Tuesday, November 8, 2022

தூக்கமும் குண்டலினியும்

 =====தூக்கமும் குண்டலினியும்=====


”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள்.

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம்.

ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம்.

தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்

மெய்யறிவு-

 ----------------------மெய்யறிவு--------------

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதே குரு மரபு.நாம் முதலி ல் அறிவது உயிரெழுத்தையே,பின்னர் மெய் எழுத்தும் நம் புலன்களை அடைகின்றன.இறைவன் எழுத்தை ஏன் அறிவித்தான் எனில் அது மெய்யறிவு பெற்றற்கண்ணே.சிறாபோது எழுத்தறியுமுன்னே நாம் உயிர் ஈது மெய் ஈதுவென அறிந்திலோம்,அவ்விருட்கண்ணே அருட்திருவுருவாம் ஆசான் அமைந்து,நம் சூண்டாணி விரல் பிடித்து அரியென வரைதல் அருமை.உயிர் எழுத்தின்பால் அவ்வாசான் சூண்ட அவ்வகாரமான உயிரை இரீங்காரமான அருட்சக்தியின்கண்ணே பதிப்பித்தல் இனிதே அமைவுறுகிறது.உயிரின்றி மெய்யில்லை அம்மெய்யும் உயிரின்றி வெளிப்படுமாறில்லையெனவறிந்தே இறையறிவு மெய்யை உயிரின்கண் உடம்பில் அமைத்தான் அமைவுற.மெய்யென வகுப்ப அது விந்து நிலையதாம்,ஆதலின் அகத்திய பெருந்தகை விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார்.அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம்.நாத நாதாந்த நிலையே இறையறிவு,அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும்.மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம்,அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும்.உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே.அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும்,அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம்,ஆதலின் அதன்கண் விந்து பதிற்று.(விந்து-புள்ளி)

எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்

 === எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம் ===


ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்

   --- பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை"

குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும்.

வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல

ஒரு முனையில் “நான்” என இருக்கும்.. மறு முனையில் மனம் என இருக்கும்..  இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர்.

அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே  --- திருமூலர்.

மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும்

ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா?

இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும்

உயிர் வேற மனம் வேற சார்...  தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....

தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என.

உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம் )

--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️

அருள்-இருள்-மருள்

 ===அருள்-இருள்-மருள்=====


னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே-அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே-அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான்,உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர்,


மனிதன் நித்தியத்திற்க்காகவே படைக்கபெற்றவன், இவன் எக்கோடிகாலத்துக்கும் சாக போகிறதே இல்லை என்று தெரியாது.-இப்போதிருக்கிற இந்த அனித்திய தேகத்தில் கஷ்ட்டம் ஏறினால் உயிர் வேறு உடல் வேறாக பிரிந்து கொள்ளும். அதற்க்குப்பின் நித்திய உடல் ஒன்று இவனுக்கு தரபடப்போகிறதே அந்த அடுத்த உடல் எக்கோடி காலத்திற்க்கும் எந்த அவஸ்த்தைக்கும் அழிகிறதே இல்லை.


(னரகதேகம்-சுவர்க்கதேகம்).....அந்த நரகதேகம் எந்த அவஸ்த்தைக்கும் எந்த அடிஉதைக்கும் எப்படிப்பட்ட இம்சைக்கும் அழியவே அழியாது.


சுவர்க்க தேகமோ எப்பொழுதும் 18 அல்லது 20 வயதளவில் நின்று மாறாத தங்கதிருமேனியாக விளங்கும்.


இப்படியாக சுவர்க்கதேகமும் அழியாது-னரக தேகமும் அழியாது..மனிதனை இவ்வாறு நித்தியத்திற்காகவே இறைவன் படைத்தான். இவன் எப்போது்ம் அழிகிறதே இல்லை-இவன் இருந்தால் ஒன்ரு சுவர்க்கத்தில் இருக்கணும்-இல்லாவிட்டால் நரகத்தில் இருக்கவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இவன் அடைந்தே தீரணும்-ஆகவே மனிதன் எக்கோடி காலத்திற்க்கும் அழிகிறதே இல்லை-அழியவே முடியாது. இது திட்டமான வார்த்தை.


