Monday, November 28, 2022
"கண்"ணன் தேவ இரகசியம்
*"கண்"ணன் தேவ இரகசியம்*
எவனொருவனுக்கு இரவும் பகலும் கண்கள் இமையாமல் ஒரு நினைவாகவும், கால்கள் இரண்டும் பூமியின் பரிசமின்றி நிலை கொள்கின்றதோ அவர்களை தேவர்கள் என்பாயாக. மற்றெல்லாம் பொய்யர்கள் என்பாயாக.
குருபிரானால் கூறப்பட்ட, உள்முகமாய் சுட்டப்பட்ட, லட்சிய தலத்திலே உட்கண்ணை செலுத்தியும் வெளி தோற்றத்தில் கண்ணானது வெளிமுகமாகவும், இமைத்தல் முதலியவை அற்றிருக்கின்ற தன்மையே சாம்பவீ முத்திரை என்று எல்லா தந்திர ஞானங்களிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அறிவாயாக.....
🌺திரு. ரியான் அய்யா அவர்கள்🌺
உச்சி தனிலிருந்து உருவாகி
உச்சி தனிலிருந்து உருவாகி
உச்சி தனிலிருந்து உருவாகி அலிபாகியே நடுவே பச்சி தனில் தரித்து பலமாகவே இல் என்றிருந்துகொண்டு வெச்சிதனை கடந்து இல்லல்லாஹூ என எழும்பி நின்று அச்சரமானதுவை அருளாக தரும் திருக்கையிதுவே
~(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானக்குறம்
உடல், ஓ பிக்குவே ஆன்மா
உடல், ஓ பிக்குவே ஆன்மா அற்றது. ஒருவேளை ஓ பிக்குவே இவ்வுடலில் ஆன்மா உறைந்துள்ளது எனில் துக்கத்தினால் அவதியுறும் தன்மை இல்லாமல் இருந்திருக்கும்,’இந்த உடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் ஏற்பாட்டுக்கு வாய்ப்பு இருந்திருக்க்கும்.அவ்வண்ணம் எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பதினால் ,அவ்வண்ணம் ஏற்பாட்டுக்கு ஆதாரமான ஆன்மா இல்லாமல் இருப்பதினாலும்’ இவ்வுடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் கட்டளை செய்யும் ஆன்மா இல்லாமல் உடல் முதல் ,மனம், மெய்யுணர்வு வரைக்கும் அனைத்தும் ஆன்மாவற்றது
~புத்தர்
சாதாரண மக்களுக்கு இது புரியாது ஜீ..இந்தியாவை விட்டு புத்த தம்மம் அகன்று போக நிச்சயமான காரனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆன்ம தத்துவம். ஆன்ம கோட்பாட்டை அவ்வளவு எளிதாக இந்திய சிந்தனையில் இருந்து அகற்றிவிட முடியாது. எப்போது ஆன்ம தர்சனம் மயக்கம் என தெளிவு வருகின்ரதோ அப்போஒது தான் புத்த தர்சனம் என்ன என புரிய ஆரம்பிக்கும். இல்லையெனில் எண்ணற கர்ம சுழற்சிகளின் ஊடாக பயணித்து பல பிறப்புகள் கடந்து தான் சாத்தியம் என்பது நிதர்சனமான உண்மை
ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்ல்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது
நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது
பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே..இது தான் நிலை.... இது மயக்கம்
இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்
Hseija Ed Rian ‘நான்’ எனும் இருப்பின் நிதர்சன ரூபம் வஜ்ர பிம்பமாக வெளியாக மனதின் மயக்கம் அற வேண்டும், இல்லையெனில் ஆன்மா என ஒன்று தனியாக இருக்கின்றது என மனம் பேதலித்து திரியும்
Hseija Ed Rian மனமே ‘நானாக’ மனம் தன்னையே ‘நான்’ என சொல்லி, அந்த ‘நானே’ மனமல்ல ,மற்றொன்று எனவும் ‘தன்னையே’ அறியாமல் உழன்று கொண்டு திரிகிறது
Mathi Hseija Ed Rian மனமே இல்லையெனில் கர்மம் இல்லை அப்படித்தானே...
