Saturday, November 26, 2022

வாலையை பூசிக்க சித்தனாவாய்

===வாலையை பூசிக்க சித்தனாவாய்=== கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார், வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர். பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம், சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி, அதுவெ பதினெண் மெய். அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம். இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்..... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா? பல சங்க இலக்கிய இலக்கணங்கள் எல்லாம் ஆழ்ந்த நுண்ணிய அறிவின் பால் நின்று விளங்குவதே தான் என்பதில் ஐய்யமில்லை. ஆயினும், ஞானியர் போக்கு தனி போக்கு. அவர்கள் தெளிவு என்பது அதீதமானது. சின்ன வயசியில சூரியன் கிழக்கே உதிக்கிறது என தெளிந்து எல்லோரும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அறிவு விருத்தியடையும் போது சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என தெளிகிறோம். அதுபோலவே தான் பல ஞான விஷயங்களும். ஒவோருவரும் அவர்களின் முதிர்ச்சிக்கு தகுந்தபடி கையாளல் செய்வர், அவர்களுக்கு புரிந்தபடி, அவர்கள் ஞானத்தின் விளக்கத்திற்க்கு தகுந்தபடி. அவ்வளவுதான். ஞானம் அதிகரிக்க அதிகரிக்க விளக்கங்கள் அதிகரிக்கும், சிலவேளை முற்றிலும் வேறான ஒரு கோணம் கூட உதயமாகும். ---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

சிந்திக்க

மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு

தூக்கமும் குண்டலினியும்

=====தூக்கமும் குண்டலினியும்===== ”வாங்கும் கலையும் ஒன்றாகும் வழங்கும் கலையும் பன்னிரண்டில்-தூங்கி கழியும் நாலையும் தான் சுழற்றிபிடித்தால் குருவாகும்,“ என்பதி சித்தர் பரிபாஷை. இவ்வண்ணம் தூங்கி இருப்பதால் நான்கு கலைகள் பாழாகும் என்பது தெரிகிறது, அந்த நாலையும் தக்க ஆசானிடம் கேட்டு தெளிவு பெறலாம். குண்டலினி என்பதும் சித்தர்களின் பரிபாஷை, அது மூன்றரை சுற்றாக சுருண்டு கிடந்து தூங்குவதாக சொல்லி இருப்பார்கள். மூன்றரை சுற்று என்பது ஜாக்கிரதை சொப்பனம் சுழுத்தி துரியம் எனப்படும்.குண்டலினீ எனும் பாம்பானது தன்னுடைய வாலையே தன் வாய்க்குள் அடக்கிகொண்டு தூங்குமாம்..அதாவது துரியம் என்பது ஜாக்கிரதைக்குள் இருக்கும்.அதை அறிந்து கொள்ள முதலில் சுழுத்தி எனும் தூக்கத்தை ஜாக்கிரதை எனும் வாயிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், அதன் பின்னால் துரியமும் வெளி வரும். இதனையே “தூங்காமல் தூங்கியே காக்கும் போது “ ஆதி என்ற பராபரையும் பரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே என சித்தர்கள் சொல்லுவார்கள். ஒருவன் இரண்டரை நாழிகை தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடங்கள் ஜீவித்திருப்பான் என வள்ளலார் சொல்லுவதன் மர்ம்மமும் இது தான்.கலை நாலு போகிறதை எட்டில் சேரு என அகத்தியர் சொல்லுவதும் இந்த தூக்கத்தை ஜாக்கிரதையுடன் சேர்க்கும் விதமேயாம்.யோக கிரந்தங்களில் குண்டலினி தூங்கி கிடப்பதாக மறையாக சொல்லி இருப்பது என்னவென்றால் நம்முடைய தூக்கத்தையே ஆகும்.நம்முடைய இந்த நான்கு அவத்தைகளுமே குண்டலினி எனப்படுவது, இதன் விரிவுகளை காகபுசுண்டர் உபநிடதம் போன்ற நூல்களில் விளக்கமாக காணலாம். ஒருவன் ஆன்மீக சாதனைகளில் குரு காட்டிய வழியில் செல்லவேண்டுமெனில் அவன் முதலில் பழக வேண்டியது என்பது தூக்கத்தை களைவதுவே ஆகும்...தூக்கத்தை களையாதவன் ஒருவன் குண்டலினியை எழுப்பிவிட்டென் என சொல்வானாகில் அவன் பொய்யாய் இருக்கிறான் என கண்டுகொள்ளுங்கள்.ஞானிகளுக்கு தூக்கம் இருக்காது, தூங்குகின்றவன் ஞானியாகவும் இருக்கமுடியாது. இது அடையாளம். தூக்கம் மெல்ல மெல்ல கலையும் போது உணர்வு நிலைக்கு ஒருவன் வருகிறான், தூக்கத்தை விடும் போது ஆன்மீகம் ஆரம்பமாகிறது, அவனுடைய சாதனை இன்பம் காண தொடங்கிகிறது, அவனுக்கு விழிப்பு நிலை அதிகரிக்க தொடங்குகிறது, அவன் வெற்றியை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான். இதனாலேயே எல்லா ஆசான்மார்களும் ஞானிகளும் தூக்கத்தை விட சொல்லுகிறார்கள். நன்றி, வணக்கம்

