Monday, November 28, 2022

மனமே

மனமே ஒன்று இருக்கின்றது என்று உணர்ந்தால்பிறவி மனித பிறவியாஇல்லைவேறு ஏதாவதாதாமனித பிறவிஇவை அனைத்தும் மனம் ஒன்று இருக்கின்றது ஆன்மா ஒன்று இருக்கின்றதுஇவை ஸ்தூலத்திலோ சூட்சுமத்திலோ என்ற நம்பிக்கை இருக்கும் வரைஇவை அனைத்தும் இல்லை என்ற நம்பிக்கை வரும் பொழுதுஎந்த பிறவியும் இல்லை என்ற எண்ணங்கள் உருவாகும்இந்த பிறவியில் எதெல்லாம் உண்மை ஏன்று நம்புகின்றோமோ அவை அனைத்தும் இல்லாமல் போகும்உண்மை இல்லை என்று எதெல்லாம் தெறிகின்றதோ அதெல்லாம் நடக்கும்இது உணர்தலா புரிதலா ஆண்மாவா மனமா எண்ணங்களின் தொகுப்பா ஊழ்வினையா கர்மவினையா புண்ணியமா பாவசெயலா கடவுள் இருந்து நம்மை நடத்துகின்றாரா கடவுள் இல்லாமல் நடக்கின்றதா இதையெல்லாம் அவர் அவர்கள் அனுபவிக்கும் நன்றி ரியான்  ஐயா அவர்கள்

The Spiritual Seed

The Spiritual Seed மண்ணை கிளற கிளற அது அருமையான வளம் பெறும், விதை விதைப்பவன் மண்னை நன்றாக அறிந்திருப்பான்... மண்ணில் இருக்கும் சின்ன சின்ன கூழாங்கற்களை பொறுக்கி மாற்றுவதும் அவன் கடமையே அல்லவா? மண் பக்குவமாகும் போது விதை தானே விழும். பக்குவம் ஆகாத மண்ணில் விதை விழுந்து என்ன பயன்..விதை முளைக்குமா? சில பேருக்கு ஆசை இருக்கும்... ஆவல் இருக்கும்... ஆன்மீக தாகம் இருக்கும் என்பதும் சரி.. ஆனால் விதை முளைக்க அதுமட்டும் போதாது... அருமையாக விதையை கவ்வி மூடிகொள்ளுகிற பசையான மண் வேண்டும்.. நீர் நயப்பு இருக்கவேண்டும்.... அதிக ஆழமாகவும் விதை செல்ல கூடாது.. வெகு மேலாகவும் விதை இருக்ககூடாது... காகம் கிளி முதலியவை கொண்டு சென்றுவிடும். இதை தான் மனம் என்கிறோம்... மனமும் மண்ணும் ஒன்றே தான். இதனாலத்தான் மண்டையில களிமண்ணா இருக்கு என நையாண்டித்தனமாக பேசுவர் ஞானிகள். கொஞ்சம் விதை இருக்கிறது...பார்க்கும் இடமெல்லாம் நிலமும் இருக்கிறது.... விதை விதைப்பவன் கண்டமேனிக்கு விதையை அள்ளி வீசிகிட்டு போவானா...? அது மாதிரித்தான்...மனம் என்பது விளைநிலம்...அதை பண் படுத்தி நீர் ஓட வாய்க்கால் போட்டு அதை கிளறி..எரு விட்டு அப்புறம் சீஸண் பார்த்து தானே விதையை போடுவான் விவசாயி....ஒரு விவசாயியே இப்படி என்றால் ஆன்மீக விதை விதைக்கிறவன் என்னவெலாம் பார்க்க வேண்டும் கொஞ்சம் விதைகள் விதைத்து இருக்கிறேன்..அந்த விதைகள் அனேகம் விதைகளை தூவ வேண்டும்...பல விருட்சங்கல் முளைக்கவேண்டும்...இங்கு நான் என ஆக ஒன்றும் இல்லை..எல்லாம் இறை சித்தமே.

