Tuesday, December 6, 2022
உயிர்=ஆன்மா
Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் காலங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்றி்ர்க்கு உணவாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?..
Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்òகு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?.
Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது.... இது பரம ரகசியHseija Ed Rian
சூக்குமத்தின் விரிவே தூலம்.. தூலம் உடலெனின் சூக்குமம் உயிராம்... இவை இரண்டினும் உள்ளுறை ஆன்மா என பரபடுவது மனமே தான்.. .காரணம் என்படுவது அது சூக்குமத்திற்க்கும் தூலத்துக்கும் காரணம் என கொள்ளதகாது, எனில் இவை மலர காரணி மனமே ஆம் எனவே.மான ஒரு விஷயம்
விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே
"ஊனான உடலுக்குள் முகவட்டத்துக்குள் ஒளிபோல நிற்குதப்பா , அகாரபீடம், தேனான மணிபூரகத் துக்குள்ளே
செய்தான் பீடமெனச் சிறந்தவாரே"
-போகம் ஞானம்-
"அறைகுவேன் அகரமது சிவமதாச்சு ஆச்சரியம் உகரமது சத்தியாச்சு"
-சுந்தரானந்தர் சிவயோக ஞானம்-
"அகாரம் நயமாச்சு
உகாரம் உச்சி சிரசாச்சே--இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே"
-கொங்கண சித்தர் -
"குண்டலி வாசி அகாரமடி ;பிடர்க்
பிடர்க்கண்டமதிலே உகாரமடி "
-ஞானக்கும்மி -
"இருள்வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச்சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்;
ஆதியந்தம் அண்ட பிண்டம் அதுவேயாகும் .
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம் ;
சிவ சக்தி திருமாலின் ரூபாமாகும்;
வருமுருவே சிவசக்தி வடிவமாகும்;
வந்ததிலும்
போனதிலும் மனத்தை வையே.
-வான்மீகர் ஞானம் -
"உண்ணும் போது உயிரெழுத்தை உயரவாங்கு
உறங்குகின்ற போதெல்லாம் அதுவேயாகும்;
தின்னும் காய் இலை மருந்தும் அதுவேயாகும்;
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி கால மட்டும் வாழ்வார் பாரு;
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே!
-அகத்தியர் ஞானம் -
"எட்டும் இரண்டும் அறிந்தோர்க்கு
இடர் இல்லை குயிலே மனம் -ஏகாமல் நிற்கும் கதி எய்துங் குயிலே "
-இடைக்காட்டுச் சித்தர் -
"எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்; எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்கப் பாதமே"
-திருமந்திரம் -
"எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கம தாமே"
-திருமந்திரம் -
"கணக்கறிந் தார்க்கன்றிக் காண வொண்ணாது;
கணக்கறிந்தார்க்கன்றி
கைகூட காட்சி;
கணக்கறிந்து உண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந்தோர் கல்வி கற்றறிந் தாரே;
--திருமந்திரம்---
எண்ணனாய் எழுத்தனாய்!
எழுத்தினுக்கோர் இயல்பனாய்!
-அப்பர் தேவாரம் -
'கடிகைக்கு கடிகை நூறு நூறு தடவைகள் குருவை நினைத்து நினைந்து அழுகிறேன் , கொஞ்சம் கூட நேரம் தாழ்த்தாமல் மனிதனிலிருந்து என்னை தேவனாக்கினாரே'
-கபீர்தாசர்
ஓரெழுத்தில் ஐந்து உண்டென்பார் வெண்ணிலாவே -அது
ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே
-திருவருட்பா -
அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30
ஓமென்ற பிரணவமே ஆதி வஸ்து
உலக மெல்லாந் தானிறைந்த யோமசத்தி
தாமென்ற சத்தியடா எவரும் தானாய்ச்
சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று
ஆமென்று ஆடினதும் ஓங்காரம் தான்
அடி முடியாய் நின்றதும் ஓங்காரம் தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலே தான்
நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே
பாதம்
கொழுமுனையாம் கதிர்முனையி லாடும் பாதம்
கோடான கோடி மறைபுகழும் பாதம்
தளிரிலை பூங்காய் பழமாய்ச் சொரிந்த பாதம்
சகல உயிர் ஜீவனிலு மாடும் பாதம்
-சாலை ஆண்டவர்கள் -
'தோணுமிகு பாதத்தொன்று தூக்கிமறு பாதம்
தேவ னடனம் தெரியும் தேசி பஞ்சாட்சரமே'
-மெய்வழி சாலை ஆண்டவர்கள் -
ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
"நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலு நெய் கலந்தவாறு பாவிகாளறி கிலீர் ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனவிலும் மதி ல்லையே"
-சிவவாக்கியர்--
"போட்டது ஒரு விந்து வட்டக் கோட்டைக்குள்ளே
பூரண ஏகாட்ஷரத்தைப் பார்க்கும்போது நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன்
நன்மையுள்ள எட்டும் இரண்டும் அங்கே கண்டேன்
ஆட்டமென்ற முக்கோண மேறு கண்டேன் அதில் நிறைந்த சிதம்பரச் சக்கரமுங் கண்டேன்
தோட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன்
சேர்ந்து மிக வொன்றான செயல் கண்டேனே"
"சண்முகம் ஆறு சடாட்சரம் போடு உண்மையாய் அதனுள் உமை திரிகோணம் நன்மையாய் அதினுல் நாட்டிடு விந்து
கண்மைய்யம் அதினுள் கணபதி சுழியே"
-திருமூலர்-
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
குருபாதம்
"அறியோம் நற்றாள்கள் குரு வாழ்க குருவே துணை"
வாலறிவன் நற்றாளாக விளங்குகின்ற அதை அறிவிக்கின்ற குரு வாழ்க, குருவே துணை.
