Tuesday, November 29, 2022

மந்திர வாசம்

மந்திர வாசம் மந்திரம் மனதை மயக்குமா சொப்பனசுந்தரியே...!!! சுவாசம் என்றால் சு+வாசம்; சு-மந்திரம் வாசம்-மணம்; ஆக சுவாசம் என்றால் மந்திர மணம். இங்க இருக்கிறவங்களுக்கும் அங்க இருக்கிறவங்களுக்கும் சுவாசமும் இல்ல மூச்சும் இல்லை.இவனுக்கு ரெண்டும் தெரியாது. ------------ (சாலை ஆண் குரு) மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்

மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை

மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை மூக்கில் இருக்கிற வளைவு இல்லையென்றால் உனக்கு ஞானம் இல்லை என்பது உனக்கு தெரியுமா என்றால் தெரியாது. -- சாலை ஆண்டவர் அவர்கள் மூக்குமுனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு அறிவழிந்தேன் பூரணமே... "நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே". பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது மூக்கு நுனி என்று அறியாரே மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே? புத்தனுக்கு ஞானம் எங்கே?

ததா+கதா

ததா + கதா "ததா+கதா’’ என்பது இரு வேர் சொல் கூட்டு, "ததா" என்றால் அவ்வண்ணம், அங்ஙனம், அதன்படி என பொருள்படும், "கதா" என்பது அசைவு,நடத்தல், முன்னேறுதல், வெளிப்படுதல் என பொருள். இதில் ‘ததா’ என்பதில் அவ்வண்னம் என சொல்வதில் இருந்து மற்றொன்றை புரிந்து அதன் படி நடப்பவர் என பொருள். “அந்த" மற்றொன்று எதுவெனில்....”””””இவ்வுலகத்திலும், இது போன்று அனேகம் கோடி பிரபஞ்ச கூட்டத்து விண்கூட்ட சங்கமத்துள் திகழும் அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வனைத்திலும் பிறந்து மறைந்து போன அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வுலகத்திலும் மற்றை இவ்வனைத்திலும் பிறக்க இருக்கும் அனைத்து சீவசாலங்களும் ”பரநிர்வாணம்” அடையும் பொருட்டு வர்த்திப்பவர்,என பொருள்.நம்முடைய சாதனை, தியானம், யோகம்,பிரார்த்தனை, செயல் ,கர்மம், வினை போக்கு, வேள்வி, தானம்,தர்மம் என அனைத்தும் இவ்வனைத்து சீவசாலங்கள் உய்யும் பொருட்டு சதா "வழங்கி கொண்டு” இருக்க ‘தான்" அற்று பரநிர்வாணம் சித்திக்கும்

பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்

பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம் ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,தேவன் கட்டளைப்படியே தாங்கள் அறிந்திருக்க வேண்டியதான இந்த மூன்று திருநாமங்களை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதே மெய்

