Sunday, December 4, 2022

நன்றி மறவேனோ மன்னவனே

==நன்றி மறவேனோ மன்னவனே== கருக்குகைக்குளிருக்க கதறி அழுதிருப்பேன் அழுகை வெளி வராமல் அங்கே.... வெம்முமந்த நெருக்கத்திலுமென்றும் நீதான் துணையிருந்தா யெனயறியேன்.... நுரையீரலுமங்கே மூச்சுக்காய் விம்மிநிற்க நீயே அரவணைத்து சுற்றி நின்றாய்...... ஊள்ளங்குமுறி யெழும் அழுகுரலோசையால் அனுதினமுனையே தேடிநின்றேன்.... மன்னவனுந்தன் அருள்திவலையே தான் ஆகாயத்து அணுத்துளிகளாய் பெய்கின்றது..... வானுயர்ந்த உச்சிக்கு குடையாய் மேகங்களை அமைத்து உதவியவனே அருளோய்... மண்பரப்பு வளமாக்கியெந்தன் அரும்பசியாற்றவே அரும்பொறுப்புற்றாய் எந்தையே.... வெய்யலும் சுடாமல் தண்குளிரும் வாட்டாமல் வாஞ்சையுடன் ஆதரவாக நின்றாய்... பூதங்களஞ்சும் பண்பாக கூட்டியிணக்கியிங்கே பூங்காவன மமைத்து வைத்தாயே.... பாவியிவன் இவைமறந்து பாரினிலிறமாந்து நன்றி மறவேனோ மன்னவனே....

கருவில் கலந்த உயிரே

====கருவில் கலந்த உயிரே==== உங்களுக்குத்தான் தெரியும்,தாயின் கருவறையில் தான் நாம் பிறப்பதற்கு முன்னம் இருந்தோம் என.ஆனால் அதற்கு முன் எங்கிருந்தோம் என்றால் தந்தையின் உயிர்துளியில் இருந்தோம் என சில மக்குமங்குனிகள் எழுதி வெச்சிருக்கிறதையும் பார்த்திருக்கிறோம் அல்லவா?.உண்மையில் தாயின் கருவாக நாம் மலரும் முன் தந்தையின் உயிர்துளியாக இருந்திருக்கமுடியுமா என்றால் முடியவே முடியாத விஷயம் அது. தந்தையின் உயிர்துளியானது தாயின் கருமுட்டைக்கு உயிர்தான் கொடுக்கிறது,அது கருவை கொடுப்பதில்லை. தாயின் கருமுட்டையில் கருவாக இருந்தவன் யார் என்றால் “நான்..நான்” எனும் போதத்துடன் இப்போது உயிரோடு இயங்கும் “நீ” தான்.ஒருவேளை உனக்கு கருமுட்டையில் தந்தையின் உயிர்துளி ஊட்டபெறாமல் போயிருந்தால் என்னாகும்?, 27 நாட்களில் உன் “நான்” எனும் வாழ்வு முடிந்து போயிருக்கும்.தாயின் உதிரப்போக்கில் மடிந்து போயிருப்பாய். அந்த கருணை அருளே தந்தையின் உயிர்துளியின் வல்லபம்,அல்லவா?. “நான் நான்” என இருக்கும் போதத்தன்மை ஒருபோதும் இரு பொருட்களில் இருந்து பிறந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும், உன்னில் ஞானம் துளிர்விட ஆரம்பிக்கும்.