Wednesday, November 9, 2022

ஒத்தது எது?

 ====ஒத்தது எது?=====”


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”


இந்த குறளை பார்த்துகிட்டு பலபேர் விளக்கம் சொல்லுவதை பார்த்திருக்கிறோம்.கண்ணுண்ணு சொல்றவன் காதுண்ணு சொல்றவன் என பலரகம்..பல மனம்...


ஆனால் விடையானது பாடலிலேயே.இருக்கின்றது என்பது சுவாரசியமான ஒன்று.


“உயிர் வாழ்வான்” என்பது பார்க்க சாதாரணமான வார்த்தையாக தோன்றும்.ஆனால் வள்ளுவருக்கு தெரியாதா என்ன உயிர் என்பது வாழக்கூடியது என?.ஏன் உயிர் வாழ்வான் என சொல்லுகின்றார்,உயிரில்லாமல் வாழ்வு தான் இல்லையே?.ஒத்ததறிவான் வாழ்வான் என சொன்னாலும் என்ன தவறு இருக்கின்றது,அல்லவா?.உண்மையென்னவெனில் உயிர் வாழ்வான் என்பதின் பொருள் உயிருடன் ஒடுங்கி வழ்வான்.அவ்வண்ணம் ஒடுங்கி வாழாதவன் செத்தவர்களுடன் சமமாக கருதப்படுவான் என்பதாம்.


இங்கு விஷயம் எதுவெனில்,ஒத்தது எதுவென்பதேயாம்.


இனி ஒருமுறை கூட வாசிப்போம்,”ஒத்தது உயிர் அறிவான் வாழ்வான் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கபடும்.”.

உடலொத்தது உயிர்-உயிரொத்தது உடல்..இவை. சேர்ந்தது வாழ்வு.


ஏன் இதை ஒத்தது என சொல்லுகின்றனர் எனில் உயிரானதும் உடலை போலவே ஆணாகவும் பெண்ணாகவும் டஇருக்கின்ர காரணததாலேயாம்..இதுவே தெள்ளத்தெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம் என்பது.ஆண்-பெண் உருவகமான குறியீடு மறைசுட்டு.இந்த அறிவு அற்றவன் ஒத்தது அறியாதவன்.அதனால் தான் ஜீவசமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்படுகிறது

சூட்சும தேகம்


சூட்சும தேகம் 


சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று.


வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது


இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம்


பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம்.


அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்?


முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா.


சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்....


பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!. அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே பக்கதுல இருக்கிறப்ப பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.


மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என.


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

சிவோஹம்

 === சிவோஹம் =====


சிவவும் அஹவும் இருக்கிறது என பொருள்.


சிவத்துக்கு அகம் பின்னாடி சேர்ந்து இருக்கிறது தெரியலே...


அகத்துக்கு சிவம் முன்னாடி சேர்ந்திருக்கிறது தெரியலே


வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.


ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.


இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .


“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”


‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்

திருசியசூன் யாதிகளே தியான மாகும்;

சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்

சாதனையே சமாதியெனத் தானே போகும்;

வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்

வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;

அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்

அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==


(காகபுசுண்டர் உபநிடதம்)


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

கருணை

 மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான். இதனால் சிந்திக்கவே விரும்புவது இல்லை. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு கருத்து உள்ளே நுழைகிறது. நுழைந்தவற்றை அப்படியே பாதுகாத்து கிளிப்பிள்ளை பாடம் போல ஒப்பித்துச் சாவதுவரை பதிவேட்டில் உள்ளதை அழியாமல் பாதுகாக்கும் வேலையைச் செய்த்துவிட்டுச் சாகிறான்.


இதனால் உண்மைக்கு உயிர் கொடுக்க முடியாது. உனக்குள் வாழும் உண்மை உயிர் பெற வேண்டும்.


பெரிய ஞானிகள் தத்துவங்களைப் படைத்துவிட்டு தமது பெயரை எழுதாமல் போனதன் ரகசியம் இதுதான். தமது தத்துவம் பலரைக் கொத்தடிமை ஆக்கிவிட்டால் அந்தப்பாவம் தம்மைச் சேரக் கூடாது எனக் கருணையுடன் மறைத்தார்கள்.

கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா?

 ==== கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ==== 


”ஐந்துகரத்தனை யானை முகத்தனை 

இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை

நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”


வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொளுதல் நலம் அல்லவா?. உங்கள் அருமையான விடைகளுக்கு காத்திருக்கிறேன்....


நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு?


திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?.. எதாவது வித்யாசம் உள்ளதா என்ன?..