"என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயல் என்று
உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ
இங்ஙனம் வந்து மூண்டதுவே......பட்டினத்தார்
Hseija Ed Rian கர்மம் என்பது எல்லா செயல்களும் தான், நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி ,அவையெல்லாம் கர்மம் எனும் கட்டுக்கள் வரும். அகர்மம் என்பது கர்மங்களை நிராகரிப்பது, செயலாற்றாமல் இருக்கும் தன்மை. விகர்மம் என்பது ஞானம், எல்லா கர்மங்களையும் பந்தம் அற்று நிசங்கத்துடன் செயலாற்றும் அர்ப்பண செயல்
Hseija Ed Rian கர்மம், மனத்தால் செய்யபடுவது உண்டு, உடலால் செய்யபடுவதும் உண்டுமனம் உடல் சேர்ந்து செய்யபடுவதும் உண்டு
Hseija Ed Rian உடலால் செய்தாலும் மனதால் செய்தாலும் இவை இரண்டும் சேர்ந்து செய்தாலும் கர்மம் கர்மம் தான், அதற்க்கு ஏற்ப பலன் நிச்சயம் உண்டு. வினை உண்டு எனில் வினை பயனும் கூடவே உண்டு. இவை இரண்டும் அபின்னமானவையே.
Mathi குறைபாடுகள் தேகமுள்ள மனிதர்களும், சிறுவயதிலே அறிவு மேலோங்கி இருக்கும் நபர்களையும் காண்கிறோம்... இது கர்மாவை வைத்து தான் நடக்கிறதா ?
Hseija Ed Rian குறைபாடுள்ள மனம் கொண்டவர்கள் செய்யும் கர்மமும் பலனை கொடுப்பனவையே, குறைபாடுள்ள உடலை கொண்டவர்கள் செயலும் பலனை கொடுப்பவையே.ஆனால் குறைபாடின் தன்மைக்கு ஏற்ப்ப குனநலன்களும் குறையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?. ஆனால் கர்ம பிறவி என்பதும் கர்ம பூமி என்பதும் ஒன்றோடொன்று பந்தம் கொண்டவை. 80 ஆயிரம் கோடி கர்ம பூமிகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒவ்வொன்றிலும் பிறப்பதும் கர்ம புண்ணியம் பாவம் நிமித்தமே தான்.
Hseija Ed Rian கர்ம பூமிகள் என சொல்லபடுவது இப்பூவுலகு போல, கர்ம பலன்கலால் பிரதிபலிக்ககூடிய உலகங்கள் தாம். இவ்வுலககமும் கூட ஒரு பிரதிபலிப்பு தான். கர்மங்களுக்கு ஏற்ற பிரதிபலிப்பு
Hseija Ed Rian இவ்வுலகத்தின் ஒத்த கர்ம நியதி கொண்ட பிறப்புகள் மட்டும் தான் இங்கு பிறக்கும், பிறக்க முடியும். இந்த உலகத்துக்கு ஒவ்வாத மேல்நிலை கீழ்நிலை பிறப்புகள் இங்கு பிறக்கமுடியாது. அவை ஏனைய கர்மபூமியிங்கல் பிரக்கும்.
·
Hseija Ed Rian ஜோதிடம் கணிதம் வரைதான் கற்றேன், பலஸ்ருதிக்கு போக
Hseija Ed Rian பித்ருகர்மம் என்பது செயல் தானே, அப்போது பலன் கூடவே இருக்கவேணும் அல்லவா?