உண்மையில் “நீ” தாயின் அங்கம், அவளுடன் ஒட்டிப்பிறந்தவன், கருவோடு உருவானவன், அந்த கருவுருவுக்கு தந்தையே உயிர் தாதா, உயிர் வழங்கியவன். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பயன்பாடு தன்மை வெளிப்பாடு நிகழ்கின்றது, அதன்படி செயல்புரிகின்றனர், காமம் ஒரு கண்ணாடி,அவ்வளவுதான். சிருஷ்டியின் பங்கு வேலை ஆரம்பிக்கின்றது.செவ்வனே ஒழுங்குற சிறக்கின்றது. மண்ணிலிருந்து மண்ணோடு மண்ணாகவே தொடர்பில் இருந்த உன் வாழ்வுக்கு ஒரு உயிரேற்றம் நிகழ்கின்றது,மண்ணோடு மண்ணாக வாழ்ந்துகொண்டிருந்த உனக்கு கருவறையில் உயிரேற்றம் என்பது ஒரு வரபிரசாதம்,இதைத்தான் இறைகருணை என்கிறோம்.மண்ணறையின் காரிருட்கூட்டதுட் அறிபுலம் செறிவற்று அந்தகாரத்துட் அல்லோலப்பட்டு மக்கித்திரிந்த உனக்கு ஒரு வாய்ப்பு அமையபெறுகின்றது, அந்த வாய்ப்பினை தந்தையின் சுக்கிலகூட்டத்துட் செலுத்தி வைத்தான் ஆதியிறை அருட்கோலம்.உன் பிறப்பே இறையின் இருப்பு, இறை தோற்ற செறிவு.அதற்க்கு பெயர்கள் எப்போதும் புனை பெயராகவே அமைந்துவிடும்.அதன் இருப்புநிலை அத்தகையது, அத்தன்மையது.அதன் வெளிப்பாடும் அத்தகையது, எங்கெங்கு தேடினும் அகப்படா அணுவுக்குள் அணுவாக அகண்டமாக நிற்கும் நுட்பத்திறம் கொண்டு சதா தனக்கு நிகரில்லா தனியனாக நிற்கின்றது. அந்த உயிர்துளியே உனக்கு தலைவாசலாக, உன் முக்திக்கு வித்தாக திகழ்கின்றது, அதனூடு பிரயாணிப்பாய். ஆதிஉதல் அமையப்பெற்றது தான் அது எனினும் அதனை நீ அறிந்திரா தன்மையினால் அதை விடுத்து பொய்யான மாயமயக்கத்தால் எதையெதையோ போய் கடவுள் என்கின்றாய். உன்னை ஜீவசிருஷ்டியாக சிருஷ்டித்த தன்மையே கடவுள், அதை அடைவதே உன் கடமை.உன்னில் குடியிருக்கும் அந்த இறைதுளியில் கலப்பாய்,நித்தியத்தை அடைவாய்.வேண்டாம் மண்ணோடு மண்ணான இந்த அனித்திய வாழ்வு.மண்ணிலிருந்து விண்ணுக்கு உன் பிரயாணம் அமையட்டும்.

