Tuesday, November 8, 2022

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்

 ===வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்====


உலகத்தில் தீர்த்தம் என்பது பரிசுத்தமாகும் பண்பை கொண்டதுவாம். ஏதொன்று அசுத்தத்தை மாற்றி பரிசுத்தப்படுத்துகிறதோ அது தீர்த்தம்.”அண்ணாக்கென்றதின் மேற்புறத்தில் கொண்டது அக்கினி தீர்த்தமாம் ஞானபெண்ணே” என்பர் சித்தர்கள்.அதுவே இறையாத தீர்த்தம்,கண்களில் இருந்து வழியும் நீர் இறைக்கப்படுகிறது....அது இறையாத தீர்த்தம் இல்லை. அப்படியான தீர்த்தத்தில் இருக்கும் புட்பமே எட்டாத புட்பம்...எல்லா நீர்நிலைகளில் இருக்கும் புட்பங்களும் எட்டி பறிக்கமுடியும் தன்மையிலே இருக்க, அக்கினி தீர்த்தத்தில் இருக்கும் புட்பமோ எட்டி பறிக்க முடியாது இருக்கின்றதுவாம்.அந்த புட்பத்தின் மத்தியில் இருக்கும் மணியானதுவோ ஷண்முகமான மவுன மணியாயிருக்க அந்த ஷ்ண்முகங்களும் வெட்டப்பட்ட நிலயில் அல்லாமல் சக்கரவடிவமாய் இருக்கிறதாம்.ஏனெனில் வெட்டப்பட்ட முகங்களை உடைய மணியானது சக்கரமாய் இருக்காது, ஆனால் வெட்டாத சக்கரமாய் இருக்கும் ஷண்முக மவுனமணியானது புருவமத்தியில் இருக்கும் ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது.

சன்மார்க்கக் கொடி எங்க போச்சு?

 சன்மார்க்கக் கொடி எங்க போச்சு?


நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன், எல்லாரும் அதை சொல்றாங்க இதை சொல்றாங்க, ஆனா ஒருத்தரும் சொல்ல வேண்டியதை சொல்லின பாடில்லை. சன்மார்க்க கொடியை தான் சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க.

சன்மார்க்கிகள் சன்மர்க்கிகள் என சொல்லிகொண்டு திரியறவங்க அதிகமாகத்தான் படுறாங்க, நல்லது ,சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா திரியறதோட சரி, உள்ள நொழயறத காண முடியலே என நெனக்கும் போது தான் வருத்தமா இருக்கு. பலபேருட்ட கேட்டு பாத்துட்டேன்,ஏம்பா சொல்லித்தாங்க, இதுக்காவது விளக்கம் சொல்லுங்கேண்ணேன், யாரும் சொன்னபாடில்லை. பிறகு எதுகுய்யா சன்மார்க்கிண்ணு சொல்லிக்கணும்னு கேக்க தோணுது.அதாங்க சன்மார்க்க கொடி கட்டிக்காதவன்லாம் சன்மார்க்கிண்ணா கோவம் வரத்தானே செய்யும், இது தப்பா? சொல்லுங்கப்பா.....

வள்லலாரும் கொடிகட்டிக்கணும்னு சொல்லுப்புட்டு போயிட்டார், அப்ப நாமும் கொடிகட்டிக்க வேணுமில்லையா? அது தானே சரி? அதுக்கு கொடிண்ணா என்னண்ணு தெரிஞ்சுக்க வேணுமில்லையா, அப்படீண்ணு கேட்டா “ஆமா”ண்ணு பதில் மட்டும் தான் எல்லாரும் சொல்றாங்க.ஆனா யாரும் அது எங்க இருக்குணு கேட்டா முழிக்கிறாங்க....ஒருசில பேர் ’எனக்கு தெரியும் நான் சொல்லமாட்டேன் அது குரு ரகசியம்’ங்கிறாங்க...அது உண்மையாண்ணா சுத்த பொய். தெரியாதனாலே சும்மா கதை விடுறாங்கண்ணு புரியுது.பெரிய “குரு”மார்கிட்ட வரை கேட்டுபாத்துட்டேன், ம்ஹூம்.....தெளிஞ்ச பாடில்லை, அப்படீண்ணா விட்டுட முடியுமா என்ன? எப்படி விடுறது?...அதான் நீங்க யாராச்சும் சொல்லுங்கோண்ணேன்.சொல்லுறீங்களா....அல்லது எடுக்கவேண்டியதை எடுக்கவா என்ன?...சும்மா தமாஷுக்கு சொன்னேன்.