Hseija Ed Rian ஒருவன் ஒரு பாறாங்கல்லை உடைக்கின்றான் என கொள்ளுங்கள். அந்த உடைக்கும் செயலுக்கு பலன் அவன் கர்ம பந்தத்தில் பலனாக பரிணமிக்கும். அதேவேளை உடைக்கபட்ட பாறாங்கல் ஒருபோதும் பழையபடி ஆவதில்லை, உடைத்த பலனை தாங்கி எக்காலமும் நிற்கின்றது. அடுத்து வருபவனுக்கு உடைக்கும் வாய்ப்பு கிடையாமல் போய் விடுகின்ரது,ஏனெனில் அது உடைபட்டு விட்டது. அப்படியிருக்க, உடைபட்ட கல்லை தரிசிக்க கர்மம் செய்தவன் மட்டுமே அதை தரிசிக்கிறான். முழு கல்லை தரிசிக்க கர்மம் உடையவன் உடைந்த கல் அருகாமையில் வருவதில்லை.
ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா
ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா
ஊசிக்கு துளையெங்கே நந்தலாலா-ஊதும் உறவுக்கு கதியெங்கே நந்தலாலா-பேசிதிரிந்தாரடி நந்தலால-பேச்சு பிதற்றலென காணாரடீ நந்தலாலா-வீசு அரிவாளுக்கு தான் துளையுளதோ -வீணர் வாய்சொலுக்கும் தான் தளையுளதோ-மாசு அறுத்தடைந்தால் துளையடைந்திடுமோ-வெற்றிமேல் செல்ல துளை திறந்திடுமோ-ஊசிக்குத்தான் மூலதுளையிருக்க-பேசு பரிபாஷைக்குத்தான் துளை மேலிருக்கோ-ஊசியின் முனையெங்கு தான் துளையாகி-வீணாய் விகற்பம்தான் கொண்டாரடி நந்தலாவே -Rian
கண்
கண் என்பது அது அனைத்திற்க்கும் மையமாக இருப்பதினால் கண் என புனை பெயர், ஊற்றுக்கண் என சொல்லுவது போல. அதிலிருந்து தான் ஜீவ வெப்பம் கிளம்புகிறது.. அது இரெத்தத்தின் ஊடாய் கலந்து உடம்பு முழுதும் ஜீவனை பிரதிபலிக்கிறது...அது கெட்டுபோகாமல் இருக்க செய்வது உபாயத்தால் ஆகும். உடலில் எங்காவது உஷ்ணம் அற்று போனால் அந்த இடம் முழுதும் மரத்து போய்விடும்., பிறகு அது ஜீவனற்று விடும், உணர்ச்சிக்கு வராது, புலனுக்கு வராது. அப்படி தன்னுக்குளே இருக்கும் அக்கினிக்கு உணவு கொடுப்பதே உண்மை ஹோமம்.
--- ரியான் அய்யா சத்விசாரத்திலிருந்து
பிராணன் என்பது என்ன?
பிராணன் என்பது என்ன?
மண்ணாகி மரமாகி பல்லுயிர் அரக்கராய் தேவராகி என பிறவிகள் பல பலவாக ஆன்மா புகுந்து மனிதனாக பிறக்கின்றான் என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.ஒவ்வொரு பிறவியிலும் பிறந்து இளைத்து கர்ம பலன்களின் தொகுப்பால் மனித தூலம் கிடைக்கபெறுகின்றது என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.
ஒவ்வொரு பிறவிகளும் பிறக்கும்போதும் அப்பிறவிகளிலெல்லாம் பிராணன் நசித்து மாயயாகி செத்து போகின்றனவா?.ஒவ்வொரு பிறவிகளிலும் பிராணன் நசித்துத்தான் ஜீவசாலங்கள் எல்லாம் நசித்து போகின்ரன எனில் அடுத்த பிறவியில் அதே ஆன்மாவுக்கு பிராணன் எங்கிருந்து கிடைக்கின்றது?.
