Thursday, November 10, 2022

நான்’ எனும் மனம்

 மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் நான்கு பொருட்கள் அல்ல, இவை அனைத்தும் ஒரே பொருளின் பல்வேறு நிலைப்பெயர்களே, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு பெயர்கள், வீட்டில் மனைவிக்கு கனவன் பிள்ளைக்கு தந்தை, பணியாளுக்கு எசமான் அலுவலகத்தில் மானேஜர், ஆனால் இருக்கிரது ஒரு நபர், இந்திர தொடர்புடன் இருக்க மனமாகவும், இந்திரிய தொடர்பில் பெற்றதை கிரகிக்க புத்தியாகவும், கிரகித்ததை உட்கொண்டு நிர்னயம் செய்ய சித்தமாகவும் அகங்காரம் என ‘நான்’ ஆகவும் இருப்பது ஒன்ரே. அதுவே ‘நான்’ எனும் மனம்.

ஆன்மாவுக்கு ஆணவம்

 ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,, ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல்.

ஒன்று

 கரு உருவானதில் இருந்து அனைத்தையும் "ஒன்று" உருவாக்கி செயல்பட்டு கொண்டு இருக்கிறது, உடலை உருவாக்கும் அறிவு நமக்கு இருக்கா? , ஒரு சிறு காயத்தை கூட ஆற வைக்க நமக்கு தெரியாது, நாடி நரம்புகள் அனைத்தையும் கண்ட்ரோல் வைத்து இருப்பது அந்த "ஒன்று",  அனைத்தையும் செய்யும் அந்த  "ஒன்று" நான் நான் என்று சொல்வதில்லை, ஆனால் மனமோ  இதையெல்லாம் நான் தான் செய்தேன் என்னோட குழந்தை என்றும், நான் தான் சாப்பிட்டேன் என்றும், நான் தான் தண்ணி குடிச்சேன் என்றும் எல்லா நல்லது கெட்டதுலயும் மாட்டிகிட்டு  நான் நான் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்.


பிரம்ம வித்தை எனும் உஜூது

 ====பிரம்ம வித்தை எனும் உஜூது======


“பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும்
பேரறி வடிமையங் ஙாகும்
வாயினில் னாயும் னாசியில் வண்டும்
மதுசெவி தனில்விஷப் பாம்பும்
ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா
மிப்படிக் கென்றுனீ தெளிந்து
பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட்
பதிபுரு வத்திடை யடிகீழ்

வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய்
ஊசியின் தமர்வழி யோடிப்
பேசரு மூளை மண்டலக் குகைமேல்
பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு
வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும்
வல்லமை யளிக்குமக் கண்ணே
ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும்
இருதய மலர்விரிந் தெழும்பும்“”

(ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்)

ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே?

பார்! உனை சுற்றி!!

பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன?

பார்!உனை சுற்றி!!

உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ?

பார்!உனை சுற்றி!!

உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது?

பார்!உனை சுற்றி!!

உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்?

பார்!உனை சுற்றி!!

உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ?

பார்!உனை சுற்றி!!

நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ?

பார்!உனை சுற்றி!!

பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!!!!

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

ஆக்ஞா சக்கரம் என்பது புருவமத்தியா?

 ஆக்ஞா சக்கரம் என்பது புருவமத்தியா?




சாதாரணமாக யோகஞான விவகாரங்களில் பார்க்கும் போதும் இந்த கேள்வி எழுகிறது. ஆக்ஞா சக்கரம் என்பது ஆறாதரங்களில் ஆறாவது நிலை சக்கரம். ஆனால் இது எதற்க்கு புருவமத்தி என பெயரால் அழைக்கின்றனர் என்பது புருவபூட்டு தான் அல்லவா?.. இப்படியான சிக்கல்களைத்தான் பூட்டு என நடைமுறையில் அழைப்பார்கள். அல்லவா?


