Thursday, November 10, 2022

மறுபதிப்பு பிராணன்

 மறுபதிப்பு:


பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.
இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்..உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.

உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் ,அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர்.

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

தோத்தரிப்பது ஒரு விளக்கம்

 தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்






Hseija Ed Rian ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...





Hseija Ed Rian “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்





Hseija Ed Rian திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.





Hseija Ed Rian அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்





Hseija Ed Rian இங்கு நான் கூறும் விஷயங்கலை வாசிப்பவர்கல் ஆழமாக விசாரணை செய்தாலொழிய சொல்லுவது விளங்காது...தயவு செய்து ஆழமாக செல்ல வேண்டுகிரேன்...மற்றவர்களுக்கு இது பிரயோசனமற்றது





Hseija Ed Rian இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்.... கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...





Hseija Ed Rian அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்





Hseija Ed Rian அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்





Hseija Ed Rian கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....





Muthu Kumar ஐயா, எல்லாவற்றையும் அறியும் அதற்கு நம் தோத்திரம் கேட்காமலா போய்விடும். //"அவர்" கேட்கின்றார் எனும் "உண்மை நிலை" உடையவர்களுக்கு// தயைகூர்ந்து மேலும் விளக்குங்கள்





Hseija Ed Rian இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்





Hseija Ed Rian உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை





Hseija Ed Rian நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்...





Hseija Ed Rian இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில

சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை...

எது முக்தி? - யாருக்கு முக்தி?

 === எது முக்தி? -  யாருக்கு முக்தி? ===


மறுபிறவி உண்டு என சொல்பவர்கள்,
மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள்,
கர்மம் உண்டு என்பவர்கள்,
கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள்,
ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள்,
ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள்,
எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள்,
உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள்,
தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள்,
குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள்,
குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள்.
ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள்,
ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள்.
குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,
மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல்,
மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்,
இயற்கையே கடவுள் என்பவர்கள்.
உயிர் தான் கடவுள் என்பவர்கள்,
ஜீவனே சிவன் என்பவர்கள்,
நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள்,
நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள்,
வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள்,
என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.
சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல்,
மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,
கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,
சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என...

---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

திருவாதவூர்ப் பெருமான் அருளிய, ஞானத்தாழிசை

 திருவாதவூர்ப் பெருமான் அருளிய, ஞானத்தாழிசை


பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமுமற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயரர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொரு ளடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திதிருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக்கண் ணாலதனை நாடிச்செயல் கண்டு
சீசீ என முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந்நி னைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகியநாதத் தொனிவிந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கட லென்னும்
களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
பாழ்போகிட மீண்டே வரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறை தீர்ந்தாய் இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படு மோரொன்பது வாசல் பெருவாசல்
ஆருமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூல்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே


பாடல்-7

விண்டுமொரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டுமிருந் தார்க்குள்ளிரு பரிபன் னிருகாலாற்
காணுமது தானும்பனி ரெண்டங்குலம் பாயும்
பிண்டம்புகு மண்டம்புகு மெங்கும்விளை யாடிப்
பீடமென்னும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
ஏதும்உரை யாமல்இருப் பார்களறி மனமே

பாடல்- 8

முப்பாழ் கடந்தப்பா லொரு முகப்புண்டதினடுவே
முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
அறுகுநுனி யிடமுமென அறிவார் பெரியோர்கள்
செப்பாதது தானுமறிந் தப்பாற் கடந்திட்டால்
சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பாரினி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப் படுமனமே

பாடல்-9

நாதமெழுந் தெழுந்தோடி வந்துறையும் திருக்கூத்து
ஞானக் கண்ணினாலும்அதை நாடிச் செயல் கண்டு
பூதமெனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதமென வரவற்றனை சுசியற்றனை எச்சில்
சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரெண்டினி லுண்டாகிய பருவம்
பாரும்அறி யாதுபனி ரெண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய் வழிபாடும்முதற் பெற்றாய்
நாள்கோள் பலவற்றாய் கொலைகளவென்றது மற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
மண்ணின் வரவற்றாய் இனிபொன்னம் பலமனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாம லுழன்றேன்
கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல் வமும்நினைவும் பிறர்க்கிட்டேன்
நித்தம் செயும் நியமங்களும் நேமங்களு மற்றேன்
தொலையாத உறக்கத்தொடு சுகதுக்கமு மற்றேன்
துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாம லிருக்கும்மன மதிலேகுடி கொண்டேன்
ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென் றறியேனே.

