Friday, November 25, 2022

ஆதி புள்ளி

==== ஆதி புள்ளி ==== எழுத்தெல்லாம் புள்ளியிலிருந்து தானே தொடங்குது. ஆனால் புள்ளி வைச்சா முற்றும்னு சொல்றாங்க. என்ன ஒரு விந்தை? எந்த எழுத்து புள்ளியால தொடங்குது?...   ”ம்” னு எழுதுறோம் ,புள்ளி வெச்சா "ம்" என எழுதுறோம்? .. இல்லையே .. பேனா காகிதத்தைத் தொட்டவுடன் நிகழ்கிறது. பேனா காகிதத்தை தொடவில்லையெனில் எழுத்து இல்லை... புள்ளி இல்லை..அப்படியா? பேனா காகிதத்தை தொட்ட உடன் இடம், வலமாக எழுத்து மலர்கிறது.. புள்ளியில் இருந்து...அதுபோல.... ”இ” என்பதில் மட்டும் புள்ளியும் சுற்றி மூணு சுழியும்...,  ”ஈ”க்கு மட்டும் ரெண்டு புள்ளி. அ இடது பக்கம், உ வலது பக்கம், மத்தியில் இ, எல்லா உயிரெழுத்துக்கும் இவை மூணுமே ஆதாரம்.அல்லவா? க் முதல் ன் வரை மெய்யை பார்த்தால், பேனா காகிதத்தை தொட ஆரம்பிக்கும் முதல் புள்ளி ஒன்று, அப்புறம் ம் மேலே வரும் கடை புள்ளி ஒன்று என இரண்டு புள்ளி. இதுல ”ம” என்பது ஆரம்பித்து எழுதி முடியறது ஒரு சுழி புள்ளி... இது நடுபுள்ளி. ---🌺 திரு. ரியான் ஐயா அவர்கள்.🌺 ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நாம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம். மெய்யிடம் விளங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயாணம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.

அசபை ஹம்ச ஸோகம்

மன்னும் முக்கோணம் வயங்கும் நாப்பண் இயங்கும் அசபை நயந்து இனிது உரைக்கில் இருபத்து ஒராயிரத்து அறுநூறு மருவிய வாயு வலம் இடமாக மாறி மாறி வேறு பாடாகிப் பூதம் ஐந்தினும் தோன்றும் நாழிகை ஒன்றுக்கு ஒன்று குன்றாது எழுந்து பன்னிரண்டு அங்குலம் முன்னி ஒடி இருநாலு மீண்டங்கு ஒருநால் ஒழியும் இந்தக் கருத்தைச் சிந்தித்து அறிவால் அந்த ஆதாரம் அசைவுஓர் ஏழினும் பற்றற நிற்கும் பவனம் அறுநூறு மூன்றாயிரம் மூன்றிடம் மருவி ஒன்றிட மூவாயிரம் என நிறுத்தி மந்திரம் ஆம் எனத் தந்திரம் சொல்லும்

புள்ளி=

======புள்ளி==== எத்தனைக்கும்பெரியதவம் இறைனாமம் பிஸ்மில்- இதற்குள்ளே அடங்கும் பொருள் எடுத்துரைப்பதரிதே- அந்த பிஸ்மில் முதலான விதமேதால்- அணுப்போல கொண்டபுள்ளி அலிபாக நீண்டே- அந்த புள்ளி அலிபு மறைந்ததொரு பேயாம் - அந்தரத்திலானதினால் அதுநினைவு சிர்றாம்- இந்த சிர்றே மீமாம் இது நாலும் இஸ்மாம்- இது நாலும் அவனாம் இதுவிதம் வேறில்லை -அந்தரத்திலான சிர்றால் அமைந்த  மீமுக்குள்ளே -அமைந்தவெளி நூறான பேருமஹ்மூதாம்- இந்த பிஸ்மிலுக்குள் உயிரெழுத்து மூன்று- எல்லா மறைகளுக்கும் மெத்த முள்ளதாமே -அந்தெழுத்தை இன்னதென்று அதனுடைய வளமும் -ஆரும் சொல்லார் சொன்னாலும் ஆரும் அறியாரே -அந்தெழுத்து மூன்றிலொன்று அது தானே தாத்து -அஹதயத்தும் அதுதானே  அதிலுமதைபோல -வந்ததுதான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து -அதிலுமதைப்போல அமைந்தது வாஹிதியத்தாமே- வாஹிதியாவதென்ன அனைத்தும் முடிந்ததுவாம்- வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர் மணியாம்- இந்தவகை அறியார்கள் முந்தவகையறியார் -அந்தவகையறியார்கள் அந்தரத்திலாவார் -இந்தவகை அறிந்தவர்கள் எந்தனுக்கும் குருவாம் -இவையறிந்த பேர்களெல்லாம் யாவும் அறிந்தவராம்=(பிஸுமில் குறம்)

