Thursday, November 24, 2022
பீர்
=====பீர்====
‘சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழி அறிந்துயர் துளியொடு அகமுறும் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரளமாய் அஹ்மதின்னிரு பதம் என் அன்புற மனம் மகிழ்ந்து உன்னோடு இரந்த நான் முகம் மலர்ந்தெனை முடுகி வந்து உயர் முறைமை தந்தருள் முதல்வனே=பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்.
அன்றொரு நாள் சொல்லெணா அனேகம் கோடி காலம் முன் றஹ்மத் எனும் பெருங்கடல் ஹயாத்துல் கைபார் என பெயர் கொள்ளுமுன் ஆத்தும மர்ம ஜலக்கடலாக நிறை கொண்டிருந்தது, அது இது என சொல்லெணா பரப்புடன் நிறை விரிந்து பரந்துள்.
அன்று ஆங்கு, “பே”யெனும் ஓர் சொல் உயர்ந்து அலிபை கொண்டுயர்ந்து உயர் “றே’ எனும் சொல்லை சார்ந்து கண்மணியாம் வலம்புரி ‘மீம்” எனும் சொல்லுக்குள்ளாய் அமர்ந்து அஹ்மது முஹம்மதுவாய் மலர்ந்து ”பீர்முஹம்மது” என பெயர் கொண்டது.
”பே” எனும் சொல் அரபு சொல்லாதிக்கத்துக்கு அப்பாற்பட்டு பெர்சிய நாட்டு சொல்லாதிக்கத்துக்குட் பட்டதாகும்.(peer).
தாத்
====தாத்====
தாத் என்றால் அனாதியாவே காரிருளில் உறைந்திருக்கும் எல்லாம் வல்ல பொருள் என பொருள்.
இறைவனே தான் அந்த மறைபொருள் என்பதாகும்.அது எங்கே இருக்கிறதென்றால் மனிதரின் இருதயத்துக்குள்ளே மறைந்திருக்கின்றதாம்.
உன்னுடைய நாவே உன் இருதயம்,அந்த நாவினுள் அடைத்து ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒளிவே தாத்.
மூன்று எழுத்துக்களால் அகில உலகமெலாம் அந்த அருட்கொடையானை போற்றுகின்றன.”ஆதி அலிப் அங்கு அனாதி நுக்கத் சோதி ஒளி வந்து தோன்றுமே” என மெய்ஞான செம்மல் பீருமுஹம்மதிய்யா அதை போற்றுகின்றார்.
”அல்லா...”❤️❤️❤️
பெப்பப்பே
====பெப்பப்பே====
பேயென நூறாயிரம் விண்ணோர் புகழ நின்றவுனை மேல்வெளியங்கீன்றதல்லால் காயிலைகள் பூமரமில்லாது இருளியங்கரிய கானகமங்கீன்றதல்லால் சாகிபுவி லுன்னறை நீ தானுறையுஞ் சட்டையது தானறிய சற்குரென்னுள் ஆவிதரும் நுனியில் விளக்காக விரைந்தோடி நீ வந்தாளுவை யெந்நாளும் அரசே (ஞானபுகழ்ச்சி 383)
பேயிறசூலுல்லா எனும் திருபேரழகான ரூபமா யாவநற் போதவேத நூலினோடஞ்சிலொன்றாய் நின்றவா ஓய்வொரு நாளில்லாமலே பயலுன்னோடிரந்து கேட்பதை தாயிலு முண்மையாகவே கதி தந்தருள் என்றுமாதியே(ஞானபுகழ்ச்சி 343)
பேயோ அலிபோ முதல் வெம்பனியென்று ஓயாமல் வருந்துளி யுள்ளுருவாய் சீனோநூனோ தெரியாதெமக்கும் மாயாமுகநான்கும் வழங்கிறையே (ஞானபுகழ்ச்சி 338)
பேயலிபு சீனுக்கு முன்னோபிறகோ காபதில் விளைந்தெனை ஆளுமிறையே நாய்யடியேன் இவ்வுரை நவில வலனோமுற்று நாவெழுமோ நல்லோர்கள் முன் போயவர்கள் மெய்பதம் பணிந்து அவரெனக்குரைத்த புத்திகொடு உனைதெரிந்து நல் ஆயபுகழாதி தீதாறடியேர்க்கு ஈந்திடுன் காவல்கொண்டேவல் செய்யவே (ஞானபுகழ்ச்சி 377)
சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழியறிந்துயர் துளிகொடே அகமுறுங் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரலமாய் அஹ்மதின்னிரு பதமெனன்புற மனம்கிழ்ந்துன்னோடு இரந்த நான் முகமலர்ந்தெனை முடுகி வந்துயர் முறமை தந்தருள் முதல்வனே (ஞானபுகழ்ச்சி 38)====பெப்பப்பே====
