Thursday, November 24, 2022
பீர்முஹம்மது ஞானமணிமாலை
ஈயில்லாத் தேனை யுண்டே யிரவினிற் றுயிலு மாந்தர்
காயில்லா கனிகள் கண்டே னென்றுரை கழற வேண்டாம்
பாயில்லாக் கப்ப லோடிப் பறக்குமுன் கலிமா தன்னில்
லாயிலா ஹாவை நீக்கி நாலிலொன் றறிந்து கொள்ளே
(பீர்முஹம்மது ஞானமணிமாலை
அரபு எழுத்தும் உடலும்
மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் சுட்டப்படுகின்றன.இதை இல்முல் ஹர்ப் அதாவது அட்சரங்களின் ஞானம் என்பார்கள்.சூபி ஞாநிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள்.செய்குல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு முதல் தக்கலை பீர்முஹமது ஒலியுல்லாஹ் வரை இக்கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவர்களே.இன்சானை குறிக்கும் இந்த ஹர்பில் முதலாம் எழுத்து அலிப் என்பது புருவமத்தியாகும்.பே எனும் இரண்டாம் எழுத்து வலப்புருவமாகும்.தே எனும் மூன்றாம் எழுத்து இடப்புருவமாகும்.ஸே எனும் எழுத்து நெற்றியாகும்.ஜீம் எனும் ஐந்தாம் எழுத்து தலையாகும்.ஹா எனும் ஆறாம் எழுத்து வலத்தோளாகும்.ஹாஆ எனும் ஏழாம் எழுத்து கண்ணாகும்.தால் எனும் எட்டாவது எழுத்து வலது முழங்காலாகும்.த்தால் எனும் ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்.றா எனும் பத்தாவது எழுத்து வலது விலாவாகும்.ஷ எனும் பதினொராம் எழுத்து இடது விலாவாகும்.ஸீன் எனும் பன்னிரெண்டாவது எழுத்து வலது மார்பாகும்.ஷீன் எனும் பதிமூன்றாவது எழுத்து இடது மார்பாகும்.ஸாத் எனும் பதினாந்காவது எழுத்து வலது செவியாகும்.ழாத் எனும் பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்.தொ எனும் பதினாறாவது எழுத்து வலது கரண்டையாகும்.ளொ எனும் பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்.ஐன் எனும் பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்.கைன் எனும் பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்.பா எனும் இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்.காப் எனும் இருபத்தொன்றாவது எழுத்து இடது புறங்கையாகும்.ஹாப் எனும் இருபத்திரெண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்.லாம் எனும் இருபத்து மூன்றாம் எழுத்து தொடைப்பொருத்தாகும்.மீம் எனும் இருபத்துநாந்காம் எழுத்து நெஞ்சு முதல் மூளை வரை ஆகும்.நூன் எனும் இருபத்தைந்தாம் எழுத்து உயிரின் நிலையாகும்.வாவ் எனும் இருப்பத்தாறாம் எழுத்து தொப்புளாகும்.ஹ எனும் இருப்பத்தேழாம் எழுத்து இருதயமாகும்.லாமலிப் எனும் இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்.அம்ஸ் எனும் இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்.அரபு எழுத்துக்கள் மொத்தம் இருபதொன்பது.யா எனும் முப்பதாவது எழுத்து .இதை சூக்கும எழுத்து என்பார்கள்.இந்த முப்பது எழுத்தின் இருப்பிடம் தாந் சிர்ருல் இன்சாந் ஆகும்.
அங்கம் எங்கும் அரபெழுத்து அமைந்திருக்குது !
ஆதி ரப்பின் அற்புதங்கள் மறைந்திருக்குது !
நுக்கதது தலையாச்சி !
நீண்ட அலிபு உடலாச்சி !
ஐந்து பூதங்களின் சங்கமத்தின் மேனியாச்சி !
மறைந்திருக்கிறான் மன்னன் மறைந்திருக்கிறான்!
மண்ணு விண்ணு மாளிகையில் ஒளிந்திருக்கிறான்!