ஒரே இடத்திற்க்கு ஏன் இரண்டு பெயர்கள் வந்தன?..அல்லது இவை இரண்டும் இரு இடங்களா? இரு விஷயங்களை சொல்லுகின்றதா?..யாரும் எங்கும் புருவமத்தி சக்கரம் என சொல்லி கேட்டதில்லை.


அப்போது புருவமத்தி என்பது தான் என்ன?. இந்த குழப்படியில் சிலர் கண்மணி மத்தி தான் புருவமத்தி என சொல்லிகொண்டு தனி இயக்கமே ஆரம்பித்து இயங்கிகொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது தானே?.. திறப்பது யாரோ?


"காக புஜண்டர் பாடலை சற்று ஆழ்ந்து சிந்திப்போம்"

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.

7:
காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே.

8:
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.

9:
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.

10:
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.

11:
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.

12:
போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே””....சரிதானே


பாரடா புருவமத்தி ஏதென்றாக்கால் பரபிரம்மமானதொரு அண்ட உச்சி. == இது ஒரு பாடல் வரி; அடுத்த பாடல் வரியை கவனியுங்கள்;


“நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய் பாரு.” சரிதானே அப்போது எது புருவமத்தி எது சுழுனை ஐயா?


புருவமத்தியே அண்ட உச்சி என சொல்லும் புசுண்டர் பிரான் அந்த புருவமத்தியானது என்னவென சொல்லுகிறார் கவனியுங்கள்;


”அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே”


அதாவது உயிர்பயிரை எந்நாளும் படைத்து தொந்தமென்னும் எழுவகை தோற்றமாக நாலுவகை யோனியாக இருப்பது தான் அண்ட உச்சி எனும் புருவமத்தி. சரிதானே?


வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு


அண்ட உச்சி என்பது சுழுனை என சொல்லலாமா? நன்றாக பார்த்து சொல்லுங்களேன். அண்ட உச்சி எனும் புருவமத்துயாம் முனை கம்பாலே நரம்பு விழுது போலாகி இருகண்ணில் ஒளிவாகி அந்த நரம்பு வட்டம் சுழுனை என ஆச்சு. அல்லாது அண்ட உச்சி எனும் புருவ மத்தி தான் நரம்பு வட்டமான சுழுனை என்பது எங்ஙனம் விளக்கம் பெறும்


பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.

12:
போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.

=இந்த பாடலையும் சற்று கவனியுங்களேன்


ஓமடா விந்துவுந்தான் அண்ட உச்சி எனவல்லவா சொல்லுகிறார், அல்லவா? அந்த அண்ட உச்சியே தான் புருவமத்தி எனும் பரபிரம்ம நிலை....நீ ங்கள் சொல்லும் சுழுனை என்பது கபாலத்தில் முக்கூறாக இருக்கும் நரம்பு வட்டம். சொல்லுவது சரிதானே ஐயா?


ஓம் எனும் விந்து அல்லவோ அண்ட உச்சியான புருவமத்தி?.. அப்படித்தானே?.. அல்லாது சுழுனை எனும் நரம்பா புருவமத்தி?


மூலமான லிங்கத்துக்கு கீழ்மேலாக ஓடுகின்ற நரம்பு மத்திக்குத்தான் சுழுனை என பெயர். அதாவது மூலமான லிங்கத்திலும் சூரியசந்திர நாடிகள் உண்டு. அதன் மத்தியும் சுழுனை தான். இருதயத்திலும் மேற்சொன்ன நாடிகள் கீழ்மேலாக பாய சந்திக்கும். அங்கும் சுழுனை உண்டு. கண்டத்திலும் சூரிய சந்திர சுழுனை உண்டு. அதுக்கு மேலும் உண்டு.இப்படி மூலம் முதல் அண்ட உச்சி வரைக்கும் சுழுனை உண்டு. ஆனால் புருவமத்தி என்பது மூலமான லிங்கத்தில் இல்லை. கீழே கொடுத்திருக்கும் புசுண்டர் பாடலை கவனியுங்கள்.


கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.

11:
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு


இப்படி ஆறு ஆதாரங்களிலும் சுழுனை உண்டு, அதாவது ஆக்ஞை சக்கரத்திலும் சுழினை உண்டு.. ஆனால் ஆக்ஞை புருவமத்தி இல்லை.புருவமத்தி என்பது பரபிர்மமான, சகல புவனங்களும், உயிர்பயிர் வகைகலையும் சிருஷ்ட்டித்த, நாலுவகை யோனி சிருஷ்ட்டித்த விந்து நிலையே...புரிகிறதா வித்யாசம் ஐய்யா


சதாரணமாக “அண்ட உச்சி” என்பதற்க்கு நம்ம மக்கள் “தலை உச்சி” என பொருள் கொண்டு விடுகின்றனர். அது மிகபெரிய கற்பனை புரிதலுக்கு வழி வகுத்துள்ளது. ஏராலமான மக்கள் இப்படி குழம்பிகிடக்கிறார்கள்...அதனால் தான் புசுண்ட பிரானவர்கள், “ஓமென்ற பிரணவமே அண்ட உச்சி” என சூட்சும விளக்கம் அளிகின்றார்.அல்லது ஓமெடா விந்துவுந்தான் அண்ட உச்சி என்கிறார். இது நுணறிவினால் புரிந்துகொள்ளகூடியது.குருநிலையினால் கிடைக்கபெறுவது.


அண்டம் என்றால் தலை என பொருள் கொண்டால் இப்படி தவறானபுரிதல் உண்டாகும்.ாண்டம் என்றால் பிரணவம் என கொண்டால் உண்மை விளக்ங்கும். அந்த பிரணவ உச்சியே புருவமத்தி.அது தான் பரபிரம்மமானதொரு அண்ட உச்சி.


அதனாலத்தான் காகபுசுண்டர் பிரானவர்கள் “விஷமுண்ட அண்டமதை விரும்பி பாரே” என்கிறார். இவங்க அது இவங்களோட தலை தாண்ணு சொல்லிகிட்டு இருக்காங்க.புரிதல் வரட்டும்பா...


ஏல்லாம் மறை பொருட்கள் தான்...அது மறைஞ்சு இருக்கிறதுனால தான் நாம தேடிட்டு இருக்கோம்...ஆனால் வெளியரங்கமா போட்டா யாரும் தேடமாட்டாங்க...தேடிகலைச்சு கிடைக்க அதன் அருமை ரெம்ப உசத்தியாக இருக்கும்...அதனாலத்தான் சின்ன விஷயத்துக்கு கூட ரெம்ப வருஷம் அலையவிடுறது...


இனி புசுண்டர் பாடலை மீண்டும் படிச்சு பாருங்க, புரிதல் சற்று வேறுகோணத்துக்கு மாறுபட்டு தோற்றமளிக்கும்=”பாரடா புருவமத்தி ஏதென்றாக்கால் பரபிரம்மமானதொரு அண்டவுச்சி”


அருமை...இது தான் ஞானம்..நெறைய தெரியும்கிறது அஞ்ஞானம்...ஒண்ணும் தெரியாதுங்கிற ஆழ்மன நினைப்பு தான் ஞானம்...ஒருவித வெறுமையாதல்..படிச்சது முழுதும் பயனற்று போகும் நிலை...அதுவே உன்னத மனநிலை..அங்கே பணிவும் தன்னடக்கமும் விலையாடும். என்ன மாதிரி குசும்பும் குதர்க்கவும் இருக்காது


சர்வேசுரனென்னும் நாமத்தின் பிரத்தியேக ஆத்ம சைதந்நியமாகிய வஸ்து எங்கும் பூரணமாய் இருப்பது இயற்கையுண்மை ஏகதேசம்... ஆதலால், கடவுளை - அறிவதற்கு - ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும். மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவது உத்தமம்."


