Friday, November 25, 2022

சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா?

== சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா? === உருவ வழிபாடு கொள்ளுவோருக்கு ஒரு எச்சரிக்கை........... நீங்கள் எத்தனை பேர் “அலகை” என்பதனை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?... "அலகை"  என்பது என்ன?.. வள்ளலார் “அலகை” என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள், அது என்ன என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...ப்ளீஸ். ஐயாமார்களே... மனிதன் தவிர ஏனைய ஜீவஜெந்துக்கள் செத்து போனால் நரகத்துக்கு போகுமாண்னு யாருக்காவது ஒரு பதில் இருக்குதா?.. அல்லது சொர்க்கத்துக்கு போகுமா?...நீங்க எல்லாம் சன்மார்க்கிகள் தானே?...அதுக்கு அப்புறம் இந்த விக்கிரக ஆராதனைகாரர்கள் எங்க போவாங்க என சொல்லுகிறேன் “அலகை” என்பதை தெரிந்தவர்கள் கொஞ்சம் பெர்தான் இருக்கிறார்கள்... தெரியாதவர்கள் தான் உருவ வழிபாடு செய்கிறார்கள். பெரும் ஆண்டவர் ”மனிதர்களுக்கு மட்டும்”கொடுக்கும் இரு பொருள்களே “வித்தியா தத்துவம்” எனும் அமானிதம், ரெண்டாவது என்பது “அலகை”... வித்யா தத்துவம் விளங்கினவனுக்கு அலகை இருக்காது... விளங்காதவன் அலகை பொருந்தும்.... உயிர் உள்ளவனுக்கு கொடுக்கப்படுவது வித்தியா தத்துவம், எனில் செத்தவனுக்கு கொடுக்கபடுவது “அலகை”..இதை ஆண்டவனால் அல்லாது மற்றமுடியாது.... இதுவே “செத்தாரை எழுப்புதல்”. வித்தியா தத்துவம் விளங்காத ஒருவனும் அலகையை தவிர்க்க முடியவே முடியாது. அலகை பொருந்தினவன் எக்கோடி காலத்துக்கும் பிறக்கவே மாட்டான்.. அவன் கதை அவ்வளவு தான்..... இது தான் அலகையின் ரகசியம். வித்தியா தத்துவம் பொருந்தினவன் மீண்டும் பிறப்பான்... மேல்நிலை அறிவுடன். எத்தனை பெரிய அந்தஸ்தை உடையவனாலும் சரி, எத்தனை பெரிய விஞ்ஞானியானாலும் சரி. எத்தனை பெரிய ஆன்மீகவாதியானாலும் சரி, எத்தனை பெரிய அரசனானாலும் சரி, அலகையை தவிர்க்க வித்தியா தத்துவம் பொருந்துவது அவசியம். அல்லாவிடில் அலகை தேகம் பொருந்தியே தீரும். சன்மார்க்கி என சொல்லிகொண்டாலும் ஒருவன் உருவத்தை வழிபடுவானாகில் அவன் அலகையை அன்றி எதை பொருந்த முடியும்?... பொருந்தியே தீரும்.அதனாலேஎயே வள்ளலார் தன் உருவம் உருவாக்கபட்டது கண்டவுடனேயே அதை தகர்த்தெறிந்தார்.... ஆனால் சன்மார்க்கம் என சொல்லிகொண்டு அலகையை பூஜிக்கின்றனர். இறைவனின் சொரூபத்தை அன்றி வேறெந்த சொரூபத்தை பூஜிக்கிறவனும் அலகையை தான் பூஜிக்கிறான் என அறிந்துகொள்ளுவதில்லை. இறைவனின் சொருபமோ தயவே வடிவமான அருள்.... அதை சடமான உருவத்தில் காணமுற்படுபவன் அலகையின் தீவிர பக்தன் தான் என்பதில் ஐயம் வேண்டாம்.... விஜயகுமார் ஐயாவிடம் கேட்டு பாருங்கள் மேலும் விளக்குவார். பஞ்சபூத்த்தையும் ஏவலாக்கி கொண்டவர்களுக்கு