் என சொல்லிட்டு இருக்கும் மனதிற்கு எப்போது தற்போதம் அற்று, மெய்யாக இருக்கும் ஜீவனை அறிய முடியும்? நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே நான் என்ற தன்முனைப்புடன், வீண் அகங்காரம் கொண்டு கர்மவினை செய்கிறது. கடவுளுக்கு பூஜை நமஸ்காரம் செய்வதாலோ, வெள்ளை அல்லது காவி உடை அணிந்து, நெற்றியில் பெரிய பட்டையிட்டு, ருத்ராட்சம் அணிவதாலோ, தினமும் சாதனை செய்கிறேன் என்று மனதை அங்குமிங்கும் அலைபாய விட்டுட்டு இருந்தாலோ, குருவே சரணம் என காலடியில் விழுந்து கிடந்தாலோ, ஒன்றும் நடவாது. கர்மச்சக்கரத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. விண்ணில் இருந்து வந்த மெய்பொருள் அறியாத வரை, திரும்ப திரும்ப தாயின் வழியாக மண்ணில் பிறந்துக் கொண்டே தான் இருக்க போறோம். இயற்கை உண்மையாக, ஆதி அனாதியாக இருக்கும் மெய்யை உணர, மனம் எனும் ஆற்றை அறிவு எனும் தோணி கொண்டு கடப்பது சிறந்தது. அதாவது, மனதை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முற்படாமல், மனதிற்கு அறிவு ஊட்ட ஊட்ட, மனமே மனதை செம்மை படுத்திக்கொள்ளும். அறிவு வர, நான் நான் என சொல்லும் மனம் அதிலிருந்து விடுபட்டு, ஜீவனை நோக்கி பிரயாணம் செய்யும். மனிதனுக்கு மட்டுமே தன்னை அறிந்துக்கொள்ளும் சிறப்பு உண்டு. ஆகையால் இந்த மனித பிறப்பை சரியாக உபயோகப் படுத்தி, தன்னை அறிந்து, நான் என்ற அகங்காரத்தினால் அழிந்து போகாமல், விண்ணிலிருந்து வந்தவனை பற்றிக் கொண்டால், மண்ணில் மறுபிறவியில் இருந்து விடுபடலாம். 💥💥 மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 💥💥

உங்கள் ஜீவன்

உங்கள் ஜீவன் தேடுகின்ற பொருளை உங்களால் கொடுக்க முடியவில்லைஇதனால்  உங்கள்  ஜீவன்  திருப்தியடையவில்லை ஆனால் நாம் உடல்.வாய்,,கண், மூக்கு,செவி,இவைகளுக்கு தேவையானதை கொடுத்து திருப்தி அடையும் செய்கின்றோம் இவைகளில் திருப்தி  அடையாத ஜீவன் பரமாத்மாவை தேடுகின்றது. இதை தரிசனம் செய்யவே இவன் பிறந்தான்,ஆனால் இவன் ஜீவன் வெளியே ஓடிக்கொண்டு இருக்கிறது