=சாலை ஆண்குரு

உபதேசம் பெற்ற அனைவரும் ஞானத்தை அடையவில்லை ஆகிலும் சாவிலிருந்து மீளுதல் இல்லை ஆகில் அது குருவின் குறைபாடு அல்லது உபதேசத்தின் குறைபாடு எனலாம்

 எனில் ஞானம் என்பது வாழ்வின் லட்சியமா அல்லது சாகாநிலை லட்சியமா என கேட்க்கதூண்டும்

 சாகாதிருப்பவனே சன்மார்க்கி என வள்ளல்பிரான் சொல்லுவதை காணும் போது ,ஞானம் என்பது எதற்க்கு வைக்கப்பட்டது என ஆராய தூண்டும் அல்லவாஎனில் ஞானம் முடிவா அல்லது சாகாநிலை முடிவா

ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன.தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம்,அறிவை அறிதல் ஞானம்ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன.தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம்,அறிவை அறிதல் ஞானம்

கிழக்கின் மதங்கள் எல்லாம் கர்மம்-மறுபிறப்பு எனவும், மேற்க்கின் மதங்கள் எல்லாம் ஒரு பிறவி-நியாயதீர்ப்பு எனவும் முரண்பட்டு நிற்கின்றன.அதில் சாலை ரகம் இரண்ட்டும் கெட்டு இருப்பது போல தோன்றுகிறது

நாம் இதற்க்கு பின் மனிதனாக பிறப்பது இல்லை,இதற்க்கு முன்னும் மனிதனாக பிறந்தது இல்லை என சாலை மக்கள் நம்புகின்றனர். ஆனால் கர்மா கோட்பாடோ பலபல கர்ம தொகுதிகளின் பலாபலன்களின் விரிவு சுழற்சி மறுதோற்றம் என அனைத்து விதமாகவும் பிறவிகள் அமையும் என வகுத்து சொல்கிறது. இதில் எதை கொள்ள? எதை தள்ள

எழுவகைப் பிறப்பு

 எழுவகைப் பிறப்பு



இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். 


ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. 


இத்தேகத்திற்கும் ஏழு பிறவி யுண்டு. யாதெனில்:- கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று, அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று, பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று, குழந்தைப் பருவம் ஒன்று, பாலப்பருவம் ஒன்று, குமாரப்பருவம் ஒன்று, விருத்தப்பருவம் ஒன்று ஆகப் பிறவி 7. 


இவ்வாறே தாவர முதலியவற்றிற்கு முள. மேலும், ஸ்தூலப் பிறப்பு 7, சூட்சுமப் பிறப்பு 7, காரணப்பிறப்பு 7. ஆதலால், மேற்குறித்த ஸ்தூலப்பிறப்பு, சூட்சுமப் பிறப்பு யாதெனில்: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி - ஆக பிறப்பு 7. காரணப்பிறப்பு - மனோ சங்கற்பங்களெல்லாம் பிறவி. ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு. அது அற்றால் பிறவியில்லை =Vallalar



[{கவனிக்க வேண்டிய மற்றொரு சங்கதி என்னண்ணா “”முடிவில்”” என்றொரு வார்த்தை கூட சொல்றார் பாருங்க, அதான்.முடிவில் இத்தேகம் கிடச்சிருக்காம்.அதாவது இந்த மனித தேகம் முடிவான தேகமாம் மக்களே..ஜாக்கிரதை.}]

ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது

னித்தியம் -அனித்தியம் அறிவோம்

 ===னித்தியம் -அனித்தியம் அறிவோம்=====


அறிவானது அறிவற்ற தன்மையில் இருந்து மீண்டு அனேக கோடி கால கர்ம மல பரிபாக நிமித்தம் அனேக கோடி கால அனேக கோடி யோனி பேதங்களாக பிறந்து பிறந்து பரிபாகமுற்று ஒருபோது பரிபாகம் மீண்டும் அற்று கீழ்நிலை மேனிலை என சுழன்று உழன்று முடிவில் மனித உருவறிவு பூண்டு வந்து பிறந்திட்டோம் எனில் இதுவும் அனித்தியமே.