ந ம சி வ ய
நவ்வெழுத்தே பிரமனாராகும்- அதில் நாரணன் மவ்வெழுத்தானானே
சிவ்வெழுத்தே தெய்வருத்திரனாம்- இன்னும்
செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே!
செப்பவே வவ்வு மகேசுவரனாம்- வட்டம் சேர்ந்து யகாரம் சதாசிவனாம்
தப்பில்லா ஐந்தெழுத்தாலே சராசரம் தங்கியிருந்தது, ஞானப்பெண்ணே!
-ஞானக்கும்மி-
ந- பிரமன்- படைத்தல்
ம- திருமால்- காத்தல்
சி- உருத்திரன்- அழித்தல்
வ- மகேஸ்வரன்- மறைத்தல்
ய- சதாசிவம்- அருளல்
"வாசியென்றால் மூச்சதுவென்று- தாறுமாறாய்
மோசமது போகாதேமுக் காலூமே சொன்னேன்
பேசரிய பாதமதுகாண்- ஊசிமுனை வாசிவச மாகுமது தேசு நிறமே"
-சாலை ஆண்டவர்கள் -
வள்ளல்
அறியாத மெய்ப்பொருளாகிய செல்வத்துக் கெல்லாம் தலைச் செல்வமாகிய செவிச் செல்வத்தை வழங்குபவர்கள் யாராக இருப்பார்கள், அவர்களே நிஜமான வள்ளல், அறியாமை இருளை அகற்றி மெய்ஞான ஒளியை உள்ளத்தில் பாய்ச்சும் பெருமானாரே வள்ளல்.
பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே
வாய் உணவு - செவி உணவு
வாய் உணவு - செவி உணவு
"வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."
"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."
"மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்.
ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது."
---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
யார் இந்த நந்தி??
===== யார் இந்த நந்தி?? ====
1) பேசும் எழுத்தொடு பேசா எழுத்துறில் ஆசான் பரா நந்தியாம்..
2) எட்டிரண்டு ஒன்றுவது வாலையென்பார் இதுதானே பரிதிமதிசுழுனையென்பார்...
3) அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப்பதத்துள் எனும் திருமந்திர பாடல்...
4) நந்திகொலு கண்டவனே ஞானியாவான் நடுவணையை கண்டவனே கற்பதேகி
5) விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி இருந்தான் கொலுவாகி சிந்தை தெளிந்து மகாரம் வைத்தால் அந்த சீமானை காணலாம் ஞானபெண்ணே...
6) எட்டொடே ரெண்டையும் சேர்த்து எண்ணவும் அறியேன் எனும் வள்ளல் பாடல்.
இவற்றை காண இவை அனைத்தும் ஒரு பொரு்ளை தான் குறிக்கின்றன என தெரிகிறது.
நந்திகண்டால் வாதம் காணும் எனும் மற்றோர் பாடலும் நமக்கு நந்தியை தான் முதலில் அறியவேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றன.
யார் இந்த நந்தி??
