Friday, November 11, 2022

புனரபி ஜனனம் புனரபி மரணம்

 புனரபி ஜனனம் புனரபி மரணம்




எண்ணற்ற கோட்பாடுகள், எண்ணற்ற கொள்கைகள் என எல்லாம் குழம்பி போய் கூத்தடிச்சு நான் சொல்றது மெய், நீ சொல்றது பொய் என அடுத்தவன் அடுத்தவனை குறை சொல்லியே உண்மை எதுவென அறியாமல் கடைசியில் ஒரு அருமையான வாழ்வு முடிந்துவிடுகின்றது.


ஞானியர் என சொல்லிகொண்டு பலபேர் வந்துபோயிருக்கின்றனர், ஆனால் சீடர்களுக்குத்தான் குழப்பம் திர்ந்தபாடில்லை. மறுபிறவி உண்டு என சொல்பவர்கள், மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள், கர்மம் உண்டு என்பவர்கள், கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள், ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள், ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள், எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள், உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள், தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள், குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள், குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள். ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள், ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள். குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல், மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள், இயற்கையே கடவுள் என்பவர்கள். உயிர் தான் கடவுள் என்பவர்கள், ஜீவனே சிவன் என்பவர்கள், நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள், நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள், வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள், என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல், மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என...


மெய்யென்ன மெய்யென்ன...எல்லாம் பொய்யே...பொய்யின்றி சொன்னவை மெய்யல்ல...உனக்கு முக்தியில்லை என்பதே உண்மை, ஏனெனில் ‘நீ’ இருக்கும் வரை உனக்கு முக்தி வராது. முக்தி என ஒன்று இருக்குமிடத்தில் ‘நீ’ இருப்பதில்லை. இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் ‘நீ’ நிலையாக இருந்ததில்லை. இப்பிறப்பில் இருக்கும் ‘நீ’ வேறு முற்பிறப்பில் இருந்த ‘நீ எல்லாம்’ வேறு. ஒவ்வொரு பிறப்பிலும் ‘நீ’ மாறிகொண்டேயிருக்கிறாய். உன் மனமும் உடலும் உயிரும் எல்லாம் மாறிகொண்டேயிருக்கின்ரன. நீ ஒருபோதும் அவ்வ்வண்னம் எவ்வனமாயும் நிலையாக இருந்ததில்லை, நிலையற்ற தன்மையே எக்காலத்திலும் உன் வாழ்வின் நிகழ்வு கடந்து வந்திருக்கின்றது. சற்று க்‌ஷன நேரத்தின் முன்னிருந்த நீயல்ல சற்று க்‌ஷன நேரத்துக்கு அப்புறம் இப்போதிருக்கும் ‘நீ’. சுழலும் தன்மை சதா சுழன்று கொண்டே மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஓ மூடனே, ஆனால் ‘நீ’ உன் மனதால் ‘நான்’ சதா மாறாமல் இருக்கின்ரேன் என நினைந்துகொண்டிருக்கின்ராய், இது பொய்யன்றி வேறென்ன?. சுத்த பொய், ‘நீ’ இருப்பதாக நினைக்கிறாயே அதுவே பொய். எப்போது ‘நீ’ அற்று போகிறது அப்போது முக்தி, ஆனால் அந்த முக்தியும் கூட ‘உனக்கல்ல,’., ஏனெனில் ‘நீ’ இருந்தால் முக்தியில்லை, எனில் முக்தி என்பது யாருக்கு என கேட்ப்பாய் அல்லவா?. ம்க்தி என்பது உடலுக்கு உயிருக்கொ, உனக்கோ அல்ல. முக்தி என்பது சுழற்சியின் விடுதலை. கர்மம் எனும் மகா சாகரம் சதா ஓயாமல் அலை வீசி ,நொடிக்கு நொடி ஆசையெனும் காற்றில் அலைவீசி கொண்டிருக்கும் த்ன்மையில் இருந்தும் விடுதலை.கர்மம் எனும் சக்கரத்தில் இருந்து விடுதலை. ஒவ்வொரு பிரவியும் கர்மத்தின் எச்சங்கள் தான், கர்மங்கள் தான் மறு பிரப்பு கொள்கின்றன, அவையே பிறப்பின் பீஜம், பிறப்புக்கு ஆதாரம், இவ்வண்னம் கர்மங்களினால் பிறவிகள் நிலைகொண்டுள்ளன. ‘நீ’ ஒவ்வொரு பிறவியிலும் செத்து போகிறாய், உண்மையில் சாவு என்பது உன் மனதின் சாவு, ‘நான்’ எனும் உன் எண்ணத்தின் சாவு, ‘நான்’ எனும் தற்போதத்தின் சாவு....வந்த வந்த பிரவிகள் எல்லாம் சாவு கொள்ளும், ஞானியென்றோ சித்தனென்றோ சாவுக்கு வேறுபாடு இல்லை,’நீ’ இந்த சாவிலிருந்து தப்ப போவதில்லை. எத்தனித்தாலும் இல்லையென்றாலும் செத்துத்தான் போவாய். இதெல்லாம் உன் கற்பனையின் சாவு தான், உன்மையில் நீ ஒருபோதும் மறு பிறப்பு எடுப்பதில்லை, ஏனெனில் ஒரே “நான்’ அதே ‘நானாக” பல பல பிரவிகளில் அதே “நான்” ஆக இருப்பதில்லை.’நன்’ சதா மாறிகொண்டிருக்கும், மனமும் மாறி கொண்டிருக்கும், உடலும் மாறிக்கொண்டிருக்கும்...கர்மம் மட்டும் நிலையாக சுழன்றுகொண்டிருக்கும். இந்த கர்ம சுழற்சியில் இருந்து விடுதலை என்பதே முக்தி

