Monday, November 28, 2022

மூலமதை அறியாட்டால் மூலம் பாரே)

ஆண்டவரே நீர் போகும் முன்னே உமது பிதாவை எனக்கு காட்டித்தாரும் என்றான். அவரோ அவனை நோக்கி, நீ இத்தனை காலம் என்ன்னோடிருந்தும் என்னை அறியாதிருக்கிறாயே. நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம், நீ என்னை கண்டிருக்கிறாய், இருந்தும் பிதாவை காட்டித்தாரும் என்கிறாயே, ‘என்னை கண்டவன் என் பிதாவை கண்டிருக்கிறான்’ என்றார்.”பிதாவும் பிதாவின் மடியிலிருக்கிற குமாரனும் ஒழிய வேறொருவனும் பிதாவை அறியான்” என ஒருவர் சொல்லி எனில் அதை மற்றொருவர் அந்த நிலையில் அடைந்தால் ஒழிய சொல்லமுடியாது. அதனாலேயே, “எனக்கு முன் வந்தவர்கள் திருடர்களும் கொள்ளைகாரர்களுமாயிருக்கிறார்கள்” என சொன்னார். ஆனால் இப்போது நானும் கூட சொல்லுகிறேன்”கிறிஸ்த்துவுக்கு பின் வந்த பலரும் கூட கள்ளரும் கொள்ளைகாரர்களுமாக இருக்கிறார்கள்”."நீ" இருந்த்து நீ வந்தது தந்தை வழியன்று... தந்தை உனக்குள் உயிர்ப்பு ஊட்டினவன் தானே.. "நீ" முதலில் தாயின் அண்டத்தில் அல்லவா இருந்தாய்.. அல்லவோ.. அண்டமாகிய "நீ” தந்தையின் உயிர்ப்பால் உயிரடைந்தாய்.. உனக்குள் உயிர்ப்பு வந்த விதம் இது தானே..சின்னஞ்சிறு முட்டை உயிர்பின்றி அரும்ப, அதற்க்கு தந்தை உயிர்ப்பூட்ட அம்முட்டையாம் "நீ" நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த்தாய்..பிறந்தாய்..அம்முட்டையே இத்தூலமாய் "நீ”. (மூலமதை அறியாட்டால் மூலம் பாரே) அய்யாஉருத்தரிப்பதற்க்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்பதில் வரும் நாதமானதை அறிந்து பற்றிகொள்பவன் உண்மையில் பாக்கியசாலியே...வணங்கத்தகுந்தவனே...அவனே நாதனுமாவான்.

வள்ளலார்

 ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்ளப்படுகிறது. - வள்ளலார்

அத்வைதம்

மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்  இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...

Saturday, November 26, 2022

சித்த வித்தை

மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்  இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...

அட்சரங்கள்

அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம். அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்

தமிழ்

""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.

வாலையை பூசிக்க சித்தனாவாய்

===வாலையை பூசிக்க சித்தனாவாய்=== கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார், வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர். பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம், சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி, அதுவெ பதினெண் மெய். அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம். இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்..... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா? பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது. சின்ன வயசியில சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும். ஒவோருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும். ---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

சிந்திக்க

மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு

தூக்கமும் குண்டலினியும்

=====தூக்கமும் குண்டலினியும்===== ”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம். குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள். ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம். ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம். தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்

==== மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் === நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும் அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!?  எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன். தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன். எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ  அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம். ---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️