Friday, November 4, 2022

முஹப்பத்

 முஹப்பத்


சூஃபித்துவ இறைஞானத்தின் முடிநிலை ஞானமாக இருப்பது முஹப்பத் எனும் தன்மை.ஷரியத் தரீகத் எனும் வரிசையில் ஆறாவது படித்தரத்தில் இருப்பது முஹப்பத்.

தன்னையே தானிருந்து காதல் கொள்வது. சித்தர் மரபில் சொன்னால் ‘தன்னையே அர்ச்சித்து தானிருந்தானே’ என சொல்லப்படுவது தான்.

தன்னையே தானிருந்து காதல் கொள்லுவது என்றால், தன் தூல உடலத்தை பார்த்து காதல் கொள்ளுதல் அல்ல. தன்னுளே தானாக இருக்கும் ஓர் மறைபொருள் உண்டு.அதை கண்டு, ஹக்காகிய அந்த மெய்பொருளை அறிந்து அதன் பால் ஈர்ப்புண்டு, அதன் அழகில் மயங்கி,அதன் நடையில் சொக்கி, அதனையே சாதாகாலம் நினைந்து நினைந்து உருகி உருகி தன்னுளே உட்பாய்தல்.

இதை சொல்லகேட்டவுடன் ஏதோ பிராணாயாமத்தை சொல்கிரேன் என்றோ, அல்லது எதோ நாதயோகத்தை சொல்லுகிறேன் என்றோ தவறாக அனுமானிக்க கூடாதிருங்கள்.

ஜீவ இரத்தம்

 உடம்பில் ஓடிகிட்டு இருக்கிற ஜீவரெத்தம் தான் நாத உப்புண்ணு சொல்லகேட்டிருக்கிறேன், ரெத்தம் தான் உப்பு கரிக்கும்.... இங்க என்னல்லாமோ சொல்லிகிட்டு இருக்காங்க...முப்பு முப்புணு எதை எதையோ பாத்து சுட்டுகரிச்சுகிட்டு இருந்த முப்பு ஆகுமாண்ணு தெரியலே இந்த பரதேசிக்கு.. ஊத்தைசடலத்தை உப்பிட்ட பாண்டத்தை ...சூ..சூ...சூ..சூ...


இரத்தத்தில் சுக்கிலமும் சுக்கிலத்தில் பூரணமும் உண்டு ஐய்யனே...பிரிக்க தெரிந்தவன் பிரிப்பான் கண்ணே கண்மணியே கதிர்வேலவனே, "உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்தில் சிறிதுஜனம் வெவ்வேறென்பர்" -அகத்தியர்.

உயிர் என்பது ஜீவரெத்தம்.. உடலுக்குள் இருப்பது... அதனுள் இருப்பது சுக்கிலம். அதனுள் இருப்பது பூரணம், நாதத்தில் விந்துவும் ... விந்துவில் நாதமும் தோன்றும்.

அண்டம் சுக்கிலத்தால் ஆச்சு பிண்டம் ரெத்தத்தால் ஆச்சு .

இதன் கூட மூணாவது குருவுப்பு குரு சொல்லி தருவார்... அப்போது அண்டபிண்டம் நிறைந்த ஆதியந்தம் வாலைபோற்றி என சொல்லலாம்... அதுவே ஐயுங்கிலியுங்சவ்வும். 

"விந்துநிலை தனையறிந்துவிந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும்" .... இது யோகத்துக்கும் பொருந்தும் கற்பத்துக்கும் பொருந்தும்... ஒண்ணு தெரிஞ்சவன் அடுத்ததையும் தெரிஞ்சிருப்பான்....இங்க விந்து நிலையே தெரியாம அலட்டிகிட்டு இருக்காங்க.. பின்ன எங்க போயி நாதத்தை புடிக்கிறது?

அடிமுடிநடுவென்று மூன்று பாகம் அதிலேதான் நடுவாகும் கற்ப்பநேர்மை துடியாகவே திறந்து சொல்லகூடா சொல்லினால் தலைவெடுக்கும் என்று சித்தர் படியாகவே சாபமது போட்டதனாலே பரிவாக சித்தர்களும் சொல்லமாட்டார்.....சொல்லினா தலை வெடிக்கும் என சொன்னதை மக்கள் தலை பொளந்துபோகும்ணு அர்த்தம் கொண்டு பிதற்றிதிரிகின்றனர்

சித்தர்கள் யாராவது இதை சொல்லிதந்தால் நம்ம தலை வெடிக்கும்... தலையான அட்சரம் வெடிக்கும் ...வெடிச்சா அண்டகல் சிதறும் .. பொறுக்கிக்கவேண்டியது தான்😂😂😂

அதுதான் அமாவாசியில வருகிற தீபாவளி திருநாள்..வெடிவெடிச்சு அண்டத்தில் இருந்து கல் சிதறுவது...