மகர வித்தை

 ஒண்ணு முதுகெலிம்பின் அடிமுதல் மேலோட்டமாக வெளிமுகமாக அமைந்திருக்கும் நாடி, மேலாக கழுத்து பிடரி, பிந்தலை, உச்சி, நெற்றி, என கீழிறங்கி நாசி, நாசிக்கு கீழ் மேலுதடு வந்து உள்முகமாக கீழிறங்கும். எப்படி கீழிறங்கும் என்பது சூட்சுமம், நூல்களில் சொல்லப்படாதது.


இரண்டாவது நாடி மேலிருந்து முன்பக்கமாக கிழிறங்கி கீழுதடு, கண்டம், நெஞ்சு, நாபி, குறி என கீழ் சென்று உள்முகமாக மேலேறும். இதுவும் எங்ஙனம் மேலேறும் என்பதும் சூட்சுமம்.

இந்த இரண்டு சுழற்சிகளை தான் இரண்டு சுற்றுவட்டம் குறிக்கிறது. மேலும் கீழும் இரண்டு புள்ளிகளும் மையமாக இருக்கும்.

~ ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️

Ren mai" என்பது உடலின் முன்புற மத்திய கோட்டில் ஓடும் சக்தி ஓட்டம் இது Yin சக்தி ஓட்டப்பாதை ஆசன வாய்க்கும் இனப்பெருக்க உறுப்புக்கும் மத்தியில் ஆரம்பித்து கீழ் உதட்டின் மத்தியில் முடிகிறது.

"DU mai" என்பது உடலின் பின்புற மத்திய கோட்டில் ஓடும் சக்தி ஓட்டம் இது Yang Energy முதுகுத்தண்டு அடியின் வால் எலும்பில் ஆரம்பித்து நேராக மேலே வந்து தலையின் மையபகுதி வழியாக மேல் உதட்டுக்கும் மூக்கு நுனிக்கும் நடுவில் முடிகிறதுஇப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.

மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம்.

மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.

அப்படி சாதனை செய்வதினால் "மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்."

அனைத்தும் அண்ணனின் உபதேசம்

ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர்,

புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும்.

எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.

இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது "புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை, தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.