ஆன்ம அறிவு துலங்கும் இடம் புருவமத்தி இன்னும் சிந்தித்தால் அந்த அறிவுதான் புருவமத்தி என வருகிறது ஐயா


அப்போது அறிவு துலங்குமிடம் தான் புருவமத்தி என வருகிறது அல்லவா?.. அது தான் சரியான உண்மை. மேற்படி அறிவானது நம்மிடம் இருந்தும் நம்மால் பற்றிகொள்ளமுடியாமல் இருக்கிறது. மேற்படி லிங்கம் என சொல்லுவதும் அந்த அறிவைத்தான்.அறிவானது உடலெங்கும் வியாபகமாக இருப்பினும் அதை பிரத்யட்சத்தில் சில முறைகளில் பிரித்தறியலாம். அந்த உபாதிகளில் ஒன்றே தியானம், மனத்துடன் கலந்திருக்கும் அறிவை பிரித்தறியும் ஒருவித யுக்தி, உபாதி. இவ்வாறு பல முறைகள் அறிவை பற்றிகொள்ள வகுக்கபட்டுள்ளது. அதில் சற்று கூடுகமானது லிங்க அறிவு, அதாவது புருஷ அறிவு, ஆண் அறிவு.

உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?

 உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?




உலகத்துல பொறகிற எல்லா கொழந்தைங்களும் உச்சரிக்கிற முதல் உயிர் எழுத்து தானே எம்மொழிக்கும் முதலான உயிர் எழுத்தாக இருக்கமுடியும்? அல்லவா..?


அதை சொல்லி முதலெழுத்து என காட்டாமல் எதையோ காட்டி உயிரெழுத்துங்கறாங்களே, இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும்? ... அப்படித்தானே?


"இயற்கை உண்மை.. இயற்கை உண்மை” என சன்மார்க்கிகள் கத்துறாங்களே, இதுவல்லவா இயற்கை உண்மையாக இருக்கமுடியும்...???


கொழந்தை மொதலிலே உயிர் அடையாளமானதை வெளிப்படுத்தி அழும்போதல்லவா காத்து கிட்டு நிண்ண தாய்க்கும் தகப்பனுக்கும் சுற்றத்தார் உறவினருக்கும் மகிழ்ச்சி பொங்கும்?.. "உயிர் வந்திருச்சு” என்கிறார்கள்... அப்படித்தானே?..


அப்ப உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?... இப்ப புரியுது போல தெரிகிறது அல்லவா.

சிந்திக்க

 இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிரான அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது.

 குருவே சரணம்

எப்பொருள் யார்யார் வாய்??

 எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு...எவன் என்ன சொல்லட்டும், அவன் எந்த ஜீயோ ஸ்ரீ யோ ஆகட்டும், நமுக்கு அவன் யாருண்ணே தேவையில்லை...அவன் சொல்றது என்னாண்ணு மட்டும் தான் கவனிக்கணும், அவன் கூறும் விஷயங்களில் மெய்பொருலான விஷயங்கள் இருக்கின்றதா, அவ்விஷயங்கள் உன்னதமான ஒரு பொருளுக்கு சிறிதேனும் வெளிச்சம் காட்டுகிறதா என காண்போம்.தூலமான சரீரங்கல் அழிந்து போவன தான்,ஆனால் சூட்சுமமான அறிவுகள் அழிந்தௌ போகாதவை, ஒருவர் சொன்ன அறிவு மற்றொருவரிடத்தில் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும் என்பதே உண்மை


தன்னுடலை தான் என்பதும், தன் மனதை தன்னுடையது என்பதும், தன் உயிரை தன்னுடையது என்பதும், தன் எண்ணங்களை தன்னுடையது என்பதும், தன் பேச்சை தன்னுடையது என்பதும், தன் செயல்கள் அனைத்தும் தன்னுடையது என்பதும், தன் உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் தன்னுடையது என்பதும், ஆக இதுவே இருமை எனப்படுவது. இருப்பது ஒருமை மட்டுமே, அதனை காணாது ,உணராது இருமையால் அவதியுறுவதே குழப்பத்திற்க்கெல்லாம் காரணம்