மனம் ஒரு பார்வை

உலகிலேயே அதிசயமானது எது என்று என்னிடம் யாராவது கேட்டால், சற்றும் யோசிக்காமல் ''உலகிலேயே அதிசயமானது மனம்தான் என்று நான் சொல்வேன். ''மனம் என்ற சொல்லே அமானுஷ்யமானதுதான். மனம் என்ற ஒரு கரணத்தை உடைய ஒரே பிறவி, ஒப்பற்ற பிறவி மனிதப் பிறவி மட்டுமே. உலகில் எத்தனை மதங்கள், பிரிவுகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முன் வைப்பது மனதின் நிலை பற்றிய கோட்பாடுகளையே. நம் தேசத்தில் ரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் கர்ம யோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம், மந்திர யோகம் என்று பலதரப்பட்ட யோக மார்க்கங்களை நமக்கு தந்து அருளியிருக்கிறார்கள். அவை அனைத்திலும் முக்கியமான பயிற்சியாகவும், அடிப்படை விஷயமாகத் திகழ்வதும் மனதைப் பக்குவப்படுத்தும் விஷயமேயாகும். மனம் எவனுக்கு அடங்கி நிற்கிறதோ, அவனுக்கு இந்த உலகமே அடங்கி நிற்கும். மனம் உடைய ஈசன் மனுஷன். அந்த மனம் செயலற்று நின்று விட்டால், அவன் ஈசன். பிராண வாயுவை குதிரை என்று வர்ணிப்பது போல மனதைக் குரங்கோடும், யானையோடும் ஒப்பிட்டுச் சொல்வார்கள். சாதாரணமாக மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கினைப் போல நிலை விட்டு நிலை மாறிக் கொண்டே இருக்கும். யானை அசையாது நிற்காது. எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கும். அது போல மனமும் சலனமடைந்து கொண்டே இருக்கும். ஒரு நிலையில் நிற்காது. பேய் அதாவது அகத்தே விளங்கும் அகப்பேய் என்றும் வர்ணிப்பார்கள். அந்த அளவு பேயாட்டம் போடுமாம் மனம். நம் மனமே நமக்கு சொர்க்கம். நம் மனமே நமக்கு நரகம். அதுவே உற்ற நண்பன். அதுவே கெட்ட பகைவனும் கூட. எனவே மனதை அடக்கி அதன் மேல் சவாரி செய்யப் பழகிவிட்டால் எல்லா உலகங்களையும் வெல்லலாம். அலையும் புலனைப் பின்தொடர்ந்தே அலையு மனதோ நம்மறிவைக் கலக்கி இழுக்கின்றது நீர்மேல் காற்று கலத்தை இழுப்பதுபோல் கடல் நீரில் மிதந்து செல்லும் பாய்மரக் கப்பலை புயல் காற்று அங்குமிங்கும் ஆட்டிப்படைத்து இழுப்பது போல், புலன் வழிப் போகும் மனமானது நம் அறிவைக் கலங்கிடச் செய்து, நிலையின்றி இழுத்தடிக்கின்றது. எனவே மனமானது புலன் வழி போகாமல் அறிவின் தெளிவைப் பெற்று, புலன்களை அடக்கி இயங்கும் போது தூய்மையடைந்து, அமைதியடைகின்றது என்பது புரிய வருகிறது. மனம் என்ற ஒன்றே கிடையாது என்று கூட சொல்பவர்கள் உணடு. சரியான புரிதல் இல்லாமையோ, அல்லது மற்றவர்களை குறை சொல்வதற்காகவோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. உண்மையில் மனம் என்றால் என்ன ? நமது மொத்த எண்ணங்களின் தொகுப்பே மனமாகும். எனவே தான் நம் முன்னோர்கள் நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்பார்கள். அவ்வாறு நல்லெண்ணங்களையே எண்ண வேண்டும் என்றால் அதற்கேற்ற