ஒரு சுற்று என்பது ஒரு போக்கு = ஒரு வரத்து சேர்ந்தது. அப்படி ஏழு நாளைக்கு, வாரத்திற்க்கு மூன்றரை போக்கும், மூன்றரை வரத்தும் இருக்கும். மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம்.

இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் "நடு மய்யத்தில்" கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன, அதையே "சுழிமுனை நாடி" என்பார்கள்.

அந்த நாடியானது மூலம் முதல், உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும். சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள், ஆனால் அப்படி அல்ல.

மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது.

இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும். அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி., சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,

அது ஒன்று போக்கு எனவும், ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும், விஷமும் எனலாம்.

இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர், ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.

சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும், வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது.

அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது. அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்

முரீது மஹரிபா

 ====முரீது மஹரிபா====


மூச்சடங்கும் இடமதுவே முரீதென்பர் என்கின்றார் ஆண்டவர்கள்.இவனுங்களோ ஏதோ ஒரு தூல இடத்துல மூச்சு அடங்குற மாதிரியும், அந்த எடத்தையே மெய்ஞானிகள் தொட்டுக்காட்டி சென்றுள்ளதாகவும் நம்பிகிட்டு இருக்கானுவ.ஒருத்தன் சொல்றான் கண்மணி தான் அந்த இடம்ண்ணு, அடுத்தவன் சொல்றான் இல்ல இல்ல புருவமத்தி தான் அந்த இடம்ண்ணு,வேறொருத்தன் சொல்றான் கண்மணிங்கிறது தான் புருவமத்திண்ணு,மற்றொருத்தன் சொல்றான் புருவமத்தியில தான் ஆதம் திருவடியான மூன்றாவது கண் இருக்குண்ணு.எதை எதையோ சொல்லிகிட்டு இது தான் ஆதம் பாதம்ண்ணு நம்பிகிட்டு இருக்கானுக போல.

“மூச்சாகும் தம்மாஹு உயிரு ஹயாத்தாகும் முடியாத மூச்சலவோ ஆதமென்று பேரு” என மெய்ஞான செம்மல் பீருமுஹம்மது அவர்கள் பிஸுமில் குறத்தில் சொல்வது இவன் காதுக்கு ஏறவே ஏறாது.இந்த முரிதை குறிப்பிட்டால் அது மெய்ஞான முரீது இல்லை, எங்க குரு சொன்ன கண்ணு தீட்சை தான் மெய்யான உபதேச முரீதென்பான் கூறுகெட்ட பயல்.

“ஆதமென்ன அவருடைய பாதமென்னவெற்றால் அறியாத பேருக்கெல்லாம் அறிய சொல்வேன் கேளும்”ண்ணு பீரப்பா பாடி சொல்லியும் இவன் புத்தி விளங்காம இருக்கான்.”வேதமென்றும் ஆதமென்றும் விலம்புவதும் அது தாந்வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து அதுதானே அஹதத் என்று அனைத்தியும் உள்ளடக்கி  அப்புறமும் வாகிதியத்தாய் வானத்திலோ ஆதம்-வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு வகைவகையாய் தலைமுறையாய் வந்தது அந்த விந்து-அந்த விந்து ஆதம் முதல் அணிய வந்ததினால் அது தானே ஆதத்துடைய பாதமது நிஜமாம்” என்கின்றார் வள்ளல் பீருமுஹம்மதிய்யா.

அதாவது அஹதத் என்கும் மறைபொருளாய் விளங்கிய குதுபு மன்ஸில் மஹபியா எனும் மறைவேத ரகசியமானது, வாகிதியாவாக மலர்ந்து, ஆதம் முதல் அவனியில் தரித்து கொண்டது.அந்த முச்சுடர் சொரூபமானது வகை வகையாக விந்துவினூடாக தலைமுறை தலை முறையாக வவ்வல்கொடியாக படர்ந்து நிற்கின்றது. இதனையே பீரப்பா அவர்கள் தமது ஞானபுகழ்சியினில் “ அவ்வல் அஹதாக நின்ரமரம் ஆகி றஹ்மத்தாய் பூத்துகாய்து வவ்வல்கொடியக படர்ந்து காய்த்து பகதுஅஹதாக காலியாமே -சொல்லத்தகுமல்ல இப்பொருளை சுருட்டி மறைக்கின்றேன் ஷறகுக்காக” என மறைத்து சொல்லியிருக்கின்றார்.

