Thursday, November 24, 2022

நாத_விந்து_கலாதீ_நமோ_நம

#நாத_விந்து_கலாதீ_நமோ_நம நாதம், பிந்து, கலை என்று மூன்று பெரிய தத்வங்கள், “நாத விந்து கலாதீ நமோ நம” என்று திருப்புகழ் இருக்கு. இதிலே #நாதம் என்பது #சிவ_ஸ்வரூபம், #விந்து என்பது #சக்தி_ஸ்வரூபமாகும். சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் விந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் விந்து. முடிவில் ரூபங்களும் சப்தங்களிலிருந்து உண்டாகிறவைதான். நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வித்யாசம் உண்டு. சப்தம் என்பது வெளியிலே வருகிற ஒலிகள் அவற்றிலே பல உண்டு. நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது அதுவே சப்தம் ஒடுங்கிறபோதும் சேர்கிற ஸ்தானம்.

சிந்திக்க

இண்ணைக்கு ஒரு பதிவு பார்த்தேன் அதன் கருத்தும் என் கமெண்டும்.புரிந்தவர்கள் கமெண்டலாம். ஆதியே🌑துணை பல பிள்ளைகளை பெற்ற ஒரு பெண்மணியை பார்த்து ஒருவர் கேட்டாராம் தாங்ஙள் பொம்பளை தானா என்று அதற்கு அந்நப் பெண்மணி கூறினார்கள் னான் பெண்மணி என்று அதற்கு அவர் னான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றாராம் அதற்கு அந்நப் பெண்மணி எம் பிள்ளைகளிடம் கேளுங்ஙள் உனக்கு தாய் யாரென்று என்றார்களாம் அதற்கு அவர் னான் உன் பிள்ளைகளிடம் கேட்க மாட்டேன் என்றாராம் அந்நப் பெண்மணி தான் ஒரு பெண்மணி தான் என்று னிரூபிக்க அம்மணமாக இருந்நா காட்ட முடியும் அல்லது அந்ந சந்நேக பிராணியிடம் புனர்ந்நா னிரூபிக்க முடியும் இப்படித்தான் இருக்கின்றார்கள் பல பல பேர் னம் னாட்டில் மனிதன் என்ற போர்வையில் தானொரு அறிவு ஜீவி என்று னினைத்துக் கொண்டு தான் ஒரு மனப் பிணியாளி என்பதனை மறந்நு =============================================== Hseija Ed Rian குருனாதரின் கேல்வி பதில் பகுதி ஒண்ணு இருக்கு, அதுல ஒரு கேல்வி, ஆந்தூலம் வருவதெப்படி, பெந்தூலம் வருவதெப்படிண்ணு இருக்கும்.ஆனால் அங்க அதுக்கு மட்டும் குருனாதர் பதில் சொல்லி இருக்கமாட்டார், ஏண்ணா அதுக்கான பதில் தக்க குருனாதர் ஒருவரிடம் இருந்து தான் பெற்றுகொள்ளவேண்டும். அது ஞானவிஷயம்.உங்களுக்கு இந்த விஷயம் தெரியாத காரனத்தால் தால் இப்படி ஒரு பதிவு வந்தது. தான் ஒரு பெண் என நிரூபிக்க இந்த பெண்மணிக்கு தெரியவில்லை, ஆனால் அவள் மாறாக தாய் என நிரூபிக்க எத்தனிக்கிறாள்.கேட்ட கேல்வி என்பது நீ தாய் தான் என நிரூபிக்க அல்ல, பெண் என நிரூபிக்கவே. இந்த சின்ன வித்யாசம் கூட தெரியாம கதை சொல்கிறீர்.கூடவே கேள்வி கேட்டவனை கூமுட்டை என பரிகாசம் வேறு.நிச்சயம் அந்த கேல்வியை அந்த பெண்மணியிடம் கேட்டவர் ஞானவிஷயம் தெரிந்தவர் என அனுமானிக்கலாம்.உண்மையில் கூமுட்டை யாரெனில் தான் ஆண் என்றோ பெண் என்றோ அம்மணமாக காட்டாமல் விளக்கத்தெரியாதவர் தான் என்பதுகூட உமக்கு புரியவில்லை.சந்தேகம் இருந்தால் குருனாதரின் கேல்வி பதில் போயி பாரும்.அது தெரிந்தவர்கள் தான் “ஆண்குரு” என அடையாலப்படுத்திகொள்ளுபவர்கள்.குருனாதரை அம்மனமாக பார்த்துகிட்டா ஆண்குருண்ணு சொல்லிகிட்டு திரியிறீங்க?புரியுதா என்ன?.புரிஞ்சா உங்களுக்கு நல்லது.புரியாமல் போனாலும் எனக்கு எந்த சேதாரமும் இல்லை.