காக புகண்டர்

 காக புகண்டர்


மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
மோனபிரா ணாதியதே நாத மாச்சு;

தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;

ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்

வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே

விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்

ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;

நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்

கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்

தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;

சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;

காப்பதற்கு நடுநாடி யூடே சென்று

கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே

கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்

கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;

விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்

விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;

ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை

உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;

அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;

ஆத்ம நமஸ்காரம் ஜி

Wednesday, November 9, 2022

சிலை வழிபாடு அவசியமா இல்லையா?

 *சிலை வழிபாடு அவசியமா இல்லையா?*


எல்லா மதங்களிலும் சிறு வயது முதல் சாகும் வரை எல்லோருக்கும் வழிபாடு என்று ஒன்று எடுத்து வைத்தது எதற்கு?

இறைவன் திருவடி சென்று அடைவதற்கே என்று எல்லா வேதங்களும் ஒத்துக் கொள்ளுகின்றன.


சிலை வழி பாட்டின் அவசியம் என்ன?

நாம் சொல்லும் கோவில் மனிதன் உண்டாக்கியது.அந்தக் கோவிலில் உள்ள சிலையை உண்டாக்கியதும் மனிதனே.எனவே மனிதன் உண்டாக்கிய பொருளுக்கு யார் ராஜா?கட்டாயம் நாம் உண்டாக்கியது நமது கட்டுப்பாட்டிற்கு உள்தானே இருக்கும்.


இப்போ இந்த சிலையை மக்களாகிய நாம் அனைவரும் தெய்வம் என்று வணங்குகின்றோம்.என்ன காரணத்திற்காக?

அதில் காயத்திரி மந்திரம் ஓதி உரு ஏறி இருப்பதாக நமக்கு சொல்லி வைத்தார்கள்.

இங்கே வேதம் ஒரு கேள்வி எழுப்புகின்றது.காயத்திரி மந்திரம் ஓதியதால் உரு ஏறிய இந்த சாதாரண கல் தெய்வம் ஆகிற்று என்றால்,இதனை ஓதிய அய்யர் தெய்வத்திற்கும் தெய்வமாகி இருக்க வேண்டும் அல்லவா?அப்படி ஆகிற்றா?இல்லையே அப்போ இந்தக் கல் தெய்வம் ஆகியிருக்குமா இல்லையா என்பதனை அவர் அவர் யோசனைக்கு விட்டு விடுகின்றேன்.


இந்தச் சிலையும் நீங்களும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கட்டை எடுத்து உங்கள் இரண்டு போரையும் அடிக்க ஓடி வருகின்றார்,நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று தடுப்பீர்கள் இல்லையெனில் ஓடி ஒளிந்து கொள்வீர்கள்,ஆனால் பாவம் அந்த சிலை என்ன செய்யும்?அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும்.


ஏன்?

உங்கள் உள் மனதில் ஓடும் பதிலை நான் இங்கே போடவா?

அதுக்குத்தான் உயிர் இல்லையேங்க.


ஓ அப்போ அது நம்மை விட மட்டமானதுதானா?

நமக்கு உசிர் இருக்கு அதுக்கு இல்லை.

அதால தன்னையே காப்பாற்றிக்க முடியாத நிலையில் தங்களை எப்படி காப்பாற்றும் அய்யா?


ஆனால் அந்த எல்லையில் உங்களை காப்பாற்றியது யார்?

என்ன சந்தேகம் அய்யா,கடவுள்தான் 

என்னது கடவுளா,நான் ஏதும் பார்க்கலையே என்று மலைக்கிண்றீர்களா?

