Sunday, December 4, 2022
சூ..சூ...சூ..சூ.
உடம்பில் ஓடிகிட்டு இருக்கிற ஜீவரெத்தம் தான் நாத உப்புண்ணு சொல்லகேட்டிருக்கிறேன், ரெத்தம் தான் உப்பு கரிக்கும்.... இங்க என்னல்லாமோ சொல்லிகிட்டு இருக்காங்க...முப்பு முப்புணு எதை எதையோ பாத்து சுட்டுகரிச்சுகிட்டு இருந்த முப்பு ஆகுமாண்ணு தெரியலே இந்த பரதேசிக்கு.. ஊத்தைசடலத்தை உப்பிட்ட பாண்டத்தை ...சூ..சூ...சூ..சூ...
இரத்தத்தில் சுக்கிலமும் சுக்கிலத்தில் பூரணமும் உண்டு ஐய்யனே...பிரிக்க தெரிந்தவன் பிரிப்பான் கண்ணே கண்மணியே கதிர்வேலவனே, "உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்தில் சிறிதுஜனம் வெவ்வேறென்பர்" -அகத்தியர்.
உயிர் என்பது ஜீவரெத்தம்.. உடலுக்குள் இருப்பது... அதனுள் இருப்பது சுக்கிலம். அதனுள் இருப்பது பூரணம், நாதத்தில் விந்துவும் ... விந்துவில் நாதமும் தோன்றும்.
அண்டம் சுக்கிலத்தால் ஆச்சு பிண்டம் ரெத்தத்தால் ஆச்சு .
இதன் கூட மூணாவது குருவுப்பு குரு சொல்லி தருவார்... அப்போது அண்டபிண்டம் நிறைந்த ஆதியந்தம் வாலைபோற்றி என சொல்லலாம்... அதுவே ஐயுங்கிலியுங்சவ்வும்.
"விந்துநிலை தனையறிந்துவிந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும்" .... இது யோகத்துக்கும் பொருந்தும் கற்பத்துக்கும் பொருந்தும்... ஒண்ணு தெரிஞ்சவன் அடுத்ததையும் தெரிஞ்சிருப்பான்....இங்க விந்து நிலையே தெரியாம அலட்டிகிட்டு இருக்காங்க.. பின்ன எங்க போயி நாதத்தை புடிக்கிறது?
அடிமுடிநடுவென்று மூன்று பாகம் அதிலேதான் நடுவாகும் கற்ப்பநேர்மை துடியாகவே திறந்து சொல்லகூடா சொல்லினால் தலைவெடுக்கும் என்று சித்தர் படியாகவே சாபமது போட்டதனாலே பரிவாக சித்தர்களும் சொல்லமாட்டார்.....சொல்லினா தலை வெடிக்கும் என சொன்னதை மக்கள் தலை பொளந்துபோகும்ணு அர்த்தம் கொண்டு பிதற்றிதிரிகின்றனர்
சித்தர்கள் யாராவது இதை சொல்லிதந்தால் நம்ம தலை வெடிக்கும்... தலையான அட்சரம் வெடிக்கும் ...வெடிச்சா அண்டகல் சிதறும் .. பொறுக்கிக்கவேண்டியது தான்😂😂😂
அதுதான் அமாவாசியில வருகிற தீபாவளி திருநாள்..வெடிவெடிச்சு அண்டத்தில் இருந்து கல் சிதறுவது...
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
இருதயம்
இருதயம்====
கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.
*சைவமதம் ஈசன் "இருப்பிடம"் இருதயம்* என்றும்
*வைணவம் "இருதய கமலவாசன்" என்றும்
*கிருத்துவம் புனித "இருதயம்" என்றும்
*இஸ்லாம் கல்பென்ற "இருதயத்தில்" அல்லா உள்ளான்* என்றும்
ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.
காரணம் இங்கே "இருதயம்" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு
புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது.
*இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.*
சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே
குருவே சரணம்.
-- ❤திரு. ரியான் ஐயா அவர்கள்❤
நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு?
நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு? ===
எண்ணற்ற கோட்பாடுகள்,எண்ணற்ற கொள்கைகள் என எல்லாம் குழம்பி போய் கூத்தடிச்சு நான் சொல்றது மெய்,நீ சொல்றது பொய் என அடுத்தவன் அடுத்தவனை குறை சொல்லியே உண்மை எதுவென அறியாமல் கடைசியில் ஒரு அருமையான வாழ்வு முடிந்துவிடுகின்றது.
