Saturday, November 5, 2022

மெய்யறிவு

 மெய்யறிவு

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதே குரு மரபு. நாம் முதலில் அறிவது உயிரெழுத்தையே, பின்னர் மெய் எழுத்தும் நம் புலன்களை அடைகின்றன. இறைவன் எழுத்தை ஏன் அறிவித்தான் எனில் அது மெய்யறிவு பெற்றற்கண்ணே. சிறாபோது எழுத்தறியுமுன்னே நாம் உயிர் ஈது மெய் ஈதுவென அறிந்திலோம், அவ்விருட்கண்ணே அருட்திருவுருவாம் ஆசான் அமைந்து, நம் சூண்டாணி விரல் பிடித்து அரியென வரைதல் அருமை. உயிர் எழுத்தின்பால் அவ்வாசான் சூண்ட அவ்வகாரமான உயிரை இரீங்காரமான அருட்சக்தியின்கண்ணே பதிப்பித்தல் இனிதே அமைவுறுகிறது. உயிரின்றி மெய்யில்லை அம்மெய்யும் உயிரின்றி வெளிப்படுமாறில்லையெனவறிந்தே இறையறிவு மெய்யை உயிரின்கண் உடம்பில் அமைத்தான் அமைவுற. மெய்யென வகுப்ப அது விந்து நிலையதாம், ஆதலின் அகத்திய பெருந்தகை விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார். அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம். நாத நாதாந்த நிலையே இறையறிவு, அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும். மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம், அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும். உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே. அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும், அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம், ஆதலின் அதன்கண் விந்து பதிற்று. (விந்து-புள்ளி)

பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?

 பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?



தலைப்பை பாத்துகிட்டு சிரிக்காதீக!!!!...பாத்திரம் என்றால் தீட்சை பெற்றுகொள்ள தகுந்தவன் என பொருள் சொல்றாங்க மகான்கள்.


பரமோன்னத குருவை அடைவது என்பது இப்பிறவியின் பயன் மட்டுமல்ல, பலபிறவிகளின் பலன். எண்ணற்ற பிறவிகளின் பலனே குரு வடிவமாக எழுந்தருளுகின்றது. அதை பயன்படுத்திகொள்வதும் அவனவன் செய்த புண்ணிய ஸுஹ்ருதமேயாம் என்பதில் ஐய்யமில்லை.


பிறப்பிலேயே உலக விஷயங்களில் வேட்க்கையற்று இவற்றை கடந்த எதையோ சாதிக்க வேண்டும் எனும் உந்துதலோடு பிறப்பவன், எதனையும் பொருட்படுத்தாது இளம் பிராயத்திலேயே மூகனாக ஏகனாக எதையோ தேடிகொண்டிருக்கும் தன்மை பொருந்தியவனாக ஒன்றிலும் பற்றில்லாதவனாக வேட்கை மிகுந்தவனாக திரிவான், காய்ந்த சருகு போல....குருவின் திருவுரு தரிசித்த மத்திரத்தாலேயே அவனில் ஆனந்தம் அணை உடைந்தாற்போல் குதூகலிக்கும்,ஏன் என்றோ எதற்க்கு என்றோ அவனையும் அறியாமல் எழும் எழுச்சி அது.அவனுக்கு கேள்வி என கேட்க்க ஒன்றுமில்லாமல் இருக்கும்...சந்தேகம் என ஒன்று அவன் மனதில் கூட துளிர் விடாதிருக்கும்..ஏதோ ஜென்மத்து உறவு போல குருவிடம் பழகுவான்.. ஒன்றையும் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும் எனும் சிந்தை கூட அவனிடம் இருக்காது... குருவுக்கு தெரியும், எப்போது எதை எவ்வண்ணம் கொடுக்கவேண்டும் என நிதர்சித்திருப்பான்...அவனுக்கு என தேவை ஒன்று இருக்காது, சேலையும் நூலும் போல குருவிடம் இருப்பான்...பூரண சரணாகதியுடையவனாயிருப்பான். குரு ஒன்றை சூசகமாக சொன்னால் கூட பஞ்சை போல பற்றிகொள்ளும் திறம் கொண்டவனாயிருப்பான். இவன் உத்தம பாத்திரம்

தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்

 தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்



ஆதியே துணை.. குரு வாஅழ்க குருவே துணை.. தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் என்ன என்பதை உணரும் தருணம் வாய்த்த முகூர்தம் கிடைத்தது என்பது மகிழ்ச்சியான நிகழ்வே தான். சுத்தமான பாத்திரம் முன்னால் நீட்டப்படும் போது ஈயாது முகம்திருப்புதல் நன்றல்லவே..ஆதலின் ஈந்து விட்டேன்..ஈன்று விட்டேன்..அந்த ஆறாவது அறிவினை..பெற்றவர் பேறு கொண்டவர் என்பதில் மாற்று கருத்தில்லை....எண்ணிலிகோடி சென்மங்களின் பிறவி பலனென்பதில் ஐயமுமில்லை...நமசிவாயம் வாஅழ்க..நாதன் தாள் வாஅழ்க..இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாஅழ்க. வாஅழ்க குருவடி வாஅழ்க வாஅழ்கவே.

