Monday, December 5, 2022

பிரசாதம்

 கோயில்களில போனா கும்பிட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் பிரசாதம்ணு சொல்லி எதாச்சும் குடுப்பாங்கள்ல அது எதுக்கு? 

இந்த கேள்விய ஆண்டவர் கிட்ட கேட்டிருந்த அவரு உடனே சொல்லப்போறார் , எப்படீண்ணா,பிர+சாதம்ணு ஒரு ப்ளஸ் போட்டு விளக்கம் சொல்ல ஆரம்பிப்பார்.பிரசவம் என்பதுக்கும் இப்படி பிர+சவம் எனப்போட்டு விளக்கம் சொல்லியிருப்பார்,அதாவது பிறக்கும் போதே சவம் என.அது போல பிரசாதத்துக்கு பிறக்கும் போதே சாதம் ஆனவன்ணு விளக்கம் சொல்லுவார்.

உண்மையில் பிரஸவ் என்பது ஒரு வடமொழி வார்த்தை , பிரஸாத் என்ற வார்த்தை போல.பிரஸவ் என்றல் வெளிப்படுதல் எனப்பொருள்.அதுபோல பிரஸாத் என்றால் உள்ளத்திருப்தியின் வெளிப்பாடு என பொருள்.

கோயிலில் உறையும் இறைவன் நம்முடைய பிரார்தனைகளையும் வேண்டுதல்களையும் ஏற்றுக்கொண்டு  மகிழ்சி கொண்டுள்ளான் என வெளிப்படுத்துதல். பிரசாதம் வழங்காமல் பெறாமல் ஆலய தரிசனம் நிறைவு பெறாது.

இது போன்ற ஒன்று தான் குருப்பிரஸாதம் என்பதுவும்.இறை பிரஸாதத்தினால் குரு கிடைப்பார், குருப்பிரஸாதத்தினால் இறைவனும் கிடைக்கப்பெறுகின்றனர்.

முகாரவிந்த பேத விந்து

மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். *”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்”* -- என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும்,அந்த முகத்தில் எத்தனை சாயல்கள், எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன், இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது ==யுகவான் சாலை ஆண்டவர்கள். செம்மை னல னேர் வழியை ஒரு தேவேசரின் திருவாய் மூலம் வெளியாக்குவதுவே ‘வஹது’. உன் செவி வாயிலாக அத் தேவ ஆசரியர் உனக்கு ஒலி வீட்டமுதை ஊட்டுகின்றார். சிபத்துக்கள்-வித்தியா தத்துவங்கள்-ஏழும் பிரயோஜன அளவில் ஏழு ஒலி வீடுகளாக இருக்கின்றன. அந்த அருந்தலத்திலிருந்து எடுத்து அளத்தலே அறிவாகார தேவ வர்ஷிப்பாகும். அவர்கள் அது னேரம் தன் சப்தமாகிய உயிரை உனக்கு செலவிடுகிறார்கள். அப்போது அந்த தேவ அமுதை ஆர்வத்துடன் உண்ணாதுவிட்டால் னீ கெடுவதோடு, அவர்களை ஏமாற்றிய பாவமும் உன் தலையில் வந்து விழும். உன் ஜீவனில் உள்ள சர்வ மாசுக்களையும் ஒழிப்பதே செவி உணவு.அருளமுதமாகிய தெய்வ மருந்து உண்டால் தான்,உன் ஜீவனில் கப்பியுள்ள அழிகரு வழிவரு பிறவிமாசு ஒழியும். --- சித்திரசபை வாழ் வள்ளல் சாலை ஆண்டவர் அவர்கள்.

பதி புருவத்தடி

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு.. ❤️ஊமை என்பது எழுத்து வகை.... மவுனம் என்பது வித்தை வகை❤️ ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்

ஃப்ரூ

”ஃப்ரூ” என்பது வடமொழி மூலம், அதன் விரிவு “ஃப்ரூ மத்யம்”.... ”ஃப்ரூண” என்றால் கருப்பையில் தங்கிய கரு...அப்போது, ‘ஃப்ரூ மத்யம் என்றால் “கரு மையம்” என பொருள்.  “புருவம்” என்பது வடசொல் தமிழாக்கம், திரிபு பொருளாக்கம்.எந்த கருமையமோ..ஆண்டவா...?? “சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரி அரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமாம்=சிவவாக்கிய சித்தன் பரமேஷ்ட்டி” தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை.  இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் , அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது. இரு முனையும் அற்றது.. இரண்டற்றது. ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது... உறைவது.. இதையே ஹ்ருதயம் என்பர். ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான். நன்றி riansathvicharam.blogspot