ஞானியர் என சொல்லிகொண்டு பலபேர் வந்துபோயிருக்கின்றனர், ஆனால் சீடர்களுக்குத்தான் குழப்பம் திர்ந்தபாடில்லை. மறுபிறவி உண்டு என சொல்பவர்கள், மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள், கர்மம் உண்டு என்பவர்கள், கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள்,ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள்,ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள், எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள்,உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள், தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள்,குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள்,குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள். ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள், ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள். குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல், மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள், இயற்கையே கடவுள் என்பவர்கள். உயிர் தான் கடவுள் என்பவர்கள், ஜீவனே சிவன் என்பவர்கள்,நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள், நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள், வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள், என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல், மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என...
“அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
~ திருமந்திரம்
இரண்டு வித்தியாசமான அமைப்பை கொண்டுள்ள வஸ்த்துக்கள் ஒரு வட்டத்தின் சூழலில் அமையப்பெறின் அங்கு மூன்றாவது ஒரு சுழற்சி அசைவு உருவாகும்.
இறை ஆகாசத்தில் ஆன்ம அணுத்துகள் வந்து பெறுமாயின் இவை இரண்டுக்கும் இடையே மற்றொரு இயக்கம் ஆரம்பிக்கும். அந்த இயக்கம் இரண்டுக்கும் ஒற்றுமையாகவும், வேற்றுமையாகவும் கொண்டிருக்கும். அதனால் இவை இரண்டும் எதிர் எதிர் துருவங்களாக தனக்குத்தானே பலாபலம் கொண்டு இயக்கம் கொள்ளும்.
எப்போது இவை இரண்டும் ஒன்றாகிறதோ, அப்போது அசைவு நிலை நிற்க்காது மறைந்துவிடும்... அதுவரை உசும்புதல் நீளப்பெறும் அனந்தகால பேதமாக.. விதவித தோற்றங்களில் விதவித மாற்றங்களில் விதவித வண்ணங்களில்...
ஜீவன்னா என்னதுன்னு, நிமிட நேரத்தில் குருபிரான் காட்டிகொடுக்கும் அந்த அணுவினும் அணுவான பொருளை கண்ட பின், சீவகாந்தம் என்பது வெறும் மாயாஜாலமே. ஜீவனை அறிந்திறாதவர்கள் கொண்டாடும் வெறும் வாய்சவுடால்..
"அணு என்றாலே அனுமானமாகத்தானே உணர முடியும். புலன்களுக்கு எட்டாத விடயம் தானே."
புலன்களுக்கு எட்டாத ஒன்றுக்கு பெயர் எதுக்கு?. அணு என்றால் புலன்களுக்கு நுண்ணியது என பொருள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கோடானுகோடி உயிர்துகள் என ஒன்றுமில்லை, ஒரே ஒரு உயிர் அனு தான் தந்தை தாய்க்கு தானம் கொடுத்தது.. அந்த ஒரு உயிர் அணு தான் உடலை கட்டமைக்கின்றது.
மனிதனின் உடலில் இயங்கும் ரெத்த அணுக்கள் மற்றும் ஏனைய சூக்கும என்சைம்கள் போன்ற என்னற்ற உயிர் வடிவங்கள் இருப்பினும் அவை உடலுக்கு ஆதி காரணமான ஜீவ அணு அல்ல.
அணுவுக்குள்ளே எலக்டரான், புரோட்டான் என துகள்களும் அவை இயங்க வெளியும் உள்ளது. ஒரு ஜீவ அணுதான் என்று சொன்னாலும் அதிலேயே பலவும் உள்ளது.
ஜீவ அணு என்பது பவுதீக அணுவை போல புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் கொண்ட கட்டமைப்பு அல்ல ஜீ. இங்கே அணு என சொல்வதின் பொருள் மைனூட் என பொருள்படும். நீங்கள் கருதுவது போன்று பவுதீக நுண் அணு அல்ல. ”நுண்ணறிவு”. "அறிவே சொரூபமானது ஜீவ அணு".
அரூபம் ரூபமாகாது. பஞ்சபூதம் ஒருபோதும் அடர்த்தி நிறை கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை. மொத்த நிறை எப்போதும் சமமாகவே இருக்கும். இந்த பிரபஞ்ச விரிவை விட்டு எதுவும் அப்பால் செல்வதில்லை, இருப்பவை வெளியில் இருந்து வந்தவையும் இல்லை. இருப்பதுவே அதன் இருப்பு. மாயையே மறைப்பு.
