Tuesday, November 29, 2022

ரியான் சத்விசாரம்

ரியான் சத்விசாரம்   Home Facebook Page ▼ Friday, November 23, 2018 பிரம்ம வித்தை எனும் உஜூது “பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும் பேரறி வடிமையங் ஙாகும் வாயினில் னாயும் னாசியில் வண்டும் மதுசெவி தனில்விஷப் பாம்பும் ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா மிப்படிக் கென்றுனீ தெளிந்து பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட் பதிபுரு வத்திடை யடிகீழ் வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய் ஊசியின் தமர்வழி யோடிப் பேசரு மூளை மண்டலக் குகைமேல் பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும் வல்லமை யளிக்குமக் கண்ணே ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும் இருதய மலர்விரிந் தெழும்பும்“” (ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்) ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே? பார்! உனை சுற்றி!! பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன? பார்!உனை சுற்றி!! உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ? பார்!உனை சுற்றி!! உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது? பார்!உனை சுற்றி!! உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்? பார்!உனை சுற்றி!! உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ? பார்!உனை சுற்றி!! நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ? பார்!உனை சுற்றி!! பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!

குருவின் வேலை

குருவின் வேலை ஒரு சீடனை பரமபதத்திற்கு ஏற்றும் வரை உள்ளது.இக்கடத்தை நீக்கி அக்கடத்துள் ஆக்கும் செயல் அவர்களுடைய கையில்தான் உள்ளது.அவர்களே வழியும் அவர்களே சத்தியமும் அவர்களே நம்முள் ஜீவனுமாக உள்ளார்கள்.அவரே பரமாத்மா நாம் அனைவரும் ஜீவாத்மா குருவே கண் கண்ட தெய்வம் ஈசனோ அரூபத்தில் உள்ளதால் இந்த ஊனக் கண்கள் கொண்டு காண இயலாது.அந்த ஈசனே ரூபம் தங்கி மானிட பிறப்பெய்து வரும் பொழுது அவரை சற்குரு என்றழைப்பதுண்டு.அவர் லோகத்திற்கு ஒருவர்தான் என்பதனால் லோக குரு என்றும் சொல்வதுண்டு

உஜூது

உஜூது எனும் பிரம்மவித்தை தெரிந்தவனே இதை பதில் சொல்ல தெரிந்தவன். நாசிக்கு வெளியே துண்டாடாமல் நடாத்துவது ,கலை சிறுக்காமல் கவனம் பாய்வது,காரண அக்கினிக்கு பங்கம் வராமல் பாதுகாப்பது ,சுத்த உஷ்ணம் பெருக்கும் வழிமுறை அறிந்து நடப்பது இவ்விதம் பழக்கமே புண்ணியம். == திரு. ரியான் அய்யா

ஆன்மிகம் என்பது?

ஆன்மிகம் என்பது? ஆன்மிகம் என்பது ஆன்மாவை புடம் போட்டு எடுக்கிறது... அல்லாம ஏதோ ஒரு சாதனை சொல்லகேட்டு பண்ணிகிட்டு இருப்பதல்ல.... தன்னுக்குள்ள இருக்கிற ஒவ்வொரு விஷயங்களையும் வெளிகொணர்ந்து பார்த்து அதை புடம் போட தெரியணும்... அப்படித்தான் ஆன்ம இயல்பு உண்டாகும்..... இல்லாம இருந்தா சமூகத்தின் நிழல் தான் ஆன்மாவாக இருக்கும். "தனித்துவம் வரவேண்டுமெனில் பல விஷயங்களை இழக்க துணிவு வேண்டும்.... தன்னை இழக்கும் போதே தன்னை அறியமுடியும்

மந்திர வாசம்

மந்திர வாசம் மந்திரம் மனதை மயக்குமா சொப்பனசுந்தரியே...!!! சுவாசம் என்றால் சு+வாசம்; சு-மந்திரம் வாசம்-மணம்; ஆக சுவாசம் என்றால் மந்திர மணம். இங்க இருக்கிறவங்களுக்கும் அங்க இருக்கிறவங்களுக்கும் சுவாசமும் இல்ல மூச்சும் இல்லை.இவனுக்கு ரெண்டும் தெரியாது. ------------ (சாலை ஆண் குரு) மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்

மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை

மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை மூக்கில் இருக்கிற வளைவு இல்லையென்றால் உனக்கு ஞானம் இல்லை என்பது உனக்கு தெரியுமா என்றால் தெரியாது. -- சாலை ஆண்டவர் அவர்கள் மூக்குமுனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு அறிவழிந்தேன் பூரணமே... "நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே". பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது மூக்கு நுனி என்று அறியாரே மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே? புத்தனுக்கு ஞானம் எங்கே?

