Monday, October 9, 2023

அமிர்த பாஷிணி

 அமிர்த பாஷிணி

பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலிணீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.  இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.


பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.  பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.  இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால்,  அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.  அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.  அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி.

மண்ணும் நீரும் - சிருஷ்டி

 மண்ணும் நீரும் - சிருஷ்டி 


”ஐந்துகரத்தனை யானை முகத்தனை 

இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை

நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”


வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொள்ளுதல் நலம் அல்லவா?


நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு? 


திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?..


திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெல்லாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?


பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர்.

 மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள். 


கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ஙனம் தகும்?


ஆனா பாருங்க... சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்.... வேறு யாருக்கும் இது கிடையாது.. பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது.


இந்த கணபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... 


ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்... இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்.. அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.


*ஓம்-னம*

======


ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது *“ஓம்-னம”* என அண்டமும் பிண்டமும் ஆச்சு.


"நம" என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு.


 எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல "நம"-வுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த "நம'வில் ஒடுக்கம்


"ஓம்" என்பது ஆன்மீகம் எனில், "நம" என்பது பவுதீகம். பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார். புரிந்துகொள்ளமுடியாதது மாயை. விசித்திரமானது, எல்லையில்லாதது. பிரணவத்தை போல.


ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது.. சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி, சர்வ குருத்வாஹர்ஷிணி, சர்வ விக்‌ஷேபிணி என பலமுகம்.


ஆதியாகமத்தில் தேவனின் சிருஷ்டி விபரம் இதைக் குறித்துச் சொல்லியுள்ளது *ந - மண். ம- நீர்* என்றும் எங்கோ படித்த ஞாபகம். 


நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை. மாயா பந்திதமாகவே இருப்போம். சைவத்தில் இதை மாயை திரோதாயி என விளக்குவார்கள். 


*மண்ணும் நீரும் சேர்ந்த கலவை தான் உடல்.* ஆனால் உரை கடந்த பொருள் சொல்லபட்டுள்ளன.


ஓம் எனும் பிரணவத்தை விளக்க எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன, ஆனால் நமவை விளக்க ஒரு நூல் கூட இல்லை.


*சிறு குழந்தைகள் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான்.*


இறைவனும் மண்ணும், நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம். சிருஷ்ட்டி சம்ஹாரம் போல.  (பிள்ளையார் பிடிச்சி அதன் மேல் புல் வைக்கும் பழக்கம். )


ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால், நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்.


ஓம்-லிங்கம்; நம-சக்தி யோனி. அதான் புள்ளையார் பூசிக்கிறார் போல --- 


Thanks

riansathvicharam blogspot  com


தங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று குரு அருளாலும் இறை அருளாலும் அமைதி மகிழ்ச்சி வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.. 


விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள். 


வாழ்க வளமுடன்..!

உள் அளவீடு

 ஏராளமான குருமார்கள்,ஏராளமான வழிமுறைகள்,ஏராளமான சம்பிரதாயங்கள்,ஏராளமான சித்தாந்தங்கள் என ஏராளம் பிரிவுகளாக ஆன்மீகம் விரிந்து கிடக்கின்றது. இவற்றில் எந்த வழிமுறையை பின்பற்றுவது என போகப்போக ஆன்மீக பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கு சந்தேகம் எழும்ப ஆரம்பிக்கின்றது.இது சகஜமான சந்தேகமே.ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உண்மையை அறிந்தவர்களை எப்படி கண்டறிவது என்பதில் பெருத்த குளறுபடியே நிகழ்கின்றது.அனைவரும் தத்தமது வழிமுறையே சிறந்தது எனக் கொண்டு முன்னுக்கு செல்கின்றனர்.அவர்களாக அவர்களை அளவிட்டு கொள்வதிலும் சிரமம் தான் நிலவுகின்றது. அப்புறம் எதனைக் கொண்டு ஏனையவர்களை அளவிட்டு தெரிந்து கொள்வதாம்? ஏனெனில் தக்க அளவீட்டுமுறை எதுவென தெரியாத காரணத்தினால் எதனைக் கொண்டு அளவீடு செய்வதாம்? எந்த அளவுகோலை கைக்கொள்ளுவதாம், அல்லவா?