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும் நிழல் என்பது பூத உடலின் விளைவு.எங்கு பூத உடல் இருக்கிறதோ அங்கு நிழலும் கூடவே இருக்கிறது.நாம் எல்லோரும் நிழலை அனுபவிக்கிறோம்,அது இருக்கிறது என்பது உண்மையாக தெரிகிறது.ஆனால் அந்த நிழல் என்பது என்ன மூலகூறுகளால் எந்த வடிவமைப்புடன் அமைக்கபட்டிருகிறது என கேட்டால் என்ன சொல்வது. ஏனெனில் நிழல் என்பது உண்மையிலேயே இல்லாத ஒன்று.அது பூத உடலின் எதிர்வினை எதிர்மறை பிரதிபலிப்பே அல்லவா?. அது போலவே மனம் என்பதை பாருங்கள். மனதை ஒரு பூத உடலாக ஒப்பீடு செய்யுங்கள்,அப்போது அதற்க்கு உருவாகும் நிழலே தான் “நான்” என பிரதிபலித்துகொண்டு சதா மனம் இயங்கும் வேளைகளில் எல்லாம் தென்பட்டுகொண்டு இருக்கிறது.உண்மையில் நிழலானது இருப்பு நிலை கொண்டதுவல்ல. பூதௌடலில் தோன்றும் நிழல் எவ்வண்ணமோ இருப்பு அற்றது,அது போலவே சூட்சும உடலான மனதின் நிழலானதுவே தான் “நான்” எனும் தோற்றம் Mathi நாம் தூங்கும் பொழுது நம் மனம் எங்கே இருக்கிறது? நம் உடல் மனமற்ற நிலையில் அப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது நம் உடல் உண்ட உணவை ஜீரணம் செய்கிறது தேவையில்லாத கழிவுகளை வெளியே தள்ளி விடுகிறது இதற்கு நம் மனம் தேவை படுகிறதா? மனதின் உதவி தேவையில்லாமலே உடல் தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு புத்திசாலித்தனம் உடையது தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் மனம் செயல்படுவதை கவனியுங்கள். நாம் சாப்பிடுகிறோம் அதை எப்படி ஜீரணிக்க வேண்டும் என்று உடல் மனதைக் கேட்பதில்லை.. அந்த வேலையை உடல் மிகச் சுலபமாக செய்து கொண்டு இருக்கிறது .. இந்த உடல் காற்றிலிருந்தும் தனக்கு தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்ள தெரிந்திருக்கிறது மனம் என்ற ஒன்று இல்லாமல் இந்த மரங்கள் செடிகள் விலங்குகள் எல்லாம் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன .. வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தான்தான் காரணம் என்று மனம் சொல்லிக் கொள்கிறதா? அய்யா விளக்குங்கள் Hseija Ed Rian மனம் தன்னைத்தான் சுட்டி ‘நான்’ என்கிறது என புரிந்து கொள்ளாமல் வேறு எதையோ மற்றொரு பொருளை தான் ‘நான்’ என்கிறது எனும் மயக்கம் விடையற்ற தேடுதலுக்கு உத்வேகம் உருவாக்கி தேடி தேடியே தோல்வியை அடைகிறது மனம். Hseija Ed Rian ஏனெனில் மனத்தை தவிர அங்கு மனத்தின்ல் தேடுவதற்க்கு ஒன்றும் இல்லை.அதுவே தான் நானாக இருக்கிறது.இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை தேடுகிறாய் ஞானதங்கமே Hseija Ed Rian பேய் பிடித்த நாய் வருகிறவன் போகிறவன் என எல்லோரையும் கடிக்கும்...அதுபோலவே மனமும் ‘நான்’ யார் என தெரியாமல் தனக்கு கிடைத்ததையெல்லாம் ‘நான்’ என எண்ண ஆரம்பிக்கும்....உடலை நான் என்னும்.உயிரை நான் என்னும்...பிராணனை நான் என்னும் இந்திரியங்களையும் நான் என்னும் Hseija Ed Rian செத்து போனவனுக்கோ கோமாவுக்கு போனவனுக்கோ தூங்குறவனுக்கோ கூட ‘நான்’ இருக்காது Hseija Ed Rian மனம் எங்கும் செல்வதில்லை....இந்திரியங்களுடன் உறவாடும் போது அதை மனம் என்கிறோம்...இருக்கிறது என சொல்கிறோம்...உறவாடாத போது இல்லை என சொல்கிறோம் Hseija Ed Rian மனம் எங்கும் செல்வதில்லை....இந்திரியங்களுடன் உறவாடும் போது அதை மனம் என்கிறோம்...இருக்கிறது என சொல்கிறோம்...உறவாடாத போது இல்லை என சொல்கிறோம் Hseija Ed Rian Mathi சும்மா இருக்கும் போது வரும் எண்ணங்களும் இந்திரிய உறவால் ஏற்பட்ட எண்ணங்களே தான் Navaneethakrishnan Kuppusamy துயில் களைந்து எழும் முன் மெல்ல மெல்ல நான் என்பது உயிர்ப்பு அடைகிறது. கண் முதலான அவயங்கள் இயக்கத்திற்கு வருகிறது