”விந்தை பெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்த புகையது காற்றாய் வெளியில் வரும் மூச்சாம்” என விந்துவுக்கும் மூச்சுக்கும் உண்டான தொடர்பை வெளியாக்கியிருக்கின்றார்.ஆனால் இந்த கூமுட்டை பயலுகளுக்கு சொல்லியும் சொல்லியும் மரமண்டைக்கு ஏறவே மாட்டேன்கிறது.இவன் இப்பவும் கண்ணு கண்ணு என கண்ணையே ஞான ரகசியம்ண்ணு சுத்திகிட்டு இருக்கான்.

“ஆச்சரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்த அலிபு மூச்சுமல்ல ஆதத்துட பாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்கு சுஜூதிட்டால் அதிக தவம் ஆதத்துட பாதமது நிஜமாம்- அந்த அலிபு நிலையறிந்து அதிக தவம் செய்ய அதிகமுள்ள பெரியோரை அடிபணிந்தால் சொல்வார்” இவ்வண்ணம் மறைவேத ரகசியமான ஆதம்பாதம் அறிந்து அதன் தவக்கருத்தில் ஊணாது பொய்பயல்கள் பொய்யை மெய்யென்று போதகம் செய்து தானும் கெட்டு தன்னை சார்ந்து இருப்போரையும் கெடுத்து, இது தான் மெய்வழி என பொய் வார்த்தை சொல்லி திரிவான், வேஷம் மட்டும் புனைந்தால் மெய் ஆகாது, அறிவாம் முத்து உன்னிடம் இருக்க வேண்டும், அந்த மாணிக்க முத்து உன்னிடம் இல்லையென்றால் நீயும்  சைத்தானை ஆராதிப்பவனே,சைத்தான் செய்த தவத்தை செய்பவனே தான் என பீரப்பா சொல்லி போயிருக்கின்றார்.நீயோ செய்ய வேண்டிய தவமுறை முரீது என்பது சைத்தானுக்கு தெரியாததாக இருக்க வேண்டும், சைத்தான் பழகாத முரீதாக இருக்கவேண்டும், சைத்தான் ஏறாத தவநிலையாக இருக்க வேண்டும்.அதுவே தீன் எனப்படும் மெய்வழியாகும். அந்த ஹக்கான அலிபை அறிந்து அந்த தவநிலையினில் ஏற்றம் கொள்வது இஸ்லாம்.

”ஹக்காம்நபி தம்மோடு இறை கல்பான பல்லுடலில்
செக்கானது போல் அஞ்சு திருக்காய் எழும் மூச்சில்
நாக்காத அலிபு ஒன்று உண்டு அதில் நடு ரெண்டுள லாமும்
சிக்காமல் எடுத்து ஓதிடும் என்றே உரை செய்தான்”=பீரப்பா ஞானமணிமாலை

புருவமத்தி என்பது புருவத்தின் மத்தியா -புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.

 புருவமத்தி என்பது புருவத்தின் மத்தியா -புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.

=========================================

திருச்சிற்றம்பலம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது “மணி’ என்பது என்ன? இதை என்ன என்று கூறுமிடத்து வள்ளலார் சொல்லுவதை பாருங்கள்.

“நமது புருவமத்தியில் ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது“ என்பார்....  அந்த “ஒரு மணியே” மணி, மந்திர, அவுடதம் என அறிந்து கொள்ளவேண்டும்…. அந்த ஒரு மணியே ரெண்டு கண்ணிலும் உயிருக்கு உயிராயும் கருணை கடலாயும் கைபடா கனலாயும் ஜோதியாயும் தந்தையாயும் தாயாயும் குருவாயும் ஞானமாயும் மிளிர்கின்றது. அந்த “ஒரு மணியே குருமணி” என அறிதல் வேண்டும்….