எந்தவொரு சாதனை சம்பிரதாயங்களும் முடிவானவை அல்ல,யோகமாயினும் தத்திரமாயினும் இவை ஆரம்பநிலை கருவிகளே தாம்.இதை புரித்து கொள்ளாதவர்கள் இவற்றையே பெரியது என நம்பி ஏமாந்து போகின்றனர்.தன்னை அறியும் தவமே தவங்களில் எல்லாம் தலை சிறந்தது.தானாக இருக்கும் தற்பரத்தை சார்ந்து ஒழுகும் தவமே மெய்த்தவம்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் தன்னை அறிதல் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோக தந்திரங்களில் சார்ந்துள்ளவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.மனமானது அந்த படிநிலைக்கு உயர்ச்சி அடைந்து கொள்ளுவதில்லை.யோக சப்பிரதாயங்களோ தந்திர நுணுக்கங்களோ தான் மேலானவை எனும் நினைப்பில் மனம் அவற்றில் சிக்குண்டு அனேகம் காலங்கள் உழலுகின்றனர்.இவ்விதமான கட்டமைப்பு கொண்ட மனமானது எந்த அளவீட்டு முறையை கொண்டு உண்மை ஞான முறையை கண்டடையும்?ஆனால் இவர்கள் தங்களிடம் இருக்கும் அளவு கோலின் தகமைக்கு தக்கபடி அளந்து கொண்டு திரிவார்கள்.இவ்வண்ணமான அளவீட்டு முறைகளினால் உண்மை ஞானமான தன்னிலை அறிதல் சாத்தியமாகாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை.

வள்ளலாரின் உபதேசங்களில் தன்னை அறியும் குறிப்பு உள்ளது.ஆனால் அதை மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளுவதில்லை.அதை வேதாந்தப் எனக் கொண்டு கடந்து செல்லுகின்றனர்.வேதாந்த உபநிடதங்களில் உண்மை யாதெனில் தன்னை அறிதலே தாம்.பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் , பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம் ,உண்மை என வள்ளலார் விளக்கிச் சென்றிருக்கின்றார்.இது என்னது என சாதாரண யோக தந்திரங்களில் இருப்போருக்கு புரிய வாய்ப்பில்லை.அவர்கள் கண்களுக்கு படுவதில்லை.அறிவுக்கு புலப்படாமலேயே கடந்து போய் விடுகின்றனர்.இதுவே தன்னை அறியும் தவம்.இதனை விட்டு விட்டு பரணெல்லாம் தேடித் துழாவுகின்றனர்.தேடுபவர்களும் இவ்வண்ணமான அறிவு எவரிடமாவது இருக்கின்றதா எனத் தேடவும் தெளிவு இன்றி,ஏதேதோ அளவுகோல்களினால் அளந்து கொண்டு திரிகின்றனர்.தெரிந்தவர்களும் இதனை பயிற்றுவிக்க தக்க மனப்பக்குவம் உள்ளவர்கள் எவராவது வரமாட்டார்களா என ஆவலுடன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கின்றனர்.

Tuesday, October 3, 2023

அவனின்றி அருளில்லை

 திருமந்திரத்தில் குருவே சிவனென கூறினான் என் நந்தி என ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலை காணும் போது குரு எங்ஙனம் சிவனாவார் என கேட்கத் தோன்றும்.ஏனெனில் குருவை பணியாதார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என்பார்கள். குருவை பணிதலே அருளை பெற்றுக் கொள்ளும் உபாயமாம்.அந்த சிவ அருளானது குருவின் இருதய கமலத்திலே ஒளிந்துள்ளதாம். அவ்வருள் வெளிப்பட வேண்டுமெனில் பணிவு என்பதே திறவு கோலாம். பணிவின்றி நிற்கும் சீடனுக்கு குருவருள் என்பது கானல் நீரே தாம்.எத்தனை காலம் பயிற்சி செயினும் முன்னேற்றம் என்பது அடைய முடியாது போம்.அவனின் பணிவின்மையே அவனுக்கு தடையாக அமைந்து விடும்.ஆகையில் குருவருளே சிவம். பணிவற்ற எவனும் குருவை புரிந்து கொள்ளுவதில்லை.பணிவு வெளிப்படத் தான் எவனும் குருவை அறிகின்றான்.அவனுக்கு குருவின் சுயம் வெளிப்பட்டு தோன்றுகின்றதாம்.

