Monday, December 5, 2022
பீரு முஹம்மது
தானாகி யன்னர் உருவாய்-திசை
ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித்
தானொளி தான்கண்டு கூவ- இறை
தானவ னாசையால் நோக்கியே பார்க்க
ஆன புகழிறை யாசை-அந்த
அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க
தானே சுடராய் வழிந்து-கடற்
தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே
தன்னாசையால் வந்த நாதம்-அவன்
றானே கடலுயி ரோதிய வேதம்
அன்னத்தெவையும் படைத்து-வகை
யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப்
பின்னா லேவந்து பிறக்கப்-பல
கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து
மின்னிய மங்குல முன்ன-இந்த
மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே
வானத்தின் மேகம் பொழிய-இந்த
வையகத் தானிய மெங்கும் நெளிய
ஊனினான் மாதா பிதாவும்-அவன்
உதிரமே நாதமாய் ஓசை முழங்கி
ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த
ஆசையின் அவனொளி வாசந் துலங்கித்
தானத்தில் வந்து அளித்தே-உருத்
தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே
அந்த கருவிந்து நாதம்-அதில்
அன்னை யுதிரமுங் கூடின சூதம்
அந்த கருவைந்து பூதம்-அது
ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம்
விந்துக்குள்ளே தழல் நீதம்-அது
வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம்
அந்த குதிரைமேலேறும்-நந்தம்
ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........
~~~ பீரு முஹம்மது அப்பா
சத்தம் அடங்குமிடம்
சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்.....
சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை)
காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்?
நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே...
வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்".....
ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்)
புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா?
உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க..
வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்....
உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள்
அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்....
இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி....
தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும்
ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்....
வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்...
ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி...
பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்....
சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை....
இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்....
முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும்
---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
பரிசுத்தம் என்றால் என்ன?
❤பரிசுத்தம் என்றால் என்ன?💚
பரிசுத்தமானது இணை இல்லாத மதிப்பிட முடியாத ஒரு உண்மை. நீ காணும் நிலைகளுக்கு அப்பாலுக்கும் அப்பாலானது. அப்பொருளுக்கு நிகராக வடிவு உருவ சொரூபம் எதுவுமே இல்லை. அதைத்தான் சைவம் என்றும், பரிசுத்தம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்பொருளை இணை துணை நிகர் இல்லாமல் பரிசுத்தத்தைக் கொண்டு பரிசுத்தமான தலத்தில் நின்று போற்ற வேண்டும்.
அதே இடத்தில் நீ பரிசுத்த சைவமானால் அத்தலம் அவனாகும். அவன் நீயாகும், நீயும் அவனும் உயிரும் ஒளியுமாகும். நீ உயிராகும், அவன் ஒளியாகும். இரண்டும் உயிருக்குள் ஒன்றாகும். உயிருடைய ஒளியுடைய கண்தான் அவ்வுண்மை. அக்கண்ணைக் கொண்டே நீ அவனுடைய சிர் (இரகசியம்) அதுவே ஆத்ம பேரின்பப் பிரகாச ஞான ஜோதி ஆகும், அவ்விடத்தில் உனக்கு உருவம் இல்லை. வடிவு இல்லை. அவ்விடம் இணை துணை இல்லை. அந்நிலை ஒளிப்பிரகாசத்தின் நிகரற்ற தோற்றமாகும். அத்தோற்றத்திற்கு என்மதம், உன்மதம், என்சாதி, உன் சாதி, என் சமயம், உன் சமயம் என்ற வேற்றுமைப் பேதமை மறுக்கள் இல்லை.
