கும்மிருட்டு என சொல்றோம் சகஜமாக, ஆனால் கும் என்றால் என்ன என்று தெரியாது. கும் என்பதில் வரும் 'கு' வும், குரு என்பதில் வரும் 'கு' வும் ஒன்று, ஆனால் அது குருவி என்பதில் வரும் 'கு' அல்ல. வடமொழி "கு".
அப்படி "கும்" என்பது அறிய முடியாத, அறிவுக்கு எட்டாத, மிக ஆழமான, புலன்களுக்கு அகப்படாத என பொருள்படும். பிரம்மவும் இப்படியே. இதையே நிர்குணம் என்றனர். புலன்களுக்கு எட்டாத ஒன்றை தியானிப்பது எப்படியாம்?. மனதுக்கும் இந்திரியங்களுக்கும் அகப்படாமல் இருக்கும் பொருள் என்பதால் மனம் அதை இருள் என கொள்கின்றது. எப்படி நுணுகினும் மனம் அதை அறியாது அறிய இயலாது.ஆகையினால் மனதுக்கு அது எப்போதும் இருள் உருவமாக கொள்ளபடுகின்றது.
ஒளியானது இருளான பொருளை விளக்கவே தேவை, அல்லாது விளங்கும் பொருளுக்கு தேவையில்லை. அது போலவே,இருளாக மனதுக்கு விளங்கா நின்ற பிரம்ம வஸ்துவை விளக்கமுற செய்யவே பிரகாசமான 'ரு' எனும் விளக்காக ஸகுண பிரம்ம ஸ்வரூப "கு" விளங்குகின்றார்.