Friday, September 22, 2023

நினைவெதுவோ அதுதானே சீவனாகும்

 அத்வைத வேதாந்த சாத்திரங்களான

கைவல்ய நவநீதம், ஞான வாசிட்டம் போன்று மெய்ஞ்ஞான தேட்டத்தில் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் ரிபு கீதையாகும்.


நான்கு வேதங்களின் ( உபநிடதங்கள்) சாரமான நான்கு மகா வாக்கியங்களின் விளக்கமே ரிபு கீதையாகும்.


இதிலிருந்து இரண்டு பாடல்கள் :


" நினைவெதுவோ அதுதானே சீவனாகும்

நினைவெதுவே அதுதானே ஈசனாகும்

நினைவெதுவோ அதுதானே சகமுமாகும் 

நினைவெதுவோ அதுதானே மனமுமாகும்

நினைவெதுவோ அதுதானே காமமாகும்

நினைவெதுவோ அதுதானே கருமமாகும்

நினைவெதுவோ அதுதானே துக்கமாகும் 

நினைவெதுவோ அதுதானே அனைத்துமாமே."



நினைவின்றி நிற்பதுவே அகண்ட மாகும்

நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்

நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்

நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்

நினைவின்றி நிற்பதுவே சகசமாகும் 

நினைவின்றி நிற்பதுவே பிரமமாகும்

நினைவின்றி நிற்பதுவே சிவமுமாகும்

நினைவணுவு மில்லையெலாம்பிரமந் தானே!"


நம் நினைவுதான் சீவனாகும் .


நினைவற்ற பரிசுத்த நிலைதான் சிவமாகும் .


அருமையான உபதேச மொழி.

Tuesday, August 29, 2023

பாபாஜியின் குரல்

 அந்த பிரம்மாண்டமான மௌனத்தில் ‘நானும்’ நீயும் இல்லை, அவனும் இல்லை. 

அந்த விளக்குகளின் ஒளியில் கிழக்கோ, மேற்கோ, பகல், இரவு என்று எதுவுமில்லை. 

பிரம்மன் கால் இல்லாமல் நடக்கிறான், காது இல்லாமல் கேட்கிறான், நாக்கில்லாமல் பாடுகிறான், வாய் இல்லாமல் சுவைக்கிறான், கைகள் இல்லாமல் பிடிப்பவன். 

காற்றோ, நெருப்போ, பூமியோ, வானமோ, சூரியனோ, சந்திரனோ இல்லை. 

எதிர் ஜோடிகள் அங்கு இல்லை. 

தேவனுடைய ராஜ்யத்தில் இன்பமோ துன்பமோ இல்லை, அன்போ வெறுப்போ இல்லை, சந்தேகமோ மாயையோ இல்லை. 

அங்கே மரங்கள் அழியாப் பழங்களைத் தருகின்றன. 

அங்கு ஆறுகள் ஆனந்த அமுதத்துடன் பாய்கின்றன. 

தெய்வீக அன்பின் மலர்கள் நித்தியமாக மலர்கின்றன. 

தெய்வீக கருணையின் வற்றாத நீரோடை பாய்கிறது.



இந்த உயர்ந்த சுயத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குள் உள்ளது. 

உங்கள் இதயத்தின் ஆழத்தில் உள் குரல் கேட்கும் இடத்தில் அவரைத் தேடுங்கள். 

அங்கே தெய்வீக பிரகாசம் பிரகாசிக்கிறது. 

இந்த மிக இனிமையான, தெய்வீக சாரத்தை குடித்து அழியாதவராக ஆகுங்கள்.



