Sunday, December 4, 2022
சிருஷ்டி
சிருஷ்டிக்கு ஆதாரம் ஆண்-பெண் ஜோடி என்பது அனைவரும் அறிந்திருக்கின்றதே.
கருமுட்டை உருவாக்குதல், கருவை சுமத்தல், தாய்மை அடைதல், பிறப்பு வழங்குதல், பால் ஊட்டுதல், வளர்த்தல் என பெண்ணிடத்தில் இவ்வளவும் அமைத்து வைக்க தெரிந்த கடவுளுக்கு பெண்ணிடத்திலேயே ஒரு சிறுதுளி சுக்கிலத்தை அமைத்து வைக்கத்தெரியாதா என்ன?
--- ❤ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் ===
நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும்
அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!? எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன்.
தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன்.
எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம்.
---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
ஏழாம் வாசலும் - பத்தாம் வாசலும் ==== தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்" ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள். "த்' என்பது 7-வது மெய்யெழுத்து "ம்' என்பது 10-வது மெய்யெழுத்து "ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து "தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் "ஏழாவதாக " அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும். தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள். தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்) ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது. உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது. "ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி. "தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ். தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது. --- திரு. ரியான் ஐயா அவர்கள் ”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்
ஏழாம் வாசலும் - பத்தாம் வாசலும் ====
தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்" ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள்.
"த்' என்பது 7-வது மெய்யெழுத்து
"ம்' என்பது 10-வது மெய்யெழுத்து
"ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து
"தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது.
"த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் "ஏழாவதாக " அமைந்திருக்கின்றது.
தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும்.
தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள்.
தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்)
ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது.
உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது.
"ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி.
"தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ்.
தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.
--- திரு. ரியான் ஐயா அவர்கள்
”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே
== பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்
தாயின் கருவறை
தாயின் கருவறை சுழற்சியில் இருந்து உன்னால் விடுபட முடியாது, நீ மெய்யான ஞானத்தை அறிந்திராவிட்டால்.... ஆதம் பாதம் எனும் உன்னத அறிவை அறியும் வரை தாயுடன் உன் உறவு தொடரும்..
தாய் வழி விட்டு தந்தை வழியை நீ அறிந்து கொள்ளும் போது, தாய் உன் தந்தையை அறியப்படுத்தும் போது, உன் தந்தை மடியில் தவழ ஆரம்பிக்கின்றாய். தந்தை உன்னை வளர்க்கின்றார். ஞானத்தை புகட்டுகின்ரார், உன்னை அவரை போல நாதன் ஆக்கி உன்னதத்தில் வைக்கின்றார்.
-- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
ஒக்கச் சொன்ன அலிபு நடு
ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”... இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து.
பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்
~ (#பீருமுஹ்ம்மது #ஒலியுல்லாஹ்)
இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது.
ஒரு அலிபு, அதன் இரு புறமும் இரு லாம் சேர்ந்து வரும் அமைப்பு...
சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது. ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை
"மூச்சினோடியங்கி நிற்கும் முடிவிலா பொருளை நோக்கி....” என்ற நான்கு வரிகள். இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது.
❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
சூட்சும தேகம்
சூட்சும தேகம் =====
சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று.
வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது
இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம்
பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம்.
அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்?
முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா.
சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்....
பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!. அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே பக்கதுல இருக்கிறப்ப பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.
மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என.
--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
வெட்டவெளி தன்னை
வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடீ-குதம்பாய் பட்டயம் ஏதுக்கடீ
தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை ..குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன்’
தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை
தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல
தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்
நன்றி
திரு ரியான் அவர்கள்
சத் சங்கம்
சத் சங்கம்.===
அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்.. ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை
உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான்
புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.
ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....
ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....
இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.
----❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி
முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி ====
1) "சாகாத்தலை": யென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி.
2) "வேகாக்கால்": வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு.
3)"போகாப்புனல்": போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம்.
இதன் பொருள் விளக்கம் வருமாறு:
===== அடி, நடு, முடியென மூன்றுபாகம்... அதில் முதல் பாகம் ருத்திர பாகம், அடுத்து மகேசுவர பாகம், அதையடுத்து சதாசிவ பாகம்
===== ருத்திர தத்துவம் அதன் மேல் மகேசுவர தத்துவம் அதன் மேல் சதாசிவ தத்துவம் என மூன்று தத்துவம்
===== ருத்திர தத்துவம் என்பது வித்தியா கலை, மகேசுவர தத்துவம் என்பது சாந்திகலை, சதாசிவ தத்துவம் என்பது பிரதிஷ்ட்டா கலை எனப்படும்.
====== வித்தியா கலை என்பதுவே வஸ்து (பொருள்-மெய்பொருள்) எனப்படும்...சாந்திகலை என்பதுவே ஆன்மா எனப்படும், பிரதிஷ்ட்டா கலை என்பதுவே ஜீவன் எனப்படும்
===== மெய்பொருளினால் வெளிப்படுவது அருளானந்தம், அதுபோல ஆன்மாவினால் வெளிப்படுவது அன்பு, மற்றும் ஜீவனால் வெளிப்படுவது இரக்கம்
===== சாகத்தலை என்பது காரண அக்கினியில் அடங்கியுள்ளது... அதுபோல வேகாக்கால் என்பது காரணவாயுவில் அடங்கியுள்ளது... மற்றும் போகாபுனல் என்பது காரணதேகத்தில் அடங்கியுள்ளது.
====== ஆகையினால் காரண அக்கினி, காரணவாயு, காரன தேகம் இவை மூன்றையும் தக்க குருவின் கிருபையால் அறிந்து அடைந்து கொள்ளுதலே சன்மார்க்கத்தின் முதல் படியாகிய சகா கலை எனப்படும் சாகா கல்வி.
---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
சிவோஹம்
சிவோஹம் =====
சிவவும் அஹவும் இருக்கிறது என பொருள்.
சிவத்துக்கு அகம் பின்னாடி சேர்ந்து இருக்கிறது தெரியலே...
அகத்துக்கு சிவம் முன்னாடி சேர்ந்திருக்கிறது தெரியலே
வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.
ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.
இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .
“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”
‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==
(காகபுசுண்டர் உபநிடதம்)
--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
Subscribe to:
Posts (Atom)