யோகசரியை படி எல்லா ஆதாரங்களிலும் ஒவ்வொரு ஆதாரமூர்த்திகள் தத்தம் துணைவியருடன் இருப்பதாக சொல்லபடுகின்றது, ஆனால் மூலாதாரத்தில் பராசக்தியும் கணபதியும் சொல்லபடுகின்றது... ஏன் சிவனார் எங்க போனார்?


திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெலாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?


பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர். அப்போது சிவன் கணபதிக்கு பிள்ளையா?.. மூலாதார பராசக்தி அந்த பிரணவ நாதரின் துணைவியரா என சந்தேகம் எழும் அல்லவா?


மூலாதாரத்தில் ஆதார வழக்கப்படி பராசக்திக்கு கணவர் தானே இருந்திருக்கவேண்டும்... குண்டலினிதாய்+பிரணவநாதர். 


மட்டுமல்ல மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள். 


கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ங்னம் தகும்?


பிரணவம் தானே ஆதிமூல பரம்பொருள்.. அது கணபதி தானே? அப்போது சிவன் கணபதிக்கு மகன் என சொல்லகூடாதோ என்ன?


எல்லா கணங்களுக்கும் அதிபதியானவர் கணபதி... அவர் பிரணவ சொரூபர்... வேதமூர்த்தி... அவர் இருப்பிடம் மூலாதாரம் .. அவர் துணைவியாக இருப்பது வல்லபை எனும் பராசக்தி... இப்படி யிருக்க சிவனாருக்கு மகன் என கணபதியை ஏன் சொல்லுகின்றனர்... கணபதியல்லவா இவர்களுக்கு முன்னே இருக்கின்றவர்?


 சிவனார் அல்லவா கணபதிக்கு மகன் என சொல்லபட வேண்டும்?..சைவர்கள் குழப்பிவிட்டனரோ...?


தந்தைக்கு முன்னே மகன் உதித்தானே எனும் திருமந்திர பாடலும் இதற்க்கு வலு சேர்க்கிறது அல்லவா?


அப்ப சிவனுக்கும் முன்னரே இருக்கிறவர் கணபதி என்பது திருமந்திர கருத்து என புரிகிறதல்லவா?


ஆனா பாருங்க...சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்....வேறு யாருக்கும் இது கிடையாது..பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது


என்னிடம் ஒரு பழைய ஏடு இருக்கிறது... அதின் பிரகாரம் யானைமுகத்துடன் இருக்கும் தலைவருக்கு சிவன் என பெயர். 


கங்கைசூடி பிறை அணிந்து நீறுபூசி எலும்பும் கபாலமுமாக இருப்பவருக்கு மகேஸ்வரன் என பெயர். சிவன் என்பது கணபதியை குறிக்கும்....அதனால் தான் பராசக்தி மனைவியாக உள்ளாள்....இந்த கனபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... இவர் பராசக்தியுடன் போகித்து மும்மூர்த்திகலை ஈன்றாராம்.


ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்...இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்..அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.


ஓம் என்பது இவரின் பெண்பாகம், ஆண் பாகம் மற்றொரு மந்திரம்.. 


இவரின் லிங்கம்”முப்பத்து மூணு மாறு” நீளமாம்...இதை தான் லிங்கபுராணமும் “பெரிய சைஸ் லிங்கமாக” சொல்கின்றது.. இந்த லிங்கத்தைத்தான் சிவனார் சதா தியானம் செய்கிறாராம்...அல்லாது சிவனார் தானே தன்னுடைய லிங்கத்தை அல்ல, என்பது சாரம்...மும்மூர்த்திகலையும் சிருஷ்ட்டித்துவிட்டு கணபத்சிவமான இவர் எல்லா தந்திரங்கலையும் மந்திரங்கலையும் உபதேசித்துவிட்டு தன்னுடைய உடம்பை அவிழ்த்தாராம்....மீதமானது நீறு...அதை சிவனார் என நாம் சொல்லும் மகேஸ்வரனார் உடம்பெலாம் பூசிகிட்டாராம்...


சாதாரனமாக நாம் சொல்வது போன்று சிவன் தான் எல்லோருக்கும் முதல் பிறந்தவன் என கொண்டால், சிவனாருக்கு பூச நீறு எங்கிருந்து கிடைத்தது என ஒரு கேள்வி வரும்...ஏண்ணா சிவனார் பூசியிருப்பது சுடுகாட்டு சாம்பல்... அப்ப சிவனாருக்கு முன்ன சுடுகாட்டுல போன ஒருவர் இருந்திருக்கவேண்டும் எனும் பொருள் நாம் எல்லோரும் மறந்து போனோம்!!


சிவன் தானே கங்காலன் என நாம் சொல்லிகிடுரோம்..வேறு யாராவது இருக்காங்கலா என்ன? 


அது சுடு காட்டில் இருந்து கிடைக்கும் நீறு...”திரு” நீறு... திரு என்பது கணபதி தான்....அதுக்கு ”ஸ்ரீ” என்ற பெயரும் உண்டு. 