அலீஃப்

 ==அலீஃப்===

செம்மை னல னேர் வழியை ஒரு தேவேசரின் திருவாய் மூலம் வெளியாக்குவதுவே ‘வஹது’.உன் செவி வாயிலாக அத் தேவ ஆசரியர் உனக்கு ஒலி வீட்டமுதை ஊட்டுகின்றார்.சிபத்துக்கள்-வித்தியா தத்துவங்கள்-ஏழும் பிரயோஜன அளவில் ஏழு ஒலி வீடுகளாக இருக்கின்றன.அந்த அருந்தலத்திலிருந்து எடுத்து அளத்தலே அறிவாகார தேவ வர்ஷிப்பாகும். அவர்கள் அது னேரம் தன் சப்தமாகிய உயிரை உனக்கு செலவிடுகிறார்கள்.அப்போது அந்த தேவ அமுதை ஆர்வத்துடன் உண்ணாதுவிட்டால் னீ கெடுவதோடு,அவர்களை ஏமாற்றிய பாவமும் உன் தலையில் வந்து விழும்.உன் ஜீவனில் உள்ள சர்வ மாசுக்களையும் ஒழிப்பதே செவி உணவு.அருளமுதமாகிய தெய்வ மருந்து உண்டால் தான்,உன் ஜீவனில் கப்பியுள்ள அழிகரு வழிவரு பிறவிமாசு ஒழியும்.


-=சித்திரசபை வாழ் வள்ளல் சாலை ஆண்டவர் அவர்கள்

ஆதி அமலாண்மை

 ஆதி அமலாண்மை



மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். ”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்” என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும், அந்த முகத்தில் எத்தனை சாயல்கள்,எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன்,இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது

==யுகவான் சாலை ஆண்டவர்கள்.

அட்சர குரு

அட்சர குரு

தூக்குங் காபுஹே துடரு மேயுமைன்
சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே
பார்க்கு மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப்
பழக்க மலிபுலாமீ மாகுமே
காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு
மெழுத்தைக்காணு முனக்குள்ளே
ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே
யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார்.

===பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்

உணவுத்தேவரும்- பசிக்காலனும்

 உணவுத்தேவரும்- பசிக்காலனும்


வள்ளலார் சீவகாருண்ய விளக்கத்தில் சொல்வதை பாருங்கள்---;சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.


அப்படியெனில் இங்கு சற்று சத் விசாரம் பண்ணுவோம்== உணவை அளிக்கும் ஒருவரை தெய்வத்துக்கு ஒப்பாய் வள்லலார் கூறுகிறார் எனில், உயிரை ரெட்சிக்கும் உணவு எனும் அமிர்தத்தை எந்த தேவனுக்கு ஒப்பிடலாம்?, காலனை ஓட்டும் உணவு என்பதை என்னவென்று சொல்லவேண்டும்?, ஒரு பிடி உணவை கையில் எடுக்கும் போதே ,அல்லது உணவை காணும் போதே,உணவின் மணம் நுகரும்போதே அது கடவுள் அம்சம் என நினைக்க வேண்டாமா? உண்பதும் நுகர்வதும் கடவுள் அம்சத்தயே என நினைய வேண்டாமா? உணவை உண்ணும்போது அது கடவுளேதான் என நினைந்து வணங்கவேண்டாமா? அந்த உணவை உண்ணும்போது கிடைக்கும் திருப்தியின்பம் கடவுள் இன்பமென கருதவேண்டாமா? அந்த உணவை மெல்லும்போது உண்டாகும் ஆனந்தம் கடவுள் ஆனந்தம் என கொள்ளவேண்டாமா? அந்த கடவுள் அருள் நிறைந்த உணவே செரித்து சுத்த உஷ்ணமாகி கடவுள் அருளை வெளிப்படுத்துகின்றது என குதூகலிக்கவேண்டாமா? கடவுள் அருளாய் இந்த உலகத்தில் நிறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை அவன் அருள் என அறிந்து வணக்குவோமாக, அவன் உயிர் என பாவிப்போமாக...அருளானது நம்மில் மென்மேலும் உணவாய் உட்செல்லட்டும், அந்தபடியே இவ்வுலகிலிள்ள ஏனைய உயிரினங்களையும் கடவுள் அருள் விளக்கமாகிய உணவை ஊட்டுவித்து சுத்த உஷ்ணத்தை அவர்களும் பெற்று கொள்ள செய்வோம், ஊண்பசியும் உயிர்பசியும் அகன்று ஆன்ம விளக்கம் மென்மேலும் உண்டாக உணவளிப்பீர்களாக விரைந்தே

லாமலிஃப்

 லாமலிஃப்



அந்த நாளையில் அஹ்மதை துதிக்குமுன் இறையோன் விந்தையாகிய லாமலிபு ஆனதை விரும்பி சிந்தையுற்றெழு மஹ்மூதை படைத்தனன் செல்வம் வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்.