அறிவறிதல்

அறிவறிதல் னம்மை ஈசன் படைத்தான், வேதத்தையும் தந்தான். அந்த வேதத்தில் ஈசன் நாம் நடக்கவேண்டிய நேர் பாதை போட்டு காட்டியிருக்க, அதை விட்டுவிட்டு நாம் தள்ளுபட்ட கடையர்களைபோல விருதாவாய் ஊர் சுற்றி வருகிறோம். வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்….. னம்மிலுள்ள தெய்வீகமலையை,ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன்.னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை “பிரம்மமுடி” என்றும் சொல்வதுண்டு. முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற “அ” “ஆ” முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்,” அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை,ஹரினமோந்துசிந்தம்” என்று சொல்லி கொடுப்பதினாலேயே “னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம்,அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்” என்று தெரிகிறது. வேதத்தின் சரிதம் எந்த காலத்திலுமெந்த பூமியிலும் வெளியாவதில்லை. ஆனால் இறைவனின் தேவகுடும்பம், இந்த பூமியில் உண்டாக்கி நடத்தப் பெறும்போதுதான் அதனுடைய சரிதம் வெளியாகும்.அப்படி வெளியாவதற்க்கு பெயர் முதன் நூல்,முதன் மொழி,புராதன மொழி,பழமொழி,அதை வழிபட்டு நடந்தவர்கள் பேசினதெல்லாம் வழினூல்….படிப்பதாயின் எல்லா அங்ஙங்களும் தோய படிக்கவேண்டும். வாயிற் சொல்லும் ராக ஞானம் செவி கேட்க வேண்டும். செவி கேட்ட பின்னரே மனம் அதை தெரிந்துகொள்ளும். அதன் பிறகுதான் அறிவு உணரமுடியும். வாய் மூடிகொண்டு படிக்கிற பழக்கம்-கிரகிக்கிற பழக்கம் இந்த மெய்ஞான கல்விக்கு ஆகவே ஆகாது. வேதத்திலிருக்கும் முத்துக்களை வரிசையாக எடுத்துவிட முடியாது. ஒரு முத்து இங்கிருக்கும், மற்றொரு முத்து மற்றொரு அள்ளையிலிருக்கும், மற்றொன்று எட்ட முடியாத ஆழத்தில் இருக்கும்.இவ்வாறு பாராதூரமாகிய மறைப்பு ஒளிப்புகளுக்கிடையில் சிதறியிருந்தவற்றை தருமமாக ஞானிகள் திரட்டி சேர்த்து, வேதாந்தமென்று ஓதி வைத்திருப்பார்கள்.அதை வாய்விட்டு படிப்பதால்,கருவி குலங்ஙள் ஒவ்வொன்றும் அதை பருகுகின்றன.அதில் சாந்தியாகிய ஒரு சலாமத் இருக்கின்றது. =சாலை ஆண்டவர்கள்

வேதம்

வேதம் இறைவனால் வகுக்கபட்டது வேதம்..அதை யாரும் கையாலோ மற்ற எந்த உபகரணத்தாலோ எழுத முடியாது. அது தான் வேதம் என யாரும் சொல்ல வேண்டியதில்லை... அதுவே சொல்லும்...ஒளிக்கு சாட்சி தேவையில்லை எங்கிருந்து அறிவு கிடைக்கிறதோ அது வேதம். வேதம் ஒன்று தான், அதை கண்டவர்கள் மட்டும் ஒன்றைத்தான் பேசுவார்கள். காணாதவர்கள் எல்லாம் பலவாறாக பேசுவார்கள். யாரொருவர் பலவாறாக பேசுகிறார்களோ அவர்கள் வேதத்தை கானவில்லை, அவர்கள் பேச்செல்லாம் ஏகதேசம், நிச்சயமான உண்மை அல்ல என்பதே உண்மை. அது எந்த பெரிய ஞானிகள் என நீங்கள் கொண்டாடுபவர்கள் ஆனாலும் சரியே தான். வேதத்தை கண்டவர்கள், அறிந்தவர்கள் என நீங்கள் சொல்லும் வேதங்களை பாருங்கள், அதில் உலகம் இன்ன விதமாக சிருஷ்ட்டிக்கபட்டது என தீர்க்கமாக சொல்லபட்டிருக்கிறதா என்ன?.. உலகத்து படைப்புகள் இன்னவிதமாக சிருஷ்ட்டிக்கபட்டனர் என சொல்லபட்டிருக்கிறதா என்ன?..