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்

==== மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் === நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும் அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!?  எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன். தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன். எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ  அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம். ---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரத்தை தின்பது  எப்படியெனில் விளக்கம் மூலரே தருகிறார். "நமவெனும் நாமத்தை நாவினில் ஒடுக்கி சிவவெனும் நாமத்தை சிந்தையுள் ஏற்றி....” இப்படி ஒரு மந்திரம் வரும்... இதைத்தான் மென்று தின்னுதல் என்பார்கள்... அஞ்செழுத்துக்களை மூன்றெழுத்தாக்கி , மூன்றை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்றாக்கி ஒடுக்குவது.... பஞ்சாட்சர நாவினில் சொல்லாமல் சொல்லிகொண்டிருப்பதையே மெல்லுதல் என்கிறார், நாவிம் வாயும் அசைந்துகொண்டிருக்கும்... இப்படி மென்று மென்று நம என்பது முதலில் ஒடுங்கும்.... ஒடுங்கும் என்றால் நாவினில் இருந்து விட்டு போகும்... சிவய மட்டும் சிந்தையுள் இருக்கும்.... இப்படி ஜெபம் தொடர தொடர சிவய என்பது சொல்லி சொல்லி சிவ சிவ என ஒடுங்கும்.... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக “மென்று திங்கலாம்”... --- திரு. ரியான் ஐயா அவர்கள்.