ததா+கதா

ததா + கதா "ததா+கதா’’ என்பது இரு வேர் சொல் கூட்டு, "ததா" என்றால் அவ்வண்ணம், அங்ஙனம், அதன்படி என பொருள்படும், "கதா" என்பது அசைவு,நடத்தல், முன்னேறுதல், வெளிப்படுதல் என பொருள். இதில் ‘ததா’ என்பதில் அவ்வண்னம் என சொல்வதில் இருந்து மற்றொன்றை புரிந்து அதன் படி நடப்பவர் என பொருள். “அந்த" மற்றொன்று எதுவெனில்....”””””இவ்வுலகத்திலும், இது போன்று அனேகம் கோடி பிரபஞ்ச கூட்டத்து விண்கூட்ட சங்கமத்துள் திகழும் அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வனைத்திலும் பிறந்து மறைந்து போன அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வுலகத்திலும் மற்றை இவ்வனைத்திலும் பிறக்க இருக்கும் அனைத்து சீவசாலங்களும் ”பரநிர்வாணம்” அடையும் பொருட்டு வர்த்திப்பவர்,என பொருள்.நம்முடைய சாதனை, தியானம், யோகம்,பிரார்த்தனை, செயல் ,கர்மம், வினை போக்கு, வேள்வி, தானம்,தர்மம் என அனைத்தும் இவ்வனைத்து சீவசாலங்கள் உய்யும் பொருட்டு சதா "வழங்கி கொண்டு” இருக்க ‘தான்" அற்று பரநிர்வாணம் சித்திக்கும்

பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்

பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம் ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,தேவன் கட்டளைப்படியே தாங்கள் அறிந்திருக்க வேண்டியதான இந்த மூன்று திருநாமங்களை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதே மெய்

அறிவறிதல்

அறிவறிதல் னம்மை ஈசன் படைத்தான், வேதத்தையும் தந்தான். அந்த வேதத்தில் ஈசன் நாம் நடக்கவேண்டிய நேர் பாதை போட்டு காட்டியிருக்க, அதை விட்டுவிட்டு நாம் தள்ளுபட்ட கடையர்களைபோல விருதாவாய் ஊர் சுற்றி வருகிறோம். வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்….. னம்மிலுள்ள தெய்வீகமலையை,ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன்.னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை “பிரம்மமுடி” என்றும் சொல்வதுண்டு. முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற “அ” “ஆ” முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்,” அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை,ஹரினமோந்துசிந்தம்” என்று சொல்லி கொடுப்பதினாலேயே “னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம்,அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்” என்று தெரிகிறது. வேதத்தின் சரிதம் எந்த காலத்திலுமெந்த பூமியிலும் வெளியாவதில்லை. ஆனால் இறைவனின் தேவகுடும்பம், இந்த பூமியில் உண்டாக்கி நடத்தப் பெறும்போதுதான் அதனுடைய சரிதம் வெளியாகும்.அப்படி வெளியாவதற்க்கு பெயர் முதன் நூல்,முதன் மொழி,புராதன மொழி,பழமொழி,அதை வழிபட்டு நடந்தவர்கள் பேசினதெல்லாம் வழினூல்….படிப்பதாயின் எல்லா அங்ஙங்களும் தோய படிக்கவேண்டும். வாயிற் சொல்லும் ராக ஞானம் செவி கேட்க வேண்டும். செவி கேட்ட பின்னரே மனம் அதை தெரிந்துகொள்ளும். அதன் பிறகுதான் அறிவு உணரமுடியும். வாய் மூடிகொண்டு படிக்கிற பழக்கம்-கிரகிக்கிற பழக்கம் இந்த மெய்ஞான கல்விக்கு ஆகவே ஆகாது. வேதத்திலிருக்கும் முத்துக்களை வரிசையாக எடுத்துவிட முடியாது. ஒரு முத்து இங்கிருக்கும், மற்றொரு முத்து மற்றொரு அள்ளையிலிருக்கும், மற்றொன்று எட்ட முடியாத ஆழத்தில் இருக்கும்.இவ்வாறு பாராதூரமாகிய மறைப்பு ஒளிப்புகளுக்கிடையில் சிதறியிருந்தவற்றை தருமமாக ஞானிகள் திரட்டி சேர்த்து, வேதாந்தமென்று ஓதி வைத்திருப்பார்கள்.அதை வாய்விட்டு படிப்பதால்,கருவி குலங்ஙள் ஒவ்வொன்றும் அதை பருகுகின்றன.அதில் சாந்தியாகிய ஒரு சலாமத் இருக்கின்றது. =சாலை ஆண்டவர்கள்