பேயென நூறாயிரம் விண்ணோர் புகழ நின்றவுனை மேல்வெளியங்கீன்றதல்லால் காயிலைகள் பூமரமில்லாது இருளியங்கரிய கானகமங்கீன்றதல்லால் சாகிபுவி லுன்னறை நீ தானுறையுஞ் சட்டையது தானறிய சற்குரென்னுள் ஆவிதரும் நுனியில் விளக்காக விரைந்தோடி நீ வந்தாளுவை யெந்நாளும் அரசே (ஞானபுகழ்ச்சி 383)
பேயிறசூலுல்லா எனும் திருபேரழகான ரூபமா யாவநற் போதவேத நூலினோடஞ்சிலொன்றாய் நின்றவா ஓய்வொரு நாளில்லாமலே பயலுன்னோடிரந்து கேட்பதை தாயிலு முண்மையாகவே கதி தந்தருள் என்றுமாதியே(ஞானபுகழ்ச்சி 343)
பேயோ அலிபோ முதல் வெம்பனியென்று ஓயாமல் வருந்துளி யுள்ளுருவாய் சீனோநூனோ தெரியாதெமக்கும் மாயாமுகநான்கும் வழங்கிறையே (ஞானபுகழ்ச்சி 338)
பேயலிபு சீனுக்கு முன்னோபிறகோ காபதில் விளைந்தெனை ஆளுமிறையே நாய்யடியேன் இவ்வுரை நவில வலனோமுற்று நாவெழுமோ நல்லோர்கள் முன் போயவர்கள் மெய்பதம் பணிந்து அவரெனக்குரைத்த புத்திகொடு உனைதெரிந்து நல் ஆயபுகழாதி தீதாறடியேர்க்கு ஈந்திடுன் காவல்கொண்டேவல் செய்யவே (ஞானபுகழ்ச்சி 377)
சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழியறிந்துயர் துளிகொடே அகமுறுங் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரலமாய் அஹ்மதின்னிரு பதமெனன்புற மனம்கிழ்ந்துன்னோடு இரந்த நான் முகமலர்ந்தெனை முடுகி வந்துயர் முறமை தந்தருள் முதல்வனே (ஞானபுகழ்ச்சி 38)
பேயோ அலிபோ
பேயோ அலிபோ முதல் வெம்பனியென்று ஓயாமல் வருந்துளி யுள்ளுருவாய் சீனோநூனோ தெரியாதெமக்கும் மாயாமுகநான்கும் வழங்கிறையே
சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழி அறிந்துயர் துளியொடு அகமுறும் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரளமாய் அஹ்மதின்னிரு பதம் என் அன்புற மனம் மகிழ்ந்து உன்னோடு இரந்த நான் முகம் மலர்ந்தெனை முடுகி வந்து உயர் முறைமை தந்தருள் முதல்வனே
----------- பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்.
வெம்பனி என்றால் சூரியனே நடுங்கும் வெப்பம் மிகுந்த துளி.பீரப்பா பாடுவர் ‘பருதி நடுங்கும் துளிகொடென் ஆவி அமைத்தோனே” என.இந்த துளிக்கு “ஆஷிக்” என சூஃபிஸம் கூறும்.பிரபஞ்ச உற்பத்தி காலத்தில் இறைவனும் இறைவனுடைய பெருங்கருணையும் மட்டுமே இருந்தன. அந்த கருணைகடலுக்கு றஹ்மத் கடல் என பெயர், அல்லது ஆத்தும மர்ம ஜலக்கடல் எனவும் பெயர்.மேற்படி றஹ்மத்து கடலில் சதா இறைவனுடைய பேரருள் பெருமழையான துளி பெய்துகொண்டிருக்குமாம்.அப்படியான றஹ்மத்து கடலில் கோடானுகோடி கற்பாந்தங்களினூடாக ஒரு மலர்ச்சி உண்டாகுமாமந்த மலர்சிக்கு காரணமானது கடலில் நீரோடு நீராக உறைந்துள்ள தாத்து எனும் தன்மையே.இதையே மஹரிபத்துமாலையில் ‘தாத்து றஹ்மத்து கடல் நிறைந்த ரகசியம் தனை சொல்லக்கேளும்” என பீரப்பா விவரிக்கின்றார்.அந்த தாத்தானது சிபத்து சிபாத்துகளாக விரியும்.அந்த தாத்து விரிந்து அஹமத் என வளரும்,அஹமது பின்னர் முஹம்மதுவாக மலரும்,அதன் விரிவு நிறைய சொல்ல உண்டு.இந்த முஹமதுவை தான் வலம்புரி என்கின்றோம்வலம்புரியான இதற்குள் மேற்சொன்ன ஆஷிக் துளியை உண்டு முத்து உதயமாகும்.இதுவே றசூல்.