அப்படி "ஆறு பட்டையுடன் கூடிய ஒரு மணியை” தக்க குருவின் துணை கொண்டு அறிதலே ஞான தீக்கை.
அதனை தக்க ஆசாரியன் திருவருளால் அறிந்து திறந்து கொள்ளுதலே “நடுக்கண் பூட்டை” திறத்தல். அதுவே ஞான சாதனம்...

இங்கு கற்றவர் உளத்தே இனிக்கும் என்பது அறியப்படவேண்டியது, கண் நுதல் கடவுள் என்பவர் உளத்தே இனிக்கும் தன்மையினர் என தெளிகிறது..ஆனால் ஊனக் கண் மணியானது உளத்தே இனிக்கும் தன்மை அற்றது.

“கண் நுதல்” கடவுள் என்பதுவே அறியப்படவேண்டியது. அதுவே உளத்தே இனிக்கும் தன்மையது.  ஆதலின் உளத்தே இனிக்கும் தன்மை உடைய கண்நுதல் கடவுளை அறிதல் வேண்டும். அன்றியும் “கண் மணியே” இங்கு வள்ளலாருக்கு ஞான மணியாயும் ஞான மருந்தாயும் இருக்கின்றது. ஆதலின் “மணி” என்பது என்னவென்று புரிதல் அவசியம்..

“மணி மந்திர அவுஷதம்” என்பர் பெரியோர். மணியானது மந்திரமாயும் மருந்தாயும் இருக்கிறது என பொருள். அதையே வள்ளலாரும் தெரிவிக்கிறார்.
பொற்சபை நடஞ்செய் புண்ணியரை கண்ணினுள் மணியாயும், கைபடா கனலாயும், கறைபடா மதியாயும் ,கணிப்பரும் கருணை கடலாயும், தெய்வமாயும் கருதி திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்றே வள்ளலார் பாடுகின்றார்.

ஆதலின் இங்கு ஊன கண்மணியே தான் கடல் என கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் மதியென கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் கனலாயும் கொள்ளுதல் தகுமோ?.. அப்படி கொளின் ஊன கண்மணி தான் கடல் எனவும் கொளவேண்டுமே.? ஒரு ஊன் உறுப்பு, ஊன்பொருள் எப்படி கனலாகவும், கடலாகவும், இலங்கும் என்பதை சற்று கூர்ந்து நிச்சயித்தல் நன்றல்லவா?.

ஆதலின் இஃது உவமையாக கொண்டதே அன்றி ஊன கண்மணி தான் கனல் என்றோ, ஊன கண்மணி தான் கடல் என்றோ, ஊன கண்மணி தான் மதியென்றோ, ஊன கண்மணி தான் பொற்சபை என்றோ கொள்ளுவதெங்ங்னே?.

இப்பாடலில் வள்ளலார் உபயோகிக்கும் வார்த்தையானது “தெய்வமே என நான் நின்னையேகருதி” என்பதாகும். அதாவது மேற்கூறியவை உவமையாகும். அதாவது,கண்ணின் மணி போலவும், கைபடாத கனல் போலவும், கறைபடா மதி போலவும், கருணை கடல் போலவும் புனைந்துரைக்கின்றார் பெருமான் அவர்கள். ஆதலின் “கண் நுதல் கடவுளை என்பது மேற்சொன்ன “மணி’ என் தெளிதல் நலம்.

அடுத்து மெய்ஞானம் என்ன என வினவுமிடத்து வள்லலார் கூறும் மெய்ஞானமானது “தகரமெய்ஞானம்” எனப்படும். அதை “தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும்ஜோதி” என்பார் அகவலில். அப்படியான தனிப்பெரும் வெளியினி விளங்கும் தனிப்பெரும் கருணையளரே அகர நிலையான அருட்பெரும் ஜோதியார்., அப்படியல்லவா?. ஆகையினால் ஊனக்கண்ணும் அதில் இருக்கும் மணியும் தனிப்பெரும் வெளியாவதெங்ங்னே என சிந்தித்தல் நன்மை பயக்கும். முன்சொன்ன ஆறுபட்டையுள்ள மணியிலங்கும் தலமே ”தகர வெளி”.  அல்லாது செத்துபோகும் போது அழுகி மண்ணோடு மண்ணாகி போகும் தன்மையான ஊனகண்மணி தகர மெய்ஞானமாகாது.