ஓம் நமஹா பாபாஜி குந்தர காந்தா அப்பாதி (ஒளிரும் ஒளியைக் கொடுப்பவர்/கொடுப்பவர், பாபாஜிக்கு நான் தலைவணங்குகிறேன்)



- ‘பாபாஜியின் குரல்’ என்பதிலிருந்து ஒரு பகுதி

புலால் மறுத்தான்*

 .                        ●

  *புலால் மறுத்தான்*


"கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்'' என்ற திருக் கொரலை னீங்ஙள் படித்துக் கேட்டிருப்பீர்கள். அதில் சொல்லப் பெற்றுள்ள "புலால் மறுத்தானை" என்பதற்குப் படித்தவர்கள் யாவரும். 'புலால் உண்ணாமல் வாழ்கிறவனை' என்று அர்த்தம் பண்ணுகிறார்களே, அது சரியா என்று பார்ப்போம். ஒரு மிருகத்தின் மாமிசத்தை உண்ணுவதாலா இந்ந மனிதனுடைய உடம்பிலுள்ள புலால் கெட்டுப் போகும்? பாவம் உண்டாகிவிடும். மிருகத்தின் மாமிசமாகிய புலாலைத் தின்பதால் பாவம் வரும் என்றால், இவன் தேகத்திலுள்ள புலால் இரும்பா, தங்ஙமா? வாசனை மிகுந்ந பொருளா? இல்லையே.


மரங்ஙளைப் பார். அவை அறுசுவையுள்ள ஆகாரத்தை உண்ணுவதில்லை. ஆகவே அவற்றின் உடல், னாற்றமற்றதாயிருக்கிறது. மனித தேகம் அப்படியானதா? அறுசுவை உணவு உண்டு ஜீவிக்கிற படுனாற்ற முடைய தூலமாச்சே? அப்படியிருக்கப் பிற மிருகாதிகளின் புலாலை உண்பதால் மனிதனுக்கு எப்படிப் பாவம் வந்நு விடும்?


"புலால் மறுத்தானை" என்று தெய்வ குபேர அருட்செல்வர் குறித்துள்ளதற்கு னிஜ அர்த்தம் எந்ந ஆகம சாஸ்திரப் பண்டிதர்களுக்கும் தெரிய வராது. புலால் மறுத்த அப்பாதையில் னடந்ந ஞானச் செம்மல்களுக்குத்தான் அதன் மெய் அர்த்தம் தெரியும்.


இவன் புலாலைச் சாப்பிட்டால் என்ன? அதை விட்டுக் காய்கறிகளையே சாப்பிட்டால் என்ன? உன் எண்ணத்திற்கு அசூசியாய் இருந்நால் தள்ளி விடு. வயிற்றுக்குத் தின்ன எதுவும் இல்லை என்றால் கிடைக்கிறதைத் தின்னு! புலாலை ஒதுக்கி விட்டுச் சாப்பிட்டால் தெய்வப் பதவி கிட்டும் என்று பொய் வேடதாரிகள் சாம்பிராணி தூபம் போட்டு மதிப்பைத் தேடுகிறார்கள், "புலால் மறுத்தான்" என்பதன் உண்மை அர்த்தம், மறுபிறப்பு என்ற பரிசுத்தப் பிறப்பு எடுக்கும் போதுதான் ஒருவருக்குத் தெரியவரும். ஒரு ஜீவ பண்டிதரின் திருமணிச்சூலில் ஜீவப் பிறப்பாகிய ஜோதிப் பிறப்பு எடுக்கும் போதுதான், அதன் மெய்ப்பொருள் விடியும்.


ஒரு கல்லாகிய னகலை வைத்துத் தெய்வம் என்று மந்நிரம் ஜெபித்து பூவைப்போடுகிறோம். கடையில் வாங்ஙின பூணூலை அணிந்நு கொள்கிறோம். கடையில் வாங்ஙின பூணூலா னமக்கு முத்தி தரும் ? இப்படி ஆகம சாஸ்திரங்ஙளில் சொல்லப்பட வில்லையே. அப்படியிருக்க, ஏன் இந்ந னகலாகிய பழக்கத்தை எடுத்து வைத்தார்கள்? அப்படி எடுத்து வைக்கவில்லை என்றால், தெய்வம் என்ற எண்ணமே இல்லாமல்போய், சிருஷ்டியில் வைத்து அடியோடு கீழே மகாமட்டமான னிலைக்கு மனிதகுலம் போய்விடும். அசல் பூணூலுக்கு உள்ள கண்ணியமும் வேதத்தில் சொல்லப் பெற்ற லட்சணங்ஙளும் மறைந்நு போய் விடும். கடையில் வாங்ஙி அணியும் னகல் பூணூலை அடிக்கடி மாற்ற வேண்டிய னிலையில் அழுக்குப்படிந்நு விடுமே!