கூசிய வாயு தன்னை குழி நூற்றம்பத்தஞ்சும் பேசிடும் ஞானம் கல்வி பிரித்திடும் வேத சாத்திரம் நேசியாம் நன்னூல் சின்னூல் நிகண்டு அகராதிஞானம் வாசி மேலுறைந்து வாங்கும் இறை அறிவு தானே.


மூலமாங் குழியில் நின்ற முனைசுழி அறிய வேண்டி சாலமாம் யோகம் ஞானம் சார்கலைக் கியானம் பாரில் ஏலவே அலிபில் நின்றும் எழுந்திடும் லாமை நோக்கி ஆலமே படைத்த துய்யோன் அரும்பொருள் எனக்கீந்தானே.

(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானப்பூட்டு

பிராணன் என்பது என்ன?

 பிராணன் என்பது என்ன?



மண்ணாகி மரமாகி பல்லுயிர் அரக்கராய் தேவராகி என பிறவிகள் பல பலவாக ஆன்மா புகுந்து மனிதனாக பிறக்கின்றான் என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.ஒவ்வொரு பிறவியிலும் பிறந்து இளைத்து கர்ம பலன்களின் தொகுப்பால் மனித தூலம் கிடைக்கபெறுகின்றது என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.


ஒவ்வொரு பிறவிகளும் பிறக்கும்போதும் அப்பிறவிகளிலெல்லாம் பிராணன் நசித்து மாயயாகி செத்து போகின்றனவா?.ஒவ்வொரு பிறவிகளிலும் பிராணன் நசித்துத்தான் ஜீவசாலங்கள் எல்லாம் நசித்து போகின்ரன எனில் அடுத்த பிறவியில் அதே ஆன்மாவுக்கு பிராணன் எங்கிருந்து கிடைக்கின்றது?.


தன்னிலிருந்து பிராணன் நசித்து அதோகதியாக போகமல் இருக்கவே சித்தவித்தை எனில் தானான ஆன்மா எதற்க்கு மாயை ஆக நசிக்க துவங்கியது?. அல்லது தானான ஆன்மா தன்னிலே இருந்து சதா நசிக்கும் தன்மை கொண்டது எனில் அப்புறம் தன்னிலே நசிக்காமல் ஊர்த்வகதியாக்கி கொண்ட பின் என்ன பலன்?..அந்த பிரானன் மீண்டும் முன்னம் இருந்தபடி நசித்து அதோகதியாக சலனமுறாது என்பதற்க்கு என்ன விளக்கம்?.


பல பல பிறவிகளை சித்தவேதம் ஒப்பு கொள்கின்றது எனில், முன்னம் பல கோடி சென்மங்களில் செய்த பாவ புண்ணிய சஞ்சித பிரார்த்வ ஆகமிக கர்மங்களின் தொகுப்பு ஜீவசமாதி ஆனவனுக்கு உள்ளிருக்குமா அல்லது அவையும் அற்றுவிடுமா?.


ஜீவசமாதி ஆனவனின் கதி என்ன?.அவனுக்கு மேல் பிறப்பு எதுவும் இல்லையா?அல்லது முன் பிறப்புகள் எல்லாம் இருந்ததில்லையா/..ஜீவசமாதி ஆனவர்களை எழுப்ப யாரோ வருவார்கள் என நம்பபடுகின்றதே, அதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?. அப்படி ஜீவசமாதி ஆனவர்களை எதற்க்கு எழுப்பவேண்டும்?.எழுப்பினவர்களின் கதி தான் என்ன?..ஜீவசமாதி தான் மோட்ச சூத்திரம் சொல்லும் மோட்சமா?


சற்று யாராவது விளக்கினால் நல்லது..புரிதல் அதிகமாகி ஆனந்தம் உண்டாக பிரயோஜனமாக இருக்கும்

ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு

 ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.


ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது “ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.

நம என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு. எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல நமவுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த நமவில் ஒடுக்கம் 

ஓம் என்பது ஆன்மீகம் எனில் நம என்பது பவுதீகம்.பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார்.புரிந்துகொள்ளமுடியாதது மாயை.விசித்திரமானது, எல்லையில்லாதது.பிரணவத்தை போல

ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது..சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி,சர்வ குருத்வாஹர்ஷிணி,சர்வ விக்‌ஷேபிணி என பலமுகம் 

நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை.மாயா பந்திதமாகவே இருப்போம்

சிறு குழந்தைகல் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான் இறைவனும் மண்ணும் நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம்.சிருஷ்ட்டி சம்ஹாரம் போல 

ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால் நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்