ஒருமை உண்டாக

 பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்....இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோகா, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று ஒருமை வளரும்.. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும்.


ஞானம்ண்ணா என்னவாம்?

 ஞானம்ண்ணா என்னவாம்?


சாதாரணமாக நாம் பற்பல யோக சம்பிரதாயங்கலை கேல்விபட்டுள்ளோம்,எதை எதையோ புடிச்சு இழுந்து நிமிர்த்தி என பல அப்யாசங்கள் பண்றதையே யோகம்ண்ணு சொல்றோம்லியா?இதெல்லாம் ஏதோ ஒரு யுக்தி, செயல்முறை,சடங்கு சம்பிரதாயம்ண்ணு தான் இருக்கும்லியா?.ஆனா ஞானம்ண்ணா எதுண்ணு நமுக்கு சரியான அறிவு இல்ல, சரியான புரிதல் இல்ல,அதன் காரணமாக ஞானம்ண்ணா ஏதோ கடைசி காலகட்டத்துல சாகும் தருவாயில் கிடைக்கிற ஒண்ணுண்ணு நெனச்சிட்டிருக்கோம்தானே?ஆனா ஞானம்ங்கிறது முக்திக்கு மூலம். ஒருத்தனுக்கு ஞானம் கிடைச்சிடுதுண்ணாலே அவன் முக்தி அடைஞ்சிட்டான்ண்ணு அர்த்தமில்ல.யோகம் கிடைச்சாலும் கூட அவன் யோகி ஆகி சித்துக்கள் ஆடுற தன்மையை பெற்றவனல்ல.

ஞானம் கிடைக்கிறதுனால என்ன ஆகுதுண்ணு கேட்டா,அவன் தன்னை அறியறான். சிலவேலை ஆயிரம் ஆயிரம் யுகாந்திரங்கள் கூட ஆகலாம் ஒருவன் தன்னை அறிவதற்கு.சிலவேளை நொடியிடையில் கூட ஒருவன் தன்னை அறியலாம்.அது அவன் பாடின பாட்டுக்கு தகுந்தபடி அமையும்.அவன் தேடின தேடலுக்கு தக்கபடி அமையும், அவன் உள்வாங்கிய தன்மைக்கு ஏற்ப அமையும்.

ஆனா ஞானம் கடவுள் ஒருபோதும் இறங்கி நேரடியாக வந்து இந்தா புடி ஞானம்ண்ணு குடுக்கிறதில்ல.இந்த பிரபஞ்சத்துக்கு நாம வந்ததே நம்மை அறியத்தான்,தன்னை அறியத்தான்.”தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே .” என திருமூலர் சொல்றது இதைத்தான்.

இங்க சீடனாக இருக்கிறவன் குருவை அளந்து பாக்க எத்தனிக்க, குருவிடம் இருக்கும் ஞானம் என்பது என்ன எனக்கூட இவனுக்கு தெரியாதிருக்க, ஆகும் விளைவை நினைத்து பாருங்களேன்.குருவானவர் தன்னிடம் இருக்கும் பொருளை வெளிகாட்டிக்கொண்டு திரிவதில்லை, அது வெளிக்காட்டி விளம்பரம் தேட அது ஒன்றும் உலகியல் விஷயமல்ல.அவர் யாருக்கு, எத்தகைய பக்குவம் கொண்டவருக்கு ,எப்படி ,எந்த சமயத்தில் வழங்கவேண்டும் என தெரிந்தவராக இருப்பார் என்பது திண்ணம்.