சூபி
வாலறிவும் தலையறிவும்
வாலறிவும் தலையறிவும்
நாம பல இடங்களில் ‘வாலறிவு,வாலறிவன்” எனும் வார்த்தைகளை பார்த்திருக்கிறோம்,அதன் விளக்கங்களையும் பார்த்திருக்கிறோம்,ஆனால் வாலும் தலையும் அறியாமல் இருக்கிறோம்.இது ஒரு உருவகம்,ஞான உருவகம்,சில விஷயங்களை சூட்சுமமாக சித்தரிக்கும் முறை,அதாவது ஃபார்முலா மாதிரி அல்லது குறியீடு மாதிரி. அந்தந்த குறியீடு அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தெரியும், எது எதை குறிப்பிடுகிறது என்பது,அதன் விளக்கம் இன்னது என்பது.தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியவராது.அது போலத்தான் குண்டலினீ என்பதும். நம்ம மக்கள் ஏதோ பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது மாதிரி கற்பனை பண்ணிக்கொள்வார்கள்,கதையும் விடுவார்கள்.
மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கும் அற்புத தனித்தன்மை என்பது ஓசை ஒலிநய பாஷை கையாளும் தன்மை.இந்த அறிவு வாக்கறிவு எனப்படுகிரது. பரை விரித்த கோலம், ஏராளமான புள்ளிகள் போட்ட அற்புதக்கோலம்.ஒவ்வொரு கோலமும் ஒவ்வொரு பாஷைகள் போல போட்டு வைத்துள்ளனர் முன்னோர்கள்.ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு வித தன்மை உள்ளர்த்தம் கூட இருக்கும், உருவகம் இருக்கும்.நம்மில் இயங்கும் ஆற்றல்,பிராணசக்தியின் வெளிப்பாடு பல வித கோணங்களில் இருக்கின்றது.அவற்றில் முக்கியமானது பேச்சும் மூச்சும் தான்.மூச்சு தலை என்றால் பேச்சு வால்.மூச்சின் எழுத்து தான் தலையெழுத்து என்பது,பேச்சின் எழுத்து வாலெழுத்து.மூச்சு சிவம் என்றால் பேச்சு சக்தி, மூச்சு பேசா எழுத்து என்றால் பேச்சு பேசும் எழுத்து.இந்த பேச்சு மூச்சினுள் ஒடுங்கி நிற்கின்றது.அதாவது குண்டலினீ தன் வாலை வாயினுள் கவ்விகொண்டு துயில்கிறது என கற்பனை உருவகம்.
பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.இதை ஓதி ஓதி உணர்தல்,ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது,அதில் இருந்து கிளம்புவதால்,அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள்,அமிர்த பாஷிணி.அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்
நன்றி
திரு ரியான் ஐயா அவர்கள்
Sunday, December 4, 2022
கண்டத்தை கட்டி ஊர்த்வகதி
கண்டத்தை கட்டி ஊர்த்வகதி அப்யஸிக்கும் போது மட்டும் தான் சிவானந்த பரமஹம்ஸர் அவர்கள் அருளி செய்துள்ளபடி சுவாசமானது வெளியே செல்லாமல்,சப்தமானது அருகில் அமர்ந்திருப்பவருக்கு கூட கேட்க்காமல், வயறோ நெஞ்சு பகுதியோ எந்த வித அசைவும் இன்றி, சுவாசம் இருக்கிறதா இல்லையா என பக்கத்தில் வந்து பார்த்தால் கூட புலப்படா வண்ணம் சின்னதாக ஒரு ‘துடிப்பு’ மட்டும் ஆக இருக்கும்.அது தான் நிஜமான ஊர்த்வகதியாம் சித்த வித்யயாம் பிரம்மஸ்ரீ
மண்ணும் நீரும் மனதை நிர்ணயிக்கின்றது