ஒத்த பொருள் யாது?

ஒத்த பொருள் யாது? அன்பார்ந்த சன்மார்க்க சாதகர்களே, ஆன்மீக மார்க்கத்தில் பிரயாணம் பண்ணும் சாதகர்கள் முக்கியமாக அற்ந்து கொள்ளவேண்டியது “ஒத்த பொருள்’ என குறிப்பிட்டுள்ள மறை ரகசியத்தையே. அதென்னது ஒத்த பொருள் என கேள்வி எழும்புவது சஹஜமே,ஏனெனில் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்கம் சொல்லுவார்கள், ஆனால் ஒத்தது அறிந்தவர் ஒருசிலரே.அதனாலேயே ‘ஒத்தது அறிந்தார் உயிர் வாழ்வர் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்பெடும்” என்றனர் ஞானிகள். உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர்,ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள்,அல்லவா?.அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்?.. ஆம், அதுவே உண்மை, உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த” விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்” அவ்வுடம்பில் சிரசினில் இருக்கும்.அதில் உயிர் நிலையானது ஆணாகில் விந்துவுடனும், பெண்ணாகில் நாதமுடனும் இசைந்து இருக்கும்.. ஆனால் ,அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்” , எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.வாழ்க குரு “திருவடி”

உஜூதுண்ணா என்னாண்ணு தெரியுமா?

உஜூதுண்ணா என்னாண்ணு தெரியுமா? கலிமாவின் பிரிவு தெரியுமா? யாது நிலை எத்தனைண்ணு தெரியுமா? தாத்து வகை விரிவு தெரியுமா?. இஸ்முல் அஃலம்ண்ணு சொன்னா என்னாண்ணு தெரியுமா? இத்திஹாக்குண்ணா என்னாண்ணு தெரியுமா? அர் என்றால் என்னாண்ணு தெரியுமா? குதுப் ந்ணு சொன்னா என்னாண்ணு தெரியுமா? மஹ்ரிபத்தின் பாதை தெரியுமா? முஹப்பத்தின் விளக்கம் தெரியுமா? றூஹூவுக்கும் றூஹானிக்கும் வித்யாசம் தெரியுமா? றஸூலுக்கும் சூலுக்கும் வித்யாசம் தெரியுமா? அஹமத்துக்கும் முஹம்மதுக்கும் வித்யாசம் தெரியுமா? தாத்துக்கும் ஹக்குக்கும் வித்யாசம் சொன்னா விளங்குமா? கால் மடக்கும் தலம் எது? முகம் கழுவ தெரியுமா? --❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️                   