மகார வித்தை

மகார வித்தை ஐயா மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து.. அதுக்கு மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்...... நீங்க சொல்லி இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை.... "மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்”என்பது மூலர் வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம் செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்... துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய குரு கவுட பாதர் விலக்குகிறார்....இங்க துரிய தவம் சொல்லி குடுத்து சமாதி நிலை கிடைக்குதாம்,ஆனா அகாரத்தையும் கண்டதில்லே உகாரத்தையும் கேட்டதில்லை,விந்து நாதம் தெவையே இல்லை...என்னா உலகம் எப்படியாவது நாலு பணம் பாக்கணும் ஆசிரமம் கட்டணும் பயிற்சி வகுப்புகள் நடத்தணும்ன்கிற ஒரே குறிக்கோளிலே குருமார்கள்.....நல்ல சீடர்களை வார்த்தெடுக்கணும் என்கிறகவலை கிடையவே கிடையாது....கொடுக்கிற பீஸுக்கு சமாமான போதனை அவ்வளவுதான்...ஞானம் கிடைச்சச்சு போ.....நல்லா உருப்படும் குருவும் சீடனும்...... அரை மாத்திரை விளக்கம் என்பது குரு பாரம்பரியத்தால் கிடைக்கப்பெறுவது...அப்படி ஒன்று இருக்கிறது என்பது பெரும் ஞானிகளுக்கு தெரிந்தாலும் அதை விளக்கத்தெரிவதில்லை....கேட்டால் அது ரகசியம் என ஓடிவிடுவர்...ஆனால் உண்மை அதுவல்ல....உண்மையில் அரை மாத்திரை என்பது உச்சரிக்கும் தன்மையாகும்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டுவது ஒரு தன்மை...ஆனால் அது நீட்டுதல் இல்லை, ===ம்ம்ம்ம்ம்ம்ம்= என முழங்குவது ஆகும், மற்றொன்று தான் ””””அரை மாத்திரை பிரயோகம்”””,அது தீட்சா சம்பிரதாயம்.....அதுவானது மகாரத்தின்மெல் புள்ளி போடாமல் அர்த்த சந்திரன் போட்டு உச்சரிக்கும் முறை...அது குருவானவர் சீடனுக்கு காதில் உபதேசித்து கருணை பொழியும் முறை...அதுவே அருள் முறையான அமைப்பு.....அதையே வடமொழியில் ஓம் என்பதை எழுதும் போது அதன் மேல் அர்த்தசந்திரனும் ஒரு புள்ளியும் போட்டிருப்பார்கள் நம் ரிஷி முனிவர்கள் தங்கள் கருத்தால் சுட்டிக்காட்டிய ஞான அமைப்பு அது.ஆனால் காலப்போக்கில் உண்மை மறைந்து போனது,நாமும் அரைமாத்திரை பிரயோகத்தை இழந்துவிட்டோம்,ஆனால் கடவுள் கருணை உள்ளவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது...கருணைசெலுத்தவேண்டியவர்களுக்கு அவர் கருணைபொழிய தவறியதில்லை

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து கேள்வி: ஐயா ஆய்த எழுத்து என்பதனை எப்படி உச்சரிக்கவேண்டும்?...”அக்” என்றா அல்லது ”அஹ்” என்றா....அதாவது அஃறிணை என்பதனை. ”அக்றிணை” என்று உச்சரிக்கவேண்டுமா அல்லது ”அஹ்றிணை” என உச்சரிக்கவேண்டுமா?.. தயவு கூர்ந்து ஒலி இலக்கண விரிவுரை தருக. பதில்: ஆய்த எழுத்து "காரணப்பெயரின் தோற்றம்.... தமிழில் ஆய்த எழுத்தாக ‘ஃ’ உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது? உலகில் பேச்சு மொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. ‘அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.  ‘அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.  காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.  ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.  ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை ‘ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். ‘ஆய்த’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்து வகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து, கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரை யாக ஒலிக்கும் பொழுது, ஆய்தக் குறுக்கம் என்ற சார்பெழுத்து ஆகிறது. ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃது, அஃது என்பன போன்று வரும். கஃaது (கல் + தீது), முஃடீது (முள் + தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர் வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தை தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக் கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவது போல் இடித்துத் தாக்கும் அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ‘ஃ’ என்பது போல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக் கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளி யாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ‘ஃ’ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமை யாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது என்று தமிழ்த்தாத்தா. உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கர் மகா வித்துவான். ச. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத் துக்களின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப் பெயர்) பெற்றுள்ளது. நன்றி: அருண்குமார் Hseija Ed Rian அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014).இந்த மூன்று குறளடிகளிலும் கவனிக்கில் ஃ என்பதினை தனியாக ‘அக்’ என உச்சரிக்கமுடியாது.’அஃ’ என முன் உயிர் சேர்த்து உச்சரிக்கவருகிறது..ஏன் ஃ கிற்க்கு தனி ய்ச்சரிப்பு வரவில்லை?.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ”ஃதும் ”பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என ஏன் உச்சரிக்ககூடாது?