Hseija Ed Rian இந்த உலகத்தின் மண்ணும் நீரும் மனதை நிர்ணயிக்கின்றது, மண்ணின் வளம் மனதின் குணம்,அரிசி சாப்பிடுகின்றவன் மனம் ஒண்ணு, கோதுமை சாப்ப்டிடுகின்றவன் குணம் ஒன்று, கஞ்சா சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு, கரும்பு சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு,எது ரத்தத்தில் கலந்திருக்கின்றதோ அந்த குணம் மனதுக்கு பலமாக அமையும்.விஷமான பொருட்கலை சாப்பிட்டால் ரத்தம் விஷமாகும், மனமும் அதை பிரதிபலிக்கும்.ஒரு நாள் இரவோடு இந்த மண்ணின் தனிமங்கள் மாறிவிட்டால் அனைவரின் ரத்தமும் மாறிவிடும், மனமும் மற்றொரு கோணத்தில் பிரதிபலிக்கும்.அல்லது நீ மற்றொரு உலகத்து தனிமங்களினூடு தாவர மாமிச உனவுகளை உண்ண ஆரம்பித்துவிட்டால் உன் மனமும் அவ்வண்ணமாக மலரும், தோற்றமும் அவ்வண்னமாக தோற்றமாகும், பரினமிக்கும்
Hseija Ed Rian மனம் உணவினாலும் நீரினாலும் நிலை கொள்கின்ரது, உனவும் நீரும் அற்றால் மனம் அற்றுவிடும், கண் காணாது பஞ்சடையும், காது கேட்க்காமல் அடைந்துவிடும், மண்ணின் மணமானது இல்லையெனில் நீ சுவாசிக்கும் காற்று கூட உன்னால் சுவாசிக்கமுடியாது, காற்றினில் கலந்திருக்கும் மூஉலக்கூறுகள் எல்லாம் மண்ணின் தன்மை ஒத்ததே, ஆகாயத்தில் மண்ணின் காந்தசக்தி வியாபித்திருக்கும் அளவுக்குள் இந்த மண்ணின் மூலக்கூறுகள் நிரைந்திருக்கும். இந்த மண்ணே உன் மனம்
Hseija Ed Rian மண்ணிலிருந்து பிரந்த நீ மண்ணுக்கே மண்ணாக போவாய்..மனம் மண்ணின் மணம் அல்லாது வேறல்ல, தாவரங்கள் மண்ணின் தன்மையை உறிஞ்சி பூத்து குலுங்குவதை போன்றே மனமும் பூத்து குலுங்கினிற்கின்றது. மனிதனும் ஒரு கொடிவகையே தான்
Hseija Ed Rian Lama Dhamo உயிர் மண்ணில்லாமல் வாழ்வு அற்றது,நீரின்றி வாழ்வு அற்றது,வளியின்றி வாழ்வு அற்றது,அனலின்றி வாழ்வு அற்றது, ஆகயினால் எது எதை சார்ந்து பிறப்புற்றதோ அது அதிலிருந்தே பிறப்புற்றது. மண்ணெதினால் பிறப்புற்றது என கேட்க்கில் அது உருவானதல்ல,நிலையானது. நிலையானது மாறுபாடுகளுக்குட்பட்டு உருமாற்றம் கொண்டு பலவாக திகழ்கின்றது.உயிரானது பலவாக தோற்றமுறுவதை போல உருவானதும் பலவாக தோற்றமுறுகின்றதுவாம்
Hseija Ed Rian Lama Dhamo மனமின்றி ஒன்றுமில்லை, அதனதின் மனம் அதனதின் காரணி.நம் உடல் உடலாக உருவாக மனமும் ஒரு காரணி.இங்கே முப்பொருட்கள் விலங்க காணலாம், இயற்கை அணுத்துகட்கள்,அதன் உட்படு உயிர் அறிவாற்றல்,அதனுட்படு மனமெனும் காரணி. இவை மூன்றையும் அகத்தியர் பெருமான் சொல்லும்போது அவர் இயல்புக்கு தகுந்தபடி,”உடலுயிரும் பூரனமும் மூன்றுமொன்று..அப்பனே உலகத்தில் சிறிது ஜனம் வெவ்வேறென்பர்” என பாடும்பாடல் நினைவுக்கு வருகின்றது