மரணம் ஏது?. அருட்பெருஞ்சோதி என்ற மெய்பொருளை உணர்ந்து தன்தேகத்தை காயசித்தி செய்து அதன்மூலம் பனிரெண்டு வருடம் யோகம் முயன்று அதன மூலம் சொரூப சித்தியை அடைந்து இறையோடு இறை ஆகன்றனர். அந்த யோகத்தை கை கொள்ளவே சமாதி நிலையை மேற்கொள்கின்றனர். யோக சித்தியின் முடிவில் பஞ்சபூதங்களில் ஒன்றை தேர்வு செய்து உருவத்தை அருவமாக்கி சொரூப யிலையை அடைகின்றனர். நாம் சிலாகித்து பேசும் யோகம் பிரணாயாம்ம இது போன்ற நிலையில் நம் உடலில் நடப்பதில்லை. அதை தான் ஞானிகள் உளவு என்கின்றனர். அது எங்கே நடக்கிறது என்பதே நாம் அறிய வேண்டிய உளவு அந்த வாசி ஒடுங்கும் இடமான ஆதம்பாதத்தை அறியா தொழுகை ஆற்றில் கரைத்த புளி என ஞானிகள் கூறுவதும் இதனாலே. வாசி எனப்படும் அது அமுதமாய் உள்ளது என உணராமல் மோசம் போனோர் கோடி என சிவவாக்கியர் குறிப்பிடும் அந்த வாசியே அருட்பெருஞ்சோதி. இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ "அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார் ஆ என்பது என்னவென்றும் அஃதறி எளப்படுவது என்னவென்று உணர்வதே ஞானம். சிவலிங்க ரூபத்தை விளக்கும் போது "தாயும் தந்தையும் மருவியது போலவே காணும் அந்த விந்து நாதம் என மனதில் நிலை நாட்டல் நலம் ஒரு சின்ன திருத்தல், லிங்கமானது ஆவுடையில் சேரும் நிலையில் இருப்பதில்லை.... ஆவுடையில் இருந்து வெளிப்படு நிலையில் இருக்கும்...அதாவது லிங்கத்தின் முகப்பு வெளிபட்டுவரும் நிலை..உட்செல்லும் நிலை இல்லை என்பதை கவனிக்கவும் வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்... அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது... ஆனால் விளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி... தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்.... இது பொருந்தினவன் அலகையை கடப்பான்... வள்ளலார் “அற்ப அறிவு” உடைய காலத்தில் நடந்தது வேறு... "பெரிய அறிவு” கொண்டபோது நடந்தவை வேறு... அதை அவரே ஒத்துகொள்கிறார் அல்லவா? ஆதலால் பெரிய அறிவு கொள்ளுதலே முக்கியம்,,அதை விடுத்து சிறிய அறிவினால் சிறிய நிலைகளின் தன்மைகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்... அந்த வித்தியா தத்துவமெனும் அறிவே விளக்கு... விளக்கு என்றால் மறைந்திருப்பதை, அஞ்ஞானமாகிய பெரு இருளை அகற்றும் பொருள்.... அப்படி ஆன்ம விளக்கம் உண்டாகும் என கணிப்பு உருவ வழிபாடில் இருந்து வந்தார் என்பதற்க்கு அதையே கொண்டு நடப்பது எதற்க்கு?... மேல் நிலைகளில் ஏற ஏணி அத்தியாவசியம்... அதற்க்காக மேல் நிலை அடைந்த பிற்பாடும் யாராவது ஏணியையும் சுமந்துகொண்டு திரிவார்களா என்ன? அந்த ஏணிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு எங்காவது வைத்துவிடுங்கள்.. அதையே சுமந்து திரிந்தால் தோள்களுக்கு கொடுையான வலிகள் ஏற்படும்.