வாசியும்(Wa-chi) வூசியும்(Wu-Chi

வாசியும்(Wa-chi) வூசியும்(Wu-Chi) இங்க வாசியே ஒழுங்கா வரல,இப்படி இருக்கற சமயத்துலயா வூசி என நீங்கள் கேக்கிறது புரியறது.ஆனா என்ன செய்ய சொல்லாம போக கூடாதுல்ல.அதன் சொல்லாம சொல்லிகிட்டு போவோம்ண்ணு போறேன். ”காதற்ற வூசியும் வாராது காண் கடை வழிக்கே” என பட்டினத்தடிகள் மகனின் பாடலை விளக்க போன ஏதோ கூமுட்ட விளக்கம் தெரியாம ஏதோ “ஊசி”ண்ணு பொருள் சொல்லிகிட்டு போனான்.அவனுக்கு எப்படி நான் சொல்லி புரிய வைப்பேன், இந்த வூசி வேற அந்த ஊசி வேறேண்ணு?. காது தான் ஊசிக்கு பயனானது,காது அற்று போன ஊசி பயனாகாததுண்ணு இவன் பொருள் சொல்றான், தன் மகன் எழுதி வைத்த ஓலை துணுக்கில் குறிக்கப்பட்டிருந்த குறிப்பு தான் இது. இந்த வரியை பார்த்ததும் பட்டினத்தார் திடுக்கிட்டு மனம் மாறி சன்யாசம் பெற்றார் என கதை விட்டு கொண்டிருக்கிறது ஒரு குட்டம், அதை அப்படியே நம்பி செல்கிறது மற்றொரு கூட்டம்.மகனாக வந்த சிவபெருமானாரே பட்டினத்து அடிகளாருக்கு இப்படி ஒரு ஓலையையும் ஒரு காதற்ற ஊசியையும் அனுப்பி வைத்தார் என்கிறது கதை. சரி, பட்டினத்து அடிகளாருக்கு ஒரு ஓலை துணுக்கில் இப்படி ஒரு பாடலை எழுதி அனுப்பிய அவர் மகன் எதுக்கு ஒரு காதற்ற ஊசியையும் கூட அனுப்பி வைத்தார் என்று இந்த மக்கள் கேட்ப்பதில்லை. ஓலையில காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என ஓலையில் மட்டும் எழுதி அனுப்பினா பட்டினத்து அடிகளாருக்கு என்ன புரியாமலா இருந்திருக்கும், எதுக்கு அது கூட ஒரு காதற்ற ஊசியும் கூட அனுப்பினாராம் மகன்?. தந்தயர் காதற்ற ஊசியை முன்னர் பார்த்திருக்கமாட்டாரா, அல்லது காதற்ற ஊசி என ஒன்று அவருக்கு தெரியாதா என்ன?.சற்று யோசித்து பாருங்களேன். படத்துல இருக்கிரது தான் காதற்ற ஊசி.வாசியும் வூசியும் தெரிந்து கொண்டோம்

சித்த வித்தையும் வாசி யோகமும் ஒன்றா?

====சித்த வித்தையும் வாசி யோகமும் ஒன்றா?=== சித்தவித்தை என்பது ஹடயோகவில் உஜ்ஜயீ என அழைக்கபடுகின்றது.இது முற்றிலும் ஹடயோக முறை பிராணாயாமம்.