வாழ்க்கைச் சூழல் அமைந்தால்தான் சாத்தியமாகும். அதற்கு நல்லெண்ணம், நல்ல செயல்கள், நல்ல சொல் உள்ளவர்களோடு கூட வேண்டும். வாழ்க்கையில் நாம் மேல் நோக்கிச் செல்வதற்கு நமக்கு உத்வேகம் கொடுப்பது நம் எண்ணங்களே ஆகும். எனவே அத்தகைய எண்ணங்கள் உயர்ந்த, நல்ல எண்ணங்களாக இருப்பது அவசியமாகும். ஆன்மிக நெறியாளர்களோடு கூடும் போதும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும் போதும் இத்தகைய நல்லெண்ணங்கள் வளரும். இதையே நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவார்கள். இறைவனுக்குப் பயப்படுபவன் தீய எண்ணங்களை தவிர்த்து விடுவான். எனவே இறைவனுடைய கைங்கரியங்களைச் செய்வதாலும், அத்தகைய மேன்மையான மக்களோடு கூடி வாழ்வதாலும் தீய எண்ணங்களை மறந்து நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள ஏதுவாகும். இதையே மன சுத்தி என்பார்கள். இதையே வள்ளுவர் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பார். இதற்காகவே பதஞ்சலி மகான் இயமம், நியமம் என்ற இரண்டு படித்தரங்களை அல்லது பயிற்சி முறையை முன் வைக்கிறார். இத்தகைய மனசுத்தி இல்லாதவர்களின் தியானம் என்பது போராட்டமான மன ஒருமைப்பாட்டுப் பயிற்சியாகவே விளங்கும். மேல் நிலைகளை எட்ட முடியாது. தெளிவடையாத சாதாரண மனதிற்கு தெய்வீக ஞான வாசலின் தங்கச் சாவி கிட்டுவதில்லை. மனமானது தன்னிச்சையாக இயங்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. உலகில் உள்ள எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி மனோ சக்தி. மனதின் வேகத்திற்கு இணையான வேகம் உலகில் இல்லை. அத்தகைய மனம் கட்டுப்பட்டால் உடலும் நம் கட்டுக்குள் இருக்கும். மனதால் உருவாக்கப்படுவதே உடல். மனதை அடக்கினால் உடல் அடங்கும். நாம் உண்ணும் உணவும், பிராணனும் மனதின் வலிமையில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு காட்டுக்குள் பள்ளம் வெட்டி அதில் யானையை விழச் செய்து, பட்டினி போட்டு, பழகிய யானைகளைக் கொண்டு பயிற்சி அளித்து, சிறுகச் சிறுக உணவை அதிகரித்து பல நாட்கள் பாடுபட்டு யானையை அடக்கி வசப்படுத்துவார்கள் பாகர்கள். அது போலத்தான் மனதும். இத்தகைய பலவகையான பயிற்சிகளின் மூலமே அதை அடக்கி நல்வழிப்படுத்த முடியும். யானை தன் தும்பிக்கையை பல பாகங்களிலும் வீசிக் கொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படுத்த பாகன் அதன் கையில் சங்கிலியைக் கொடுத்து விடுவான். அதன் பிறகு அது சங்கியைப் பிடித்துக் கொண்டு சிவனே என்றிருக்கும். அது போல பலவாறாக சுற்றித் திரியும் மனதை தெய்வ சிந்தனையில் நிறுத்தினால் அது அடங்கி விடுகிறது. சீவன் சிவனில் கலந்து விடுகின்றது. கட்டுப்பாடற்ற மனமும் மதம் கொண்ட யானையும் ஒன்றே. அது தன் பாகனையே கொல்லத் துணிவது போல கட்டுப்பாடற்ற மனமானது உடையவனின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