பாடல்-12

உருவானது விந்தின் பெயர் குருவானது ஞானம்
உடலுக்கு யிரீறாதி லொருநான்க னுள்முதலும்
குருவானது முனைமீதினி லணுவாகிய வெளியிற்
குடியாகிய பதிகண்டவர் அருள்வாத வூரரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதில் மகிழ்ந்தே
உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலி லணுகாமலே பிறவாநெறி பெறுவார்
கடவுட்செய லறியாதவர் கருவாசலிற் புகுவார்.

திருச்சிற்றம்பலம்

கற்பனை

 இந்த ஒலகமே ஒனக்குள்ள தாம்பா இருக்குது, இப்படி சொன்னா உடனேயே இவன் மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிக்கும், மூலாதாரத்ல பூமி இருக்கு, மணிபூரகத்ல அக்கினி இருக்குண்ணு கதை கட்ட ஆரம்பிப்பான். கிரகங்கள் நட்சத்திரங்கள் எல்லாம் தலமண்டைக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கறதா பாவனை பண்ணிக்குவான்.


உலகம் உனக்குள்ளே இருக்கிறதுண்ணு சொன்னா அதன் சூட்சுமம் வேற. உனக்கு உள்ள இருக்கிறது வேற ஒண்ணுமில்ல, அந்த “நீ” தான். ”நீ” தான் இந்த உலகமா விரிஞ்சு இருக்குறே. உனக்குள்ளத்தான் இந்த ஒலகம் தோன்றி ஒடுங்குது. அந்த “நீ” உனக்குள்ள இல்லைண்ணா மிஞ்சி இருக்கிறது தான் வெளி, வெற்றிடம். இது தான் மெய் வெளி. இங்க எந்த ஆண்டவனுமில்ல, எந்த கடவுளுமில்ல, எந்த உலகமுமில்ல, எந்த கற்பனையுமில்ல, எந்த கதையுமில்ல.

----- ❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️

அருள்-இருள்-மருள்

 ====அருள்-இருள்-மருள்=====


னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே-அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே-அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான்,உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர்,

மனிதன் நித்தியத்திற்க்காகவே படைக்கபெற்றவன்,இவன் எக்கோடிகாலத்துக்கும் சாக போகிறதே இல்லை என்று தெரியாது.-இப்போதிருக்கிற இந்த அனித்திய தேகத்தில் கஷ்ட்டம் ஏறினால் உயிர் வேறு உடல் வேறாக பிரிந்து கொள்ளும்.அதற்க்குப்பின் நித்திய உடல் ஒன்று இவனுக்கு தரபடப்போகிறதே அந்த அடுத்த உடல் எக்கோடி காலத்திற்க்கும் எந்த அவஸ்த்தைக்கும் அழிகிறதே இல்லை.

(னரகதேகம்-சுவர்க்கதேகம்).....அந்த நரகதேகம் எந்த அவஸ்த்தைக்கும் எந்த அடிஉதைக்கும் எப்படிப்பட்ட இம்சைக்கும் அழியவே அழியாது.

சுவர்க்க தேகமோ எப்பொழுதும் 18 அல்லது 20 வயதளவில் நின்று மாறாத தங்கதிருமேனியாக விளங்கும்.