சரி விஷயத்துக்கு வருவோம், நாபியிலேர்ந்து கொடி புருவ மத்திக்கு போகுதாம்லே...அதுக்குள்ள ரெண்டு நாடி இருக்குதாம்லே...அதுக்கும் சன்மார்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? அது எப்படியா சன்மார்க்கத்துக்கு ஒத்து வரும்ணு கேக்கலாம்லே...அதான் நான் கேக்கிறேன்...தப்பா என்ன?..ஹூம் ,அதெல்லாம் ஒண்ணுமில்லே, சன்மார்க்கம்ணா ஜீவகாருண்யம் மட்டுந்தேன்ணு சொல்றது காதிலே விழுது...கேட்டுகிட்டே தான் இருக்கேன், அப்படீண்ணா கொடி எதுக்கு?..சன்மார்க்கம் என்ன யோக மார்க்கமா என்ன, நாடியிலே ஏறவும் இறங்கவும்? அப்படி கேக்க தோணுதா என்ன?..ஆமா ,கேட்டுத்தான் ஆகணும். அப்படீண்ணா ஜீவகாருண்யம் சத்விசாரம் இவை ரெண்டும் விட்டு என்னய்யா சன்மார்க்க கொடி சொல்லும் சேதி?...சொல்லுங்கோண்ணேன்.....காத கழுவிக்கிட்டு இருக்கேன்......சொல்லுங்கோண்ணேன்......

கொஞ்சம் இருத்தி பாத்தீங்கண்ணா சன்மார்க கொடி என்பது யோக சம்பிரதாயத்தை சார்ந்து இருக்கிறதை காணலாம். கொடி ஏற்றிகொண்ட வள்ளலார் இக்கொடி இப்போது ஏற்றி கொண்டமையால் எல்லோரும் உண்மையை தெரிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் அல்லவா?..எந்த உண்மை?, சன்மார்க கொடி என்பது யோக மரபு சார்ந்தது என்பதை தானே? உடம்பில் நாபியில் இருந்து புருவமத்தி ஈறாக இலங்கும் நாடியினை தானே வள்ளலார் கொடி என கூறுகிறார்? அது சன்மார்கம் சம்பந்தபடாமல் யோகம் சம்பந்தப்பெட்டே இருக்கிறதல்லவா?,,மட்டுமல்ல அந்த நாடியில் ஊடே “ஏறவும் இறங்கவும்” எனும் ஒரு சமாச்சாரத்தையும் அவர் கூறுகிறார் அல்லவா?..என்னது அது “ஏறுவதும் இறங்குவதும்”?...புருவமத்தியிலே ஏறவும் இறங்கவும் கூடிய யோக நுணுக்கமே வள்ளலார் கூறுவது என தெளிவாக தெரிகிறதல்லவா?..அப்படியெனில் சீவகாருண்யம் எனும் சன்மார்கத்தையும் கொடியினால் உணர்த்தப்பெறும் ஞான யோகத்தையும் இணைத்து அப்பியசித்தலே வள்ளலார் நோக்கம் என தெளிவாக புரிகிறதல்லவா?..அப்படியான யோக சம்பிரதாயத்திற்க்கு உறுதுணையாகவே கரிசலாங்கண்னி தூதுளை பொற்றலை முதலியவை வைக்கப்பட்டுள்ளன என விளங்குகிறதல்லவா?..மேலும் ஞான யோக நுணுக்கங்களை தெளிந்தோர்க்கு “ வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல்” என திருமூலர் கூறுவது பகல் போல் வெளிச்சமானதுவே....கோபுர வாசலான வாயும் அதன் உள்ளே வள்ளலார் கூறும் கொடிமரமும் கொடியும் அறிந்தவர் ஞான யோகம் புரியும் மகத்துக்களே,....அவர்கள் சீவகாருண்யம் எனும் செங்கோலும் ஏந்துவராகில் அருள் இப்புவியில் பெருக்கிட்டோடும் என்பதில் ஐயமில்லை.

சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி??

 ==சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி??==


இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

இங்கு வள்ளலார் அண்ட விசாரத்தையும் பிண்ட விசாரத்தையும் சொல்லுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இப்படி அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் மட்டும் செய்து கொண்டிருப்பில் ஆன்மாவை தெரியவொட்டாமல் மறைத்திருக்கின்ற அனந்த திரைகள் விலகுமா என கேட்டுப்பாருன்கள்.....பதிலாக தோன்றுவது முடியாது என்பதே. ஆதலினாலே வள்ளல் பெருமானார் வேலாயுத முதலியாரிடம் சத் விசாரத்தினை கேட்டு தெளிவு பெற சொல்லுகிறார்.