தெரியாத பசங்க ஏதோ புதுசுண்ணு நம்ம சிவானந்தபரமஹம்சர் கண்டுபுடிச்சதுண்ணு கதை அளப்பான்.https://www.youtube.com/watch?v=h-91SAyQ5QQ&list=PLzndesNO5XwZz0n4p9BQ4nga2qcdE8IHJ&index=2&t=0s https://www.youtube.com/watch?v=h-91SAyQ5QQ&list=PLzndesNO5XwZz0n4p9BQ4nga2qcdE8IHJ&index=2&t=0s கீழே விளக்கபடுபவை தான் சித்தர்களின் வாசி யோக முறை ////சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில் முக்திக்கு மூலமது=ஒளவையார்// //வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்து ஏமுற்ற முப்பத்திரெண்டும் ரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டும் கும்பிக்க உண்மையே=திருமந்திரம்// //பிங்கலையாவதி ரேசகத்தை வளர்பூரகந்தன்னில் இடத்தூதி நங்களை நந்தியில் கும்பிக்கவே சிவயோகமிதல்லவோ ஞானப்பெண்ணே=கொங்கனர்// //காணவே ஓங்காரம் பிரதானம் தான் கருவான ஆதார மூல பீடம் தோணவே மூலம்மென்ற ஆதாரத்தில் துலங்கி நின்ற ஆவியட வாசியாச்சு பேணவே ஆவிஎன்ற வாசிஎறி பெருகி நின்ற ஆதாரம் கடந்தபபாலே பூணவே ரவி மதியில் சுடரில் சென்று புத்தியுடன் பூரணமாய் தீபம் பாரே -அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 32// //கூறவே மூலத்தில் வாசி கொண்டு கோழி முட்டை போலிருக்கும் முக்கோணத்தில் மாறவே இடை பின்னாய் இரண்டும் ஓடும் மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே -அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 353// //வாறான பிராணாயம் வாசிகேளு வகையான பூரகமே முப்பத்திரண்டு ஆரன கும்பகமே அறுபத்திநாலு அட்வான ரேசகமே பதினாறப்பா கூரான மாத்திரையின் வகைகல்ளெல்லாம் குறிப்பாக அறிந்து கொள்ளு மாத்திரைசொல்வேன் தாரான தலைசுத்தி நொடிப்பதப்பா சமுசயங்கள் ஒன்றுமில்லை மாத்திரையும் மொன்றே -அகத்தியர் அந்தரங்க தீச்சை விதி பாடல் 346// //வாசிஎன்ற இடகலையில் பூரனம்தான் ரெண்டு வரிசையுள்ள சுளினையுள்ளே கும்பகம்தான் நாலு தேசிஎன்ற பிங்கலையில் ரேசகம் தான் ஒன்று அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1.063// //பாரப்பா பிராணாயா மஞ்சுங் கேழு பதிவான ரேசக பூராக கும்பகம் நேரப்ப சவுபீசம் நிற்பீசம் தான் நிசமாக பிராணாயா மஞ்சும பாரு பேரப்ப பிராணாயா மஞ்சும பார்த்தால் பெருகிநின்ற சிவயோகம் உறுதியாச்சு . அகத்தியர் பூரனகாவியம் பாடல் 47// //தங்கியதோர் சவபீசாம் மந்திரத்தில் லூடல் விரைந்துமே நிற்பீசம் மந்த்திரத்தை விட்டு வெளியிலே பூரித்தல் மெதுவிலேதான் போகர் 1000 பாடல் 311//. சித்த வித்தை தான் வாசியோகம் என சொல்லிகிட்டு திரியும் சித்தவித்யார்திகளுக்கு சமர்ப்பணம், வந்து விளக்கம் சொல்வார்களா என்ன?.