முடிவாக தான் மனித தூலம் தரப்பெற்றது எனில் இதன் மாமகத்துவம் சற்று புரியவும்.இப்பிறப்பு நழுவி விடில் அடுத்து மீண்டும் ஒரு மனித தூலம் அமைந்திடும் என இறமாந்திருத்தல் அனியாயம்.ஏனெனில் இனி நீ பிறக்கபோவதில்லை எவ்வுயிராகவும் இவ்வுலகில். நீ பிறவிகளின் பரிணாமத்தில் முற்றுப்பெற்று விட்டாய்.உனக்கு அனேக கோடி தவப்பலனாய் மனிததூலம் வழங்கப்பட்டுவிட்டது.


இவ்வுலகம் போராட்டக்களம்,பரிசும் உன்னிடமே இருக்கிறது,அதை உனக்கு வழங்குபவனும் நீயே தான்.அப்படியான ஜீவபரிசை வாழ்நாள் முழுதும் கொண்டு திரிந்தும் அதன் பலனை அறிவு இழந்து நழுவவிட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை கூட வாய்ப்பு உண்டு,அப்படி பலகோடி மனிததூலம் கொண்டு பரிசினை வெல்லலாம் என கூமுட்டைகளாக இருந்துவிட்டு போக கிடைப்பதே நித்தியம்.பரிசினை வென்று பிறவியின் பயனை நுகர்ந்து பரிபூரணமுற்று போக கிடைப்பதுவும் நித்தியமே தான்.


அனித்தியம் எனும் பிறவி தோன்றி மறைந்து கொண்டே பல பல யோனி பேதங்களாக சதா நிகழ்ந்து கொண்டிருக்கும். நினித்தியம் எனும் வாழ்க்கையோ முடிவற்றதுவாய் சர்வ காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுவாம்.


நன்மை புரிந்தவன் நித்தியமான சொர்க்க பலனையும், தீமை புரிந்தவன் நித்தியமான நரக பலனையும் அடைவான்,அவனே தேடி கொண்ட பரிசு அது.


சொர்க்கமும் நரகமும் ஒரு போதும் ஒருவனும் அவன் கடந்து வந்த எந்த கோடிகால பிறப்புகளிலும் அனுபவித்தது இல்லை.மண்ணாக மரமாக புல்லாக புழுவாக பிறந்திளைத்த எந்த பிறவிக்கும் சொர்க்கம் நரகம் என கிடையாது. சொர்க்கமும் நரகமும் மனிதனாக பிறந்தவர்களுக்கு மட்டும் நித்தியமாக வகுக்கப்பட்டுள்ளது.அனித்தியத்தில் இருந்து நித்தியத்துக்கு புகப்பெறுபவன் மனிதன் மட்டுமே. ஏனைய யோனிபேத பிறப்புகளுக்கு இல்லை.


நித்தியத்தில் எத்தகைய நித்தியம் வேண்டும் என்பதை போராடி பெறுவாய்....னித்தியமான சொர்க்கமோ...அல்லது நித்தியமான நரகமோ.




தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்

வள்ளலார்

 ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்ளப்படுகிறது. -


வள்ளலார்

சாவு பொய்யாச்சே என்பது மெய்

 ===சாவு பொய்யாச்சே என்பது மெய்====


மனுஷன் நரனாக பிறந்து அறிவு மாணிக்கத்தை பெற்று தேவராகணும் எங்கிற யோசனை அருமை தான் ஐய்யனே, ஆயினும் சற்று சந்தேக நிவர்த்தி வேணுங்கிறேன், தெளிவுக்குத்தான்...


சாதி மனுக்குலம் எல்லாம் ஜீவன் என்னவென கண்டறிந்து, அந்த அறிவின் தெளிவினால் ஜென்ம சாபல்ய பலன் அடையட்டும் என்பதும் அருமை தானுங்கோ...


ஆனால் அழியகூடிய தூலத்தை விடுத்து அழியா சுவர்ண தேகம் பெற்று எக்காலத்துக்கும் மரணமில்லா பெருவாழ்வு வாழ எத்தனிப்பதும் அருமை தானுங்கோ...