உணர்ந்த

இங்க “உணர்ந்த” என குறிப்பிடுவது “எதை கொண்டு” உணரவேண்டும் என விளக்கினால் அருமையாக இருக்கும்.மனம் இல்லாதது என எதை கொண்டு உணரவேண்டும்?ஆன்மா நிரந்தரமாக் இருக்ககூடியது என எதைகொண்டு உணரவேண்டும்? நான் மனம் இல்லை என எதைகொண்டு உணரவேண்டும்? நான் ஆன்மா என எதைகொண்டு உணரவேண்டும்

அறிவு விளக்கம்

அறிவு விளக்கம் விவசாயம் என்பது கத்து கொடுக்கமுடியாது...மண்வெட்டி எடுத்து வெட்டி கிளைத்து வர வர அதுவே புது பரிணாமத்தில் பயிற்சியாக அமைந்து உங்கள் இயல்புக்கு தக்கபடி மலரும்... யாரையும் காப்பி அடிக்க வேண்டாம்...நீங்கள் நீங்களாகவே மலருங்கள்..பயிற்சியில் ஏதாவது திருத்தம் வேண்டும் எனில் உங்கள் அறிவே கொஞ்சம் கொஞ்சமாக காட்டிகொடுக்கும். உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு...உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான் ஒரு மரத்துல எப்படி ஒரு வித்துக்குள்ள இருக்கிற அறிவு தான் ஒரு மரத்தையே உருவாக்குவது போல... தந்தையின் சுக்கிலம் தாயோட சுரோனிததோட போய் கரு உருவாகி அதில் இருக்கிற ஒரு வஸ்து தான் மனித உருவை வளர்கிறது. ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது. அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது. ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம். பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது. இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ"அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார் வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்... அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது... ஆனால் விளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி... தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்.. தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை “இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்..... அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது.... அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு” .... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு... இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது.. அறிவு பல விஷயங்களுக்கு புரிதல் உண்டாக்கிகொள்ளவேண்டும்...எல்லா விதத்திலும் மேன்மையான புரிதல் உண்டாகும்...அது காலத்தின் கையில் இருக்கிறது...நாம் அனைவரும் முயற்சி செய்யவேண்டும்...ஒரு சமயம் முயற்சி எல்லாம் வீணாகி போகும் தருவாயில் புரியவேண்டியது நன்றாக புரிந்திருக்கும்...அது முயற்சியினால் வந்தது அல்ல..அறிவின் மலர்ச்சியே தான்... அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது ...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை குரு விரல் சூண்டும் முன்னரே இலக்கை நிர்னயிக்க தெரிந்தவன் உத்தம சீடன் அதுனாலத்தான் குரு தட்சிணாமூர்த்தி சூண்டாமல் முத்திரையோடு நிறுத்திகொண்டார்..சீடர்களுக்கு நிர்னயிக்க தெரிந்திருந்தது தொட்டு காண்பிப்பது என்பது கையால் தொட்டு காண்பிப்பதுவல்ல...அறிவின் எல்லைக்கு கொண்டு வருதல்..மறைந்ததை அறிவுக்கு தருதல் தான் தொட்டுகாட்டுதல். ஒரு பொருளை பற்றி ஆழமாக அறியவேண்டும் எனில் அந்த பொருளைப் பற்றி ஆழ்மான கேள்விகள் உருவாக்கிகொண்டு கேட்பது எங்ஙனம் என கற்று கொள்ளவேண்டும்... பதில் தெரிகிறதோ இல்லையோ, யாராவது பதில் சொல்கிறார்களோ இல்லையோ, அதை கேள்விகளால் துளைத்து எடுக்கும் முறை இருந்தால் ஒழிய விசாரம் செய்யமுடியாது.... விசாரத்துக்கு முக்கியம் கேள்வி... பேருபதேசத்திலும் பெருமானார் கேள்விகள் கேட்கவே சொல்லுகிறார்.. அண்டம் எப்படி?.. அதன் சுபாவம் எப்படி , அதன் குணம் எப்படி... காது ஏன் பொத்தலாகி இருக்கு... இப்படி கேள்வி கேட்டு பதில் பெறுவதே விசாரம்... அதிலும் சத் விசாரம் எனும் போது அதிகமாக அறிவு உட்பெடும்... இப்படி விளக்கம் இல்லாத அறிவு விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கும்... இப்போது கூட நாம் சாட் பண்னிகொண்டிருக்கிறோம்... பிறகு வேறு வேலைகளுக்கு போய்விடுவோம், என்றாலும் அறிவானது இங்கு கேட்கப்பட்ட கேள்விகளையே அலசி கொண்டிருக்கும்... மனதுக்கு அதன் பதில் தெரியாது... அப்படி கேட்கும்போது ஒரு நொடி பொழுதில் அந்த பதில் எங்கிருந்தோ நமக்கு கிடைக்கும்.... இதுவே அறிவின் செயல்... செயல்பாடு "அப்படி செய்துகொண்டிருக்கும் போது நாம் பெற்றுகொள்ளவேண்டியதை பெற்றுகொள்ளலாம்" என்பது தானே பெருமானார் வாக்கு.... அதாவது இப்படி இருக்கும் தருவாயில் நமக்கு ஒரு பொருள் புலப்படும்... சாதனை எப்படி செய்யவேண்டும் என்பது.... அது தான் “பெற்றுகொள்ளவேண்டியது”......வள்ளலார் சொல்லி இருக்கும் நுணுக்கமான விஷயம் பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது... அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்... அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்... அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது.... அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும் ---------------====---------==== உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும் உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும் அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது

நான்’ங்கிறது

நான்’ங்கிறது உண்மையா ‘ஆத்மா’ங்கிறது உண்மையா இந்த ஒலகத்துலே எங்காச்சும் ஏதாச்சும் பொருட்கள் செயலற்று இருக்குதோ!? இல்லையே,!! அணுத்துகள்கள் கூட தத்தம் செயலில் சதா மும்முரமா இருந்துட்டுதானே இருக்குதுங்க, ஏன் அங்க கர்மம் கர்த்தா இல்லாம நடக்கறது கண்கூடா பாக்றோம்லியா,?! நாம கூட சதா நாசியால சுவாசம் பண்ணிண்ட்டுக்கோம்லியா,?! அதை கர்த்தா என ஒருவர் இருந்துகிட்டா சுவாசத்தை பண்ணிண்டிருக்கார்,!! இல்லையே!! அல்லவா?. ஜாக்ரத்தில் இருக்கறச்சேயும் சுவாசம் நடக்கறது, தூங்கறப்பவும் அது பாட்டுக்கு நடக்கிறது. கர்த்தா என அங்க உன்னிப்பா செயலாற்ற யார் இருக்காவளாம்,??? யாருமில்லையே அல்லவா?. அப்ப கர்மாங்கிறது கர்த்தா இல்லாமலும் நடக்கும்ங்கிறது புரியுதுலியா,! அப்போ எங்குமே மவுனம் என்பது அசாத்தியம்ங்கிறது தெளிவாகிறதுல்லியா?. இப்படியான செயல்களில் எங்குமே ஆத்மத்தின் தேவையில்லைங்கிறது புரியறதில்லியா?. அப்போ ஆத்ம அமைதிங்கிறதுக்கு தேவைங்கிறது இல்லைண்ணு தெளிவாகிறதில்லையா. ஏண்ணா, ஆத்மம் அமைதியின்றி இருக்கிறதுங்கிறது என ஒரு சங்கதி இருந்தாத்தானே அதை அமைதி படுத்துறதுக்குண்ணு எதாச்சும் கர்மம் செயலாற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஆத்மாங்கிறது எக்கூட்டத்தும் கலப்பில்லாமல் இருக்குறதுங்கிறவங்களே எதுக்கு அதை அமைதி படுத்திக்கணும்ண்ணு அலையுறாங்களாம்? சரி, ஆத்மா தான் இதையெல்லாம் பத்தி கவலைபடலைண்ணு வெச்சுக்குவோம், இருந்தாலும் எது எதை தான் சமாதானபடுத்தணுமாம்,?! அப்ப சொல்றீங்க ‘நீங்க’ தான் ஆத்மாவை உணரணும்ண்ணு.அப்ப இந்த ‘நீங்க’ எங்கிறது? எது-ஆத்மா எங்கிறது எதுங்கிற கேள்வி உசுப்புமே? அப்ப ‘நான்’ யாரு-ஆத்மா யாரு? சாந்தமில்லாம இருக்குற ‘நான்’ வேற-சதா சாந்தமா இருக்குங்கிற நெனப்புல வெச்சுண்டிருக்குற ஆத்மா வேறுண்ணு தோணுதில்லையா? இதுல பாத்தீங்கண்ணா இன்னும் ‘நான்’ங்கிறது உண்மையா இல்லை ‘ஆத்மா’ங்கிறது உண்மையாண்ணு கொஞ்சம் ரமணரை கேட்டு சொல்லுங்கோண்ணேன்

மண்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு.

