[12/03/2020, 11:12 am] G Kumaresh: ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி
[12/03/2020, 11:14 am] G Kumaresh: ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது
[12/03/2020, 11:26 am] G Kumaresh: விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார்.அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம்.நாத நாதாந்த நிலையே இறையறிவு,அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும்.மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம்,அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும்.உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே.அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும்,அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம்,ஆதலின் அதன்கண் விந்து பதிற்று.(விந்து-புள்ளி
[12/03/2020, 11:29 am] G Kumaresh: உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....
தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என
[12/03/2020, 11:32 am] G Kumaresh: இத்தேகத்திற்கும் ஏழு பிறவி யுண்டு. யாதெனில்:- கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று, அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று, பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று, குழந்தைப் பருவம் ஒன்று, பாலப்பருவம் ஒன்று, குமாரப்பருவம் ஒன்று, விருத்தப்பருவம் ஒன்று ஆகப் பிறவி 7.
இவ்வாறே தாவர முதலியவற்றிற்கு முள. மேலும், ஸ்தூலப் பிறப்பு 7, சூட்சுமப் பிறப்பு 7, காரணப்பிறப்பு 7. ஆதலால், மேற்குறித்த ஸ்தூலப்பிறப்பு, சூட்சுமப் பிறப்பு யாதெனில்: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி - ஆக பிறப்பு 7. காரணப்பிறப்பு - மனோ சங்கற்பங்களெல்லாம் பிறவி. ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு. அது அற்றால் பிறவியில்லை =Vallalar