Hseija Ed Rian இவை மூன்றும் அனாதி வஸ்த்துக்கள் தாம், ஒன்றுடனொன்று இயைந்து மலர்ந்துள்ளன.உயிரின்றி உடலில்லை, உயிரறிவின்றி மனமில்லை என சேர்ந்தே ஒழுங்குபட தத்தம் கரும வினைபயனாற்றலின் தன்மைக்கொப்ப இயக்கமுற்றிருக்கின்ரன இந்நிகழ்வுகள் அனைத்தும். மனமானது இவ்வண்ணம் பல்லாயிரம் கோடி அண்ட தொகுப்புகளினூடேயும் தனித்தும் சேர்ந்தும் ஒருக்கால் பலவாக திரிந்தும் விலங்குகின்ரது
மனமும்புத்தியும்
மனமும்புத்தியும்
மனம், புத்தி ரெண்டும் வித்தியாசமானது
மனம் வேண்டும் என்பதை, புத்தி வேண்டாம் என்று கூறும்
ஆம், மனம் எப்போதும் ஆசை சம்பந்தப்பட்டதாக உள்ளது
ஆனால், புத்தி எப்போதும் தேவை சம்பந்தப்பட்டதாக உள்ளது
இதனால், இரண்டிற்கும் எப்போதும் முரண்பாடு வந்து கொண்டே இருக்கும் இப்படி, மனமும், புத்தியும் மோதிக்கொள்வதைத் தான் நாம் -குழப்பம் என்கிறோம்,,,,
ஒரே குழப்பமா இருக்கு,,,,என்ன முடிவு எடுக்கிறதுன்னே தெரியலை ன்னு சிலசமயங்களில் சோர்ந்து போயி,,,,நிறைய பேர்களிடம் அறிவுரை கேட்க, ஆரம்பிப்போம்,,,,
சிலசமயங்களில் நாமே சொல்வோம்,,-ரெண்டுமனசாஇருக்கு ன்னு
அதாவது போவோமா, போகவேண்டாமா, செய்வோமா, செய்ய வேண்டாமா இப்படி நிறைய அறிவாளிகள் தான் முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள்,,,,நாம் தான் அந்த அறிவாளிகள்,,,,எத்தனை முறை தவித்திருக்கிறோம்,,,,
காரணம் மனம் ஆசையிலும், புத்தி தேவையிலும் பேசும் என்பது புரியாதது தான்
சூ..சூ...சூ..சூ.
உடம்பில் ஓடிகிட்டு இருக்கிற ஜீவரெத்தம் தான் நாத உப்புண்ணு சொல்லகேட்டிருக்கிறேன், ரெத்தம் தான் உப்பு கரிக்கும்.... இங்க என்னல்லாமோ சொல்லிகிட்டு இருக்காங்க...முப்பு முப்புணு எதை எதையோ பாத்து சுட்டுகரிச்சுகிட்டு இருந்த முப்பு ஆகுமாண்ணு தெரியலே இந்த பரதேசிக்கு.. ஊத்தைசடலத்தை உப்பிட்ட பாண்டத்தை ...சூ..சூ...சூ..சூ...
இரத்தத்தில் சுக்கிலமும் சுக்கிலத்தில் பூரணமும் உண்டு ஐய்யனே...பிரிக்க தெரிந்தவன் பிரிப்பான் கண்ணே கண்மணியே கதிர்வேலவனே, "உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்தில் சிறிதுஜனம் வெவ்வேறென்பர்" -அகத்தியர்.
உயிர் என்பது ஜீவரெத்தம்.. உடலுக்குள் இருப்பது... அதனுள் இருப்பது சுக்கிலம். அதனுள் இருப்பது பூரணம், நாதத்தில் விந்துவும் ... விந்துவில் நாதமும் தோன்றும்.
அண்டம் சுக்கிலத்தால் ஆச்சு பிண்டம் ரெத்தத்தால் ஆச்சு .
இதன் கூட மூணாவது குருவுப்பு குரு சொல்லி தருவார்... அப்போது அண்டபிண்டம் நிறைந்த ஆதியந்தம் வாலைபோற்றி என சொல்லலாம்... அதுவே ஐயுங்கிலியுங்சவ்வும்.
"விந்துநிலை தனையறிந்துவிந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும்" .... இது யோகத்துக்கும் பொருந்தும் கற்பத்துக்கும் பொருந்தும்... ஒண்ணு தெரிஞ்சவன் அடுத்ததையும் தெரிஞ்சிருப்பான்....இங்க விந்து நிலையே தெரியாம அலட்டிகிட்டு இருக்காங்க.. பின்ன எங்க போயி நாதத்தை புடிக்கிறது?