பீரு முஹம்மது

தானாகி யன்னர் உருவாய்-திசை ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித் தானொளி தான்கண்டு கூவ- இறை தானவ னாசையால் நோக்கியே பார்க்க ஆன புகழிறை யாசை-அந்த அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க தானே சுடராய் வழிந்து-கடற் தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே தன்னாசையால் வந்த நாதம்-அவன் றானே கடலுயி ரோதிய வேதம் அன்னத்தெவையும் படைத்து-வகை யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப் பின்னா லேவந்து பிறக்கப்-பல கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து மின்னிய மங்குல முன்ன-இந்த மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே வானத்தின் மேகம் பொழிய-இந்த வையகத் தானிய மெங்கும் நெளிய ஊனினான் மாதா பிதாவும்-அவன் உதிரமே நாதமாய் ஓசை முழங்கி ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த ஆசையின் அவனொளி வாசந் துலங்கித் தானத்தில் வந்து அளித்தே-உருத் தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே அந்த கருவிந்து நாதம்-அதில் அன்னை யுதிரமுங் கூடின சூதம் அந்த கருவைந்து பூதம்-அது ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம் விந்துக்குள்ளே தழல் நீதம்-அது வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம் அந்த குதிரைமேலேறும்-நந்தம் ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........ ~~~ பீரு முஹம்மது அப்பா

சத்தம் அடங்குமிடம்

சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்..... சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை) காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்? நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே... வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்"..... ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்) புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா? உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க.. வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்.... உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள் அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்.... இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி.... தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும் ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்.... வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்... ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி... பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்.... சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை.... இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்.... முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும் ---❣️ திரு. ரியான் ஐயா  அவர்கள் ❣️

பரிசுத்தம்  என்றால்  என்ன?

❤பரிசுத்தம்  என்றால்  என்ன?💚 பரிசுத்தமானது  இணை  இல்லாத  மதிப்பிட  முடியாத ஒரு  உண்மை. நீ  காணும்  நிலைகளுக்கு  அப்பாலுக்கும்  அப்பாலானது. அப்பொருளுக்கு  நிகராக  வடிவு  உருவ  சொரூபம்  எதுவுமே  இல்லை.  அதைத்தான்     சைவம்  என்றும்,  பரிசுத்தம்  என்றும்  சொல்லப்படுகின்றது.  அப்பொருளை  இணை  துணை  நிகர்  இல்லாமல்  பரிசுத்தத்தைக்  கொண்டு  பரிசுத்தமான  தலத்தில்  நின்று  போற்ற  வேண்டும்.  அதே  இடத்தில்  நீ  பரிசுத்த  சைவமானால்  அத்தலம்  அவனாகும்.  அவன்  நீயாகும்,  நீயும்  அவனும்  உயிரும்  ஒளியுமாகும்.  நீ  உயிராகும்,  அவன்  ஒளியாகும்.  இரண்டும்  உயிருக்குள்  ஒன்றாகும்.  உயிருடைய  ஒளியுடைய  கண்தான்  அவ்வுண்மை.  அக்கண்ணைக்  கொண்டே  நீ  அவனுடைய  சிர் (இரகசியம்)  அதுவே  ஆத்ம  பேரின்பப்  பிரகாச  ஞான  ஜோதி  ஆகும்,  அவ்விடத்தில்  உனக்கு  உருவம்  இல்லை.  வடிவு  இல்லை.  அவ்விடம்  இணை  துணை  இல்லை.  அந்நிலை  ஒளிப்பிரகாசத்தின்  நிகரற்ற  தோற்றமாகும்.  அத்தோற்றத்திற்கு  என்மதம்,  உன்மதம்,  என்சாதி,  உன் சாதி,  என்  சமயம்,  உன்  சமயம்  என்ற  வேற்றுமைப்  பேதமை  மறுக்கள்  இல்லை.   சூபி

வாலறிவும் தலையறிவும்

வாலறிவும் தலையறிவும் நாம பல இடங்களில் ‘வாலறிவு,வாலறிவன்” எனும் வார்த்தைகளை பார்த்திருக்கிறோம்,அதன் விளக்கங்களையும் பார்த்திருக்கிறோம்,ஆனால் வாலும் தலையும் அறியாமல் இருக்கிறோம்.இது ஒரு உருவகம்,ஞான உருவகம்,சில விஷயங்களை சூட்சுமமாக சித்தரிக்கும் முறை,அதாவது ஃபார்முலா மாதிரி அல்லது குறியீடு மாதிரி. அந்தந்த குறியீடு அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் தெரியும், எது எதை குறிப்பிடுகிறது என்பது,அதன் விளக்கம் இன்னது என்பது.தெரியாதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியவராது.அது போலத்தான் குண்டலினீ என்பதும். நம்ம மக்கள் ஏதோ பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது மாதிரி கற்பனை பண்ணிக்கொள்வார்கள்,கதையும் விடுவார்கள். மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கும் அற்புத தனித்தன்மை என்பது ஓசை ஒலிநய பாஷை கையாளும் தன்மை.இந்த அறிவு வாக்கறிவு எனப்படுகிரது. பரை விரித்த கோலம், ஏராளமான புள்ளிகள் போட்ட அற்புதக்கோலம்.ஒவ்வொரு கோலமும் ஒவ்வொரு பாஷைகள் போல போட்டு வைத்துள்ளனர் முன்னோர்கள்.ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு வித தன்மை உள்ளர்த்தம் கூட இருக்கும், உருவகம் இருக்கும்.நம்மில் இயங்கும் ஆற்றல்,பிராணசக்தியின் வெளிப்பாடு பல வித கோணங்களில் இருக்கின்றது.அவற்றில் முக்கியமானது பேச்சும் மூச்சும் தான்.மூச்சு தலை என்றால் பேச்சு வால்.மூச்சின் எழுத்து தான் தலையெழுத்து என்பது,பேச்சின் எழுத்து வாலெழுத்து.மூச்சு சிவம் என்றால் பேச்சு சக்தி, மூச்சு பேசா எழுத்து என்றால் பேச்சு பேசும் எழுத்து.இந்த பேச்சு மூச்சினுள் ஒடுங்கி நிற்கின்றது.அதாவது குண்டலினீ தன் வாலை வாயினுள் கவ்விகொண்டு துயில்கிறது என கற்பனை உருவகம். பிராணாயாமம் முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் பேச்சு சக்தியை கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும்.இதை ஓதி ஓதி உணர்தல்,ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான்.இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது,அதில் இருந்து கிளம்புவதால்,அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள்,அமிர்த பாஷிணி.அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும் நன்றி திரு  ரியான் ஐயா அவர்கள்

Sunday, December 4, 2022

கண்டத்தை கட்டி ஊர்த்வகதி

கண்டத்தை கட்டி ஊர்த்வகதி அப்யஸிக்கும் போது மட்டும் தான் சிவானந்த பரமஹம்ஸர் அவர்கள் அருளி செய்துள்ளபடி சுவாசமானது வெளியே செல்லாமல்,சப்தமானது அருகில் அமர்ந்திருப்பவருக்கு கூட கேட்க்காமல், வயறோ நெஞ்சு பகுதியோ எந்த வித அசைவும் இன்றி, சுவாசம் இருக்கிறதா இல்லையா என பக்கத்தில் வந்து பார்த்தால் கூட புலப்படா வண்ணம் சின்னதாக ஒரு ‘துடிப்பு’ மட்டும் ஆக இருக்கும்.அது தான் நிஜமான ஊர்த்வகதியாம் சித்த வித்யயாம் பிரம்மஸ்ரீ

மண்ணும் நீரும் மனதை நிர்ணயிக்கின்றது

Hseija Ed Rian இந்த உலகத்தின் மண்ணும் நீரும் மனதை நிர்ணயிக்கின்றது, மண்ணின் வளம் மனதின் குணம்,அரிசி சாப்பிடுகின்றவன் மனம் ஒண்ணு, கோதுமை சாப்ப்டிடுகின்றவன் குணம் ஒன்று, கஞ்சா சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு, கரும்பு சாப்பிடுகிறவன் மனம் ஒண்ணு,எது ரத்தத்தில் கலந்திருக்கின்றதோ அந்த குணம் மனதுக்கு பலமாக அமையும்.விஷமான பொருட்கலை சாப்பிட்டால் ரத்தம் விஷமாகும், மனமும் அதை பிரதிபலிக்கும்.ஒரு நாள் இரவோடு இந்த மண்ணின் தனிமங்கள் மாறிவிட்டால் அனைவரின் ரத்தமும் மாறிவிடும், மனமும் மற்றொரு கோணத்தில் பிரதிபலிக்கும்.அல்லது நீ மற்றொரு உலகத்து தனிமங்களினூடு தாவர மாமிச உனவுகளை உண்ண ஆரம்பித்துவிட்டால் உன் மனமும் அவ்வண்ணமாக மலரும், தோற்றமும் அவ்வண்னமாக தோற்றமாகும், பரினமிக்கும் Hseija Ed Rian மனம் உணவினாலும் நீரினாலும் நிலை கொள்கின்ரது, உனவும் நீரும் அற்றால் மனம் அற்றுவிடும், கண் காணாது பஞ்சடையும், காது கேட்க்காமல் அடைந்துவிடும், மண்ணின் மணமானது இல்லையெனில் நீ சுவாசிக்கும் காற்று கூட உன்னால் சுவாசிக்கமுடியாது, காற்றினில் கலந்திருக்கும் மூஉலக்கூறுகள் எல்லாம் மண்ணின் தன்மை ஒத்ததே, ஆகாயத்தில் மண்ணின் காந்தசக்தி வியாபித்திருக்கும் அளவுக்குள் இந்த மண்ணின் மூலக்கூறுகள் நிரைந்திருக்கும். இந்த மண்ணே உன் மனம் Hseija Ed Rian மண்ணிலிருந்து பிரந்த நீ மண்ணுக்கே மண்ணாக போவாய்..மனம் மண்ணின் மணம் அல்லாது வேறல்ல, தாவரங்கள் மண்ணின் தன்மையை உறிஞ்சி பூத்து குலுங்குவதை போன்றே மனமும் பூத்து குலுங்கினிற்கின்றது. மனிதனும் ஒரு கொடிவகையே தான் Hseija Ed Rian Lama Dhamo உயிர் மண்ணில்லாமல் வாழ்வு அற்றது,நீரின்றி வாழ்வு அற்றது,வளியின்றி வாழ்வு அற்றது,அனலின்றி வாழ்வு அற்றது, ஆகயினால் எது எதை சார்ந்து பிறப்புற்றதோ அது அதிலிருந்தே பிறப்புற்றது. மண்ணெதினால் பிறப்புற்றது என கேட்க்கில் அது உருவானதல்ல,நிலையானது. நிலையானது மாறுபாடுகளுக்குட்பட்டு உருமாற்றம் கொண்டு பலவாக திகழ்கின்றது.உயிரானது பலவாக தோற்றமுறுவதை போல உருவானதும் பலவாக தோற்றமுறுகின்றதுவாம் Hseija Ed Rian Lama Dhamo மனமின்றி ஒன்றுமில்லை, அதனதின் மனம் அதனதின் காரணி.நம் உடல் உடலாக உருவாக மனமும் ஒரு காரணி.இங்கே முப்பொருட்கள் விலங்க காணலாம், இயற்கை அணுத்துகட்கள்,அதன் உட்படு உயிர் அறிவாற்றல்,அதனுட்படு மனமெனும் காரணி. இவை மூன்றையும் அகத்தியர் பெருமான் சொல்லும்போது அவர் இயல்புக்கு தகுந்தபடி,”உடலுயிரும் பூரனமும் மூன்றுமொன்று..அப்பனே உலகத்தில் சிறிது ஜனம் வெவ்வேறென்பர்” என பாடும்பாடல் நினைவுக்கு வருகின்றது Hseija Ed Rian இவை மூன்றும் அனாதி வஸ்த்துக்கள் தாம், ஒன்றுடனொன்று இயைந்து மலர்ந்துள்ளன.உயிரின்றி உடலில்லை, உயிரறிவின்றி மனமில்லை என சேர்ந்தே ஒழுங்குபட தத்தம் கரும வினைபயனாற்றலின் தன்மைக்கொப்ப இயக்கமுற்றிருக்கின்ரன இந்நிகழ்வுகள் அனைத்தும். மனமானது இவ்வண்ணம் பல்லாயிரம் கோடி அண்ட தொகுப்புகளினூடேயும் தனித்தும் சேர்ந்தும் ஒருக்கால் பலவாக திரிந்தும் விலங்குகின்ரது