Tuesday, November 29, 2022
செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா
செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா?
வள்ளலார் சொல்லுவதில் இருந்து,"சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”.
சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா?
..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்
சங்கநாதம்
இதை சித்தர்கள் சங்கநாதம் என கூறுகிறார்கள்.
இதைத் தாண்டி குரு உபதேசப்படி இவ்விரு சங்காலும் உள்ளிளுத்த சுவாசத்தை அடக்கி பின் சிலேத்துமநாடி எனப்படும் நடு நாடியாம்
சூட்சம நாடி வழியாக ஏற்றுவதைத் தாரை ஊதல் என சித்தர்கள் கூறுகின்றனர்.
இதற்கு சித்தர் ரகசிய சூட்சம பஞ்சாட்சர மந்திரம் ,எந்திரம்,தந்திரம் மூன்றும் ஒருசேர செயல்பட வேண்டும்.
அவ்வாறு தாரை ஊத வல்லவர்கள் சிவசக்தி சகிதமாய் சிவமாகவே ஆவார்.
இதை அறியாமலையே கோடான கோடி மாந்தர்கள் செத்து செத்து பிறக்கின்றனர் என்கிறார் சிவவாக்கியர்.
நாமென்ற ஒன்று நம் எண்ணங்களே. அது மனதோடு சம்பந்தப் பட்டது. அது 96 தத்துவங்களில் 43தத்துவங்களை தன்னகத்தே கொண்டு பயணிக்கும்.
பிறகு நானென்ற மனமானது சுக்கல் சுக்கலாகி காணாமல் போய் தானாகி நிற்பான் சிவம்.
“ஊனுக்குள் நீ நின்று உலவினது பாராமல் நானென்று நலமிழந்தேன் பூரணமே ..”
“யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாகி நின்றது தற்பரமே…”
உயிரை உடலாகக் கொண்டு இவ்வாண்மாவைப் பக்குவ நெறி படுத்த பலகோடி அணுக்களான உடலை தந்து ஒவ்வொரு அணுவிலும் சிவமே நிறைந்து
நாம் என்ற ஆணவம் தந்து மனம் எனும் நம்மை கருவியாகக் கொண்டு இவ்வாண்மாக்களை மேல் நெறிப் படுத்துகிறார்.
இதில் தெளியும் நானென்ற மனம் 43 த்துவங்களைக் கடக்கும் போது காணாமல் போய் அனைத்தும் சிவமாகவே ஆகிறது.
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் …
சங்கிரண்டு தாரையொன்று
சன்னல் பின்னலாகையால்
மங்கி மாழுதே உலகில்
மானிடங்கள் எத்தனை
சங்கிரெண்டையும் தவிர்ந்து
தாரையூத வல்லீரேல்
கொங்கை மங்கை பங்கரோடு
கூடி வாழலாகுமே…
நினைப்பதொன்று கண்டிலேன்
நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறைப்புமாய்
நின்ற மாயை மாயையே
அனைத்துமாய் அண்டமாய்
அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான்
இருக்குமாறு எங்கனே
வாசி வாசித்து பழகுவோம் வாங்க
Friday, October 5, 2018
வாசி வாசித்து பழகுவோம் வாங்க
”வாசி வாசி என்று வாசித்த பொருள் ஒன்று- சிவா சிவா என்று சிந்தித்த பொருளும் ஒன்று” என்பது சித்தர் வழக்கம். சாதாரணமாக பிராணாயாமம் செய்வதை தான் நம்ம மக்கள் வாசி யோகம்ண்ணு சொல்லி கேட்டிருப்பீங்க, ஆனா உண்மையில் வாசி யோகம் என்பது சிவா சிவா என சிந்தித்திருப்பதேயாம் என்பதை வெகுசிலரே அறிவர்.
வாசிப்பது என்பது ஒன்று சிந்திப்பது மற்றொன்று, ஆக இரு வித நிலைகள் ஒன்று சேர்ந்து வருவது தான் வாசி யோக நுணுக்கம். ஆனால் உண்மையில் இது பிராணாயாமமும் அல்ல ஜெபமும் அல்ல, ஆனால் இரண்டையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட முறையாகும் என்பது அறிவார் அறிவர்.