னித்தியம் -அனித்தியம் அறிவோம்

===னித்தியம் -அனித்தியம் அறிவோம்===== அறிவானது அறிவற்ற தன்மையில் இருந்து மீண்டு அனேக கோடி கால கர்ம மல பரிபாக நிமித்தம் அனேக கோடி கால அனேக கோடி யோனி பேதங்களாக பிறந்து பிறந்து பரிபாகமுற்று ஒருபோது பரிபாகம் மீண்டும் அற்று கீழ்நிலை மேனிலை என சுழன்று உழன்று முடிவில் மனித உருவறிவு பூண்டு வந்து பிறந்திட்டோம் எனில் இதுவும் அனித்தியமே. முடிவாக தான் மனித தூலம் தரப்பெற்றது எனில் இதன் மாமகத்துவம் சற்று புரியவும்.இப்பிறப்பு நழுவி விடில் அடுத்து மீண்டும் ஒரு மனித தூலம் அமைந்திடும் என இறமாந்திருத்தல் அனியாயம்.ஏனெனில் இனி நீ பிறக்கபோவதில்லை எவ்வுயிராகவும் இவ்வுலகில். நீ பிறவிகளின் பரிணாமத்தில் முற்றுப்பெற்று விட்டாய்.உனக்கு அனேக கோடி தவப்பலனாய் மனிததூலம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வுலகம் போராட்டக்களம்,பரிசும் உன்னிடமே இருக்கிறது,அதை உனக்கு வழங்குபவனும் நீயே தான்.அப்படியான ஜீவபரிசை வாழ்நாள் முழுதும் கொண்டு திரிந்தும் அதன் பலனை அறிவு இழந்து நழுவவிட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை கூட வாய்ப்பு உண்டு,அப்படி பலகோடி மனிததூலம் கொண்டு பரிசினை வெல்லலாம் என கூமுட்டைகளாக இருந்துவிட்டு போக கிடைப்பதே நித்தியம்.பரிசினை வென்று பிறவியின் பயனை நுகர்ந்து பரிபூரணமுற்று போக கிடைப்பதுவும் நித்தியமே தான். அனித்தியம் எனும் பிறவி தோன்றி மறைந்து கொண்டே பல பல யோனி பேதங்களாக சதா நிகழ்ந்து கொண்டிருக்கும். நினித்தியம் எனும் வாழ்க்கையோ முடிவற்றதுவாய் சர்வ காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுவாம். நன்மை புரிந்தவன் நித்தியமான சொர்க்க பலனையும், தீமை புரிந்தவன் நித்தியமான நரக பலனையும் அடைவான்,அவனே தேடி கொண்ட பரிசு அது. சொர்க்கமும் நரகமும் ஒரு போதும் ஒருவனும் அவன் கடந்து வந்த எந்த கோடிகால பிறப்புகளிலும் அனுபவித்தது இல்லை.மண்ணாக மரமாக புல்லாக புழுவாக பிறந்திளைத்த எந்த பிறவிக்கும் சொர்க்கம் நரகம் என கிடையாது. சொர்க்கமும் நரகமும் மனிதனாக பிறந்தவர்களுக்கு மட்டும் நித்தியமாக வகுக்கப்பட்டுள்ளது.அனித்தியத்தில் இருந்து நித்தியத்துக்கு புகப்பெறுபவன் மனிதன் மட்டுமே. ஏனைய யோனிபேத பிறப்புகளுக்கு இல்லை. நித்தியத்தில் எத்தகைய நித்தியம் வேண்டும் என்பதை போராடி பெறுவாய்....னித்தியமான சொர்க்கமோ...அல்லது நித்தியமான நரகமோ. தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்

சாவு பொய்யாச்சே என்பது மெய்=

===சாவு பொய்யாச்சே என்பது மெய்==== மனுஷன் நரனாக பிறந்து அறிவு மாணிக்கத்தை பெற்று தேவராகணும் எங்கிற யோசனை அருமை தான் ஐய்யனே, ஆயினும் சற்று சந்தேக நிவர்த்தி வேணுங்கிறேன், தெளிவுக்குத்தான்... சாதி மனுக்குலம் எல்லாம் ஜீவன் என்னவென கண்டறிந்து, அந்த அறிவின் தெளிவினால் ஜென்ம சாபல்ய பலன் அடையட்டும் என்பதும் அருமை தானுங்கோ... ஆனால் அழியகூடிய தூலத்தை விடுத்து அழியா சுவர்ண தேகம் பெற்று எக்காலத்துக்கும் மரணமில்லா பெருவாழ்வு வாழ எத்தனிப்பதும் அருமை தானுங்கோ... தன்னில் தனியனாகிய வஜ்ஜிர மாணிக்கத்தை கைபோட்டு அதில் சென்று உட்புகுந்து, அந்த ஜீவமாளிகையில் பரகாய பிரவேசம் பண்ணுவதும் அருமை தானுங்கோ... ஆனால் நிச்சயமாக அறியவேண்டிய மற்றொரு கேள்விக்கு பதில் கூட தெரியவேணுமுங்கோ... ”உன் ஜீவனை நீ உன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திரும்பி பாராவிட்டால், அது உன்னை தூக்கி போட்டு விட்டு அலகை எனும் பிசாசிடம் உன்னை ஒப்படைத்து விடும் என்கின்றார்களே அது எப்படி?.. உன்னுடைய ஜீவனை அலகை பிடித்து கொண்டு எக்கோடி காலத்துக்கும் நரக வாதனைக்கே ஆளாக்குவான் என்கிறார்களே, அது எப்படி?.. உண்மையில் உன் ஜீவனை அலகை பிடித்துகொள்ளுவான் என்பது நிச்சயமான உண்மை தானா என சற்று சிந்தித்து பதில் சொல் செல்வமே!!. ....”நீ” உன் ஜீவனை பாராமல் அசட்டை செய்தால் உன் ஜீவனை அலகை கொண்டு போய்விடுவான் என்கிறார்களே, அப்போது அதே ஜீவனில் ”நீ” போய் குடியிருந்தால் மட்டும் அலகை உன் ஜீவனை கொண்டு போகாமல் உன்னை நித்திய ஜீவமாளிகையில் வைத்திருப்பான் என்கிறது என்ன அறிவு? ”நீ” ஜீவனோடு ஐக்கியமானால் உன்னை அலகை விட்டு விலகிவிடுவானாம், ஆனால் ஜீவனோடு ”நீ” சேராவிட்டால் ஜீவனை அலகை கொண்டு சென்றுவிடுவானாம், அது எப்படி? ஜீவனை விட ‘நீ’ பெரியவனோ?..உண்மையில் அலகை கொண்டு போவது யாரை-உன்னையா அல்லது உன் ஜீவனையா