இல்
உச்சி தனிலிருந்து உருவாகி
உச்சி தனிலிருந்து உருவாகி அலிபாகியே நடுவே பச்சி தனில் தரித்து பலமாகவே இல் என்றிருந்துகொண்டு வெச்சிதனை கடந்து இல்லல்லாஹூ என எழும்பி நின்று அச்சரமானதுவை அருளாக தரும் திருக்கையிதுவே
~(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானக்குறம்
அட்சர குரு
#அட்சர குரு
தூக்குங் காபுஹே துடரு மேயுமைன்
சுழியுஞ் சாத்துக்குள்ளே யாகுமே
பார்க்கு #மலிபுலாமீம் ஹேயுந் தவுசில்நிற்கப்
பழக்க #மலிபுலாமீ மாகுமே
காக்குந் தேயும்ஹேயுங் கருதுங்கமலஹூவும் கருவு மெழுத்தைக்காணு முனக்குள்ளே
ஆக்குஞ் சகலகுரு காபும் நூனுக் குள்ளே
யடங்குந் தமிழரட்சரக் குருவும்பார்.
===#பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்
குண்டலிவாசி
குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.
பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.
அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.
சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும். இதையே "சுழி எனும் உட்புகும் வாசல்."
அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன. சீனாவின் "லாவோட்சூ" எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.
அவர்கள்ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,
அது ஒன்று போக்கு எனவும், ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும், விஷமும் எனலாம்.
இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர், ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.
சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும், வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது.
அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது. அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை, தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.
ஒரு சுற்று என்பது ஒரு போக்கு = ஒரு வரத்து சேர்ந்தது. அப்படி ஏழு நாளைக்கு, வாரத்திற்க்கு மூன்றரை போக்கும், மூன்றரை வரத்தும் இருக்கும். மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம்.
இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் "நடு மய்யத்தில்" கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன, அதையே "சுழிமுனை நாடி" என்பார்கள்.
அந்த நாடியானது மூலம் முதல், உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும். சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள், ஆனால் அப்படி அல்ல.
மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது.
இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும். அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி., சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர்,
புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும்.
எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.
இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது "புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.
மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம்.
மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.
அப்படி சாதனை செய்வதினால் "மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.
ஒண்ணு முதுகெலிம்பின் அடிமுதல் மேலோட்டமாக வெளிமுகமாக அமைந்திருக்கும் நாடி, மேலாக கழுத்து பிடரி, பிந்தலை, உச்சி, நெற்றி, என கீழிறங்கி நாசி, நாசிக்கு கீழ் மேலுதடு வந்து உள்முகமாக கீழிறங்கும். எப்படி கீழிறங்கும் என்பது சூட்சுமம், நூல்களில் சொல்லப்படாதது.
இரண்டாவது நாடி மேலிருந்து முன்பக்கமாக கிழிறங்கி கீழுதடு, கண்டம், நெஞ்சு, நாபி, குறி என கீழ் சென்று உள்முகமாக மேலேறும். இதுவும் எங்ஙனம் மேலேறும் என்பதும் சூட்சுமம்.
இந்த இரண்டு சுழற்சிகளை தான் இரண்டு சுற்றுவட்டம் குறிக்கிறது. மேலும் கீழும் இரண்டு புள்ளிகளும் மையமாக இருக்கும்.
~ ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்
லாமலிஃப்
#லாமலிஃப்
அந்த நாளையில் அஹ்மதை துதிக்குமுன் இறையோன் விந்தையாகிய லாமலிபு ஆனதை விரும்பி சிந்தையுற்றெழு மஹ்மூதை படைத்தனன் செல்வம் வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்.
கூசிய வாயு தன்னை குழி நூற்றம்பத்தஞ்சும் பேசிடும் ஞானம் கல்வி பிரித்திடும் வேத சாத்திரம் நேசியாம் நன்னூல் சின்னூல் நிகண்டு அகராதிஞானம் வாசி மேலுறைந்து வாங்கும் இறை அறிவு தானே.