நாக்கு =மூக்கு =சுவாசம்
Hseija Ed Rian நாம் பிறக்கும் போது பேச்சும் மூச்சும் உடனே வருவதில்லை..நமது நாக்கானது உள்மடிந்து அண்ணாக்கினுள் இருக்கும்...அதை வெலியே இழுத்துவிட்டபின் தான் மூச்சு பின் பேச்சு வரும்...அது ஒரு ரகசியம்...அரிந்தவர் ஒருசிலரே...நாபியில் இருந்துகோண்டு சுவாசித்த நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் கலையை பெற்றோம்...ஆக நம் எண்ணங்கள் எப்போதும் மனதில் பேச்சுவடிவில் அலையாடி நாவில் எப்போதும் சலித்துகொண்டிருக்கும்...மவுனமாக இருந்தாலும் நாவில் பலவித பேச்சுக்கள் சலித்துகொண்டிருக்கும்...எப்போது நாவு சலனத்தை நிறுத்துகிறதோ அது மவுனம்...எண்ணத்தில் கூட அதிர்வு இருக்காது...அப்போது மூச்சும் அடங்கும்...எல்லாம் நாக்கின் கைவண்ணம்...நாக்கை பாதுகாக்கிறவன் தன் ஆன்மாவை பாதுகாக்கிறான்...அசைந்தாடி கொண்டிருக்கும் எதுவோ அதை இருதயம் என அரிவோமாக.....கடவுள் அருள் விளங்கட்டும்
ஜீவவார்த்தை
பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை
நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது....
நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்?
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்"
அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா?
அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை.
அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை
அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம்
அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது?
மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து.
மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு?
ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை
ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார்
அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை
ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"...
இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன?
சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்...
தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்.
அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான்
ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும்
அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே
நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை
எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்
🖐🖐எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்🖐🖐
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
🔹🔹🔹
ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்
--- பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை"
குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல
ஒரு முனையில் “நான்” என இருக்கும்.. மறு முனையில் மனம் என இருக்கும்.. இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர்.
அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே --- திருமூலர்.
மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும்
ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா?
இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும்
உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....
தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என.
உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம் )
🔹🔹🔹
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
➡️ riansathvicharam blogspot com 🙏
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
என்னல்லாமோ செஞ்சு பாக்குறோம்..ஏதெல்லாமோ படிச்சு பாக்குறோம்..என்ன படிச்சாலும் சந்தேகம்ங்கிறது தீர்ந்தபாடில்லை. நாம இருக்குற நிலமை என்ன...எப்பை மாட்டிகிட்டு தவிக்கிறோம்...எங்க மாட்டிகிட்டு திணறுகிறொம்ம்..இப்படி அல்லோலபட்டு வாழ்க்கை பாழாக போறதுக்கு என்ன பாவம் செஞ்சோம்ங்கிறது எத்தனை காலம் யோசிச்சாலும் புத்திக்கு வராது, தீர தீர கேள்விகள் பல பதிலில்லாமல் பெருகிகிட்டே தா வரும். புத்தர் மாதிரி எங்காச்சும் போயிருந்து துக்கத்துக்கு காரணம் என்னாண்ணு ஆலோசனை பண்ணாலும் பதில் வராது.எண்ணா நாம மாட்டி கெடக்கிற விதம் அப்படி.
ஒரு குண்டாக்கு நூல் கட்டை ஒழுங்கில்லாமல் சின்னி சிதறி அலங்கோலமாக்கி ஒரு குழந்தைகிட்ட குடுத்து அதை அவுத்து சீராக சுற்றி வைக்க சொன்னா நடக்கிற காரியமா என்ன ..அது போலத்தான் வாழ்க்கையும்...எந்த ஒழுங்கும் இல்லாம ஆயிரம் கோடி காலத்து கர்மங்கள் வினை தொகுப்புகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக கோடி முறை குதர்க்கமா குழப்படியா ஒண்ணுக்கு உள்ள ஒண்ணாக, அது மற்றொண்ணுக்கு உள்ளாக , அது எல்லாம் ஆயிர கோடி முறை கண்ணிகளால் இறுக்கபட்டு கண்ணிகள் இறுகுமே தவிர இளகாமல் அமைந்த த்ன்மையால் கடைசியில் சாவு தான் நிச்சயம்ண்ணு வந்து வாய பொளந்து கிட்டு நிக்குது.
அகத்தியர் சொல்ற மாதிரி,அருமையான புரிதல் வந்தா புரியும், ”உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று, உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறென்பர்” என்கிறார். உடல் எங்கிருந்து ஆரம்பம்ண்ணு கேட்டா பதில் இல்ல, உயிரின் ஆரம்பம் கேட்டாலும் பதில் இல்ல, அப்ப பூரணம் என்பது பூரணமாக கைவிட்டு போச்சு.