யாருடைய மண்டை ஓடு?..சிவனாருக்கு அவருக்கு முன்னால மண்டை ஓடு எங்கிருந்து கெடைச்சுது?


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

நற்றாள் யார்?

 ==== நற்றாள் யார்? ====


வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்… னம்மிலுள்ள தெய்வீகமலையை, ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன். னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை "பிரம்மமுடி" என்றும் சொல்வதுண்டு.


முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற "அ" "ஆ" முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்," அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை, ஹரினமோந்துசிந்தம்" என்று சொல்லி கொடுப்பதினாலேயே "னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம், அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்" என்று தெரிகிறது.


------- மெய்வழி சாலை ஆண்டவர்கள்


அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல்


இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்... அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை. இப்படி “இவ்விடுதலையே “வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....


கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்


-- நன்றி. திரு. ரியான் ஐயா அவர்கள்


அறியோம் நற்றாள்கள் ஆதியே துணை

ஆதியை அறிய குருவே துணை

யோகா தின வாழ்த்துக்கள்

 ==== யோகா தின வாழ்த்துக்கள் ==== 


பிரணாயாமம் பண்ணுரீங்களா..நல்லாவே பண்ணுங்க..


வாசி யோகம் பண்ணுரீங்களா..அதுவும் நல்லாவே பண்ணுங்க..


கிரியா பண்ணுரீங்களா..நல்லாவே செய்து தொலையுங்க....


அனபனாசதி பண்ணுரீங்களா..சாவதானம்மாகவே பண்ணுங்க...


ஹட யோகமா..அதுவும் அருமையா பண்ணுங்க...


விபாசனாவா..அதுவும் அருமையா பண்ணுங்க..


ஆனா மூச்சு பயிற்சி மட்டும் பண்ணவே பண்ணாதீக...செத்து போவிய...


வாசிண்ணா அது மூச்சு பயிற்சிண்ணு மக்கள் நினைக்கிறதை என்று விட்டுவிட்டு, வாசி என்றால் மூச்சுக்கு அப்பால் உள்ள நிஜம் என்பதை அறிந்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும்.வலது நாசி இடது நாசிண்ணு சொல்லி மக்களை மாடு மூச்சு வாங்குறதை போல போட்டு மாரடிச்சு வீணாக பொழுது போக்கி என்ன ஆக பொவுதுண்ணு உணராமலேயே இருக்கிறோம்.


பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம். கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன், வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான். 


பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.


இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்.. உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

தன்னை" இழப்பது வித்தையின் சொருபம்,

 "தன்னை" இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை.


தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி, தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல.


தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்.


🌺 திரு. ரியான் அய்யா அவர்கள். 🌺



பிழை என்பது வேறு.. முதிர்ச்சியின்மை என்பது வேறு.

 பிழை என்பது வேறு.. முதிர்ச்சியின்மை என்பது வேறு. 


பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. 


ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது. 

சின்ன வயதில் சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். 


அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும். 


ஒவ்வொருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். 


ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும்.

ஜீவ வெளிச்சம்

 ===== ஜீவ வெளிச்சம் =====

பிண்டம் என்பது பிரபஞ்ச பிரமாண்டத்தின் ஒரு சிறு அளவு அவ்வளவுதான்... 

இந்த சிறு பிண்டத்திற்க்குள் எங்ஙனம் ஜீவன் இருக்கிறதோ அதுபோல பிரபஞ்ச பகிரண்டத்தினுள்ளும் மஹாஜீவன் குடியிருக்கிறது... 

அதை அறியவேண்டுமெனில் இந்த பிண்ட சரீர ஜீவனை முதலில் கவனிக்கவேண்டும்... அது பகிரண்ட ஜீவனுக்கு கொண்டு செல்லும். 

அந்த மகாஜீவனைத்தான் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியுள்-ஜோதியுள்-ஜோதி என வள்ளலார் குறிப்பிடுகின்றார். 

அறிவு விளக்கம் வராது அன்பர்களுக்கு  ஒரு விளக்கை காட்டி அதை கண்டு அவ்வண்ணம் உபாசிக்க சொல்லியுள்ளார். 

தன்னுடைய வெளிச்சமாக தன்னுடம்பு முழுதும் வியாபித்திருக்கின்ற ஜீவனையே அறிந்து வணங்க தெரியாதவர்கள் எங்கே அண்ட பகிரண்ட ஜீவனை உள்வாங்கி புரிந்து அறிந்து உபாசிக்க போகின்றார்கள்... 

இருந்தாலும் அவர்களுக்கும் சிறு வெளிச்சம் வரத்தான் செய்யும்.