”என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே”

தன்னை அறிந்த மெய்குருமார்கள் சீடனின் பக்குவம் பார்த்து. அபக்குவிகளான சீடர்களுக்கு தக்க அறிவுகலை கொடுத்து, நடக்கத்தெரியாதவனை நடக்க வைத்து, உண்ணத்தெரியாதவனை உண்ணவைத்து, புரிய முடியாதவைகலை புரிய வைத்து அனேகம் ஊட்டச்சத்துக்களை வேளவேளைக்கு ஊட்டித்தான் வளர்ப்பார்கள். சீடனோ, இவரு சதா எதோ யோகங்களையே தான் சொல்லிகிட்டு இருக்காரே,அல்லாது ஞானமான விஷயங்கள் ஏதும் சொல்லித்தருவதில்லையே என ஆதங்கபடுவது சகஜம் தான்.ஆனால் சீடன் எப்படி குருவிடம் இருக்கும் ஞானத்தை கண்டுபுடிக்கமுடியும்?. தானாக இருக்கும் பொருள் இன்னது என குரு சொல்லாதவரைக்கும் இவன் அண்ணாந்து பார்த்துகிட்டு இலை எத்தனை என எண்ண வேண்டியது தான்.

ஞானம்ண்ணா பெரிய சங்கதி ஒண்ணுமில்லை என பெற்ற பின்னர் தான் தெரியவரும். தன்னிலே தானாக இருக்கும் ஒரு பொருளை அறிதலே ஞானம்.அது அறிவுக்கு வர ஏராளமான காலம் சிலவேளை ஆகலாம், ஏராளமான யோகங்கள் பண்ணி முடித்தபின்னார் கூட வரலாம், யோகங்கள் ஒன்றும் பண்ணாமலும் அந்த பொருள் எது என தெளிதல் வரலாம்.ஆனால் தன்னிலே இருக்கும் பொருளை அறிந்து கொண்ட பின் உடனேயே அவன் முக்தன் ஆகிவிடுவான், எல்லாத்தையும் கடந்து விட்டிருப்பார் என ஒரு அளவுகோலை மக்கள் கையில் வைத்திருப்பதினால், அந்த அளவுகோலினால் தான் உண்மையான ஞானம் பெற்றவனையும் அளந்து விடுகின்றார்கள்.தான் யார் என்பதை ஒரு க்‌ஷண நேர்த்தில் சீடனின் அறிவுக்கு கொண்டு வரக்கூடிய அறிவு நிலை தான் ஞானம்.ஆனால் சீடன் அபக்குவியாக இருப்பதினால் தான் குரு அவனை ஓடாத ஊரெல்லாம் ஓடிக்கிட்டு இருண்ணு ஓட சொல்றது.ஓடி முடிச்சப்புரம் தான் பக்கத்துல இருக்கிற மாங்கணி சீடனுக்கு தெரியும்,அதுக்கு முன்னாடி தெரியவராது.இதான் காரணம்.

இவன் குருவை அளக்க போயி, குருவுக்கு அது புரியப்போயி, அப்புறம் குரு நீ அளந்துகிட்டே இரு என நினைக்க போயி, கடைசியில இவனுக்கு இவன் அளவுகோலே சிலுவையாக மாறும் நிலை வந்துவிடுகின்றது.தன்னை அறிந்தவன் தன்னையே அர்ச்சிக்க இருப்பான்.அப்படி தானாக இருக்கும் பொருளை அறிதலே ஞானம், அதை அறிந்தவன் வேலை என்பது தன்னையே அர்ச்சித்து இருப்பதாகும்.அதாவது பெற்ற ஞானத்தை போற்றி இருப்பதாகும்.

நாத_விந்து_கலாதீ_நமோ_நம

 நாத_விந்து_கலாதீ_நமோ_நம


நாதம், பிந்து, கலை என்று மூன்று பெரிய தத்வங்கள், “நாத விந்து கலாதீ நமோ நம” என்று திருப்புகழ் இருக்கு. இதிலே #நாதம் என்பது #சிவ_ஸ்வரூபம், #விந்து என்பது #சக்தி_ஸ்வரூபமாகும்.

சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் விந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் விந்து. முடிவில் ரூபங்களும் சப்தங்களிலிருந்து உண்டாகிறவைதான்.

நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வித்யாசம் உண்டு. சப்தம் என்பது வெளியிலே வருகிற ஒலிகள் அவற்றிலே பல உண்டு. நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது அதுவே சப்தம் ஒடுங்கிறபோதும் சேர்கிற ஸ்தானம்.