அன்றியும் மெய்பொருள் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட தூல பருப்பொருளக இருக்கமுடியுமா என சிந்தித்து தெளிதல் நலம்.

கண் என்பதும் கண் மணி என்பதும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதும் மரணகாலத்தில் அழிவை தருவதும் ஆகும். ஆனால் வள்ளலார் கூறும் தகரவெளியில் விளங்கும் மணியானது பஞ்ச பூத சேர்க்கையினால் உருவாக்கபடாததும் அனாதி முதல் இருப்பதுமாகிய “உண்மை வஸ்த்து”. அதை ”ஏக வஸ்த்து” என்பர் சான்றோர். அதுவே “மணி”, கண்ணுக்கு கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும்,மாமருந்தாகவும் கைபடா கனலாகவும் , இன்பத்தை தரும் அமிர்தமாகவும் உள்ளது. அதையே கண்ணார் ஒளி எனவும், ஒளியின் கதிர் எனவும் சொல்லுவர்.

கதிர் என்பது கதிரவனை குறிக்கும், அதை ஞான சூரியன் என்பார், அல்லது சிவசூரியன் என்பாருமுளர். “தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த கண்களில் செலுத்தவேண்டும்” என வள்ளலார் சொல்வதை சற்று கவனிக்க அதன் உண்மை புலப்படும். அதாவது சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த ”கண்களில் ” செலுத்தவேண்டுவது கடமை. சூரிய கலை என்பது ஒரு கண்ணில் அல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள், அப்படியெனில் ஏன் வள்ளலார் “கண்களில்” என பன்மையில் குறிப்பிடுகின்றார்? ரெண்டு கண்களிலும் எப்படி சூரிய கலை வரும் என நினைக்கவேண்டாமா?

“விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்கலந்துநின்ற கதிரே”,

என்பதில் வரும் கதிரே ”அகர” நிலைப்பதியான அருட்பெரும் ஜோதி, இதில் வரும் விண்ணே என்பது ”தகர வெளி” எனப்படும். ஆகையினால் தினமும் சூரிய கலையான “அகர’ நிலையின் பால் மனதை செலுத்தவேண்டும்.. இதுவெ வள்ளலார் கூறும் தகர மெய்ஞானம். அல்லாது யோக சாத்திர சம்பிரதாயப்படியான அகரம் என குறிப்பிடும் சூரியகலை இயங்கும் வலது கண் இல்லை என தெளிதல் நலம் அன்றோ.

மேற்படி விளக்கங்களினால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம், ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார்.

புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார்.

அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில் அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும். புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?

அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?.

மேலும், சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?... அதை விளக்கமாக பார்ப்போம்.

முதலில் மேலிருந்து கீழாக முதலில் பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே?

ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?.. அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா?

அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார்,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.

நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர்.

ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.

இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

இருமை

 இருமை

தன்னுடலை தான் என்பதும், தன் மனதை தன்னுடையது என்பதும், தன் உயிரை தன்னுடையது என்பதும், தன் எண்ணங்களை தன்னுடையது என்பதும், தன் பேச்சை தன்னுடையது என்பதும், தன் செயல்கள் அனைத்தும் தன்னுடையது என்பதும், தன் உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் தன்னுடையது என்பதும், ஆக இதுவே இருமை எனப்படுவது. இருப்பது ஒருமை மட்டுமே, அதனை காணாது ,உணராது இருமையால் அவதியுறுவதே குழப்பத்திற்க்கெல்லாம் காரணம்

தியானம்

தியானம்

வணக்கம்; ஏதோ தியானம் ஆரம்பிக்கபோறோம்ணு பெரிய விஷயம்ணு நெனைக்காதீங்க, தியானம் ஒண்ணும் பெரியசங்கதி ஒண்ணுமில்லே, ஆனா பெரிய விஷயத்துக்கு ஆரம்பம் தான்.