Friday, November 25, 2022

திருமந்திரம்

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச் சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த எழுத்தே விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே ஆகாச அக்கர மாவது சொல்லிடில் ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவ தறிமினே. அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம் எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே அந்தமும் ஈறும் முதலா னவைஅற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருட மானதே ஆஇன மானவை முந்நூற் றறுபதும் ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும் ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும் ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே. வந்திடும் ஆகாச ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்ப திராசியும் வந்திடும் நாளது முந்நூற் றறுபதும் வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும் கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம் தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம் இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின் கண்டிடும் அப்புறங் காரொளி யானதே காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும் நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம் விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே. வீசம் இரண்டுள நாதத் தெழுவன வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத் தளவு விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில் விரிந்தது விந்து விதையது வாமே விதையது விந்து விளைந்தன எல்லாம் விதையது விந்து விளைந்த உயிரும் விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம் விதையது விந்து விளைந்தவன் தாளே. விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம் விளைந்த எழுத்தவை சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே மந்திரம் சக்கர மானவை சொல்லிடில் தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம் தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே பார்க்கலு மாகும் பகையறு சக்கரம் காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே. அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே கூறிய சக்கரத் துள்எழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை மாரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே. கூடிய தம்பனம் மாரணம் வச்சியம் ஆடியல் பாக அமைந்து செறிந்தடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே காலரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப் பாலித் தெழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டைஉள் நாவில் பகையற விண்டபின் மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி என்றும் இதயத் தெழுந்து நமவே