மூலமாங் குழியில் நின்ற முனைசுழி அறிய வேண்டி சாலமாம் யோகம் ஞானம் சார்கலைக் கியானம் பாரில் ஏலவே #அலிபில் நின்றும் எழுந்திடும் லாமை நோக்கி ஆலமே படைத்த துய்யோன் அரும்பொருள் எனக்கீந்தானே.
(#பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானப்பூட்டு)
அலிஃப்
அரபியில அலிஃப் அட்சரத்தை கொண்டு வார்த்தைகள் துவங்காது., அதனால் அலிபுக்கு முன்னால் ஹம்ச போட்டு துவங்குவார்கள். தமிழ்ல ராமன் என துவங்காமல் இராமன் என்று இ சேர்ப்பது போன்றது. இலக்கண சுத்தம்.
இந்த அலிபுக்கு முன் ஒரு ‘னுக்கத்’ உண்டு...அது தான் நாம் உண்மையில் அறியவேண்டியது.
திருமெய்ஞ்ஞான அருளமுதம் வாக்கியம்
திருமெய்ஞ்ஞான அருளமுதம்
வாக்கியம்
ஈசன் உன்னுள் பரிசுத்தமான - மாசு மருவு இல்லாத இடத்தில் குடிகொண்டிருக்கிறானல்லவா? ஆகையால் அவனை - ஈசனைப் பற்றியே உன் செவிகள் சுவைத்துக் களிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈசன் சக்தி உன் ஜீவனில் வளர்ச்சி அடைந்நு பிரகாசிக்கும். னீயும் ஈசனை அடைவாய். இல்லாவிட்டால், செவி உணவு பருகாவிட்டால் - எமனிடம் தான் னீ தள்ளப்படுவாய்.
அதுவுமன்றி னீ செவி உணவு பருகப்பருக ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டும். அப்படி ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டக்கிட்ட - உன் மூச்சு துண்டாடுவது னிறுத்தப்பெற்று உன் சுவாசம் வெளியே போகாமல் தங்ஙும்.
சதா ஈசன் சுவையையே செவிகளுக்கு விருந்நளித்து வந்நால் - சுவாசம் கட்டுப்பட்டு, னிஷ்டைக்கும். தவத்திற்கும் வழி பிறக்கும் . இது உன் ஆசான் தயவால்தான் னடக்க வேண்டும். அவர்களுடைய அன்பைப் பெற்று - உன் பக்கம் அவர்கள் அன்பைப் பாயும் படி செய்து கொள்ள வேண்டும்.
ஒக்கச் சொன்ன அலிபு நடு
”ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”... இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து.
பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்
~ (#பீருமுஹ்ம்மது #ஒலியுல்லாஹ்)
இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது.
ஒரு அலிபு, அதன் இரு புறமும் இரு லாம் சேர்ந்து வரும் அமைப்பு...
சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது. ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை
"மூச்சினோடியங்கி நிற்கும் முடிவிலா பொருளை நோக்கி....” என்ற நான்கு வரிகள். இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது.
❤️ திரு. #ரியான் ஐயா அவர்கள் ❤️
சத்திய அருள் விண்ணப்பம்
******சத்திய அருள் விண்ணப்பம்*******
என்னுடை இறையே, என்னுடை அன்பினுள் அன்பாய் மலர்ந்த வள்ளலே, கருணையே உடலாய் அருளே உயிராய் தயவே மூச்சாய் அங்கிங்கெனாதபடி அங்குமிங்கும் விளங்கும் தாயே, தாயினும் மேலாம் தயவுடைய தயாபரனே, நான் ஒன்று கேட்க தயை புரிவாய் என் புண்ணியனே???/
எங்கெங்கிருப்பினும் என்னென்ன கேட்ப்பினும் அங்கெங்கிருப்ப அவ்வண்ணம் அருள் புரிவோய் தகயோய் எந்னன்று அறிந்து ,அந்னன்று புரியும் வள்ளாலே, நான் கேட்க ஒன்றுமிலையே, கேட்கும் முன்னே அதை நீ அறிந்திருக்கின்றாய் என அறிவோடு அறிந்திருப்பினும் கேட்க துணிகின்றேன் பொறுத்தருள்வாய் மாநிதியே...