குருடர்கள் ஞானம் பெற முடியுமா

குருடர்கள் ஞானம் பெற முடியுமா? நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது. இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே. ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம். என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம். கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும் . காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம். முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்...ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது...சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்...அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது...அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்...அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா?..அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்...ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை...உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை...அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது...தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்...அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,..இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்....தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்.... கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா...செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்...அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்...அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும் மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும்.ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா?.அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?

எந்த வித்தை மெய்யானது

===எந்த வித்தை மெய்யானது?=== ஆன்மீகவாதிகள் பொதுவாக பார்த்தால் எதையாவது ஒரு சம்பிரதாயத்தை முன்னிறுத்தியே முன்னேறுவதை பார்க்கிறோம், அந்த சம்பிரதாயம் தான் பெரிய வித்தைண்ணு சொல்லிகிட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.பக்தியில் திளைக்கிறவன் சிவன் தான் பெரிசு அல்லது விஷ்ணு தான் பெருசு அல்லது அம்மன் தான் பெரிசுண்ணு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க.மனம் அவங்களை மயக்கி வெச்சிருக்கும்.ஒருவித போதை போன்றது இது,அவர்களின் இஷ்ட்ட தெய்வ சங்கல்பத்தால் போதை கொண்டு இருப்பார்கள், இதையே பக்தி என்கிறோம்.இதில் தான் மிதம் தீவிரம் என இருவகை.இந்த பிரிவு எல்லா மதங்களிலும் உண்டு.ஒருத்தன் சண்டைக்கு போவான் ,மற்றவன் தான் உண்டு தன்பாடு உண்டு என இருப்பார்கள்.இவர்களுக்கு ஆராதனை செபம் தோத்திரம் இவையே போதும், இவற்றில் அடிமுட்டாளாக இருப்பான், ஞானம் சொன்னாலும் காதுக்கு ஏறாது.இப்படியானவர்களை சமீபிக்காமல் இருப்பது நலம். இரண்டாவது குரூப்பு என்பது சற்று உயர்ந்தவர்கள், கொஞ்சம் கேள்விஞானம் கொண்டவர்கள்.பலவிதமான ஆன்மீக கேள்விகளை தன்னகத்தே கொண்டவர்கள்,ஆனாலும் ஞானம் என்ன என விளங்கி கொள்ள முடியாதவர்கள்,இவர்களிடமும் பக்தி நிறைந்திருக்கும்,ஆனால் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.அரைவேக்காடுகள் என சொல்லலாம்.இவர்களை சொல்லி புரியவைப்பது கடினம்.அதனால் இவர்களிடமும் சமீபிக்காமல் இருப்பது நலம். மூன்றாவது வகையறா என்பது ஏராளம் படித்தவன்,இவன் ஒன்றையும் ஆழமாக செல்லமாட்டான், எல்லாத்தையும் படிப்பான்,பெரிய குப்பைதொட்டியாக இருப்பான்.எல்லா குருமார்கள் கிட்டயும் போவான்,எல்லா சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை என எல்லாம் இருக்கும்,ஆனால் தெளிவு இருக்காது.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். நான்காவது வகை போலிகுரு.ஒண்ணும் தெரியாது,நெறைய வித்தை வகையறாக்கள் இவனிடம் இருக்கும்,எல்லாத்தையும் கூவி கூவி அழைத்து வார் வாரி வித்தைகள் வழங்குவான்.எதுக்கு கொடுக்குறோம், யாருக்கு கொடுக்கிறோம் என கூட அவனுக்கே தெரியாது, ஆனால் குருவாக இருக்க ஆசைபட்டு இப்படியெல்லாம் செய்துகிட்டு இருப்பான்,பனத்துக்கு ஆசைபடுகிரவனும் உண்டு, பணம் வாங்காமலேயே கிடைக்கிறவங்கலை எல்லாம் குட்டிசுவராக்கி கிட்டு இருப்பான். இவனும் சமீபிக்க தகுதியற்றவன். ஐந்தவது வகையானவன் எல்லாம் கற்றவனாக இருந்தாலும் ஒன்றும் புரியாதவனாக இருப்பான், இவனிடம் இருக்கும் அருமையான குணம் என்பது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்திருப்பான்.அதனால் தன்னடக்கம் இவனிடம் இருக்கும்,ஆனாலும் குருமார்கள் முன் மண்டியிட இவன் ஆணவம் இடம் கொடுக்காது.ஆகையினால் இவன் நுணுக்கங்களை அறியாமலேயே போய்விடுவான்.இவனும் சமீபிக்க தகுதி அற்றவன். ஆறாவது வகையானவன் கற்றதெல்லாம் மெய்யல்ல என உணர்வு கொண்டவன், அனைத்து வேத ஆகம சாத்திரங்களுக்கும் மேலாக அறிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்கிறது என புரிந்து கொண்டவன்,ஆனால் ஆன்ம விளக்கம் இன்றி அலைந்து கொண்டிருப்பான். எதை தான் இவனிடம் போய் சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டான்,அலைவதே அவன் கர்மம்.இவனையும் சமீபிக்க தகுந்தவன் அல்ல. ஏழாவது வருகிறவன்,சாதனையாளன்.யராவது சொல்லியோ,அல்லது எங்கிருந்தாவது கேட்டோ,அல்லது எதாவது நூல்கலை கிளறியோ கொண்ட அறிவால் கடினமான சாதனை செய்பவன்,தீவிர வைராக்கியம் கொண்டவனாக இருப்பான், ஆனால் தான் செய்வதை மனைவிக்கு கூட சொல்லமாட்டான்,அப்படி ரகசியம் காப்பவன்.அவன் செய்ய்ம் வித்தையே பெரிசு எனும் எண்ணம் இவனுக்குள் இருப்பதால் மற்றவர்களை பொருட்படுத்தமாட்டான்.எப்போதும் தனிமையில் இருப்பான்,சாதனையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.இவனுக்கும் ஆன்ம விளக்கம் இருக்காது,ஆகையினால் சமீபிக்க தகுந்தவன் அல்ல. எட்டாவது வருகிறவன் ஞானமுட்டாள் என வகைபடுத்தலாம்.தான் செய்யும் வித்தை பரமோன்னதமானது,வித்தையினால் சொர்க்கம் போகலாம், பரமண்டலத்தில் ஏறிவிடுவேன் என பெருமையினால் இருப்பவன்.சிறந்த சாதனையாளனாக இருந்தாலும் இவன் தேடுதலை நிறுத்திகொண்டவனாகையினால் இவனுக்கும் ஞான விளக்கம் இருக்காது.எது சொன்னாலும் உறைக்காது,சாகும் தருவாயில் கூட உபதேசம் ஏற்றுகொள்ள தயங்குவான்.அவன் வித்தையே பரமமானது என முட்டாள்தனமாக இருப்பவன்.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம். ஒன்பதாவது வருபவன் வித்தையை நம்புவான் ஆனால் குருவை நம்பமாட்டான். வித்தை மட்டும் போது ஆன்மவிளக்கம் உண்டாகும் என இருப்பவன்.வித்தையின் நுணுக்கம் ஆழ்ந்த அனுபவம் கொண்ட குருவிடம் இருக்கின்றது என விளங்கிகொள்ள மாட்டான்.குருவை மனுஷதூலம் என கருதி மரியாதை செய்யமாட்டான்.குருவிடம் மறைவான ஞானவிளக்கம் குடிகொள்கின்றது என புரிந்துகொள்ளாமல் வித்தையை மட்டும் வாங்கிகொண்டு ஓடிவிடுவான்.இவனும் கதைக்கு ஆகாதவன். ===(தொடரும்)