அடிமுடிநடுவென்று மூன்று பாகம் அதிலேதான் நடுவாகும் கற்ப்பநேர்மை துடியாகவே திறந்து சொல்லகூடா சொல்லினால் தலைவெடுக்கும் என்று சித்தர் படியாகவே சாபமது போட்டதனாலே பரிவாக சித்தர்களும் சொல்லமாட்டார்.....சொல்லினா தலை வெடிக்கும் என சொன்னதை மக்கள் தலை பொளந்துபோகும்ணு அர்த்தம் கொண்டு பிதற்றிதிரிகின்றனர்
சித்தர்கள் யாராவது இதை சொல்லிதந்தால் நம்ம தலை வெடிக்கும்... தலையான அட்சரம் வெடிக்கும் ...வெடிச்சா அண்டகல் சிதறும் .. பொறுக்கிக்கவேண்டியது தான்😂😂😂
அதுதான் அமாவாசியில வருகிற தீபாவளி திருநாள்..வெடிவெடிச்சு அண்டத்தில் இருந்து கல் சிதறுவது...
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
இருதயம்
இருதயம்====
கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.
*சைவமதம் ஈசன் "இருப்பிடம"் இருதயம்* என்றும்
*வைணவம் "இருதய கமலவாசன்" என்றும்
*கிருத்துவம் புனித "இருதயம்" என்றும்
*இஸ்லாம் கல்பென்ற "இருதயத்தில்" அல்லா உள்ளான்* என்றும்
ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.
காரணம் இங்கே "இருதயம்" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு
புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது.
*இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.*
சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே
குருவே சரணம்.
-- ❤திரு. ரியான் ஐயா அவர்கள்❤
நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு?
நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு? ===
எண்ணற்ற கோட்பாடுகள்,எண்ணற்ற கொள்கைகள் என எல்லாம் குழம்பி போய் கூத்தடிச்சு நான் சொல்றது மெய்,நீ சொல்றது பொய் என அடுத்தவன் அடுத்தவனை குறை சொல்லியே உண்மை எதுவென அறியாமல் கடைசியில் ஒரு அருமையான வாழ்வு முடிந்துவிடுகின்றது.
ஞானியர் என சொல்லிகொண்டு பலபேர் வந்துபோயிருக்கின்றனர், ஆனால் சீடர்களுக்குத்தான் குழப்பம் திர்ந்தபாடில்லை. மறுபிறவி உண்டு என சொல்பவர்கள், மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள், கர்மம் உண்டு என்பவர்கள், கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள்,ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள்,ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள், எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள்,உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள், தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள்,குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள்,குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள். ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள், ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள். குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல், மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள், இயற்கையே கடவுள் என்பவர்கள். உயிர் தான் கடவுள் என்பவர்கள், ஜீவனே சிவன் என்பவர்கள்,நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள், நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள், வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள், என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல், மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என...
“அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
~ திருமந்திரம்
இரண்டு வித்தியாசமான அமைப்பை கொண்டுள்ள வஸ்த்துக்கள் ஒரு வட்டத்தின் சூழலில் அமையப்பெறின் அங்கு மூன்றாவது ஒரு சுழற்சி அசைவு உருவாகும்.
இறை ஆகாசத்தில் ஆன்ம அணுத்துகள் வந்து பெறுமாயின் இவை இரண்டுக்கும் இடையே மற்றொரு இயக்கம் ஆரம்பிக்கும். அந்த இயக்கம் இரண்டுக்கும் ஒற்றுமையாகவும், வேற்றுமையாகவும் கொண்டிருக்கும். அதனால் இவை இரண்டும் எதிர் எதிர் துருவங்களாக தனக்குத்தானே பலாபலம் கொண்டு இயக்கம் கொள்ளும்.
எப்போது இவை இரண்டும் ஒன்றாகிறதோ, அப்போது அசைவு நிலை நிற்க்காது மறைந்துவிடும்... அதுவரை உசும்புதல் நீளப்பெறும் அனந்தகால பேதமாக.. விதவித தோற்றங்களில் விதவித மாற்றங்களில் விதவித வண்ணங்களில்...