எழுத்தும் புள்ளியும்

எழுத்தும் புள்ளியும் மெய்யெழுத்து மேலேயும், ஆய்தம் நடுவிலும் மகரக்குறுக்கம் உள்ளேயும் புள்ளிபெறும், எகர ஒகரம் மேற்புள்ளிபெறும். மாத்திரை (அளபு) கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே (தொல்.7) இது மாத்திரை என்னும் ஒலியின் கால அளவை நுண்மையாக உணர்ந்து கூறிய நுண்ணளவு. இமையென்றது இமைத்தல் தொழிலை, நொடி யென்றது நொடியிற் பிறந்த ஓசையை. தன்குறிப்பின்றி நிகழ்தலின் இமை முன் கூறப்பட்டது. இவ்விலக்கணம் ஒரு மாத்திரைக் குரியது. “மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே’ (தொல்.5) நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர் (தொல்.6) இதனால் ஒரெழுத்து நின்று மூன்று மாத்திரையாக இசைத்தலின்று எனவே பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு. எழுத்துக்களின் ஒலி அளவு மகரக்குறுக்கம் – கால் மாத்திரை பெறும். மெய்யெழுத்துக்கள் - அரை மாத்திரை, சார்பெழுத்துக்கள் - அரை மாத்திரைபெறும். குற்றெழுத்து ஐந்தும் - ஒரு மாத்திரை பெறும். நெட்டெழுத்து ஏழும் - இரண்டு மாத்திரை பெறும் அளபெடை தொழாஅர் - ஒரு மாத்திரை கூட்ட வேண்டும் பெறூஉம் - இரு மாத்திரை கூட்ட வேண்டும் விளி - பல மாத்திரை அளவுபெறும் மாத்திரை அளவுகள் ஒலி அளவைக்குறிக்கும் ஒரு குறியீடாகப் புள்ளி எழுத்துக்களில் சிறப்பிடம் பெறுகின்றன. சிந்துவெளி முத்திரைகளில் அரை மாத்திரையைக் குறிக்க ஒரு பக்கக்கோடும் ஒரு மாத்திரையைக் குறிக்க இரு பக்கக்கோடும் ஆளப்பட்டுள்ளன.23 இஃதொன்றே தமிழ் எழுத்துக்களின் தொன்மைச் சிறப்புக்குச் சான்றாம். புள்ளிக் கணக்கு உயிர்மெய் - க - ஒரு மாத்திரை மெய் - க் - அரை மாத்திரை உயிர் - எ், ஒ் புள்ளியுடன் ஒரு மாத்திரை - எ, ஒ புள்ளியின்றேல் இரண்டு மாத்திரை மகரம் - ம் – அரை மாத்திரை மகரக்குறுக்கம் - உட்புள்ளி கால் மாத்திரை (பண்டைய பகர வடிவுவை வேறுபடுத்த) புள்ளி ஒலி அளவைக்குறைக்கவும் ஒலியை வேறுபடுத்தவும் அமைந்த அறிவியல் நெறியாகும். இச்சீரமைவு தமிழ்மொழிக்கே உரித்தான சிறப்பாகும். பிராமியிலிருந்து வளர்ச்சிபெற்ற மொழிகளில் புள்ளியெழுத்துக்கள் உள்ளன. எனினும் தமிழ் எழுத்துக்களின் இசையையோ, கணக்கையோ அவை கொண்டிலங்கவில்லை. சமற்கிருதம் - +- அம் இதன் குறியீடு ( . ) உயிர் - +: அஹ (அகேனம்) ( : ) இதன் குறியீடு : (இவ்விருபுள்ளிகள்) மெய் - 34 மெய்யெழுத்துக்களில் <. = ங இவ்விரு எழுத்துக்களை < = ட ஈண்டு ஒரு புள்ளி, ங என்ற எழுத்தை வேறுபடுத்திக் காட்டவே. பிராமி கி.மு. 300 பிராமி அராமைக் மொழியின் வழி வந்தது இல்லை. அது இந்தியாவில் தோன்றிய சிந்துவெளி எழுத்துக்களில் வழியில் வளர்ந்த ஓர் உள்நாட்டு மொழி. சிந்துவெளி நாகரிக லிபி திராவிட மொழி சார்ந்தது ஆனபடியால் பிராமி லிபியும் அதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பார் ஹீராஸ்.24 பிராமி நெடுங்கணக்கில் இ – ஃ ம் - இந்நான்கு எழுத்துக்கள் ஈ – : : த - ¤ புள்ளிபெற்றுள்ளன 25 பிராமி எழுத்துக்களில் சிறுகோடு (Dash or horizontel bar) சிறு குத்துக்கோடு (vertical bar) புள்ளி (Dot) சுழி (Circle) ஆகியன இடம் பெற்றுள்ளன. இக்குறியீடுகளைத் தமிழோடு ஒப்பிட்டு நோக்கினால் தமிழின் பண்பட்ட வளர்ச்சி நிலையை அறியலாம். இவற்றுள் எகர ஒகரம் புள்ளி பெற்றும் ஏகாரமும் ஓகாரமும் தனித்தனிக் குறியீடுகளைக் கொண்டும் உள்ளன