எல்லோரும் ரெம்பவும் தான் தியானம்ணு அலட்டிக்கிறாங்க, அப்படி இருக்கணும், இப்படி இருக்கபடாது, அந்த நெனைப்பு வரகூடாது, இப்படித்தான் இருந்து செய்யணும்ணு ஏராலமான கட்டுப்பாடுகளை தியானத்துக்கு விதிச்சுருவாங்க, அதனால தியானம் சரியாக எப்பவுமே அமையறதுல்லை. இது தான் தியானத்துக்கு வரும் குறுக்கீடு. தியானத்துக்கு எந்த கட்டுபாடுகளும் தேவையில்லை, கட்டுபாடுகளை களைந்து இருப்பதே தியானம், அது அருமையானது.


உருவதியானம் அருவதியானம்ணு ரெண்டு இருக்கு, அதுல உருவதியானம்ங்கிறது சும்மா எதாவது ஒரு பொருள்மேலயோ அல்லது நமக்கு மனதுக்க் பிடிச்ச சிலை விக்கிரகம் சக்கரம் முதலியவற்றின் மீது மனம் செலுத்தி இருப்பது.மற்றொண்ணு அருவதியானம், அது இறை கலப்பில் மனம் இருப்பது, சிலை விக்கிரகம் என ஒண்ணும் இருக்காது, மனம் எப்பவும் இறைநினைப்பிலேயே ஆழ்ந்து இருக்கும். இந்த ரெண்டுவித தியானத்துமேலயும் கட்டுபாடுகள் விதிச்சுகிட்டு ஏதோ சாதிக்கபோறோம்ங்கிற நெனைப்புல இருந்துகிட்டீங்கண்ணா நீங்க சத்தியமா தியானத்துக்கு வரமாட்டீங்க. இந்த புரிதல் இல்லாம தியானம் கைகூடாது. அதுனால சிம்பிளாக தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறமாதிரி தியானம் பண்ண புரிஞ்சுக்குங்க. தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறது ரெம்ப கேசுவலானது, தியானமும் அப்படித்தான் இருக்கணும். ஆன்மதாகத்துக்கு குடிக்கிற தியான தண்னீர். அதை சும்மா குடியுங்க, கட்டுபாடு்களை களையுங்க

எப்பொருள் யார்யார்

 எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு...எவன் என்ன சொல்லட்டும், அவன் எந்த ஜீயோ ஸ்ரீ யோ ஆகட்டும், நமுக்கு அவன் யாருண்ணே தேவையில்லை...அவன் சொல்றது என்னாண்ணு மட்டும் தான் கவனிக்கணும், அவன் கூறும் விஷயங்களில் மெய்பொருலான விஷயங்கள் இருக்கின்றதா, அவ்விஷயங்கள் உன்னதமான ஒரு பொருளுக்கு சிறிதேனும் வெளிச்சம் காட்டுகிறதா என காண்போம்.தூலமான சரீரங்கல் அழிந்து போவன தான்,ஆனால் சூட்சுமமான அறிவுகள் அழிந்தௌ போகாதவை, ஒருவர் சொன்ன அறிவு மற்றொருவரிடத்தில் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும் என்பதே உண்மை

சத்சங்கம்

 சத்சங்கம்

எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல... ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாளம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....


ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வளவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்... ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை.. குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பதில்லை...  வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்.. அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது... அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது... வித்தையே குருவாகின்றது... இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....


இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க, அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.

ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை

 ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை



ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும், நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று, ஆனால் உலகமோ அவரை அறியவில்லை. எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.


----பைபிள்


இந்த எக்ஸ்னா "X" என்னவாம்?

பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்

 பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்


ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,தேவன் கட்டளைப்படியே தாங்கள் அறிந்திருக்க வேண்டியதான இந்த மூன்று திருநாமங்களை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதே மெய்.