இவற்றில் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் பர விசாரமாகுமா என்பது ஆரய்வது அவசியம். இவை சத் விசாரத்தின் கீழ்நிலை விசாரமேயாம்., அல்லது உலக விசாரமேயாம். அப்படியெனில் நாம் விசாரிக்கவேண்டிய பரநிலை விசாரிப்பு எவ்வண்ணமானது என்பதை வள்ளலாரும் குறிக்கவில்லை, வேலாயுத முதலியாரும் விளக்கவில்லை அல்லவா?....ஆதலினால் அந்த ரகசியமான சத்விசாரத்தை நாம் எவ்வண்ணமேனும் அறிந்து கொள்ளுதல் நலமன்றோ?.

சன்மார்க்கிகளின் லட்சிய ஸ்தானம் என்பது “பெரு வெளி’ என்பது திண்ணம். நாம் அடையவேண்டியதும் அறிந்து கொள்ளவேண்டியதும் பெருவெளியேயாகும். அதையே வள்ளலாரும் “இவ்வண்ணம் அண்ட விசாரமும் பிண்டவிசாரமும் செய்து கொண்டிருக்க அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்” என்கிறார்...அதாவது நாம் அறிந்து கொள்ளவேண்டிய “உண்மை” என்பது பெருவெளி என்பது தான்.

பெருவெளி என்பது என்ன என சத் விசாரம் பண்ணுவதே பரவிசாரத்தின் உண்மை நோக்கம். ஆதலினால் அந்த “தகர மெய்ஞான தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும் ஜோதி” என்ன என்பதை சத் விசாரம் பண்ணக்கடவோம்.... அதுவல்லவா உண்மை பர விசாரிப்பான சத் விசாரம்?...அதுவல்லவா நமக்கு பர இன்பத்தை வழங்கும் தன்மையது?...அதனால் அல்லவா ஆன்மாவுக்கு உஷ்ணம் பெருகும்?....ஆனால்........எப்படி உஷ்ணம் பெருகும்?
தகர நிலை என்ன என்பதும் அதனுள் விளங்கும் அகர நிலை என்ன என்பதும் இப்போதைக்கு சத் விசாரம் பண்ணுவோம்...காலம் கனியட்டும் , விளங்க வேண்டியது உண்மையாக விளங்கும் வள்ளல் குரு பிரானின் ஆசியுடன்.

அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார்?

 =====அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார்?======


வடலூர் வள்ளல்பிரானால் வெளிப்பெடுத்த பெற்ற ஜோதி ஆண்டவரை யார் என்று நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது தானே அன்பானவர்களே?. தற்போது எங்கு பார்க்கினும் சன்மார்க்கிகள் என்பவர்கள் ஜோதி வழிபாடினை கொண்டிருப்பதை நம் காணலாம். வடலூரிலும் இதே முறைப்படி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு ஆராதனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் வள்ளலார் வழிமுறை தானா இது என வினவுங்கால் சந்தேகமே மிஞ்சுகின்றது. ஏனெனில் அருட்பெரும் ஜோதியார் என்பவர் இவ்வண்ணம் விளங்குபவர் அல்லர் என்பதே வள்ளலார் கூறும் உண்மை மொழி.

இதோ அவர் கூற்று, படித்து தெளிவு பெறுங்கள்.

நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

இங்கு மஹாமந்திரத்திற்க்கு பொருள் சொல்லும் போது அதை “வாச்சியார்த்தம்” என வள்ளலார் சொல்லுகின்றார், அதாவது மஹா மந்திரத்தின் உண்மை பொருள் விளக்கமே அது. இதையே சித்தர்களும் முன் உள்ள ஞானிகளும் மறைத்து விட்டதாக வள்ளலார் சொல்லுகிறார்.அந்த உண்மை தான் என்ன என அறியும் போதே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார் என நமக்கு விளங்க ஆரம்பிக்கும். அதனை பார்ப்போம்.

மஹாமந்திரமான,’அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி’ எனும் வாக்கியத்தின் பொருளாக வள்ளலார் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்“ என்பதாகும். சற்று கவனித்து பார்க்கில் இது புலப்பெடும்.