ஜீவ அணு என்பது நீங்கள் அறிந்திராத காரணத்தால் மனம் இப்படி பலவிதமாக சொல்லத்தோன்றுகின்றது. தூல பவுதீக அணுவை மட்டும் அறிந்துள்லவர்கள் ஜீவ அணுவின் தன்மையை தத்தமது நிலைக்கொப்ப வளம் செறி கொளுவது இயல்பே ஆம்.
நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி. இதை தான் "சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே" என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம்.உன் உடல் குளிர்ந்து போகும்.
குருவில்லா ஆன்மீகம் குருட்டாட்டம் கேள்
குணமில்லா சீடனுக்கும் குருவுக்கும் தான்
வருத்தமுற்று குருபாதம் தேடினாக்கால் வருத்தமற்று வகைபலவும் வசத்திலாகும்
நிருத்தமுற்ற சேவடிதான் நீழலகும்
நிருவிகற்ப நிட்டயுந்தான் நிமிடமாகும்
பருத்திவிட்ட பஞ்சதைபோல் பரத்திலாடும்
பரபிரம்ம சொரூபத்தை கரத்திலாக்கே
ஆதியின்றி அந்தமின்றி அருளு வந்துதித்ததோ
நீதியின்றி நிறமுமின்றி நிர்மலமும் கதிச்சதோ
வேதமின்றி விறகுமின்றி நீரதுவும் கொதிச்சதோ
பூதமஞ்சினும் புகுந்த கொள்ளி பூசையதுவும் கொண்டதோ.
~~~ ரியான் பஞ்சவர்ணகிளி
ஆத்ம வணக்கம்
-- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️
சொல் பிறந்த இடமெங்கே
சொல் பிறந்த இடமெங்கே ===
இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது.. ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது... ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல... அது இறை படைப்பு... அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை... எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா
இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா
மனிதன் நாவு பேசுகிறது.. மிருகங்கள் பேசமுடிவதில்லை... அது மனிதனின் முதிர்வு.. அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்.. அவன் அறிவின் வெளித்தோற்றம்... அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது... அது இருக்ககூடியது , செயற்கை அல்ல.. .அப்படியானது இயற்கை உண்மை... பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்.. ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை.
தமிழ் எனும் சொல்லுக்கிட்ட உரையில் வள்ளல்பெருமான் அட்சரங்களில் “அறிவுகலைகள்” செயல்கொண்டிருக்கிறது என சாட்சியபடுத்துகிறார், சற்று பார்க்கபுலப்படும் ஐயா.
அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும், குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உயிர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்... அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை.. அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான். அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று...
மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்.
இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள்...
==❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
தன்னையறிய மனம்
தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா? ===
உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?...
அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது...
அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்.... எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....
பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது.
இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம்.
வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்
அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை.
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
இறைவனால் வகுக்கபட்டது வேதம்..
இறைவனால் வகுக்கபட்டது வேதம்..அதை யாரும் கையாலோ மற்ற எந்த உபகரணத்தாலோ எழுத முடியாது.
அது தான் வேதம் என யாரும் சொல்ல வேண்டியதில்லை... அதுவே சொல்லும்...ஒளிக்கு சாட்சி தேவையில்லை எங்கிருந்து அறிவு கிடைக்கிறதோ அது வேதம்.
வேதம் ஒன்று தான், அதை கண்டவர்கள் மட்டும் ஒன்றைத்தான் பேசுவார்கள். காணாதவர்கள் எல்லாம் பலவாறாக பேசுவார்கள். யாரொருவர் பலவாறாக பேசுகிறார்களோ அவர்கள் வேதத்தை கானவில்லை, அவர்கள் பேச்செல்லாம் ஏகதேசம், நிச்சயமான உண்மை அல்ல என்பதே உண்மை. அது எந்த பெரிய ஞானிகள் என நீங்கள் கொண்டாடுபவர்கள் ஆனாலும் சரியே தான்.
வேதத்தை கண்டவர்கள், அறிந்தவர்கள் என நீங்கள் சொல்லும் வேதங்களை பாருங்கள், அதில் உலகம் இன்ன விதமாக சிருஷ்ட்டிக்கபட்டது என தீர்க்கமாக சொல்லபட்டிருக்கிறதா என்ன?.. உலகத்து படைப்புகள் இன்னவிதமாக சிருஷ்ட்டிக்கபட்டனர் என சொல்லபட்டிருக்கிறதா என்ன?..எங்கே எடுத்து காட்டுங்கள் உங்களுடைய ஞானிகளின் வேதத்தில் இருந்து, சவால் விடுகிறேன். நீங்கள் சொல்லும் ஞானிகள் இதன் உற்பத்தியை சொல்லியிருக்கிறார்களா? பெரிய ஞானிகள் என பீத்தி கொள்வதோடு சரி. அவங்கள் கதை முடிந்து விடுகிறது. இருக்கிறது எனில் எடுத்துகாட்டுங்களேன்.