எங்கே எடுத்து காட்டுங்கள் உங்களுடைய ஞானிகளின் வேதத்தில் இருந்து, சவால் விடுகிறேன். நீங்கள் சொல்லும் ஞானிகள் இதன் உற்பத்தியை சொல்லியிருக்கிறார்களா? பெரிய ஞானிகள் என பீத்தி கொள்வதோடு சரி. அவங்கள் கதை முடிந்து விடுகிறது. இருக்கிறது எனில் எடுத்துகாட்டுங்களேன். கடவுள் நிற்பது அண்ட சராசரங்களின் அளப்பிடமுடியாத வல்லபத்திறதின் பின்னால், அவனுடைய ஆற்றல் மறைந்திருப்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் பின்னால். சொல்லபடுகின்ற எந்த வேதமும் இதை ஆரம்பமாக சொல்லத்தான் செய்கிறது, ஆனால் ஒவ்வொருவேதமும் ஒவ்வொரு விதமாக சொல்லிகொண்டு திரிகின்றன. பலவிதமாக சொல்லிகொண்டு திரியும் வேதங்கள் உண்மைத்தான் சொல்லுகின்றன என எப்படி நிச்சயபடுத்திகொண்டீர்கள் என சொல்லுங்களேன். என்னுடைய நிச்சயம் இவையான வேதங்கள் உண்மையை அறியவில்லை இதுவரைக்கும். இந்த உண்மையை தெரிவிக்காத வேதங்கள் எல்லாம் உண்மையை அறிந்திறாதவை. கற்பனை படைப்புகள். ஏதோ அந்தந்த காலத்துக்கு தக்கபடி மக்களை திருப்திபடுத்துவதற்க்கு தக்கபடி மனித கைகளால், மனித மனத்தினால் ஒப்புக்கொள்ளும் படியாக கற்பனையாக உருவாக்கபட்டவைகளே அன்றி உண்மையை உண்மையென கண்டு இது இன்ன விதமாகத்தான் சிருஷ்ட்டிக்கபெற்றன என அறுதியிட்டு கூற இயலாத வேதங்கள். அவற்றை சுமந்துகொண்டு திரியும் உங்களை போன்ற வேதாந்திகள் இதை வாய் கிழிய பெசினாலும் உண்மை பொய்த்து போகாது. சிருஷ்ட்டியை கூட தெரியாத வேதங்கள் கூறும் முக்தி எப்படியானது ஆக இருக்கும் என சற்று நினைத்துபாருங்கள். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதுக்கு பிறந்தோம், யாரால் பிறந்தோம், எப்போது பிறந்தோம், என கூட சொல்லத்தெரியாத வேதங்கள் அதற்க்கு முன்னே எப்படி முக்தி எதுக்கு முக்தி எப்போது முக்தி எவ்வாறு முக்தி யாரால் முக்தி என விளம்பரம் பண்ணிகொண்டிருக்கின்றன. இது தான் உங்க ஞானமா?. இதைத்தான் ஞானம் என்கிறீர்களா?.எங்கே உங்க ஞானிகள் வேதம், எடுத்து பிரித்து போடுங்கள். ரகசியங்களை கேட்கிறேன், பதில் வேதங்களில் இருந்து வரட்டும், அவை உண்மையை தெரிந்திருக்கின்றன எனில்.... மனிதன் ஏன் விதவிதமான வர்ணங்களில் படைக்கபட்டான் எனும் சின்ன கேள்விக்காவது உங்கள் எந்த வேதமாவது பதில் சொல்லுமா?..அல்லது சொல்லதெரியுமா? ஏன் மனிதனை படைப்பதற்க்கு முன்னரே இறைவன் வர்ணங்களை நிர்ணயித்தான், வேதத்தை பிரித்து பார்த்து பதில் சொல்லுங்களேன், சற்று காத்திருக்கிறேன்