ஜீவன்னா என்னதுன்னு, நிமிட நேரத்தில் குருபிரான் காட்டிகொடுக்கும் அந்த அணுவினும் அணுவான பொருளை கண்ட பின், சீவகாந்தம் என்பது வெறும் மாயாஜாலமே. ஜீவனை அறிந்திறாதவர்கள் கொண்டாடும் வெறும் வாய்சவுடால்..
"அணு என்றாலே அனுமானமாகத்தானே உணர முடியும். புலன்களுக்கு எட்டாத விடயம் தானே."
புலன்களுக்கு எட்டாத ஒன்றுக்கு பெயர் எதுக்கு?. அணு என்றால் புலன்களுக்கு நுண்ணியது என பொருள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கோடானுகோடி உயிர்துகள் என ஒன்றுமில்லை, ஒரே ஒரு உயிர் அனு தான் தந்தை தாய்க்கு தானம் கொடுத்தது.. அந்த ஒரு உயிர் அணு தான் உடலை கட்டமைக்கின்றது.
மனிதனின் உடலில் இயங்கும் ரெத்த அணுக்கள் மற்றும் ஏனைய சூக்கும என்சைம்கள் போன்ற என்னற்ற உயிர் வடிவங்கள் இருப்பினும் அவை உடலுக்கு ஆதி காரணமான ஜீவ அணு அல்ல.
அணுவுக்குள்ளே எலக்டரான், புரோட்டான் என துகள்களும் அவை இயங்க வெளியும் உள்ளது. ஒரு ஜீவ அணுதான் என்று சொன்னாலும் அதிலேயே பலவும் உள்ளது.
ஜீவ அணு என்பது பவுதீக அணுவை போல புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் கொண்ட கட்டமைப்பு அல்ல ஜீ. இங்கே அணு என சொல்வதின் பொருள் மைனூட் என பொருள்படும். நீங்கள் கருதுவது போன்று பவுதீக நுண் அணு அல்ல. ”நுண்ணறிவு”. "அறிவே சொரூபமானது ஜீவ அணு".
அரூபம் ரூபமாகாது. பஞ்சபூதம் ஒருபோதும் அடர்த்தி நிறை கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை. மொத்த நிறை எப்போதும் சமமாகவே இருக்கும். இந்த பிரபஞ்ச விரிவை விட்டு எதுவும் அப்பால் செல்வதில்லை, இருப்பவை வெளியில் இருந்து வந்தவையும் இல்லை. இருப்பதுவே அதன் இருப்பு. மாயையே மறைப்பு.
ஜீவ அணு என்பது நீங்கள் அறிந்திராத காரணத்தால் மனம் இப்படி பலவிதமாக சொல்லத்தோன்றுகின்றது. தூல பவுதீக அணுவை மட்டும் அறிந்துள்லவர்கள் ஜீவ அணுவின் தன்மையை தத்தமது நிலைக்கொப்ப வளம் செறி கொளுவது இயல்பே ஆம்.
நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி. இதை தான் "சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே" என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம்.உன் உடல் குளிர்ந்து போகும்.
குருவில்லா ஆன்மீகம் குருட்டாட்டம் கேள்
குணமில்லா சீடனுக்கும் குருவுக்கும் தான்
வருத்தமுற்று குருபாதம் தேடினாக்கால் வருத்தமற்று வகைபலவும் வசத்திலாகும்
நிருத்தமுற்ற சேவடிதான் நீழலகும்
நிருவிகற்ப நிட்டயுந்தான் நிமிடமாகும்
பருத்திவிட்ட பஞ்சதைபோல் பரத்திலாடும்
பரபிரம்ம சொரூபத்தை கரத்திலாக்கே
ஆதியின்றி அந்தமின்றி அருளு வந்துதித்ததோ
நீதியின்றி நிறமுமின்றி நிர்மலமும் கதிச்சதோ
வேதமின்றி விறகுமின்றி நீரதுவும் கொதிச்சதோ
பூதமஞ்சினும் புகுந்த கொள்ளி பூசையதுவும் கொண்டதோ.
~~~ ரியான் பஞ்சவர்ணகிளி
ஆத்ம வணக்கம்
-- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️
Subscribe to:
Posts (Atom)