கடவுள் நிற்பது அண்ட சராசரங்களின் அளப்பிடமுடியாத வல்லபத்திறதின் பின்னால், அவனுடைய ஆற்றல் மறைந்திருப்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் பின்னால். சொல்லபடுகின்ற எந்த வேதமும் இதை ஆரம்பமாக சொல்லத்தான் செய்கிறது, ஆனால் ஒவ்வொருவேதமும் ஒவ்வொரு விதமாக சொல்லிகொண்டு திரிகின்றன. பலவிதமாக சொல்லிகொண்டு திரியும் வேதங்கள் உண்மைத்தான் சொல்லுகின்றன என எப்படி நிச்சயபடுத்திகொண்டீர்கள் என சொல்லுங்களேன். என்னுடைய நிச்சயம் இவையான வேதங்கள் உண்மையை அறியவில்லை இதுவரைக்கும். இந்த உண்மையை தெரிவிக்காத வேதங்கள் எல்லாம் உண்மையை அறிந்திறாதவை. கற்பனை படைப்புகள். ஏதோ அந்தந்த காலத்துக்கு தக்கபடி மக்களை திருப்திபடுத்துவதற்க்கு தக்கபடி மனித கைகளால், மனித மனத்தினால் ஒப்புக்கொள்ளும் படியாக கற்பனையாக உருவாக்கபட்டவைகளே அன்றி உண்மையை உண்மையென கண்டு இது இன்ன விதமாகத்தான் சிருஷ்ட்டிக்கபெற்றன என அறுதியிட்டு கூற இயலாத வேதங்கள். அவற்றை சுமந்துகொண்டு திரியும் உங்களை போன்ற வேதாந்திகள் இதை வாய் கிழிய பெசினாலும் உண்மை பொய்த்து போகாது.
சிருஷ்ட்டியை கூட தெரியாத வேதங்கள் கூறும் முக்தி எப்படியானது ஆக இருக்கும் என சற்று நினைத்துபாருங்கள். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதுக்கு பிறந்தோம், யாரால் பிறந்தோம், எப்போது பிறந்தோம், என கூட சொல்லத்தெரியாத வேதங்கள் அதற்க்கு முன்னே எப்படி முக்தி எதுக்கு முக்தி எப்போது முக்தி எவ்வாறு முக்தி யாரால் முக்தி என விளம்பரம் பண்ணிகொண்டிருக்கின்றன. இது தான் உங்க ஞானமா?. இதைத்தான் ஞானம் என்கிறீர்களா?.எங்கே உங்க ஞானிகள் வேதம், எடுத்து பிரித்து போடுங்கள். ரகசியங்களை கேட்கிறேன், பதில் வேதங்களில் இருந்து வரட்டும், அவை உண்மையை தெரிந்திருக்கின்றன எனில்....
மனிதன் ஏன் விதவிதமான வர்ணங்களில் படைக்கபட்டான் எனும் சின்ன கேள்விக்காவது உங்கள் எந்த வேதமாவது பதில் சொல்லுமா?..அல்லது சொல்லதெரியுமா? ஏன் மனிதனை படைப்பதற்க்கு முன்னரே இறைவன் வர்ணங்களை நிர்ணயித்தான், வேதத்தை பிரித்து பார்த்து பதில் சொல்லுங்களேன், சற்று காத்திருக்கிறேன்...
நன்றி:
❣️திரு. ரியான் அய்யா❣️
எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம் ===
எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம் ===
ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்
--- பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை"
குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல
ஒரு முனையில் “நான்” என இருக்கும்.. மறு முனையில் மனம் என இருக்கும்.. இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர்.
அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே --- திருமூலர்.
மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும்
ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா?
இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும்
உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....
தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என.
உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம் )
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️
ஆதம்
ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும் :
அதல்லாத் தொழுகையது ஆற்றில் கரைத்தபுளி" ===
ஊமை எழுத்தே உயிராச்சு ஓமென்ரெழுத்தே உடலாச்சு நாமிந்தெழுத்தை அறிந்துகொண்டோமென நாடி கும்மி அடியுங்கடீ...
அண்டசராசரங்கள் அனித்திற்க்கும் அனித்து மதங்களுக்கும் அவை எவையும் உண்டாவதற்க்கும் முன்னே அனாதிஅனந்தங்கோடி கற்பாந்தங்களுக்குமுன்னே எக்காலகோடிகளுக்கும் கோடாலங்கிருதங்களுக்கும் முன்னே இருக்கும் எழுத்தறிவு அது இலங்கும் தலமிது...அதுவே கமலக்கண்....