இங்கு மஹாமந்திரத்தின் பொருள் என்பதில் எங்குமே’ ஜோதி ’என சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும். அருட்பெரும் ஜோதி என்பதனை வள்ளலார் ”பேரறிவு” என்றே விளக்கம் தருகிறார். அப்படித்தானே?.அப்படி பார்க்கும் போது இப்படி ’ஒப்பற்ற பெரும் தயவை உடைய பேரறிவே ’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்பது புலப்படுகிறதல்லவா? இதை தான் சித்தர்களும் ஞானிகளும் மண்ணை போட்டு உண்மை தெரியவொட்டாமல் மறைத்து விட்டதாக வள்ளல் பெருமான் சாடுகிறார். ஆதலினால் அன்பார்ந்த சன்மார்க்க அன்பர்களே நீங்களும் “உண்மை” கடவுளான “பேரறிவினை” வணங்கி வழிபடுங்கள்.அதை விடுத்து ஒரு விளக்கினை வழிபடுவது சன்மார்க்கமல்ல என்பது வள்ளல் கழலிணை தொட்டு விளம்புகிறேன்.நன்றி வணக்கம்.

குருடர்கள் ஞானம் பெற முடியுமா?

குருடர்கள் ஞானம் பெற முடியுமா?


நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.
இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.
ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம்.

கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும் . காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம்.

முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்...ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது...சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்...அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது...அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்...அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா?..அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்...ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை...உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை...அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது...தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்...அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,..இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்....தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்....

கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா...செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்...அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்...அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும்

மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும்.ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா?.அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?

அன்பான சன்மார்க்க பெருமக்களே....

 அன்பான சன்மார்க்க பெருமக்களே....


எல்லோரும் அறிந்திருக்கிற விஷயங்களில் ஒன்று சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் சாதனை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதே, அப்படியல்லவா?..ஆனால் சன்மார்க்கத்தில் சன்மர்க்கிகள் செய்வதற்க்கு “சாதனை உண்டு”...அதை சன்மார்க்கிகள் செய்யத்தான் வள்ளலார் பணிந்துள்ளார்.

பேருபதேசம் பகுதி வள்ளலாரால் கடைசியாக வழங்கப்பட்ட பெரருள்...அதை சற்று பார்ப்போம்.

“”””இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

”அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி”

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.””””

மேற்சொன்னது பேருபதேச பகுதி என்பதை கவனிக்கவும்.... இங்கு தான் சாதனை விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.அதாவது ”அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதர்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்...நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்...ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லது புரிதல் வராது.

அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது””””” “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்””””””. இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம். கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது,“ வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை.வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “ அறிவு’ என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள்.இதை சற்ரு ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.

அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”...இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது...அதனையே ‘இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.

மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.””””என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “ பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி

 முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி

=======================================
1)"சாகாத்தலை":
=============யென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி.
2) "வேகாக்கால்":
===============வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு.
3)"போகாப்புனல்"
================போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம்.
இதன் பொருள் விளக்கம் வருமாறு========அடி,நடு, முடியென மூன்றுபாகம்...அதில் முதல் பாகம் ருத்திர பாகம்,அடுத்து மகேசுவர பாகம், அதையடுத்து சதாசிவ பாகம்=====ருத்திர தத்துவம் அதன் மேல் மகேசுவர தத்துவம் அதன் மேல் சதாசிவ தத்துவம் என மூன்று தத்துவம்=====ருத்திர தத்துவம் என்பது வித்தியா கலை, மகேசுவர தத்துவம் என்பது சாந்திகலை, சதாசிவ தத்துவம் என்பது பிரதிஷ்ட்டா கலை எனப்படும்======வித்தியா கலை என்பதுவே வஸ்து (பொருள்-மெய்பொருள்) எனப்படும்...சாந்திகலை என்பதுவே ஆன்மா எனப்படும், பிரதிஷ்ட்டா கலை என்பதுவே ஜீவன் எனப்படும்=====மெய்பொருளினால் வெளிப்படுவது அருளானந்தம், அதுபோல ஆன்மாவினால் வெளிப்படுவது அன்பு, மற்றும் ஜீவனால் வெளிப்படுவது இரக்கம்=====சாகத்தலை என்பது காரண அக்கினியில் அடங்கியுள்ளது...அதுபோல வேகாக்கால் என்பது காரணவாயுவில் அடங்கியுள்ளது...மற்றும் போகாபுனல் என்பது காரணதேகத்தில் அடங்கியுள்ளது======ஆகையினால் காரண அக்கினி, காரணவாயு, காரன தேகம் இவை மூன்றையும் தக்க குருவின் கிருபையால் அறிந்து அடைந்து கொள்ளுதலே சன்மார்க்கத்தின் முதல் படியாகிய சகா கலை எனப்படும் சாகா கல்வி