விஷம்

=====விஷம்==== “ப்ரச்னோத்தர ரத்ந மாலிகா” என்ற நூலில் ஆசார்யாள் உபதேசித்துக்கொண்டு வருகையில் “எது விஷம்?” என்று ஒரு கேள்வி. “கிம் விஷம்?” அவதீரணா குருஷு என்று அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். குருவிடத்தில் அவமரியாதை காட்டுவதுதான் விஷம் என்று அர்த்தம். “அவதீரணா” என்றால் அவமரியாதை. இதையே திருப்பி வைத்தால் மரியாதை பண்ணுவது, அதாவது மனஸார நினைத்து நமஸ்காரம் பண்ணுவதுதான் நமக்கு அம்ருதம். [‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ ச்லோகங்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு] ‘விஷம் என்ன?’ என்ற மாதிரியே, ‘அம்ருதம் என்ன?’ என்றும் கொஞ்சம் தள்ளிக் கேள்வி வருகிறது. ஆனால், ‘அம்ருதம் என்ன?’ என்று பொதுவாகக் கேட்காமல் ‘காதுக்கு அம்ருதம் என்ன?’ என்று கேட்கிறார். ‘கர்ணாம்ருதம்’ என்கிறோமே, அப்படி. “பாதும் கர்ணாஞ்ஜலிபி: கிம் அம்ருதம்?” “கர்ணாஞ்ஜலிபி:” – காது மடல்களால்; “பாதும்” – குடிப்பதற்கு; “கிம் அம்ருதம்” – எது அம்ருதம்? காது மடல் குவிந்து ஒரு தொன்னை மாதிரிதானே இருக்கிறது? தொன்னையால் பாயஸம் சாப்பிடுவது போல இந்தக் காது மடலில் எந்த அம்ருதத்தை ரொப்பிக்கொண்டு உள்ளே ஹ்ருதயத்துக்கு அனுப்பி வைக்கணும்? இப்படிக் கேட்டுவிட்டு பதிலாக “ஸதுபதேச:”. என்கிறார். குரு அளிக்கும் நல்ல உபதேசம்தான் அப்படிப்பட்ட அம்ருதம் என்கிறார். எது அம்ருதம் என்று பொதுவாகக் கேட்காமல் காதுக்கு எது அம்ருதம் என்று குறிப்பிட்டுச் சொன்னதில் நமக்கு ஆதரவாக ஒரு விஷயம் கிடைக்கிறது. என்ன பார்த்தோம்? குரு நிந்தைதான் விஷம் என்று பார்த்தோம். அப்படியானால் அதன் ஆப்போஸிட்டான குரு வந்தனம்தான் விஷத்துக்கு ஆப்போஸிட்டான அம்ருதம் என்று முடிவு பண்ணினோம். ஆசார்யாளும் அப்படியேதான் முடிவு பண்ணி விட்டிருக்கிறார். “நிந்தனை விஷமென்றால் வந்தனைதான் அம்ருதம்; இது குழந்தைக்குக்கூடத் தெரிந்துவிடும்; ஆகையால் இவற்றில் ஒன்றை – விஷத்தை – சொன்னதே போதும். ‘அம்ருதம் எது?’ என்று இன்னொரு கேள்விபோட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்” என்று தீர்மானம் செய்திருக்கிறார். அப்புறம் குருவின் உபதேசத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலாக “ஸதுபதேசம்” என்று சொல்லலாமென்று யோசித்திருக்கிறார். அப்போதுதான் “காதுக்கு எது அம்ருதம்?” என்று கேள்வி போடுவோமென்று முடிவு செய்திருக்கிறார். கர்ணாம்ருதம் (காதுக்கான அம்ருதம்) என்று சொல்லாமல் ‘கர்ணாஞ்ஜலியால் குடிக்கும் அம்ருதம்’ என்று போட்டிருப்பதிலும் அர்த்தபுஷ்டி இருக்கிறது. கர்ணாஞ்ஜலி என்றால் காது மடல். இங்கே அஞ்ஜலி என்றால் மடல். கூம்பியிருக்கும் புஷ்பம் விரிவதை ‘மடலவிழ்வது’ என்கிறோம். கன்னத்தோடு மடித்துவைத்தால் கூம்பினாற்போலிருப்பது காதுமடல். அதை அவிழ்த்து, இப்போது நமக்கிருக்கிறது போல விட்டுவிட்டால் மடல் மலர்ந்து சப்தங்களை வாங்கிக் கொள்கிறது. அதனால்தான் கர்ணாஞ்ஜலி என்பது. அஞ்ஜலி என்று சொன்னால் பொது அர்த்தம் நமஸ்காரந்தானே? புஷ்பம் கூம்பிக் குவிந்த மாதிரி மனஸு குவிந்து பக்தி செய்யும்போது அதற்கு அடையாளமாகக் கைகுவித்து – “கைகூப்பி” என்றே வழக்கில் சொல்கிறபடி – நமஸ்காரம் செய்கிறோம். அப்போது கையின் ‘ஷேப்’ கூம்பின புஷ்பம் மாதிரியிருக்கிறது. ‘அம்ருதம் என்றால் அது குரு வந்தனந்தான்; விஷம் குருநிந்தை என்றால் வேறு விதமாக இருக்கமுடியாது. அதனால்தான் ‘காதுக்கு அம்ருதம்’ என்று பாகுபடுத்திச் சொல்கிறார்’ என்று பார்த்தோம். அதையும் இன்னம் நயமாகக்கொண்டு போய்க் கர்ண அஞ்ஜலிக்கு அம்ருதம் என்று சொல்லியிருப்பதில், ‘அஞ்ஜலி’ என்ற வார்த்தையையும் போட்டு நமஸ்காரம்தான் அம்ருதம் என்பதை நன்றாகவே உறுதிப்படுத்திவிட்டார் என்று தோன்றுகிறது. ‘நமஸ்காரமாகிய அஞ்ஜலியே பொதுவாக உயிருக்கு அம்ருதம். கர்ணாஞ்ஜலிக்கு அம்ருதமாயிருப்பது குரு அருளுகின்ற ஸதுபதேசம்’ என்று ஆசார்யாள் காட்டியிருப்பதாகத் தெரிந்துகொள்கிறோம்.

நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு?