====க்ழ=====க்‌ஷ=====

=====க்ழ=====க்‌ஷ===== ==சுழுமுனை===சுஷும்னா== ==சுழுத்தி===சுஷுப்தி=== ==கிழாயம்===கஷாயம்== ==அக்ழரம்===அக்‌ஷரம்=== எது மிஸ்ஸிங் ணு கண்டுபுடியுங்க. எங்க ஷ போடுறாங்களோ அங்க அதுக்கு பதிலா ழ போடலாம்.அது போல எங்க க்‌ஷ போடுறாங்களோ அங்க க்ழ போடலாம். ஆனால் தமிழில் “க்ழ” எனும் ஓசை அற்று போய் விட்டதனால் அக்ழரம் என்பதை அட்சரம் என மாற்றாக உபயோகிக்கிறோம். க்‌ஷ எனும் வடமொழி எழுத்துருவை கண்ணாடியில் பார்த்தால் அது க்ழ என வரும்.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் ஒளிந்துள்ளது.இந்த எழுத்துருவோசை இதை கண்டுபிடித்தவருக்கே சொந்தம், அல்லவா?

சிந்திக்க

இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. பிரச்சினை என்னவெனில், சன்மார்க்கிகள் எல்லோரும் இனியும் ஒருமுறை மனிதர்களாக பிறப்போம் எனும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். வள்ளலாரோ இதை ஆணித்தரமாக மறுக்கிறார் அல்லவா?. மனிதன் இதற்க்கு முன் ஒருபோதும் மனிதனாக பிறந்ததில்லை எனவல்லவா வள்ளலார் சொல்லியுள்ளதன் பொருள். மனிதனாக பிறந்திருக்கிற நாம் எழுவகை பிறப்புகள் முடிந்து மேல்நிலை பிறப்பான மனிதப்பிறவி எடுத்திருக்கின்றோம். இதற்க்கு முன் உள்ள அறுவை பிறப்பிலும் மனித பிறப்பு இருந்ததில்லையே அல்லவா?. மட்டுமல்ல ஒவ்வொரு பிறப்புகள் பிறந்து இறந்துவிட்டால அடுத்த கற்பகாலம் வரையிலும் அச்சீவன் மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதாக அல்லவா பெருமானார் சொல்லுகிறார், ஜீவன் மண்ணுக்குள் புதை பட்டு கிடப்பது எங்ஙனம்?..அதன்றி ஏழாவதான மனித பிறப்பை எடுத்தவன் பின்னும் எப்படி மனித பிறப்பை எடுக்கமுடியும்?.. எழுவகை பிறப்பும் எடுத்தாயிறே?.. அதற்க்கு மேல் எட்டாவது பிறப்பு என ஒன்றில்லையே?..சன்மார்க்கிகள் விளக்கம் தரவும். நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

இருமையில் ஒருமை

தன்னுடலை தான் என்பதும், தன் மனதை தன்னுடையது என்பதும், தன் உயிரை தன்னுடையது என்பதும், தன் எண்ணங்களை தன்னுடையது என்பதும், தன் பேச்சை தன்னுடையது என்பதும், தன் செயல்கள் அனைத்தும் தன்னுடையது என்பதும், தன் உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் தன்னுடையது என்பதும், ஆக இதுவே இருமை எனப்படுவது. இருப்பது ஒருமை மட்டுமே, அதனை காணாது ,உணராது இருமையால் அவதியுறுவதே குழப்பத்திற்க்கெல்லாம் காரணம்.

பரா ரகசியம்

கண்ணாக்கு மூக்கு செவி ஞானக்  கூட்டத்தில் பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே... என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக இருக்கிறார்.அதற்கு புறத்திலுள்ள கண்ட ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது. அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம், குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும் உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு. அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை போல நிற்கிறது. சுவாமி இடது பாதம் அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம் புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள். உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே சதாசிவம் வாசம் செய்கிறார்... சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான் முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும் உகாரமும் தராசுமுனையாய் நிற்கும். இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும் சதாசிவனும் நிற்கிறார்கள். இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம். தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும் விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச் சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும். பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில் லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து வாழலாம்... இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில் உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும் பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த தருமச்சாலையிலே என்றும் வற்றாத சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக் கிடக்கின்றன.இந்த நாதனுக்களின் ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும் பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின் மேல்மூடியாக மூக்காண்டி என்ற புருவமத்தியின் உட்வாசலான குதம் இருக்கிறது. மேலும் இந்த வலம்புரியே மரணந் தங்குந்தலமென்றும் கேள்வி உதயஸ்தானமென்றும் நாதாக்களின் அபிப்ராயம்.ஆகவே எவனொருவன் வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில் நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன் நெருங்கமாட்டான்.மீறி தவறான எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக கபமாக மரணத்தின் அஸ்திவாரம் போடப்படுகிறது. வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம் கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும், ஞானமூலிகையான கரிசாலையும் தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும், மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை, சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை படத்தைக் கொண்டு படித்தால் புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே இல்லை. இதன் அடிப்படை கொண்டே வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர் ஞானத்தில் குறிப்பிட்டதும் இதுவே ஆகும். நன்றி; தெளிவு குருவின் திருநாமம்