அறிவறி பாடம்

அறிவறி பாடம் பாடம் -1 இந்த யுகமுடிவு நாளையிலே வருகிற மனுக்கள் எக்குலத்தவராயினும் எம்மொழியினவராயினும் கடைத்தேற வேண்டுமென்றால் கட்டாயம் தமிழை கற்றாக வேண்டும் என்று ஞானகுபேர பேரருள் தேரையர் கால கணக்கறிந்து வலியுறித்தியுள்ளார்கள். ஆச்சப்பா தமிழினுட பெருமை கேளு அப்பனே அகத்தியர்தான் நின்றாரப்பா வாச்சப்பா வடுகருக்கும் ஆகும் பாரு வகையான பிராமணர்க்கும் ஆகும் பாரு காச்சப்பா கன்னடியர்காகும் பாரு கலையான குச்சலியர்க் காகும் பாரு மாச்சப்பா மராஷ்டருக்கும் ஆகும்பாரு மறையான மிலேச்சருக்கும் ஆகும்பாரு பாரப்பா அனைவருக்கும் வேணும்வேணும் பாங்கான க்‌ஷத்திரியர்க்கு வேணும் வேணும் நேரப்பா வைசியர்க்கு வேணும் வேணும் நிலையான சூத்திரர்க்கு வேணும் வேணும் தேரப்பா துலுக்கருக்கு வேணும் வேணும் தெளிவான கலிங்கருக்கு வேணும் வேணும் ஏரப்பா எடுத்திருக்கும் அண்டத்தோர்க்கும் இயலான தமிழதுதான் வேணும் பாரே. பாடம் -2 ஆண்டவர்கள்-; அறிவறி பாடம் முதலிலிருந்து சொல்லுங்க. மேய்வழி வரதராஜ அனந்தர்-;ஆதி துணை ,ஆதியே துணை ,ஆதியை அறிய குருவே துணை என்று ஓத ஆரம்பிக்க... ஆண்டவர்கள்-;அதை நாம் சொல்ல சொல்லவில்லை,முதல் முதலில் திண்ணை பள்ளிகூடத்தில் நீ படித்தாயே,அதை சொல்லு... மெய்வழி வரதராஜ அனந்தர்-;அ ஆ னா ,ஆ வன் னா, இ ஈ னா, ஈ என் னா....... ஆண்டவர்கள்-;என்ன! எல்லாம் “னான்..னான்..” என்று சொல்லுகிறாயே.ஆகவே எல்லா அக்‌ஷரங்களும் னீ தானா?(கேட்டறியாத இந்த அற்புத விளக்க உதயத்தை கேட்டு சபையோர் ஆச்சரியத்தில் மூழ்கி நிற்க) ஆண்டவர்கள்-; அட்சரங்களின் உதயம்.இருப்பிடம் ஆகிய அனைத்தும் மனிதன் தான் என்பதை நம் தமிழில் உள்ள அறிவுஅறிபாடம் நமக்கு உணர்த்துகின்றதல்லவா?. என்ன ஆச்சரியம்! தமிழ் அட்சரங்களின் உச்சரிப்பை எவ்வளவு பொருள் நிறைத்து, என்ன உயர் அறிவை களஞ்சியமாகவாக்கி அமைத்திருக்கிறார்கல் என்று பார். இதுகாலம் வரைக்கும் இந்த நுண்ணிய நுணுகிய மதினிறை விடிவு வெளியாக்கப் பெறவில்லை. “அச்சரமனைத்துமினும் கோடிபல பாஷை மெச்சுமதனுச்சனிலை மேனகையனைத்தும் இச்சைபிறங்ஙீட்டு திருச்சாலையிலலாது பொச்சையுல கோர்க்கது புறம்புமுதுகாமே” என்ற செய்யுளை சபையோர் பாடி தோத்தரித்து மகிழ்ந்தார்கள். பாடம் -3 ஆண்டவர்கள்-; ஞானம் என்பது இன்ன செயல் என்று இன்று நாம் வெளியாக்க போகின்றோம்.ஒரு சாமானை உறை போட்டு மூடியிருந்தால் அது என்ன சாமான்,என்ன வர்ணம்,என்னத்திற்க்காகும்,என்ன மதிப்புடையது என்று விளக்கமாக கண்டறிய முடியுமா?முடியாது.அதை மூடியிருக்கும் மறைப்பை கிழித்து நீக்கிவிட்டு அது இன்னதென்று அதைப்பற்றி நன்றாக அறிந்துள்ளவர்கள் எடுத்து காட்டி பேசினால்தானே,உள்ளிருக்கும் பொருளின் முழுவிவரமும் தெரியும்.அதேபோல,ஞானம் என்ற சொல்லில் ஒரு உன்னத உள்ளமைச் செயலானது மறைத்து வைக்க பெற்றுள்ளது.அதை விண்டு வெளியாக்கினால்தான் தெரியும். ஞானம்=ஞா+னம்;அதாவது “னான்..னாம்” என்று ஆகிகொள்ளுவது.இதுவே வேதத்தின் உட்பொருள்.”னான்..னான்” என்று உன்னுள் இருந்து சதா சொல்லிகொண்டிருக்கும் வஸ்து,”வந்த வேதமாக” திருவுரு தாங்கி,முன்னிலை குருவாக வெளியாகினின்று தன்னை அறிவிக்க,அதாவது உன்னுள் அறியபடாததாய் இருக்கும் ஆத்மாவே குருவுருவாகவந்து தன்னை அறிவிக்க,உன்னை நீ அறிகிறாய்.அதோடு காலமெல்லாம் ஓட்டி பழகி அறிவு விளைவேற்றம் ஏற ஏற,’னான் னாமாகுதல்” கைவரவாகும்.அதனால் மெய் அறிவு சித்திக்கும். பாடம் -4 உன் உன்னதமாகிய நினைவில்”னாம்” இல்லை என்றால் கடைசியில் எமன் தான் அங்கு வருவான்.எமனுக்கு நடுவன் என்று ஒரு பெயர் உண்டு,னடு என்றால் மையம்.அதாவது இந்த பக்கமோ அந்த பக்கமோ சாயாத நீதி எல்லை.ஆகையால் என உஜாரோடு,ஆசான்பால் அன்புமறவாத நினைவில் “இந்த மெய்யின்பால்” ஓட்டி நீ நடந்து வரவேண்டும் என்று எண்ணிப்பார்.இந்த ஜாக்கிரதை சதா உன்னிடம் இருக்கவேண்டும். அன்பானவர்களே, சற்று கூர்ந்து கோர்வையாக்கி “மெய்நிலை” அறிவீர்களாக.புரியாதவர்கல் புரிந்தவர்களை நாடுவீர்களாக. அடியேனின் “ஆதிமெய் உதயபூரண வேதம்” எனும் நூல் கிடைக்கபெற நாடுங்கள்.கீழே குறிக்கபடும் நபர்களை அன்புடன் கேளுங்கள்,இலவசமாக பெற்றோம்..இலவசமாக பெற்றுகொள்ளுங்கள்