எனக்கென வேண்டுவதொன்றிலையே, கேட்கில் இக்குலத்து மானிடரெலாம் உய்யவே கேட்கின்றேன், தந்தையே நின் அருளின்றி எங்ஙனம் இவர் உனை அடைவர்?, நின் தயவின்றி எங்ஙனம் இக்குலம் உனை பெறுவர்?,இத்தகை அறிவே உனை நோக்கி கைதூக்கி விண்ணப்பிக்கின்றது அண்ணலே ஆருயிரே....
காட்டாற்று வெள்ளம் போல் கருமங்கள் கரும வினை தொகுப்புகள், நட்டாற்றில் தவிக்கின்றேன் பெருந்தகையோய், துணையென பற்ற துரும்பதுவும் உதவாதென்றறிவோடறிந்திருக்கின்றேன் தந்தையே, ஆதலாய் சுற்றும் சுழன்று செல்லும் மாயை மயக்கங்களை பற்றாமலே பார்த்திருக்கின்றேன், நிச்சயம் நான் அறிவேன் நீயெனை கைவிடாய்...
எங்கிலும் ஒன்று கேட்க துணிகின்றேன் எந்தையே செவி கேட்ப்பாய்,எத்தனை எத்தனை பேர் முன்னும் பின்னுமாக அடித்துசெல்லபடுகின்றனர், மாபயங்கராமாய் மாயைவெள்ளம் கொடூரமாய் பாய்ந்தோடிகொண்டிருக்கின்றதே..எந்தாய் என்னசெய்வேன் என் குலத்து மக்களெலாம் வீணாய் இறந்துபோகின்றனரே, என் செய்வேன் எந்தாய் ஏதும் அறிந்திலேன் ஏதும் முயன்றிலேன், ஏதும் துணிந்திலேன், ஏதும் வகையிலேன், நீயொன்றே துணையென்றரிந்தேன், துணையோய் தனியனே துணை செய்வாயே..
எத்தனை மாகோடி பாவங்கள் செய்திருப்பினும் எந்தையே அவர்கள் என் உயிர் குலங்கள், என் பிறப்புகள் பலகோடி பிறப்புகளில் எனக்கு உறவு முறைகள், எனக்கு தந்தையாய் சுமந்தவர்கள், என் தாயாய் இருந்து அன்பை பொழிந்தவர்கள், என் உடன் பிறப்புகளாய் இருந்து களித்து பிரிந்தவர்கள், என்னுயிர் நண்பர்களாக வாழ்ந்தவர்கள், என் உயிர் முறைகள் என் உறவு முறைகள், எந்தையே நான் இதை அறிவால் அறிந்து இறைஞ்சுகின்றேன், அவர்களிடமும் உன் பேரருட்கருணை திறன் செலுத்துவாயாக..
என்னிலே எனக்காய் தவம் செய்யில் என்னிறையே என்னிலே ஆணவ மூலவேர் மீண்டும் முளைக்கும் எனவறிந்தே நான் இங்ஙனம் விண்ணப்பிக்கின்றேன், எனக்காய் தவம் ஒன்றும் வேண்டாவே, எனக்காய் பலன் ஒன்றும் வேண்டாவே, என்னிலே தவம் எலாம் என்னிலே தவபலனெல்லாம் எல்லோருர்க்கும் வழங்குகின்றேன் இன்னிறையே, எனெக்கென ஒன்றும் வேண்டாவே, முக்தியும் வேண்டில் அது எல்லோருக்குமே அருள் செய்வாயே...காதுகொடுத்து கேட்கும் என்னிறையே நீயே கேட்கின்றாய்..நீயே அருள் புரிகின்றோய், நீயே தகையோய்..உனையே நம்பி விண்ணப்பிக்கின்றேன்...அருள் காக்கின்றேன்..காக்கின்றேன்..காக்கின்றேன்...என் அழுகை கண்ணீர் ஆற்றோடு கலந்து செல்லாத படி காத்தருள்வாய்..காத்தருள்வாய்..காத்தருள்வாய்....
Subscribe to:
Posts (Atom)