பெரிய வித்தை

உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை. இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.

வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு*

*வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு* 1) எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல்(BAD WORD) முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல்(ARGUMENT), சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும். 2)இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் மகா மந்தரம் ஞாபகஞ்செய்தல் வேண்டும். *Hseija Ed Rian:* அப்போ பயம் பூஜ்ஜியம் என வள்ளலார் கூறுவதின் அர்த்தம் என்ன? *Hseija Ed Rian:* பிராணவாயு எந்தவிதத்திலும் செலவாகாமல் இருக்கவேண்டுமெனில் எப்போது பிரானவாயுவை அதிகமாக பிரயானம் செய்யாமல் வைத்திருக்கவேண்டும், அப்படி வைத்திருக்க பிராணனை கட்டுக்குள் வைத்திருக்கும் கலை பயிலவேண்டும் அல்லவா? *Pothigaipriyan Vallalar:* பயம் சுத்தமாக இருக்க கூடாது என்பதே பயம் பூஜ்யம் என்கிறார் நண்பரே இது இச்சிறியேன் சிற்றிவுக்கு விளங்கியது ,மேலும் விளக்கம் இருந்தால் கூறலாம் .நன்றி வணக்கம் *Hseija Ed Rian:* விசேடமாக பார்க்கில், வல்லலார் சொல்வது அப்படி “ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்”...அப்படியாயின் அது ஒரு பழக்கம் தானே அல்லவா?...சகஜமானது இல்லை....பிராணனை பழகவேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?... *Hseija Ed Rian:* “பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கபடாது “ என்கிறார்...அப்படியாயின் கொஞ்சம் பயம் வேண்டும் என்கிறார் அல்லவா?...இது ரெண்டு விதமான பயம் என தோன்றுகிறதல்லவா...? *Pothigaipriyan Vallalar:* பிராணன் அதிக செலவு செய்ய கூடாது என்கிறார் ,ஆனால் அது கலை இயக்கம் என்பதை அவர் கூறியதாக தெரியவில்லை ,ஏன் என்றால் பிராணயாம பயிற்சியை அவர் எந்த இடத்திலும் வலியுறுத்தியதாக தெரிய வில்லை ,ஆதாரம் இருந்தால் கூறுங்கள் .தெரிந்து கொள்ளலாம் *Hseija Ed Rian:* மட்டுமல்ல, புருவமத்தியில் நாடி வழி ஏறுவதும் இறங்குவதும் பிராணாயாமமே....சூட்ச்சுமமானது....தூல பிராணன் அல்ல... *Hseija Ed Rian:* அப்படியாயின், சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டு அவர் உரையாற்றியபோது, சித்தர்கள் மறைத்த உண்மையை குறிப்பிட்டு , மேலும் புருவமத்தியின் உள் நாடிகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி அதி ஏறவும் இறங்கவும் அருள் புரிகிறாரே...அது எதற்க்கு? *Hseija Ed Rian:* கொடிகட்டிக்கொண்டது சன்மார்க்கம் பூரனப்படு அவர் கடிசி காலத்தில் வெளிப்படுத்தியதே...அல்லாமல் அவர் சைவ சமயத்தில் பற்றுதல் கொண்டிருந்தபோது அல்ல என்பதையும் கருத்தில் கொள்வது நலம்... *Hseija Ed Rian:* அதனாலேயே அந்த உபதேசம் “பேருபதேசம்” எனப்படுகிறது....பெரிய ஒரு விஷயம் சொல்ல்ப்பட்டிருக்கிறது.அதனாலேயே பேருபதேசம்...