தன்னிலிருந்து பிராணன் நசித்து அதோகதியாக போகமல் இருக்கவே சித்தவித்தை எனில் தானான ஆன்மா எதற்க்கு மாயை ஆக நசிக்க துவங்கியது?. அல்லது தானான ஆன்மா தன்னிலே இருந்து சதா நசிக்கும் தன்மை கொண்டது எனில் அப்புறம் தன்னிலே நசிக்காமல் ஊர்த்வகதியாக்கி கொண்ட பின் என்ன பலன்?..அந்த பிரானன் மீண்டும் முன்னம் இருந்தபடி நசித்து அதோகதியாக சலனமுறாது என்பதற்க்கு என்ன விளக்கம்?.
பல பல பிறவிகளை சித்தவேதம் ஒப்பு கொள்கின்றது எனில், முன்னம் பல கோடி சென்மங்களில் செய்த பாவ புண்ணிய சஞ்சித பிரார்த்வ ஆகமிக கர்மங்களின் தொகுப்பு ஜீவசமாதி ஆனவனுக்கு உள்ளிருக்குமா அல்லது அவையும் அற்றுவிடுமா?.
ஜீவசமாதி ஆனவனின் கதி என்ன?.அவனுக்கு மேல் பிறப்பு எதுவும் இல்லையா?அல்லது முன் பிறப்புகள் எல்லாம் இருந்ததில்லையா/..ஜீவசமாதி ஆனவர்களை எழுப்ப யாரோ வருவார்கள் என நம்பபடுகின்றதே, அதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?. அப்படி ஜீவசமாதி ஆனவர்களை எதற்க்கு எழுப்பவேண்டும்?.எழுப்பினவர்களின் கதி தான் என்ன?..ஜீவசமாதி தான் மோட்ச சூத்திரம் சொல்லும் மோட்சமா?
சற்று யாராவது விளக்கினால் நல்லது..புரிதல் அதிகமாகி ஆனந்தம் உண்டாக பிரயோஜனமாக இருக்கும்.
பிராணன்
பிராணன் முதல் முதலாக இயக்கமுறும் செயலே தான் அழுகைக்கு காரணம், ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கின்றது. பிராணனின் இயக்கமே மனம் என சொல்லபடுகின்றது, அது அறிவு அறிந்து கொள்ளும் தன்மையினால் மனம் என அறிவுடன் கலந்து அறிவாகவும் அறிவற்ற தன்மையாகவும் மனம் இயக்கத்தில் உள்ளது.
முதல் இயக்கம் என்பது வெளி வாயு உட்புகுதலாகும், அதுவே ஜீவன் எனப்படும் அபானன்.. வெளி போவது பிராணன் என சொல்லபடும். இவற்றை சரிசமமாக நிலைநிறுத்துவதே பிராணாயாமம்.
உண்மையில் சொல்லப்போனால் பிரபஞ்சத்து வாயுவான காற்று அல்ல பிரானன், அபானன் என சொல்ல விழைவது. எனினும் அதனூடாய் இயக்கமுறும் இரு வெவ்வேறு இயக்கமான சலனம் தான் உண்மையில் பிராண அபான சலனம். சலிப்பதினால் அதை ஜீவன் எனவும் பிரானன் எனவும் சொல்கிறோம்.
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே . -- திருமந்திரம்
--- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
தன்னை அறியும் தலமேது?
====தன்னை அறியும் தலமேது?====
“'தன்னை அறியுங் தலமேது சொல்லடி சிங்கி!-அது கணணிடை யான நடுநிலை யலவோ சிங்கா!”-பீரு முஹ்aமது ஒலியுல்லாஹ் அப்பா.