இப்படியாக சுவர்க்கதேகமும் அழியாது-னரக தேகமும் அழியாது..மனிதனை இவ்வாறு நித்தியத்திற்காகவே இறைவன் படைத்தான். இவன் எப்போது்ம் அழிகிறதே இல்லை-இவன் இருந்தால் ஒன்ரு சுவர்க்கத்தில் இருக்கணும்-இல்லாவிட்டால் நரகத்தில் இருக்கவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இவன் அடைந்தே தீரணும்-ஆகவே மனிதன் எக்கோடி காலத்திற்க்கும் அழிகிறதே இல்லை-அழியவே முடியாது.இது திட்டமான வார்த்தை.

=சாலை ஆண்குரு.

ஞானம் முடிவா - சாகாநிலை முடிவா --

 -- ஞானம் முடிவா - சாகாநிலை முடிவா --


னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே - அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே - அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான், உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர்,

உபதேசம் பெற்ற அனைவரும் ஞானத்தை அடையவில்லை ஆகிலும் சாவிலிருந்து மீளுதல் இல்லை ஆகில் அது குருவின் குறைபாடு அல்லது உபதேசத்தின் குறைபாடு எனலாம்.

எனில் ஞானம் என்பது வாழ்வின் லட்சியமா அல்லது சாகாநிலை லட்சியமா என கேட்க்கதூண்டும்.

சாகாதிருப்பவனே சன்மார்க்கி என வள்ளல்பிரான் சொல்லுவதை காணும் போது, ஞானம் என்பது எதற்க்கு வைக்கப்பட்டது என ஆராய தூண்டும் அல்லவா?

ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன. தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம், அறிவை அறிதல் ஞானம் ....

எனில் ஞானம் முடிவா அல்லது சாகாநிலை முடிவா?

-- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️

போதிசத்வ சாமந்தர்

 =====போதிசத்வ சாமந்தர்=====


கபில வஸ்துவில் பிறந்து அன்று போதி மரத்தடியில் அவர் ஞானம் பெறுவதற்கு 2400 கோடி ஜன்மங்களுக்கு முன் அடர்ந்த காட்டுபகுதியில் செல்வந்தரான ஒரு ஆந்தை இளவரசனாக அவர் பிறந்தார்.அருகாமையில் இருக்கும் ஊர்புறங்களில் இரவு நேரங்களில் சுற்றுபயணம் செல்லும் போதெல்லாம் அவர் மனதில் எழுந்த கேள்வி ஒன்றே,ஏன் இந்த மனிதர்கள் எல்லாம் கடவுள் என்ற ஒன்றை வைத்து வாழ்நாளெல்லாம் வணங்கி கொண்டு திரிகின்றனர் என்பதே.உண்மையில் இவர்கள் செய்வது நிஜமானதா அல்லது பொய்யானதா,கடவுள் என ஒரு பொருள் இருக்கின்றதா எனும் சந்தேகமே.

ஆந்தை இளவரசருக்கு இரவெல்லாம் ஆராய்ச்சியே தான் மிஞ்சியது,கூட்டத்தார் எல்லாம் இரைதேடி செல்லும்போதெல்லாம் அவர் அந்த போதி மரத்தின் கிளையிலேயே தன் பொழுதை கழித்தார்.மனிதர்களி இந்த செய்கையினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கபோகின்றது என்பது எத்தனை இரவுகள் கழித்தும் அவருக்கு விளங்கவில்லை.மனிதர்கள் தான் இப்படி கடவுள் வணக்கம் செய்வதினால் எதாவது உயர்நிலைகளை அடைகின்றனர் எனில் நம் போன்ர அற்ப பிறவிகள் உய்வதற்க்கு வழிதான் என்னும் கேள்வியும் அவர் மனதில் எழவே செய்தது.அவரால் விடை காணமுடியாத கேல்விகள் என ஏராளமான விஷயங்கள் கண்முன் வந்து மறைந்தன.