கடவுள் = கடம் + உள் கடமாகிய உங்கள் உடலின் உள்ளே இருந்து ஒரு ஓசை வந்து "டேய் பாருடா உன்ன அடிக்க ஓடி வரான்,ஓடு " என்று எது உஜார் படுத்தியது?அந்த உயிராக நமது உடம்பினுள் இருப்பது இறைவன்தான்.


இப்போ ஒரு கேள்வி எழும் எல்லோருக்கும்.

கால காலமாக நமது மூதாதையர்கள் கும்பிட்டு வந்த சிலை வழிபாடு தவறா?

அது தவறு கிடையாது.அது ஒரு ஆரம்ப கல்வி நிலை ஆன்மீகத்தில்.அவ்வளவே.அதற்கு பின்னர் ஆன்மீகத்தில் நாம் போயி பட்டம் வாங்க வேண்டாமா?


ஒரு சிறு குழந்தை பள்ளிக் கூடத்தில் யானையை ஒரு பொம்மையை காட்டியும் ஒரு படத்தை காட்டியும் விளக்கி தருவார்கள்.அதற்காக அது நிஜ யானை ஆகிவிடுமா?ஒரு நாள் சுற்றுலா கூட்டி சென்று ஜூவில் நிஜ யானையை காண்பிக்கும் பொழுதுதான் அதன் கல்வி நிறைவு பெறுகின்றது.அப்போதான் அந்த பிள்ளைக்கு தெரியும் நாம் இதுவரை கண்டது நகல் அசல் இதுதான் என்று.


அது போல சிறு பிள்ளைகளுக்கு தெய்வம் என்று ஒன்று உண்டு என்பதனை கற்பிக்க வந்ததே சிலை வழிபாடு.


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது மணலில் வீடு கட்டி விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா போயி குடியிருக்கின்றோம்?நிஜ வீட்டிற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் சோப்பு சாமான்களை வைத்து சமையல் செய்து விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா சமைக்கின்றோம்?

நிஜமான பாத்திரத்திற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் பொம்மைகளை வைத்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகின்றோம் பெரிதானவுடன் நிஜமான ஒரு மனைவியை நாம் மணம் முடித்து அல்லவா குடும்பம் நடத்துகின்றோம்?


அது போல சிறு பிள்ளைக்கு என்று வந்த சிலை வழிபாட்டில் மட்டும் இன்னும் மனிதன் அறிவு பருவம் வந்தும் இந்த பொம்மையை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தால் நிஜமான இறைவனை இவன் கண்டறிவது எப்போ?


ஞானிகள் சிலை வழிபாட்டை என்றும் ஆதரிக்கவில்லை:


நட்ட கல்லைத் தெய்வமென்று 

நாலு புஷ்பம் சாற்றியே 

சுற்றி வந்து முணுமுணுத்து 

சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ 

நாதன் உள்ளிருக்கையில் 

சுட்டச் சட்டி சட்டுவம் 

கறிச்சுவை அறியுமோ?

- சிவவாக்கியப் பெருமான்


ஞானிகள் கோவில் கோவிலாக சுற்றுங்கள் என்று சொல்லவில்லை:


"வீணான பயல்களுட மார்க்கங் கேளு

வெளியிலுள்ள கோவிலுக்குள் பூந்து பூந்து

கோணாமற் கும்பிடுவார் ஒன்றுங் காணார்

குறும்பரவர் அலைகின்ற மார்க்க மேதோ

நாணாமல் நாணுகின்ற மடையரப்பா

நாய் போலத் திரிவார்கள் தளங்கள்தோறும் 

தோணாது முழுகுவார் தீர்த்தமென்று

துறையேதுங் காணாத மடையர்தானே "


- திருவள்ளுவப் பெருமான் (திருவள்ளுவர் 300 என்ற நூலில் இருந்து)


எல்லா வேதங்களும் இறைவனை நம் அகத்தினுள் தான் தேட சொல்லுகின்றது:


உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் உடம்பினுள் உத்தமனை காண்.

- ஒளவையார் 


சத்திய வேதம்:

நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருகிறீர்களா?

(கொரிந்தியர் 1-நிருபம்-3:16)


திருக்குரான்:


மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்;அவன் மணம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கிறோம்.(50:16)


நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்-அன்றியும் அல்லா நீங்கள் செய்வதை உற்று நோக்கியவராக இருக்கிறார்.(57:4)


சிலையை வழிபடுவது பாவம்.ஏன்?


எல்லா வேதங்களும் இறைவன் நமக்குள்ளே இந்த உடலின் உள்ளே குடி கொண்டிருக்கின்றார்கள் என்று கூற,இந்த சிரசின் உள்ளேதான் அவர்களுடைய பூரண குடியிருப்பு என்று கூறி இருக்க,ஈசன் குடி கொண்டிருக்கும் இந்த சிரசினை ஒரு ஜடப் பொருளாகிய கற் சிலையின் முன்னாள் மண்டியிட்டால் நாம் யாரை மண்டியிட செய்கின்றோம்?இறை சொரூபத்தையே ஒரு ஜடப் பொருளுக்கு தலை வணங்க செய்ய வைப்பதால் வந்தது இவன் தலைக்கு தீ.இறுதியில் இதன் காரணமாகவே தீட்டாகி நாரி புழுத்து போகின்றான்.அப்போ வேதத்தின் இலக்காகிய நிஜ இறைவனை எட்டாதவர்களையே "தவறி விட்டான்" என்ற நாமம் கொண்டு அழைத்தனர்.நிஜ இறைவன் உள்ளே குடி இருக்க அவரை விட்டு வெளியில் இருக்கும் பொருளுக்கு மதிப்பு கொடுத்ததினால் வந்தது இந்த இழி பட்டம்.


இறுதியாக இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

நமது அகத்தின் உள்ளே உள்ள இறைவனை அறிவதே மெய் வழிபாடு.இந்த மெய்வழிபாட்டின் மூலம்தான் ஒருவர் மரணத்தை வெல்ல முடியும்.இது நம்மால் மட்டும் ஆகக் கூடிய காரியம் அல்ல.அதற்கு ஒரு மெய் குருபிரான் அவசியம்.அப்பேற்பட்ட மெய்குருபிரான் எங்கே என்று மலைக்க வேண்டாம்.மெய்வழிச்சாலைக்கு விஜயம் செய்யுங்கள்.

இங்கே உள்ள அனந்தர்கள் நிஜ இறைவனை தங்களுக்குள்ளே நிஜமாக தரிசித்தவர்கள்.மேலும் இன்று சென்று சேரும் அன்பர்களாக இருந்தாலும் ஆண்டவர்களின் அருளினால் அங்கே எல்லோரும் மரணத்தை வெல்லுகின்றார்கள்.இது எல்லாம் எப்படி என்கின்றீர்களா?


இறைவனே இறுதி தீர்ப்பினை நடத்த இங்கே மனு அவதாரம் பூண்டு,நமக்கு சற்குருவாக "பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் " என்ற நாமம் பூண்டு எழுந்தருளி எல்லோரையும் மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்கு ஆக்கி கொண்டிருக்கின்றார்கள்.அவர்களே எல்லா சமயங்களும் எதிர் பார்த்த இறுதித் தீர்ப்பர்.இறுதி மெசியாவென்றும்,மகதி அலைகிஸ் சலாம் என்றும்,கல்கி என்றும்,மைத்ரேய புத்தர் என்றும்,வைகுண்டர் என்றும்,வீரபோக வசந்தராயர் என்றும் அஹூர் மஸ்தாவென்றும் வெவ்வேறு நமங்கலாளால் எதிர்பார்க்க பெற்ற இறுதி தீர்ப்பர் வந்தாயிற்று.வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்.


எனவே குருவை போற்றி குடி ஓங்கி வாழ்வோமாக.


இதனை நம்ப வேண்டாம்,நேரில் சென்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கோ.