இல் வாழ்வு

இல் வாழ்வு தூக்குங் காபுஹெ துடரு மேயுமைன் சுழியஞ் சாத்துக்குள்ளே யாகுமே பார்க்கு மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப் பழக்க மலிபுலாமீ மாகுமே காக்குந் தேயும் ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு மெழுத்தைக்காணு முனைக்குள்ளே ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே யடங்குந் தமிழட்சரக் குருவும்பார். இல்லென்ற றெழுத்தைப் பற்றி - இரு வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக் கொல்லன் துருத்திகொண் டூதி - நல்ல கோலமாய் மூலக் குகையை யெழுப்பி வில்லின்மேல் நாணம்பை யேற்றி - வெகு வேகமா யொன்பது வாச லடைத்து அல்ஹம்தில் ஒன்றாகி நின்ற - நந்தம் ஆதியை நன்றாகக் கண்டுகொண் டேனே உச்சிதனிலிருந்து - வுரு வாகி அலிபாகியே நடுவே பச்சிதனிற்றரித்துப் - பல மாகவேஇல்லென்றிருந்கொண்டு வெச்சிதனைக்கடந்து - இல் லல்லாஹூவென்றயெழும்பிநின்று அச்சரமானதுவை - யரு ளாகத்தருந்திருக்கையிதுவே வித்துஞஅ சிலமரமும் வேருமிவை மூன்றும் புத்தி யறிவிக்கப் பூண்டிறைவ - னுற்றுரைப்பான் ஆவென் றதின்பொருளை யார்க்கும் நவிலாதே ஊவதனுக் கப்பாலென் றோதிவிடு - நீயெவர்க்கு பாலுமாம் பாலெரியும் பர்வமெறிந் தாலுனக்குத் தேனுமா மென்றே தெளி . மிக்கசிறி யோர்க்கு மெல்லியர்க்கும் வீணருக்குஞ் சற்குருவி ணுண்மைமொழி சாற்றரிது - மக்கநபி வாகா யெடுத்துரைத்தோர் வான்பொருளைக் கண்டி சாகாமற் செத்தவர்க்கே தாம். அழுக்கறுத்து மெய்யை யறிந்தோர்முன் சென்று சுளுக்கறுத்து நீகேளு சொல்லுவா - ருட்கருத்தில் வஞ்சகத்தை நீக்கி வான்பொருளை யென்றுமவர் தஞ்சமெனக் காட்டுவார் தாம். பொருளொரு பொருட்டு மெல்ல பூமிவிட் டகல்வா ரானா லருளொரு பொருட்டி னாலே யவனியை நோக்கிற் மிருளைவிட் டகல்வா ரில்லென் றிலங்கிய கலிமாக் வெருளதை நீக்கி மேலா சனத்தில்வீற் றிருப்பா ரன்றே. இல்லென நிரம்பி நின்ற வெழுத்தினைக் கமலத் துள்ளே மெல்லவே யிருத்தி வாங்கி வெறுப்பினை யகல நீக்கிச் சொல்லினுஞ் சொல்லா வண்ணந் தோத்திரஞ் செய்வீ ரா கல்பெனும் நயனத் தூடே கதிரவ னொளிய தாமே. மலிவாக வருநாலு ஹறுபேதென் றுணறார்கள் மனங்காபிரா மெலியாத ஹறுபேதென் றுணர்வோர்கள் வெகுஞான வெளிசேர்குவார் வெளிசேரும் படிஞானச் சுடரஞ்சு வெளிகாண்பர் வெகுராசி மொளிசேரு முயிராவ தொருநாளு மொழியாதே யுடலானதி வருநாலு மறையோது கலிமாவி னொளிசேரும் வகையான றெளிவாக விருநாலு ஹறுபான திருநாம மெழுந்தில்லின் கொள்ளுவா ரீமா னுள்ளோர் குறியெல்லாம் புகலக் கேண் ள்ளுவார் நாயன் வைத்த நடுவினி லருளை நோக்கி பிள்ளுவார் கலிமாத் தன்னை விரைந்திரண் டெழுத்தா யள்ளள வெனினும் நீங்கா ரியங்குவார் மூச்சு னோடே. சொல்லுவார் அலியே மேனி சுகமுறும் பாசத் தாலே வெல்லுவான் இபுலீ சும்மை வெருட்டுவான் பயப்ப டாமல் வில்லுநா ணுடம்பு றூஹாய் விழியம்பாற் றொடுதங் கெய் இல்லில்ரண் டெழுத்தொன் றாலே யிறைவனைக் காண லாமே . உடுதுகி லழுக்கை நீக்கு முவமையோ லுணர்ந்து நீங்க ளடுதவ வசனந் தெளபா வாடையை வெளுக்கு மாப்போ லிடுதவங் கமலத் தில்லென் றேற்றிடப் பாவந் தீரும் முடுகுவா றறுஷின் மேலோன் முஹப்பத்தி லாவா ரன்றோ ஆவா ரவனியின்மே லானவறு ஷைக்கடந்து போவார் பிதர்க்கணம் போகாமற்-சீர்பாதஞ் சென்றுதொழு வார்கமலத் தில்லென்ற சத்தநலங் கண்டு தெளிவார்கள் ஹக்காவா-ரென்றுமுள்ள நிச்சயத்தைக் காண்பார் நினைவுகலங் காதிருப்பார் நற்செயலி