‘பே’ என்பது பீர் என்பதில் வரும் முதல் வார்த்தை.அதன் மேல் இருக்கும்’ஈ’ என்பது அலிபு,இதைத்தான் பேயோடு அலிபு சென்றொரு சுழியறிதுயர் துளியொடெ என்பதின் விரிவு.முஹம்மது எனும் வலம்புரியில் புகுந்து பிறந்தவர் தாம் பீர்முஹம்மது எனும் பெயர்.இதில் பேயோ அலிபோ முதல் வெம்பனி என அறியாமல் மருள்கின்றேன் என்பது உட்கிடை ஞானம்
கா-அப
====== கா-அப =========
“அறிந்துகொள்ளசொல்லுகிறேன் முக்திதாத்துவெளியில்
ஐந்தாம் வணக்கம் திக்கீர் கபியின் முடிவாகும்
பொருந்துமெட்டாம் புகழும் மக்காம் தம்கூத்து விபரம்
போதவித்து நாதநிலைபுகல்யாகும் நுக்தொன்று
அந்த கருநாதமணி சூடுநினைவொளிவு
அதுதானே உதிரமெல்லாம் அணிந்துடலாய் திரண்டு
விந்தையுள்ள கருவுக்குள்ளே விளைத்த சூடுநினைவு
வேகமுடலெங்குமுயிர் வெதுவெதுத்தே நிற்க்கும்
அங்கமெல்லாம் நபியாகும் அவன் நினைவே றூஹூ
அதுதானே கருநினைவு ஆசையுடனறிவு
கருநாத நுதல் நடுவே காபகபுசைனி
கண்ணான பார்வை ஒலி ஹக்கென்றறிவீரே
இன்னங் கருநாதமணி பேச்சுமூச்சு பார்வை
இரக்கமுடன்கோபம் கேள்வி எதுவுமதுவாகும்
தன்னை அறிந்தல்லவோ தனது பொருளறிந்தால்
தானேதான் தானேதாம் தம்பிரானுமாகும்
கருநிலையில் கருநினைவை கருவதினால் அறிந்தால்
கடிதான பாவமெல்லாம் காற்றில் பஞ்சாய் பறக்கும்”
---- பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் பிஸுமில் குறம்
முத்தொடு பவளம் பச்சை முதலொளி கூட்டி
சக்தியாய் சிவனாய் இந்த தாரணி தன்னிலாக்கி
பத்தியாய் யெனைவளர்த்த பரமனே யுனையான் பாச
இத்திசை அனைத்தும் போற்றும் இறைவனே துணை செய்வாயே .
❤️ "தாத் என்பது இறைவன் அம்சம் என கொள்ளவேண்டாம், அது இறை சொரூபமே, ஒன்றானது தான் ,முப்பொருளாக இலங்கினாலும் ஒரு பொருளே தான்" ❤️
பிண்டம் என்பது பிரபஞ்ச பிரமாண்டத்தின் ஒரு சிறு அளவு.. அவ்வளவு தான்... இந்த சிறு பிண்டத்திற்க்குள் எங்ஙனம் ஜீவன் இருக்கிறதோ அதுபோல பிரபஞ்ச பகிரண்டத்தினுள்ளும் மஹாஜீவன் குடியிருக்கிறது... அதை அறியவேண்டுமெனில் இந்த பிண்ட சரீர ஜீவனை முதலில் கவனிக்கவேண்டும்...அது பகிரண்ட ஜீவனுக்கு கொண்டு செல்லும்
அந்த மகாஜீவனைத்தான் அகம் புறம் அகப்புறம் புறப்புறம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியுள் ஜோதியுள் ஜோதி என வள்ளலார் குறிப்பிடுகின்றார். அறிவு விளக்கம் வராது மூட புத்திகளுக்கு ஒரு விளக்கை காட்டி அதை கண்டு அவ்வண்ணம் உபாசிக்க சொல்லியுள்ளார். தன்னுடைய வெளிச்சமாக தன்னுடம்பு முழுதும் வியாபித்திருக்கின்ற ஜீவனையே அறிந்து வணங்க தெரியாதவர்கள் எங்கே அண்ட பகிரண்ட ஜீவனை உள்வாங்கி புரிந்து அறிந்து உபாசிக்க போகின்றார்கள்...இருந்தாலும் அவர்களுக்கும் சிறு வெளிச்சம் வரத்தான் செய்யும்.