நியாயம்-தீர்ப்பு-கூமுட்டைத்தனம்

 நியாயம்-தீர்ப்பு-கூமுட்டைத்தனம்


கோழி ஆகாயத்துக்கு போனாலும் கூவிகிட்டு தான் இருக்குமாம்.அது போலத்தான் பல கூமுட்டைகளும் ஆகாயத்துக்கு போன கதை.

மீன நாதர் சித்தர்களில் பெரும்பிரசித்தி பெற்றவர்,நேரடியாகவே இறைவனிடம் உபதேசம் பெற்றவர்.அப்படிப்பட்ட மீனநாதர் ஒரு சமயம் ஒரு பெண்ணரசு நாட்டுக்கு போயி அகப்பட்டுகிட்டார்.அங்க ஆண்களே கிடையாது, மொத்தமும் பெண்கள் மட்டும் தான்.நாளடைவில் மீனநாதர் தன் இருப்பை மறந்து விட்டார்,தன்னையும் அவர்களில் ஒருவராக பெண் என ஆழ்ந்து உணர்ந்து ஐக்கியபட்டு போனார்.

போனவர் பொனார்ண்ணு கிடக்காம அவர் சீடர் கோரக்கர் தன் குரு நாதரை தேடி அலைஞ்சாராம். எங்கு தேடியும் குரு நாதரை காணோம்.அப்படி ஒருநாள் கோரக்கரும் இதே எடத்துக்கு வந்து சேர்ந்தார்.சபையில் ஆனந்த நர்த்தனம் ஆடும் தேவ மங்கையர்கள் குழாம்,எங்கும் இன்பமயம், பரவசத்தின் உச்சத்தில் அனைவரும் திளைத்திருந்தனர்.

அந்த சபையில் ஒரு அழகிய ராஜ கன்னிகையின் அழகு கோரக்கரை ஈர்த்தது,அவள் தன்னை மறந்து சங்கீதத்தில் லயித்திருந்தாள்.உற்றுப்பார்த்த கோரக்கர் அதிர்ந்து போனார். ஆளு நம்மாளு தான், சீடர் குருவ்ன் இருப்பை பார்த்து அதிர்ந்து போனார்.அப்புறம் குருவுக்கு அவர் இருப்பின் தன்மையை புரிய வைக்க கோரக்கர் பட்ட பாடு பெரும்பாடாக விவரிக்க கிடக்கின்றது.

ஞனத்தின் உச்சிக்கு போன புத்தரை மாரன் வந்து சோதித்த கதை என ஏராலம் புத்தசரிதத்தில் கானலாம், பெண்ணாகவும் பேயாகவும் பல கூத்தடிக்கும் இந்த மாய மயக்கங்களை ஞானப்பாதையில் சஞ்சரிக்கும் அனைவரும் எதிர் கொண்டு தான் ஆகவேண்டும்.

ஏசுபிரான் நாற்பது நாள் நோன்பு முடித்து எழுந்த போது சாத்தான் அவரை சோதிக்க எதிர்பட்டானாம், எது வேண்டுமானாலும் கேள் கொடுக்கிறேன், ஒரு முறை என்னை பணிந்து எனக்கு சலாம் சொல் என கேட்டதாம்.இப்படி பல செம்மல்களும் இந்த கட்டத்தை கடந்து தான் ஆகவேண்டும் என்பது நிதர்சனம்.

உன்னை தேவர்களுக்கு தேவனாக வைக்கிறேன், உன்னை நியாயத்தீர்ப்பு கர்த்தராக வைக்கிறேன், உன்னை விட பெரியவன் வேறு யாருமில்லை, நீ தான் ஆதி குரு கர்த்தாதி கர்த்தர், சித்தாதி சித்தர்ண்ணு சொல்லி மயக்கிற தருனம் வரும்போது மயங்கினவன் கதி என்னாகும்.இறமாந்து அலைப்புண்டு போவான். அவன் சொல்றது ஒண்ணும் நடக்காது ஊரே பார்த்து ஏளனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்படுவான்.எல்லாம் சித்தர்களும் எல்லா ஞானிகளும் தன்னை அடக்காமல் தன்னிலை மறந்து போனால் வரும் வினை இது.