எல்லா பாஷைகளுக்கும் ஒரு மொழியாய் அடங்கி எல்லா தொனிகளும் ஒரு தொனியாய் முழங்கி அங்கிங்கெனாதபடி அகம்புறமாய் விளங்கும் “மெய்பொருள்”
அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்...அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை.இப்படி “இவ்விடுதலையே “ வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....
அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே..
மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர தியான சம்பிரதாயங்கள்...
பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...
முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்.....
சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை)
காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்?
நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே...
வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்".....
ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்)
புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா?
உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க..
வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்....
உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள்
அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்....
இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி....
தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும்
ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்....
வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்...
ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி...
பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்....
சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை....
இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்....
முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும்
---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
பிரபஞ்சம்
பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து ஜீவன்களும் ஒரு மரத்தின் விதைகள். அவ்விதைகளில் இருந்து தோன்றிய தொடர்கள்.... விதைக்கு "ஜீவன்" என பெயர்.. தாய் மரத்திற்க்கு "ஜீவசிவம்" என பெயர்... அது அனாதியாகவே இருக்கின்ற பொருள்.. அது தான் இருக்கின்றது, அதுவல்லாதது இல்லை... உடலம் உருவாக்குவதும் அதுவே, உடலத்துள் குடியிருப்பதும் அதுவே உடலத்து மனத்துக்கு ஆதாரமும் அதுவே..உடலத்தை அபிமானிக்கும் "நான்” எனும் மனதின் கூற்றுக்கு ஆதாரமும் அதுவே.... அதுவே விரிவான விரிவெலாம் தாங்கி பணர்கொண்டெழுந்து விரிந்து பூத்துகுலுங்கி அணுக்கோடி பிரபஞ்சம் முதல் மகா அண்ட பெரிதான பகிரண்டகோடி பிரபஞ்ச வியாப்திவரை உயிராக நிறைந்துள்ளது...
- திரு. ரியான் ஐயா அவர்கள்
இது ஐந்நும் என் பொருள்
இது ஐந்நும் என் பொருள் ””””
சாலை ஆண்குரு திருப்பாதம் னமஸ்கரித்து அட்சரனிலை ஆரம்பம்..கிருபை சொரிவாராக...ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
’அகரம்-அவ்வு-ஏகம்’
இ-ஈ-னா--
து-ஊ-னா--
ஐ-என் -னா--
இந்-நன் -னா--
நு-ஊ-னா--
இம்-மன் -னா--
எ-ஏ-னா--
இன் -னன் -னா--
பொ-ஓ-னா--
ரு-ஊ-னா--
உள்-ளன் -னா--
இது ஆண்டவர் மணலில் எழுதி காண்பித்து கற்பித்தது.சாகா கல்வியாம் தமிழ்.
ஒரு எழுத்து உண்டாவதற்கு முன் முதலில் பொருள் வேண்டும், இரண்டாவது ஒலி, மூன்றாவது வரிவடிவம். ’அ’ இதன் உச்சரிப்பு: அ-ஆ-னா.இதில் மூன்று ஒடுக்கம் இருக்கிறது. அது குறிக்கும் விஸ்தரிப்பை கடல் என்று சொல்லலாம் என்றால், கடலின் கரையை காணலாமே. ஆனால் ஒலியின் கரையை காணமுடியாது. ’அ’ என்று குறுக்கி உச்சரிப்பதானது,மூன்று கால் உரியில் இரண்டு அறுந்து போனது போல்.
அ-ஆ-னா என்று சொல்ல வேண்டுவதை அனேக காலமாக சொல்லாது,’அ’ என்று சொல்லி வந்துவிட்டதால்,அந்ந அக்ஷரத்தின் பிரயோஜனம் இவனுக்கு இல்லாமல் போய்விட்டது.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் உள்ளது.
இதில் மூன்று இலக்குகள் இருக்கின்றன.அம்மூன்றும் என்னென்னெவென்று இந்ந உலகம் முழுவதும் சேர்ந்நு சொல்லட்டும் பார்ப்போம்.
=== மகாமகத்வம் பொருந்நிய ஆண்டவர் திருவாக்கியம். ஆமீன்..ஆமீன்..ஆமீன்.
❤️ இறைரகசியத்தை விளக்கி அருளியது
- திரு. ரியான் ஐயா அவர்கள்.❤️
Subscribe to:
Posts (Atom)