அல்லாது நிறைய கருத்துக்களை கூறியதனால் அல்ல... *Pothigaipriyan Vallalar:* அது அனுபவ கண் விளங்கும் என்கிறார் நண்பரே ,இந்த சிறியேனுக்கு அனுபவம் இன்னும் இறைவன் அளிக்கவில்லை ,தங்களுக்கு அனுபவம் இருந்தால் கூறுங்களேன் ! *Hseija Ed Rian:* நான் இங்கு விசாரிப்பது மேலும் மேலும் நாம் சத்விசாரத்தில் முன்னேறவேண்டும் எனுமவாலால் *Lalitha Arutperum Jothi:* அப்போ இங்கே வள்ளலார் வாசியை பற்றி கூறுகிறாரா? *Hseija Ed Rian:* வள்ளலார் வாசியை பற்றி கூறினார் என யாரும் கூறவில்லையே....”பிராணவாயுவை அதிகம் செலவாகாமல் படி ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்” என்று தான் வள்ளலார் கூறுகிரார்....அப்படி பழகுவது வாசி அல்ல....சற்று விளக்குகிறேன் புரிந்து கொள்வது நலம்..... *Hseija Ed Rian:* அதாவது, அருட்பெரும் ஜோதியெனும் மகாமந்திரத்தை மெல்லன தோத்திரம் செய்தல் வேண்டும்....அதே மந்திரத்தை நாம் 60 டெசிபெல் அளவுக்கு மேலெயும் உரக்க தோத்திரம் செய்யலாம்....அப்படி செய்வதினால் பிராணவாயு நஷ்ட்டம் செய்கிறது...அப்படி செய்யாது அங்கு ஒரு “மெல்லன” எனும் உபயோகம் உருவாக்கப்பட்டுள்ளது....அது போல பிராணவாயுவை அதிகம் நஷ்டம் செய்யாது ஜாக்கிரதையாக பழகும் முறை உண்டு....அது குரு முறை...ஆனால் தக்க முறையில் பெற்று கொள்ல தடையில்லை... *Hseija Ed Rian:* அந்த முறையை வாசி யோகம் என தவறாக உருத்திரித்து கொள்ளவேண்டாம்....”மெல்லன” தோத்தரித்தலே ஒரு பிராண பழக்கமே...அது கொஞ்ச கொஞ்சமாக நீண்ட மூச்சை கொடுக்கும்...முதலில் தோத்திரம் செய்பவர்களுக்கு மூச்சு உள்வாங்கி வலிக்கும்...போக பொக மூச்சு நடை குறையும் ...நீண்ட மூச்சு உருவாகும்....ஓடிக்கொண்டு தோத்திரம் செய்தால் கூட மூச்சு வாங்காது...அப்படி மூசு பரிணமிக்கும்....தோத்திரத்தின் இனிமை அலாதியாகும்.... *Hseija Ed Rian:* எங்க ஊரிலே ஒரு பழக்கம் உண்டு...சிவாலய ஓட்டம் என்பார்கள்...எல்லா சிவராத்திரிக்கும் சிவனடியார்கள் 120 கிமீ தூரம் உள்ள 12 சிவ ஆலங்களை ஓடி வலம் வருவார்கள்..இந்த நடைமுறை அனாதிகாலம் முதல் நிலுவையில் உள்ளது...அந்று குமரிமாவட்டத்திற்க்கு லோக்கல் விடுமுறை...ஏனெனில் அந்த அளவிற்க்கு சிவனடியார்கள் நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பார்கல், கூடவே ஒரு தோத்திரமும் உண்டு....”கோபாலா..கோவிந்தா...சிவனே வல்லபோ....” என்பதாஅகும்....24 மணி நேரம் ஓடி 12வது ஆலயத்தில் சரணடைவர்....இப்படி நீண்ட தூரம் ஓடினாலும் தோத்திரம் நடந்துகொண்டே இருக்கும்....அப்படி ஓடி எங்களுக்கு சஹஜம்... *Hseija Ed Rian:* இப்படி வாய் வழியாக மூச்சு 24 மணி நேரெம் நடந்து கொண்டிருக்கும்....இதுவே ” தோத்திரத்தின் ரகசியம்...இது வாசி கிடையாது....இதன் நுணுக்கமெ “பாகவத பாராயணம்” மற்ரும் “ராமாயண பாராயணத்திலும் உ்ண்டு *Hseija Ed Rian:* இது வாசி வித்தை கிடையாது. *Hseija Ed Rian:* திருமூலர் சொல்வார் “வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல் “ என்று...இதையே கண்ணபிரான் யசோதாதேவியாருக்கு வாயை திறந்து காட்ட 14 உலகங்களும் தெரிந்த கதை.