லேமனத்தைக் நாட்டுவா-ருட்சிவத்தை நாடி யிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடி யிருப்பார் தினம். நாலினை இரண்டுஒன்று ஆக்கி நடுவினில் மெலினின் முறைகண் மூன்றில் விதமதாய் காலினின் மறைய நாலும் கதிரவன் ஒளியே பாலினை உண்டு ஞானப் பதியினில் சேர இல்லல்லா நாலில் ஒன்றை இருத்தியே சொல்லெலாம் இரண்டும் கூட்டிச் சுரு கல்லெலாம் உருகச் சாடும் கனிந்தனே வெல்லலாம் மனத்தை எல்லாம் விண் செய்யினு மேவல் தந்தை செயலினைச் செய்யுந் தா சய்யிரு வகையுங் கூடித் தரித்தொருரூப மாகிப் பொய்யிரு ளகன்று ஞானப் பொருளெனக் குபதே அய்யரென் னுளத்தில் வாழ்க ஆமினல் லாகு ஆமீ சொல்லு மடியவரைத் தூடணித்து மேலோர்கள் கல்பதனுக் குள்ளுறையுங் காவலனே - இல்லெனவ தெல்லா வுயிர்க்குமிர ணப்பொலிவு றஹமத்தோ டல்லா வெனப்பெருமை யானவனே - வல்லானே எண்ணு மெழுத்தி லொளியுருவா யெவ்வுயிர்க்கு மன்னன் சிவமயமென் றாள்பவனே வல்ல பங்கொடு மறையுச்சி பழுத்துமண் ணுல நல்ல றந்தரும் ஞானத்தின் நடுவுச்சி பழுத்தங் கில்லே னும்பொரு ளுடைவதெவ் விடத்திலெ புல்ல னையுவந் தடிமைகொள் ளெவர்க்குநற் கருதி யெவருங்கண் டுணராமலே காய மதில்மாயப் பொருளாயெங்கும் சொருகி வுயிர்களோ டிணங்கிமண்ணில் சுணங்கித் திரிகின்ற பொருளையார்க்கும் உருகிக் கிடக்குநல் லுள்ளன்பினோ டொழித்தங் கிருக்கின்ற வுறும்பொருளே வெருவிப் பயந்துன்னோ டிரந்துகேட்பேன் விதன மறிந்தெனக் குதவிசெய்வாய் மருவிப் பெரும்பிழை வாராமலே வல்லோ னேயுன்ற னடைக்கலமே. இல்லென் றுனையடியே னேத்துதல்கண் டா கல்புமுரு காதோவிண் ககனருரை பேசாரே செல்லுமெங்கள் பிழைபொறுத்துன் றிருவுள சொல்லும் பிறவாதோ துயரறவே துய்யவனே செல்லென்றுலகி லெனைப்படைத்த தீனேயெனது தீ அல்லும்பகலு முனைத்தேடி யடியேன் முறையிட் டரு வெல்லுமுயர்கா தேறாதோ வேந்தாவெனக்கும் வீதியீ இல்லென்றடியேன் புகழ்ந்ததுனக் கேற்றதிலையோ ஆதி யொருவனை மறந்துலகி லனேகம் பிழைகள்செய் திறந்தாலங்கண் நீதி பெறுமுயிர் தனையோ விண்ணோர் நெறிசே ருடலையோ கேட்பார் பின்னே சோதி யருட்படி நரகி லிட்டுச் சுடும்போது படுந்துய ரவனோ நாமோ ஓதி யுணர்ந்தோர்க ளடியேன் சொன்ன வுண்மை யறிந்துரை சாற்று வீரே . ஆதியும னாதியாய் அஹமதுமு ஹம்மது சோதியா யேக சுபசொரூபாய் -நீதியாய் இப்புவியில் வந்துயிர்க் ளெல்லவர்க்குந் நிற்பவரை நெஞ்சே நினை. ஆதிபெரும் பொருளே யழிவில் லானே அன்னை யிலுமன் பானபெரி யோனே சோதியிறை யோனே துவக்கமில் லானே துய்யவனே யெல்லாம் படைத்தமிழிப் போனே நீதிபெற வெங்கு நிரம்பிநின் றோனே நிச்சயப் பொருளே நிகரில்லா ஞானமே ஓதியுணர் வல்லார்க்கு முத்தமப் பொருளே உண்மையா யென்மனத் தழுக்கறுப் பாயே. ஆருமின பேரென்றுனை யறியாமலே நெஞ்சுள் சேரும்புகழ் தேடும்படி தெரியுமுறை யேநீ ஓருமுப தேசமொரு நாளுமென துள்ளம். பாரில்மற வாமலுயர் பாடந்தரு வாயே. --- பீர் முஹம்மது ஸாஹிப்

அண்ட பிண்ட ஜீவன்

அண்ட பிண்ட ஜீவன் பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது...அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக.... கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”...... அதுவே நடுக்கண்...அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்...அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்... ********பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம் - வள்ளலார்