மனிதன் பூரணமாகவே இருக்கிறான்,பூரணமே அவன் இயற்கை. இதை தான் வேத வசனமும் ‘பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணம் உதச்சதே” என சொல்லுது. அகத்தியரின் வசனத்தின் உயர்ஞானம் இதுவே. உடல் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல. உயிர் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல, அது போல பரிபூர்ணம் உடலுக்கும் உயிருக்கும் வேறல்ல, இவை மூன்றும் ஒன்று தான்.இவை வெவ்வேறு எனுமிடத்தில் மனம் குழப்பம் மிகுந்து புரிதல் இன்றி அலை போல திணறுகிறது. அன்பே சிவம்
குண்டலினீய தவம்
குண்டலினீய தவம்
‘கூறாத மந்திரத்தின் குறிப்பறிவித்து....
ஏறாநிலையெனை ஏற்றுவித்து....’
என ஆங்காங்கு குரு பரம்பரையினில் மட்டும் ஒதுங்கி எக்காலத்தும் தலையை வெளிக்காட்டாது, தலை ஏது வால் ஏது என புரிதலுக்கு இடம் கொடாது மறைந்து மூலகுகைக்குள் அடங்கி ஒடுங்கி தன்னிலை அற்று தனிமையே குணமாக முக்குணத்துக்கும் ஆதாரமாக எத்தேவருக்கும் தாயாக ஈனா மலடியாம் பெருஞ்சூலி திரிபுரை சின்னபெண் சித்து விளையாட காத்திருக்கின்றாள்,
அவள் தன்னையே பகுத்து சரிபாதி அந்த ஈசனுக்கும் கொடுத்தவள் ஆம் தயாவல்லி.அவள் சொரூபத்தை சித்தர்கள் ஞானிகள் என அறிந்தவர் யெவரும் சொல்ல கூச்சபட்டனர்,அவ்வண்ணமான சொரூபம்.அதான் அவள் மறைவாகவே உலாவுகிறாள் பெருங்கள்ளி.
அவளுக்கு என மட்டும் அவள் அறிவின்றி யெவரும் அறிந்திரா மந்திரம் தான் மூல மந்திரம், எழுகோடி மந்திரங்களுக்கும் தாயான மந்திரம்.அதை சித்தர்கள் வாய் விட்டு சொல்லாமல் மறை பரிபாஷையாகவே சொல்லி சென்றிருக்கின்றனர்.மூலாக்கினி எனவும் குண்டலினீ எனவும் வாலை எனவும் சூலி எனவும் வல்லபை எனவும் வாக்மயி எனவும் தேவி எனவும் பல ரூப பல பேத பல நாமம் அனேகம் விதம்.ஆயினும் அந்த ஓரெழுத்து தான் என்னவோ அவள் ரகசிய குறி????
’ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே’.=திருமூலர்
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்குண்டலினீயின் ரகசியம் - Hseija Ed Rian
==========================
குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.
ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.
கட்டும் அவிழ்ப்பும்
கட்டும் அவிழ்ப்பும்
தன்னை அறிதல் முதற்கடமை, தன்னிலை உணர்தல் முதல் படி.வாழ்வின் ஆதாரம் வாழ்வின் கட்டு, வாழ்வின் சுழற்சி எது எப்படி எவ்விதம் என ஆழமாக புரியாமல் போவதினாலேயே கற்பனையாக கோட்பாடுகள் உருவாக்கபடுகின்றன. இருப்பதை இருப்பின் உள்ளமைப்பின் படி அறிதலே தன்னிலை உணர்தல்.
நீ இரண்டு வஸ்துக்களில் பிறந்தவன் என அறிந்திருக்கிறாய்.அந்த இரண்டு வஸ்துக்களும் இணையும் முன்பு நீ அந்த இரண்டு வஸ்துக்களில் எதனூடு வசித்து வந்தாய் என அறிதலே மெய்திறம்.உன் உடலை பார், ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் உன் உடல் யாருடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறது என காண்பாய். தாயே உன் உடலுக்கு நேரடி தொடர்பு அல்லவா, உன் நாபி அவளிடமே நேரடி தொடர்பு அல்லவா?. உன் தந்தையிடம் உனக்கு தொடர்பு இருந்திருக்கிறது என எந்த ஒரு அடையாளத்தையும் உன்னால் காட்டமுடியுமா என்ன?, முடியாதே, ஏனெனில் நீ தந்தையிடம் நேரடி தொடர்பு அற்றவன். தாயே தந்தைக்கு வழிகாட்டி.