ஏறுவதற்க்கு எத்தனையோ படிகள் இருக்கும், இவன் கண்ணுக்கு அது ஒன்றும் தெரியாது போகும்.நான் கடைசி நிலைக்கு வந்துவிட்டேன், என்னை கடந்து யாரும் போகவில்லை, நான் தான் முதல் ஆள் இந்த நிலைக்கு வந்தவன் என ஏமாந்து போவான்.நான் தான் நாட்டாமைண்ணு வரும் நினைப்பு இவனை அதள பாதாளத்துக்கு தள்ளிவிடும்.தேவை இல்லதவற்றை உளறிகொட்டிகிட்டு இருப்பான்.தேவையானது எதுவென சொல்ல இவனுக்கு குருவும் வாய்க்காது, ஏனெனில் இவன் குருவுக்கும் அந்த பக்கம் போய் விட்டேன் என நினைத்து இறமாந்து இருக்கிறவன்.

இப்படியான கோழிகள் நிறைய கூட்டில் இருந்து தப்பிச்சு திரிகின்றன, ஜாக்கிரதை மக்கா...கர்த்தர் அங்கே இருக்கிறார், கர்த்தர் இங்கே இருக்கிறார் என யாராவது சொன்னால் நம்பாதேயுங்கள் என ஏசு பிரான் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னே சொல்லிட்டு போயிட்டார்.நாம தான் இன்னமும் கூம்முடைகலாக நியாயத்தீர்ப்பு கர்த்தர்களை நம்பிகிட்டு இருக்கோம்.

சூட்சமம்

 பிராணன் பிறக்கிறதுக்கு முன்னே சத்தம் பிறக்கும் அமைப்பு கொண்டவன் மனிதன்...அது சூட்சுமம்...


தூலத்திலோ பிராணன் வந்த பின்னே தான் சத்தம் வரும்.

மத்யம்

 தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை.  இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் , அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது. இரு முனையும் அற்றது.. இரண்டற்றது.


ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது... உறைவது.. இதையே ஹ்ருதயம் என்பர். ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான்.

   குரு விசுவாசம்=குரு துரோகம்             

 குரு விசுவாசம் - குரு துரோகம்.

=============================

குரு காட்டிய வழியில் சரியாக நடந்து அவர் அடைந்த வெற்றிகளைத் தானும் அடைவது குருவிசுவாசம்.

குரு காட்டிய வழியில் ஒழுங்காய் நடக்காமல் குரு அடைந்த வெற்றிகளைத் தான் அடையாமல் போவதே குரு துரோகம்.

ஆனால் மக்கள் இந்த வார்த்தைகளுக்கு வைத்திருக்கும் அர்த்தம் இவை அல்ல. குருவின் மீது அன்போடும் பக்தியோடும் இருந்தால் குருவிசுவாசம். அத்தகைய பக்தியும் பணிவும் இல்லாவிட்டால் குரு துரோகம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

உண்மையான குரு சீடன் தான் காட்டிய வழியில் நடக்கிறானா என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார். போலி குருமார்கள் தான் சீடனின் வணக்கத்தையும் பாத பூஜையையும் இதர கோமாளித்தனமான சடங்குகளையும் விரும்புவார்கள் 

                    

பீரு முஹம்மது அப்பா

 தானாகி யன்னர் உருவாய்-திசை

ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித்
தானொளி தான்கண்டு கூவ- இறை
தானவ னாசையால் நோக்கியே பார்க்க
ஆன புகழிறை யாசை-அந்த
அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க
தானே சுடராய் வழிந்து-கடற்
தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே
தன்னாசையால் வந்த நாதம்-அவன்
றானே கடலுயி ரோதிய வேதம்
அன்னத்தெவையும் படைத்து-வகை
யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப்
பின்னா லேவந்து பிறக்கப்-பல
கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து
மின்னிய மங்குல முன்ன-இந்த
மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே
வானத்தின் மேகம் பொழிய-இந்த
வையகத் தானிய மெங்கும் நெளிய
ஊனினான் மாதா பிதாவும்-அவன்
உதிரமே நாதமாய் ஓசை முழங்கி
ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த
ஆசையின் அவனொளி வாசந் துலங்கித்
தானத்தில் வந்து அளித்தே-உருத்
தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே
அந்த கருவிந்து நாதம்-அதில்
அன்னை யுதிரமுங் கூடின சூதம்
அந்த கருவைந்து பூதம்-அது
ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம்
விந்துக்குள்ளே தழல் நீதம்-அது
வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம்
அந்த குதிரைமேலேறும்-நந்தம்
ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........

~~~ பீரு முஹம்மது அப்பா

==================================


”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே

 == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

====================================