‘வாமத்தே ஈரெட்டு மாத்திரை பூரித்து ஏமுற்ற முப்பத்திரண்டும் ரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டும் கும்பிக்க உண்மையே” என திருமூலர் சொல்வதை கவனிக்க இதன் நுணுக்கம் புரியும்.
பூரித்து ரேசித்து கும்பித்து என சொல்வதை பார்த்தல் மக்கள் உடனேயே இது பிராணாயாம முறை தான் என நிர்ணயித்து விடுகின்றனர். ஆனால் “பிங்கலை கண்ணாக” எதோ சொல்லி வருகிறாரே மூலர், அது என்னவாம் என சிந்திப்பது இல்லை.
அப்ப..டாட்டா பை பை...அடுத்த பதிவுல கொஞ்சம் அதிகமா பார்ப்போம்..சரியா?
ஆதி புள்ளியே துணை
ஆதி புள்ளியே துணை
ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நீ
அஜபா காயத்திரி
====அஜபா காயத்திரி====
வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.
ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.
இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .
“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”
‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==
(காகபுசுண்டர் உபநிடதம்
Hseija Ed Rian அக்கினி சொரூபமாக பிரம்மம் நிறைந்திருந்து விளங்கும் சின்ன வாசல் தான் பிரம்ம வாசல்...உடல் நிறைந்து விலங்கும் அக்கினியின் காரன இடம், மூச்சுக்கு மூச்சு அக்கினி ஆவியாக வெளியாக அழிந்து கொண்டிருக்கும் நிகழ்வின் துவக்கம்
Hseija Ed Rian சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரிஅரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையையே சிவாயமே...அந்த சிவாயம் எனும் அக்கினி விளங்கும் இடம் இது தான்
Hseija Ed Rian அருமை ஜீ...மனம் அண்ணக்கின் நேரே பார்க்கணும்ங்கிறது தான் முக்கியம்...அப்படி பார்க்கையிலே மனம் லயனமாகும்...லயனம் ஆரம்பிக்கும் தருவாயில் கொஞ்சம் முன்னாடி தூக்கம் வந்து கெடுத்துரும்.அதுக்குத்தான் கண் தூக்கலாக வெச்சிருக்கிறது..இது ஒரு புறம் , வேறு நுணுக்கமும் இருக்கு ஜீ
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
என்னல்லாமோ செஞ்சு பாக்குறோம்..ஏதெல்லாமோ படிச்சு பாக்குறோம்..என்ன படிச்சாலும் சந்தேகம்ங்கிறது தீர்ந்தபாடில்லை. நாம இருக்குற நிலமை என்ன...எப்பை மாட்டிகிட்டு தவிக்கிறோம்...எங்க மாட்டிகிட்டு திணறுகிறொம்ம்..இப்படி அல்லோலபட்டு வாழ்க்கை பாழாக போறதுக்கு என்ன பாவம் செஞ்சோம்ங்கிறது எத்தனை காலம் யோசிச்சாலும் புத்திக்கு வராது, தீர தீர கேள்விகள் பல பதிலில்லாமல் பெருகிகிட்டே தா வரும். புத்தர் மாதிரி எங்காச்சும் போயிருந்து துக்கத்துக்கு காரணம் என்னாண்ணு ஆலோசனை பண்ணாலும் பதில் வராது.எண்ணா நாம மாட்டி கெடக்கிற விதம் அப்படி.
ஒரு குண்டாக்கு நூல் கட்டை ஒழுங்கில்லாமல் சின்னி சிதறி அலங்கோலமாக்கி ஒரு குழந்தைகிட்ட குடுத்து அதை அவுத்து சீராக சுற்றி வைக்க சொன்னா நடக்கிற காரியமா என்ன ..அது போலத்தான் வாழ்க்கையும்...எந்த ஒழுங்கும் இல்லாம ஆயிரம் கோடி காலத்து கர்மங்கள் வினை தொகுப்புகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக கோடி முறை குதர்க்கமா குழப்படியா ஒண்ணுக்கு உள்ள ஒண்ணாக, அது மற்றொண்ணுக்கு உள்ளாக , அது எல்லாம் ஆயிர கோடி முறை கண்ணிகளால் இறுக்கபட்டு கண்ணிகள் இறுகுமே தவிர இளகாமல் அமைந்த த்ன்மையால் கடைசியில் சாவு தான் நிச்சயம்ண்ணு வந்து வாய பொளந்து கிட்டு நிக்குது.