வாலையின் அட்சரம் மூன்றாகும்

வாலையின் அட்சரம் மூன்றாகும் வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்டு சொல்பவர் யார்காணும் மேலென்றும் கீழென்றும் மத்திபமும் கூட்டி விரைந்து சொல்லடி ஞானபெண்ணே. விரைந்து சொல்லுவன் மூன்றெழுத்தால் சதம் விரிந்து தானுயிருண்டாச்சு தெரிந்து கொண்டவர் தங்களுக்கா கவலை தீட்சை இதுவல்லவோ ஞானபெண்ணே                                                    ~ கொங்கணர் ஞானகும்மி

மணிஷாபஞ்சகம்

மணிஷாபஞ்சகம் நாத்திகம் இல்லாததை இருக்கிறது போல நினைத்து இல்லை என மறுப்பது;  ஆஸ்த்திகம் இருக்கிறதை இல்லாதது என நினைத்துஇல்லை என ஏற்றுகொள்ளுவது.  இருக்கிறது இல்லாமல் ஆகிடபோவதுமில்லை, இல்லாதது இருப்பதுவுமில்லை; பிரபஞ்சம் இருக்கிறது.பிரபஞ்சமில்லையேல் நாத்திகத்துக்கும் இடமில்லை ஆத்திகத்துக்கும் இடமில்லை;  இருக்கிறதை மறுப்பவன் அஞ்ஞானியாகிறான், இருப்பதை மறுக்காமல் உள்ளிருப்பை அடைந்தவன் ஞானியாகிறான்.அர்த்தமற்றவன் வார்த்தைக்கே ஆயிரம் அர்த்தம் புனைபவன் அஞ்ஞானி.அர்த்தமுள்ள மவுனத்தை அறுத்து புசிப்பவன் ஞானி.

எலும்பும் கபாலமும்

Wednesday, May 2, 2018 எலும்பும் கபாலமும் எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.=திருமந்திரம் Hseija Ed Rian சனாதன சாஸ்திரங்கள் ஒன்றும் இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாது, ஏனெனில் சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என சொல்கிறோம். ஆனால் சிவனுக்கு முன்னே இருந்த ஏதோ எலும்பையும் கபாலத்தையும் அல்லவா அவர் சதா ஏந்தியிருக்கமுடியும் அல்லவா?.அது எந்த விசேஷ எலும்பும் கபாலவும் , யாருடையது Hseija Ed Rian அது அவருடைய தகப்பனாரோடது. Hseija Ed Rian நெற்றியில பூசியிருக்கிற நீறும் தகப்பனாரோடது தான்

மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு

மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு “A monk sits down in the wilderness, at the foot of a tree, or in an empty hut. He crosses his legs, straightens his body, and establishes mindfulPARIMUKHA” ~Sri Buddha). மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு மேலைதுவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்திதுவாமே