சற்று உற்றுப்பாராய், “நான்..நான்” என சதா கொண்டு திரியும் வஸ்து ஒன்று, “நான்..நான்” என சொல்லாமலேயே சதா உயிர்ப்பாய் இயக்கமுறும் வஸ்து மற்றொன்று. இவற்றை ஆழமாக பகுத்து ஆராய்வாக மனமே.இந்த உடலை கட்டமைத்தது சொல்லப்பெறும் “நான்” எனும் வஸ்துவா, அல்லது உயிர்ப்பான வஸ்துவா? என கேட்டுப்பாரேன் மனமே.அனைத்து நிகழ்வுக்கும் மத்தியில் “நான்” எனும் வஸ்துவே முன்னிட்டு நிற்கின்றது. நான் என்றும் என்னுடைய என்றும் இந்த வஸ்து எல்லா விஷயங்களுக்கும் உரிமை கொண்டாடுகின்றது, உடலுக்கு உரிமை வேண்டுகின்றது, மனதுக்கு உரிமை வேண்டுகின்றது, அனைத்து நிகழ்வுகளுக்கும்,அனைத்து செயல்களுக்கும் உரிமை வேண்டுகின்றது.ஆனால் இந்த “நான்” எனும் வஸ்து உண்மையில் எதனூடும் எந்த ஒரு தொடர்பும் ஒருபோதும் கொண்டதில்லை, அது என்ன அதன் தரம் என்ன, அதன் ரூப குணம் என்ன என ஆராய முற்பட்டால் அது தன்னை மறைத்து இருள் ரூபமாகவே அறிவுக்கு புலப்படாமல் நிற்கின்றது.
அடுத்து நிற்கும் வஸ்து உயிர்ப்பானது, கரு உற்பத்தி முதல் உன் ஊடாக ஊடுருவி நிற்கும் அரும்பொருள், அது எப்போதும் தன்னை தானே அடையாலப்படுத்தி கொள்வதில்லை. அது பாட்டுக்கு அதன் செயலை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டமைக்கின்றது, ஒவ்வொரு துளி ரெத்தத்தையும் ஊடுருவி நின்று உருவாக்குகின்றது, தசைகள் தமனிகள், நிறம் வண்ணம் குணம் என அனைத்தையும் உருவாக்கி அரூபமாக விளங்கி நிற்கின்றது, அது யாரிடமும் யோசனை கேட்ப்பதில்லை, உடலின் அளவு எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என அது எவரிடமும் யோசனை கேட்பதில்லை, ரெத்தத்தை எப்படி உருவாக்க வேண்டும் என தயங்கி நிற்பதில்லை, கால்கை மூட்டிகளில் எந்த விதமான பொருட்களை எந்த விகிதத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என அது எவரிடமும் யோசனைக்கு நிற்பதில்லை, எல்லாவித உள்ளுறுப்புகலையும் எப்படி படைப்பது, எப்படி சீரமைப்பது எப்படி நடைமுறைபடுத்துவது என அனைத்தும் அதற்கு தெரியும். ஆனால் எப்போதுமே “நான்” இதை செய்கின்றேன், நான் தான் இதற்கு அதிகாரி, நானே இந்த உடலுக்கும் இதன் உள்ளுறை செயல் செயல்பாடுகளுக்கும் பூரண அச்சுக்கோர்வை என அது சொல்லி திரிவதில்லை, நினைப்பது கூட இல்லை. ஏனெனில் அதற்கு மனம் இல்லை.
இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மனமோ, இவை அனைத்தையும் நானே நடத்துகிறேன், நானே இங்கு அதிகாரி ,நானே இந்த மனுத்தூலத்தின் மையப்புள்ளி என அபிமானித்து செயல்களில் மூழ்கி, செயல் பயன்களையும் துய்க்கின்றது.இவ்வண்ணம் இந்த வாழ்நாள் முழுதும் “நான்” முன்னிட்டே வாழ்வு அமைகின்றது, நான் செயல் புரிகிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் விளைவுகளை சுமக்கிறேன் என வாழ்வு நீண்டு போகின்றது.இவ்வண்ணம் “நான்” எனும் ஆன்மா உள்ளுறையும் “ஜீவன்” எனும் உயிர்ப்பை அறியாமல் மாண்டுபோகின்றது.மூடமாகிய ஆன்மா ஜீவன் எனும் வஸ்து தன்னிலிருந்தே பிறந்து தன்னிலே நிலை நிற்கின்றது எனும் கற்பனை அபிப்பிராயத்தால் தன்னை இழக்கின்றது.ஜீவஆன்மா தன்னிலை விளக்கம் அறிய அறிய தன்முனைப்பு கெடும்
Subscribe to:
Comments (Atom)