அன்றும் எப்போதும் போல நேரம் இருண்டது,சாமந்தர் ஆந்தையர் போதிமரக்கிளையில் தன் வழக்கப்படியே ஆராய்ச்சியில் முழுக தொடங்கினார்.கண்களை மூடி ஆழ்ந்திருந்த சாமந்தர் மெல்ல கண்விழித்தார்,ஏதோ ஒரு உறுத்துதல் கண்முன் தெரிந்தது.பாதி விழித்திருந்த கண்களை மெல்ல திறந்த சாமந்தர் தன் மூக்கின்மேல் ஒரு வண்டு ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு முதலில் திடுக்குற்றார்.வண்டும் அசையாமல் அவர் மூக்கின் மேலேயே உட்கார்ந்து கொண்டது.

விழி அசையாமல் மூக்கின் மேலேயே கண் வைத்துகொண்டிருந்த சாமந்தர் வண்டின் அழகை கண்டு மெய்சிலிர்த்தார். அசைவற்று மூக்கை வைத்த கண் வாங்காமல் அமர்ந்திருந்தார் சாமந்தர்.நேரம் மெல்ல மெல்ல உருண்டோடியது.,வண்டானது மெல்ல மெல்ல சாமந்தரின் பார்வையில் இருந்து மறைய துவங்கியது.அப்போது தான் சாமந்தர் ஒரு விஷயத்தை கவனித்தார் அவரின் மூக்கின் துளைகள் வழியாக வந்து செல்லும் சுவாசமானது மெல்லிய ஆவியாக காற்றில் கலந்து செல்கின்றது.அவரின் மனம் அதன் மேல் பற்றியது.ஆம் சுவாசம் வந்து செல்லும் போது ஏதோ ஒன்று நடக்கின்றதை புரிந்துகொண்டார்.அவருக்குள் ஞானம் மிளிர்ந்தது.அன்றும் இன்றும் போதிமரம் ஞானம் கொடுக்கும் என நம்பும் மனிதர்கள் அதன் பொருளை எப்போதும் அறிந்திருக்கவில்லை.

உடலுயிர்-ஆன்ம உயிர் - 1

 உடலுயிர்-ஆன்ம உயிர் - 1




❤ உடம்பின் உனர்வுகளில் இருந்து விடுபடுங்கள், உணர்வுகளின் அசைவோ , துடிப்புகளோ, சூக்குமமான நாடியோ அல்லது இதுபோன்ற விஷயங்களோ ஆன்மா இல்லை... ஆன்மா ஒருபோதும் உடம்பில் உணரப்படுவது இல்லை, மனதாலும் கூட உணரப்படுவதில்லை... அறிவினால் அன்றி பற்றிகொள்ள அரிதாம்... மேலும் அது உச்சி குழியில் விளங்குவதும் இல்லை, உச்சிகுழி என்பது தூல சடமேயாம்...


தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை... அல்லாது ஆன்மா வேறு ஒன்றுடனும் தொடர்பில் இல்லை...


உயிரானது உடலை பற்றியது... உடலானதும் உயிரை பற்றியது... ஒன்று இல்லையாகில் மற்றதும் இல்லை.. இருக்காது... அதுபோல அறிவானது ஆன்மாவுடன் இருக்கும்... அது செத்த பின்னும் ஆன்மாவுடன் இருக்கும்... அது செத்து போகாது... அதுவே செத்த பின்னும் பல அறிவுகளை ஆன்மாவுக்கு குடுக்கிறது.... அது எக்காலமும் இருக்கும்... உயிரோ செத்த உடன் பிரிந்து விடும்.... இதை தான் வள்ளலார் ரெண்டு வித உயிர்கள் என சொல்லுகிறார்


ஒன்று உடலுயிர், மற்றையது ஆன்ம உயிர்..


தூக்கத்தில் உயிரும் உடம்பும் தொடர்பில் இருக்கும்...ஆனால் ஆன்மாவுடன் இருக்கும் அறிவெனும் உயிர் இதோடு தொடர்பில் இருக்காது.... அதனால் ஆன்மா ஒன்றும் அறியாது

மரணமில்லா பெருவாழ்வு

 == மரணமில்லா பெருவாழ்வு ==


சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.

நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே.

தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே.

கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே.

விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு;
தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி;
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்.

-----❣️ காகபுசுண்டர் உபநிடதம் ❣️