வேதம் இருக்கு கொமாரு

வேதம் இருக்கு கொமாரு போன பதிவுல வேதாந்தம்ங்கிறது தானே இருக்கு,அப்ப வேதம்ங்கிறதும் இருக்கணும்லியாண்ணு கேட்டேன். ஆனா பல கொமாருங்க வேதங்கிறது ஒண்ணு தனியா இல்ல, குருநாதரு தான் வேதம்ங்கிறாங்க. அழுகையே வந்திச்சு தெரியுமா?. வேதம்ங்கிறதையே தெரியாம வேதாந்தம் படிச்சுகிட்டு இருக்காங்க கொமாரு...சத்தியமா சத்தியம் கொமாரு...வேண நீயே தான் கீழ கொடுத்திருக்க படத்தை பாரு கொமாரு..குருனாதரே “தமிழ் வேதம்”ங்கிற சாம்ராஜ்யம் இருக்குங்க்றாரு தானே?. அவரு இருக்குங்கிறாரு ஆனா நீ இல்லைங்கிறே..என்ன கொமாரு இது..இது ஞாயமா படுதா என்ன?..நீயே தான் சொல்லேன்...சத்தியமா எனக்கு தான் வேதம் தெரியாது..நீ வேணும் எனக்கு வேதத்த காட்டித்தரணும்...வேதம் படிச்சேயாகணும் கொமாரு...வேதம் தெரியாம வேதாந்தம் படிக்கிற சோலி ஒண்ணும் வேணாம் கொமாரு...அதனால சொல்லு கொமாரு..வேதம் எங்கெ

வேத வேதாந்தம்

வேத வேதாந்தம் ஆதி மெய் உதய பூரண வேதாந்தம் என ஒரு நூல் சாலை ஆண்டவருடையது. சாலை மக்கள் அதை தங்களுட்டைய வேதம் என்கிறார்கள். ஆனால் வேதாந்தம் என பெயரிடபெற்றிருக்கும் நூலை வேதம் என சொல்லி கொண்ட்டிருப்பது எவ்வளவு குதர்க்கத்தனமானது அல்லவா?. வேதாந்தம் என நூலுக்கு பேயரிருப்பதால் அதற்க்கு முந்தின நூல் ஒன்று இருக்கணுமே, அது எங்கே ஏன கேட்டால் முழிக்கிறான்.வேதம் இருந்தா தானே வேதாந்தம் என ஒண்ணு இருக்கும் அல்லவா?, அப்ப வேதம் எது?. எங்க இருக்கு?. ஆண்ட்டவரே தான் ‘வந்த வேதம்”ண்ணு சொல்லுவார், குருபிரான் தான் தூல உருக்கொண்டு வந்த வேதம் ஏன்பார். சரி தான், ஆனால் அசல் வேதம் எங்கே?

ஆதி அமலாண்மை

ஆதி அமலாண்மை மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். ”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்” என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும், அந்த முகத்தில் எத்தனை சாயல்கள்,எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன்,இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது ==யுகவான் சாலை ஆண்டவர்கள்