”கண்ணிடையான நடுநிலை” என்பதை சற்று ஆராய்ந்தால் உடனடியாக அறிவுக்கு வருவது ஒரு சாரர் கூறுவது போன்ற திருவடி தவம் எனும் கண்மணி தவம்.இதை தான் அம்மக்கள் அறிதியிட்டு கூறுவார்கள்.இங்கே ’கண்ணிடை’ என்பதோ ‘நடுநிலை’ என்பதோ கண்மணியை தான் குறிக்கிறது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடுத்து சொல்லபடும் விளக்கமானது புருவமத்தி தான் ‘கண்ணிடையான நடுநிலை” என்பர் பலர்.’புருவமத்தையை’ ஏன் ‘கண்ணிடை” என சொல்லவேண்டும் என கேட்டால் விளக்கமான புரிதல் இல்லை. புருவமத்தியை வேணுமென்றால் ‘நடுநிலை” என குறிப்பிட்டு இருந்தால் ஒப்புகொள்ளலாம். ஏனெனில் புருவ மத்தியும் நடுநிலைகளில் ஒன்று தான்.
இப்படி கொஞ்சம் நடுநிலைகளை தான் நாம் ஆதாரங்கள் என சொல்கிறோம். அப்போது ‘கண்ணிடையான நடுநிலை” என்றால் ”கண்ணிடையான ஆதாரம்” என கொள்ளல் வேண்டும். அது எதற்க்கு ஆதாரம் என்றால் ‘தன்னை அறியும் தவத்துக்கு ஆதாரம்”.
உங்கள் கண்கள் மேலும் பார்க்க வேண்டாம்,கீழும் பார்க்க வேண்டாம், இடதும் பார்க்க வேண்டாம் ,வலதும் பார்க்க வேண்டாம், உள்ளும் பார்க்க வேண்டாம் ,வெளியும் பார்க்க வேண்டாம். கண்கள் திறந்தே இருக்கட்டும்...’கண்ணிடயான நடுநிலையில்” மனம் இருக்கட்டும்..சற்று ஆழ்ந்து இளைப்பாறுங்கள்...தூக்கம் போல..ஆனால் தூக்கம் அல்ல..நீங்கள் ஜாக்கிரதையாக தூங்காமல் தான் இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ளுவீர்கள்...மறுபடியும் .’அந்த தூக்கம் போல” வரும்..கண்களில் இருள் சூழும்..தூக்கம் போல வரும்...ஆனால் தூங்காமல் தான் இருக்கின்றீர்கள்...அப்படி தூங்காமல் தூங்கி வர சுகம் தான் ..சுகம்.
நம்முள்ளே
நம்முள்ளே தான் இறைவனும் ஆண்டவனுமாகிய அருட்பெரும் ஜோதியார் கலந்திருக்கின்றார் என்கிறீர், அதுபோலவே வள்ளலாரும் கலந்திருக்கின்றார் என்கிறீர்.. இவர்கள் இருவரும் இங்கே நம்முடலில் கலந்திருக்கின்றார் எனில் ஏன் வடலூரும், சிதம்பரமும் சென்று அரோகரா கோஷம் போடுகின்றீர் என்பது தான் புரியாமல் இருக்கின்றது.
உலகத்துல பொறக்கிற எல்லா கொழந்தைங்களும் உச்சரிக்கிற முதல் உயிர் எழுத்து தானே எம்மொழிக்கும் முதலான உயிர் எழுத்தாக இருக்கமுடியும்? அல்லவா..? அதை சொல்லி முதலெழுத்து என காட்டாமல் எதையோ காட்டி உயிரெழுத்துங்கறாங்களே, இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும்? ...அப்படித்தானே? *"இயற்கை உண்மை.. இயற்கை உண்மை”* என சன்மார்க்கிகள் கத்துறாங்களே, இதுவல்லவா இயற்கை உண்மையாக இருக்கமுடியும்...??? கொழந்தை மொதலிலே உயிர் அடையாளமானதை வெளிப்படுத்தி அழும்போதல்லவா காத்து கிட்டு நின்ன தாய்க்கும் தகப்பனுக்கும் சுற்றத்தார் உறவினருக்கும் மகிழ்ச்சி பொங்கும்?.. *"உயிர் வந்திருச்சு”* என்கிறார்கள்... அப்படித்தானே?.. அப்ப உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?... இப்ப புரியுது போல தெரிகிறது அல்லவா, வள்ளலார் இதனை உரைநடைப்பகுதியில் தெள்ளத்தெளிவாக சொன்ன உளவு....???