=== நான் என்பதே இல்லையென்ற பிறகு முக்தி யாருக்கு?  === எண்ணற்ற கோட்பாடுகள்,எண்ணற்ற கொள்கைகள் என எல்லாம் குழம்பி போய் கூத்தடிச்சு நான் சொல்றது மெய்,நீ சொல்றது பொய் என அடுத்தவன் அடுத்தவனை குறை சொல்லியே உண்மை எதுவென அறியாமல் கடைசியில் ஒரு அருமையான வாழ்வு முடிந்துவிடுகின்றது. ஞானியர் என சொல்லிகொண்டு பலபேர் வந்துபோயிருக்கின்றனர், ஆனால் சீடர்களுக்குத்தான் குழப்பம் திர்ந்தபாடில்லை. மறுபிறவி உண்டு என சொல்பவர்கள், மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள், கர்மம் உண்டு என்பவர்கள், கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள்,ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள்,ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள், எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள்,உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள், தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள்,குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள்,குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள். ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள், ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள். குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல், மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள், இயற்கையே கடவுள் என்பவர்கள். உயிர் தான் கடவுள் என்பவர்கள், ஜீவனே சிவன் என்பவர்கள்,நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள், நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள், வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள், என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல், மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என... “அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே”    ~ திருமந்திரம் இரண்டு வித்தியாசமான அமைப்பை கொண்டுள்ள வஸ்த்துக்கள் ஒரு வட்டத்தின் சூழலில் அமையப்பெறின் அங்கு மூன்றாவது ஒரு சுழற்சி அசைவு உருவாகும். இறை ஆகாசத்தில் ஆன்ம அணுத்துகள் வந்து பெறுமாயின் இவை இரண்டுக்கும் இடையே மற்றொரு இயக்கம் ஆரம்பிக்கும். அந்த இயக்கம் இரண்டுக்கும் ஒற்றுமையாகவும், வேற்றுமையாகவும் கொண்டிருக்கும். அதனால் இவை இரண்டும் எதிர் எதிர் துருவங்களாக தனக்குத்தானே பலாபலம் கொண்டு இயக்கம் கொள்ளும். எப்போது இவை இரண்டும் ஒன்றாகிறதோ, அப்போது அசைவு நிலை நிற்க்காது மறைந்துவிடும்... அதுவரை உசும்புதல் நீளப்பெறும் அனந்தகால பேதமாக.. விதவித தோற்றங்களில் விதவித மாற்றங்களில் விதவித வண்ணங்களில்... ஜீவன்னா  என்னதுன்னு, நிமிட நேரத்தில் குருபிரான் காட்டிகொடுக்கும் அந்த அணுவினும் அணுவான பொருளை கண்ட பின், சீவகாந்தம் என்பது வெறும் மாயாஜாலமே. ஜீவனை அறிந்திறாதவர்கள் கொண்டாடும் வெறும் வாய்சவுடால்.. "அணு என்றாலே அனுமானமாகத்தானே உணர முடியும்.  புலன்களுக்கு எட்டாத விடயம் தானே." புலன்களுக்கு எட்டாத ஒன்றுக்கு பெயர் எதுக்கு?.  அணு என்றால் புலன்களுக்கு நுண்ணியது என பொருள். ஒவ்வொரு மனிதனுக்கும் கோடானுகோடி உயிர்துகள் என ஒன்றுமில்லை, ஒரே ஒரு உயிர் அனு தான் தந்தை தாய்க்கு தானம் கொடுத்தது.. அந்த ஒரு உயிர் அணு தான் உடலை கட்டமைக்கின்றது. மனிதனின் உடலில் இயங்கும் ரெத்த அணுக்கள் மற்றும் ஏனைய சூக்கும என்சைம்கள் போன்ற என்னற்ற உயிர் வடிவங்கள் இருப்பினும் அவை உடலுக்கு ஆதி காரணமான ஜீவ அணு அல்ல. அணுவுக்குள்ளே எலக்டரான், புரோட்டான் என துகள்களும் அவை இயங்க வெளியும் உள்ளது. ஒரு ஜீவ அணுதான் என்று சொன்னாலும் அதிலேயே பலவும் உள்ளது. ஜீவ அணு என்பது பவுதீக அணுவை போல புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் கொண்ட கட்டமைப்பு அல்ல ஜீ.  இங்கே அணு என சொல்வதின் பொருள் மைனூட் என பொருள்படும். நீங்கள் கருதுவது போன்று பவுதீக நுண் அணு அல்ல.  ”நுண்ணறிவு”.  "அறிவே சொரூபமானது ஜீவ அணு". அரூபம் ரூபமாகாது. பஞ்சபூதம் ஒருபோதும் அடர்த்தி நிறை கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை. மொத்த நிறை எப்போதும் சமமாகவே இருக்கும். இந்த பிரபஞ்ச விரிவை விட்டு எதுவும் அப்பால் செல்வதில்லை, இருப்பவை வெளியில் இருந்து வந்தவையும் இல்லை. இருப்பதுவே அதன் இருப்பு. மாயையே மறைப்பு. ஜீவ அணு என்பது நீங்கள் அறிந்திராத காரணத்தால் மனம் இப்படி பலவிதமாக சொல்லத்தோன்றுகின்றது. தூல பவுதீக அணுவை மட்டும் அறிந்துள்லவர்கள் ஜீவ அணுவின் தன்மையை தத்தமது நிலைக்கொப்ப வளம் செறி கொளுவது இயல்பே ஆம். நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி. இதை தான் "சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே" என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே.  அக்கினி அறுந்து போனால் மரணம்.உன் உடல் குளிர்ந்து போகும். குருவில்லா ஆன்மீகம் குருட்டாட்டம் கேள் குணமில்லா சீடனுக்கும் குருவுக்கும் தான் வருத்தமுற்று குருபாதம் தேடினாக்கால் வருத்தமற்று வகைபலவும் வசத்திலாகும் நிருத்தமுற்ற சேவடிதான் நீழலகும் நிருவிகற்ப நிட்டயுந்தான் நிமிடமாகும் பருத்திவிட்ட பஞ்சதைபோல் பரத்திலாடும் பரபிரம்ம சொரூபத்தை கரத்திலாக்கே ஆதியின்றி அந்தமின்றி அருளு வந்துதித்ததோ நீதியின்றி நிறமுமின்றி நிர்மலமும் கதிச்சதோ வேதமின்றி விறகுமின்றி நீரதுவும் கொதிச்சதோ பூதமஞ்சினும் புகுந்த கொள்ளி பூசையதுவும் கொண்டதோ.                    ~~~   ரியான் பஞ்சவர்ணகிளி ஆத்ம வணக்கம் -- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️

தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா?

=== தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா? === உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்.... எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது.... பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது. இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம். வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார் அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை. --❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

இது ஐந்நும் என் பொருள்

”””” இது ஐந்நும் என் பொருள் ”””” சாலை ஆண்குரு திருப்பாதம் னமஸ்கரித்து அட்சரனிலை ஆரம்பம்..கிருபை சொரிவாராக...ஆமீன்..ஆமீன்..ஆமீன். ’அகரம்-அவ்வு-ஏகம்’ இ-ஈ-னா-- து-ஊ-னா-- ஐ-என் -னா-- இந்-நன் -னா-- நு-ஊ-னா-- இம்-மன் -னா-- எ-ஏ-னா-- இன் -னன் -னா-- பொ-ஓ-னா-- ரு-ஊ-னா-- உள்-ளன் -னா-- இது ஆண்டவர் மணலில் எழுதி காண்பித்து கற்பித்தது.சாகா கல்வியாம் தமிழ். ஒரு எழுத்து உண்டாவதற்கு முன் முதலில் பொருள் வேண்டும், இரண்டாவது ஒலி, மூன்றாவது வரிவடிவம். ’அ’ இதன் உச்சரிப்பு: அ-ஆ-னா.இதில் மூன்று ஒடுக்கம் இருக்கிறது. அது குறிக்கும் விஸ்தரிப்பை கடல் என்று சொல்லலாம் என்றால், கடலின் கரையை காணலாமே. ஆனால் ஒலியின் கரையை காணமுடியாது. ’அ’ என்று குறுக்கி உச்சரிப்பதானது,மூன்று கால் உரியில் இரண்டு அறுந்து போனது போல். அ-ஆ-னா என்று சொல்ல வேண்டுவதை அனேக காலமாக சொல்லாது,’அ’ என்று சொல்லி வந்துவிட்டதால்,அந்ந அக்‌ஷரத்தின் பிரயோஜனம் இவனுக்கு இல்லாமல் போய்விட்டது.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் உள்ளது. இதில் மூன்று இலக்குகள் இருக்கின்றன.அம்மூன்றும் என்னென்னெவென்று இந்ந உலகம் முழுவதும் சேர்ந்நு சொல்லட்டும் பார்ப்போம். === மகாமகத்வம் பொருந்நிய ஆண்டவர் திருவாக்கியம். ஆமீன்..ஆமீன்..ஆமீன். ❤️ இறைரகசியத்தை விளக்கி அருளியது                    -  திரு. ரியான் ஐயா அவர்கள்.❤️