Thursday, November 24, 2022

பூரண மாலை - பட்டினத்தார்

பூரண மாலை - பட்டினத்தார் : ------------------------------------------- குறள் வெண்செந்துறை -^- -^- ------------------------------------------- 1.மூலத்து உதித்தெழுந்த முக்கோடணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே! 2. உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச் சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே! 3. நாவிக் கமல நடுநெடுமால் காணாமல் ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே! 4. உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே! 5. விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே! 6. நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப் புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே! 7. நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல் போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே! 8. உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே! 9. மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே! 10. இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல் தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே! 11. ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே! 12. மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல் பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே! 13. பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே! 14. தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும் உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே! 15. இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப் பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே! 16. மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே! 17. சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல் பரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே! 18. மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து கண்கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே! 19. தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல் அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே! 20. ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே! 21. வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே! 22. கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே! 23. உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே! 24. எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே! 25. எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே! 26. பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன் பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே! 27. உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்; பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே! 28. பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்; உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே! 29. எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப் புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே! 30. என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே! 31. கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய் அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே! 32. செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல் பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே! 33. எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க, மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே! 34. எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப் பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே! 35. சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல் வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே! 36. குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான் மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே! 37. அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே! 38. சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல் அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே! 39. ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல் நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே! 40. என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய், உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே! 41. நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே! 42. சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே! 43. குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய், அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே! 44. ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய் வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே! 45. இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய் உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே! 46. மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே! 47. உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே! 48. தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம் நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! 49. விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே! 50. ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய், மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே! 51. வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி, பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே! 52. பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே! 53. பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி, நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே! 54. முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய், இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே! 55. ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே! 56. வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச் சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே! 57. ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம் தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே! 58. மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! 59. சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச் சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே! 60. பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய், அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே! 61. வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல், ஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே! 62. பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே! 63. நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப் பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே! 64. கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்; செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே! 65. வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம் சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே! 66. வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே! 67. தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால் உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே! 68. ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும் என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே! 69. நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும் மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே! 70. மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய் நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே! 71. உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க் குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே! 72. சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே! 73. முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே! 74. என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்? உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே! 75. கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே! 76. வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித் தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே! 77. ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே! 78. மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார் பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே! 79. பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே! 80. எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்; அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே! 81. நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார் வகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே! 82. மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே! 83. உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல் பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே! 84. வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே! 85. சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல் பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே! 86. செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல் அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே! 87. நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத் தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே! 88. நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே! 89. எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே! 90. மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே! ஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே! 91. பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால் ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே! 92. படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத் துடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே! 93. மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே! 94. அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும் சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே! 95. நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும் அரகரா என்பது அறிகிலேன்; பூரணமே! 96. பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே! 97. சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும் பாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே! 98. பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய் நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே! 99. ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன் பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே! 100. நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால் தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே! 101. முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல் அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே! 102. பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே! -------------------------------------------------------------------

சிந்திக்க

முக்காரம் என்பது ஜீவ ஓட்டம் மூலவாசலை கடந்து கீழிறங்காது அடைத்து பிடிப்பது....அது குதத்துவாரம் அன்று..அந்த துவாரத்துக்கு மேல் லிங்கவும் ஒட்டி யோனியும் உள்ளது..அதற்க்கு மேல் பிரம்ம நாடியும் அதன் மேல் பிரம்ம வாசலும் இருக்கும்...பிரம்ம ராச்சியமே வெளியாகும்... -- திரு. ரியான் ஐயா