அகத்தியர் சொல்ற மாதிரி,அருமையான புரிதல் வந்தா புரியும், ”உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று, உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறென்பர்” என்கிறார். உடல் எங்கிருந்து ஆரம்பம்ண்ணு கேட்டா பதில் இல்ல, உயிரின் ஆரம்பம் கேட்டாலும் பதில் இல்ல, அப்ப பூரணம் என்பது பூரணமாக கைவிட்டு போச்சு.
மனிதன் பூரணமாகவே இருக்கிறான்,பூரணமே அவன் இயற்கை. இதை தான் வேத வசனமும் ‘பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணம் உதச்சதே” என சொல்லுது. அகத்தியரின் வசனத்தின் உயர்ஞானம் இதுவே. உடல் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல. உயிர் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல, அது போல பரிபூர்ணம் உடலுக்கும் உயிருக்கும் வேறல்ல, இவை மூன்றும் ஒன்று தான்.இவை வெவ்வேறு எனுமிடத்தில் மனம் குழப்பம் மிகுந்து புரிதல் இன்றி அலை போல திணறுகிறது. அன்பே சிவம்
மறுபதிப்பு குண்டலினீயின் ரகசியம்
மறுபதிப்பு
குண்டலினீயின் ரகசியம் - Hseija Ed Rian
==========================
குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.
ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.
குண்டலினீய தவம்
குண்டலினீய தவம்
‘கூறாத மந்திரத்தின் குறிப்பறிவித்து....
ஏறாநிலையெனை ஏற்றுவித்து....’
என ஆங்காங்கு குரு பரம்பரையினில் மட்டும் ஒதுங்கி எக்காலத்தும் தலையை வெளிக்காட்டாது, தலை ஏது வால் ஏது என புரிதலுக்கு இடம் கொடாது மறைந்து மூலகுகைக்குள் அடங்கி ஒடுங்கி தன்னிலை அற்று தனிமையே குணமாக முக்குணத்துக்கும் ஆதாரமாக எத்தேவருக்கும் தாயாக ஈனா மலடியாம் பெருஞ்சூலி திரிபுரை சின்னபெண் சித்து விளையாட காத்திருக்கின்றாள்,
அவள் தன்னையே பகுத்து சரிபாதி அந்த ஈசனுக்கும் கொடுத்தவள் ஆம் தயாவல்லி.அவள் சொரூபத்தை சித்தர்கள் ஞானிகள் என அறிந்தவர் யெவரும் சொல்ல கூச்சபட்டனர்,அவ்வண்ணமான சொரூபம்.அதான் அவள் மறைவாகவே உலாவுகிறாள் பெருங்கள்ளி.
அவளுக்கு என மட்டும் அவள் அறிவின்றி யெவரும் அறிந்திரா மந்திரம் தான் மூல மந்திரம், எழுகோடி மந்திரங்களுக்கும் தாயான மந்திரம்.அதை சித்தர்கள் வாய் விட்டு சொல்லாமல் மறை பரிபாஷையாகவே சொல்லி சென்றிருக்கின்றனர்.மூலாக்கினி எனவும் குண்டலினீ எனவும் வாலை எனவும் சூலி எனவும் வல்லபை எனவும் வாக்மயி எனவும் தேவி எனவும் பல ரூப பல பேத பல நாமம் அனேகம் விதம்.ஆயினும் அந்த ஓரெழுத்து தான் என்னவோ அவள் ரகசிய குறி????
’ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே’.=திருமூலர்
Mathi இடம் வலம் சாதித்தால் மத்தியார் னத்திலே வாத்தியம் கேட்கலாம் னு திருமூலர் சொல்றாரு.
அதான் இங்க லெப்ட் ரைட்னு மிலிட்டரி பரேடு நடக்குது. :) கொஞ்ச நேரத்துல வானத்தை நோக்கி டுமீல் னு ஒரு சத்தம் வரும். வெயிட் பண்ணி பாருங்க . சிவன் கூத்து வெளிப்படலாம்
Mathi தொடர்ச்சி ---
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்
நடு நாடியும் நடு மூக்கும்
நடு நாடியும் நடு மூக்கும்
‘நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’
‘நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர் வெழா வாயுவை உள்ளே அடக்கி துயரற நாடியே தூங்க வல்லார்க்கு பயனிது காயம் பயமில்லை தானே’..