நம் உடலில் இருந்துகொண்டு இருக்கும் உயிரையே புரிந்து அறிந்து கண்டு கொள்ளாமல் எங்கோ அருட்பெரும்ஜோதியை காடான காடுமேடெல்லாம் தேடி அருளை ஏதொ ஒரு பொருளென நினைத்து கொண்டு இருக்கும் ஜீவனை இழந்து போவதை விட கொடுமை எதுவாக இருக்கமுடியும்?
தன்னுயிரையே கணு அன்பு செலுத்தி, உயிரின் உயிராம் அருளை உணர்ந்து, அந்த அருளின் உயிராம் இறைவனை அடைவதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணையோ, நல்லெண்ணையோ, நெய்யோ விட்டு எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் அருளை தேடுவதை போன்று ஒரு மூடத்தனம் இருக்கமுடியுமா?
இறந்துவிடும் உயிரை இறவாத உயிருடன் சேர்ப்பதே சாகாகல்வி ஐயா... அதுவே சன்மார்க்கம் ஐயா
சாகாகல்வி என்பது சாகாமல் இருக்கும் உயிருக்கு தேவை இல்லையே... சாகும் உயிருக்கு அல்லவா சாகாகல்வி தேவை?????
அவ்வண்ணம் சாகும் உயிரை அறிந்து அது சாகா நிலையை அறிந்து அடைந்து கொள்ளுதலே சாகாகல்வி.
அடைவதற்க்கு ஒன்றுமில்லை, நீங்கள் அதாகவே இருக்கிறீர்கள், *"நீங்கள் தான் அதாக இருக்க தடையாக இருக்கிறீர்கள்”*... உங்களில் “நீங்களே” தடை அற்று விட்டால் அதுவே இருக்கிறது...உங்கள் உடலும் மனமும் பிரானனும் உயிரும் அதுவே...இப்படியிருக்க அதை அடைவது எளிதல்லவோ..
தன்னுடலை தான் என்பதும், தன் மனதை தன்னுடையது என்பதும், தன் உயிரை தன்னுடையது என்பதும், தன் எண்ணங்களை தன்னுடையது என்பதும், தன் பேச்சை தன்னுடையது என்பதும், தன் செயல்கள் அனைத்தும் தன்னுடையது என்பதும், தன் உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் தன்னுடையது என்பதும், ஆக இதுவே இருமை எனப்படுவது. இருப்பது ஒருமை மட்டுமே, அதனை காணாது, உணராது இருமையால் அவதியுறுவதே குழப்பத்திற்க்கெல்லாம் காரணம்.....
தன்னுடைய செயல்களில் இறை செயல் என உணர்பவன் இருமையை கடக்கிறான், தன் எண்ணங்கள் இறை எண்ணங்கள் என உணர்பவன் இருமையை கடக்கிறான், தன் அங்ககுலங்கள் அத்துணையும் இறை அங்கங்களே என உணர்பவன் இருமையை கடக்கிறான், இவ்வண்ணம் தன் பேச்சுக்கள், தன் மூச்சுக்கள் எல்லாம் ஒருமையின் வடிவமே என உணபவன் நாளடைவில் ஒருமையின் இன்பத்தை நுகர்கிறான்... ஒருமை அவனை ஆட்கொள்ளதுவங்கும்.... ஒருமை வளர தயவு வர்த்திக்கும், தயவு வர்த்திக்க அருள் காரியப்படும்... அருள் காரியப்பட முக்தி சித்திக்கும்... இருமையில் இருந்தான பரம் முக்தி... இதுவே வேதாந்த சித்தாந்த கலாந்த ஆறந்த கடந்த முடிபு.
❣️ நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.❣️
ஜீவான்மாவானது
ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது , தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்”, எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.
- திரு. ரியான் ஐயா அவர்கள்
Subscribe to:
Posts (Atom)