சிந்திக்க

ம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்//

சிந்திக்க

படிப்பதாயின் எல்லா அங்ஙங்களும் தோய படிக்கவேண்டும்.வாயிற் சொல்லும் ராக ஞானம் செவி கேட்க வேண்டும்.செவி கேட்ட பின்னரே மனம் அதை தெரிந்துகொள்ளும்.அதன் பிறகுதான் அறிவு உணரமுடியும்.வாய் மூடிகொண்டு படிக்கிற பழக்கம்-கிரகிக்கிற பழக்கம் இந்த மெய்ஞான கல்விக்கு ஆகவே ஆகாது. வேதத்திலிருக்கும் முத்துக்களை வரிசையாக எடுத்துவிட முடியாது.ஒரு முத்து இங்கிருக்கும்,மற்றொரு முத்து மற்றொரு அள்ளையிலிருக்கும்,மற்றொன்று எட்ட முடியாத ஆழத்தில் இருக்கும்.இவ்வாறு பாராதூரமாகிய மறைப்பு ஒளிப்புகளுக்கிடையில் சிதறியிருந்தவற்றை தருமமாக ஞானிகள் திரட்டி சேர்த்து,வேதாந்தமென்று ஓதி வைத்திருப்பார்கள்.அதை வாய்விட்டு படிப்பதால்,கருவி குலங்ஙள் ஒவ்வொன்றும் அதை பருகுகின்றன.அதில் சாந்தியாகிய ஒரு சலாமத் இருக்கின்றது.

நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை

நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து. மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும் அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை. ❣ நன்றி: திரு. ரியான் ஐயா ❣

மனமும் வாசியும்

மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், ஜீவனானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...

ஜீவன்

ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி