Sunday, December 4, 2022
சிவோஹம்
சிவோஹம் =====
சிவவும் அஹவும் இருக்கிறது என பொருள்.
சிவத்துக்கு அகம் பின்னாடி சேர்ந்து இருக்கிறது தெரியலே...
அகத்துக்கு சிவம் முன்னாடி சேர்ந்திருக்கிறது தெரியலே
வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.
ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.
இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .
“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”
‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==
(காகபுசுண்டர் உபநிடதம்)
--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
நற்றாள் யார்?
நற்றாள் யார்? ====
வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்… னம்மிலுள்ள தெய்வீகமலையை, ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன்.
னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை "பிரம்மமுடி" என்றும் சொல்வதுண்டு.
முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற "அ" "ஆ" முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்," அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை, ஹரினமோந்துசிந்தம்" என்று சொல்லி கொடுப்பதினாலேயே "னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம், அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்" என்று தெரிகிறது.
------- மெய்வழி சாலை ஆண்டவர்கள்
அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல்
இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்... அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை. இப்படி “இவ்விடுதலையே “வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
-- நன்றி. ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள்
அறியோம் நற்றாள்கள் ஆதியே துணை
ஆதியை அறிய குருவே துணை
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் =
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் ===
நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும்
அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!? எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன்.
தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன்.
எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம்.
---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
யார் இந்த நந்தி??
யார் இந்த நந்தி?? ====
1) பேசும் எழுத்தொடு பேசா எழுத்துறில் ஆசான் பரா நந்தியாம்..
2) எட்டிரண்டு ஒன்றுவது வாலையென்பார் இதுதானே பரிதிமதிசுழுனையென்பார்...
3) அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப்பதத்துள் எனும் திருமந்திர பாடல்...
4) நந்திகொலு கண்டவனே ஞானியாவான் நடுவணையை கண்டவனே கற்பதேகி
5) விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி இருந்தான் கொலுவாகி சிந்தை தெளிந்து மகாரம் வைத்தால் அந்த சீமானை காணலாம் ஞானபெண்ணே...
6) எட்டொடே ரெண்டையும் சேர்த்து எண்ணவும் அறியேன் எனும் வள்ளல் பாடல்.
இவற்றை காண இவை அனைத்தும் ஒரு பொரு்ளை தான் குறிக்கின்றன என தெரிகிறது.
நந்திகண்டால் வாதம் காணும் எனும் மற்றோர் பாடலும் நமக்கு நந்தியை தான் முதலில் அறியவேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றன.
யார் இந்த நந்தி??
மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்
மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்=====
உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உணர்ந்தீர்களானால் அடுத்த வாசல் திறக்கும்.
சாலை ஆண்டவர் சொல்லுவது போன்ற "அகர வாசல்". இல்லையெனில் பிராணாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம்.
சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிராணன் என்பனவற்றிலேயே முடிந்து விடும். ஜீவனை எட்டாது. ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் கிடையாது.
உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
வெட்டவெளி "ஒன்றுமல்லாதது" என்பது மனதின் கற்பனை. ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை.
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே .-திருமந்திரம்
--- அனந்தகோடி நமஸ்காரங்கள் அண்ணா "குருவின் அடிபணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும்
வேறொவருக்கு எட்டும் புஷ்பம் வெட்ட வெளி சாதனை
வேறொவருக்கு எட்டும் புஷ்பம் வெட்ட வெளி சாதனை ======
😂😂😂😂😂
சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்தி கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்ண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..
ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தி வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான்..உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.
அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும்.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
===🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺
நான்
நான்" இருப்பதினால் மனம் என இருக்கிறது. "நான்" என்பது தான் மனம் என மலர்ந்திருக்கிறது... எப்போது "நான்" இல்லை என ஆகிறதோ.. அப்போது மனம் இல்லை என்றாகிறது. மிஞ்சுவது அறிவு மட்டுமே.. ஞானசொரூபமான வஸ்த்து.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
‘நான்..நான்” என கொண்டாடி அபிமானிக்கும் இந்த உடல் உயிர் இரண்டும் ”‘நான் அல்ல”.
“நான் அல்ல” என மறுக்கும் பொருளாக இருக்கும் இவை இரண்டும் மெய்யாகவே மெய்யாகவே சிவசக்தி சொரூபமான மெய்மை கோலம். ஆதி அனாதியான சொரூபம். அறிவு கெட்டு “நான்” என சொல்கிறோம். இருப்பது “அச்சொரூபமே”. என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்., நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். ஆமென்.
சத்விசாரம்
தோத்திரம் செய்வதினால் கோடி பங்கு உஷ்னத்தை பெற்று கொள்ளலாம் எனவல்லவா வள்ளலார் சொல்லி இருக்கின்றார்... ஏன் தோத்திரம் செய்யவேண்டும்? தோத்திரத்தினால் எப்படி சுத்த உஷ்னம் உண்டாகும் என அறியவேண்டாமா?..
."சாலை ஆண்டவர் சொல்லுவதை பாருங்கள்,”
"வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்துவாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம். அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."
"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."
"மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது. செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில், துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது."
செவிக்கு உனவு என்றால் சும்மா பாட்டுபாடிகிட்டு இருக்கிறதுவல்ல ஐயா.... அது வேற சங்கதி உண்டு. சும்மா பாட்டு பாடுறது என்றால் பெந்தேகொஸ்த்துகாரனும் தான் பாட்டுபாடி ட்ரெம் செட் எல்லாம் அடிச்சுகிட்டு அல்லேலூயாண்ணு கூட்டகோரஸா பாடிகிட்டு இருக்கானே, அவனுக்கு என்ன அடக்கமா கிட்டபோகுது இல்லியே?..அது ஏன்? அவனுந்தான் தோத்திரம் பண்ணிகிட்டு சதா இருக்கானே, அவனுக்கு ஏன் முக்தி கிடைக்கலேண்ணு ஆலோசிக்கவேண்டியது இருக்கல்லவா?.. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் எனவல்லவா வள்ளுவநாயனார் பாடிகிட்டு போனார், அல்லவா.. அப்ப நாமளும் அடக்கத்தை அறிந்து அடங்கவேனும் அல்லவா.. அதற்க்கு அடங்கும் தலம் அறியவேண்டுமல்லவா.. இடம் அறிந்து கொள்ளாமல் எங்க போயி அடங்குறதுக்கு?...கண்டிப்பாக ஆரிருள் உய்த்துவிடும்.
சைவ சித்தாந்தத்தில் திருவாசகம் முற்றோதுதல் ஓதலாகத்தான் இருக்குமோ?
ஓதுவது எல்லாம் அறிந்து ஓதாவிடில் அது திருவாசகம் ஆனாலும் சரி திருவருட்பா ஆனாலும் சரி சும்மா பாட்டு மட்டும் தான் நடக்கும்... ஈசன் சேவடி சேராது, இறைவன் கேட்க்கமாட்டான். இறைவன் கேட்க்க பாடுவதே பாட்டு. அதற்க்கு தன்னுக்குள் இறை இருக்கும் தலம் கணு அந்த இறைவனிடம் பாடி தோத்தரிக்கவேண்டும். அவர் கிட்ட பாடாம அடுத்தவன் வீட்டுல போயி பாடிகிட்டு இருந்தா அவருக்கு என்ன லாபம் நமக்கு என்ன லாபம்?.. செத்து தொலையவேண்டியது தான்...
இதை தான் கிறிஸ்த்து சொல்லுவார், “நீங்கள் என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். அவர் சத்தத்தையும் கேட்டதில்லை. பிறகு எப்படி நான் சொல்லுவதை ஏற்றுகொள்ளுவீர்கள்?”
-- ரியான் அய்யாவின் சத்விசாரத்திலிருந்து.
பரத்தில் விள்ளாதே தலை இரண்டாகும்
பரத்தில் விள்ளாதே தலை இரண்டாகும் ==
அடிமுடிநடுவென்று மூன்று பாகம் அதிலேதான் நடுவாகும் கற்ப்பநேர்மை துடியாகவே திறந்து சொல்லகூடா சொல்லினால் தலைவெடிக்கும் என்று சித்தர் படியாகவே சாபமது போட்டதனாலே பரிவாக சித்தர்களும் சொல்லமாட்டார்..... சொல்லினா தலை வெடிக்கும் என சொன்னதை மக்கள் தலை பொளந்துபோகும்ணு அர்த்தம் கொண்டு பிதற்றி திரிகின்றனர்
சித்தர்கள் யாராவது இதை சொல்லி தந்தால் நம்ம தலை வெடிக்கும்... தலையான அட்சரம் வெடிக்கும் ... வெடிச்சா அண்டகல் சிதறும் .. பொறுக்கிக்கவேண்டியது தான்
அதுதான் அமாவாசியில வருகிற தீபாவளி திருநாள்.. வெடிவெடிச்சு அண்டத்தில் இருந்து கல் சிதறுவது...
-- 🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺
கண்
கண் என்பது அது அனைத்திற்க்கும் மையமாக இருப்பதினால் கண் என புனை பெயர், ஊற்றுக்கண் என சொல்லுவது போல. அதிலிருந்து தான் ஜீவ வெப்பம் கிளம்புகிறது.. அது இரெத்தத்தின் ஊடாய் கலந்து உடம்பு முழுதும் ஜீவனை பிரதிபலிக்கிறது...அது கெட்டுபோகாமல் இருக்க செய்வது உபாயத்தால் ஆகும். உடலில் எங்காவது உஷ்ணம் அற்று போனால் அந்த இடம் முழுதும் மரத்து போய்விடும்., பிறகு அது ஜீவனற்று விடும், உணர்ச்சிக்கு வராது, புலனுக்கு வராது. அப்படி தன்னுக்குளே இருக்கும் அக்கினிக்கு உணவு கொடுப்பதே உண்மை ஹோமம்.
--- ரியான் அய்யா சத்விசாரத்திலிருந்து
Subscribe to:
Posts (Atom)