Monday, November 28, 2022
காலிங்க நர்த்தனம்.
காலிங்க நர்த்தனம். கால் என்றால் மூச்சு அல்லது காற்றைக் குறிக்கும் பதமாகும். காற்று என்கிற போது நம் உடலில் பத்து வாயுக்கள் உள்ளன. அவைகளை தச வாயுக்கள் என்போம். அவைகள் முதன்மை வாயுக்கள் ஐந்து, உப வாயுக்கள் ஐந்து என்று இரண்டு பிரிவாகப் பிரித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த முதன்மை வாயுக்கள் ஐந்தும் பஞ்ச பிராணன்கள் எனப்படும். இவற்றில் ஏற்படும் நிறை குறைகளால் பிராணனில் சலனம் ஏற்படும். பிராணனின் சலனமே மனதின் சலனமாகும். இவற்றை அடக்கி நேர் படுத்தினால் பிராணன் அடங்கும். பிராணன் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கி செயலற்றுப் போனால் இறை தரிசனம் கிட்டும்.
இந்த பஞ்ச பிராணனின் ஐந்து தலைகளையே நாகேந்திரனின் ஐந்து தலைகளாகக் குறிப்பிட்டு, அதை அடக்கினால் இறைவனின் திருக்கூத்தை திரு நர்த்தனத்தைக் காணலாம் என்பதை உணர்த்தும் கதையே காலிங்க நர்த்தனம். யோக இரகஸியத்தை உணர்த்துவதாகும். பஞ்ச பிராணன்கள் என்கிற போது, பிராணவாயு இதுவே எல்லாவற்றிலும் தலையாயது. இது மற்ற எல்லா வாயுக்களுக்குள்ளும் சூக்குமமாக உள்ளதாகும். இதை யஞ்ஞோபவீதம், பிரம்ம சூத்திரம், ஹம்ஷம், பிராணன், உயிர், ஜீவன், நூல், வாசி, கால், பாதம், குதிரை என்று பல பெயர்களால் குறிப்பிடுவார்கள். எனவேதான் இதை ஐந்து தலைகளில் நடுவில் வைத்து அதன் மேல் உச்சியில் பரமாத்மா நின்று ஆடுவது போலக் குறிப்பிட்டார்கள்.
பிராணனுக்கு வலது புறம் உள்ள தலையானது அபானனாகும். இது குதப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி வலது புறம் அமைந்தது ஸமானன் இது நாபிஸ்தானத்தில் உள்ளது. பிராணனை ஒட்டி இடது புறம் உள்ள தலை உதானன். இது கண்டப் பகுதியில் உள்ளது. அதை ஒட்டி இடது புறம் உள்ள தலை வியானனைக் குறிப்பதாகும். இது உடலெங்கும் வியாபித்திருப்பது. இந்த பஞ்ச பிராணன்களை அடக்குவது என்பதை பொதுவாக பிராணனை அடக்குவது என்பார்கள். யோக பலத்தால் பிராணனை அடக்கி விட்டால் மனம் அடங்கி செயலற்றுப் போகும். மனமானது செயலற்ற நிலைக்குப் போனால் தான் யோக நித்திரை செய்ய முடியும் என்பதை உணர்த்தும் தத்துவமே பள்ளி கொண்ட பெருமாள் பாம்பின் மேல் படுத்திருப்பது போல காட்டப்படுவதாகும். நாம் காலிங்க நர்த்தனத்திற்கு வருவோம்.
நதியின் ஆழமான பகுதியில் நீரோட்டமில்லாத காலங்களில் நீரானது தேங்கி நிற்கும். இது வட்ட வடிவமாக இருக்கும். இதையே மடு என்பார்கள். நீரோட்டமில்லாத காலங்களில் இந்த மடுவில் உள்ள நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதைப் போல நம் உடலில் வட்ட வடிவமாக அமைந்த பகுதி தொப்புளாகும். இதை நாபி என்பார்கள். நம் புருவ மத்தியில் அமைந்துள்ள சுழுமுனைக்கிக் கீழே அடி பருத்து, நுனி சிறுத்துக் காணப்படும் மூக்குத்தண்டை லிங்கம் என்பார்கள். இப்போது இந்த நாபியில் இருந்து கிளம்பும் மூச்சு நேராக நிற்கும் லிங்கமாகிய மூக்குத் தண்டின் வழியாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக மேலும் கீழும் இடைவிடாமல் இரவும் பகலும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆக தொப்புள் எனும் மடுவில் இருந்து கிளம்பிய காலானது லிங்கத்தின் வழியாக மேலும் கீழுமாக இடைவிடாமல் நர்த்தனம் செய்வதே காலிங்க நர்த்தனம். இவ்வாறு இடைவிடாமல் நர்த்தனம் செய்து கொண்டிருக்கும் காலின் வேகத்தை காலால் யோக சாதனைகள் மூலம் அடக்கினால் மனதற்ற நிலை உண்டாகும். அப்போது உச்சியில் இறைவனின் திருக்கூத்தை, நர்த்தனத்தைக் காணலாம்.