சிலர் சொல்லுவார்கள், வெளி உலகத்தில் உள்ள கோயில் குளங்ஙளை எல்லாம் இடித்துத் தள்ளினால் தான் மக்கள் அசலுக்குத் திரும்புவார்கள் என்று. அந்ந அயோக்கிய உருவங்ஙள் அசலைக் கண்டவர்களா? இந்ந னகல் கோயில் குளங்ஙள் இல்லை என்றால், உங்ஙளிடம் அசலைப் பற்றிப் பேச யோக்கிதை வருமா? ஞான வார்த்தைகளைக் கேட்பதற்கான காது எங்ஙாவது இருக்குமா? இருக்காது. ஆலயங்ஙளை னிரம்பக் கட்டிவைத்து, அதில் உள்ள சிலையை மக்கள் தெய்வமென்று எல்லோரும் வழிபடுகிறாகள் என்பதை வைத்துத்தான், எமக்கு மக்கள் முகம் பார்த்துப் பேச ஆசை வருகிறது. ஆகவே னகல் ஏற்பாடு என்ன சிறிய காரியமா? ஆலயங்ஙள் கூடாது என்கிறவன், மக்கள் எல்லோரும் அவன்களைப் போல் னாஸ்தீகர்களாகப் போவதற்கே அவர்கள் பேச்சு உதவும்.


னாம் குழந்நைப் பிராயத்தில் இருக்கும்போது தெய்வ எண்ணத்தை னம் உள்ளத்தில் ஊட்டுவதற்கு கோயில் குளங்ஙள் அவசியம் தேவை. குழந்நையின் அறிவு வளர்ச்சிக்குப் பொறுப்புடையவர்கள், அந்ந இள உள்ளங்ஙளில் இந்ந னகலை வைத்துத்தான் தெய்வ சிந்நனையை வளர்க்க முடியும்.

Wednesday, August 16, 2023

இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து

 இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து இயற்கையின் இயல்பாய் இசையும் இயல்பை இசைக்க இன்பம் இயற்றி இயந்தனான் இணை.

 

இருக்கிறது அதன் இருப்பால் இருக்கிறது. அந்த இருப்பு அதன் தன்மையாய் மறைந்தே இருக்கிறது. அந்த இருப்பே அதன் ரஹசியம். அந்த இருப்பை அதன் புரிதலை ஊட்டி விளக்குபவரே சர்குரு. அதை விழலாய் வீணக்காமல் காத்தலே பணிவு.


ரியான்

குருபிரானது திருநாவில்

 ஒருவன் எதனை காக்க தவறினாலும் , குருபிரானது திருநாவில் உதித்த திருவமுத வாக்குகளையேகாத்து,பலனோங்க ஒழுகவேண்டும்.அவையே கனி!. பிற வாக்குகள் , "காய் வாக்குகள்". அந்த "காவாக்கால்" சொல்குற்றமே வரும்.!. அவர்கள் திருநாவினில் நம்மை அடக்கி வாழ்வதுவே , நாவடக்கம்! 


🌷நண்பரின் பதிவு நன்றி 🌷

ஞான மணிமாலை)

 கோன்கண்ட ஞானக் குருவருளாம் மப்பொருளை நான் கொண்டே னென்டு நவிலாதே-ஏனென்றால் வெண்கலத்தின் ஓசை வெகுவாக முழங்கும்பைம் பொன் கலத்தின் ஓசை பொருள். 


(ஞான மணிமாலை)


அடக்கம் அமரருள் உய்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று சொல்றத கேட்டு இங்கிருக்கிறவன், ஜீவ சமாதி வைக்கிற அடக்கத்தை பொருள் கொண்டிருவான்.அடக்கம் என்று எதை குறிக்கிறது எனறு சொல்லி கொடுக்க ஆளில்லை.


 உலகில் பொக்கிஷம் என இருப்பது குரு வாய்மொழி. அந்த ஞானம் தான் உன்னை அமரனாக்க வல்லது. அந்த வாய் மொழி வரத்தை வீணாக்காது பாதுகாத்தல் தான் அடக்கம் .