வேதம்

வேதம் இறைவனால் வகுக்கபட்டது வேதம்..அதை யாரும் கையாலோ மற்ற எந்த உபகரணத்தாலோ எழுத முடியாது. அது தான் வேதம் என யாரும் சொல்ல வேண்டியதில்லை... அதுவே சொல்லும்...ஒளிக்கு சாட்சி தேவையில்லை எங்கிருந்து அறிவு கிடைக்கிறதோ அது வேதம். வேதம் ஒன்று தான், அதை கண்டவர்கள் மட்டும் ஒன்றைத்தான் பேசுவார்கள். காணாதவர்கள் எல்லாம் பலவாறாக பேசுவார்கள். யாரொருவர் பலவாறாக பேசுகிறார்களோ அவர்கள் வேதத்தை கானவில்லை, அவர்கள் பேச்செல்லாம் ஏகதேசம், நிச்சயமான உண்மை அல்ல என்பதே உண்மை. அது எந்த பெரிய ஞானிகள் என நீங்கள் கொண்டாடுபவர்கள் ஆனாலும் சரியே தான். வேதத்தை கண்டவர்கள், அறிந்தவர்கள் என நீங்கள் சொல்லும் வேதங்களை பாருங்கள், அதில் உலகம் இன்ன விதமாக சிருஷ்ட்டிக்கபட்டது என தீர்க்கமாக சொல்லபட்டிருக்கிறதா என்ன?.. உலகத்து படைப்புகள் இன்னவிதமாக சிருஷ்ட்டிக்கபட்டனர் என சொல்லபட்டிருக்கிறதா என்ன?..எங்கே எடுத்து காட்டுங்கள் உங்களுடைய ஞானிகளின் வேதத்தில் இருந்து, சவால் விடுகிறேன். நீங்கள் சொல்லும் ஞானிகள் இதன் உற்பத்தியை சொல்லியிருக்கிறார்களா? பெரிய ஞானிகள் என பீத்தி கொள்வதோடு சரி. அவங்கள் கதை முடிந்து விடுகிறது. இருக்கிறது எனில் எடுத்துகாட்டுங்களேன். கடவுள் நிற்பது அண்ட சராசரங்களின் அளப்பிடமுடியாத வல்லபத்திறதின் பின்னால், அவனுடைய ஆற்றல் மறைந்திருப்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் பின்னால். சொல்லபடுகின்ற எந்த வேதமும் இதை ஆரம்பமாக சொல்லத்தான் செய்கிறது, ஆனால் ஒவ்வொருவேதமும் ஒவ்வொரு விதமாக சொல்லிகொண்டு திரிகின்றன. பலவிதமாக சொல்லிகொண்டு திரியும் வேதங்கள் உண்மைத்தான் சொல்லுகின்றன என எப்படி நிச்சயபடுத்திகொண்டீர்கள் என சொல்லுங்களேன். என்னுடைய நிச்சயம் இவையான வேதங்கள் உண்மையை அறியவில்லை இதுவரைக்கும். இந்த உண்மையை தெரிவிக்காத வேதங்கள் எல்லாம் உண்மையை அறிந்திறாதவை. கற்பனை படைப்புகள். ஏதோ அந்தந்த காலத்துக்கு தக்கபடி மக்களை திருப்திபடுத்துவதற்க்கு தக்கபடி மனித கைகளால், மனித மனத்தினால் ஒப்புக்கொள்ளும் படியாக கற்பனையாக உருவாக்கபட்டவைகளே அன்றி உண்மையை உண்மையென கண்டு இது இன்ன விதமாகத்தான் சிருஷ்ட்டிக்கபெற்றன என அறுதியிட்டு கூற இயலாத வேதங்கள். அவற்றை சுமந்துகொண்டு திரியும் உங்களை போன்ற வேதாந்திகள் இதை வாய் கிழிய பெசினாலும் உண்மை பொய்த்து போகாது. சிருஷ்ட்டியை கூட தெரியாத வேதங்கள் கூறும் முக்தி எப்படியானது ஆக இருக்கும் என சற்று நினைத்துபாருங்கள். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதுக்கு பிறந்தோம், யாரால் பிறந்தோம், எப்போது பிறந்தோம், என கூட சொல்லத்தெரியாத வேதங்கள் அதற்க்கு முன்னே எப்படி முக்தி எதுக்கு முக்தி எப்போது முக்தி எவ்வாறு முக்தி யாரால் முக்தி என விளம்பரம் பண்ணிகொண்டிருக்கின்றன. இது தான் உங்க ஞானமா?. இதைத்தான் ஞானம் என்கிறீர்களா?.எங்கே உங்க ஞானிகள் வேதம், எடுத்து பிரித்து போடுங்கள். ரகசியங்களை கேட்கிறேன், பதில் வேதங்களில் இருந்து வரட்டும், அவை உண்மையை தெரிந்திருக்கின்றன எனில்.... மனிதன் ஏன் விதவிதமான வர்ணங்களில் படைக்கபட்டான் எனும் சின்ன கேள்விக்காவது உங்கள் எந்த வேதமாவது பதில் சொல்லுமா?..அல்லது சொல்லதெரியுமா? ஏன் மனிதனை படைப்பதற்க்கு முன்னரே இறைவன் வர்ணங்களை நிர்ணயித்தான், வேதத்தை பிரித்து பார்த்து பதில் சொல்லுங்களேன், சற்று காத்திருக்கிறேன்