சிந்திக்க

 சாலை சிங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்,பாருங்கள் யோவான் 6:53- நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் ,அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்=====6:54 -என் மாசத்தை புசித்து ,என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்====6:55-என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது===இங்கு அதி ரகசியமானதும் மூட புத்திகளுக்கு விளங்காததுமான ஒரு “மெய்யுணவும் மெய் பானமும்” சொல்லபட்டிருக்கின்றன.நாங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் எங்களுக்குத்தான் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன என கர்வத்துடன் இருக்கும் யாராவது இந்த மெய்யுணவும் மெய்பானவும் எனக்கு தெரியும் என சுயம் சொல்லத்தயாரா?..நாங்கள் மாம்சத்தை தின்று இரத்தத்தை பானம் செய்கிறவர்களாக இருக்கிறோம் என சொல்ல துணிபு உண்டா? இது என்னவெனவாவது தெரியுமா? தேவைபட்டால் பல் போன சிங்கங்களிடம் கேட்டு சொல்லுங்கள்.....உங்கள் புலம்பல் என் காதிற்க்கு விழுகிறது,..செவியுணவு நாங்கள் கேட்டிருக்கிறோம், அதை தானே எங்கள் குருபிரான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்? அது எப்படி மாம்ச உணவாகும்?...அதுக்கு மேலே மெய்யான பானம் என இரத்தமும் சொல்லபட்டிருக்கிறதே?..இதுவென்ன?..பாரவான்களின் வார்த்தைகள் பொய்த்து போகாதே...நீங்கள் நினைப்பது சரிதான்..இந்த மெய்யுணவையும் இந்த மெய்பானத்தையும் இனியும் நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்...அது வழங்கவேண்டியவர்கள் வந்து வழங்கும் காலம் சமீபித்திருக்கிறது என மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.

சாகாத கல்வி

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.
2.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இதில் எங்கே சாகாத கல்வி தெரிவிக்கபட்டுள்ளது என ஆராயலாமே

175 வருஷமாக ஜீவகாருண்யம் பண்ணி பண்ணி செத்துபோனவர்கள் தான் அதிகம்,,ஆனா சாகாத கலையான சன்மார்க்கம் விளங்க காணோம்...எல்லோரும் நல்லாவே கதை கட்டி நம்மள ஏமாத்திவிட்டு போயிட்டங்க...நாம தான் புத்திகெட்டு செத்து போயிகிட்டிருக்கோம்...விளங்கினா சரி...இல்லேண்ணா 175 வருஷமாக போனவங்க வழியிலேயே போயிகிட்டு இருக்க வேண்டியது தான் அல்லவா?.

“பேருபதேசம்” என்கிற இந்த ஒரே ஒரு பகுதி மட்டும் இல்லாமல் உரைநடையை பாருங்கள்...அது சன்மார்க்கத்தை நன்றாக போதிப்பதாகவே இருக்கிறது....அதில் சொல்லபட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் திருவருட்பா பாடல்களுக்கு இசைந்ததாகவே காணப்படும்...ஆனால் பேருபதேச பகுதியின் ”””சாதனைகள் ஒன்றும் செய்யவேண்டாம்”” எனும் ஒரேஒரு சங்கதியே சன்மார்க்கத்தை அழிக்கும் செயல் ஆகும்....அது ”சாகாத கல்வியை” போதிப்பது அன்று. தேவர் குறளில் முதல் அதிகாரத்திலேயே சாகாத கல்வியை தெரிவிக்கப்பட்டுள்ளது என சொல்லும் வள்ளலார், அந்த சாகாத கல்வியை அல்லவா நாம் செயலில் கொண்டுவர உத்தேசித்திருந்திருப்பார்?..தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் ””சாதனைகள் ஒன்றும் செய்யவேண்டாம், அதுவே சாகாத கல்வி”” என்றா சொல்லபட்டிருக்கிறது?..சற்று சிந்தித்து பாருங்கள்.

தூக்கமும் குண்டலினியும்

 =====தூக்கமும் குண்டலினியும்=====


”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள்.

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம்.

ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம்.

தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்