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு. மண்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு... மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை.... மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்..... அதை கருத்தில் கொள்ளவேண்டும்..... நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே.... நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...  பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும்,  மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...  அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் ,  அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது.  இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...  அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா?.. பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்... அது சாகாது,  ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......  இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர, தியான சம்பிரதாயங்கள்... பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...  முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்

முதன்முதலில் குழந்தை அழுகைக்கு காரணம்

முதன்முதலில் குழந்தை அழுகைக்கு காரணம் பிராணன் முதல் முதலாக இயக்கமுறும் செயலே தான் அழுகைக்கு காரணம், ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கின்றது. பிராணனின் இயக்கமே மனம் என சொல்லபடுகின்றது, அது அறிவு அறிந்து கொள்ளும் தன்மையினால் மனம் என அறிவுடன் கலந்து அறிவாகவும் அறிவற்ற தன்மையாகவும் மனம் இயக்கத்தில் உள்ளது. முதல் இயக்கம் என்பது வெளி வாயு உட்புகுதலாகும், அதுவே ஜீவன் எனப்படும் அபானன்.. வெளி போவது பிராணன் என சொல்லபடும். இவற்றை சரிசமமாக நிலைநிறுத்துவதே பிராணாயாமம். உண்மையில் சொல்லப்போனால் பிரபஞ்சத்து வாயுவான காற்று அல்ல பிரானன், அபானன் என சொல்ல விழைவது. எனினும் அதனூடாய் இயக்கமுறும் இரு வெவ்வேறு இயக்கமான சலனம் தான் உண்மையில் பிராண அபான சலனம். சலிப்பதினால் அதை ஜீவன் எனவும் பிரானன் எனவும் சொல்கிறோம். உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே . --திருமந்திரம்

குரு உபதேசம்

குரு உபதேசம் திறந்தவாய் சிப்பிதானும் மழைத்துளி தன்னை வாங்கி கடலடி தன்னிலேதான் மறைந்தங்கிருந்தாற்போல குருவருள் அமுதை உண்டே மறைந்தங்கிருந்தாக்கால் திருவருள் நிச்சயம் தினம் முத்தது விளையும் தானே.

அறி

Monday, October 7, 2019 அறி செத்தறிவால் செத்து தான் போறியே....  உன் சத்தத்தை நீ என்று அறிய போறியோ... சத்தமே சத்தென்று தெளிவாய் அறி.. தினம் சத்தத்திலே சித்தம் தனை கொள்ளவே அறி.. உன்னையே நீ என்றும் அறி.. உன் தன்னையே அறி என்றால் அறிவாலே அறி.. ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும்அறி.. மற்றெல்லாம் சாக்கடை சாவென்றும் அறி.. சற்றெல்லாம் சாக்காட்டின் அறிவென்றே அறி.. வீணென்று விடா அறிவே இது அறி.. வீணருக்கு தோன்றுமோ இவ்வுரை அறி.. மற்றோர் அறிவான அறிவில்லை அறியோ அறி!

பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை

பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து. மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்.  அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை ஹீப்ரூ பாஷை கொஞ்சம் போயி பார்த்தால் அதன் உண்மை தெரியும்... ஹீப்ரு மொழிக்கு உயிரெழுத்து கிடையாது...முழு வேதமும் உயிரெழுத்து இல்லாமல் வெறும் மெய்யெழுத்து மட்டும் கொண்டே தான் எழுத பட்டிருக்கும். அதை படிப்பவர்கள் தான் அதற்க்கு உயிர் எழுத்து சேர்த்து படிக்கவேண்டும். அதாவது, “வ்ண்ட்” என எழுதபட்டிருக்கும்..அதை படிப்பவர்கள் ,”வண்டு” என்றோ அல்லது ”வண்டி” அல்லது வாணேடீ: என்றோ படித்துகொள்ளலாம்...இது தான் வேதம் வந்த கதை.சொல்வதில் சந்தேகம் இருந்தால் கேட்டுபாருங்க, தெரிஞ்சவங்க சொல்லுவாங்க உண்மையை -------------------------------- ”ய்ஹ்வ்ஹ்” இப்படி நாலு எழுத்து இருக்கு, இதை டெட்ராகிராமட்டோண் என்பார்கள்....இதை படிக்கிறவங்க எப்படி வேணுமுண்ணாலும் படிக்கலாம்...கொஞ்சம் பேரு யஹோவாண்ணு படிக்கிறாங்க, கொஞ்ச பேரு ஜெஹோவாண்ணு படிக்கிறாங்க.... கொஞ்ச பேரு யாவே என படிக்கிறாங்க..கொஞ்ச பேரு யாஹூ என படிக்கிறாங்க...இதுல என்னத்த செய்ய...இது வேத கதை