🙏 குருவே சரணம் 🙏
--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
முச்சுடர்
முச்சுடர்
ஆதி அலிஃபு அங்கு அனாதி நுக்கத் என்ற அருள் இறையோன் சோதி ஒளி வந்து நாதனென்றே இன்னம் சொல்லுவேன் கேள் ஆதி ஒளி நற் பவளம் அனாதி அழகு பச்சை சோதி ஒளி வெண்டரளமதாய் வந்து தோன்றிடுமே
~ (ஞானமணிமாலை-பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்)
வீளக்கம்=
அலிஃப்-”அ”-பவளம்-ஆதி
நுக்கத்-”ல்”-பச்சை-அனாதி
லாமலிஃப்-”லா”-வெண்டரளம்-சூறத்துல் நூர்-சோதி ஒளி
பீரப்பா தக்கலை
ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும்
ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு
ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே.
இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை.
பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்
நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்.
--------- பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ்
பிஸ்மில் குறம்
ஆதமென்ன அவருடைய பாதமென்ன வென்றால் அறியாதபேர்களெல்லாம் அறியசொல்வேன் கேளும்-
வேதமென்றும் ஆதமென்றும் விளம்புவதுமது தான் வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து-அதுதான் அஹதத்தென்று அனைத்தியுமுள்ளொடுக்கி அப்புறமும் வாகிதத்தாய் வானத்திலோ ஆதம்-
வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு
வகைவகையாய் தலைமுறையாய் வந்ததந்த விந்து--அந்த விந்து ஆதமுதல் அணிய வந்ததாலே அதுதானே ஆதமது பாதமது நிஜமாம்-விந்தைபெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்து புகை காற்றாய் வெளியில் வருமூச்சாம்-மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்தாகும்-முடியாத தம்மல்லவோ ஆதமென்று பேரு-ஆசரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்தலிபு மூச்சுமல்ல ஆதத்துடபாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்க்கு சுஜூதிட்டால் அதிகதவம் ஆதத்துட பாதமது நிஜமாம்.
(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-பிஸ்மில் குறம்)
ஆதம்
முந்தின ஆதம் மண்ணானவன் பிந்தின ஆதம் வானத்தில் இருந்து வந்தவன், முந்தின ஆதம் மாமிசமானவன் பிந்தின ஆதம் வானத்தில் இருந்து வந்த ஆவியானவன்” என கிறிஸ்து சொன்னதின் பொருளும் நான் சொல்லிகொண்டிருக்கும் விஷயமும் வேறல்ல. அதன் மறை கருத்தை உண்மை சூஃபிகள் அறிவர்.ஏனையர் குதர்க்கம் பண்ணிகிட்டே இருப்பர்
*பிம்ப யோஹ
*****************பிம்ப யோஹ**************
உலகத்தில் இன்று நடைமுறையில் பலவிதமான யோக நடைமுறைகள் பரவலாக இருப்பினும் ,இவையெல்லாவற்றையும் அடக்கிகொண்டு மறைஞான பொக்கிஷமாக மறைந்திருக்கும் ஆதிஅனாதியான சம்பிரதாயமே பிம்பயோகம். குருமுறைகளுக்கெலாம் அனாதியானது இந்த யோகமாக இருப்பினும் இதை எல்லா சமயங்களிலும் எங்கும் நிறைந்த ஒரு சம்பிரதாயமாக மறைந்து இருக்கிறது என்பது இதன் அனாதித்துவமாகும்.
“பிம்பம்” என்பது நாம் பரவலாக அறிந்திருக்கும் ஒரு பொருளாகும், அதாவது இறைவனின் திருவுருவத்தை அது குறிக்கும்.எல்லா இறை திருவுருவங்களையும் “பிம்பம்” என அழைப்பார்கல், ஆனால் இது எதை குறிக்கிறது என்பது மட்டும் அறியாமல் சகல சாத்திர சம்பிரதாய யோகி ஞானியர்களும் இருக்கிறார்கள்.
“பிம்ப யோகம்” என்பது இதன் மறை பொருட்களை விளங்கிடசெய்யும் அதி மகோன்னத செயலாக அனாதியிலேயே இறை ரகசியமாக வைக்கபட்டிருக்கிறது. தேடுபவர்களுக்கு கிடைக்கட்டும் எனும் போக்கில் தான் ஆலயங்களில் திருவுருவத்தை “பிம்பம்” என அழைத்து வைத்தார்கள் அதன் மறை ரகசியத்தை அறிந்து அதன் போக்கில் போகிறவன் “பிம்பம்” ஆகிறான். அவனே “சுயம்பு”
Subscribe to:
Posts (Atom)