தன்னில் தனியனாகிய வஜ்ஜிர மாணிக்கத்தை கைபோட்டு அதில் சென்று உட்புகுந்து, அந்த ஜீவமாளிகையில் பரகாய பிரவேசம் பண்ணுவதும் அருமை தானுங்கோ...


ஆனால் நிச்சயமாக அறியவேண்டிய மற்றொரு கேள்விக்கு பதில் கூட தெரியவேணுமுங்கோ...


”உன் ஜீவனை நீ உன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திரும்பி பாராவிட்டால், அது உன்னை தூக்கி போட்டு விட்டு அலகை எனும் பிசாசிடம் உன்னை ஒப்படைத்து விடும் என்கின்றார்களே அது எப்படி?.. உன்னுடைய ஜீவனை அலகை பிடித்து கொண்டு எக்கோடி காலத்துக்கும் நரக வாதனைக்கே ஆளாக்குவான் என்கிறார்களே, அது எப்படி?.. உண்மையில் உன் ஜீவனை அலகை பிடித்துகொள்ளுவான் என்பது நிச்சயமான உண்மை தானா என சற்று சிந்தித்து பதில் சொல் செல்வமே!!.


....”நீ” உன் ஜீவனை பாராமல் அசட்டை செய்தால் உன் ஜீவனை அலகை கொண்டு போய்விடுவான் என்கிறார்களே, அப்போது அதே ஜீவனில் ”நீ” போய் குடியிருந்தால் மட்டும் அலகை உன் ஜீவனை கொண்டு போகாமல் உன்னை நித்திய ஜீவமாளிகையில் வைத்திருப்பான் என்கிறது என்ன அறிவு?


”நீ” ஜீவனோடு ஐக்கியமானால் உன்னை அலகை விட்டு விலகிவிடுவானாம், ஆனால் ஜீவனோடு ”நீ” சேராவிட்டால் ஜீவனை அலகை கொண்டு சென்றுவிடுவானாம், அது எப்படி? ஜீவனை விட ‘நீ’ பெரியவனோ?..உண்மையில் அலகை கொண்டு போவது யாரை-உன்னையா அல்லது உன் ஜீவனையா

வாசி யோகம் + சித்த வித்தை குளறுபடிகள்”

 வாசி யோகம் + சித்த வித்தை குளறுபடிகள்”




இன்று ஆன்மீகவாதிகள் முதலில் கற்க விரும்பும் வித்தை என்பது வாசி யோகம் அல்லவா? .ஆனால் அவர்கள் முதலில் தீட்சையாக பெற்றுகொள்வதோ எதுவெனில் சித்த வித்தையையே தான் அல்லவா/.ஏனெனில் வாசி யோகம் என்பது நாடைமுறையில் வழக்கத்தில் இல்லை என்பதே உண்மை.ஏன்,எப்படி என்பதை சற்று கூர்மையாக சிந்திக்கில் விளங்கும்.


'வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை ”


(கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1)’.புசுண்டர்,போகர் தட்சிணமூர்த்தி போன்ற அனேகம் சித்தர்கள் நூலில் இவ்வண்ணம் வாசி என்றும் மவுனம் என்றும் இருவகை சம்பிரதாயங்கள் உண்டு என சொல்ல கேட்கின்றோம் அல்லவா? அவை குறித்து பார்ப்போம்.


இரண்டு வித்தைகளும் பிராணாயாமங்கள் என பொதுவாக வரைமுறைபடுத்தப்பட்டுள்ளன என்பது போக அதன் நிஜசொரூபம் விளங்க சொல்லபடவில்லை அல்லவா?.வாருங்கள் பார்ப்போம்.


பூரகம் ரேசகம் என இரண்டு மூச்சு,உட்கும்பகம் வெளிகும்பகம் என இரண்டு இடைவெளி நிறுத்தம் ,ஆக என நான்கு பிரிவு.இதில் சந்திர சூரிய அக்கினி ந கலை மூன்று, இடை பிங்கலை சுழுனை நாடி இயக்கம் மூன்று.இவை சாத்திரங்களால் விளக்கபெற்றவை. எனின் வித்தைகளின் வித்யாசம் என்பது சூட்சுமம் தான்.