இன்னுமொரு சூக்குமம் என்ன வென்றால் மூச்சு என்றால் கால் என்பதை உணர்த்துவதற்காகவே காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டினார்கள். நான் முதலிலேயே சொன்னது போலக் கால், பாதம் என்பதெல்லாம் பிராணவாயுவைக் குறிக்கும். எனவே பஞ்ச பிராணன்களையும் அடக்க பிராணனை அடக்க வேண்டும் என்பதைக் குறிப்பதையே பகவான் பாதத்தை உச்சியில் பதித்து அடக்குவது போலவும், ஒரு காலைத் தூக்கி ஆடுவது போலக் காட்டுவதாகவும் சித்தரித்தார்கள். இது யோக இரகசியத்தை வெளிப்படுத்தும் தத்துவக் கதையாகும். அவ்வாறல்லாமல் நீங்கள் எந்த லோகங்களுக்குச் சென்று தேடினாலும் ஐந்து தலை உள்ள நாகத்தைப் பார்க்க முடியாது.
மூலமதை அறியாட்டால் மூலம் பாரே)
ஆண்டவரே நீர் போகும் முன்னே உமது பிதாவை எனக்கு காட்டித்தாரும் என்றான். அவரோ அவனை நோக்கி, நீ இத்தனை காலம் என்ன்னோடிருந்தும் என்னை அறியாதிருக்கிறாயே. நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம், நீ என்னை கண்டிருக்கிறாய், இருந்தும் பிதாவை காட்டித்தாரும் என்கிறாயே,
‘என்னை கண்டவன் என் பிதாவை கண்டிருக்கிறான்’ என்றார்.”பிதாவும் பிதாவின் மடியிலிருக்கிற குமாரனும் ஒழிய வேறொருவனும் பிதாவை அறியான்” என ஒருவர் சொல்லி எனில் அதை மற்றொருவர் அந்த நிலையில் அடைந்தால் ஒழிய சொல்லமுடியாது. அதனாலேயே, “எனக்கு முன் வந்தவர்கள் திருடர்களும் கொள்ளைகாரர்களுமாயிருக்கிறார்கள்” என சொன்னார். ஆனால் இப்போது நானும் கூட சொல்லுகிறேன்”கிறிஸ்த்துவுக்கு பின் வந்த பலரும் கூட கள்ளரும் கொள்ளைகாரர்களுமாக இருக்கிறார்கள்”."நீ" இருந்த்து நீ வந்தது தந்தை வழியன்று... தந்தை உனக்குள் உயிர்ப்பு ஊட்டினவன் தானே.. "நீ" முதலில் தாயின் அண்டத்தில் அல்லவா இருந்தாய்.. அல்லவோ.. அண்டமாகிய "நீ” தந்தையின் உயிர்ப்பால் உயிரடைந்தாய்.. உனக்குள் உயிர்ப்பு வந்த விதம் இது தானே..சின்னஞ்சிறு முட்டை உயிர்பின்றி அரும்ப, அதற்க்கு தந்தை உயிர்ப்பூட்ட அம்முட்டையாம் "நீ" நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த்தாய்..பிறந்தாய்..அம்முட்டையே இத்தூலமாய் "நீ”.
(மூலமதை அறியாட்டால் மூலம் பாரே)
அய்யாஉருத்தரிப்பதற்க்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்பதில் வரும் நாதமானதை அறிந்து பற்றிகொள்பவன் உண்மையில் பாக்கியசாலியே...வணங்கத்தகுந்தவனே...அவனே நாதனுமாவான்.
வள்ளலார்
ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்ளப்படுகிறது. -
வள்ளலார்
அத்வைதம்
மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்
இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...
Saturday, November 26, 2022
சித்த வித்தை
மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்
இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...
அட்சரங்கள்
அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம்.
அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்
தமிழ்
""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
வாலையை பூசிக்க சித்தனாவாய்
===வாலையை பூசிக்க சித்தனாவாய்===
கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார், வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர். பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர்.
வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம், சித்தர்களுக்கு தாயான தயாபரம்.
பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி, அதுவெ பதினெண் மெய். அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம். இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம்.
”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்..... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா?
பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது.
சின்ன வயசியில சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும்.
ஒவோருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும்.
---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
சிந்திக்க
மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு
தூக்கமும் குண்டலினியும்
=====தூக்கமும் குண்டலினியும்=====
”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள்.
ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம்.
ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம்.
தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்
Subscribe to:
Posts (Atom)