இவ்வாறாக திருமந்திரமும் ..
“விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
26:
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
27:
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;”
இவ்வாறாக புசுண்டர் பிரானும் ....
சொல்லும் நுண்ணிய நுணுக்கம் என்பது தான் நடுமூக்கும் நடு நாடியும் அல்லவா?
இரண்டு கண்களும் மூக்கும் சரியாக செங்குத்து கோணத்தில் சந்திக்கும் இடமே சுழுமுனை எனும் ‘பாலம்’.இந்த பாலத்தினுள் தான் ‘க’ எனும் பரமான்மா உறைவிடம்.அதனால் இது கபாலம் என்றாயிற்று.’முச்சந்தி’ என்பதும் இவ்விடம் தான்.
மனமானது இவ்விடத்தில் நிலை கொள்ள அச்சணமே வலது இடது நாசிகளின் ஊடான இயக்கம் மேல்முகப்படும் என்பது அனுபவ உண்மை..
கொஞ்சம் பக்கத்துல வாசி வாசிக்க வந்திருக்கோம்ண்ணு தோணுது...அப்புறம் பார்ப்போம் வாசிக்கறது எப்படீண்ணு
தன்னை அறியும் தலமேது?
தன்னை அறியும் தலமேது?
“'தன்னை அறியுங் தலமேது சொல்லடி சிங்கி!-அது கணணிடை யான நடுநிலை யலவோ சிங்கா!”-பீரு முஹ்aமது ஒலியுல்லாஹ் அப்பா.
”கண்ணிடையான நடுநிலை” என்பதை சற்று ஆராய்ந்தால் உடனடியாக அறிவுக்கு வருவது ஒரு சாரர் கூறுவது போன்ற திருவடி தவம் எனும் கண்மணி தவம்.இதை தான் அம்மக்கள் அறிதியிட்டு கூறுவார்கள்.இங்கே ’கண்ணிடை’ என்பதோ ‘நடுநிலை’ என்பதோ கண்மணியை தான் குறிக்கிறது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடுத்து சொல்லபடும் விளக்கமானது புருவமத்தி தான் ‘கண்ணிடையான நடுநிலை” என்பர் பலர்.’புருவமத்தையை’ ஏன் ‘கண்ணிடை” என சொல்லவேண்டும் என கேட்டால் விளக்கமான புரிதல் இல்லை. புருவமத்தியை வேணுமென்றால் ‘நடுநிலை” என குறிப்பிட்டு இருந்தால் ஒப்புகொள்ளலாம். ஏனெனில் புருவ மத்தியும் நடுநிலைகளில் ஒன்று தான்.
இப்படி கொஞ்சம் நடுநிலைகளை தான் நாம் ஆதாரங்கள் என சொல்கிறோம். அப்போது ‘கண்ணிடையான நடுநிலை” என்றால் ”கண்ணிடையான ஆதாரம்” என கொள்ளல் வேண்டும். அது எதற்க்கு ஆதாரம் என்றால் ‘தன்னை அறியும் தவத்துக்கு ஆதாரம்”.
உங்கள் கண்கள் மேலும் பார்க்க வேண்டாம், கீழும் பார்க்க வேண்டாம், இடதும் பார்க்க வேண்டாம் ,வலதும் பார்க்க வேண்டாம், உள்ளும் பார்க்க வேண்டாம் ,வெளியும் பார்க்க வேண்டாம். கண்கள் திறந்தே இருக்கட்டும்.. ."கண்ணிடயான நடுநிலையில்” மனம் இருக்கட்டும்..சற்று ஆழ்ந்து இளைப்பாறுங்கள்...தூக்கம் போல..ஆனால் தூக்கம் அல்ல..நீங்கள் ஜாக்கிரதையாக தூங்காமல் தான் இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ளுவீர்கள்...மறுபடியும் . "அந்த தூக்கம் போல” வரும்..கண்களில் இருள் சூழும்..தூக்கம் போல வரும்...ஆனால் தூங்காமல் தான் இருக்கின்றீர்கள்...அப்படி தூங்காமல் தூங்கி வர சுகம் தான் ..சுகம்
Subscribe to:
Posts (Atom)