வாசிக்கு ஆதாரம் சிவம், சிவ எனும் மந்திரம் மூச்சோடு வாசிக்கபடுவதனால் வாசி என்றாயிற்று. ‘வாசி வாசி என வாசித்த பொருள் ஒன்று,சிவா சிவா என சிந்தித்த பொருள் ஒன்று’ என்பது சித்தர் பாடல்.வகரம் உள்மூச்சினில்கொண்டு சிகரத்தை ரேசிக்க வாசியாம்.’அம்’ என மூலத்திலும் ‘மம்’ என துவாதசாந்தவெளியிலும் சிந்தித்து கும்பித்தல் நடைமுறை. வகரம் என்பது சிவ ரூபம் சிகரம் சக்தி ரூபம் என கொள்ளபடுகின்றது. வகரம் இடை நாடியின் கண்ணும் சிகரம் பிங்கலை நாடியின் கண்ணும் அகரம் சுழினையின் கண்ணும் நிலைநிறுத்தபடுகின்றது.இவ்வண்ணம் ஏகதேசம் பொருள் ஒருவாறு கொள்க.


மவுனம் எனும் வித்தைக்கு ஆதாரம் நாதம் விந்து என்பவை மட்டுமே.இவ்வித்தையில் இடைபிங்கலை என இருநாடி பிரிவு கவனத்தில் கொள்ளபடுவதில்லை, கும்பகம் என்பதும் செய்யபடுவதில்லை. பூரகம் ரேசகம் எனும் இரு பிரிவு மட்டுமே ஆதாரம்.உட்புகு மூச்சு விந்து எனவும் வெளியாகும் மூச்சு நாதம் எனவும் கவனத்தில் கொள்ளபடுகின்றது.உட்புகும் சுவாசமானது உள்ளே விந்துவினில் சென்று புகுந்து சுழன்று அக்கினி பீடத்தில் உரசி வெளியாக நாதமாகின்றது. ஆக பிரம்மசரியம் பிராணாயாமம் என கொண்டு இயக்க நடைமுறை..


ஆனால் மக்கள் இவற்றின் வேறுபாடு இயக்க சாத்திய சங்கதிகள் அறியாமல் வாசி யோகம் என்றால் சித்த வித்தையே எனவும் போட்டு குழப்பி கொள்கின்றனர்.


வாசிக்கு ஆதார சக்கரங்கள் சுழுனை நாடி சூரிய சந்திர கலை மந்திரங்கள் என உண்டு,மூலமுதல் ஆறு ஆதாரங்கள் முடியாக சஹஸ்ராரம்.ஆனால், மவுன வித்தைக்கு இவை ஒன்றும் இல்லை, கண்டத்தின் மேல் ஸ்தான இயக்கம்.கண்டத்தில் இருந்து பதினாறு ஸ்தானங்கள்.மனோன்மணி முடி.

திருமெய்ஞ்ஞான கொரலமுது

 திருமெய்ஞ்ஞான கொரலமுது



"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு”


விளக்கம்:-:

"எழுத்தெல்லாம் அகர முதலாக ஆதிபகவனால் உலகின் முன் விரிக்கப்பட்டது”

உரை:-:

“ எழுத்தெல்லாம் என கூறப்பட்டதினால், எல்லா எழுத்துக்களும் அகரம் எனும் முதற்பொருளை முன்னாக வைத்து அமைபட்டுள்ளன. அதாவது எல்லா எழுத்துக்களும் அகர மெய்பொருளை முதலாக கொண்டுள்ளன என மறை கருத்து. 

உயிரெழுத்துக்களாயினும் மெய் எழுத்துக்களாயினும் உயிர்மெய் எழுத்துக்களாயினும் அவ்வெல்லா எழுத்துக்களும் முப்பொருட்களாகிய “அகரம்-அவ்வு-ஏகம்” எனுப்பட்டவையின் முதல் பொருளான அகரத்தை தன்னகத்தே முதலாக கொண்டது என உரை விரிவு-எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதும் இதுவே ஆம், என சாகா கல்வியின் முதல் படி முற்றும்